Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படைக்கு நாகபுரியிலிருந்து வெடிபொருள் ஏற்றிவந்த லாரி பிடிபட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படைக்கு நாகபுரியிலிருந்து வெடிபொருள் ஏற்றிவந்த லாரி பிடிபட்டது

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரிலிருந்து இலங்கை கடற்படைக்காக வெடிபொருள்கள் ஏற்றிச்சென்ற லாரி மதுரை மாவட்டம், மேலூரில் வியாழக்கிழமை பிடிபட்டது.

நாகபுரியில் உள்ள "சோலார் எக்ஸ்புளோசிவ் லிமிடெட்' நிறுவனத்தினர் இலங்கை கடற்படையினருக்கு 40 பெட்டிகளில் அடைத்து அனுப்பிய வெடிபொருள்களுடன் ஒரு லாரி தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்றது.

மேலூர் அருகே வியாழக்கிழமை வந்துகொண்டிருந்த அந்த லாரியை நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸôர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். தகவல் அறிந்து மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மாறன், மதுரை கியூ பிரிவு போலீல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் லாரியைப் பரிசோதித்தனர். அப்போது, லாரி டிரைவர் ரவிபிரசாத் வர்மா வெடிபொருள்களுக்கான ஆவணங்களை போலீஸôரிடம் ஒப்படைத்தார். அந்த லாரியில் 40 பெட்டிகளில் வெடிமருந்து, டெட்டனேட்டர், கேப் உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் இருந்தன.

நாகபுரியிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கை கடற்படையினருக்கு இந்த வெடிபொருள்கள் அனுப்பிவைப்பதற்கு உரிய அரசு அனுமதி ஆவணங்கள் இருந்ததால் அந்த வெடிபொருள்களை கொண்டுசெல்ல போலீஸôர் பின்னர் அனுமதித்தனர்.

இந்த வெடிபொருள்களை வழங்கக் கோரி இலங்கை கடற்படை கடந்த அக். 10-ம் தேதி விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து இந்த வெடிபொருள்கள் இலங்கையிலுள்ள ரக்சமா- வல்சாரா கடற்படை வெடிபொருள் கிடங்கு முகவரியிட்டு லாரியில் ஏற்றி வரப்பட்டது.

இவை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கப்பட்டு, இலங்கைக்குக் கப்பல் மூலம் அனுப்பப்படவுள்ளது. இலங்கை கடற்படைக்காக வெடிமருந்துகளை ஏற்றிய லாரி மதுரை அருகே சோதனைக்குள்ளான விஷயம் அரசியல் வட்டாரத்துக்கும் பரவியுள்ளது.

இலங்கை ராணுவத்துக்கு எவ்வித உதவியும் அளிக்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பலவும் கோரிவரும் நிலையில் வெடிபொருள்களை இலங்கை கடற்படைக்கு இந்தியாவிலிருந்து கொண்டுசெல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-தினமணி

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த மக்களான தமிழக மக்களின் குரலுக்கு செவி சாய்க்காது கொடிய மகிந்தாவுக்கு உதவி செய்யும் இந்திய மத்திய அரசின் மற்றுமொரு சதி

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படைக்கு இந்திய வெடிபொருள்: மதுரை அருகே போலீஸ் மடக்கியது!

டிசம்பர் 08, 2006

மதுரை: இலங்கை கடற்படைக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பரிலிருந்து வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை மதுரை அருகே போலீஸார் மடக்கினர். ஆனால் உரிய ஆவணங்களுடன் அந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதால், போலீஸார் அதை அனுமதித்தனர்.

ஈழப் பிரச்சினை உக்கிரமடைந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோதலில், அப்பாவித் தமிழர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

புலிகளைத் தாக்குகிறோம் என்று கூறிக் கொண்டு அப்பாவித் தமிழர்களை விமானப்படையாலும், ராணுவத்தாலும் தாக்கி அழித்து வருகிறது இலங்கை அரசு. இதனால் இலங்கைக்கு ராணுவ ரீதியிலான எந்த உதவியையும் இந்தியா செய்யக் கூடாது, ராணுவ ஒப்பந்தம் போடக் கூடாது, பாக் ஜலசந்தியில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து செல்லக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் கோரி வருகின்றன.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார். தமிழகக் கட்சிகளின் நெருக்குதலைத் தொடர்ந்து இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவிகள் அளிக்கப்பட மாட்டாது, ஆயுதங்கள் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

ஆனால் மத்திய அரசின் உத்தரவாதத்தை மீறி, இலங்கை கடற்படைக்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸார் ஒரு லாரியின் மீது சந்தேகமடைந்தனர்.

உடனடியாக அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியில் 40 பெட்டிகளில் வெடிமருந்துகள், டெட்டனேட்டர், கேப் உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள வெடிபொருட்கள் இருந்தன.

இந்த வெடிபொருட்கள் குறித்த ஆவணங்களை டி.எஸ்.பி. மாறனிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தபோது, நாக்பூரில் உள்ள சோலார் எக்ஸ்புளோசிவ் நிறுவனத்திலிருந்து இந்த வெடிபொருட்கள், இலங்கை கடற்படையினருக்காக அனுப்பப்படுவதாக அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

தூத்துக்குடியிலிருந்து கடல் மார்க்கமாக இந்த வெடிபொருட்கள் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காட்டப்பட்டதால், போலீஸார் அந்த வெடிபொருள் லாரியை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

இலங்கையில் உள்ள ரக்சமாவல்சாரா கடற்படை வெடிபொருள் கிடங்கின் முகவரிக்கு இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கைக்கு எந்தவகையான ஆயுத உதவியும் செய்யக் கூடாது என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை கடற்படைக்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

thatstamil.com

---------------------------------------------------------------------------------------------------------------------------

இதுதான் இந்திய மத்தியரசுகளின் அதுவும் காங்கிரஸ் அரசுகளின் அணுகுமுறையே. இரட்டை வேடம். வரதராஜப்பெருமாள்...டக்கிளஸ்...

உவங்கள் எங்களுக்கு உதவிசெய்வாங்கள் எண்டு நம்புறத்துக்கு இப்பவும் ஒரு கூட்டம் இருக்கு

அப்ப தலைவரும் அந்த கூட்டத்தில் ஒருவரோ?

யோ தலைவர் ஒருபோதும் வட இந்திய மக்களை நம்பியதில்லை அதற்காக தமிழக சகோதரங்களையும் நம்பாமல் விட்டதில்லை. அதுதான் மாவீரர் உரையிலும் வெளிப்பட்டிருந்தது. ஒருபோதும் தலைவர் இந்தியாவே என்று விளித்ததில்லை. தமிழகமே என்றுதான் எப்போதும் அன்பாக சொல்லி இருக்கிறார்.

தயவு செய்து குழம்பாதீர்கள் :P

அப்ப தலைவரும் அந்த கூட்டத்தில் ஒருவரோ?

அடே அம்பி தலைவர் தெளிவாக தான் கூறி இருந்தார் தமிழ்நாட்டுத்தலைவர்களும்

தமிழ்மக்களும் என்று.....

