Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நேசன் said:

கேடு கெட்ட தமிழன் தான் பெயில்  .புலிகள் தமிழர், தமிழர் புலிகள்  இதை எவன் வந்தாலும் அழிக்க முடியாது. வரலாறு இதுதான்

புலிகள் குண்டு வைத்ததற்காக புலிகள் தமிழர் - தமிழர் புலிகள் என்பதை அன்றே புரிந்து கொண்டு கண்ட தமிழரை சுட்டுத்தள்ளி எஞ்சியவர்களை சிறையில் போட்ட சிறி லங்கா அரசுக்கு நீங்கள் இப்படியா வக்காலத்து வாங்குவது ? போர்க்குற்ற விசாரணையில் ஸ்ரீ லங்கா அரசு சொல்வதும் முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழர் புலிகள் - புலிகள் தமிழர் , ஆகவே எல்லாரும் போரில் இறந்தார்கள் என்பதே. நீங்கள் ஸ்ரீ லங்கா அரசு சார்பாக சாட்சியம் அளிக்க அழைக்கப்படலாம்.

  • Replies 114
  • Views 7.6k
  • Created
  • Last Reply

அதைவிட விட பகிடி .

இப்ப புலிகள் இல்லை தீர்வை தரலாம் என்று ஒரு பகுதியும் 

முழு தமிழர்களுமே புலிகள் என்று இன்னொரு பகுதியும் இப்பவும் அடிபடினம் 

புலிகள் என்றுமே ஜனநாயக ரீதியில் தமிழர்கள் மனங்களை வென்றவர்கள் இல்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி...சரி துள்ளாதேங்கோ.....கடைசியாய் நடந்த லெக்சனுக்கு பிறகு கூட்டமைப்பு இண்டுவரைக்கும் ஏதாவது செய்ததாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியேல்லை....இன்னும் கொஞ்ச நாளையாலை தெரியுமெண்டு நினைக்கிறன். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சரி...சரி துள்ளாதேங்கோ.....கடைசியாய் நடந்த லெக்சனுக்கு பிறகு கூட்டமைப்பு இண்டுவரைக்கும் ஏதாவது செய்ததாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியேல்லை....இன்னும் கொஞ்ச நாளையாலை தெரியுமெண்டு நினைக்கிறன். :cool:

சீறத்தொடங்கியாச்சு

ஐனநாயகம் இனித்தான்...

3 hours ago, விசுகு said:

சீறத்தொடங்கியாச்சு

ஐனநாயகம் இனித்தான்...

இதை விட பெரிய கொமடி இந்த ஆறு வருசமாக மக்கள் யாரும்  போர் மூலம் துன்பப்படவில்லையாம் அதுவே சாதனையாம்....   அப்ப அங்கை ஆமிக்காறன் ஏன் துவக்கோடை நிக்கிறான் எண்டு தான் எனக்கு விளங்க இல்லை....  

புலிகளின் துவக்காலை வராத ஜனநாயகம் ஆமிக்காறன் துவக்காலை வந்து இருக்காம் என்டுறார் இங்கை ஒரு அ(வெ)ண்ணை... 

60% வோட்டு போட்டு அதிலை 40% வாக்கு வாங்கி இல்லாதவனிட்ட இருந்து புடுங்கி இருக்கிறவனுக்கு கொடுக்கிற ஜனநாயகம் பற்றி நிறையவே நான் இங்கை தெரிஞ்சு கொள்ளவேணும்...

Edited by காத்து
இலக்கணம்... விளக்க இணைப்பு

ஜனநாயகம் என்றாலே சிலருக்கு அலர்ஜி குறிப்பாக புலிகள் அவர்களது விசுவாசிகளுக்கு ஆனால் அவர்கள் ஓடிப்போனதும் அங்கு வாழ்கையை அனுபவிப்பதும் ஜனநாயக நாடுகளில் தான் .

இப்போ நாட்டில் சற்று ஜனநாயகம் திரும்ப அவர்கள் படும்பாடு இருக்கே சொல்லி மாளாது .நாட்டில் சுமூக நிலை வரக்கூடாது என்பதுதான் இவர்கள் பிரார்த்தனை .சனம் சந்தோசமாக இருப்பது தாங்கள் இவ்வளவு நாளும் சொல்லி வந்தது பொய்யாகிவிட்டது என்பதுதான் அவர்களுக்கு மக்கள் நிம்மதியாக இருப்பதை விட முக்கியம் .

