Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம

Featured Replies

3 minutes ago, காத்து said:

அப்படி அர்ப்பணிப்பான இந்தியா எதுக்காக ஈழ போராளுகளுக்கு ஆயுதங்களும் பயிற்ச்சியும் வளங்கியது...?   தவிர PLOTE இனருக்கு வந்த ஆயுதக்கப்பலை பிடித்து  தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் ஏன் கொடுத்தது...  

ஐந்து அம்ச கோரிக்கையை முன்னிருத்தி உண்ணாவிரதம் இருந்த திலீபன் அண்ணாவுக்கு ஏன் ஒரு உறுதியை கூட கொடுக்க முன்வரவில்லை...??    அந்த கோரிக்கைகளில் எவை இந்தியா புலிகள் காலத்தில்  நிறைவேற்றப்பட்டன...?

அவ்வளவு அர்ப்பணிப்பான இந்தியா ஈழத்தில் எதுக்காக தமிழர்களை கொண்று குவித்தது...   இதுக்கு எல்லாம் முதலில் பதில் சொன்னால் ....   எரிக் பற்றி பேசலாம்...

இந்த  பேட்டியில் சொல்கைம்  தனது பொறுப்பு கூறலில் இருந்து நழுவும் போக்கையே கடைப்பிடித்து இருக்கிறார்..  இது இந்த பேட்டியில் அவரே சொன்னது போல அவரின் சொந்த கருத்து நோர்வே எனும் நாட்டினது கருத்தும் கூட... 

எல்லா நாட்டுக்கும் அவர்களுக்கான நலன்கள்  அதுக்கு ஏதுவாக மற்றவர்களை வளைக்க நினைப்பதை..  அதை நியாய படுத்த நிற்க்கும் கூட்டம் உலகில் அதிகம்...   இவர்களை இன விரோதிகள் என்பர்...

அட நடந்தது எதுவும் தெரியாதா ? 

  • Replies 114
  • Views 7.6k
  • Created
  • Last Reply
1 minute ago, arjun said:

அட நடந்தது எதுவும் தெரியாதா ? 

எல்லாம் தெரியுமா...? 

எல்லாம் தெரியும் எண்டு பினாத்தும் மாங்கா தெரியுமா...?

விசயம் எனக்கு தெரியுமோ இல்லையோ ...  ஆனால் மாங்கா நல்லாதெரியும்...  

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எரிக் சொல்கேய்மை திட்டுறதிலையும் ஒரு நியாயம் இருக்கு. இவர்களால் ஈழ அரசியலில் ஓர் அங்குலத்தையும் இப்ப நகர்த்த முடியாது. அந்தக் கடுப்பு எரிக் மீது எகிறுது! 

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

இப்ப எரிக் சொல்கேய்மை திட்டுறதிலையும் ஒரு நியாயம் இருக்கு. இவர்களால் ஈழ அரசியலில் ஓர் அங்குலத்தையும் இப்ப நகர்த்த முடியாது. அந்தக் கடுப்பு எரிக் மீது எகிறுது! 

வாலி, இப்ப யாழ் களம்  கோபக்கனலோடு அலையும் சில உறுப்பினர்களால் டென்ஷனான இடமாக மாறிவிட்டுது! இந்தக் கோபத்தின் காரணம் நீங்கள் சொன்னது தான்! ஆனால், எதிர்கொண்டு வாறவர் போறவர் ஓரமாகப் பார்த்துக் கொண்டு நிக்கிறவர் எல்லாருக்கும் அடி தான்! அடுத்த தேர்தலாவது இந்த "ஆண் கண்ணகிகளின்" கோபம் தணிக்குமோ தெரியவில்லை! :cool:

6 minutes ago, வாலி said:

இப்ப எரிக் சொல்கேய்மை திட்டுறதிலையும் ஒரு நியாயம் இருக்கு. இவர்களால் ஈழ அரசியலில் ஓர் அங்குலத்தையும் இப்ப நகர்த்த முடியாது. அந்தக் கடுப்பு எரிக் மீது எகிறுது! 

வேறை ஏதாவது அரசியலை  நகர்த்தின இறுமாப்பிலை பேசுமாப்போல கிடக்கு.... 

13 minutes ago, காத்து said:

எல்லாம் தெரியுமா...? 

எல்லாம் தெரியும் எண்டு பினாத்தும் மாங்கா தெரியுமா...?

விசயம் எனக்கு தெரியுமோ இல்லையோ ...  ஆனால் மாங்கா நல்லாதெரியும்...  

தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்க என்றாலும் தெரிந்திருக்கவேண்டும் .

அது தெரிந்திருந்தால் முள்ளிவாய்க்கால் வந்திராது .

4 minutes ago, Justin said:

வாலி, இப்ப யாழ் களம்  கோபக்கனலோடு அலையும் சில உறுப்பினர்களால் டென்ஷனான இடமாக மாறிவிட்டுது! இந்தக் கோபத்தின் காரணம் நீங்கள் சொன்னது தான்! ஆனால், எதிர்கொண்டு வாறவர் போறவர் ஓரமாகப் பார்த்துக் கொண்டு நிக்கிறவர் எல்லாருக்கும் அடி தான்! அடுத்த தேர்தலாவது இந்த "ஆண் கண்ணகிகளின்" கோபம் தணிக்குமோ தெரியவில்லை! :cool:

ஒட்டு மொத்தமாக கையாலாகாத கூட்டம்...  இதிலை மற்றவனிலை நொட்டை பிடிக்குது...  ஏம்பா எண்டு கேட்டா கோவ படுகிறான் எண்டுறீயள்... 

என்னை பொறுத்த வரைக்கும் இதுவும் ஒரு பொழுது போக்கு தான்... tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே சாமாதானம் செய்த இரண்டு இடத்திலும் பலஸ்தீனம்.. ஈழம்.. இரண்டிலும் அது ஆதிக்க சக்திகளுக்கு சாதகமான திசையில் நிகழ்வுகளை நகர்த்திச் சென்றது தான் வரலாறு. சிலர் இப்போ சொல்கைமை வைச்சு தமிழர்களுக்கு உலக அரசியல் புகட்டினமாம். புலிகள் செப் 11 க்குப் பின்னான காலத்தில் இருந்து எமது போராட்டத்தைக் காப்பாற்ற நோர்வேயை கவசமாகப் பாவிக்க முனைந்தார்கள். அதனாலேயே அழியவும் செய்தார்கள்..! சொல்கைமை அளவுக்கு மிஞ்சி தமிழர்கள் நம்பியது தவறு.

2 minutes ago, arjun said:

தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்க என்றாலும் தெரிந்திருக்கவேண்டும் .

அது தெரிந்திருந்தால் முள்ளிவாய்க்கால் வந்திராது .

முக்திபாகினி போராளிகளை இந்தியா வங்காள தேசத்தில் கொலை செய்தது... அதுவும் வங்காளிகளை காக்க எண்று போன இடத்தில்... ஈழத்தில் கூட படுகொலை செய்தது...   

இலங்கையில் இணைத்தலைமை நாடுகளை பிரதிநிதித்துவம் செய்த எரிக் சொல்கைமுக்கு  அனுசரனை வளங்கிய நாடுகள்  ஈராக்கிலும் , ஆப்கானிலும் , கொங்கோ, சூடானிலும் செய்தவைகள் ...  அவர்கள் மீதான நம்பிக்கை ஈனத்தினத்துக்கு எடுத்து காட்டு... 

இதிலை இவர்கள் ஈழத்தில் வேறு விதமாக செயல்பட்டு இருப்பார்கள் என்பது..  அக்கரைக்கு இக்கரை பச்சை எனும்  இஅன விரோதம்...

ஈழத்தில் இந்திய படைகளை கொலை செய்த வைத்ததுதான் புலிகளின் வெற்றி .

இந்திய படைகளை மட்டும் அல்ல ஆயுத போராட்டம் தொடங்கியதில் இருந்து எதிரியை கொண்டு மக்களை கொல்ல வைத்து அதில்தான் அரசியல் நடாத்தினார்கள் .

முள்ளிவாய்காலிலும் அது அப்பட்டமாகவே நடந்து வகை தொகையாக மக்கள் சாக சர்வதேசம் தலையிடும் தாங்கள் தப்பலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள் .ஏற்கனவே எனக்கு தெரிந்த முகம் தான் இருந்தாலும் தமிழ்கவியின் "ஊழிகாலம் " வாசிக்கும்போது இரத்தம் கொதித்தது .

எவ்வளவு மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை புலிகள் அழியவேண்டும் என்று சர்வதேசம் தீர்மானித்துவிட்டது .  

20 minutes ago, nedukkalapoovan said:

நோர்வே சாமாதானம் செய்த இரண்டு இடத்திலும் பலஸ்தீனம்.. ஈழம்.. இரண்டிலும் அது ஆதிக்க சக்திகளுக்கு சாதகமான திசையில் நிகழ்வுகளை நகர்த்திச் சென்றது தான் வரலாறு.

