Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்களுக்கு மட்டும்

Featured Replies

ஆண்களுக்கு மட்டும்

சகோதரர்களே நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம் எதிர்பார்க்கும் / எதிர்பார்த்த குணாதிசயங்கள் என்ன ?

பல இருந்தால் வரிசைப்படுத்திச் சொல்லுங்களேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேங்கப்பா!!!! நல்ல கேள்வி.

என் பங்கிற்கு சொல்லி விடுகிறேன்

தமிழ் மொழிப் பற்று

ஆழமான கல்வி

என் உழைப்பில் வாழாமல் தன் சொந்தக் காலில் நிற்றல்

அன்பு நேர்மை, அஞ்சாமை, துணிவு

முக்கியமா செல்வி, கோலங்கள் அகல்யா ஆட்டுக்குட்டி போன்ற இழவுகளைப் பார்க்காமல் இருப்பது

  • கருத்துக்கள உறவுகள்

அட இது வேறையா :icon_idea: சரி ஏதோ என் பங்குக்கு சொல்கிறேன்.

போதும் என்ற மனம். :P

அடடா எல்லோரும் எடுத்து வீசுகின்றாங்கள் தங்கள் கனவுகளை :icon_idea: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூரிய வம்சம் திரைப் படத்தில் வரும் கதாநாயகியின் பாத்திரம் போல் ஒரு வாழ்க்கைத் துணை அமைந்தால் எங்களைப் போன்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

Edited by ilango3112

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய கடைசியில் சினிமா தான் கைகொடுத்து இருக்கு :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய கடைசியில் சினிமா தான் கைகொடுத்து இருக்கு :icon_idea:

பெண்ணுங்க எல்லாம் சினி ஸ்ரார் போல இருக்கிறதால...அவர் சினிமாவே தஞ்சம் என்று ஆகிட்டார் கடுப்பி அக்கா..என்ன செய்யலாம்..! :D

  • 4 weeks later...

ஆண்கள் பெண்களிடம் விரும்புவது

எந்தவொரு அழகான பெண்ணைக் கண்டாலும் பெரும்பான்மையான ஆண்களின் அடிமனதில் லேசான தடுமாற்றம் ஒன்று ஏற்படுவது உண்மையே..

ஆண்களைப் பொறுத்தவரையில் பெண்கள் குறித்த கருத்துக்களும் எதிர்பார்ப்புக்களும் வித்தியாசப்பட்டு வேறுபடுகிறது இருந்தாலும் பொதுவாக ஆண்கள் விரும்புவது..

அழகான விழியால் மொழி பேசுபவளாக

நீளமான கூந்தல் உடையவளாக

குடும்பத்தை காக்கும் குணம் உடையவளாக

இனிய குரல்வளம் உடையவளாக

இரக்க குணம் உடையவளாக

தன்னை மட்டும் நேசிப்பவளாக

நல்ல நிர்வாகியாக

நல்ல தாரமாக

நல்ல தாதியாக

நல்ல நண்பியாக

நகைச்சுவை உணர்வுள்ளவளாக

தன்னம்பிக்கை உள்ளவளாக

இப்படி அவர்கள் எதிர்பார்ப்பு நீண்டு கொண்டே போகின்றது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்கள் பெண்களிடம் விரும்புவது

எந்தவொரு அழகான பெண்ணைக் கண்டாலும் பெரும்பான்மையான ஆண்களின் அடிமனதில் லேசான தடுமாற்றம் ஒன்று ஏற்படுவது உண்மையே..

ஆண்களைப் பொறுத்தவரையில் பெண்கள் குறித்த கருத்துக்களும் எதிர்பார்ப்புக்களும் வித்தியாசப்பட்டு வேறுபடுகிறது இருந்தாலும் பொதுவாக ஆண்கள் விரும்புவது..