சிங்கள அரசு  மாறிவிட்டது என்பது அல்ல அதன் பொருள் இனியும் தாமதிக்கமுடியாது .ஆறு வருடங்கள் அல்ல ஒரு வருடம் தான் மைத்திரி ஆட்சி வந்து ,பல மாற்றங்கள் வந்திருக்கு இன்னமும் பல வரவேண்டியிருக்கு ஏன் உடனே அவற்றை செய்ய முடியாமல் இருக்கு என்றால் அதற்கு பதில் 

மகிந்தா இப்ப முத்திரை சேகரித்துக்கொண்டோ வீட்டுத்தோட்டம் செய்துகொண்டே இருக்கின்றார் என்ற எரிக் சொல்கையும் சொன்னதை விட நல்ல பதில் இல்லை .அதே போல் தான் சிங்கள அரச யந்திரத்தின் நிலையும் .

புதிய அரசுஉடனடி மாற்றங்களை கொண்டுவந்து தமது அரசு கவுண்டால் தமது நிலை என்னவென்று அவர்களுக்கு நன்றாக தெரியும் அதனால் ஒவ்வொரு அடியையும் கவனமாகத்தான் வைப்பார்கள் .

முப்பது வருடங்கள் இவ்வளவு அவலங்களுக்குள் வாழ்ந்த மக்கள் இன்னமும் சிறிது காலம் பொறுப்பதில் ஒன்றும் ஆகிவிடாது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது இன்றும் வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் உங்கள் கனவு என்றும் நிறைவேறப்போவதில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும் .

Edited by arjun
எழுத்து பிழை

அண்ணை இந்த ஜனநாயகத்தாலை தமிழ் மக்களுக்கு நீங்கள் ஆற்றிய திருத்தொண்டை பட்டியல் இட முடியுமா..?  

ஆனால் உங்கட ஜனநாயகத்தாலை கிடைத்த இன்னல்களை என்னாலை பட்டியல் இட முடியும்...  

சவாலாகவே கேக்கிறன்...  

பச்சை போட எண்டு நீங்கள் கூட்டி கொண்டு திரிகிற ஜால்றாக்களும் பங்குபற்றலாம்...   அறிவு இருந்தால்...  இல்லை ஜால்றா மட்டும் எண்றால் அதுவும் பறவாய் இல்லை..

இந்த அரசின் போக்குடன் மகிழ்ச்சியாக இருப்பதனை
அங்கீகரிக்கவேண்டியது நான்மட்டுமல்ல. தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும்
பேரளவில் திரண்டு வாக்களித்தமையினாலேயே இந்த அரசு பதவிக்கு வந்தது.
பெரும்பான்மையான சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்சவிற்கே
வாக்களித்திருந்தனர். ஆகவே, தமிழ், முஸ்லிம் மக்களது அளப்பரிய
ஆதரவினாலேயே ரணிலும், சிறிசேனவும் தற்போது ஆட்சியிலிருக்கிறார்கள். நான்
மட்டுமல்ல, இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் அனைவருமே இந்த அரசினை
வரவேற்றிருக்கின்றனர். ஆனால், இந்த அரசு இப்போதுதான் தமது ஆட்சியை
ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டிலிருந்து பாரிய முன்னேற்றங்களை
அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. மக்கள் தமது கருத்துக்களை
வெளியிடக்கூடியதாக இருக்கிறது. பொருட்களின் விலை
குறைக்கப்பட்டிருக்கிறது. ஊடக நிலைமைகளில் பாரிய முன்னேற்றம்
ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்
வரவேற்கக்கூடியவை. ஆனால், வடக்கில் பாரியளவில் நிலைகொண்டிருக்கிறது.
மக்களின் நிலங்களிலும், வீடுகளிலும் நிலைகொண்டிருக்கிறது. இது
குறைக்கப்படவேண்டும். இன்னமும் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று
வருகின்றன. அவை நிறுத்தப்படவேண்டும். கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
இந்த விடயங்களில் மேற்கொள்ளப்படுவதற்கு இன்னமும் நிறைய இருக்கின்றன.
ஆனால் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

-இது எரிக் சொல்கேயும் சொன்னது .இதுதான் பெரும்பான்மையினரின் கருத்தும் கூட .

ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கவே உங்களுக்கு அருகதையில்லை .இதை ஒருக்கா வாசியுங்கோ ,

"2009 இரணைப்பாலை .கடுமையான போர் நடந்துகொண்டிருக்கு பயிற்சியற்ற பிள்ளைகள் களமுனைக்கு அனுப்பபட்டுக்கொண்டிருக்க அனுபவமுள்ளவர்களோ தளபதிக்கும் குடும்பத்திற்கும் பாடுப்பட்டுகொண்டிருந்தார்கள் .போதாதற்கு இயக்க வாகனங்கள் ,எரிபொருட்கள் .தளபதியின் வீட்டிற்கு இரண்டு "கன்ரர் " வாகனங்களில் வீட்டு தளபாடங்கள் ,கட்டில் .மேசை ,உள்ளிருந்தே இயக்கம் விளையாட்டுக்கார் ,சின்ன சயிக்கில் முதலான பொருட்கள் வந்து இறங்குகின்றன .தொடர்ந்து ஒரு உழவு யந்திரமும் பெட்டிகளில் கடைக்குரிய சாமான்களுடன் வந்தது .அவர் கலியாணம் முடித்தது பணக்கார குடும்பமாம் வடிவான பெட்டை தாய் தகப்பன் வசதியாகத்தான் வைத்திருந்தவர்களாம் --ஊழிக்காலம் அத்தியாயம் 29  "

அடுத்த வரி எழுதி அறியாமையால் உயிர்விட்டவர்களை காயப்படுத்த விரும்பவில்லை . 

56 minutes ago, காத்து said:

அப்ப அங்கை ஆமிக்காறன் ஏன் துவக்கோடை நிக்கிறான் எண்டு தான் எனக்கு விளங்க இல்லை....  

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இவ்வருடம் 6 மாதங்கள் தாயகத்தில் உள்ளேன் ஐயா. யாழில் இன்றுவரை இராணுவத்தை ஆயுதத்துடன் நான் பார்க்கவில்லை. பொலிஸ் கைத் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கடந்த ஹர்த்தாலின் போது பொலிஸ் கமாண்டோக்கள் ஆயுதம் தரித்திருந்தார்கள். வித்யாவிற்கான ஹர்த்தாலில் ஏற்பட்ட குழறுபடிகளால் இந்த முன்னேற்பாடாம்.

கொஞ்சம் யதார்த்தத்தையும் கருத்தில் எடுங்கள்.

கேட்டது ஏதோ அர்ச்சுண் சொல்லும் பதில் ஏதோ... நான் இறுதி போரை பற்றி கேக்கவில்லை...  தமிழர் இறுதி போருக்கு வர எது காரணம் எண்று கேக்கிறேன்...

இலங்கை ஒரு சமதர்ம மக்களாட்சி நாடு... தனித்த ஜனநாயக விளுமியங்களை உள்ளடக்கியதல்ல.... அதில் சமதர்மம் என்பது தான் முன்னிலை படுகிறது...  

நீங்கள் மேற்கு நாடுகள் என்பனவற்றில்  வாயினால் ஜனநாயகம் எண்று சொல்லும் அமெரிக்காவோ பிரித்தானியாவோ, இல்லை பிரான்ஸ்..  முடியாட்சியின் கீழான பாராளுமண்று, கூட்டாட்சியினூடு அதிபர் ,  சமதர்ம  ஆட்ச்சி விழுமியங்களை மட்டுமே கொண்டது...

இதிலை இலங்கையில் சமதர்மம் (சோசலீம்)  பொருந்திய இந்த  நாட்டில் குடிகள் சமமாக நடத்த படவேண்டும் எண்றே   விகிதாசாரம் அங்கு   திணிக்கப்பட்டது...   நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டு பூர்வீகமாக தமிழர் நிலன்கள்  சிங்களவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன...    தமிழர் நிலங்களில் சிங்கள காவல்துறையின  நிறுத்தப்பட்டனர்... 

ஜனநாயக விழுமியங்களாய்  சிங்களம் மட்டும் ஆட்சி மொழியானது... பொத்தம் ஆட்ச்சி மொழியானது..  சிங்க கொடியில் தமிழர்கள் கெஞ்சி கேட்டதுக்கு இணங்க ஒரு கோடு கொடுக்கப்பட்டது,,,

இதில் தமிழர்கள் மட்டும் பாதிக்க பட்டபோதே தமிழர்கள் ஆயுதங்களை கையில் எடுத்தனர்..