ஆகா...

நோர்வே நேரடியாகவும் மறைமுகமாகவும் சமாதானத்தூதுவர்களாகப் பணியாற்றியது 20 நாடுகளுக்கும் மேல். தேவைப்படின் ஆதாரங்கள் தரமுடியும். பலநாடுகளில் சமாதானத்தையும் உருவாக்கியிருந்தது.

உதாரணம் : Palestine, Armenia, Burundi, South Africa, Ethiopia, Guatemala, Sri Lanka, Mali, Mexico, Rwanda, Sudan, Former Yugoslavia, Indonesia, Cyprus, Colombia, Haiti, Philippines, Mozambique....

1996இல் மட்டும் நோர்வே தனது சமாதான நடவடிக்கைகளை 22 நாடுகளில் மேற் கொண்டிருந்தது. 

இப்பதிவு - சும்மா ஒரு பொது அறிவுக்காகத்தான்...

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

இதுகளை வாசிச்சு கொஞ்சூண்டு பொது அறிவையாவது வளர்த்துக்கலாம்! 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஜீவன் சிவா said:

ஆகா...

நோர்வே நேரடியாகவும் மறைமுகமாகவும் சமாதானத்தூதுவர்களாகப் பணியாற்றியது 20 நாடுகளுக்கும் மேல். தேவைப்படின் ஆதாரங்கள் தரமுடியும். பலநாடுகளில் சமாதானத்தையும் உருவாக்கியிருந்தது.

உதாரணம் : Palestine, Armenia, Burundi, South Africa, Ethiopia, Guatemala, Sri Lanka, Mali, Mexico, Rwanda, Sudan, Former Yugoslavia, Indonesia, Cyprus, Colombia, Haiti, Philippines, Mozambique....

1996இல் மட்டும் நோர்வே தனது சமாதான நடவடிக்கைகளை 22 நாடுகளில் மேற் கொண்டிருந்தது. 

இப்பதிவு - சும்மா ஒரு பொது அறிவுக்காகத்தான்...

பொது அறிவா? தீவிர தேசியத்தூண்களுக்கும் அதுக்கும் வெகுதூரமல்லோ? அதென்ன புதிசா வந்த ஐ-போன் மொடலா எண்டு கேக்கப் போகினம்! :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

ஆனால் சொல்ஹேய்ம் பல உண்மைகளையும்  சொல்லியிருக்கிறார் என்பதனையும் ஈசியா மறந்துவிடக் கூடாது நுணா!

நான் மறந்ததாக சொல்லவே இல்லையே. தன்னில் பிழை இல்லை என்ற  பெரிய பொய்யை எப்படி மறைக்க முயற்சித்துள்ளார் என்பதை நீங்களும் கவனிக்க தவறியுள்ளீர்கள் போல் உள்ளது.

16 minutes ago, Justin said:

பொது அறிவா? தீவிர தேசியத்தூண்களுக்கும் அதுக்கும் வெகுதூரமல்லோ? அதென்ன புதிசா வந்த ஐ-போன் மொடலா எண்டு கேக்கப் போகினம்! :cool:

ம் இப்படியான நக்கலுகள் கொஞ்ச நாள் யாழில் குறைவாகவே காணப்பட்டது.

3 hours ago, arjun said:

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது உண்டியல் குலுக்கியவர்களுக்கு இந்தியா என்னசெய்தது ,நோர்வே என்ன செய்தது என்று சிறிதளவேனும் தெரிந்திருந்தால் இப்படி விளங்காத வியாக்கியானங்கள் வராது .

சிங்கள அரசு எதுவும் தராது என்று சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கலாம் அதைவிட்டு எவ்வளவோ சிக்கல்களுக்கு இடையில் இலங்கை அரசையும் தமிழர் தரப்பையும் இழுத்துக்கொண்டு வந்து மேசையில் அமர்த்தி ஒரு தீர்வை கொண்டுவரலாம் என்றால் அத்தனையையும் குழப்பியடித்தது பிரபாகரன் என்ற தனி மனிதனே .

