Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் அமைப்புடன் அரசியல் தீர்வு குறித்தே பேசினேன், தாக்குதல் நடத்துவது தொடர்பில் அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்புடன் அரசியல் தீர்வு குறித்தே பேசினேன், தாக்குதல் நடத்துவது தொடர்பில் அல்ல

[ Tuesday,5 January 2016, 17:14:38 ]   
sampanthan.jpg

தன்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக பொதுமக்களும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தலைமை பொறுப்பை பொறுத்தவரை தனக்கு யாரும் போட்டியில்லை எனவும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், ஆதரவாளர்களும் விரும்பும் பட்சத்தில் தலைமைப் பதவிலிருந்து விலகத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தான் ஒருபோதும் புலிகள் அமைப்பின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உறவு குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பிரச்சினையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு முக்கிய பங்கினை வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் இருந்த இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றோடு, சர்வதேச சமூகத்தினரும் அரசியல் தீர்வு தொடர்பில் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் புலிகள் அமைப்பு முக்கிய பங்காளி எனவும், அந்த நோக்கத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த அமைப்புடன் பேச்சு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், புலிகள் அமைப்புடன் அரசாங்க கட்சிகள் நடத்திய  பேச்சுவார்த்தைகளுக்கும், கூட்டமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் அரசியல் தீர்வு தொடர்பானதே அன்றி இராணுவ நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டது அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.

தான் அரசியல் தீர்வு குறித்தே வேலுபிள்ளை பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மாறாக எந்த இராணுவ முகாம்மீது தாக்குதல் நடத்துவது என்பது தொடர்பில் அல்லவெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://ibctamil.com/news/index/16432

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் அலட்டல் இல்லாமல் சிறப்பாகப் பதிலளித்திருக்கின்றார்.

மொழிபெயர்ப்பில் சில தவறுகள் இருக்கின்றது என நினைக்கின்றேன்.

Quote

தேசிய பிரச்சினையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு முக்கிய பங்கினை வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது "தேசிய பிரச்சினையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு (அந்தநேரத்தில்) ஒரு முக்கிய பங்கினை வகித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்." என்று வந்திருக்கவேண்டும். இப்பதான் புலிகள் அமைப்பு மௌனமாகிவிட்டதே!

  • கருத்துக்கள உறவுகள்

Q: Earlier the TNA was supportive towards LTTE politics. What was the reason for this?

A: One has to be careful about the choice of words, when talking of these things. I was never supportive of LTTE politics. But the LTTE was an important player in the national question.

Successive governments held talks with the LTTE whether it was the UNP or the SLFP. The international community talked to the LTTE. They all did so because the LTTE was a relevant factor in the evolution of a political solution. The TNA also talked to the LTTE for the same reasons. There was no difference between the TNA talking to the LTTE and the government talking to the LTTE, they all talked of a political solution.

I was never a part of the military apparatus of the LTTE, I still don’t know how to load a gun. I have talked to Prabhakaran, I spoke of a political solution, I did not ask about which camp he was going to attack next!

http://www.dailynews.lk/?q=2016/01/05/features/do-justice-no-divisions

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் அலட்டல் இல்லாமல் சிறப்பாகப் பதிலளித்திருக்கின்றார்.

நிச்சயமாக இல்லை ... அவர் முன்னுக்கு பின் முரணாக தான் பேட்டியில் பதில் சொல்லி இருக்கிறார்.
கேள்வி கேட்டவருக்கு விவரம் பத்தாது என்று நினைக்கிறன்.
தேவை என்றால் சொல்லுங்கள் அக்கு வேறு ஆணிவேராக பிரித்து ஆதாரம் தருகிறேன்.

இது கண்ணை மூடிக்கொண்டு தம்பி வாலி சொன்னது போல ஆங்கில இலக்கண சொற்களின் பிரயோகங்களை மட்டுமே கொண்டு எடுக்கப்படும் சொல்லாடல் அல்ல.

கீழே உள்ள வசனங்கள் புரிகிறதா? பேட்டியில் ஒரு கேள்விக்கு சம்பந்தர் உதிர்த்த வார்த்தைகள்
LTTE was a relevant factor in the evolution of a political solution
Successive governments held talks with the LTTE
The international community talked to the LTTE.
TNA also talked to the LTTE for the same reasons (what reason again?)
they all talked of a political solution ....
But the LTTE was an important player in the national question.
But  I was never supportive of LTTE politics...