15 minutes ago, ஜீவன் சிவா said:

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இவ்வருடம் 6 மாதங்கள் தாயகத்தில் உள்ளேன் ஐயா. யாழில் இன்றுவரை இராணுவத்தை ஆயுதத்துடன் நான் பார்க்கவில்லை. பொலிஸ் கைத் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கடந்த ஹர்த்தாலின் போது பொலிஸ் கமாண்டோக்கள் ஆயுதம் தரித்திருந்தார்கள். வித்யாவிற்கான ஹர்த்தாலில் ஏற்பட்ட குழறுபடிகளால் இந்த முன்னேற்பாடாம்.

கொஞ்சம் யதார்த்தத்தையும் கருத்தில் எடுங்கள்.

இராணுவமே இல்லை என்கிறீகளா இல்லை இருக்கிறார்கள் வெளியில் வருவது இல்லை என்கிறீர்களா...? தயவு செய்து விளக்கமாக சொல்லவும்...

தாயகம் என்பது எது யாழ்ப்பாணமா வன்னியா இல்லை  கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு  அம்பாறை...??

கொழும்பில் இருந்து நீங்கள் அங்கு போகும் வளியில்  எந்த இராணுவ முகாமும் இல்லை அங்கே இராணுவம் ஆயுதங்களோடை இல்லை என்பது ஆச்சரியமான விசயம்...  

56 minutes ago, arjun said:

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது இன்றும் வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் உங்கள் கனவு என்றும் நிறைவேறப்போவதில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும் .

இதில் தாங்கள் எந்த வகையில் வித்தியாசமானவர் என்பது எனக்கு புரியவில்லை...  

எனக்கு  என்ன கனவு எண்று ஏதும் தெரியாத போதும் எனது கனவை கண்டு கொண்டதாக நீங்கள் நினைப்பது தங்களின் அறிவை அளக்க போதுமானதாக இருக்கிறது...  

இதுக்கு பச்சை போட்டு தங்களை அடையாளபடுத்தி கொண்ட இருவரின் காள்புணர்வையும் அறிந்து கொள்ள முடிகிறது... 

அடையாளப்படுத்தியமைக்கு நண்றி..

Edited by காத்து
பிழை திருத்தம்

8 minutes ago, காத்து said:

இராணுவமே இல்லை என்கிறீகளா இல்லை இருக்கிறார்கள் வெளியில் வருவது இல்லை என்கிறீர்களா...? தயவு செய்து விளக்கமாக சொல்லவும்...

இராணுவம், கடற்படையினர், விமானப்படையினர் சாதாரணமாக யாழில் நடமாடுகிறார்கள் ஆனால் ஆயுதமின்றி. சென்றி கிடையாது. எந்தவிதமாகவும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதில்லை. அவர்கள் தமது சொந்த தேவைகளிற்காக தனிப்பட்ட முறையில் யாழிற்கு வருகிறார்கள். உதாரணமாக வங்கி, தபால் நிலையம், புகையிரத நிலையம் போன்றவற்றில் இவர்களை அதிகம் காணலாம். முன்னர் போன்று றக்கில் வந்து குதிப்பதெல்லாம் இப்ப இல்லை. சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள். சீருடையை அணிந்திராவிட்டால் இவர்களைப் பொதுமக்களிடமிருந்து வேறுபடுத்த முடியாது.

தாயகம் என்பது எது யாழ்ப்பாணமா வன்னியா இல்லை  கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு  அம்பாறை...??

யாழ்ப்பாணம்

கொழும்பில் இருந்து நீங்கள் அங்கு போகும் வளியில்  எந்த இராணுவ முகாமும் இல்லை அங்கே இராணுவம் ஆயுதங்களோடை இல்லை என்பது ஆச்சரியமான விசயம்...  

ஆச்சரியமான விடயம்தான் ஆனால் அதுதான் உண்மை.. இராணுவ முகாம்கள் உண்டு. இராணுவமும் உண்டு. ஆனால் ஆயுதத்துடன் இல்லை. 

சோதனைச் சாவடிகளும் இல்லை. நான் இங்கிருக்கும் காலத்தில் யாருமே என்னை மறிக்கவுமில்லை, அடையாள அட்டை கேட்கவுமில்லை.