இலங்கை -இந்திய  ஒப்பந்த காலத்தில் இலங்கை அரசை மேசைக்கு கொண்டுவர இந்தியா பட்ட பாடு சொல்லிமாளாது .ஒருவாறு அவர்களை வெருட்டி மேசைக்கு கொண்டுவந்தாச்சு அனைத்து தமிழர்கள் தரப்புகளும் தலையை ஆட்டிவிட்டன பிரபாகரன் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று ஒற்றைகாலில் நின்றார் .ஜே ஆரை விட பிரபாவுடன் பின்னர் நேரத்தை செலவழித்தது ஆனால் ஒரேயடியாக மறுத்துவிட்டார் .

அதன் பிறகுதான் இந்தியா -புலிகள் பிளவு வந்தது .இந்தியன் ஆமி வந்தது ,பிரபாவை பிடிக்க முயன்றது யுத்தம் தொடங்கியது இந்திய இராணுவத்தின் அராஜகம் எல்லாம் அதன் பின்னர் தான் நடந்தது .

எரிக் சொல்வது அத்தனையும் உண்மை அதுவும் குறிப்பாக குறிப்பாக சமஸ்டியை ஏற்க மறுத்தது .

பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்காவும் இடையில் மூக்கை நுளைத்தது யாவரும் அறிந்ததே. தானும் நடுநிலையாலர் ஆகியது. பின்னர்  அம்ரிக்காவில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில் புலிகள் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பதால் அவர்கள் பங்கு பற்ற முடியாதாம். இது ஒன்றே போதும் இவர்களின் நடுநிலையின் தார்ப்பரியம்.

எப்படி ஒரு நடுநிலை வகிக்க வந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஒரு பகுதியினரை ஓரம் கட்ட   முடியும்??

இவர்களின் திட்டமே பேச்சுவார்த்தை மூலம் புலிகளின் வீரியத்தை குறைப்பதும் அழிப்பதுமே. அதுவே நிறைவேறியது,

பிற்குறிப்பு: நான் எங்கும் கூறவில்லை புலிகள் பிழை விடவில்லை என.

1 hour ago, arjun said:

ஈழத்தில் இந்திய படைகளை கொலை செய்த வைத்ததுதான் புலிகளின் வெற்றி .

இந்திய படைகளை மட்டும் அல்ல ஆயுத போராட்டம் தொடங்கியதில் இருந்து எதிரியை கொண்டு மக்களை கொல்ல வைத்து அதில்தான் அரசியல் நடாத்தினார்கள் .

முள்ளிவாய்காலிலும் அது அப்பட்டமாகவே நடந்து வகை தொகையாக மக்கள் சாக சர்வதேசம் தலையிடும் தாங்கள் தப்பலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள் .ஏற்கனவே எனக்கு தெரிந்த முகம் தான் இருந்தாலும் தமிழ்கவியின் "ஊழிகாலம் " வாசிக்கும்போது இரத்தம் கொதித்தது .

எவ்வளவு மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை புலிகள் அழியவேண்டும் என்று சர்வதேசம் தீர்மானித்துவிட்டது .  

முழு பூசணிக்காயை சோத்திலை மறைக்க நினைப்பது இதுதான்... 

புலிகளின் ஆயுதங்களை களைந்த இந்திய இராணுவம்  புலிகளுக்கு எதிராக ஆயுத குழுக்களை ஆயுதங்களோடை நடமாட அனுமதித்து இருந்தது.. அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்தது..  இந்த வரலாறுகளை நீங்கள் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை தான்...  இதை பற்றி உங்களுக்கு இரத்தம் கொதிக்கும் வண்ணம் யாரும் உபகதைகள் வரைந்து இருக்க மாட்டார்கள்... 

சர்வதேச நாடுகள் என்பது ஐநாவில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுமா...?  என்பதை விளக்குக...  இல்லை   அமெரிக்க பொருளாதார மண்டல (G 20)  நாடுகளையா நீங்கள் சொல்வது என்பதையும் தெளிவு படுத்துங்கள்...   

அவர்களின் இலங்கை மீதான நலன்களுக்கு காரணம் என்பதை எல்லாம் தெரிந்த உங்களுக்கு எல்லாம் புரியாதது ஆச்சரியமே...

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nunavilan said:

நான் மறந்ததாக சொல்லவே இல்லையே. தன்னில் பிழை இல்லை என்ற  பெரிய பொய்யை எப்படி மறைக்க முயற்சித்துள்ளார் என்பதை நீங்களும் கவனிக்க தவறியுள்ளீர்கள் போல் உள்ளது.

