Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் யாழ் பயணமும் வாக்குறுதிகளும்

Featured Replies

மைத்திரியின் யாழ் பயணமும் வாக்குறுதிகளும்

தேசியபாதுகாப்பு‬ அச்சுறுத்தல் என கூறுபவர்கள் . வடக்கிற்கு வந்து மக்களை சந்திக்கலாம் ‪ஜனாதிபதி:-

மைத்திரியின் யாழ் பயணமும்  வாக்குறுதிகளும்:-


அரச நத்தார் கொண்டாட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (20) பிற்பகல் யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில்.
அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையை புத்திஜீவிகள் புரிந்து கொண்டுள்ளனர். மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். புரிந்துகொள்ள முடியா சில அடிப்படைவாதிகள் கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி எதுவேணுமென்றாலும் விமர்சனங்களை முன்வைக்கலாம் பாராளுமன்றம் மாகாணசபைகளில் எங்கும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியும்.


சுதந்திரத்தை தேசிய நல்லிணக்கத்துக்காக பயன்படுத்த வேண்டும் ஆனால் அடிப்படை வாதிகள் சிலர் இந்த அரசாங்கம் பதவி ஏற்றதும் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகின்றனர் ஆனால் எமது ஆட்சியில் நாட்டில் தேசிய பாதுகாப்பு வலுவடைந்துள்ளது.


மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கமாட்டோம் புலிகள் மீண்டும் புத்துயிர் பெற எமது அரசாங்கம் இடமளிப்பதாக கூறுபவர்களுக்கு நான் அழைப்பொன்றை விடுக்கின்றேன்


குறிப்பாக வடக்கிற்கு வந்து மக்களை சந்திக்கவும் அவர்கள் கொழும்பில் இருந்து வடக்கிற்கு வர என்னால் வாகனம் வழங்க முடியும் கடல் மூலம் வருவதாயின் கப்பலொன்றை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் விமானம் வேண்டுமென்றால் அதையும் ஏற்பாடு செய்துகொடுக்க முடியும்.
25 வருடங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களை சந்தித்துள்ளேன் அவர்களுக்கு தெரியாமலேயே அங்கு சென்றேன். தேசிய பாதுகாப்புக்கு தொடர்பான பிரச்சனை 25 வருடமாக இடம்பெயர்ந்துள்ள தங்களை மீளக்குடியமர்த்துமாறு கூறினர்.


இவர்களுக்கு 6 மாதத்துக்குள் பிரச்சினை தீர்க்கப்படும் அதற்கு செயலணி ஒன்றை உருவாக்கவுள்ளோம். தேசிய பாதுகாப்பை காட்டி ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இப்படி சதிகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நானும் பிரதமரும் இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127079/language/ta-IN/article.aspx

dmxpfq.jpg

wtvdpd.jpg

sv516a.jpg

238xzd.jpg

b5s4mq.jpg

இன்றைய உதயன் பதிப்பில் 800 ஏக்கர் காணிகள் இவ்வருட இறுதிக்குள் விடப்படும் என்றிருந்தது. 5 கிராம சேவகர் பகுதிகள் இரண்டு காங்கேசன்துறையில் (நகரப்பகுதி இல்லை), 3 பலாலியில்.  இதற்கு மூலம் கேட்பார்கள் என்பதால் இணைக்கவில்லை. நாளை ஈ-பேப்பர் வரும் இணைத்து விடுகிறேன். சிங்கன் ரொம்ப சிம்பிள்தான். இந்தாள் ஏதாவது பண்ணும்.

  • கருத்துக்கள உறவுகள்

1933836_10153263187647944_63503664072213

சிறீலங்காவில் போர் ஓய்ந்து விட்டது. புலிகள் அழிந்து விட்டார்கள். தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ விரும்புகிறார்கள். நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது. நல்லாட்சி மலர்ந்து விட்டது. ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறது. இவ்வளவும் நடந்திருக்க... ஏன் இந்த சந்தேகங்கப் பார்வை தமிழ் மக்கள் மத்தியில் வர சிங்களவர்களுக்கு..??! நிச்சயமாக சிங்களவர்களால் எப்போதும் தமிழர்களோடு நல்லிணக்கமாக வாழ முடியாது. அந்த வகையில் தமிழ் மக்கள் பிரிந்து போய் நிம்மதியாக வாழ வழி சமைக்க வேண்டும் சர்வதேசம். ( சிவப்பு வலயம் - சிங்களப் படை. மஞ்சள் வலயம் - சிங்களப் புலனாய்வுப்படை, ஒரேஞ் வலயம் - சிங்கள சிவில் படை - அரசியல்வாதிங்கள் உட்பட)

இது மட்டுமில்லை முதலாவது படத்திலுள்ள குடும்பத்தை சந்தித்தபோது அவர்கள் உணவிற்கே கஸ்டப்படுகிறோம் என்றார்கள். மதிய நேரம்தானே மனுசன் நேர குசினிக்குள்ள புகுந்து என்ன சமைத்திருக்கிறார்கள் என்று பார்த்தது. சோறும் ஒரு கறியும்தான் இருந்தது. இதைச் சொன்னால் எல்லாம் நாடகமென்பர். இவர் இடம் பெயர்ந்தவர்களின் முகாமிற்கு சென்றது ஒரு அதிரடி நடவடிக்கைதான். 6 மாதங்களுக்குள் உங்கள் இடங்கள் உங்களிற்கு கிடைக்குமென்று வாக்குறுதி கொடுத்தார்.