மாற்றங்கள் நிறையவே நடந்துள்ளது. நடந்து கொண்டுமிருக்கின்றது. ஒரு சிறிய தகவல் உங்களிற்காக: பால்ய நண்பன் (கிராம சேவகர்) ஒருவரைச் சந்தித்திருந்தேன். இரு கிழமைக்கு முன்னர் வசாவிழான் பகுதியில் ஏறத்தாள 3 ஏக்கர் காணியை யாருக்கும் தெரியாமல் விடுவித்திருந்தார்கள் என்றான். வசாவிழான் கிராம சேவகரிற்கு மட்டும் அறிவித்துவிட்டு ஊடகங்களிற்கு செய்தி போகக் கூடாது என்பதும் அறிவுறுத்தப்பட்டதாம்.

பேரினவாதிகளை எப்படியெல்லாம் அரசே சமாளிக்க வேண்டி உள்ளதென்று பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, காத்து said:

கேட்டது ஏதோ அர்ச்சுண் சொல்லும் பதில் ஏதோ... நான் இறுதி போரை பற்றி கேக்கவில்லை...  தமிழர் இறுதி போருக்கு வர எது காரணம் எண்று கேக்கிறேன்...

"பயங்கரவாதம்"

3 minutes ago, வாலி said:

"பயங்கரவாதம்"

அதிலை அரசபயங்கரவாதமும் அடக்கம் தானே...?   அதை தானே நாங்களும் சொல்கிறோம்... 

இல்லை புலி மட்டும் தான் காரணம் என்பீர்களோ..

ஜீவன்...  இராணுவம் என்பதுக்கு வேற பெயர் என்ன  தெரியுமா...?  ஆயுத படையினர், பாதுகாப்பு படையினர்...  

பொண் புலிகள் இடுப்பில் பட்டியுடம் யாழ்ப்பாணத்துக்குள் உலாவியது போர் குற்றம் என்பது உங்களுக்கு தெரியுமா...?  சீருடையுடன் இராணுவம் ஆனால் ஆயுதம் இல்லை என்கிறீர்கள்...  அவர்களை இராணுவமே இல்லை எண்று சொல்லி இருந்தாலும் நான் நம்பி இருப்பேன்... 

உண்மையாக தான்...

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, காத்து said:

அதிலை அரசபயங்கரவாதமும் அடக்கம் தானே...?   அதை தானே நாங்களும் சொல்கிறோம்... 

இல்லை புலி மட்டும் தான் காரணம் என்பீர்களோ..

இதைத்தான் இதைத்தான் எதிர்பார்த்தன்.  முன்னைய அரசாங்கங்கள் எல்லாம் தமிழர் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டன என்பது வெள்ளிடை மலை! ஆனால் அதற்கு ஈடாக புலிகளின் பயங்கரவாதமும் இருந்தது!  அதனால் தான் "புலிகளின் பயங்கரவாதம்" என்று குறிப்பிடாமல் "பயங்கரவாதம்" என்று மட்டும் ஒற்றைச் சொல்லில் பதில் எழுதினேன். அந்தப் பயங்கரவாதத்தை இருதரப்பும் மாறிமாறி ஒருவர் மீதும் எல்லாவறூக்கும் அதிகமாக அப்பாவிப் பொதுமக்கள் மீதும் செய்துகொண்டே இருந்தன.  இறுதி யுத்த காலத்தில் அரசு யுத்தமற்ற  வலயங்களை அறிவித்து மக்களைப் போகுமாறு கூறியது பின்னர் அங்கு தங்கியிருந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நிகழ்த்தியது, ஆனால் யுத்தமற்ற வலயமெனக் கூறப்பட்ட இடங்களுக்குள் போய் புலிகளும் தமது தாக்குதல்களை அரச படைகள் மீது தாக்கினர். இருதரப்பும் மாறிமாறி குற்றம் சுமத்தினர். ஆனால் கொத்துக்கொத்தாகக் காவுகொள்ளப்படது அப்பாவிப் பொதுமக்கள்தான். 

Edited by வாலி

16 minutes ago, காத்து said:

 சீருடையுடன் இராணுவம் ஆனால் ஆயுதம் இல்லை என்கிறீர்கள்...

நீங்கள் வசிக்கும் நாட்டில் இராணுவத்தினரைக் கண்டிருப்பீர்கள்தானே. அதேபோன்றுதான் இப்போது இங்கேயும்.