நுணா, நோர்வேயின் சொல்கெய்ம் மத்தியஸ்தம் வகிக்கவந்தவர். அவரில் என்ன பிழை இருப்பதாக நினைக்கிறீர்கள்? போர் நடந்தால் புலிகளின் தோல்வி நிச்சயம் என்பதை சொல்கேய்ம் நேரடியக சொல்லாமல் விட்டதுதான் பிழையா? புலிகள் மண் கவ்வத் தொடங்கியபோது மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முனைந்தது பிழையா? 

1 hour ago, காத்து said:

முழு பூசணிக்காயை சோத்திலை மறைக்க நினைப்பது இதுதான்... 

புலிகளின் ஆயுதங்களை களைந்த இந்திய இராணுவம்  புலிகளுக்கு எதிராக ஆயுத குழுக்களை ஆயுதங்களோடை நடமாட அனுமதித்து இருந்தது.. அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்தது..  இந்த வரலாறுகளை நீங்கள் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை தான்...  இதை பற்றி உங்களுக்கு இரத்தம் கொதிக்கும் வண்ணம் யாரும் உபகதைகள் வரைந்து இருக்க மாட்டார்கள்... 

சர்வதேச நாடுகள் என்பது ஐநாவில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுமா...?  என்பதை விளக்குக...  இல்லை   அமெரிக்க பொருளாதார மண்டல (G 20)  நாடுகளையா நீங்கள் சொல்வது என்பதையும் தெளிவு படுத்துங்கள்...   

அவர்களின் இலங்கை மீதான நலன்களுக்கு காரணம் என்பதை எல்லாம் தெரிந்த உங்களுக்கு எல்லாம் புரியாதது ஆச்சரியமே...

வரிக்கு வரி நடந்தது எனக்கு தெரியும் .

ஒப்பந்தத்தை எதிர்த்த பின்னர் தான் அனைத்தும் நடந்தது .ஆயிரம் தரம் எழுதி களைத்துவிட்டேன் .

அனைத்து அநியாங்களுகும் அத்திவாரம் இட்டது புலிகள் தான் .

4 minutes ago, arjun said:

வரிக்கு வரி நடந்தது எனக்கு தெரியும் .

ஒப்பந்தத்தை எதிர்த்த பின்னர் தான் அனைத்தும் நடந்தது .ஆயிரம் தரம் எழுதி களைத்துவிட்டேன் .

அனைத்து அநியாங்களுகும் அத்திவாரம் இட்டது புலிகள் தான் .

எதை எவர் வேன்டு மானாலும் எப்படி வேண்மானாலும் சொல்லலாம்... அது அவர்களின் சொந்த கருத்தே...  அவை உண்மையாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது... அது போல தான் தங்களின் கருத்தும்... 

உயிரை காப்பாத்தி கொள்ள ஊரை விட்டு ஓடியவர்களுக்கும் .. மக்களோடு கடைசிவரை இருந்தவர்களுக்கும்  உள்ள வித்தியாசம் என்ன என்பது  பகுத்தறிவு கொண்ட எல்லா உயிருக்கும் புரியும்... 

யார் அர்ப்பணிப்போடு இருந்தார்கள் என்பதை புரிய இருக்கும் தராசு இன்னும் புலிகளின் பக்கம் மேலே வரவில்லை...  உங்களால் அப்படி மேலேவர வைக்கும் அளவு அர்ப்பணிப்பும் கிடையாது என்பதே உண்மை..

நாங்கள் இப்போது பேசுவது ,எரிக் சொல்கேயுமின் பேட்டியில் ஏன் எமது ஆயுத போராட்டம் தோற்றது என்பது பற்றி.

அதற்குள் எவ்வளவு காலம் போராடினார்கள் ,எவ்வளவு அர்ப்பணிப்பு என்பது பற்றி அல்ல .

பரீட்சையில் எவ்வளவு காலம் படித்தார் ,எவ்வளவு அர்பணிப்புடன் கஷ்டப்பட்டு படித்தார் என்பது முக்கியமில்லை பாஸ் பண்ணுவதுதான் முக்கியம் .

இதில் புலிகள்  பெயில்தான் .

இந்த கோதாரியைதான் நானும் சொல்கிறேன்...  புலிகள் பரீட்ச்சை எழுதினார்கள் தோற்றார்கள்....   தோற்போம் எண்ற பயத்தில் எழுதாதவன்  அண்றே தோற்று போனான்...  இதில் எழுதிய புலிகளை விமர்சிக்க என்ன தகுதி இருக்கு....??  எனக்கு விளங்க இல்லை.... 