இந்தியா இதை செய்யவில்லை என்றால் தான் அது அதிசயம் :P

அடே அம்பி தலைவர் தெளிவாக தான் கூறி இருந்தார் தமிழ்நாட்டுத்தலைவர்களும்

தமிழ்மக்களும் என்று.....

இந்தியா இதை செய்யவில்லை என்றால் தான் அது அதிசயம் :P

சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி அண்ணாமாரே...

இப்ப ஒரு புதுச் சந்தேகம்....

இந்திய மத்திய அரசை மீறி தமிழக மக்களோ அல்லது மாநில அரசோ செய்யக்கூடிய நடவடிக்கைகள் என்ன?

அல்லது அவர்களால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் இந்திய மத்திய அரசின் கொள்கைய மாற்றும் என்று தலைவர் எதிர்பார்கிறாரோ?

இதில் எதுவுமே சாத்தியப்பாடானதாக தெரியவில்லையே?

நடமுறையில் இந்தியா இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகளை அதிகரித்துக் கொண்டு தானே போகிறது?

இந்தியா இறுதியா தனது ராணுவத்தையும் விமானப்படையையும் அனுப்பி குண்டு போடாதது மட்டுமே பாக்கி!

இந்திய மத்திய அரசை மீறி தமிழக மக்களோ அல்லது மாநில அரசோ செய்யக்கூடிய நடவடிக்கைகள் என்ன?

என்ன இது கேள்வி 6 கோடி தமிழர்களைன் ஒன்று பட்ட குரலும் அந்த மக்கலின் தலைவர்களின் அழுத்தங்கலும் பெரிய மாற்றங்கலை கொண்டு வரும்.......

அதுக்காக அதுவரை காத்து இருக்கவும் முடியாது அதை மட்டும் நம்பி கொண்டும் இருக்க முடியாது...................

சந்தேகங்கள் வரலாம் ஆனா வீன் விதண்டாவதாம் கூடாது அம்பி :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- அநுமானை விட்டு எரித்து நாசம் செய்து மகத்துவம் செய்ததாகப் பெருமைப்படும் இதிகாசத்தைப் படைத்தவர்கள்.

- இந்த அநுமானுக்குக் கோவிலும் கட்டி நம்மவர்களைவிட்டு அரோகரா போடவிட்டு நமட்டுச்சிரிப்புச் செய்பவர்கள்.

- நீண்ட நம் வரலாற்றில் நமது பாரம்பரியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து -அரித்து -விழுங்கும் அதிகாரவர்க்கத்தைக்கொண்டவர்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தலைவரும் அந்த கூட்டத்தில் ஒருவரோ?

I know you mr sanakiyan. you are the one write against tamils in "thenee" site. Am i right?

I know you mr sanakiyan. you are the one write against tamils in "thenee" site. Am i right?

Yes, you r RIGHT as per your capacity!

நுனாவிலான் மற்றும் இவர் போன்றவர்களே,

அவர்கள் தேனியென்றால் நீங்கள் தோட்டக்காரனாக முயற்சிக்க வேண்டாம்!

சிந்திக்கத் தொடங்கினால் கேள்விகள் தோன்றும்!

கேள்விகள் தோன்றினால் கேட்கவிடுங்கள்!

உங்களுக்கு பதில் தெரியாவிட்டால் பரவாயில்லை!

தவறுகளை யார் செய்தாலும் தட்டிக் கேளுங்கள்.

அதற்காக துரோகி என்று முதுகில் முத்திரை குத்தாதீர்கள்.

நீங்களே எதிரிகளை உருவாக்கி பின்னர் அவர்களுடன் போராடி காலத்தை கடத்தாதீர்கள்.

உங்களை போலவே அவர்களும் பதிலுக்கு புலிவால் என்று கூறிவிட்டு பதில் சொல்லாமல் தப்பிவிடுகின்றனர்.

சிறிலங்காவுக்கு வெடிபொருள் உதவி: இந்திய அரசுக்கு இராமதாஸ் கண்டனம்

சிறிலங்கா கடற்படைக்கு வெடிபொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மோசமான அளவில் தொடர்வது குறித்து கவலை தெரிவிக்கும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில், சிறிலங்கா கடற்படைக்காக வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ஊர்தி மதுரை அருகே காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பின்னர் உரிய அனுமதி ஆவணங்கள் இருந்தது தெரியவந்ததால், தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வு நடந்திருக்கிறது. தமிழக மக்களின் கவலையை இது மேலும் அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா இராணுவத்திற்கு எத்தகைய உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்து வருகிறது. ஆனாலும் அண்மையில் இந்தியா வந்த சிறிலங்கா ராஜபக்ச, தளவாடங்கள் அல்லாத பிற இராணுவத் தேவைகளை நிறைவு செய்ய இந்தியா முன்வந்திருப்பதாகவும், ஏற்கனவே இத்தகைய உதவிகளைப் பெற்றுக் கொண்டு வருவதாகவும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். சிறிலங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்த வெடி பொருட்கள் மதுரை அருகே பிடிபட்டுள்ள நிகழ்வு சிறிலங்கா அரச தலைவரின்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.

சிறிலங்கா இராணுவத்திற்கு எத்தகைய உதவி வழங்கினாலும் அது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படும். ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று தமிழக மக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், அவர்களை மேலும் கொன்று குவிப்பதற்கு உதவும் வகையில் சிறிலங்கா கடற்படைக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல அனுமதித்திருப்பது வேதனையளிக்கிறது.

தங்களது உணர்வுகளுக்கு இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லையோ என்கிற சந்தேகத்தை தமிழக மக்களிடையே இது ஏற்படுத்திவிடும். ஆபத்தான இந்தப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். எனவே சிறிலங்காவுக்கு உதவும் இதுபோன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதை உணர்த்த முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=30083

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஆயுதம்ஆண்டனியிடம் கருணாநிதி கேள்வி

டிசம்பர் 09, 2006 - thatstamil

சென்னை: இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் இருந்து வெடி மருந்துகள் அனுப்பப்பட்டது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை கடற்படைக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பரிலிருந்து வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை மதுரை அருகே போலீஸார் மடக்கினர். ஆனால் உரிய ஆவணங்களுடன் அந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதால், போலீஸார் அதை அனுமதித்தனர்.

தூத்துக்குடியிலிருந்து கடல் மார்க்கமாக இந்த வெடிபொருட்கள் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள ரக்சமாவல்சாரா கடற்படை வெடிபொருள் கிடங்கின் முகவரிக்கு இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கைக்கு இந்தியா எந்த ராணுவ உதவியும் செய்யாது என பிரதமர் மன்மோகன் சிங்கும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தமிழக முதல்வர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களிடம் உறுதியளித்த நிலையில் இந்த வெடிகுண்டுகள் பிடிபட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரையும் பாதுகாப்பு அமைச்சரையும் மீறி வெளியுறவு, பாதுகாப்புத்துறை மற்றும் மத்திய உளவுப் பிரிவினர் இலங்கைக்கு உதவிகளை செய்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. கேரளத்தைச் சேர்ந்தர்களான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோருக்குத் தெரியாமல் இந்த ஆயுத சப்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் உள்ளிட்டோர் இது குறித்து கண்னட அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து வெளியுறவுத்துத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியிடமும் கருணாநிதி பேசியுள்ளார்.