1)அழகான விழியால் மொழி பேசுபவளாக

2)நீளமான கூந்தல் உடையவளாக

3குடும்பத்தை காக்கும் குணம் உடையவளாக

4)இனிய குரல்வளம் உடையவளாக

5)இரக்க குணம் உடையவளாக

6)தன்னை மட்டும் நேசிப்பவளாக

7)நல்ல நிர்வாகியாக

8)நல்ல தாரமாக

9)நல்ல தாதியாக

10)நல்ல நண்பியாக

11)நகைச்சுவை உணர்வுள்ளவளாக

12தன்னம்பிக்கை உள்ளவளாக

இப்படி அவர்கள் எதிர்பார்ப்பு நீண்டு கொண்டே போகின்றது. :lol:

மேலுள்ள அனைத்தும் ஒரு ஆண் சிங்கத்துக்கு நிறைவேற வேண்டுமானால் அவன் 12 பெண்களை அல்லவா திருமணம் முடிக்க வேண்டும். :lol:

மேலுள்ள அனைத்தும் ஒரு ஆண் சிங்கத்துக்கு நிறைவேற வேண்டுமானால் அவன் 12 பெண்களை அல்லவா திருமணம் முடிக்க வேண்டும். :lol:
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைதானே,ஏன் தெரியுமா? மனிதன் திருப்திப்பட்டிருந்தால் ஞானியாகியிருப்பானே.ஆகவே எந்தமனிதனின் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.அடுத்தகணம் அது போதாமல் இருக்கும்,அனால் அது வேறு இடத்தில் இருக்கிறது போலவும் தெரியும்.இதை அறிந்து தானோ என்னவோ பொருத்தம் பார்த்து இணைத்தார்கள்.ஆனால் அதையும் போலிக்குறிப்பு மோசடிகள் செய்து கெடுத்துவிட்டார்களே?

மேலுள்ள அனைத்தும் ஒரு ஆண் சிங்கத்துக்கு நிறைவேற வேண்டுமானால் அவன் 12 பெண்களை அல்லவா திருமணம் முடிக்க வேண்டும். :lol:

ஹீம் என்ன குமாரசாமி ஒரு பெண்ணிடம் இவ்வளவு விடயமும் இருக்காது என்று சொல்லுகிறீர்களா?? சரி நம்ம யாழ்கள பெண்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம். என்னதான் இருந்தாலும் இன்றைய நாகரீக மாற்றத்தின் பயனாக பெண்களின் நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் மாற்றாத்திற்கு உட்பட்டுள்ளன. இதை பழமைவாதிகள் எதிர்க்கவும் புதுமைவிரும்பிகள் ஏற்கவும் செய்கின்றனர். இது காலத்தின் கட்டாயத்தால் தவிர்க்க முடியாததாகிவிட்டாலும் இந்த மாற்றத்தின் காரணமாக இருபாலாருமே கணிசமான அளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பதுதான் உண்மை.

மேலுள்ள அனைத்தும் ஒரு ஆண் சிங்கத்துக்கு நிறைவேற வேண்டுமானால் அவன் 12 பெண்களை அல்லவா திருமணம் முடிக்க வேண்டும். :lol:

இதெல்லாவற்றையும் ஒரு பெண்ணிடம் எதிர்பார்த்தால் இந்த ஜென்மத்தில் திருமணமே கிடையாது. சிலர் குணாதிசயங்களுடன் வரதட்சனையை வேறு எதிர்பார்க்கிறார்கள்.

அடேங்கப்பா!!!! நல்ல கேள்வி.

என் பங்கிற்கு சொல்லி விடுகிறேன்

தமிழ் மொழிப் பற்று

ஆழமான கல்வி

என் உழைப்பில் வாழாமல் தன் சொந்தக் காலில் நிற்றல்

அன்பு நேர்மை, அஞ்சாமை, துணிவு

முக்கியமா செல்வி, கோலங்கள் அகல்யா ஆட்டுக்குட்டி போன்ற இழவுகளைப் பார்க்காமல் இருப்பது

:lol::D:D:D:D:D:lol::lol:

ஒரு ஆய்வின் முடிவில முக்கியமா ஆண்கள் எதிர்பார்ப்பது அழகு என்று இருந்திச்சு இங்குள்ள ஆண்கள் ஒருவரும் அதைப்பற்றி சொன்ன மாதிரி தெரியலை. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களுக்கு மட்டும்

சகோதரர்களே நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம் எதிர்பார்க்கும் / எதிர்பார்த்த குணாதிசயங்கள் என்ன ?

