Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் பறிபோகும் உயிர்கள்

Featured Replies

பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் பறிபோகும் உயிர்கள் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மயூரப்பிரியன்:-

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள கச்சேரி நல்லூர் வீதியில், உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட காரினை புகையிரதம் மோதிய விபத்தில் காரில் சென்ற ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்து இருந்தனர்.
 
பொறியியலாளரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான வில்வராஜா சுதாகர் (வயது 41) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடன் காரில் சென்ற அரவிந்தன் (வயது 28) , ஆதவன் (வயது 28 ) , கம்பதாஸன் (வயது 23) ஆகிய மூவரும் பாடுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இந்த பாதுகாப்பு அற்ற கடவையின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள் , யாழ்.மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் என பலர் சென்று வருகின்றனார்.
 
அக் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை. சிவப்பு விளக்கு ஒளிர்வதுடன் , சமிஞ்சை ஒலி எழுப்படும். அது மட்டுமே அக் கடவையில் புகையிரதம் வருவதற்காக அறிகுறி.
 
இந்த விபத்து சமிஞ்சை ஒலி எழுப்படாததே காரணம் என தெரிவிக்கபடுகின்றது. சமிஞ்சை ஒலி எழுப்பும் கருவி கடந்த தினங்களில் யாழில் பெய்த மழையினால் கடந்த மூன்று நாட்களாக பழுதடைந்து உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
புகையிரதம் வரும் போது கடவையினை மூடும் கதவுகள் இல்லை. புகையிரத திணைக்கள பாதுகாப்பு ஊழியர்களும் அதில் கடமையில் இல்லை.
 
சிவப்பு விளக்கினையும் சமிஞ்சை ஒலியினையும் கவனத்தில் கொண்டே புகையிரதம் வருகின்றது என பொதுமக்கள் அக் கடவையில் தரித்து நின்று செல்கின்றனர். குறித்த பகுதியில் உள்ள கடவை வீதி வளைவில் இருப்பதனால் தூரத்தில் வருபவர்களுக்கு சிவப்பு விளக்கு ஒளிர்வது தெரியாது. 
 
குறித்த கடவையினை பாதுகாப்பான கடவையாக ஆகும்மாறு அப்பகுதி மக்களால் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
 
அதேபோன்று சோமசுந்தரம் அவனியூ வீதியிலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவையே உள்ளது. குறித்த கடவை ஊடாக தினமும் அதிகளவான பாடசாலை மாணவர்கள் செல்கின்றனர். அத்துடன் குறித்த கடவைக்கு மிக அருகில் தான் வடமாகாண முதலமைச்சர்  அலுவலகமும் உள்ளது. இக் கடவையையும் பாதுகாப்பான கடவையாக மாற்றும் மாறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை என அயலவர்கள் தெரிவித்தனர்.
 
வடக்குக்குக்கான  புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் போது கடவைகளை சரியாக நிர்வகிக்கும் பணிகளை புகையிரத திணைக்களம் மற்றும் அதன் அதிகாரிகள் செய்ய தவறி விட்டனர் என்ற குற்றசாட்டுக்கள் பரவலாக உள்ளான 
 
வடபகுதியில் அநேகமான இடங்களில் கிராமங்கள் ஊடாகவே புகையிரத பாதை செல்கின்றன. அதில் பல இடங்களில் பாதுகாப்பான புகையிரத கடவைகள் அமைக்கப்படவில்லை.
 