இந் நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை கடற்படைக்கு வெடி பொருட்களை இந்தியாவில் இருந்து கொண்டு செல்ல அனுமதி அளித்திருப்பதாகவும், இது வேதனை அளிப்பதாகவும் தமிழக தலைவர்கள் சிலர் அதிர்ச்சியுடன் அறிக்கை விட்டுள்ளனர்.

இதையடுத்து டெல்லியில் இருந்த முதல்வர் கருணாநிதி உடனடியாக அமைச்சர் தயாநிதி மாறன் மூலமாக நேற்றே வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் விசாரிக்கக் கூறியிருந்தார். அவரும் உடனடியாக முகர்ஜியிடம் பேசினார்.

அப்போது எனது அமைச்சகம் மூலம் அப்படி அதிகாரப்பூர்வமாக எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை, இருந்தாலும் இது குறித்து உடனே விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியிடமும் இது குறித்து கருணாநிதி நேரில் விசாரித்தபோது, அப்படி ஏதும் அனுமதி வழங்கவில்லை என்றும், விசாரணை நடத்துவதாகவும் அந்தோணி தெரிவித்தார்.

வியாபாரரீதியாக அரசுக்குத் தெரியாமல் ஏதாவது நடந்திருக்குமா என்பது குறித்து விசாரிக்குமாறு தமிழக காவல் துறைக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் கண்டனம்:

இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மோசமான அளவில் தொடர்வது குறித்து கவலை தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் இலங்கை கடற்படைக்காக வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை மதுரை அருகே காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பின்னர் உரிய ஆவணங்கள் இருந்ததால் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது.

இது தமிழக மக்களின் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை ராணுவத்திற்கு எத்தகைய உதவியையும் இந்தியா வழங்கக் கூடாது என ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்து வருகிறது.

ஆனாலும் அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, தளவாடங்கள் அல்லாத பிற ராணுவத் தேவைகளை நிறைவு செய்ய முன்வந்திருப்பதாகவும், ஏற்கனவே இத்தகைய உதவிகளைப் பெற்றுக் கொண்டு வருவதாகவும் கூறி விட்டுச் சென்றிருக்கிறார்.

இலங்கைக்கு வெடிபொருள் எடுத்துச் செல்லப்பட இருந்த வெடிபொருட்கள் மதுரை அருகே பிடிபட்டுள்ள நிகழ்வு இலங்கை அதிபரின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.

இலங்கை ராணுவத்திற்கு எத்தகைய உதவி வழங்கினாலும் அது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படும். ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று தமிழக மக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில் அவர்களை மேலும் கொன்று குவிப்பதற்கு உதவும் வகையில், இலங்கை கடற்படைக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல அனுமதித்திருப்பது வேதனை அளிக்கிறது.

தங்களது உணர்வுகளுக்கு இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லையோ என்கிற சந்தேகத்தை தமிழக மக்களிடையே இது ஏற்படுத்தி விடும். ஆபத்தான இந்தப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். எனவே இலங்கைக்கு உதவும் இதுபோன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதை உணர்த்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

நெடுமாறன் கண்டனம்:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் இலங்கை கடற்படைக்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வெடிபொருட்கள் அனுப்பப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இலங்கைக்கு வெடிபொருள் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய மாட்டோம் என பிரதமர் மன்மோகன் சிங் திரும்பத் திரும்ப உறுதி கூறியுள்ள நிலையில் எப்படி இந்த வெடிபொருட்கள் வினியோகம் நடந்தது என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் அதன் இரட்டை நிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இந்த வெடிபொருட்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்யாமல் அதை தொடர்ந்து செல்ல அனுமதித்திருப்பது அதை விட அதிர்ச்சியூட்டும் செயலாக உள்ளது. சட்டசபையில் இலங்கை விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டிருப்பது வெட்கக்கேடான செயலாகும்.

ஈழத்தில் உள்ள தமிழர்களைக் கொல்ல இந்தியாவிலிருந்தே வெடிபொருட்கள் சென்றிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

Edited by nedukkalapoovan

ஏன் கலைன்ஞரும்,ராமதாசும்,வைகோவும

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கலைன்ஞரும்,ராமதாசும்,வைகோவும

Edited by nedukkalapoovan

கலைஞர் தொடங்கி எவருமே 100% பெரியார் வழியில் இல்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர்களே பெரியாரின் பல சொற்சிலம்பங்களை பயனற்றவை என்று விட்டு விட்டனர். தமிழகத்தில் உள்ள வர்க்க பேதங்களை கட்சி அரசியலாக்கி அவர்கள் தங்களின் அரசியலைச் செய்கின்றனர். அது அவர்களின் அரசியல் தளம். அங்கு எமக்கு என்ன வேலை. பெரியார் அநாவசியமாக ஈழத்தில் இந்துக்கள் மத்தியிலும் புகுத்தப்படுவதால் அவரின் கொள்கைகளின் தெளிவற்ற நாசகாரத் தன்மைகளையும் பிற மதத்தினரின் உரிமைகளை மறுக்கும் செயலையும் சுட்டிக்காட்டுகின்றோம். மற்றும்படி அவர் கொள்கைகள் தான் திராவிடக் கட்சிகளின் ஈழ ஆதரவுக்கு காரணம் என்பது தவறு. இனரீதியான பூர்வீகத் தொடர்புகளும் புவியல்தொடர்புகளுமே ஈழத்தமிழர்களின் அரசியல் நியாயங்களுமே இந்த ஆதரவுத் தளத்துக்குக் காரணம். அவை ஒரு போதும் பெரியார் கொள்கை ரீதியானதல்ல. அந்த வகையில் பெரியாரை அநாவசியமாக இதற்குள் கொண்டு வருவதில் எமக்கு உடன்பாடில்லை. பலவீனமான நிலையில் தமிழ் தேசியத்தையும் தனித் தமிழ் நாட்டையும் கோரி தமிழர்களின் இருப்பையே பலவீனப்படுத்தியவர் பெரியார். இன்று ஈழப்போராட்டம் கூட மத்திய அரசாலும் இந்தியர்களால் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்பட பெரியாரின் பலவீனமான நிலையில் எழுந்த தமிழ் தேசியமும் அதனைத் தொடர்ந்த தனித் தமிழ்நாடுமே ஆகும். அந்த வகையில் அந்தக் கன்னட படிப்பறிவில்லாத பகுத்தரிவு வாதி தூர நோக்கற்றுச் செயற்பட்டு பாரதத்தில் தமிழர்களின் இருப்பை அடிமைத்தனமாக்கியதுதான் செய்தது..!

பெரியாரின் கொள்கைகளுக்காக அவர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிக்கவில்லை. பூர்வீகத் தமிழர்கள் என்ற வகையில் தமிழக ஆதரவுத் தளம் இருக்கிறது இயங்குகிறது. அது பெரியார் இல்லாவிட்டாலும் இருந்திருக்கும். :icon_idea:

இந்து மதமும் சாதியமும் ஈழத்தில் புகுத்தப்பட்டால் அதற்கு எதிராக பெரியாரின் கொள்கைகளும் புகுத்தப்படும்.இங்கே அவற்றைப் பற்றி பேச முடியாது என்று சொல்ல உமக்கு எந்த உரிமையும் கிடையாது.இந்து மதமும் இந்தியாவிலிருந்து தான் வந்தது.சாதியமும் இந்து மததில் இருந்து தான் வந்ததௌ இவற்றிற்கு எதிரான பெரியாரின் கருதுக்களும் இந்தியாவில் இருந்து தான் வருகின்றது.

