Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புலிகளின் காவல்துறை உறுப்பினர் எனது கணவரை காட்டிக்கொடுத்தார்'

Featured Replies

'புலிகளின் காவல்துறை உறுப்பினர் எனது கணவரை காட்டிக்கொடுத்தார்'
 
article_1450267841-aaaaaaaaaa.jpg

-எம்.றொசாந்த்

வட்டுவாகலால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் போது, இராணுவத்தினருடன் இணைந்து நின்ற விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய சபேசன் என்கின்ற நபர் தனது கணவரைக் இராணுவத்தினருக்கு காட்டிக் கொடுத்ததாக காணாமற்போன விடுதலைப் புலிகளின் உள்ளகப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த வண்ணக்கிளி என்று அழைக்கப்படும் மூத்தம்பி விஜயகுமார் என்பவரின் மனைவி இளவெயினி சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, இவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வட்டுவாகலால் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழையும்போது, காட்டிக் கொடுக்கப்பட்டு எனது கணவரை 3 இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர். அதன்பிறகு அவர் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/161706#sthash.hPrHEHrB.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு தடவை... வன்னி கடந்து வவுனியா வந்த போது தாண்டிக்குள சிங்கள இராணுவ சோதனைச் சாவடியில்.. முன்னரங்க சோதனை நிலையில் நின்றவர்கள் யார் என்று பார்த்தால்.. பள்ளிக்கூட நண்பர்கள் (முன்னரங்க நிலையில் இராணுவம் நிற்பதில்லை.. பயம் புலிகள் தாக்குவார்கள் என்று. ஒட்டுக்குழுக்களையும் பொதுமக்களில் சிலரையும் நிறுத்தி வைப்பார்கள்.. பொதிகளைச் சோதனை செய்து உள்ள அனுமதிக்க. பின்னர் தான் இராணுவம் சோதிக்கும்). ஊரில் இருந்த போது தீவிர புலி ஆதரவாளர்கள்... எப்படி வெளில வந்ததும் ஒட்டுக்குழு ஆனார்கள் என்று தான் சிந்தனை ஓடியது. ஆனால் மீண்டும் அவர்களை கொழும்பில் கண்டு விசாரித்த போது இராணுவம் தங்களைப் பிடிச்சு முன்னணி நிலைகளில் பொதிகளை சோதனை செய்து அனுப்பு என்று விட்டதாகவும்.. வருபவர்கள் பற்றி.. தெரிந்த தகவல் தரும்படி கேட்டுக்கொண்டதாகவும் சொன்னார்கள். எல்லோருமே தென்பகுதிக்கு தெரிவாகி வந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சம்பவங்களும்.. மக்கள் தவறாக எண்ண வழி செய்யலாம். புலிகளில் சிலர்  சந்தர்ப்ப சூழ்நிலையில்.. காட்டிக்கொடுப்பாளர்களாக மாறி தங்களையும் தங்கள் குடுப்பத்தாரையும் பாதுகாக்க விளைந்த நிகழ்வுகள்.. இந்தியப் படை ஆக்கிரமிப்புக் காலம் தொடக்கம் நடந்த ஒன்று தான். புதிதல்ல..!:unsure:

Edited by nedukkalapoovan

புலி தன் குடும்பத்தை பாதுகாக்க‌ காட்டிக்கொடுத்தால்  அது சந்தர்ப்ப சூழ்நிலை இதே வேறு இயக்க உறுப்பினர் செய்தால் மரண தண்டனை வழங்க வேண்டிய மாபெரும் குற்றம்.
ஆனாலும் காவல்துறை சபேசன் பேய்காய் போல கிடக்கு.

Edited by தெனாலி

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மக்களுக்கு எதிராகவும் அவர்களின் விடுதலைக்காகப் போராடிய சொந்த சகோதர்களுக்கு எதிராகவும் எதிரியோடு சேர்ந்து இயங்கி அவனுடனையே தின்று படுத்து.. காட்டிக்கொடுப்பு உட்பட பல தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களும்.. போரின் இறுதிக்கட்டத்தில்.. கொடும் இராணுவ ஒடுக்குமுறையில் ஒட்டுக்குழுக்களின் கொடுமையில் இருந்து தப்ப.. மக்கள் போராளிகள் சிலர் கையாண்ட முறைகள் விமர்சனத்துக்குரியவை ஆக இருந்தாலும்.. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு.. ஆயுதப் போராட்டம் ஓய்விக்கப்படுகிறது என்ற அறிவிப்பின் பின்.. நடந்த சம்பவங்கள் தொடர்பில் காட்டிக்கொடுப்பாளர்களுக்கு தேசத்துரோகிகளுக்கு மரண தண்டனை என்பது வலுவற்ற தண்டனைப் பிரயோகமாகும்.