உயிருக்கு பயந்து ஓடினவன் பரிச்சை பற்றி நினைக்கவில்லை...  விசயம் அவ்வளவு தான்...  இண்டைக்கு வெட்டி வீரம் பேசுகிறார்கள்...

தமிழர்களின் நலன்களை காப்பது என்பது  1947 இல் இருந்து 1983 வரை கனவாகவே இருந்தது...  பின்னர்  அது 2009 வரை  கானல்நீராக தெரிந்தது...  அதன் பின் மீண்டும் கனவாகவே போனது...    இதில் தமிழர் நலன்களை கண்ணில் தன்னும் காட்டிய பெருமை புலிகளையே சாரும்... 

5 minutes ago, காத்து said:

உயிருக்கு பயந்து ஓடினவன் பரிச்சை பற்றி நினைக்கவில்லை...  விசயம் அவ்வளவு தான்...  இண்டைக்கு வெட்டி வீரம் பேசுகிறார்கள்...

அப்ப நீங்கள்?

கோவிக்க வேண்டாம் சில புரிதலுக்காக இக்கேள்வி.

1 minute ago, ஜீவன் சிவா said:

அப்ப நீங்கள்?

கோவிக்க வேண்டாம் சில புரிதலுக்காக இக்கேள்வி.

அந்த வரிசை தான்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

ஆகா...

நோர்வே நேரடியாகவும் மறைமுகமாகவும் சமாதானத்தூதுவர்களாகப் பணியாற்றியது 20 நாடுகளுக்கும் மேல். தேவைப்படின் ஆதாரங்கள் தரமுடியும். பலநாடுகளில் சமாதானத்தையும் உருவாக்கியிருந்தது.

உதாரணம் : Palestine, Armenia, Burundi, South Africa, Ethiopia, Guatemala, Sri Lanka, Mali, Mexico, Rwanda, Sudan, Former Yugoslavia, Indonesia, Cyprus, Colombia, Haiti, Philippines, Mozambique....

1996இல் மட்டும் நோர்வே தனது சமாதான நடவடிக்கைகளை 22 நாடுகளில் மேற் கொண்டிருந்தது. 

இப்பதிவு - சும்மா ஒரு பொது அறிவுக்காகத்தான்...

நோர்வே நேரடியாக இறங்கிய.. நீண்ட கால பிரச்சனைகளில்.. பலஸ்தீனமும்.. சிறீலங்காவும் தான் முக்கியமானது. இரண்டிலும் ஆதிக்க சக்திகளுக்கே வழமை போல நன்மை. நோர்வே தொடர்பான ஒரு பிபிசி குறிப்பில் இந்த இரண்டும் தான் நோர்வே பற்றிய தலையீட்டில் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த வகையிலும் அது அமைகிறது. 

மேலும்.. எங்கு அது நேட்டோவின் நலனுக்கு அப்பால் எதையாவது வெற்றிகரமாக சாதித்திருக்கிறது..??! :rolleyes::rolleyes:

8 minutes ago, காத்து said:

அந்த வரிசை தான்..

காத்து நன்றி.
நானும் அதுதான்.

கீழுள்ள வரி எனக்கானது உங்களுக்கில்லை. இரு வேறு பதிவுகளை யாழ்களம் ஒன்றிணைத்துவிட்டது.

வாசிப்பு ஒரு மனிதனுக்கு அவசியமானது. ஆனால் வாசிப்பது புரியாமல் இருப்பது..... தெரியாது.

Edited by ஜீவன் சிவா

1 hour ago, arjun said:

நாங்கள் இப்போது பேசுவது ,எரிக் சொல்கேயுமின் பேட்டியில் ஏன் எமது ஆயுத போராட்டம் தோற்றது என்பது பற்றி.

அதற்குள் எவ்வளவு காலம் போராடினார்கள் ,எவ்வளவு அர்ப்பணிப்பு என்பது பற்றி அல்ல .

பரீட்சையில் எவ்வளவு காலம் படித்தார் ,எவ்வளவு அர்பணிப்புடன் கஷ்டப்பட்டு படித்தார் என்பது முக்கியமில்லை பாஸ் பண்ணுவதுதான் முக்கியம் .

இதில் புலிகள்  பெயில்தான் .

கேடு கெட்ட தமிழன் தான் பெயில்  .புலிகள் தமிழர், தமிழர் புலிகள்  இதை எவன் வந்தாலும் அழிக்க முடியாது. வரலாறு இதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.