இங்கே உமக்கு அனாவசியம் என்பது எமக்கு அவசியம் ஆகப்படுகிறது.

இன ரீதியான விழிப்புணர்வைத் தமிழர்களிடம் ஏற்படுத்தியது பெரியார் அவரின் வழி வந்தவர்கள் அதனால் தான் இன ரீதியாக எமக்கு ஆதரவு தருகிறார்கள்.பெரியாருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது உமது அரசியல் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை.

இன ரீதியாக ஏன் திராவிடக் கட்சிகள் ஆதரவு தர வேண்டும்? ஏன் இந்துக்கள் என்ற ரீதியாக இந்தியா முழுதும் இருக்கும் இந்துக்கள் , நீங்கள் இங்கே வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் சங்கர மடம் என்பவை குரல் எழுப்பவில்லை? ஏன் சோவும் ராமும் எஸ் வி சேகரும், வசத்தியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இப்படி நயவச்ஞகமானாக எழுதுகிறார்கள்? இவர்களுக்கு ஏன் இனத்துவப்பற்று இல்லை? இவர்களின் இனம் என்ன?

பாரதததில் தமிழர்களின் இருப்பை அடிமை ஆக்கியது யார்? யார் தமிழர்களை அடிமை ஆக்கினார்கள்?ஈழப் போராட்டம் ஏன் சந்தேகக்கண்ணோடு பார்க்கப்பட வேண்டும்? தமிழத் தேசியம் தானே இங்கே எம் இருவரையும் இணைக்கிறது? பெரியார் பேசியது தானே தமிழ்த் தேசியம்? உமது உளறல்கள் ஒரே குழப்பமாக அல்லவா இருக்கிறது?

பெரியார் பாடசாலைக்குச் சென்று படிக்காமல் இருக்கலாம் ஆனால் அவர் நடைமுறையில் எமது தேசியத் தலைவரைப்போலவே பலதையும் கற்றார், வாசித்தார். நீர் படிப்பறிற்றவர் என்று வைக்கும் விமர்சனத்தை எமது தேசியத் தலைவரை நோக்கியும் வைப்பீரோ?

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதமும் சாதியமும் ஈழத்தில் புகுத்தப்பட்டால் அதற்கு எதிராக பெரியாரின் கொள்கைகளும் புகுத்தப்படும்.இங்கே அவற்றைப் பற்றி பேச முடியாது என்று சொல்ல உமக்கு எந்த உரிமையும் கிடையாது.இந்து மதமும் இந்தியாவிலிருந்து தான் வந்தது.சாதியமும் இந்து மததில் இருந்து தான் வந்ததௌ இவற்றிற்கு எதிரான பெரியாரின் கருதுக்களும் இந்தியாவில் இருந்து தான் வருகின்றது.

இங்கே உமக்கு அனாவசியம் என்பது எமக்கு அவசியம் ஆகப்படுகிறது.

ஈழத்தில் இந்துமதத்தின் நிலை வேறு இந்தியாவில் வேறு. ஈழத்தில் மத அரசியல் செய்யப்படுகிறதா இந்துக்களால். ஈழத்தில் சாதிக் கட்சிகள் இருக்கிறதா..??! ஈழ அரசியல் என்பது தமிழர்கள் என்ற அடிப்படையில் இன ரீதியாக உள்ளதே தவிர மத..வர்க்க அரசியலாக இல்லை. இந்தியாவி அப்படியல்ல நிலை.

ஈழத்தில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை உண்டு. ஈழத்தில் மதச் சண்டைகள் என்று ஏதாவது ஈழப் போராட்டத்தின் பின் வந்துள்ளதா? இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் இடையில் ஒரு சகோதர நிலையே உள்ளது. அப்படி நிலையா இந்தியாவில் இருக்கிறது. ஆக ஈழத்தில் மக்கள் மதங்களை அளவோடு வாழ்வியல் வழிகாட்டிகளாக்கி பாவித்து வாழ்கின்றனர். தொழில் ரீதியாக எழுந்த வர்க்க பேதங்களுக்கு மதச்சாயம் பூச முடியாது. காரணம் வர்க்கப் பிரிவுகள் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியிலும் இருந்தது இந்துக்கள் மத்தியிலும் இருந்தது மதமே வேண்டாம் என்போர் மத்தியிலும் இருந்தது. அது சமூகப் பிரச்சனை மதத்தை அதற்குள் செருகுவது குழப்பத்தை விளைவிக்கவும் மத உணர்வுகளைக் கிளறிவிடுவதுமே ஆகும். அந்த வகையில் தொழில் அடிப்படையில் எழுந்த சமூக வர்க்கப் பிரிவினைகள் இன்று சமூகச் சமுத்துவம் மூலம் அழிக்கப்பட்டு வருகின்றன. இதில் மதம் எந்தப் புத்துயிர்ப்பையும் செய்யவில்லை. எவரும் ஈழத்தில் இந்து மத ஒழிப்பையோ கிறிஸ்த இஸ்லாமிய மத இருப்புக்கள் தேவையற்றனவோ என்று கூறிக் கொண்டிருக்கவில்லை. மதங்கள் அங்கு மனித உணர்வுகளைப் பரிமாறவும் மனித நேயத்தை வளர்க்கவும் பயன்படுகின்றன. இந்தியாவில் உள்ள நிலையில்லை ஈழத்தில்.

இன ரீதியான விழிப்புணர்வைத் தமிழர்களிடம் ஏற்படுத்தியது பெரியார் அவரின் வழி வந்தவர்கள் அதனால் தான் இன ரீதியாக எமக்கு ஆதரவு தருகிறார்கள்.பெரியாருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது உமது அரசியல் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை.

திமுக தவிர மற்றக் கட்சிகள் தீவிர பெரியார் கொள்கை உடையனவல்ல. திமுக கூட பெரியாருடன் கொள்கை முரண்பட்டே பெரியாரின் திராவிடக் கட்சியில் இருந்து பிரிந்தன. பெரியாரின் திராவிடக் கட்சி கடந்த காலங்களில் சட்டசபைக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கு ஒரு உறுப்பினரையாவது அனுப்பியதைக் காட்ட முடியுமா? ஆக மக்கள் செல்வாக்கில்லாத நிலையே பெரியாரின் கொள்கைகளுக்கும் அவரின் கட்சிக்கும் என்பது வெளிப்படை. திமுக மற்றும் திராவிடக் கட்சிகள் பெரியாரின் சில கொள்கைகளை உதட்டளவில் உச்சரிக்கின்றனவே தவிர அவற்றின் அரசியல் இயக்கத்தில் பெரியார் அதிக தூரம் விலக்கியே வைக்கப்பட்டுல்ளார். திராவிடக் கட்சிகள் என்பதற்காக அவை பெரியாரின் கொள்கைகளை 100% ஏற்று வழிநடக்கின்றன என்பது முழு அரசியல் பொய்.