தவிர என்சார்பாக ஒரு கேள்வி :   what is national question?

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

    மேலே கறுத்த தடித்த எழுத்தில் காட்டப்பட்ட கேள்விகளின் இலக்கணத் தரத்தில் இருந்து புரிகின்றது அண்ணா உங்களின் ஆங்கிலத்தின் தரம். எனவே மிகுதியை எப்படி விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என ஊகித்துக்கொள்கின்றேன். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அமெரிக்கா.. பிரிட்டன்.. இஸ்ரேல்.. யு பி என்று இராணுவ பயிற்சி பெற்ற பெரிய ஆள்.. இவரைக் கூப்பிட்டு.. புலிகள் இராணுவ ரகசியம் பேசி இருப்பினம் என்று உலகம் நம்புது என்ற நினைப்பில கதையளக்கிறார். இவர் புலிகளோடு ஒட்டி தகாத காலம் கழித்தவர் மக்களிடம் வாக்கு வாங்கினவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த பரகசியம் தான். அதை எனி எதாலும் பூசி மறைக்க முடியாது. வேணுன்னா மறைக்க முயற்சி பண்ணிப்பார்க்கலாம்.. இப்படி.. புலிகள் தூற்றி அறிக்கை விட்டு. தமிழ் மக்கள் பேரவை வந்திட்டு எனி புலிகளை தோற்றினால் சனம் காறித்துப்பும்... தூற்றவும் முடியாது புகழவும் முடியாது சம் இப்ப திரிசங்கு சொற்ப நிலையில்...  tw_blush:

எல்லாம் 3 முறை தோற்றவர்.. தமிழ் தேசிய கூட்டமைப்பு பெயர் தொடங்கி 22 பேரை பாராளுமன்றம் அனுப்பியது வரை புலிகளின் பங்களிப்பு வரை.. சுரேஷ் டோஸ் வைச்சதில் வருகிற பதில்கள்.

இவருக்கும் நல்லா டோஸ் வைக்காட்டில்.. தலைகால் புரியாமல்.. எதிர்க்கட்சி தலைவர் என்ற தோறணையில் நல்லா ஆடுவார்.tw_blush:

சுரேஷ் கேட்டாலும் கேட்டாரே எதிர்க்கட்சி தலைவரா இவர் என்னத்தை இதுவரை வெட்டி விழுத்தினவர் என்று.. அதுக்கு ஒரு பதிலையும் காணம்..:rolleyes:

அதுபோக.. நம்ம யாழில் நேற்று நாங்க இணைச்சிருந்த அந்த சுரேஷின் வீடியோவை யாரோ தூக்கிட்டினமா அல்லது நகர்த்திட்டினமா.. காணேல்ல.tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்புடன் அரசியல் தீர்வு குறித்தே பேசினேன், தாக்குதல் நடத்துவது தொடர்பில் அல்ல

அவர்  அவர் தமக்குத்தெரிந்ததைத்தானே பேசமுடியும்

செய்யமுடியும்

பிரபாகரனிடம் ஆயதம் பற்றி எவராலும் பேசமுடியாது

அது தமிழ் மக்களுக்கு மடடுமல்ல

உலகுக்கே தெரியும்

1 hour ago, விசுகு said:

புலிகள் அமைப்புடன் அரசியல் தீர்வு குறித்தே பேசினேன், தாக்குதல் நடத்துவது தொடர்பில் அல்ல

அவர்  அவர் தமக்குத்தெரிந்ததைத்தானே பேசமுடியும்

செய்யமுடியும்

பிரபாகரனிடம் ஆயதம் பற்றி எவராலும் பேசமுடியாது

அது தமிழ் மக்களுக்கு மடடுமல்ல

உலகுக்கே தெரியும்

அவருக்கு அது மட்டும் தான் தெரியம் என்றுதானே நாங்களும்  முப்பதுவருடங்களாக சொல்லுகின்றோம் .

அவங்கள்(இந்தியா ,சர்வதேசம் ) சொல்லுறைதை சொல்லட்டும் நாங்கள் அடிப்பம் இதுதான் அவருக்கு தெரிந்த அரசியல் .

அண்ணை இராணுவ தளபதியாக இருந்துகொண்டு வேறு யாரையும் அரசியல் செய்ய விட்டிருந்தால் இன்று தமிழன் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டான் .

