Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயமானது தமிழ் மக்கள் பேரவை

Featured Replies

இந்த திரியில் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி கிடைத்தது.... கனவா இல்லை நனவா என்று இன்னும் தெரியவில்லை tw_blush:

கூட்டமைப்புக்குள்ளாக தமிழரசு கட்ச்சியையும் இணைத்து நடந்து இருக்க வேண்டிய ஒரு விடயம் அவர்களை தாண்டி போய் நடக்க வேண்டிய சூளல்... 

அனைத்து தரப்பினரையும் அணைத்து போக முடியாத தமிழரசு கட்ச்சியின் அரசியல் தோல்வியே இந்த பேரவையின் உதயம்... இது சிங்கள ஆட்சியாளர்களுக்கு இது நற்செய்தியாக அமையாமல் போக தமிழர் அனைத்து தரப்புக்கும் பொறுப்பு இருக்கிறது... 

Edited by காத்து
எழுத்து பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

இந்த திரியில் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி கிடைத்தது.... கனவா இல்லை நனவா என்று இன்னும் தெரியவில்லை tw_blush:

 நல்ல காலம் பிறக்கிறதுக்கு   அறிகுறி  தென்படுகுது, வாழ்த்தி வரவேற்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

--------------------------------------------------------------------------------------------------------------

ரெலோ காரரும் விரைவில் இவர்களுடன் இணையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2015 at 8:52 AM, nochchi said:

ஏன் இப்படி? எதற்காக இந்தக் காள்ப்புணர்வு மனோபாவம்? புலிகளின் ஏகபிரதிநிதித்துவம் பிழை. கூட்டமைப்பின் ஏகபிரதிநிதித்துவம் சரி? ஏனிந்தப் பிறழ்வுநிலை மனோபாவம் கொண்டு சிந்திக்கத் தலைப்படுகின்றமை சரியா? அழிவுகளைச் சந்தித்து அவலங்களோடு வாழ்பவர்களாகவும், அந்த அவலத்தை எதிர்கொண்டவாறு தமது நிலங்களுக்காகவும், காணாமற்போகச் செய்யப்பட்டோர், சிறைகளிலுள்ளோர் எனத் தம்மை அர்பணித்து, இழந்து இன்றும் போராடும் மக்களை ஏன் மனங்கொள்ளத் தவறுகின்றோம். சரி. புலிகள் தவறு செய்துவிட்டார்கள். இன்று புலிகள்தான் இல்லையே; பிறகேன் புலிவாந்தி. புலிவாந்தி எடுப்பதை விடுத்து சொந்த அரசியலை நகர்த்துவதானே! இதனையேதான் தென்னிலங்கைச் சிங்கள பேரினவாத சக்திகளும் செய்கின்றன. புலிப்பூஞ்சாண்டி காட்டி சிங்களவரிடையே இனவாதத்தைத் தூண்ட முற்படுகின்றன. இதனைச் சாட்டாக வைத்து ஆட்சியாளர்கள் தமிழரை மிதிக்கின்றனர். 