போராட்ட காலத்தில் காட்டிக்கொடுப்பாளர்கள் யாராக இருந்தாலும் போராட்டத்தை மக்களை போராளிகளை மண்ணை உரிமையை பாதுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்.. ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவுகளும் ஒன்றல்ல. வெவ்வேறானவை. அதுவும் புலிகளின் தலைமைத்துவக் கட்டுப்பாடு இறுதிக்கட்டத்தில் போராளிகள் மீது இருக்காத நிலையில்.. சிலர் தாந்தோன்றித்தனமாக நடக்கும் சூழல் எழுந்ததும்.. யதார்த்தமே. அதனால் இதர போராளிகளும் மக்களும் அசெளகரியங்களை சந்திக்கிறார்கள் என்ற சிந்தனை இன்றி அவர்கள் செயற்பட்டது உண்மையில் மக்கள் அக்கறை உள்ள ஒரு உண்மைப் போராளியால் செய்யப்பட்டிருக்க முடியாது.

இன்று அவர்களிடம் கேள்வி கேட்க அவர்களின் செயற்பாடுகளுக்கு தண்டனை வழங்க யாரும் அற்ற சூழலில்.. காட்டிக்கொடுப்பாளர்களால் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் பட்ட மீள முடியாத துயர் என்பதற்கு கொடுக்கப்பட ஒரு நீதியும் இல்லாத சூழல் தான் நிலவுகிறது.

ஆனால் இதனையும் திட்டமிட்டு ஒட்டுக்குழுக்கள் இராணுவத் துணைக்குழுக்களாக இயங்கி எதிரிகளிடமே ஆயுதமும் பாதுகாப்பும் சம்பளமும் மக்களிடம் கப்பமும் பெற்று காட்டிக்கொடுப்பாளர்களாக.. தேசவிரோதிகளாகச் செயற்படுவதற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் உண்டு. பராமிலிரரி ஒப்பரேசனும்.. பெரும் சிங்கள இராணுவ இன அழிப்புக் கொடுமை கண்முன்னே நடக்கும் சந்தர்ப்ப சூழலில் தான் தன் குடும்பம் தப்பிக்க காட்டிக்கொடுப்பாளர்களாக மாறியதும் ஒன்றல்ல. இதனை விளங்கிக் கொள்ள முடியாது சமன்பாடு எழுதும்.. சாமானியக் கடைகளுக்கு சந்தர்ப்ப சூழலின் தார்ப்பரியம் விளங்காது.

இருந்தாலும் காட்டிக்கொடுப்பாளர் யாராக இருந்தாலும் அது மக்களுக்கு பாதிப்பாக  அமைந்ததால்.. அது.. கண்டிக்கத்தக்கதே... தண்டனைக்குரியதே.. ஆகும். தமிழ்செல்வனின் மனைவி குடும்பமும்... மகிந்தவுக்கு துதிபாடிட்டு தான் பிரான்ஸுக்கு கிளம்பினவை. :rolleyes:tw_angry:

8 hours ago, தெனாலி said:

புலி தன் குடும்பத்தை பாதுகாக்க‌ காட்டிக்கொடுத்தால்  அது சந்தர்ப்ப சூழ்நிலை இதே வேறு இயக்க உறுப்பினர் செய்தால் மரண தண்டனை வழங்க வேண்டிய மாபெரும் குற்றம்.
ஆனாலும் காவல்துறை சபேசன் பேய்காய் போல கிடக்கு.

நீங்கள் எந்தப்புலியை கூறுகின்றீர்கள். 

1.காட்டில் வாழும் புலியையா?
2.விஜேயையா?
3.இல்லை  தமிழருக்காக இன்னுயிர்களை தியாகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளையா? 

எல்லாத்திரியிலும் நீங்கள் ஏதோ சொல்லவாறியல் ஆனா வெளிப்படையா உங்களின் உள்ளக்குமுறலை சொன்னால் நாங்கள் ஏதாவது உதவலாம் பாஸ்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தெனாலி said:

புலி தன் குடும்பத்தை பாதுகாக்க‌ காட்டிக்கொடுத்தால்  அது சந்தர்ப்ப சூழ்நிலை இதே வேறு இயக்க உறுப்பினர் செய்தால் மரண தண்டனை வழங்க வேண்டிய மாபெரும் குற்றம்.
ஆனாலும் காவல்துறை சபேசன் பேய்காய் போல கிடக்கு.

அது புலி பற்றிய உங்கள் பார்வையில் இருக்கு...

புலியை விடுவோம்

நீங்கள் இருக்கும் நாட்டின் இராணுவத்தினர் ஒருவரை நீங்கள் எதிரிக்கு காட்டிக்கொடுத்தால் நீங்கள் வாழும் நாட்டின் அரசால் தண்டிக்கப்படுவீர்களா இல்லையா?

அதே இராணுவம் தன் சில இரகசிய  கடமை காரணமாக உங்களை எதிரிக்கு காட்டிக்கொடுத்தால்

அங்கே இராணுவ வீரர் நீங்கள் வாழும் நாட்டின் அரசால் தண்டிக்கப்படுவாரா???

