Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் மடிந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும்! - நாடாளுமன்றத்தில் சுமந்திரன் கோரிக்கை 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த நாளில் தேசியத்தலைவர் இலங்கைப்  படைகளோடு சேர்ந்து ஆடிய வெறியாட்டத்தையும் கொல்லப்பட்ட பொதுமக்களையும் பற்றி தங்களைப் போன்ற வீரம்மிக்கவர்கள் கட்டாயம் பேசுவதோடு தங்கட கண்டனத்தையும் பதிவு செய்வார்கள் எண்டு நம்புகிறேன்..

அதையும் படங்களோடு இங்கே இணைப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

இங்கு கருத்துக்களைப் பதிபவர்களை சீண்டி கோபப்படுத்தி தாறுமாறாக கருத்துக்களைப் பதிய வைக்கவென்று இந்த அவதூறான கருத்தை வைத்திருக்கின்றீர்கள் ஜீவன். புலி எதிர்ப்புவாதிகள் கூட தலைவர் பிரபாகரன் சிங்களப் படைகளோடு சேர்ந்து வெறியாட்டம் நடாத்தினார் என்று சொன்னதில்லை. சிங்களப் படைகளோடு புலிகள் சேர்ந்து நடாத்திய வெறியாட்டம் ஒன்றையேனும் உங்களால் குறிப்பிடமுடியுமா?

  • Replies 65
  • Views 2.6k
  • Created
  • Last Reply

ஆறு வருடமாக என்னத்தை செய்கிறார்கள்..  உள் குத்து வெட்டை தவிர..    இதை தானே கேக்கிறார்கள்..  தேர்தல் வரும் காலம் தவிர மற்றும் படி அவர்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசுவது கூட இல்லையே..

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஜீவன் சிவா said:

தேசியத்தலைவர் மட்டும்தான் எமது மக்களுக்காக ஏதாவது செய்வார் என்ற விவாதத்திலிருந்து வெளியே வாங்கோ. எமது இனத்துக்காகப் போராடப் புறப்பட்ட ஒவ்வொருவரும் தமிழனும் போராளியே. அவர்களை மக்கள் தூக்கி எறியவில்லை - மாறாக தேசியத்தலைவரின் ஆயுதத்தினால் அழிக்கப்பட்டவர்கள். சரி அழித்தவர்களாவது ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அதுவும் முள்ளிவாய்க்காலில் மக்களை அழித்து முடிந்து போனது.

இப்போது சம்பந்தர் துரோகி, சுமந்திரன் துரோகி. வாய்ச்சவடால் விடுபவர்கள் போராளிகள். எமது மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்த பின்னரும் உங்கள் குரல்கள் மாறவில்லை. மறுபடியும் துரோகிப்பட்டம்.

உங்கள் விருப்பப்படி மறுடியும் தேசியத்தலைவரின் அணி வந்து போராடட்டும் - அதுவரை இவர்கள் துரோகிகளாகவே இருக்கட்டும் உங்கள் பார்வையில். ஆனால் எனது மக்களின் பார்வையில் இவர்கள் என்றும் ஹீரோக்கள்தான்.

நாபா இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் காலத்தில் ஈபி ஆர் எல் எவ் க்கு தலைவராக இருந்தவர். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து ஈபி ஆர் எல் எவ் நடாத்திய அட்டூழியங்கள் எல்லாவற்றிற்கும் தலைவர் என்ற ரீதியில் பொறுப்பானவர். அவர் என்னதான் தனிப்பட்ட முறையில் நல்லவர் என்று உங்களைப் போன்றவர்கள் நினைத்தாலும், தனக்குக் கீழ் உள்ளவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர் தலைவராகவோ, ஹீரோவாக இருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, காத்து said:

ஆறு வருடமாக என்னத்தை செய்கிறார்கள்..  உள் குத்து வெட்டை தவிர..    இதை தானே கேக்கிறார்கள்..  தேர்தல் வரும் காலம் தவிர மற்றும் படி அவர்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசுவது கூட இல்லையே..