புலிகளை அகற்றிவிட்டால் சிங்களம் தீர்வை வைக்கும் என்று உலகப்பெருமரசுமுதல் கிந்திய அரசுவரை குத்தி முறிந்தன. ஆனால், ஆறு ஆண்டுகள் கடந்துள்ளது. என்ன செய்துவிட்டார்கள். சிங்களம் கூறியது தீர்வுக்குப்  புலிகளே தடையென்று அது இன்று நிதர்சனமான உண்மை. தீர்வுக்கு அல்ல தமிழரைத் தீவிலிருந்து தீர்த்துக்கட்டிவிடத் தடையாக இருந்தார்கள் என்பதை காணமுடிகிறது.   இன்று வடக்கிலே 2009இற்குப்பின் 18க்கு மேற்பட்ட விகாரைகள் கட்டல், 34 தமிழ்க்குடும்பங்களின் நிலத்தோடு, 2000 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு அத்துமீறிய குடியேற்றம் எனத் தமிழரை இலங்கைத்தீவிலிருந்து அகற்றும்முயற்சிகள்தான் தீவிரமடைந்துள்ளன………………..! 
சிங்களம் எதையும் அனைத்துலக அழுத்தமும் தமிழரின் ஒன்றிணைந்த இறுக்கமான செயற்பாடுகளின்றித் தமிழருக்குச் செய்யாது என்பதற்கானதொரு சான்றாக அரசியல்கைதிகளின் விடயமே போதுமானது. மு.வி.மு பொதுமன்னிப்பு வழங்க முடியும் சிங்கள இயையோரென்பதால். தமிழருக்கு வழங்கமுடியாது அது தமிழரென்பதால். இந்த லட்சணத்தில் ஒருதாயமக்கள் நாம் சிறீலங்கர்கள் …… என்ற வாய்ப்பட்டு வேறு. எனவே இவற்றைத் தட்டிக் கேட்கவும் பொதுவெளியில் காத்திரமான அரசியலையும் தமிழத்தின் வாழ்வாதார சுய அபிவிருத்தி நிதிவள ஒருங்கிணைப்பு என்னபவற்றைக் காத்திரமாகக் கையாளவும் குரல்கொடுக்கவும் நேர்மையோடும் பற்றுறிதியாடும் முன்வரும் எவரையும் தமிழினம் வரவேற்கும். 
இதனை களத்தில் தலைமைதாங்குவோர் உரிய செயற்பாட்டின் வழிநின்று முறியடித்து நிமிர்ந்தால் தமிழர் அவர்களோடு பயணிப்பர். இதற்குப் புலத்திலே இருந்து நாம் புலி வாந்தி கூத்தமைப்பு வாந்தி யென்றெடுக்காது சரியான திசையில் செல்ல முனைவோரை திசைவழி நகர வழிவிடுதலே தேவையாகும்.
 
Nochchi  இதையேதான் நானும் நினைத்தேன். தற்போதைய சூழலில் சிங்கள அரசிடமும், இந்தியாவிடமும் விலை போகாது தமிழ் மக்களின் இன்றைய தேவைகளை உணர்ந்து இதய சுத்தியுடன் அவர்களுக்கு உதவக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதே எமது கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2015 at 4:45 AM, arjun said:

கூட்டமைப்பிற்கு இன்னும் ஒரு வருடம் கொடுத்துபார்த்திருக்கலாம் .

ஆனால் கூட்டமைப்பு சில தவறுகளை விட்டே வந்துள்ளது 

கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதியாதது ,அதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் தமிழரசு  கட்சியே அதை தவிர்த்து வந்தது .மற்றைய கட்சிகளின் நிலைமை வெளியே போனால் ஒரு சீட்டும் வெல்ல முடியாது கூட்டமைப்பில் இருந்தால் ஒன்றோ இரண்டோ ஆசனங்கள் கிடைக்கும் இதானால் மற்றைய கட்சிகளுக்கு விட்டுவிட்டு போகமுடியாத நிலை ,இதை கூட்டமைப்பு நன்கு புரிந்து வைத்திருந்தது அதானால் அவர்களை வைத்து தனது விருப்பத்திற்கு ஆட்டிப்படைத்தது .

சிங்கள அரசுடன் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் வேலை செட்கின்றோம் .இந்தியா சொல்லுது அமேரிக்கா அழைக்குது என்றால் அது என்ன?  அவர்கள் என்ன சொல்லுகின்றார்கள் என்றால் அது சிதம்பர ரகசியம் இப்ப சொல்ல முடியாது என்கின்றார்கள் .

நல்லது நடக்கும் பொறுப்பும் என்றால் பிறகு தாங்களே அறிக்கை விடுகின்றார்கள் விடுதலை கைதிகள் விடயத்தில் ஏமாந்துவிட்டோம் என்று .ஏமாற போகின்றீர்கள் என்று சொன்னவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் இந்த அரசை நாங்கள் நம்புகின்றோம் என்று அப்படியானால் ஏமாந்துபோனோம் என்ற பதிலே வரக்கூடாது .