புலிகளை பற்றி அனைவரும் வைத்த விமர்சனமும் அதுதானே .

விசில் அடிக்க வேறு  நாலு ..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலப்புலிகள் காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்தது ஒருசில அண்ணைமாருக்கு தெரியாது போலை கிடக்கு.:cool:

15 minutes ago, குமாரசாமி said:

விடுதலப்புலிகள் காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்தது ஒருசில அண்ணைமாருக்கு தெரியாது போலை கிடக்கு.:cool:

அது ஒன்றும் வெற்றி அழிக்கவில்லை என்பது அண்ணைக்கு தெரியாது போல .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, arjun said:

அது ஒன்றும் வெற்றி அழிக்கவில்லை என்பது அண்ணைக்கு தெரியாது போல .

புலிகளின் அரசியல் வெற்றி தோல்விக்கான காரணங்களை இங்கே கதைக்கவில்லை.

புலிகள் அரசியலே செய்யவிலை என்பதை நீங்கள் உளறியபடியால்தான் இங்கே சுட்டிக்காட்டினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மட்டுமா.. சிங்களவனிடத்தில்.. அரசியல் ரீதியில் வெல்லேல்ல.. மற்ற யார் வென்றவை. அமிர்தலிங்கம்..?! சம்பந்தன்..?! சங்கரி..?! (டக்கிளஸ்..?! சித்தார்த்தன்..?! முரளிதரன்..?! - ஒட்டுக்குழு ஆட்கள்) தந்தை செல்வா..?! யார் வென்றவை.. பாருங்கோ.

ஆனால் புலிகள் மட்டும் தான் எமது பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தினார்கள். இன்று சம் சும் கும்பல் சர்வதேசத்தை உச்சரிக்கக் காரணம் புலிகள்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

அவருக்கு அது மட்டும் தான் தெரியம் என்றுதானே நாங்களும்  முப்பதுவருடங்களாக சொல்லுகின்றோம் .

அவங்கள்(இந்தியா ,சர்வதேசம் ) சொல்லுறைதை சொல்லட்டும் நாங்கள் அடிப்பம் இதுதான் அவருக்கு தெரிந்த அரசியல் .

அண்ணை இராணுவ தளபதியாக இருந்துகொண்டு வேறு யாரையும் அரசியல் செய்ய விட்டிருந்தால் இன்று தமிழன் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டான் .

புலிகளை பற்றி அனைவரும் வைத்த விமர்சனமும் அதுதானே .

விசில் அடிக்க வேறு  நாலு ..........

நானும்  அதைத்தான் சொன்னேன்

ஆயுதங்கள் பற்றி தலைவருக்க வகுப்பு வேண்டாம் என்று..

ஆனால் அரசியலில் சாணக்கியர்

தலைவரில்லாத இந்த 7 வருடத்தில் என்ன கிழிக்கிறார் என்று பார்ப்போமே....

மற்றது எமது மண்ணுக்கான போராட்டத்தை மட்டுமே புலிகள் செய்தனர்

இதில் இந்தியா சர்வதேசம்..............?????????????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விடுதலப்புலிகள் காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்தது ஒருசில அண்ணைமாருக்கு தெரியாது போலை கிடக்கு.:cool:

ஆனால் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது தமிழ்ச்செல்வன் வகையறாக்கள் தானே! கடைசி கட்ட பேச்சுவார்த்தைகளில் யதார்த்தத்தை செப்பினதுக்காக பாலசிங்கத்தை ஒதுக்கி வச்சதும் தெரியும். 

Edited by வாலி

1 hour ago, குமாரசாமி said:

புலிகளின் அரசியல் வெற்றி தோல்விக்கான காரணங்களை இங்கே கதைக்கவில்லை.

புலிகள் அரசியலே செய்யவிலை என்பதை நீங்கள் உளறியபடியால்தான் இங்கே சுட்டிக்காட்டினேன்.

கிண்டின கிடங்கை நிரப்புவதுதான் இப்ப நடப்பது .இந்தியாவிற்கு எதிரான யுத்தம் ,ராஜீவ் கொலை இரண்டும் அ படித்தவன் கூட செய்யமாட்டான் .அந்த கிடங்கு நிரப்ப முடியாமலும் போகலாம் .