உள்குத்து வெட்டு எங்குதான் இல்லை! 33 வருடங்கள் ஆயுதம் தாங்கி செங்கோலோச்சிய அந்த மாபெரும் இயக்கத்துக்குள் இல்லாத குத்து வெட்டா? அந்தக் குத்துவெட்டுகள்தானே இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை மக்களைக் கொண்டுவந்து விட்டு ஆயுதங்களை கௌரவமாக அந்த இயக்கத்தை மௌனிக்கச் செய்தது. தமிழர் பிரச்சினையின் அடிநாதமே அடிபட்டுப்போனது! (ஆனால் இன்னும் சிலர் இத்தனை நாடுகள் எதிராக வந்து அழித்தது என பட்டியலிட்டு வீரத்தை மெச்சிக்கொள்ளும் நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது) இப்போது உங்கள் ஆதங்கம் புரிகின்றது அந்த மாபெரும் இயக்கம் போன்று உள்குத்து வெட்டுக்களால் தமிழர் பிரச்சினையை நீர்த்துபோகச் செய்யாமல் ஒற்றுமையுடன் இருந்து செயற்பட வலியுறுத்துகின்றீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:

சுமந்திரன் புலிகள் என்று பேசியதற்கு காரணம் மற்ற அமைப்பினருக்கு அஞ்சலி செலுத்த அரசு எப்பவோ அனுமதி அளித்துவிட்டது .

சிங்கள அரசுக்கு கூலியாக இருந்தால் அனுமதிப்பார்கள்தானே 

2 minutes ago, வாலி said:

உள்குத்து வெட்டு எங்குதான் இல்லை! 33 வருடங்கள் ஆயுதம் தாங்கி செங்கோலோச்சிய அந்த மாபெரும் இயக்கத்துக்குள் இல்லாத குத்து வெட்டா? அந்தக் குத்துவெட்டுகள்தானே இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை மக்களைக் கொண்டுவந்து விட்டு ஆயுதங்களை கௌரவமாக அந்த இயக்கத்தை மௌனிக்கச் செய்தது. தமிழர் பிரச்சினையின் அடிநாதமே அடிபட்டுப்போனது! (ஆனால் இன்னும் சிலர் இத்தனை நாடுகள் எதிராக வந்து அழித்தது என பட்டியலிட்டு வீரத்தை மெச்சிக்கொள்ளும் நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது) இப்போது உங்கள் ஆதங்கம் புரிகின்றது அந்த மாபெரும் இயக்கம் போன்று உள்குத்து வெட்டுக்களால் தமிழர் பிரச்சினையை நீர்த்துபோகச் செய்யாமல் ஒற்றுமையுடன் இருந்து செயற்பட வலியுறுத்துகின்றீர்கள்!

நாங்கள் சந்திரனிலை இருந்து வந்தனாங்கள் கண்டியளோ..   எங்களுக்கு ஊரிலை என்ன நாசம் நடந்தது நடக்குது எண்டது தெரியாது...   

எதையாவது யாராவது சொன்னால் உடனை புலி வாந்தி எடுத்து அதுக்கு பின்னாலை ஒளியிற ~~~~~~~~~   களுக்கு என்னத்தை விளங்க வைக்க முடியும்..? 

1958 இல் இருந்து இலங்கயிலை தமிழருக்கு பிரச்சினை இருக்கு.. புலி  தோண்றினது 1972 லை..  அதிலை இருந்து 1986 வரைக்கும் பல இயக்கங்கள் கட்ச்சிகள் ஈழத்திலை இருந்தது....  புலிகள் தனித்து போராடினது 1986 முதல் 2009 வரைக்கும் 23 வருடம்...   அதுவே சாதனைதானே இல்லையா...? 

  இதை சொல்லுறது உங்களுக்கு எல்லாம் விளங்கும் எண்டு இல்லை. எதுக்கும் சொல்லி வைக்கிறன. 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஜீவன் சிவா said:

 மக்கள் விருப்பம் இவர்கள்தான், இவ்வழிதான் எமது மக்களின் பிரச்சனைக்கு தீர்வைக் கொண்டு வரும்.