கடந்த அரசாங்கத்தினால் தேர்தலை முன்னிட்டு அவசரமாக வடக்கில் காங்கேசன் துறை வரையிலான புகையிரத பாதை அமைக்கப்பட்டு அதன் பணிகள் முழுமையாக பூர்த்தியடையாமல் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
 
வடக்கில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் மற்றும் யாழ். மாவட்டத்திலே பெருமளவான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
 
எனவே கிராமங்கள் ஊடகாவும் சன நடமாட்டம் அதிகமான வீதிகளிளும் உள்ள கடவைகள் பாதுகாப்பான கடவைகளாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.அதன் ஊடாகவே உயிரிழப்புக்களை தடுக்க முடியும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126162/language/ta-IN/article.aspx

சுமந்திரன்  என்ன  செய்கிறார் ,சம்மந்தர்  என்ன  செய்கிறார் ஒரு  கடவை  போடும்  அளவுக்கு  நேரம்  இல்லாமல் உயிர்கள்  போய்க்கொண்டு   இருக்கிறது தமிழா  விழித்தெழு ...

 

இப்படி  ஒரு  குறுப்  வரும் பாருங்க .

  • கருத்துக்கள உறவுகள்

ரயில காணாத மக்கள் கண்டிட்டினம்.. எனி மேல போய் சேருங்கோ. பாதுக்காப்பு.. கடவை.. இதெல்லாம் எதிர்பார்க்கப்படாது.

இந்த விபத்துக்கள் நடக்க ஆரம்பித்த போதே.. ஒரு குறிப்பிட்ட தமிழனின் எண்ணிக்கையை இவை பறிக்கும் என்று சொல்லியாச்சு. சிங்கள அரச இயந்திரத்தின்.. அசம்பந்தம்.. இன்னும் இன்னும் பல தமிழ் உயிர்களை அழிக்கும். சொறீலங்காவிடம் இருந்து விடுதலை வாங்காமல்.. நாங்கள் மேற்குல தரத்துக்கு பாதுகாப்புப் பற்றி கனவும் காண முடியாது. இதுதான் சொறிலங்காவில் தமிழரின் இன்றைய நிலை.  :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகையிர கடவைகளில் மக்கள் கவனித்து கவனமாக கடக்கவேண்டும்.

எடுத்தற்கெல்லாம்  அரசை குறைசொல்வது/கோரிக்கை வைப்பது எல்லாம் சோம்பேறித்தனம்.

 30 வருடங்களுக்கு முன்னர் எல்லா இடங்களிலும் பாதுகாப்பு கடவைகள் இல்லவேயில்லை.

கோச்சிவரும் கவனம் என்பதை கவனத்திலெடுக்கவேண்டும்.:cool:

இன்றும் நெதர்லாந்த்  ரெயில்வே கடவையில் விபத்துக்கள்  நடந்து கொண்டு தான் இருக்கினறன...

  • கருத்துக்கள உறவுகள்

கோச் வரும் காலமும் இன்றைய காலமும் ஒன்றல்ல. கோச் வரும் காலத்தில் நிலக்கரியில் ஓடின ரயில்கள் இன்று மின்சாரத்தில் இயங்குது. பல மேன்மையான பாதுக்காப்பு முறைகள் நடைமுறையில் இருக்குது. மக்கள் புழக்கமும் இன்று அதிகம். தொடரூந்துகளின் வேகங்களும்.. வழித்தடங்களும்.. முன்னேற்றம் கண்டுள்ள நிலையில்.. விபத்துக்களை தடுக்க.. தொடரூந்தை இயக்குபவர்கள் தான் பாதுக்காப்பான வழிமுறைகளை அதிகரிக்க வேண்டுமே தவிர மக்களை சதா கவனமாக இருங்கள் என்று சொல்லிச் சாகடிக்க வேண்டியதில்லை.

சிந்தனையில் நல்ல நோக்கமிருந்தால்.. இந்த இழப்புக்களை தவிர்க்க போதிய அளவு முன்னேர்ப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அதுதான் முக்கியம். அது சொறீலங்காவில் இல்லை. :rolleyes:

இது குறித்து யாழ் தேவி கிளியில் வைத்து முதல் தமிழனை அடித்துக் கொன்ற போதே எழுதியாயிற்று. ஆனால்.. இன்னும் ஒரு பாதுகாப்பு மேம்பாடும் இல்லை. :rolleyes:

  • தொடங்கியவர்

இன்னும் இழப்புக்கள் தொடர விடுவதோ!

