Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலிக் “கலாநிதி”ப் பட்டங்களை விருப்புடன் பெறும் கனடியத் தமிழர் சிலர்! உளநோயின் அறிகூடா இது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போலிக் “கலாநிதி”ப் பட்டங்களை விருப்புடன் பெறும் கனடியத் தமிழர் சிலர்! உளநோயின் அறிகூடா இது?
Peter December 07, 2015 Canada

கனடாவில் சில ஆண்டுகளாகவே போலிப் பிரபல்யங்கள் பலரும் “கலாநிதி”ப் பட்டம் பெறுவதும் அவர்களிற்கு அவ்வாறான பட்டங்களை பல்கலைக்கழகங்களல்லாத அமைப்புக்களிடம் இருந்து பெறுவதும் கண்டறியப்பட்டாலும், இவ்வாறு இந்தப் பட்டங்களை தாங்களாகவே அங்கீகாரமற்ற அமைப்புக்களிடமிருந்து பெற்ற இந்த நபர்கள் தங்களின் பெயர்களிற்கு முன் “கலாநிதி” என்றோ அல்லது “டாக்டர்” என்றோ குறிப்பிடும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது.

இதிலிலும் எந்தவித அடிப்படைப் பல்கலைத் தகுதியுமில்லாத தமிழர்கள் சிலர் மக்களை தங்களின் மீதான பார்வையைத் திருப்ப வைப்பதற்கான ஒரு காரணியாக இவ்வாறு போலியாக “கலாநிதி”ப் பட்டத்தை தங்களின் பெயர்களிற்கு முன்னால் போடுவது அதீதமாக இடம்பெற்று வருகின்றது. இது பற்றி ஒரு பிரபல்ய புகைப்பட நிறுவனத்தின் அதிபர் கூறுகையில் இவர்கள் தங்களின் தகுகளிற்கு மீறிய வகையில் சமூக அங்கீகாரம் தேடுகின்றார்கள். அதற்காகத் துணிந்து பொய்யுரைக்கின்றார்கள் என்றார்.

இவர்களில் பலரும் அமெரிக்காவில் உள்ள உலகப் பல்கலைக் கழகம் என்ற அலங்காரப் பெயருடன் உலா வந்த இரண்டு பேரால் நடத்தப்படும் ஒரு அமைப்பு (இது ஒரு கல்விக்கூடமோ அல்லது பல்கலைக்கழகமோ அல்ல) சந்தையில் கத்தரிக்காய், புடலங்காய் விற்பது போல காசு வாங்கிக் கொண்டு டாக்டர் (முனைவர்) பட்டங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தது. ஒரு 200 டொலர் கொடுத்தால் போதும். நாலு நாள் பொறுத்து அஞ்சலில் பட்டம் வந்து சேரும். கொஞ்ச நாட்களாக ரொறன்ரோவில் தமிழர்கள் மத்தியில் இடறினால் ஒரு கவுரவ டாக்டர் மீதுதான் விழ வேண்டும் என்ற நிலமை இதுவே பேச்சாக இருந்தது.

doctorate-degree-2

எந்தவித தகுதியுமில்லாத இந்தப் பட்டங்களைப் பெறும் நபர்கள் தங்களின் திறமைகளால் முன்னேறமுடியாதவர்களாக இருப்பதால், இவ்வாறு சிறுமைத்தனமான பட்டங்களைப் பெற்று தங்களின் பெயர்களின் முன் போடுவது ஒரு உளவியல் வியாதியே இது சமூக அந்தஸ்தத்தை தேடும் ஒரு செயலல்ல என்ற கருத்தை மருத்துவத்துறைசார் நிபுணர் முன்வைத்தார். அதாவது அவர்கள் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றத் தொடங்கினார்களோ அதிலிருந்து அவர்கள் மக்களைத் தாங்கள் ஏமாற்றுவதை பயப்படாமல் செய்யத் தொடங்குகின்றார்கள் என்றார்.

இப்போது மீண்டும் அந்த வியாதி பரவத் தொடங்கி இருக்கிறது. இயலாத காரியங்களில் முறையாக பயிலாதவர்கள் மீண்டும் போலிப்பட்டங்களை பெற்று தங்களை தகுதியானவர்களாகக் காட்டிக் கொள்ள முயல்கின்றார்கள் என்ற உண்மையைத் தமிழர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். ஒருவரால் தனிப்பட்ட ரீதியல் நடத்தப்படும் கராத்தே சங்கம், கலைச்சங்கம் என்பனவற்றிற்கு சில நூறு டொலர்களைச் செலுத்தி வாங்கும் பட்டங்கள் பெறுமதியில்லாதவை. இவை சிறுபிள்ளைத்தனமானவை.