இன ரீதியாக ஏன் திராவிடக் கட்சிகள் ஆதரவு தர வேண்டும்?

வீரப்பன் கூடத்தான் ஈழத்தமிழருக்கு குரல் கொடுத்தான். அவனும் திராவிடக் கட்சியின் அங்கத்தவனா. இந்தியாவைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட மக்கள் என்று அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் ஈழத்தில் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அது ஒரு கொள்கை ஒற்றுமையின் வெளிப்பாடாக இருக்கலாம். சமூக மாற்றங்களை வேண்டுகிறார்களோ இல்லையோ கட்சி ரீதியாக தங்கள் நிலைகளைப் பலப்படுத்த அவர்களுக்கு ஈழ ஆதரவு என்பது உதவியளிப்பதால் அதைச் செய்கின்றனர். அத்தோடு தமிழர்கள் என்ற உணர்வு நிலையும் அதை ஊக்கிவிக்கிறது.

ஏன் இந்துக்கள் என்ற ரீதியாக இந்தியா முழுதும் இருக்கும் இந்துக்கள் , நீங்கள் இங்கே வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் சங்கர மடம் என்பவை குரல் எழுப்பவில்லை? ஏன் சோவும் ராமும் எஸ் வி சேகரும், வசத்தியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இப்படி நயவச்ஞகமானாக எழுதுகிறார்கள்? இவர்களுக்கு ஏன் இனத்துவப்பற்று இல்லை? இவர்களின் இனம் என்ன?

ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய மத்திய அரசின் ஆதரவில்லாமலா போராட்டம் ஆரம்பித்தது. இந்திரா அம்மையாரை அமம்மையார் அம்மையார் என்று போற்றித் திரிந்ததை ஈழத்தமிழர்கள் மறந்துவிடலாம்..வரலாறுகளும் பத்திரிகைகளும் மறக்கா. ஈழப்போராட்டத்தின் தளமே இந்தியாவில் தான் அதுவும் மத்திய அரசின் ஆதரவுடன் தான் இயங்க ஆரம்பித்தது. அதில் இந்திய தேசிய நலன் இருந்திருக்கலாம் அது வேறுவிடயம். ஆனால் வளர்க்கப்பட்டது என்னவோ இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் தான் என்பதை மறுதலிக்க முடியாது. ஆரம்பத்தில் சோ என்ன பலரும் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். இந்தியப்படை - புலிகள் மோதல் என்பதுதான் சில கசப்பான மாற்றங்களுக்கு வழிவகுத்தன. ராஜீவ் துன்பியலுக்குப் பின்னர் திராவிடக் கட்சிகள் கூட புலிகளை ஒதுக்கின..அதிமுக புலிகளை அழித்தது. நீங்கள் வரலாற்றை உங்களுக்கு ஏற்றது போல மாற்றுபவர் என்பது யாவரும் அறிந்ததே. மத்திய அரசின் கொள்கை மாற்றமில்லாமல் திராவிடக் கட்சிகள் மூச்சும் விடமுடியாது என்பது நேற்றுவரை உண்மையாக இருந்ததை நீங்கள் மறக்கலாம் நாம் மறக்கத் தயார் இல்லை.

பாரதததில் தமிழர்களின் இருப்பை அடிமை ஆக்கியது யார்? யார் தமிழர்களை அடிமை ஆக்கினார்கள்?ஈழப் போராட்டம் ஏன் சந்தேகக்கண்ணோடு பார்க்கப்பட வேண்டும்? தமிழத் தேசியம் தானே இங்கே எம் இருவரையும் இணைக்கிறது? பெரியார் பேசியது தானே தமிழ்த் தேசியம்? உமது உளறல்கள் ஒரே குழப்பமாக அல்லவா இருக்கிறது?

பாரதத் தமிழர்களின் வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பெரியார் பாடசாலைக்குச் சென்று படிக்காமல் இருக்கலாம் ஆனால் அவர் நடைமுறையில் எமது தேசியத் தலைவரைப்போலவே பலதையும் கற்றார், வாசித்தார். நீர் படிப்பறிற்றவர் என்று வைக்கும் விமர்சனத்தை எமது தேசியத் தலைவரை நோக்கியும் வைப்பீரோ?

இது சீண்டு முடியும் செயல். தலைவர் ஒரு போதும் தன்னைப் பகுத்தறிவு வாதி என்று மற்றவர்களை முட்டாள்கள் நிலையில் வைத்துக் கருத்துச் சொன்னதேயில்லை. பெரியார் தலைவர் ஒப்பீடே தவறானது. பெரியார் ஒரு வர்க்க குழப்பவாதி. வன்முறைத்தனமான மனித விரோத கருத்துக்களை தூண்டிவிட்டு மக்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் சமூகங்களை ஒடுக்க நினைத்த கொடிய நாசிய பாசிச வாதி. சமூக விடுதலை என்று கூறிக் கொண்டே இன்னொரு சமூகத்தின் உரிமைகளைத் தட்டிப்பறிக்க கூக்கிரலில்ல மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய குற்றவாளி. அவரைத் தலைவருடன் ஒப்பிட்டு இங்கு அநாவசியச் சிக்கலைத் தோற்றுவித்து கருத்தாடுபவர்களை சீண்டு முடியும் உங்கள் நரித்தனமான வேலையை வழமை போல் செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.இது கண்டிக்கத்தக்கது.

யாழ்பாணத்தான், தீவான், மட்டகளப்பான், கொழும்பான், தோட்டகாட்டான் என்று நீங்கள் பிரிந்து நிற்பது போதாது என்று

இப்போது பெரியார் ஆதரவு, பெரியார் எதிர்ப்பு, இந்து ஆதரவு, இராவணன் ஆதரவு, இராமன் ஆதரவு என்று, சிதறிப்போன கண்ணாடி துகள்கள் போல மேலும், மேலும் உம்முள் 1000 பிளவுகள் உண்டாகி தமிழர்களே நீங்கள் நாசமாய் போங்கள்.

வெல்வது ஒன்றும் கடினம் அல்ல எதிரி வெளியில் இருப்பவன் என்றால். சேர்ந்தே இருக்கும் நோய் போலே, உள்ளே இருக்கும் பிளவுகள் தான், சரித்தன தமிழர் சாம்ராஜ்யங்களை. சரித்திரத்தை புரட்டி பார்

ஈழத்தில் இந்துமதத்தின் நிலை வேறு இந்தியாவில் வேறு.
என்ன வேறு ,இந்து மதமும் அதன் சாதியமும் கடவுள்களும் நம்பிக்கைகளும் ஒன்று தானே?

ஈழத்தில் மத அரசியல் செய்யப்படுகிறதா இந்துக்களால். ஈழத்தில் சாதிக் கட்சிகள் இருக்கிறதா..??! ஈழ அரசியல் என்பது தமிழர்கள் என்ற அடிப்படையில் இன ரீதியாக உள்ளதே தவிர மத..வர்க்க அரசியலாக இல்லை. இந்தியாவி அப்படியல்ல நிலை.