4 minutes ago, வாலி said:

இதைத்தான் இதைத்தான் எதிர்பார்த்தன்.  முன்னைய அரசாங்கங்கள் எல்லாம் தமிழர் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டன என்பது வெள்ளிடை மலை! ஆனால் அதற்கு ஈடாக புலிகளின் பயங்கரவாதமும் இருந்தது!  அதனால் தான் "புலிகளின் பயங்கரவாதம்" என்று குறிப்பிடாமல் "பயங்கரவாதம்" என்று மட்டும் ஒற்றைச் சொல்லில் பதில் எழுதினேன். அந்தப் பயங்கரவாதத்தை இருதரப்பும் மாறிமாறி ஒருவர் மீதும் எல்லாவறூக்கும் அதிகமாக அப்பாவிப் பொதுமக்கள் மீதும் செய்துகொண்டே இருந்தன.  இறுதி யுத்த காலத்தில் அரசு யுத்தமற்ற  வலயங்களை அறிவித்து மக்களைப் போகுமாறு கூறியது பின்னர் அங்கு தங்கியிருந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நிகழ்த்தியது, ஆனால் யுத்தமற்ற வலயமெனக் கூறப்பட்ட இடங்களுக்குள் போய் புலிகளும் தமது தாக்குதல்களை அரச படைகள் மீது தாக்கினர். இருதரப்பும் மாறிமாறி குற்றம் சுமத்தினர். ஆனால் கொத்துக்கொத்தாகக் காவுகொள்ளப்படது அப்பாவிப் பொதுமக்கள்தான். 

புலிகளை  பொறுப்பில் விடவோ தலைமைத்துவத்தில் அமரவைக்கவோ காரணம் என்ன யாரின் தவறு அது எண்று எண்றாவது யோசித்து பார்த்து இருப்பீர்களா...???

இந்திய இராணுவம் வரும் வரை புலிகளுக்கு இருந்த ஆதரவு என்ன என்பதை அறிவீர்களா....??   இந்திய இராணுவதுக்கு எதிராக செய்த மறியல்களுக்கு வந்த மக்களை விட  அவர்களை கையசைத்து வரவேற்ற மக்கள் அதிகம்...

இந்த நிலை மாற காரணம் யார்...??    

  • கருத்துக்கள உறவுகள்
Just now, காத்து said:

இந்திய இராணுவம் வந்து போகும் வரை யாழ் பல்கலைக் கழகத்துக்குள் புலிகள் கால்வைக்கக்கூட முடியாது இருந்தது என்பதனையும் அறிவோம்! 

3 minutes ago, வாலி said:

இந்திய இராணுவம் வந்து போகும் வரை யாழ் பல்கலைக் கழகத்துக்குள் புலிகள் கால்வைக்கக்கூட முடியாது இருந்தது என்பதனையும் அறிவோம்! 

பிறகென்ன... இதுதான் உண்மை.. 

 தமிழ் மக்களிடம் புலிகளை ஓரங்கட்ட வைக்க முடியாத  அர்ப்பணிப்பு இல்லாத தமிழர் தலைமைகளை குற்றம் சொல்லுங்கள்... கிடைத்த சந்தர்பத்தை நழுவ விட்டவர்கள் அவர்கள்தான்.... 

இதிலை அர்சுணும் அடக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உண்மை விஜிதரன், செல்வி, ராஜினி போன்ற பல்கலைக் கழகச் சமூகத்தவரை மண்டையில் போட்டதும். மற்றும் சிலரை அன்பாக விசாரித்து உபசரித்ததும் தானா? இந்திய இராணுவம் செய்த அடாவடிகளால் புலிகள் செய்த அடாவடிகளை மறந்து மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதே உண்மை. அதன் பின்னரும் அவர்கள் திருந்தவில்லை என்பதே திருத்தமான உண்மை!

8 minutes ago, வாலி said:

மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை விட புலிகளை விடவும் மற்றவர்கள் கேடு கெட்டவர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை...   மக்கள் புலிகளை சகித்து கொள்ள பழகிகொண்டார்கள்...

தீவிர TELO  ஆதரவாளனாக இருந்த நான் முன்னம் முன்னம் போன புலிகளின் கூட்டம்  திலீபன் அவர்களின் உண்ணாவிரதம்...  என்னை போல தான் பலரும் சகிப்பு தன்மையின் உச்சத்தில்  புலிகளுக்கு ஆதரவு கொடுக்க வந்து இருந்தார்கள்...    இது தான் சாதாரண தமிழனின் நிலைப்பாடாக இருந்தது..