உண்மையில் உங்களால் ஒரு துரும்பும் அசைக்கமுடியாது என்று தோன்றினால் அதை வெளிப்படையாக சொல்லவேண்டும் பாராளுமன்ற கதிரைக்காக இருக்கு மட்டும் இழுத்துகொண்டு போவம் என்று அப்பாவி மக்களையும் ,சிறை கைதிகளையும் ,பிள்ளைகளை தேடி அலையும் தாய்மாரையும் ஏமாற்றுவம் என்று ஒரு சிறு எண்ணம் உங்கள் மனதில் இருந்தாலே உங்களை அடித்து துரத்துவதில் எந்த பிழையும் இல்லை .கூட்டமைப்பில் பல எம் பி மார்களின் நிலை அதுதான் ஆனால் அவர்களை பலர் எக்காலமும் நம்பவில்லை ஆனால் சம்பந்தரிலும் புதிதாக எதையோ புத்திசாலித்தனமாக தமிழர்களுக்கு செய்வார் என்று சுமந்திரனையும் இன்றும் பலர் நம்புகின்றார்கள் .

இன்னும் ஒரு வருடம் மைத்திரி ரணில் அரசை நம்பும் சம்-சும் இற்கு கொடுத்து பார்க்கலாம் ,அதன் பின்னும் ஒரு இஞ்சி நிலத்தை விடிவிக்கவும்  ஒரு கைதியை வெளியில் விட  இவர்கள் அரசை கெஞ்சிக்கொண்டும் இருக்கும்  நிலை என்றால் இவர்களை அகற்றுவதை தவிர வேறுவழி இல்லை .

நன்றி அர்யூன் அண்ணா....

ஆனால் ஒரு விடயம் மனதைக்குடையுது...

இது தான் உங்கள் நிலைப்பாடா?

அப்படியென்றால் இவ்வளவு நாளும்  எழுதியது???

உங்கள் நேரங்களை

எங்கள் நேரங்களை வீணாக்கியது  ......???

விசுவருக்கு -இவ்வளவு நாட்கள் எழுதியது மட்டும் அல்ல இதையும் நீங்கள் ஒழுங்காக வாசிக்கவில்லை என்று மட்டும் விளங்குது 

நொச்சி - "ஏன் இப்படி? எதற்காக இந்தக் காள்ப்புணர்வு மனோபாவம்? புலிகளின் ஏகபிரதிநிதித்துவம் பிழை. கூட்டமைப்பின் ஏகபிரதிநிதித்துவம் சரி? ஏனிந்தப் பிறழ்வுநிலை மனோபாவம் கொண்டு சிந்திக்கத் தலைப்படுகின்றமை சரியா?  '"

இப்படி சிந்திக்கின்ற ஆட்களும் உலகத்தில் இருக்கினம் தானே ? நல்ல சுவராய் தேடுகின்றேன் .

Edited by arjun
சிறு திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, arjun said:

விசுவருக்கு -இவ்வளவு நாட்கள் எழுதியது மட்டும் அல்ல இதையும் நீங்கள் ஒழுங்காக வாசிக்கவில்லை என்று மட்டும் விளங்குது 

நொச்சி - "ஏன் இப்படி? எதற்காக இந்தக் காள்ப்புணர்வு மனோபாவம்? புலிகளின் ஏகபிரதிநிதித்துவம் பிழை. கூட்டமைப்பின் ஏகபிரதிநிதித்துவம் சரி? ஏனிந்தப் பிறழ்வுநிலை மனோபாவம் கொண்டு சிந்திக்கத் தலைப்படுகின்றமை சரியா?  '"

இப்படி சிந்திக்கின்ற ஆட்களும் உலகத்தில் இருக்கினம் தானே ? நல்ல சுவராய் தேடுகின்றேன் .

1- சிங்கள அரசுடன் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் வேலை கேட்கின்றோம் .இந்தியா சொல்லுது அமேரிக்கா அழைக்குது என்றால் அது என்ன?  அவர்கள் என்ன சொல்லுகின்றார்கள் என்றால் அது சிதம்பர ரகசியம் இப்ப சொல்ல முடியாது என்கின்றார்கள் .