அறியாமையால் போராட போன சகோதர இயக்கங்களை போட தொடங்கியதே புலிகள் தான் அதன்பின்னர் தான் நீங்கள் வைக்கும் அனைத்து குற்றசாட்டுகளும் ஆரம்பித்தது .

மாற்று இயக்கங்களில் புலிகள் வைக்கும் குற்றசாட்டுக்கள் அனைத்தையும் அவர்களும் செய்தே வந்தார்கள் ஆனால் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள் தமது வியாபாரத்திற்கு அவர்கள் மேல் தேவாரம் பாடி புலிகள் மட்டுமே விடுதலை போராளிகள் மற்றவர்கள் எல்லாம் ஏதோ காட்டிகொடுக்க போனவர்கள் மாதிரி இன்றும் கதையளகின்றார்கள் .

இதே திட்டு அரசியல் தொடர்ந்தால் புலிகளின் பொட்டுகேடுகள் தொடரும் .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு இயக்கப் பிரிவினைகளின் ஆரம்ப கர்த்தா..  சகோதரப் படுகொலையின் ஆரம்பமே தெரியாது போல...?! உட்கொலை கலாசாரத்தை ஆரம்பிச்சு வைச்சு சகோதரப் படுகொலைகளுக்கு முஸ்தீபிட்டதே புளொட் அமைப்புத்தான். வழமை போல் பழிகள் புலி மீது. இந்தப் பழியிடல்களால் தான் புலிகள் இவர்களை களத்தில் இருந்து மக்கள் மற்றும் போராட்ட நலன் வேண்டி அகற்ற வேண்டி வந்தது.

PLOTE was founded in 1980 by an ex-surveyor Uma Maheswaran alias Mukundan, who became its general secretary. He was the chairman of the Liberation Tigers of Tamil Eelam (Tamil Tigers or LTTE) from 1977–1980. He was trained in Lebanon and later in Syria under the Palestinian nationalist organization Popular Front for the Liberation of Palestine.[citation needed] After a bitter rivalry with Velupillai Prabhakaran, Uma Maheswaran left the LTTE in 1980 and formed PLOTE.[citation needed]

After leaving the LTTE, Maheswaran founded the People's Liberation Organisation of Tamil Eelam (PLOTE).[12] On the night of 19 May 1982 Maheswaran along fellow PLOTE members Jotheeswaran and Sivaneswaran (Nirnajan) were involved in a shootout with Prabhakaran and Raghavan (Sivakumar) of the LTTE at the Pondy bazaar in Thiyagarayanagar, Madras, India.[13][14][15] Jotheeswaran was injured and hospitalised but Maheswaran and Sivaneswaran escaped.[16] Maheswaran was arrested near Gummidipoondi railway station on 25 May 1982 after a shoot out with the police but was later bailed.[17] Maheswaran and PLOTE carried out bank robberies and kidnappings to finance their activities.[3] Maheswaran's actions led to divisions within PLOTE and number of splinter groups were formed including the Eelam National Democratic Liberation Front (ENDLF). Maheswaran dealt harshly with dissension and is alleged to have carried out 38 murders.[3]

https://en.wikipedia.org/wiki/Uma_Maheswaran

தம்பியை நினைக்க பாவமாக இருக்கு .இதில் முக்கால்வாசி உண்மையையே இல்லை

நடந்த எல்லாவற்றையும் உமாவுடன் இரவுகள் கழிக்கும் கணங்களில் கேட்டதுதான் .

பஸ்தியாம்பிள்ளை கொலை 

கனகரத்தினம் கொலை முயற்சி 

கிளிநொச்சி வங்கி கொள்ளை 

பாண்டிபசார் துப்பாகி சுடு ,

இதைவிட இயக்கம் தொடங்க முதல் சாதி எதிர்ப்பு போராட்டம் ,தமிழர் விடுதலை கூட்டணிக்கு கொடுத்த அலுப்பு எல்லாம் நிலவில் புல் வெளியில் இருந்து கேட்டவை .

புளொட் உமாவால் தொடங்கபடவில்லை அதுவே பலருக்கு தெரியாது .

உமா புலிகளால் ஒதுக்கப்பட்டு சென்னையில் இருந்தார் .புளொட்டை தொடங்கியது சுந்தரமும் கண்ணனும் தான் .

எப்படி பிரபா புலிகளின் தலைவராக உமாவை கொண்டுவந்தாரோ அதே போல இவர்களும் உமாவை தம் தலைவராக சில மாதங்களின் பின் கொண்டுவந்தார்கள்.

உமாவின் பிளஸ் போயிண்டே அவர் கதைக்கும் விதமும் நடக்கும் விதமும் ஆனால் அவர் வேறு முகம் ஒன்றை பலருக்கு தெரியாமல் வைத்திருந்தார் .