புலிகளை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்றால் மாற்று இயக்கதவர்களை புலிகள் ஏன் கொலை செய்யவேண்டும் தடை செய்யவேண்டும் .பிரபாகரனுக்கு தனது அரசியல் அறிவு பற்றி நன்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, காத்து said:

மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை விட புலிகளை விடவும் மற்றவர்கள் கேடு கெட்டவர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை...   மக்கள் புலிகளை சகித்து கொள்ள பழகிகொண்டார்கள்...

அப்ப பொதுவாக எல்லோருமே கேடுகெட்டவர்கள எண்டு சொல்கிறிர்கள், <_<என்ன வித்தியாசம் சிலர் கொஞ்சம் கூடச் செய்திருப்பர் சிலர் கொஞ்சம் குறையச் செய்திருப்பர் எனிவேய்ஸ் நன்றி சில பல உண்மைகளை ஏற்றுக்கொண்டமைக்கு. 

சகோதர கொலைகளின் தொடக்கமே அதுதான் .

ஆயுத போராட்டத்தில் மக்கள் வெறுப்படைய வைத்த முதல் நிகழ்வு அதுதான் .பிறகு நடந்தது எல்லாம் பலாத்தகார அரசியல் . 

2 minutes ago, arjun said:

புலிகளை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்றால் மாற்று இயக்கதவர்களை புலிகள் ஏன் கொலை செய்யவேண்டும் தடை செய்யவேண்டும் .பிரபாகரனுக்கு தனது அரசியல் அறிவு பற்றி நன்கு தெரியும் .

மக்கள் ஆதரவு உங்களுக்கு இருந்து இருந்தா உங்களை தடை செய்ய புலிகள் யார்...?  இந்திய இராணுவத்தோடை வந்தவர்கள் புலிகளை தடை செய்து இருந்தார்களே..   அது தெரியுமா...??

5 minutes ago, வாலி said:

அப்ப பொதுவாக எல்லோருமே கேடுகெட்டவர்கள எண்டு சொல்கிறிர்கள், <_<என்ன வித்தியாசம் சிலர் கொஞ்சம் கூடச் செய்திருப்பர் சிலர் கொஞ்சம் குறையச் செய்திருப்பர் எனிவேய்ஸ் நன்றி சில பல உண்மைகளை ஏற்றுக்கொண்டமைக்கு. 

இந்த பிரச்சினை தலையிழுக்கும் சீப்பு மாதிரி...   தலையை வாருவதோடு  உள்ள  ஊத்தை சேருவதை தடுக்க முடியாது... 

1947 ல் தொடங்கின பிரச்சினை யாரிலை ஊத்தை அதிகம் எண்ட அளவிலை தான் இண்டைக்கும் அணுகப்படுகிறது...  தவிர்க முடியாமல் நானும் அந்த ஊத்தைகளிலை ஒருத்தன்...

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் என்றாலே நக்கலும் எள்ளலும் தான் எங்கள் ஆட்கள் பலரிடம் இருக்கிறது! ஆனால், மேலே சுட்டிக் காட்டியது போல மேற்கு நாடுகளில் இருக்கும் அபரிமிதமான ஜனநாயகம் தான் இத்தனை சகாப்தங்களாக மேற்கு நாடுகளுக்கு தமிழர்கள் வந்து ஒரு வாழ்வைக் கட்டியெழுப்ப உதவியது என்பதை இந்த நக்கல் காரர்கள் நினைப்பதில்லை! "சர்வாதிகாரம் தான் எங்களுக்குச் சரி" என்ற மாதிரிப் பேசும் தமிழர்களில் ஒருவராவது ரஷ்யாவுக்கொ கியூபாவுக்கோ அகதியாகப் போவதில்லை, கனடாவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் தான் போவார்கள்!  தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் முழு சுதந்திரம் தரும் ஜனநாயகம் வேணுமாம்! தாயகத்தில் முழு விடுதலை கிடைக்கும் வரை புலிகளை ஒத்த ஒரு அமைப்பின் கீழ் இருந்தாலே போதுமாம்! நல்ல ஜோக்கர்கள் இவர்கள்! :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.