ஈழத்தில் சாதி இல்லையா? இது பற்றி பல தலைப்புக்களில் விவாதித்து ஆகிவிட்டது.புலிகளின் சாதியம் சம்பந்தமான் நிலைப்பாடுகள் என்ன என்பது எழுதி ஆகிவிட்டது.ஈழத்தில் சாதி இல்லை என்று நீர் மட்டும் தான் சொல்லிக் கொள்ளலாம்.ஈழத்தில் இன ரீதியான அடக்குமுறை கூர்ப்படைந்ததால் சாதியமும் மதச் சண்டைகளும் அமிழ்ந்து போய் உள்ளன,ஆனால் அதற்காக சாதிய மத வெறி இன்னும் இல்லாது போகவில்லை.அமிழ்ந்து போயுள்ளது.இன விடுதலை அடைந்த பின் இவை மேல் எழும்பும் அப்படி நடக்காமல் இருக்க தொடர்ச்சியான விழிப்புணர்வு அவசியம்.சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சாதியச்சண்டைகளை உதாரணமாகக் கூறலாம்.

திமுக தவிர மற்றக் கட்சிகள் தீவிர பெரியார் கொள்கை உடையனவல்ல. திமுக கூட பெரியாருடன் கொள்கை முரண்பட்டே பெரியாரின் திராவிடக் கட்சியில் இருந்து பிரிந்தன. பெரியாரின் திராவிடக் கட்சி கடந்த காலங்களில் சட்டசபைக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கு ஒரு உறுப்பினரையாவது அனுப்பியதைக் காட்ட முடியுமா? ஆக மக்கள் செல்வாக்கில்லாத நிலையே பெரியாரின் கொள்கைகளுக்கும் அவரின் கட்சிக்கும் என்பது வெளிப்படை. திமுக மற்றும் திராவிடக் கட்சிகள் பெரியாரின் சில கொள்கைகளை உதட்டளவில் உச்சரிக்கின்றனவே தவிர அவற்றின் அரசியல் இயக்கத்தில் பெரியார் அதிக தூரம் விலக்கியே வைக்கப்பட்டுல்ளார். திராவிடக் கட்சிகள் என்பதற்காக அவை பெரியாரின் கொள்கைகளை 100% ஏற்று வழிநடக்கின்றன என்பது முழு அரசியல் பொய்.
உமக்கு பல விளக்கம் இன்மைகள் மேற் கூறிய வற்றில் இருந்து தெரிகிறது.ஏன் இந்தக் கட்சிகளைத் திராவிடக் கட்சிகள் என்று அழைக்கிறார்கள் என்று தெரியுமா? யார் இந்த திராவிடக்கருத்தியலை தமிழ் நாட்டில் தொடக்கினார் என்று தெரியுமா? பிறகெப்படி பெரியார் வழி வராதவை என்று சொல்கிறீர்?மக்கள் செல்வாகில்லாமால இந்த திராவிடக்ப்கட்சிகள் தமிழ் நாட்டில் நாற்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன? பெரியாரை தமிழ் நாட்டின் முதலமச்சராகும் படி கேட்கப் பட்ட போது அதனை அவர் மறுத்தது தெரியுமா?

வீரப்பன் கூடத்தான் ஈழத்தமிழருக்கு குரல் கொடுத்தான். அவனும் திராவிடக் கட்சியின் அங்கத்தவனா. இந்தியாவைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட மக்கள் என்று அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் ஈழத்தில் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அது ஒரு கொள்கை ஒற்றுமையின் வெளிப்பாடாக இருக்கலாம். சமூக மாற்றங்களை வேண்டுகிறார்களோ இல்லையோ கட்சி ரீதியாக தங்கள் நிலைகளைப் பலப்படுத்த அவர்களுக்கு ஈழ ஆதரவு என்பது உதவியளிப்பதால் அதைச் செய்கின்றனர். அத்தோடு தமிழர்கள் என்ற உணர்வு நிலையும் அதை ஊக்கிவிக்கிறது.

அப்படியா அப்படியானால் இந்த மக்களை ஒடுக்குபவர்கள் யார்?திராவிடரை தமிழரை ஒடுக்குபவர் யார்? ஏன் ஒடுக்குபவர்கள் சிறிலங்கா அரசுக்கு ஆதரவு தருகின்றனர்?

ஏன் வட நாட்டில் ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவு எமக்கு இல்லை? கட்சி ரீதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதால் எவ்வாறு பலப்படுத்த முடியும்? அப்படியாயின் ஏன் காங்கிரசோ இல்லை பிஜேபியோ அப்படி நடக்கவில்லை? ஏன் அவர்கள் கட்சியினர் என்த இனத்தவர்கள்? வீரப்பன் தனது இறுதி நாட்களில் தமிழ்த் தேசியக்குழுக்களுடன் ஏற்பட்ட உறவால் தமிழருக்காகப் பேசினான்.இங்கே சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் அதாவது தமிழ் நாட்டு மக்கள் எமக்கு ஆதரவு தருகின்றனர் என்பத் உண்மை தான்.இவர்களை ஒடுக்குபவர்கள் யார்?இந்த ஒடுக்குபவர்களுக்கு ஆதரவாக இங்கே நீங்கள் எழுதுகிறீர்கள் அல்லவா?இது நியாயமா ?அந்த மக்கள் எமக்காக் குரல் கொடுக்கும் போது, நாமோ அந்த மக்களை ஒடுக்கும் சித்தாத்தமான பார்ப்பனீயத்திற்கு இங்கு வால் பிடிக்கிறோம்.

ஏன் இந்துக்கள் என்ற ரீதியாக இந்தியா முழுதும் இருக்கும் இந்துக்கள் , நீங்கள் இங்கே வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் சங்கர மடம் என்பவை குரல் எழுப்பவில்லை? ஏன் சோவும் ராமும் எஸ் வி சேகரும், வசத்தியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இப்படி நயவச்ஞகமானாக எழுதுகிறார்கள்? இவர்களுக்கு ஏன் இனத்துவப்பற்று இல்லை? இவர்களின் இனம் என்ன?

ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய மத்திய அரசின் ஆதரவில்லாமலா போராட்டம் ஆரம்பித்தது. இந்திரா அம்மையாரை அமம்மையார் அம்மையார் என்று போற்றித் திரிந்ததை ஈழத்தமிழர்கள் மறந்துவிடலாம்..வரலாறுகளும் பத்திரிகைகளும் மறக்கா. ஈழப்போராட்டத்தின் தளமே இந்தியாவில் தான் அதுவும் மத்திய அரசின் ஆதரவுடன் தான் இயங்க ஆரம்பித்தது. அதில் இந்திய தேசிய நலன் இருந்திருக்கலாம் அது வேறுவிடயம். ஆனால் வளர்க்கப்பட்டது என்னவோ இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் தான் என்பதை மறுதலிக்க முடியாது. ஆரம்பத்தில் சோ என்ன பலரும் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். இந்தியப்படை - புலிகள் மோதல் என்பதுதான் சில கசப்பான மாற்றங்களுக்கு வழிவகுத்தன. ராஜீவ் துன்பியலுக்குப் பின்னர் திராவிடக் கட்சிகள் கூட புலிகளை ஒதுக்கின..அதிமுக புலிகளை அழித்தது. நீங்கள் வரலாற்றை உங்களுக்கு ஏற்றது போல மாற்றுபவர் என்பது யாவரும் அறிந்ததே. மத்திய அரசின் கொள்கை மாற்றமில்லாமல் திராவிடக் கட்சிகள் மூச்சும் விடமுடியாது என்பது நேற்றுவரை உண்மையாக இருந்ததை நீங்கள் மறக்கலாம் நாம் மறக்கத் தயார் இல்லை.