இவர்களுடன் ஒப்பிடும்போது சந்ததியார் எவ்வளோ மேல்

உமா சொன்னது பாண்டி பசாரில் கீதா கபேயில் தானும் கண்ணனும்  டீ குடித்துவிட்டு வெளியே வரும்போது முழியன் வருகின்றான் என்று கண்ணன் சொல்ல வெடி விழுந்தது .வந்தது பிரபாவும் ராகவனும் வெடி விழுந்தது கண்ணனுக்கு உமா ஓடி தப்பி விட்டார் .

கும்மிடிப்பூண்டி சம்பவம் -உமா தமிழ் நாட்டில் இனி தன்னை போலிஸ் தேடும் என்று தன்னுடன் இருந்தவர்களுக்கு கொஞ்ச பணத்தை கொடுத்துவிட்டு கொஞ்ச காலம் மறைந்திருக்க பெங்களுர் போயிருக்க எண்ணி கும்மடிபூண்டி ஸ்டேசனில் இருக்க தற்செயலாக அங்கு வந்த போலிசை பார்த்து தான் ஓட தன்னை கைது செய்தார்களாம் .இதில் வேடிக்கை என்னவென்றால் தான் கொண்டுவந்த போன்ட் பாக்கில் புள்ளக்கா அமெரிக்கன் டொலர்ராம் அது திறந்து பலாத்தின் பரவ பொதுமக்கள் அதை பொறுக்க பட்ட பாடு கண் கொள்ளாகாட்சி என்று சொன்னார் .

15 hours ago, விசுகு said:

அது புலி பற்றிய உங்கள் பார்வையில் இருக்கு...

புலியை விடுவோம்

நீங்கள் இருக்கும் நாட்டின் இராணுவத்தினர் ஒருவரை நீங்கள் எதிரிக்கு காட்டிக்கொடுத்தால் நீங்கள் வாழும் நாட்டின் அரசால் தண்டிக்கப்படுவீர்களா இல்லையா?

அதே இராணுவம் தன் சில இரகசிய  கடமை காரணமாக உங்களை எதிரிக்கு காட்டிக்கொடுத்தால்

அங்கே இராணுவ வீரர் நீங்கள் வாழும் நாட்டின் அரசால் தண்டிக்கப்படுவாரா???

விளக்கத்திற்கு நன்றி. காவல்துறை சபேசனுக்கு அப்படி என்ன இரகசிய கடமை இருந்ததோ தெரியவில்லை பாவம். 
விளையாட்டுத்துறை பாப்பாவும் இப்படி ஏதாவது இரகசிய கடமை காரணமாகத்தான் காட்டிக்கொடுத்துக்கொண்டு திரிஞ்சவர் என்று நினைக்கிறன். 

5 hours ago, nedukkalapoovan said:

Maheswaran dealt harshly with dissension and is alleged to have carried out 38 murders.[3]