நல்லது நடக்கும் பொறுப்பும் என்றால் பிறகு தாங்களே அறிக்கை விடுகின்றார்கள் விடுதலை கைதிகள் விடயத்தில் ஏமாந்துவிட்டோம் என்று .ஏமாற போகின்றீர்கள் என்று சொன்னவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் இந்த அரசை நாங்கள் நம்புகின்றோம் என்று அப்படியானால் ஏமாந்துபோனோம் என்ற பதிலே வரக்கூடாது .

உண்மையில் உங்களால் ஒரு துரும்பும் அசைக்கமுடியாது என்று தோன்றினால் அதை வெளிப்படையாக சொல்லவேண்டும் பாராளுமன்ற கதிரைக்காக இருக்கு மட்டும் இழுத்துகொண்டு போவம் என்று அப்பாவி மக்களையும் ,சிறை கைதிகளையும் ,பிள்ளைகளை தேடி அலையும் தாய்மாரையும் ஏமாற்றுவம் என்று ஒரு சிறு எண்ணம் உங்கள் மனதில் இருந்தாலே உங்களை அடித்து துரத்துவதில் எந்த பிழையும் இல்லை .கூட்டமைப்பில் பல எம் பி மார்களின் நிலை அதுதான் ஆனால் அவர்களை பலர் எக்காலமும் நம்பவில்லை ஆனால் சம்பந்தரிலும் புதிதாக எதையோ புத்திசாலித்தனமாக தமிழர்களுக்கு செய்வார் என்று சுமந்திரனையும் இன்றும் பலர் நம்புகின்றார்கள் .

இதை நாங்கள்  சொன்னபோது நீங்கள் எழுதியது

சம்பந்தரும் சமந்திரனும் அந்தமாதிரி காய் நகர்த்துகிறார்கள்

நீங்க புலம் பெயர் தேசத்தில் பொத்திக்கொண்டிருங்கள்

தாயகமக்களுக்கு அவர்களது தலைவர்களுக்கு அவை தெரியும் என.

தற்பொழுது நீங்க....???

2- இன்னும் ஒரு வருடம் மைத்திரி ரணில் அரசை நம்பும் சம்-சும் இற்கு கொடுத்து பார்க்கலாம் ,அதன் பின்னும் ஒரு இஞ்சி நிலத்தை விடிவிக்கவும்  ஒரு கைதியை வெளியில் விட  இவர்கள் அரசை கெஞ்சிக்கொண்டும் இருக்கும்  நிலை என்றால் இவர்களை அகற்றுவதை தவிர வேறுவழி இல்லை .

இதைத்தான் தேர்தல் முடிந்த அன்றே 31-12-2016 வரை பொறுமை என நான் எழுதினேன்.

அதற்கு நீங்கள் எழுதிய பதில்களை மீண்டும் ஒருமுறை நேரமிருந்தால் பாருங்கள்...

விமர்சனம் இல்லாமல் எவருமில்லை .

மைத்திரியின் புதிய அரசு வந்தபின் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் ,கூட்டமைப்பின் அரசியல் இவை இரண்டையும் எமக்கான தீர்வு ஒன்று கிடைப்பதற்கான அறிகுறிகள் என்றே இன்றும் நான் பார்க்கின்றேன் .

அதற்காக கூட்டமைப்பு செய்வது எல்லாம் சரி அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஆகிவிடாது.கூட்டமைப்பு ஒரு அரசியற்கட்சியாக பதிவு செய்யாததது பற்றி பலரும் தொடர்ந்து விமர்சித்தே வருகின்றார்கள் .அதே போல சம் சும் தன்னிச்சையான சில செயற்பாடுகளும்  பலரை முகம் சுழிக்க வைப்பது உண்மை அதற்காக கூட்டமிப்பை உடைக்கவோ அல்லது அவர்கள் செயற்பாடுகளை முடக்குவதோ புத்திசாலித்தனமாகாது.