8019.jpg

எனது தந்தையார் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம், தேவையில்லா வேலையை ஒருவன் செய் வானாயின் தேவையுள்ள வேலையை செய்ய முடியாது போகும் என்று. 
இதற்குள் இருக்கக்கூடிய ஆழமான அர்த்தங்கள் புரியப்படுகின்றபோதுதான் தத்துவத்தின் தாற்பரியம் உணரப்படும். 

இன்று எங்கள் மண்ணில் தேவையில்லாத காரியங்களுக்கான நேர விரயங்களும் பணச் செலவுகளும் தாராளமாகி வருகின்றன. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போதும், தேவையற்ற விடயங்களைச் செய்வதன் காரணமாக மனித சமூகம் நிம்மதியை இழக்கவும் நேரிடுகிறது.
எனவே, பொதுநிலையில் மக்களின் தேவைகள் என்ன என்பது பற்றி அரசியல் தலைவர்களும் அரச உயர் அதிகாரிகளும் சிந்திப்பது கட்டாயமானதாகும். 

இந்த வகையில் வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைப்பும் புகையிரத சேவையும் வடபகுதி மக்களுக்கு மிகப்பெரும் நன்மை தருவதாகும். இருந்தும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் அவ்வப்போது ஏற்படுகின்ற மரணங்கள், புகையிரத சேவை இல்லாமல் இருந்திருக்குமாயின் என் பிள்ளை உயிரோடு இருந்திருப்பான் என்று நினைக்கின்ற அளவில் நிலைமையை உருவாக்கி விடுகின்றது.
புகையிரதப் பாதை அமைக்கப்படுகின்ற போது பாதுகாப்பான கடவைகளை உருவாக்குவது கட்டா யமானது. பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைப்பதன் மூலமாக மனித உயிர்கள் பாதுகாக் கப்படுகின்றன. இருந்தும் வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைப்பின்போது பாதுகாப்பான புகை யிரதக் கடவைகளை அமைப்பதில் மெத்தனப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது. 

பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமையுங்கள் என்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து பாதுகாப்பான கடவைகள் அமைக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளன. புகையிரதப் போக்கு வரத்துத் திணைக்களம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டிருந்த போதிலும் வடபகுதிப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து பாதுகாப்பான கடவைகளை அமையுங்கள் என்று போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே இருந்தது.

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றை புகையிரத வண்டி மோதியதில் இளம் பொறியியலாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும் மேலும் மூவர் காயம் அடைந்தமையும் மக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள வீதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப் பட வேண்டும் என்ற நியதிகள் இருந்த போதிலும் அந்த விடயம் எவராலும் கவனிக்கப்படாத நிலையில் தமிழ் மண் அருமந்த பொறியியலாளரை இழக்க வேண்டியதாயிற்று.

இதுபோல பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் முன்னரும் மரணங்கள் பல இடம்பெற்றுள்ளன என்பதால், வடபகுதியில் அமையப் பெற்ற புகையிரதப் பாதைகளின் கடவைகள் தொடர்பில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் உரியவர்கள் போக்குவரத்து அமைச்சுடனும் இலங்கைப் புகையிரதத் திணைக் களத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமைகளை செம்மைப்படுத்த வேண்டும். இல்லையேல் இழப்புகள் தவிர்க்க முடியாததாகி விடும்.      

http://www.valampurii.lk/valampurii/content.php?id=8019&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

புகையிர கடவைகளில் மக்கள் கவனித்து கவனமாக கடக்கவேண்டும்.

எடுத்தற்கெல்லாம்  அரசை குறைசொல்வது/கோரிக்கை வைப்பது எல்லாம் சோம்பேறித்தனம்.