உண்மையான கலாநிதி பட்டம் பெறுவதென்றால் பட்டப்படிப்டை முடித்து, மாஸ்ரர் என்கிற முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகள் சிரமப்பட்டு நித்திரை முழித்துப் படித்து ஆய்வுக் கட்டுரை எழுதிப் பெறவேண்டும். அது ஒரு மிகப்பெரிய வேலை. இவர்களால் அது முடியாது. உலகத்திலேயே டாக்டர் பட்டம் வாங்கிக்கொள்பவர்கள் ஒன்றில் மருத்துவரா இருத்தல் வேண்டும் அல்லது தத்தம் துறையில் படித்து ஆராய்ச்சி செய்து கலாநிதிப்பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதுதான் நியதி. இதுதான் ஒழுங்கு.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் பல்கலைக் கழகங்கள் தாராளமாக கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி வருகின்றன. கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் இந்தமாதிரி பட்டம் பெற்றவர்கள்தான். ஆனால் அவை தகுதியான பல்கலைக்கழகங்களால் இவர்களது நீண்ட நெடிய சேவையை மெச்சி வழங்கப்பட்டவை. அவற்றிற்கான பட்டமளிப்பு விழாவில் வைத்து பகிரங்கமாக வழங்கப்பட்டவை.

doctorate-degree-3

இந்த கராத்தே சங்கம் இப்போது சிறீலங்காவிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தனது கடையை விரித்திருக்கிறது. சிறீலங்காவில் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குவதில் அது முன்னணியில் நிற்கிறது. அனைத்துல “போர்க்லைப்” பல்லைக்கழகம் என்ற பெயரில் யப்பானில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த அமைப்பு ஒரு பல்கலைக்கழகம் அல்ல. டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும் கராத்தேக் கலைக்கும் அல்லது எந்தவொரு போர்க்கலைக்கும் எதுவித தொடர்பும் இல்லை. காசிருந்தால் இந்தக் கழகம் சான்றிதழ் வழங்குகின்றது.

இதைவிட மோசம் பேராசிரியர் பட்டம் வழங்குவது. கவுரவ பேராசிரியர் எனச் சான்றிதழ் வேறு அளிக்கிறார்கள். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக இல்லாதவர்கள் கூட இந்தக் கவுரவ பேராசிரியர் பட்டத்தை வெறும் 200 டொலர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
இந்த டாக்டர் பட்டத்தை அதிகமாக வாங்கிக் கொள்பவர்கள் யார் தெரியுமா? பல முதலாளிகள் – குறிப்பாக பெரியளவில் பலசரக்கு, அரிசி, மீன் என வியாபாரம் செய்யும் முதலாளிகள். அதைவிட சில தேர்தல்களில் நின்று 100 வாக்குப் பெறாத அரசியல்வாதிகளும் இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

அதன் விளைவு? உண்மையாக உழைத்துப் படித்து பட்டம் பெற்றவர்கள் இன்று அந்தப் பட்டத்தைப் போட்டுக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். எங்கே தங்களையும் போலி டாக்கடர்கள் என்று நினைத்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இந்தப் போலி (அதாவது கவுரவ) டாக்டர்கள் தொல்லை அதிகரித்து விட்டது.

சராசரி மனிதர்கள் இந்தக் கவுரவப் பட்டங்களுக்கு அலையும் மட்டும் கராத்தே சங்கங்கள் காட்டில் காசு மழை கொட்டிக் கொண்டுதான் இருக்கும்! ஆனால் யாராவது தங்களின் பெயர்களிற்கு முன்னால் “கலாநிதி” என்று போட்டால் அவர்கள் பட்டப்படிப்பை எங்கே படித்தார்கள், முதுகலைப் படிப்பை எங்கே முடித்தார்கள். கலாநிதிப் படிப்பை எங்கே மேற்கொண்டார்கள் என்பதை நீங்கள் நேரடியாகவே கேட்க வேண்டும். ஏனென்றால் தற்புகழ்ச்சி தேடும் மனஅழுத்தக்காரர்களின் தெரிவாக மக்களை ஏமாற்றுதல் என்பதை இருக்க இனிமேலும் விடக்கூடாது.

doctorate-degree-1
- See more at: http://www.canadamirror.com/canada/53597.html#sthash.2qQbP6YB.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கல்லாநிதிகளின் கலாநிதிப் பட்டம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு 'தாழ்வு மனப்பான்மையின்' பிரதி பலிப்பு!