என்னை பொறுத்தவரை இன்று இருப்பவர்களில் சுமந்திரன் தான் மிக யதார்த்தமான அரசியல்வாதி வெறும் தேசிய கோசம் போட்டு மக்களை ஏமாற்றுப்பேர்வழியாக தெரியவில்லை .ஆனால் உண்மையை பேசுகிறேன் என்று அதிபிரசங்கிதனமாக பேசி வாங்கியும் கட்டுகின்றார் .

மீண்டும் சொல்லுகின்றேன் கூட்டமமைப்பிற்கு இன்னும் சிறிது காலம் கொடுத்துப்பார்க்காமல்  விக்கியர் பிறர் சொல் கேட்டு அவரப்படுகின்றார் போலவே எனக்கு படுகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, arjun said:

நன்றியண்ணா

இது போன்று தாயகம் சார்ந்த விடயங்களிலாவது நாம் தேவையான

ஒருத்தருக்கொருத்தர் மற்றும்  வாசிப்பவர்களுக்கு பிரயோசனப்படக்கூடிய 

கலந்துரையாடல்களை செய்யணும் என எதிர்பார்க்கின்றேன்

தொடருங்கள்

Edited by விசுகு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான முறையில் செயல்படவில்லை, அதனால் அதற்கு மாற்றீடாக ஒரு கட்சியை ஆரம்பிக்கப்போவதாகவும் அதன் அங்குரார்பண நிகழ்வுக்கு வாருங்கள் என வலம்புரி ஆசிரியர் அழைத்தார். அதனால் வந்தேன் என நல்லைஆதீன முதல்வர் தெரிவித்திருக்கிறார்.  இவ்வாறு அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லியே அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெரிகிறது.

இவர்களுக்கு அழைப்பு விடுத்தது முதல் அறிக்கை தயாரித்தது, இணையத்தளத்தை பதிவு செய்தது, ஊடகங்களுக்கு அறிக்கையை அனுப்பியது வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் வலம்புரி ஆசிரியர்விஜயசுந்தரம்  ஆகும்.

வலம்புரி பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியர் வரதசுந்தரம் பற்றிய பின்னணிகள் அறிந்து கொண்டால் இந்த அமைப்பு அல்லது அரசியல் கட்சியின் நோக்கம் பற்றி விளங்கி கொள்ள முடியும்.

வலம்புரி பத்திரிகை 1999.12.20ஆம் திகதி அன்று வெளிவர ஆரம்பித்தது. இன்று 16ஆவது ஆண்டு நிறைவு பெறுகிறது. தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய கட்சி தொடங்கப்பட்ட செய்தி இன்றைய தினம் தங்கள் பத்திரிகையில் மட்டும் வெளிவர வேண்டும் என்பதற்காக அங்குரார்ப்பண கூட்ட படங்களும் அறிக்கையும் ஏனைய பத்திரிகைகளுக்கும் இணையத்தளங்களுக்கும் அதிகாலை 2மணிக்கு பின்னரே வலம்புரி ஆசிரியரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனால் வலம்புரி பத்திரிகையில் மட்டும் தலைப்பு செய்தியாக வெளிவந்திருக்கிறது. ஏனைய பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிடவில்லை. பொதுநலன் கொண்டு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அறிக்கையையும் படங்களையும் உரிய காலத்தில் அனுப்பியிருக்க முடியும்.

வலம்புரி பத்திரிகையின் ஆசிரியரான விஜயசுந்தரம்  யாழ் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். இந்த சங்கம் அக்காலத்தில் ஈ.பி.டி.பியின் கைபொம்மையாக செயல்பட்டு வந்தது. ஈ.பி.டி.பி அலுவலகத்தையே தமது சங்க தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தது

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, bismar said:

நன்றி  உங்களது கருத்துக்கு..

கூட்டமைப்பை உடைப்பது

அல்லது பலவீனப்படுத்துவது தமிழரின் பலத்தை உடைப்பது

பலவீனப்படுத்துவதாகும்.