பல இருந்தால் வரிசைப்படுத்திச் சொல்லுங்களேன்

காத்திரமான விடயம், எல்லோரும் அலசுங்கோ!!!!!!!!!!!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஆய்வின் முடிவில முக்கியமா ஆண்கள் எதிர்பார்ப்பது அழகு என்று இருந்திச்சு இங்குள்ள ஆண்கள் ஒருவரும் அதைப்பற்றி சொன்ன மாதிரி தெரியலை. :lol:

என்னைப்பொறுத்தவரைக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ மனம் அழகாக இருந்தால் அதுவே போதுமானது.எரிச்சல்,பொறாமை,போட்டி,நயவஞ்

என்னைப்பொறுத்தவரைக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ மனம் அழகாக இருந்தால் அதுவே போதுமானது.எரிச்சல்,பொறாமை,போட்டி,நயவஞ்

பணக்காரி தேவையில்லை

பகட்டுகளும் தேவையில்லை

பல்கலை சென்றுபெற்ற

பட்டமும் தேவையில்லை

பதியாகப் பாவித்துப்

பணிந்திடவும் தேவையில்லை

எஜமானாய்ப் பாவித்து

எனக்குழைக்கத் தேவையில்லை

இன்பமோ துன்பமோ

இணையாகப் பகிர்ந்து கொள்ளும்

உற்றநண்பன் போன்றதொரு

உறுதுணையைத் தேடுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl matrimony ஒன்றைத் தொடங்கச் சொல்லுங்கள் பலருக்கு பேருதவியாக இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கிட ஆட்களின் திருமணம் இருக்கிறதே உலக மகா விசித்திரம்?

ஒரு ஆணுக்கு சம்பளம் இல்லாமல் காலம் முழுவதும் சமைச்சுப்போட மனைவி என்ற பெயரில் ஒரு வேலைக்காரி. ஒரு பெண்ணுக்கு வாழ் நாள் முழுவதும் சம்பாதிச்சுக் கொண்டு வந்து கொட்டுறதுக்கு கணவன் என்ற பெயரில் ஒரு வேலைக்காரன். திருமணமே ஒரு முதலாளித்துவக் கட்டமைப்பு.

கல்யாணம் தெய்வீகமானது என்ற சொல்லில் இருந்தே கல்யாணமும் பொய் தெய்வீகமும் பொய் என்பதை உணரலாம்.

திருமணம் முடிக்காமல் உண்மையான காதலுடன் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் முறை எவ்வளவோ மேலானது. திருவள்ளுவர் கூட வாழ்க்கைத் துணைநலம், இல்வாழ்க்கை போன்ற சொற்களைத்தான் பயன் படுத்துகிறார்.

அன்பும் அறமும்தான் ஆணும் பெண்ணும் இல்வாழ்வதற்கு தேவையான இருபெரும் காரணிகள்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது (குறள் 45)

இளங்கோ.. நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. ஆனால் காலம் மாறிக்கொண்டு வருகுது. பெரும்பாலும் வெளிநாடுகளில் பெண்களின் பொருளாதார சுதந்திரத்துக்கு வழி இருக்கு. ஆண்களுக்கும் தமிழ் சாப்பாட்டுக் கடைகள் இருக்கே..! :icon_idea:

திருமணக் கட்டமைப்பு என்பது என்னைப்பொறுத்த மட்டில் இன்றியமையாதது. அது ஒரு இல்லறப் பொறுப்புணர்வுக்கு வழிகோலும். இவ்வாறானவை இல்லையென்றால் கூடல்களும் பிரிவுகளும் மிகுந்து கடைசியில் ஒரு வீட்டில் 10 இனிசியல்களுடன் பிள்ளைகள் இருப்பார்கள். :icon_idea:

பெரும்பாலும் இல்லற வேற்றுமைகளுக்கு சிறுசிறு காரணங்களே அடிப்படையாக இருக்கும். ஒரு சமூகப் பொறுப்பு இருக்கும்போது விட்டுக்கொடுத்துச் செல்ல எத்தனிப்போம். ஒரு பொறுப்பு மண்ணாங்கட்டியும் இல்லாட்டில் அடுத்த சைட்தான்.. ஜல்சாதான்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
என்னைப்பொறுத்தவரைக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ மனம் அழகாக இருந்தால் அதுவே போதுமானது.எரிச்சல்,பொறாமை,போட்டி,நயவஞ்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆய்வின் முடிவில முக்கியமா ஆண்கள் எதிர்பார்ப்பது அழகு என்று இருந்திச்சு இங்குள்ள ஆண்கள் ஒருவரும் அதைப்பற்றி சொன்ன மாதிரி தெரியலை. :icon_idea:

ரசிகை,

ஒரு பெட்டையை முதல்ல பார்த்த உடனே அவளின்ர குணமெல்லாம் எங்களுக்கு எப்பிடித் தெரியும்? அதனாலதான் நாங்கள் ஒரு ரோக் போட வெளிக்கிடுறது முதல்ல. ஆனால் அவையள் தாங்கள் ஐஸ்வரியா ராய்க்குத் தங்கச்சி போல சிலுப்பிக்கொண்டு போவினம். வேற வழியில்லாமல் நாங்கள் புற அழகைப் பார்த்து ரூட் பொடுறது. ஆய்வீல அதுதானே வெளீல வரும்.. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் ஏன் வந்தது??????????

தொல்காப்பியத்தில் விளக்கம் இருக்கிறது. ஏமாற்றங்கள் வருவதைத் தடுப்பதே அதற்கு முக்கிய காரணம்

உண்மையான அன்பும் காதலும் இருந்தால் ஏமாற்றங்கள் வர வாய்ப்பில்லை. அந்த ஏமாற்றங்கள் வர வாய்ப் பில்லாதபோது திருமணமும் தேவையற்றதாகிறது. திருமணம் ஒரு தனி உடைமையை நிறுவும் ஆதிக்கக் கட்டமைப்பு. பல குடும்பங்களில் ஆண் முதலாளி, ஒரு சில குடும்பங்களில் பெண் முதலாளி. சமுக அந்தஸ்து என்ற போலித்தனத்தைக் கட்டிக்காக்க போலி வாழ்க்கை வாழ்கின்றனர்.

பாரதி கூறியதைப் போல் விட்டு விடுதலையாகி நிற்போம் சிட்டுக்குருவியைப் போலே!

ஆண்களும் பெண்களும் தாமாகவே தமது வாழ்க்கைத்துணையைத் தெரிந்தெடுக்கும் காலம் வரும்போது சில ஆண்களும் சில பெண்களும் தமக்கு எவருமே கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள் என்று எண்ணுகிறீர்களா. அதுதான் நடக்காது. எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் இறுதியில் ஏதோ ஒருவகையில் தமது துணைகளைத் தேர்ந்தெடுக்கக்தான் செய்வார்கள்.

இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்புகள் எதுவாயிருந்தாலும் அது ஒரு நியதியாயிருக்கமுடியாது. வாழ்க்கைத்துணை பற்றிய ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்புகளும் வேறுபட்டவை அத்துடன் சமயம் வரும்போது எதிர்பார்புகள் தளர்த்தப்படுகின்றன அல்லது மாற்றியமைக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. மேற்குறிப்பிட்ட இரண்டாவது வகையினருக்கு பெற்றோரால் வாழ்க்கைத் துணை நிச்சயம் செய்யப்படும்போது அது மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.