அண்மையில் ஒருவர், நண்பர் .. முகநூலில் நட்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்!

ப்ரோபையிலைப் போய்ப் பார்த்தால் 'dr."  என்று எழுதியிருந்தது!

இவன் எப்படா..என்று மேலும் ஆராய்ந்ததில்,, டிரெக்டர் என்பதன் சுருக்கமாம்!

ஆரிட்டைச் சொல்லி அழ ?

  • கருத்துக்கள உறவுகள்

தேவயாணிக்கு கலைமாமணி பட்டம் கொடுத்தார் கலைஞர் அவர்.. 8ம் வகுப்பும் படிக்கல்ல. அப்படித்தான்.. கனடாவிலும் நம்மாக்கள்.. ஒரு கலக்குக் கலக்கினம். இதில மட்டுமில்ல.. இப்படிப் பல... சங்கதிகள் அங்க நடக்குது. tw_blush:

இது எல்லாம் ஒரு போலிக் கெளரவத்துக்குதான். இதன் மூலம் உண்மையாக கஷ்டப்பட்டு படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும் சிக்கல்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

தேவயாணிக்கு கலைமாமணி பட்டம் கொடுத்தார் கலைஞர் அவர்.. 8ம் வகுப்பும் படிக்கல்ல. அப்படித்தான்.. கனடாவிலும் நம்மாக்கள்.. ஒரு கலக்குக் கலக்கினம். இதில மட்டுமில்ல.. இப்படிப் பல... சங்கதிகள் அங்க நடக்குது. tw_blush:

பொறாமை...! உங்களுக்கு யாரிட்டை வாங்கிறதண்டு விலாசம் தெரியேல்ல...  அதுதான் கஸ்டப்பட்டு கண்முழிச்சு இஷ்டப் பட்டு படித்துக் கொண்டிருக்கிறீங்கள். சுளுவா இப்படி ஒன்டு  விக்கிற இடம் தெரிஞ்சால் நீங்களும் ஒன்டை வாங்கிக் கொண்டு எனக்கும் விலாசத்தை தாங்கோ. எனக்கு காலாநிதி வேண்டாம் , கலைமாமணி போதும் நானும் விலாசம் காட்ட....!   :)

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

பொறாமை...! உங்களுக்கு யாரிட்டை வாங்கிறதண்டு விலாசம் தெரியேல்ல...  அதுதான் கஸ்டப்பட்டு கண்முழிச்சு இஷ்டப் பட்டு படித்துக் கொண்டிருக்கிறீங்கள். சுளுவா இப்படி ஒன்டு  விக்கிற இடம் தெரிஞ்சால் நீங்களும் ஒன்டை வாங்கிக் கொண்டு எனக்கும் விலாசத்தை தாங்கோ. எனக்கு காலாநிதி வேண்டாம் , கலைமாமணி போதும் நானும் விலாசம் காட்ட....!   :)

ஆன்லைனிலும் விக்கிறாங்களாம். கூகிளட்ட கேட்டா சொல்லும். இதில எல்லாம் என்ன பொறாமைப்படக் கிடக்குது. ஊரில காசு கொடுத்து பெரியாக்கள் வாங்கிறதை இவை.. இப்படி வாங்கினம். ஊரில சில பெரியாக்களின் பிள்ளைகள்.. ஏல் பரீட்சையில் மோசமாக பரீட்சை எழுதியும்.. யுனிக்குப் போனவை. எப்படி..???! எங்கட ஆக்களுக்கு உந்த விசயங்கள் கை வந்த கலை. என்ன எங்களுக்கு தான்.. நேர்மை.. தர்மம்.. நியாயமுன்னு.. ஒருத்தன் சொல்லி தந்திட்டான். அவனைப் பிடிச்சு செருப்பால அடிக்கனும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் என்னை, டாக்டர் நாதமுனி என்று பேரை மாத்தமாறு நிர்வாகத்துக்கு, ஒரு கடதாசி போடப் போறேன்.  :rolleyes:

Edited by Nathamuni

மகேஷ்வரன் MPயிடம் மாட்டுக்கு பதிந்தவர்களுக்கு JP பதவி சிபாரிசு ஆன கதையும் உண்டு

19 minutes ago, Nathamuni said:

இன்று முதல் என்னை, டாக்டர் நாதமுனி என்று பேரை மாத்தமாறு நிர்வாகத்துக்கு, ஒரு கடதாசி போடப் போறேன்.  :rolleyes:

பாஸ் என்ன நயன் பத்தி பேசிக்கிறாங்க ஏதும் உண்மையே? மனம் சஞ்சலமா இருக்கு  

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Surveyor said:

பாஸ் என்ன நயன் பத்தி பேசிக்கிறாங்க ஏதும் உண்மையே? மனம் சஞ்சலமா இருக்கு  

நல்ல அனுபவம் இருக்கிறதும் வசதி தானே. இதுக்குப் போய் சஞ்சலப் படலாமா? நயனதாரா இல்லேன்னா, திரிசா என்று பிளேட்டை மாத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
உண்மையான கலாநிதிப் பட்டம் பெறுவோர் இவர்களோடு குழம்பிக் கொள்ள வேண்டிய தேவையில்லை. பெயருக்குப் பின்னால் பி.எச்.டி என்று போட்டு அடைப்புக் குறிக்குள் பெற்ற ஊரின் பெயரையும் போட்டால் அது ஒரிஜினல் என்று பார்ப்பவருக்கு விளங்கும்.
 
பி.கு: இன்று பி.பி.சி யில் ஒரு இந்தியர் எப்படி கேம்பிரிட்ஜ் கலாநிதி என்று பொய் சொல்லி ஒரு நிருபரால் போலி என்று வறுக்கப் பட்டார் எனப் பார்த்தேன்! சிரிப்பாக வந்தது.
  • கருத்துக்கள உறவுகள்

உங்க உலகத்தில கனக்கப் பேர் போலி பி எச் டி எடுத்திட்டும் இருக்கினம். அவையும் டாக்குத்தர் என்று தான் பீற்றிக்கிட்டு திரியினம். அவையையும்.. கண்டுபிடிச்சு அதைப் பறிச்சா தான் உலகம் கொஞ்சம் என்றாலும் உருப்படும். :rolleyes:

எனக்கு இந்தியாவில் ஒரு நண்பர் இருந்தார். பாவம் அவற்றை பேரே கலாநிதி. இதைக் கேள்விப்பட்டால் மனுசன் தன்ர பேரையே தமிழில எழுத வெட்கப்படப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

இது ஒரு 'தாழ்வு மனப்பான்மையின்' பிரதி பலிப்பு!

அண்மையில் ஒருவர், நண்பர் .. முகநூலில் நட்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்!

ப்ரோபையிலைப் போய்ப் பார்த்தால் 'dr."  என்று எழுதியிருந்தது!

இவன் எப்படா..என்று மேலும் ஆராய்ந்ததில்,, டிரெக்டர் என்பதன் சுருக்கமாம்!

ஆரிட்டைச் சொல்லி அழ ?

முகப் புத்தகத்தில் DR அக்கா என்று எழுதி இருந்தது. மற்றவர் கேட்டார்  அவ எப்ப PhD முடிச்சவ என்று?
அது டாக்டர் இல்லை Dear இன் சுருக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Nathamuni said:

இன்று முதல் என்னை, டாக்டர் நாதமுனி என்று பேரை மாத்தமாறு நிர்வாகத்துக்கு, ஒரு கடதாசி போடப் போறேன்.  :rolleyes:

நானும் நிர்வாகத்தை  கன காலமாய் டாக்டர் எம்பிபிஎஸ் குமாரசாமி எண்டு என்ரை பேரை மாத்துங்கோ.....மாத்துங்கோ...மாத்திவிடுங்கோ தொண்டைகிழிய கத்துறன்...... கோதாரிவிழ நிர்வாகத்திலை ஒருத்தரும் உசும்புறதாய் தெரியேல்லை....:mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்களை கெளரவப்படுத்த பொன்னாடை போர்த்த வேண்டும் என்று அடம்பிடித்தவர்களையும் புலத்தில் கண்டு இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

எனக்கு இந்தியாவில் ஒரு நண்பர் இருந்தார். பாவம் அவற்றை பேரே கலாநிதி. இதைக் கேள்விப்பட்டால் மனுசன் தன்ர பேரையே தமிழில எழுத வெட்கப்படப் போகுது.

கலாநதி மாறன் ? அப்ப நீங்க பெரிய பார்ட்டி தான் ?

ஐயோ நாதமுனி நம்பள உந்தக் கூட்டத்தில சேர்த்திடாதேங்கோ. அது வேற கலாநிதி - பாவம் ஒரு அப்பிராணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.