அது தான் கேட்கிறேன் ஏன் மத்திய அரசோ இல்லை இந்தியாவின் இந்துக்களோ எமக்கு எதிராக இருக்கிறார்கள் என்று? இன்னும் இதற்குப் பதில் இல்லையே?புலிகள் இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போராடும் முதலே சோவும் ராமும் புலிகளை எதிர்த்தார்கள்.இந்தியா தமிழர்கள் இந்துக்கள் என்ற படியால் உதவவில்லை அவர்கள் தங்கள் நலனுக்ககவே மட்டுப் படுத்தப்பட்ட அளவில் உதவினார்கள் ஆனால் புலிகள் இதனால் வளரவில்லை என்பது உங்களுக்குத் தெரியாது என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது, .உங்களுல்கு போராட்ட வரலாறு தெரியாது அல்லது தெரிந்தும் திரிக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

பாரதததில் தமிழர்களின் இருப்பை அடிமை ஆக்கியது யார்? யார் தமிழர்களை அடிமை ஆக்கினார்கள்?ஈழப் போராட்டம் ஏன் சந்தேகக்கண்ணோடு பார்க்கப்பட வேண்டும்? தமிழத் தேசியம் தானே இங்கே எம் இருவரையும் இணைக்கிறது? பெரியார் பேசியது தானே தமிழ்த் தேசியம்? உமது உளறல்கள் ஒரே குழப்பமாக அல்லவா இருக்கிறது?

பாரதத் தமிழர்களின் வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வரலாறு தெரிந்த படியால் தான் கேட்கிறேன், இங்கே பாரதத்தில் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்படவில்லை என்று வாதிட்டது நீர் தான் இப்போது அடக்கபடுகிறார்கள் என்ங்கிறீர்.ஆகவே பெரியாரின் போராட்டம் நீயாயம் ஆனது எங்கிறீரா? யார் இவர்களை அடக்கியது?

பெரியார் பாடசாலைக்குச் சென்று படிக்காமல் இருக்கலாம் ஆனால் அவர் நடைமுறையில் எமது தேசியத் தலைவரைப்போலவே பலதையும் கற்றார், வாசித்தார். நீர் படிப்பறிற்றவர் என்று வைக்கும் விமர்சனத்தை எமது தேசியத் தலைவரை நோக்கியும் வைப்பீரோ?

இது சீண்டு முடியும் செயல். தலைவர் ஒரு போதும் தன்னைப் பகுத்தறிவு வாதி என்று மற்றவர்களை முட்டாள்கள் நிலையில் வைத்துக் கருத்துச் சொன்னதேயில்லை. பெரியார் தலைவர் ஒப்பீடே தவறானது. பெரியார் ஒரு வர்க்க குழப்பவாதி. வன்முறைத்தனமான மனித விரோத கருத்துக்களை தூண்டிவிட்டு மக்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் சமூகங்களை ஒடுக்க நினைத்த கொடிய நாசிய பாசிச வாதி. சமூக விடுதலை என்று கூறிக் கொண்டே இன்னொரு சமூகத்தின் உரிமைகளைத் தட்டிப்பறிக்க கூக்கிரலில்ல மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய குற்றவாளி. அவரைத் தலைவருடன் ஒப்பிட்டு இங்கு அநாவசியச் சிக்கலைத் தோற்றுவித்து கருத்தாடுபவர்களை சீண்டு முடியும் உங்கள் நரித்தனமான வேலையை வழமை போல் செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.இது கண்டிக்கத்தக்கது.

இல்லை நீர் சொன்ன வற்றைறைத் தான் சொல்லி உள்ளேன் ஒருவர் படிப்பறிவற்றவர் என்பதால் தலைவராக இருக்க முடியாது அவருக்கு விளக்கம் இல்லை என்பது தான் நீர் முன் வைத்த விமர்சனம்.அதே விமர்சனத்தை தேசியத் தலைவர் மீதும் உம்மால் வைக்கமுடியுமா என்று கேட்கிறேன் இல்லா விட்டால் நீர் பெரியார் மீது அவதூற்றை எழுத வேண்டும் என்ன்பதற்காகத் தான் எழுதி உள்ளீர் என்று பொருள் படும்.பெரியாரும் தான் சொன்ன வற்றை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு காலமும் சொல்லவில்லை. நான் சொன்னதை உங்கள் சிந்தனையில் ஏற்று நீங்களாகவே தெளிந்த்து கொள்ளுங்கள் என்று தான் சொன்னார்.இங்கே வேண்டுமென்றே அவதூறுகளைத் தான் உம்மால் எழுத முடியும் உருப்படியான விமரிசனக்களை அல்ல.தலைவர் மீதும் பாசிச வாதி இன வெறியர் எங்கிற விமரிசனங்கள் மாற்றுக் கருத்து என்று சொல்பவர்களால் முன் வைக்கப்படுகின்றன.இந்த வசை பாடல்களை முன் வைப்பவர்கள் எந்த வித கருத்தியற் பலமோ அரசியற் பலமோ அற்ற நிலையிலயே இவ்வாறான வசை பாடல்களைச் செய்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.அதயே தான் நீர் இங்கு நாசியம் பாசியம் படிப்பறிவற்றவன் என்று பெரியார் மீது செய்கிறீர்.

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு பல விளக்கம் இன்மைகள் மேற் கூறிய வற்றில் இருந்து தெரிகிறது.ஏன் இந்தக் கட்சிகளைத் திராவிடக் கட்சிகள் என்று அழைக்கிறார்கள் என்று தெரியுமா? யார் இந்த திராவிடக்கருத்தியலை தமிழ் நாட்டில் தொடக்கினார் என்று தெரியுமா? பிறகெப்படி பெரியார் வழி வராதவை என்று சொல்கிறீர்?மக்கள் செல்வாகில்லாமால இந்த திராவிடக்ப்கட்சிகள் தமிழ் நாட்டில் நாற்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன? பெரியாரை தமிழ் நாட்டின் முதலமச்சராகும் படி கேட்கப் பட்ட போது அதனை அவர் மறுத்தது தெரியுமா?

திராவிடம் ஒன்றும் பெரியாரின் சொத்தல்ல. திராவிடம் என்பது பெரியாரால் தனது அரசியலுக்காகப் பாவிக்கப்பட்டது. அதைத்தான் ஏனைய திராவிடக் கட்சிகளும் தொடர்ந்தன.