அதேநேரம்  கூட்டமைப்பின் தற்போதைய போக்கும் சில சந்தேகங்களை

ஒரு சிலரின் கையெழுத்தில் எதுவும் நடக்கலாம் என்ற ஆபத்தில் இருப்பது பற்றி தமிழர்கள் அக்கறை கொள்வோமாயின்

 கூட்டமைப்பை ஒரு நற்பாதையில் செப்பனிட தாயகத்தில் ஒன்று கூடுகிறார்கள் என்பதிலும் பார்க்க

புதிதாக வருபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

அவர்களின் உண்மையான அக்கறையென்ன?

அவர்களது கடந்தகால செயற்பாடுகள் என்ன என்பது பற்றி நிச்சயமாக தெரிந்தவர்கள் வெளிக்கொண்டுவரவேண்டும்.

அது கூட்டமைப்பின் மேல் நாம் கொண்டிருக்கும் கவனத்தைதைவிட  பலமடங்கு அதிகமாக இருக்கணும்.

55 minutes ago, arjun said:

விமர்சனம் இல்லாமல் எவருமில்லை .

மைத்திரியின் புதிய அரசு வந்தபின் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் ,கூட்டமைப்பின் அரசியல் இவை இரண்டையும் எமக்கான தீர்வு ஒன்று கிடைப்பதற்கான அறிகுறிகள் என்றே இன்றும் நான் பார்க்கின்றேன் .

அதற்காக கூட்டமைப்பு செய்வது எல்லாம் சரி அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஆகிவிடாது.கூட்டமைப்பு ஒரு அரசியற்கட்சியாக பதிவு செய்யாததது பற்றி பலரும் தொடர்ந்து விமர்சித்தே வருகின்றார்கள் .அதே போல சம் சும் தன்னிச்சையான சில செயற்பாடுகளும்  பலரை முகம் சுழிக்க வைப்பது உண்மை அதற்காக கூட்டமிப்பை உடைக்கவோ அல்லது அவர்கள் செயற்பாடுகளை முடக்குவதோ புத்திசாலித்தனமாகாது.

என்னை பொறுத்தவரை இன்று இருப்பவர்களில் சுமந்திரன் தான் மிக யதார்த்தமான அரசியல்வாதி வெறும் தேசிய கோசம் போட்டு மக்களை ஏமாற்றுப்பேர்வழியாக தெரியவில்லை .ஆனால் உண்மையை பேசுகிறேன் என்று அதிபிரசங்கிதனமாக பேசி வாங்கியும் கட்டுகின்றார் .

மீண்டும் சொல்லுகின்றேன் கூட்டமமைப்பிற்கு இன்னும் சிறிது காலம் கொடுத்துப்பார்க்காமல்  விக்கியர் பிறர் சொல் கேட்டு அவரப்படுகின்றார் போலவே எனக்கு படுகின்றது 

2 minutes ago, விசுகு said:

நன்றி  உங்களது கருத்துக்கு..

கூட்டமைப்பை உடைப்பது

அல்லது பலவீனப்படுத்துவது தமிழரின் பலத்தை உடைப்பது

பலவீனப்படுத்துவதாகும்.

அதேநேரம்  கூட்டமைப்பின் தற்போதைய போக்கும் சில சந்தேகங்களை

ஒரு சிலரின் கையெழுத்தில் எதுவும் நடக்கலாம் என்ற ஆபத்தில் இருப்பது பற்றி தமிழர்கள் அக்கறை கொள்வோமாயின்

 கூட்டமைப்பை ஒரு நற்பாதையில் செப்பனிட தாயகத்தில் ஒன்று கூடுகிறார்கள் என்பதிலும் பார்க்க

புதிதாக வருபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

அவர்களின் உண்மையான அக்கறையென்ன?

அவர்களது கடந்தகால செயற்பாடுகள் என்ன என்பது பற்றி நிச்சயமாக தெரிந்தவர்கள் வெளிக்கொண்டுவரவேண்டும்.

அது கூட்டமைப்பின் மேல் நாம் கொண்டிருக்கும் கவனத்தைதைவிட  பலமடங்கு அதிகமாக இருக்கணும்.

அழகற்ற அமைதியான உண்மைகள். வெளிப்படுத்திய கள உறவுகளிற்கு நன்றிகள் மட்டுமே. பச்சை இனி என்னிடம் இல்லையாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.