https://en.wikipedia.org/wiki/Uma_Maheswaran

உமா முக்கி முக்கி ஆக 38 பேரையா போட்டவர்?? புலி வீரர்கள் ஒரு கந்தன் கருணை படுகொலையிலயே 63 பேரை கைலாயம் அனுப்பி வைத்தவர்களே. ஒரு வேளை அதுக்கும் ஏதாவது இரகசிய காரணம் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை சுற்றிவளைப்பின் மூலம் ஒரு மைதானத்துக்கு கொண்டுவரப்பட்டு ஒரு முகமூடிக்கு முன்னால் வரிசையாக அனுப்பப்பட்டோம், யார் கடக்கும்போது ஓம் என்று தலையாட்டி ஆட்டுகிறானோஅவர்கள் மறிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவன் இல்லையென்று தலை ஆட்டினால் பின்னால் நிற்கும் ஆமி தலையாட்டியை தாக்குவான். தலை ஆட்டுபவனுக்கு தான் தலை ஆட்டுபவனை முன்பின் கண்டவனாக இருக்கமாட்டான். தன் வேதனையால் அவன் தலை ஆட்ட, ஆட்டுப்பட்டவன் உறவினர்கள்  அவனை திட்டி சாபமிடுவார்கள். இந்தளவுக்கும் தலையாட்டி புலி இயக்கத்தோட சம்பந்தப்பட்டவன் என்று சொல்ல முடியாது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களும், ஒட்டுக்குளுக்களுமாகும்.  ஆனால் 2009 நிலைமை அப்படியல்ல ஒரு போராளி மற்ற போராளியை அடையாளம் காட்டவேண்டிய கட்டாயம். அவன் மட்டும் போராடவில்லை. உன்னோடு இருந்தவர்களை சொல் என்று கட்டாயப்படுத்தினார்கள். அவன் காட்டிக்கொடுக்காவிட்டாலும் வேறு யாரோ காட்டிக்கொடுப்பார்கள். ஆமி அவனிடம் கேட்பான் இவனை தெரியுமா என்று? இவன் ஓம் என்றால் ஏன் நீ முன்னமே காட்டித் தரவில்லை என்று அடிப்பான். அதைவிட ஆமி பகிரங்கமாக அறிவித்தது. நீங்களாக சரணடைந்தால் விசாரித்து விட்டு விடுவோம். நாங்கள் கண்டுபிடித்தால் தண்டனை வேறுவிதமாக இருக்குமென்று. இதனால் தானாகப் போய் சரணடைந்தவர்களும், குடும்பத்தினர் கையளித்தவர்களும் உண்டு. யாருமே காட்டிக்கொடுக்காமல் தப்பி வந்தவர்களும் பல மாதங்கள் கடந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாரயும் புண்படுத்துவதற்காகவோ, அவமானப்படுத்துவதற்காகவோ, பொய்யையோ எழுதவில்லை. அந்த நேரம் இருந்த நிலைமையை எழுதுகிறேன். இவரது கணவரும் யாரையாவது  காட்டிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்திருப்பார். அது இவருக்கு தெரிய வாய்ப்பில்லாமலும் இருக்கலாம். ஆனால் வாய்க்கு வந்தபடி சந்தர்ப்பம் கிடைத்துவிட்டதே என்று வெறுப்பைக்கொட்டக்கூடாது. நாங்கள் அந்த நிலையிலிருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று யோசனை பண்ணிப்பார்த்து எழுதுவது வரவேற்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சில அண்ணங்களின் சடையளைப் பார்.. இயக்கங்களின் சண்டைத் தொடக்கம் பற்றி பேசினா.... ஒருவர் அல்பிரட் துரையப்பாவாம்... அவர் எந்த இயக்கமண்ணை..??! சரி சிங்களக் கைக்கூலி.. அல்பிரட் தான் தொடக்கம் என்று வைப்பமே... தமிழராய்ச்சி மாநாட்டில் சொந்த தமிழனை கொன்றது அல்பிரட் ஆட்சியில் தானே.. அப்ப அவரை என்ன செய்யலாம்...  கனடாவுக்கு அசைலம் அடிக்க அனுப்பி இருக்கலாம் என்றீங்க போல. அண்ணனின் உளறக் கதையை விட சில காலப் பதிவுகள் கூடிய திருத்தமானவை.

மற்ற அண்ணனுக்கு வழமை போல தமிழ் புரியவில்லை. நாங்க 1980 களின் ஆரம்பத்தில நிற்கிறம் அண்ணன்.. சவுக்காடு கடந்து கந்தன்கருணையில் நிற்கிறார்... முடியல்ல. முதல்ல தமிழனைப் படியுங்கண்ண. அப்புறம் கருத்தை வாசிச்சு விளங்கி அதுக்கு அப்புறமா பதில்... கருத்து எழுதலாம். tw_angry:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தெனாலி said:

விளக்கத்திற்கு நன்றி. காவல்துறை சபேசனுக்கு அப்படி என்ன இரகசிய கடமை இருந்ததோ தெரியவில்லை பாவம். 
விளையாட்டுத்துறை பாப்பாவும் இப்படி ஏதாவது இரகசிய கடமை காரணமாகத்தான் காட்டிக்கொடுத்துக்கொண்டு திரிஞ்சவர் என்று நினைக்கிறன். 

உங்களுக்கு 2009க்கு முன் அதன் பின் நிலையை அ ஆ இருந்து  தொடங்க என்னால் முடியாது

தூங்குபவனைத்தான் என்னாலும்  எழுப்பமுடியும்.

என்ன செய்வது 50 ஆயிரம் பேரின் தியாகம் எனக்கு முன்னால் விரிகிறது

நான் புலி பற்றிப்பேசினால் உங்களுக்கு பாப்பா என்ற ஒருத்தர் தெரிகிறார்

இதுவும் ஒருவித நோய் தான்.

இனி  நன்றி  வணக்கம் சொல்வதைத்தவிர வேறு வழியில்லை எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் போராட்டத்தில் சகோதர யுத்தம் தொடங்கினவுடனே எதிரிக்கு காட்டிக் கொடுக்கும் வேலைகள் தொடங்கி விட்டன...மற்றைய இயக்கங்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ தங்கள் எதிர் இயக்கங்களை சேர்ந்தவர்களை காட்டிக் கொடுத்தார்கள்.

உன்னதமான லட்சியத்திற்காக,அர்பணிப்புடன் போராடிய புலிகள் கடைசி நேரத்தில் தங்களை,தாங்களே காட்டிக் கொடுத்து அழிந்தார்கள்.அதற்கும் தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,அவர்களது குடும்பம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

இதில் வருந்தத்தக்க விடயம் என்டால் அன்று மற்றைய இயக்கங்களை காட்டிக் கொடுக்கின்றனர் என்பதற்காக மண்டையில் போட்ட அதே புலிகள் தான் இன்று தங்களைத் தாங்களே காட்டிக் கொடுத்து அழிந்தது.