 30 வருடங்களுக்கு முன்னர் எல்லா இடங்களிலும் பாதுகாப்பு கடவைகள் இல்லவேயில்லை.

கோச்சிவரும் கவனம் என்பதை கவனத்திலெடுக்கவேண்டும்.:cool:

இதுவே நான் சொல்ல நினைத்ததும்! நன்றி!

இதுக்கேன் புகையிரதத் திணைக்களத்தை நோவான்? அவர்கள் மத்திய அரசு, தமிழர்கள் மேல் அக்கறை இருக்காது. வடமாகாண வீதி அபிவிருத்திச் சபை (RDA) என்ன செய்கிறது? ஒரு "நிறுத்து (STOP)"  பலகையை இரு பக்கமும் நாட்டி விட்டால் ரயில் சிக்னல்  வேலை செய்கிறதோ இல்லையோ, எல்லாரும் நின்று பார்த்துப் போக வேண்டிய கட்டாயம் வரும் தானே? இப்படி எளிய வழிகள் இருக்க இதிலயும் ஆக்களைப் பலி கொடுத்து அதை அரச எதிர்ப்பு அரசியலாக்கி, சாவிலயே அரசியல் செய்கிற சகதிக் கூட்டமாகி விட்டோம்!

 

 

இந்த வீடியோவை முதல் 15 செக்கன்கள் பாருங்கள்.

இதில் காட்டபடும் புகையிரத கடைவையில் எந்த விதமான தடையும் இல்லை. அபாயஒலி வரும் சமிஞ்சை இல்லை. சிக்னல் விளக்குகள் இல்லை.

இப்படிதான் ஜேர்மனியில் 40 வீதமான புகையிரத கடைவைகள் இருக்கிறது.

ஒரு வருடத்தில் சாராசரி 50 பேர் வரை இப்படியான விபத்தில் இறக்கிரர்கள்.

உண்மையில் இது ஒரு நிர்வாக பிரச்சனை ஆகும். ஜன நடமாட்டம், அதிக போக்குவரத்து அதிகமாக உள்ள இடங்களில் பாதுகாப்பு போடுவது தொடரூந்து  திணைக்களத்தின் கடமை. யாழ் மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் என்னும் போது அதிக மக்கள் நடமாட்டம் உள்ள நகர்ப்புறம் ஆகும். அங்கு பாதுகாப்பு போடாதது  தொடரூந்து திணைக்களத்தின் பொறுப்பின்மையை காட்டி நிற்கிறது. நவீனன் நீங்கள்  இணைத்த காணொலியில் உள்ளது போல தொடரூந்து கடவைகள ஜேர்மனியில் ஒதுக்குப்புறமான கிராம. வயல்புறங்களில் இன்னமும். உள்ளது. 

ஆனால்  இவ்வாறான இடங்களில் பாதுகாப்பு கடவை வசதி ஏற்படுத்தாதற்காக அரசாங்கத்தை குற்றம் சாட்டும் உரிமை வரியிறுப்பாளராகிய மக்களுக்கு உண்டு. குறிப்பிட பிரதேசத்துற்கு பணி நிமித்தம் 1984 ல் சென்றுள்ளேன். வாகன நடமாட்டம் குறைந்த அந்த காலத்திலேயே  பாதுகாப்பு உள்ள கடவையாக அன்று இருந்தது. வாகனப்போக்குவரத்து அதிகமாக உள்ள தற்போதய நிலையில் அங்கு பாதுகாப்பு இல்லாத்து ஆச்சரியமாக உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் நடைபெற்ற இடம் எனக்கு மிகவும் பச்சரியமான இடம். இந்தக் கடவையை ஒட்டியதாக "எக்காளத் தொனி" சேர்ச் இருக்கு. சேர்ச் ஆவது சமூகசேவை என்ற வகையில் ஏதாவது பாதுகாப்பு ஏற்பாட்டினைச் செய்து இருக்கலாம். போதகர்மாருக்கு இளம் பெட்டைகளைச் சைட் அடிக்கிறதிலேயே நேரம் போயிடும். இதுகளைச் சிந்திக்க அவர்களுக்கு எங்க நேரமிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