இவர்கள் தேர்தலின்போது மக்களிடம் நேர்வழியில் ஓட்டுப் பெறுவதற்காகன பிரசாரங்களை மேற்கொண்டிருக்கலாம், நாங்கள் புலிகளின் வழி நிற்பவர்கள் என்று எதற்காக புலிகளின் செயற்பாடுகளைப் போற்றுவதுபோல் மக்களை ஏமாற்றிப் பிரசாரம் செய்யவேண்டும்? ஏமாற்றப்பட்ட மக்கள் கூக்குரலிடத்தான் செய்வார்கள். 
 
25 minutes ago, கிருபன் said:

இங்கு கருத்துக்களைப் பதிபவர்களை சீண்டி கோபப்படுத்தி தாறுமாறாக கருத்துக்களைப் பதிய வைக்கவென்று இந்த அவதூறான கருத்தை வைத்திருக்கின்றீர்கள் ஜீவன். புலி எதிர்ப்புவாதிகள் கூட தலைவர் பிரபாகரன் சிங்களப் படைகளோடு சேர்ந்து வெறியாட்டம் நடாத்தினார் என்று சொன்னதில்லை. சிங்களப் படைகளோடு புலிகள் சேர்ந்து நடாத்திய வெறியாட்டம் ஒன்றையேனும் உங்களால் குறிப்பிடமுடியுமா?

கிருபன் நான் பதிந்த விடயம் மறைமுகமாக இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஆயுதம் பெற்று அதை வைத்து எமது மக்களை அழித்ததை. எனது மொழி ஆள்மைக் குறைவால் சரியாக வெளிப்படுத்தி இருக்கவில்லை - மன்னிக்கவும்.

கிருபன் எனது பார்வையில் பிரபாகரன், உமா மகேஸ்வரன், சிறீ சபாரட்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம், சம்பந்தர், சுமந்திரன்... ஏன் இயக்கத்திற்கு பாண் வாங்கிக் கொடுத்தற்காக இராணுவத்தால் சுடப்பட்ட பாலன் என யாவரும் போராளிகள்தான். தயவு செய்து என்னை ஒரு குழுமத்திற்குள் அடககிவிடாதீர்கள்.

ஜீவன் ..  நீங்கள் புலிகளின் தவறு என்பதுக்குள் மற்றவர்கள் செய்தஎல்லா தவறையும் மறைக்க முயலும் ஒரு சாதாரண புலி எதிர்ப்பாளர்தான்.  மேலை நீங்கள் சொன்ன கருத்துக்களில் தெளிவாக வே உள்ளது.  இப்போ சாயம் போட்டு மறைக்காதீர்கள். 

பத்மநாபா பற்றி பேசிய போது இடம் பொருள் ஏவல் அறியாது புலிகளை கொன்டு வந்திருக்க வேண்டிய தேவையே இல்லை.

 எப்படியெல்லாம் விளக்கம் சொல்லுறாங்க......முடியல

இதுக்க நாங்க நல்லவங்க நம்பிடுங்கெண்டு கெஞ்சுறாங்க

8 minutes ago, Paanch said:

இவர்கள் தேர்தலின்போது மக்களிடம் நேர்வழியில் ஓட்டுப் பெறுவதற்காகன பிரசாரங்களை மேற்கொண்டிருக்கலாம், நாங்கள் புலிகளின் வழி நிற்பவர்கள் என்று எதற்காக புலிகளின் செயற்பாடுகளைப் போற்றுவதுபோல் மக்களை ஏமாற்றிப் பிரசாரம் செய்யவேண்டும்? ஏமாற்றப்பட்ட மக்கள் கூக்குரலிடத்தான் செய்வார்கள். 
 
நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். 

ஆனால்:
1, எமது விடிவு
2, எமக்கு தீர்வு

சாத்வீகம் - சாத்தியப்டவில்லை
ஆயுதம் - அழித்தது மட்டுமே

இன்று இவ்வழியைத் தவிர எந்த மார்க்கமுமில்லை.
 