"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்வான்" என்பது இது தானோ!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

ஒரு பெரும்  தியாக வேள்வியில்

எத்தனையோ சாதனைகள் வரலாறுகளைப்படைத்த புலிகள்

பெரும்  பலம் கொண்ட சர்வதேசத்தால்

வஞ்சகமாகவே அழிக்கப்பட்டார்கள்

நீங்கள் தமக்குள் காட்டிக்கொடுத்து அழிந்தார்கள் என்பது எம்மவரை மிகவும் கேவலப்படுத்துவதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா, உண்மை கசக்கும் தான் அதற்காக இந்த யாழுக்குள்ளே உண்மையை மறைத்து என்னத்தைக் கண்டனீங்கள்?...உண்மை மக்களுக்குத் தெரியும்,உங்களையும் சேர்த்து...தவிர புலிகள் காட்டிக் கொடுத்துத் தான் அழிந்தார்கள் என நான் எழுதவில்லை,அப்படி விளங்கி இருந்தால் மன்னிக்கவும்...அழியப் போகிறோம்,அல்லது அழிந்த பின் தங்களை காப்பாற்றிக் கொள்ள தங்கள் சக உறுப்பினர்களையே காட்டிக் கொடுத்தார்கள்.

மற்ற இயக்கங்களும் தங்களை காப்பாற்றிக் கொள்ளத் தான் இப்படி காட்டிக் கொடுக்கத் தொடங்கினார்கள்.அவர்கள் செய்தது துரோகம் என்டால் இவர்கள் செய்தது துரோகத்திலும் துரோகம்.

இப்படி காட்டிக் கொடுக்கின்ற புலிக்கும் ஒரு காரணம் இருக்கும் என நீங்களும்,கொஞ்சப் பேரும் எழுதுனீங்கள் பாருங்கள் அப்பவே அவமானப்படுத்த தொடங்கிட்டீங்கள்...நீங்களும்,உங்களை சார்ந்தவர்களுமே புலிகளை தொடர்ந்தும் அவனானப்படுத்துகின்றீர்கள் என்பதை மனதில் வையுங்கள்

முப்பதுவருடங்களாக இதைத்தான் சொல்லுகின்றார்கள் ,

புலிகள் செய்தால் அதற்கு ஒரு காரணம் இருக்கும் நியாயம் இருக்கும் என்பதும் மற்றவர்கள் செய்தால் துரோகம் காட்டிகொடுப்பு என்பதும் மட்டும் தான் இவர்களுக்கு தெரிந்த நியாயம் .

எமது போராட்டத்தில் நடந்த மிக கேவலமான நிகழ்வு என்னவென்றால் மாற்று இயக்கங்கள் தடை செய்யப்பட்டபின்பும் தலைமைகள் அழிக்கபட்ட போன்பும் போராட போன மாற்று இயக்க போராளிகளை வேட்டை நாய்கள் போல தேடித்தேடி கொலை செய்ததுதான் .

எமது பிள்ளைகளையே இப்படி கொல்லுகின்றார்கள் என்று தெரிந்தும் நாட்டில் இருந்த மக்கள் வாய் திறக்க பயத்தில் மௌனமாக இருந்தார்கள் ஆனால் புலம் பெயர்ந்து புலிகளை வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகளோ அதையும் வெடி கொழுத்திகொண்டாடினார்கள்.

இது நடந்தது ஒன்று இரண்டு வருடங்களல்ல முள்ளிவாய்க்கால் அழிவுமட்டும் அது தொடர்ந்தது .பிரபாகரன் என்ற தனிமனிதனால் ஆரம்பிக்கபட்ட இந்த களையெடுப்பு என்ற இந்த கேவலம் அவரின் இறப்புடன் தான் நின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

நாடில்லாததுகளை பரதேசி என்பார்கள் தமிழில். தமிழன் நாடில்லாமல் போக உரிமையில்லாமல் போக.. இந்தக் காட்டிக்கொடுப்புக்கள் தான் முக்கிய காரணம். ஆனால் இதே காட்டிக்கொடுப்புக்கள் தான் காக்கவன்னியனில் இருந்து எட்டப்பன் வரை எதிரியிடம் சுகம் பெற்று வாழவும் வழிவகுத்தது. அதே வழியில் எம்மவர்கள் காட்டிக்கொடுத்துத்தான் இன்று உலகம் பூராவும் அசைல சுகத்தையும்.. சிங்கள எதிரியிடம் ஒட்டுக்குழு சுகத்தையும் அனுபவிக்கிறார்கள். புலிகள் யார்.. மாவீரர்களானவர்களை தவிர.. இன்னும் சில ஆயிரம்.. இலட்சிய வீரர்களைத் தவிர.. மற்றையவர்கள்.. இதே தமிழ் பரதேசிகளின் வாரிசுகள் தானே. ஒட்டுக்குழுக்கள் யார் இதே பரதேசிகள் தான். தேனியில் படிப்பதை இங்கு எழுதுவதும் அதே வர்க்கம் தான். உண்மையை விளம்பினால் இதுதான் உண்மை. tw_blush:

சிலர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது என்று திரும்பி திரும்பி பொய்யை எழுதினால்.. அது உண்மையாகிடும் என்று சிறுபிள்ளை தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். உலகம் வரலாறு அறியும். கிளம்புங்க அண்ணங்களா. சில புலிகள் காட்டிக்கொடுத்தால் என்ன நீங்கள் ஒட்டுக்குழுக்கள் ஒட்டுமொத்தமா காட்டிக்கொடுத்தால் என்ன எல்லோரும் அடிப்படையில் தேசத்துரோகிகள் தான் அதில் மாற்றமில்லை. எல்லா போராட்ட வரலாற்றிலும் இந்தக் காட்டிக்கொடுப்புக்கள் உள்ளன. ஆனால் எங்களிடத்தில் அதுவே எமக்கு அழிவானது சோகத்திலும் சோகம். இன்று அதையும் நியாயிக்க சில காட்டிக்கொடுப்பாளர்கள் கங்கணம் கட்டி நிற்பது அதைவிடச் சோகம்.. கேவலம். tw_angry:

Edited by nedukkalapoovan

முதல் காட்டிகொடுப்பு குட்டிமணி ,

அதை யார் செய்தார் என்று எல்லோருக்கும் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

முதல் காட்டிக்கொடுப்பு பொன் சிவக்குமார். அவரை போட்டுக்கொடுத்ததை வரலாறு அறியும். tw_angry:

1 minute ago, nedukkalapoovan said:

முதல் காட்டிக்கொடுப்பு பொன் சிவக்குமார். அவரை போட்டுக்கொடுத்ததை வரலாறு அறியும். tw_angry:

பொன் சிவகுமாரை காட்டிக்கொடுத்தவர்கள் பொதுமக்கள் அவர்களுக்கு அந்த நேரம் சிவகுமாரை யாரென்று தெரியாது ,அதற்கு பெயர் காட்டிக்கொடுப்பு அல்ல ,

இன்னார் என்று தெரிந்து கட்டிக்கொடுப்பதுதான் காட்டிக்கொடுப்பு .

  • கருத்துக்கள உறவுகள்

பொது மக்களா.. அல்லது அவரோடு பொறாமை அடிப்படையில்.. முரண்பட்ட ஆட்களா காட்டிக்கொடுத்தது. சிவகுமாரன் பற்றி பொதுமக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அவர் தமிழரசுக் கட்சி இளைஞர் பேரவையை சேர்ந்திருந்து தான் அவை வேலைக்காக மாட்டினம் என்று தனித்து போராட ஆரம்பித்தவர். அவருக்கும் தம்பிக்கும் (பிரபா) இருந்த நெருக்கத்தின் அடிப்படையில் நிகழ்ந்த காட்டிக்கொடுப்பு தான் பொன் சிவக்குமாரின் அழிப்பு. :rolleyes:

ஒன்றில் உண்மை வரலாறு தெரியாமல் எழுதுறீங்க அல்லது..  வரலாற்றை மறைக்கனுன்னு முயலுறீங்க. வரலாற்றை மறைச்சு புலிகள் மீது ஒட்டுமொத்த பழிபோடுவது ஒட்டுக்குழுக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதற்கு யாழ் சரியான இடமாகாது. தேனீ.. கீனின்னு ஒட்டுக்குழு நடத்தும் தளங்கள் உள்ளன. tw_blush:

15 minutes ago, nedukkalapoovan said:

நாடில்லாததுகளை பரதேசி என்பார்கள் தமிழில். தமிழன் நாடில்லாமல் போக உரிமையில்லாமல் போக.. இந்தக் காட்டிக்கொடுப்புக்கள் தான் முக்கிய காரணம். ஆனால் இதே காட்டிக்கொடுப்புக்கள் தான் காக்கவன்னியனில் இருந்து எட்டப்பன் வரை எதிரியிடம் சுகம் பெற்று வாழவும் வழிவகுத்தது. அதே வழியில் எம்மவர்கள் காட்டிக்கொடுத்துத்தான் இன்று உலகம் பூராவும் அசைல சுகத்தையும்.. சிங்கள எதிரியிடம் ஒட்டுக்குழு சுகத்தையும் அனுபவிக்கிறார்கள். புலிகள் யார்.. மாவீரர்களானவர்களை தவிர.. இன்னும் சில ஆயிரம்.. இலட்சிய வீரர்களைத் தவிர.. மற்றையவர்கள்.. இதே தமிழ் பரதேசிகளின் வாரிசுகள் தானே. ஒட்டுக்குழுக்கள் யார் இதே பரதேசிகள் தான். தேனியில் படிப்பதை இங்கு எழுதுவதும் அதே வர்க்கம் தான். உண்மையை விளம்பினால் இதுதான் உண்மை. tw_blush:

சிலர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது என்று திரும்பி திரும்பி பொய்யை எழுதினால்.. அது உண்மையாகிடும் என்று சிறுபிள்ளை தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். உலகம் வரலாறு அறியும். கிளம்புங்க அண்ணங்களா. சில புலிகள் காட்டிக்கொடுத்தால் என்ன நீங்கள் ஒட்டுக்குழுக்கள் ஒட்டுமொத்தமா காட்டிக்கொடுத்தால் என்ன எல்லோரும் அடிப்படையில் தேசத்துரோகிகள் தான் அதில் மாற்றமில்லை. எல்லா போராட்ட வரலாற்றிலும் இந்தக் காட்டிக்கொடுப்புக்கள் உள்ளன. ஆனால் எங்களிடத்தில் அதுவே எமக்கு அழிவானது சோகத்திலும் சோகம். இன்று அதையும் நியாயிக்க சில காட்டிக்கொடுப்பாளர்கள் கங்கணம் கட்டி நிற்பது அதைவிடச் சோகம்.. கேவலம். tw_angry:

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த போலிகள் இப்போதும் அதே பல்லவியுடன் தான் திரிகின்றார்கள் ஆனால் கேட்கத்தான் ஆட்களில்லை .

நாட்டில் மக்கள் வலு தெளிவு புலம் பெயந்த நாடுகளிலும் தாம் விட்ட பிழைகளை பலர் இப்போ ஒப்புக்கொள்கின்றார்கள் புலிகளை வைத்து இன்றும் வியாபாரம் செய்யும் அந்த நாலு பேர்கள் அதை தொடரத்தான் செய்வார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சிலருக்கு.. கேட்கப் பொறுமையில்லை என்று சொல்லலாமே தவிர.. பெரும்பாலான மக்களுக்கு தெரியும்.. ஒட்டுக்குழு என்றால் என்ன.. காட்டிக்கொடுப்பு என்றால் என்ன.. என்று. புலிகள் (ஒரு சில விதிவிலக்குகளை தவிர) என்றால் தியாகம் ஒட்டுக்குழுக்கள் என்றால் காட்டிக்கொடுப்பு.. ஊரில் எந்தக் குழந்தையும் சொல்லும்.

புலம்பெயர் மக்கள் ஒன்றும் ஆகாயத்தால வரேல்ல. அதே ஊரில் இருந்து தான் வந்திருக்கினம். மேலும் ஊரில் சில விடயங்களை மக்கள் வெளிப்படையாகப் பேச முடியாத நிலை. பேசினால்.. ஒட்டுக்குழு முகாமில் தான் சாப்பாடு.. அடி உதை.. பாலியல்வன்புணர்வு. சிங்கள இராணுவ சித்திரவதைக் கூடங்களை விடக் கொடுமையானவை ஒட்டுக்குழு சித்திரவதைகள். சாட்சியங்களே பல சொல்கின்றன. மனித உரிமை அமைப்புக்களே சொல்கின்றன.

மக்கள் தெளிவாத்தான் இருக்கினம். ஒட்டுக்குழுக்கள் தான் இன்னும் தெளியல்ல. ஒட்டுக்குழுக்கள் இன்னும் தாங்கள் செய்த தேசத்துரோகங்களை நியாயம் என்று தான் கற்பிக்கப்பார்க்கினம். அது அவ்வளவு இலகுவாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுற அளவுக்கு மக்கள் முட்டாள்களும் அல்ல. மறதி கூடியவர்களும் அல்ல... அண்ணன்களா. tw_blush:

Edited by nedukkalapoovan

8 minutes ago, nedukkalapoovan said:

பொது மக்களா.. அல்லது அவரோடு பொறாமை அடிப்படையில்.. முரண்பட்ட ஆட்களா காட்டிக்கொடுத்தது. சிவகுமாரன் பற்றி பொதுமக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அவர் தமிழரசுக் கட்சி இளைஞர் பேரவையை சேர்ந்திருந்து தான் அவை வேலைக்காக மாட்டினம் என்று தனித்து போராட ஆரம்பித்தவர். அவருக்கும் தம்பிக்கும் (பிரபா) இருந்த நெருக்கத்தின் அடிப்படையில் நிகழ்ந்த காட்டிக்கொடுப்பு தான் பொன் சிவக்குமாரின் அழிப்பு. :rolleyes:

ஒன்றில் உண்மை வரலாறு தெரியாமல் எழுதுறீங்க அல்லது..  வரலாற்றை மறைக்கனுன்னு முயலுறீங்க. வரலாற்றை மறைச்சு புலிகள் மீது ஒட்டுமொத்த பழிபோடுவது ஒட்டுக்குழுக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதற்கு யாழ் சரியான இடமாகாது. தேனீ.. கீனின்னு ஒட்டுக்குழு நடத்தும் தளங்கள் உள்ளன. tw_blush:

ஆளை விடுங்க சாமி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.