சம்பவம் நடைபெற்ற இடம் எனக்கு மிகவும் பச்சரியமான இடம். இந்தக் கடவையை ஒட்டியதாக "எக்காளத் தொனி" சேர்ச் இருக்கு. சேர்ச் ஆவது சமூகசேவை என்ற வகையில் ஏதாவது பாதுகாப்பு ஏற்பாட்டினைச் செய்து இருக்கலாம். போதகர்மாருக்கு இளம் பெட்டைகளைச் சைட் அடிக்கிறதிலேயே நேரம் போயிடும். இதுகளைச் சிந்திக்க அவர்களுக்கு எங்க நேரமிருக்கு!

 பிரச்சனை எங்கேயோ இருக்க, யாரையோ வம்பிக்கிளுக்கிறார் வாலியார். 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நடமாட்டம் உள்ள.. போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் உள்ள தொடரூந்துக் கடவைகளிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தொடரூந்து சேவையை மேற்கொள்பவர்களின் பொறுப்பு. ஏலவே இவை சுட்டிக்காட்டப்பட்டும்.. இன்னும் ஒரு காத்திரமான நடவடிக்கைகள் இல்லாமை என்பது.. ஆட்சியாளர்களினதும் அவர்களின் தொடரூந்து திணைக்களத்தினதும்.. செயற்திறனற்ற.. தமிழ் மக்கள் மீதான அக்கறையற்ற செயலையே இனங்காட்டுகிறது.

இன்று அதிக இலாபம் ஈட்டும் வடக்கு தொடரூந்துச் சேவை வடக்கு மக்களை பாதுக்காக்க உருப்படியான எந்த வேலைத்திட்டத்தையும் எடுக்க முன்வராமை அதன் மாற்றாந்தாய்.. பணப்பறிப்பு கொள்கையையே அப்பட்டமாக இனங்காட்டுகிறது.

வடக்கு தொடரூந்து சேவை ஆரம்பித்த பின் கொல்லப்படும் இரண்டாவது யாழ் இந்து மாணவ சமூகத்தைச் சேர்ந்தவர் இவர்.

இங்கிலாந்தில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் பாதுகாப்பான கடவைகளே அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி விபத்துக்குரிய வீதி பிரதான வாகன இயக்க வழித்தடத்தை கொண்டது. அங்கு பாதுகாப்பற்ற தொடரூந்துக் கடவை என்பது கொலைப் பொறி போன்றது. இது தெரிந்தே அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. தற்செயல் என்று சொல்ல முடியாது. அதுவும் மக்கள் ஆபத்தை இனங்காட்டிய பின் நடவடிக்கைகள் இல்லை என்பது மோசமான அரச நிர்வாக இயந்திரமே வடக்கு மக்களுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளதை இனங்காட்டுகிறது.

இந்த நிலை விரைந்து மாற்றப்படா விடில்.. வடக்கு மக்களை விபத்துக்களும்.. போதையும்.. சமூகச் சீர்கேடுகளும் அழிக்கப் போதுமானது. குண்டுகளை விட இவை மோசமான கொலைக்கருவிகளாகும். இவை செயற்படுவது தெரியாமலே கொல்லும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் முன்பு புகையிரதக் கடவை ஒன்று இருந்தது!

அந்தக் கடவைக்கும் இடையால புகுந்து, (சைக்கிளையும்) தூக்கிக்கொண்டு போனது இன்னும் நினைவிருக்கின்றது!:cool:

இந்த இடத்தில் கடவையோன்று.. நிச்சயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும்!

புங்கக் குளத்தில் ' தபால் புகையிரதம்' நிற்பது.. இந்தக் கடவையிலிருந்து பார்க்கும் போது தெரியும்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.