புலிகளை முன்வைத்து தேர்தலில் நிண்ட xxxxxxகளுக்கு புலிகளை குறைகூற என்ன அருகதையுண்டு  

4 minutes ago, Surveyor said:

புலிகளை முன்வைத்து தேர்தலில் நிண்ட xxxxxxகளுக்கு புலிகளை குறைகூற என்ன அருகதையுண்டு  

ஐயோ ஐயோ புலிகள்தான் தமிழர்களை மீட்பார்கள்.
என்னை விடுங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஜீவன் சிவா said:

கிருபன் நான் பதிந்த விடயம் மறைமுகமாக இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஆயுதம் பெற்று அதை வைத்து எமது மக்களை அழித்ததை. எனது மொழி ஆள்மைக் குறைவால் சரியாக வெளிப்படுத்தி இருக்கவில்லை - மன்னிக்கவும்.

கிருபன் எனது பார்வையில் பிரபாகரன், உமா மகேஸ்வரன், சிறீ சபாரட்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம், சம்பந்தர், சுமந்திரன்... ஏன் இயக்கத்திற்கு பாண் வாங்கிக் கொடுத்தற்காக இராணுவத்தால் சுடப்பட்ட பாலன் என யாவரும் போராளிகள்தான். தயவு செய்து என்னை ஒரு குழுமத்திற்குள் அடககிவிடாதீர்கள்.

புலிகள் இலங்கை அரசிடமிருந்து வாங்கி மக்களை அழித்தார்கள் என்று புது வியாக்கியானம் சொல்லுகின்றீர்கள். இந்திய ஆக்கிரப்பு இராணுவத்திற்கு எதிரான போருக்கே அந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் சிங்கள இராணுவத்திற்கு எதிராகவும் பாவிக்கப்பட்டன. இதில் "எமது மக்களை" எங்கு, எப்படி அழித்தார்கள்? புலிகள் இயக்கம் சிங்கள இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் எதிராக சண்டை பிடித்தார்கள். பதிலடியாக சிங்கள, இந்திய இராணுவங்கள் எமது மக்களை கொன்றொழித்தார்கள். அதனால் புலிகள்தான் மக்களின் அழிவுக்கு காரணம் என்று அடுத்த கருத்தில் சொல்லாதீர்கள்.

என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என்ற உணர்வோடு போராடி மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்தவர்கள்தான் மாவீரர்கள், தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க போராடுபவர்கள்த்கான் போராளிகள். சுயநலத்திற்காக கொள்கைகளை விட்டுக்கொடுத்தவர்கள், அரசியல் வியாபாரம் செய்தவர்கள் எல்லாம் போராளிகள் இல்லை. 

Edited by கிருபன்
மேலதிக விளக்கம் கொடுக்க

5 minutes ago, கிருபன் said:

என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என்ற உணர்வோடு போராடி மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்தவர்கள்தான் போராளிகள். சுயநலத்திற்காக கொள்கைகளை விட்டுக்கொடுத்தவர்கள், அரசியல் வியாபாரம் செய்தவர்கள் எல்லாம் போராளிகள் இல்லை. 

அப்ப பிரபாகரன், உமா மகேஸ்வரன், சிறீ சபாரட்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம், இயக்கத்திற்கு பாண் வாங்கிக் கொடுத்தற்காக இராணுவத்தால் சுடப்பட்ட பாலன்

Edited by ஜீவன் சிவா

6 minutes ago, ஜீவன் சிவா said:

ஐயோ ஐயோ புலிகள்தான் தமிழர்களை மீட்பார்கள்.
என்னை விடுங்கப்பா.

மீட்க வந்தவர்களை மீட்கவும் விடவில்லை...அட்லீஸ்ட் நினைவும் கூறவேண்டாம் எண்டமாதிரி வந்தீங்க இப்ப ஏதோ பிதட்டுறீங்க.

இப்ப இலங்கையில் 1.30am ஆகுது.....தூக்கத்தில கதைக்குறீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

அப்ப பிரபாகரன், உமா மகேஸ்வரன், சிறீ சபாரட்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம், இயக்கத்திற்கு பாண் வாங்கிக் கொடுத்தற்காக இராணுவத்தால் சுடப்பட்ட பாலன். 