ஆனால் பெரியாரின் சொந்தக் கட்சியான திராவிட கழகத்தை விட்டு அண்ணாவும் பிறரும் பிரிந்து அமைத்த பெரியாரிடமிருந்து விலகிய திமுக வால் தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆட்சியைப் பிடித்த பின் தான் அண்ணா தனது விசுவாசத்துக்காக பெரியாரை ஆட்சியில் அமர்த்த முனைந்தார். ஆனால் தான் ஆட்சியில் அமர்ந்தால் தனக்கெதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று தெரிந்த பெரியார் அடக்கி வாசித்தார். அதன் பின்னர் பெரியார் திராவிடக் கழகம் வெறும் அரசியல் பேசிக் கொண்டு சட்டசபையையோ பாராளுமன்றத்தையோ அடைய முடியாத அரசியல் கட்சியாகவே இருக்கிறது. அவர்களுக்கு ஈழ ஆதரவு என்பதே விளம்பரமாகியும் உள்ளது. அதுதான் தங்களை ஈழ ஆதரவாளர்களாகக் காட்டியும் கொள்கின்றனர். இல்ல வரட்டாம். :rolleyes::icon_idea:

தமிழனம் சிதைந்து சின்னாபின்னப்ட்டுப் போனதற்கு இந்த மதமும் சாதீச் சண்டையும் தானே காரணம்.. தற்போதைய நிலையில் நாம் எமக்குள் எதற்காகவோ யாருக்காகவோ சிண்டு முடிந்து கொண்டு எம்முள் குழயடிச் சண்டை பிடிப்பது எவ் வகையில் நியாயாம். இன்று நேற்று தமிழகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை செய்திகளில் வாசிக்கவில்லையா? ஒரு சாதாரண சிலை உடைப்பு இன்று தமிழரை எவ்வளவு துர்ரம் பிரித்து வைத்துள்ளது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எமக்குத் தேவையா? எமது பிரச்சனைகளுக்கு நாம் ஒன்று கூடி எமக்கு உதவ முன்வருபவர்களையும் சேர்த்துக் கொண்டு போராடுவது சிறந்ததா? அல்லது அவர்களையும் எமது விதண்டாவாதங்களின் மூலம் துரா நிறுத்தி தனியே கிடந்து சாவது நல்லதா? சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்வோம் மற்றவைகளை பின் பார்த்துக் கொள்ளளாம்.

ஈழத்திலிருந்து

ஜானா :icon_idea:

[இலங்கை ராணுவத்துக்கு வெடிமருந்து-விசாரணை நடத்தப்படும்: கருணாநிதியிடம் மத்திய மந்திரி உறுதி

சென்னை, டிச. 9-

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:-

இலங்கை கடற்படைக்கு வெடி பொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல அனுமதி அளித் திருப்பதாகவும், அது வேதனை தருவதாகவும் தமிழகத் தலைவர் கள் சிலர் அதிர்ச்சியுடன் அறிக்கை விடுத்திருக்கிறார்கள். இதனைப்படித்தவுடன் டெல்லியில் இருந்த முதல்- அமைச்சர் கருணாநிதி உடனடியாக நேற்றைய தினமே மத்திய மந்திரி தயாநிதி மாறன் மூலமாக மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி பிரணாப்முகர்ஜியிடம் விசாரிக்க கூறியிருந்தார்.

அவரும் உடனடியாக மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் இதைப்பற்றி பேசியதாகவும், மத்திய அமைச்சர் மூலமாக அப்படி அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான ஆணையும் பிறப்பிக்கவில்லை என்றும் இருந்தாலும் இது குறித்து உடனடியாக விசாரிப்ப தாகவும் தெரிவித்ததாக முதல் அமைச்சர் கருணாநிதியிடம் கூறினார்.

மேலும் இன்றைய தினம் முதல்-அமைச்சர் கருணாநிதியே மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி அந்தோணியிடம் இது குறித்து நேரில் தெரிவித்தபோது அந்தோணி தமிழக முதல்வரிடம் அப்படி எதுவும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் எனினும் விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்தார்.

எனவே வியாபார ரீதியாக அரசுக்கு தெரியாமல் ஏதாவது நடைபெற்றிருக்குமா என்பது குறித்தும் உடனடியாக விசாரித்து அறிய தமிழகக் காவல்துறைக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி டெல்லியிலிருந்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நன்றி மாலை மலர்

திராவிடம் ஒன்றும் பெரியாரின் சொத்தல்ல. திராவிடம் என்பது பெரியாரால் தனது அரசியலுக்காகப் பாவிக்கப்பட்டது. அதைத்தான் ஏனைய திராவிடக் கட்சிகளும் தொடர்ந்தன.

ஆனால் பெரியாரின் சொந்தக் கட்சியான திராவிட கழகத்தை விட்டு அண்ணாவும் பிறரும் பிரிந்து அமைத்த பெரியாரிடமிருந்து விலகிய திமுக வால் தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆட்சியைப் பிடித்த பின் தான் அண்ணா தனது விசுவாசத்துக்காக பெரியாரை ஆட்சியில் அமர்த்த முனைந்தார். ஆனால் தான் ஆட்சியில் அமர்ந்தால் தனக்கெதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று தெரிந்த பெரியார் அடக்கி வாசித்தார். அதன் பின்னர் பெரியார் திராவிடக் கழகம் வெறும் அரசியல் பேசிக் கொண்டு சட்டசபையையோ பாராளுமன்றத்தையோ அடைய முடியாத அரசியல் கட்சியாகவே இருக்கிறது. அவர்களுக்கு ஈழ ஆதரவு என்பதே விளம்பரமாகியும் உள்ளது. அதுதான் தங்களை ஈழ ஆதரவாளர்களாகக் காட்டியும் கொள்கின்றனர். இல்ல வரட்டாம். :rolleyes::icon_idea:

திராவிடம் என்பது இல்லாத ஒன்று என்றும் கருணானிதி போன்றோர் சந்தப்ப வாதிகள் என்று நீர் தான் எழுதுனீர் ,இப்போது திமுகா ஆட்சி பிடித்தது என்கிறீர்.அன்ணா ஏன் பெரியாருக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுக்க வேண்டும்.திராவிடக் கட்சிகள் பெரியாரிடம் இருந்து பிரிந்தால் இன்னும் ஏன் பெரியார் படத்தையும் அவர் சொன்ன வற்றையும் சொல்லிக் கொண்டு இருகிறார்கள்.ஏன் பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் செய்கிறார்கள்? ஏன் பெரியாருக்கு விழா எடுகிறார்கள் ஏன் அவருக்கு அஞ்ஞலி செய்கிறார்கள்?திராவிடம் என்பதை அப்போ யார் முன் மொழிந்தார்கள்?அண்ணா எங்கிருந்து வந்தார்?

திராவிடம் இல்லை திராவிடக் கட்சிகள் எல்லாம் மோசடி நாம் இந்துக்கள் எமக்கு இந்தியாவில் இந்துக்கள் ஆதரவு செய்வார்கள் என்று எழுதுனீர் இப்போது ஏன் உங்கள் இந்துக்கள் குரல் கொடுக்கவில்லை என்று கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் பதில் இல்லை?

ஈழ ஆதரவு விளம்பரதுக்கு என்றால் ஏன் அவர்களிடம் ஆதரவு கோருகிறீர்கள்? ஏன் இந்த விளம்பரத்தைக் கூட பாஜாகவோ காங்கிரசோ இல்லை சஙகர மடமோ செய்ய வில்லை?ஈழ ஆதரவு விளம்பரம் ஏன் அவர்களுக்குத் தேவை? முன்னர் இன ரீதியான ஆதரவு என்றீர் இப்போது விளம்பரம் என்கிறீர் நிலையாக எதாவது உம்மிடம் இருந்து வருமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.