மூலம் - டான் ரிவியின் இன்றைய இரவு செய்திகள் (வீடியோவுடன). 

  • கருத்துக்கள உறவுகள்

David-Cameron.jpg

5096534-3x2-700x467.jpg

article-2507838-196DFA3800000578-555_634

சிங்களம் இதைக் கொப்பி பண்ணிப் பார்க்குது. தமிழர்களை ஏமாற்றலாம் என்று. ஆனால் தமிழ் மக்களை அவ்வளவு இலகுவாக யாரும் ஏமாற்ற முடியாது. tw_blush::rolleyes:

 

கமரூன் இராணுவப் பாதுகாப்பின்றி தமிழ் மக்களிடம் போக முடியுது. சிங்கள சனாதிபதிக்கு முடியல்ல..??! :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மத்தியில் வர சிங்களவர்களுக்கு ஏன் இந்த சந்தேகப் பார்வை எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டின் தலைவர் ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டியது அவசியம். இது எல்லாத் தலைவர்களுக்கும் பொருந்தும். பல நல்லவர்களுக்குள் ஓரிரு விசமிகள் நுழைந்துவிட வாய்ப்புகள் இருக்கின்றன. வன்னியில் புலிகளின் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் கோட்டையாகக் கருதப்பட்ட முல்லைத் தீவில் தலைவர் பிரபாகரன் மக்கள் சந்திப்பில் பகிரங்கமாகச் ஈடுபட்டது போல கதையளக்கத் தலைப்படுகின்றனர். அதன் அடிப்படை தமிழ் மக்கள் மத்தியில் வர தலைவருக்கு சந்தேகம் இருந்தது என எடுத்துக்கொள்ளலாமா? பாதுகாப்பு காரணங்களுக்காக இரகசியமான இடம் ஒன்றில் கடும் சோதனைகளுக்கு மத்தியில் தெரிவுசெய்யப்பட்ட குறிப்பிட்ட சிலரையே தலைவர் பிரபாகரன் சந்தித்து இருக்கின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்

கமரூன் இராணுவப் பாதுகாப்பின்றி தமிழ் மக்களிடம் போக முடியுது. சிங்கள சனாதிபதிக்கு முடியல்ல..??! :rolleyes:tw_angry:

தேசிய தலைவர் மக்களுக்கு அஞ்சியல்ல... துரோகிகளின் செயற்பாட்டிற்கும்.. அவர் மீது காண்டுகொண்டிருந்த நாடுகளின் கண்களுக்கும்.. சிங்கள பேரினவாத அரசின் கண்களில் இருந்தும் தமிழ் மக்களின் தலைமை பாதுக்காக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலின் பேரில் தான்.. அதுவும் போர்க்கால.. போராட்ட காலத்தில் அது அவசியம் என்று பட்டதால். அதே தலைவர் சமாதான காலத்திலும் சுனாமி காலத்திலும்  மக்கள் முன் நேரடியாகத் தோன்றினார். ஆனால்.. இன்று சிங்கள ஆட்சியாளர்களுக்கு அப்பாவி தமிழ் மக்களின் முன் வர என்ன பிரச்சனை..??! இராணுவ மயப்படுத்தலோடு தான் தமிழ் மக்களின் முன் வருமோம் என்றால்.. அங்கே நல்லிணக்கமும் இல்லை நல்லாட்சியும் இல்லை தமிழ் மக்கள் மீது நம்பிக்கையும் இல்லை என்பது தான் அர்த்தம். இந்தத் தளத்தில் இருந்து தமிழ் மக்களின் உணர்வுகளை உரிமைகளை சிங்களம் புரிந்து தீர்க்கும் என்று நம்புவது நகைப்புக்கிடமானது. tw_blush::rolleyes:

போராட்டம் என்ற பெயரில் அடிச்ச காசை வட்டிக்கு விட்டு ஏவறை விட்டுக்கொண்டு இருக்கும் ஏவறைகளை விட்டுக்கொண்டே இருக்கும் நாங்கள் அடுத்த படிக்கு போவதுதான் மிக முக்கியம் 

மெதுவாக என்றாலும் அது நடந்துகொண்டே இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.