தலைவர் பிரபாகரனையும், பாண் வாங்கிக் கொடுத்ததால் கொல்லப்பட்ட பாலனையும் தவிர மற்றையவர்களை நான் போராளியாகக் கருதவில்லை. 

3 minutes ago, ஜீவன் சிவா said:

அப்ப பிரபாகரன், உமா மகேஸ்வரன், சிறீ சபாரட்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம், இயக்கத்திற்கு பாண் வாங்கிக் கொடுத்தற்காக இராணுவத்தால் சுடப்பட்ட பாலன்

மண்ணுக்காக மடிந்த மாவீரர்களுக்கும் மக்களுக்காகவும் எண்டதை தெரியாமலா மாவிரர் நாள் பற்றி இங்கை இவ்வளவு எழுதுறீயள்..?

என்ன சோதனை இது...   தவறு என்னது தான் ...  மன்னிச்சு விடுங்கோ... 

4 minutes ago, Surveyor said:

மீட்க வந்தவர்களை மீட்கவும் விடவில்லை...அட்லீஸ்ட் நினைவும் கூறவேண்டாம் எண்டமாதிரி வந்தீங்க இப்ப ஏதோ பிதட்டுறீங்க.

இப்ப இலங்கையில் 1.30am ஆகுது.....தூக்கத்தில கதைக்குறீங்களோ?

அதுக்குத்தான் சொன்னேன் என்னை விடுங்கப்பா என்று. இரவு வணக்கம்

4 minutes ago, கிருபன் said:

தலைவர் பிரபாகரனையும், பாண் வாங்கிக் கொடுத்ததால் கொல்லப்பட்ட பாலனையும் தவிர மற்றையவர்களை நான் போராளியாகக் கருதவில்லை. 

நன்றி

எத்தனையோ ஆசைவாரத்தைகள்  இந்திய அரசாங்கத்தால் கூறபட்டபோதும் அதில் மயங்காது இறுதிவரை மக்களுக்காகவே போராடி தனது குடும்பத்தையே போராட்டத்தற்கு கொடுத்த தலைவர் பிரபாகரனையும் பதவிக்காக வீரவசனம் பேசிய அமிர்தலிங்கத்தையும் ஒரே தட்டில் வைக்க்கும் அளவிற்கு சிலரின் அறிவு உள்ளது. பிரபாகரன் நினைத்திருந்தால் இந்திய இலங்கை அரசின் செல்லபிள்ளைகளாக செல்வ கொழிப்போடு வாழ்திருக்கலாம். இது தமிழ் மக்களின் உள்ளத்தில் என்றுமே இருக்கும். கூட்டமைப்பு  அரசியல்வாதிகளின் தேர்தல் மேடைகளிலும் அவர் பெயர் சொன்னதும் பலத்த கரகோசம் இன்றும் தாயகத்தில்.

கிருபன் சார் ,பிரேமதாசா காலத்தில் சிங்கள அரசுடன் தேனிலவு கொண்டாடி மாற்று இயக்கத்தவர்கள் எத்தனை பெயரின் உயிரை குடித்தார்கள் .பின்னர் ரணிலுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி யாழ்பாணம் வந்து முதல் செய்த வேலை இனம் தெரியாத நபர்கள் என்ற பெயரில் நடத்திய கொலை வெறியாட்டங்கள் எண்ணில் அடங்காதவை.உங்களுக்கு தெரியாவிட்டால் உலகத்திற்கு தெரியாது என்று இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, trinco said:

ட்ரிங்கோ, சும் மும் புலிகளைப் பற்றிப் பேசித்தான் வாக்குக் கேட்டாரா? சம், மாவை செய்திருக்கலாம்! ஆனால் சும், புலிகளைப் பற்றிப் பேசி வாக்குக் கேட்க மாட்டேன் என்று உள்வட்டாரங்களில் சொல்லி அதைக் கடைப் பிடித்ததாக அறிந்தேன்! ஏதாவது அவர் புலி, போராளிகள் என்று பேசி வாக்குக் கேட்ட வீடியோ இருந்தால் இணைத்து விட முடியுமா? சும் மின் முகமூடியை உரிக்கத் தான் கேட்கிறேன்! :cool:

"கையில் ஆயுதங்கள் ஏந்திய பல அமைப்புகளை ( TEA , TELO, EPRLF, PLOT , EROS TELA )  எண்று பல  அமைப்புகள் . புலிகளின் அந்த கால உறுப்பினர் எண்ணிகையும் சரி ஆயுத கையிருப்பும் அந்த ஒட்டு மொத்த இயக்கங்களைவிட புலிகளிடம்  பல மடங்கு குறைவு. ஆனாலும் புலிகளால் அவர்களை ஒடுக்க முடிந்தது...   அப்படியானால் போராட புறப்பட்ட அந்த இயக்கங்களின் ஒற்றுமையும் , செயல்திறனும் இங்கே கேள்வியில் நிக்கிறது. "

இவர்கள் எல்லோருக்கும் எதிரி சிங்கள அரசு. புலிகளுக்கு மட்டும் தான் சகோதர இயக்கங்களும் எதிரி .அப்படி நினைத்திருந்தால் பொட்டம்மானை சாக்கு மூட்டைக்குள் கட்டிக்கொண்டு வந்த சங்கிலி  அப்பவே போட்டிருப்பார் .

11 minutes ago, Justin said:

ட்ரிங்கோ, சும் மும் புலிகளைப் பற்றிப் பேசித்தான் வாக்குக் கேட்டாரா? சம், மாவை செய்திருக்கலாம்! ஆனால் சும், புலிகளைப் பற்றிப் பேசி வாக்குக் கேட்க மாட்டேன் என்று உள்வட்டாரங்களில் சொல்லி அதைக் கடைப் பிடித்ததாக அறிந்தேன்! ஏதாவது அவர் புலி, போராளிகள் என்று பேசி வாக்குக் கேட்ட வீடியோ இருந்தால் இணைத்து விட முடியுமா? சும் மின் முகமூடியை உரிக்கத் தான் கேட்கிறேன்! :cool:

ஜஸ்ரின் ஐயா நீங்கள் சும்மையே எப்போதும் நினைத்து கொண்டிருப்பதால் நான் சும்மைப் பற்றி எழுதியதாக நினைத்து கேள்வி கேட்டுள்ளார்கள். நீங்கள் மேற்கோள் காட்டியதில் நான் சும்மைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறேனா? ஒரு போராளிகளும் பதவி மோகம் கொண்ட அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசத்தையே அதில் எழுதினேன். (பதவி மோகம் கொண்ட அரசியல் வாதி என்றதும் உங்களுக்கு சும்மின் ஞாபகம் வந்ததோ)

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, arjun said:

கிருபன் சார் ,பிரேமதாசா காலத்தில் சிங்கள அரசுடன் தேனிலவு கொண்டாடி மாற்று இயக்கத்தவர்கள் எத்தனை பெயரின் உயிரை குடித்தார்கள் .பின்னர் ரணிலுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி யாழ்பாணம் வந்து முதல் செய்த வேலை இனம் தெரியாத நபர்கள் என்ற பெயரில் நடத்திய கொலை வெறியாட்டங்கள் எண்ணில் அடங்காதவை.உங்களுக்கு தெரியாவிட்டால் உலகத்திற்கு தெரியாது என்று இல்லை .

அர்ஜுன், நீங்கள் இந்திய இராணுவ காலத்தில் இலங்கையில் இல்லை. அப்போது தமிழ்த் தேசிய இராணுவம் என்று ஆரம்பித்து முதன்முதலாக கட்டாயமாக இளைஞர்களைப் பிடித்து தலை மயிரும், இமை மயிரும் மழித்து அட்டூழியம் செய்தவர்களை நாங்கள் மறக்கவில்லை. இவை எல்லாவற்றையும் வசதியாக மறைத்து வைத்து புலி எதிர்ப்பு வரலாறு எழுதி எல்லா அழிவுகளுக்கும் புலிகளைக் காரணம் காட்டும் மாற்று இயக்கத்தவர்களையும் தெரியும். 

அடிப்படையில் எல்லா இயக்கத்தினைச் சேர்ந்தவர்களும் உட்கொலைகளிலும், மாற்று இயக்கக்காரர்களைக் கொல்வதிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.