இந்தியா என்ற ஒன்றை வைத்துதான் நாம் சிங்களவனை பயமுறுத்தினோம் அது இப்ப இல்லை எனவே எதுவும் இல்லாமல் கடைசி வரை இப்படியே இரண்டாம்தர பிரஜைகளாக இருக்க வேண்டியும் வரலாம் .

உங்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது அண்ணை ,

ஆயிரம் தடவை பலர் அவருக்கு விளங்கிபடுத்தி பாத்ததுதான் முடியாமல் போய்விட்டது .

இது எல்லாவற்றிற்கும் காரணம் ஒரே ஒருவரின் பிழையான அரசியல் தான் .

16 minutes ago, விசுகு said:

நானும்  அதைத்தான் சொன்னேன்

ஆயுதங்கள் பற்றி தலைவருக்க வகுப்பு வேண்டாம் என்று..

ஆனால் அரசியலில் சாணக்கியர்

தலைவரில்லாத இந்த 7 வருடத்தில் என்ன கிழிக்கிறார் என்று பார்ப்போமே....

மற்றது எமது மண்ணுக்கான போராட்டத்தை மட்டுமே புலிகள் செய்தனர்

இதில் இந்தியா சர்வதேசம்..............?????????????

உங்களுக்கும் மேலே எழுதிய பதில் தான் ,

ஏழு வருடங்கள் என்ன எழுபது வருடங்கள் ஆனாலும் நிரப்ப முடியாமல் போகலாம் ,

அதானால் தான் சர்வதேசத்திடம்  புலிகள் என்ற அமைப்பு விட்ட பிழையே ஒழிய தமிழர்கள் விட்ட பிழையில்லை என்று சொல்லுகின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, arjun said:

உங்களுக்கும் மேலே எழுதிய பதில் தான் ,

ஏழு வருடங்கள் என்ன எழுபது வருடங்கள் ஆனாலும் நிரப்ப முடியாமல் போகலாம் ,

அதானால் தான் சர்வதேசத்திடம்  புலிகள் என்ற அமைப்பு விட்ட பிழையே ஒழிய தமிழர்கள் விட்ட பிழையில்லை என்று சொல்லுகின்றோம் .

ஆடத்தெரியாதவன்

மேடை கோணல் என்றானாம்...

சர்வதேசத்திற்கு எமது போராட்டம் எப்ப பயங்கரவாதம் ஆனதோ அன்றில் இருந்தே எமக்கான தீர்வு பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டது .செல்லும் இடமெல்லாம் சம் சும் புலிகளை போட்டு வாங்குவது புலிகளே பயங்கரவாதிகள் நாங்கள் அல்ல என்பதை அவர்களுக்கு எடுத்தது சொல்லத்தான் .

புலிகள் இப்ப இல்லை அப்ப உடனே தீர்வை எடுங்கள் என்று சொல்லும் அண்ணையும் அரசியலில் அ தானே பிறகு எப்படி இந்த விடயங்கள் விளங்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அந்தக்கதை, இந்தக்கதை பேசாமல் சம்பந்தர் ஐயா இந்த பேட்டியில் கேட்ட (குறைந்த பட்சம் ~ மேலே கோடிட்டு காட்டப்பட்ட ஒரு கேள்விக்கு) ஒழுங்காக பதில் அளித்திருக்கிறாரா?
இது மட்டுமே என் கேள்வி, 1000 ஆங்கிலப்படம், ஆங்கில அரசியல் பேட்டிகள்  பார்க்கும் அர்ஜுன் அண்ணனை போன்றவர் இதற்க்கு பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

தலைவருக்கு  தெரிந்த அரசிய, தெரியாத அரசியல், அவர்களின் "முட்டால் தனமான" கொள்கைகளை வைத்து இங்கு வகுப்பு எடுக்க வேண்டாம். அதற்கு வேறு ஒரு திரி திறந்து பட்டியல் போடலாம்.நாங்கள் அங்கு வந்து உங்களிடம் கற்றுக்கொள்கிறோம் 

தம்பி வாலி இன்னும் கூட "யாழ்ப்பாணத்து ஆங்கில" ஆசான் மார் சொல்லிகொடுத்த இலக்கண அறிவை மட்டுமே அளவுகோலாக பார்கிறார் போல தெரிகிறது.

யாழ் மாணவர்கள் ஆங்கில புலமையில் சற்று பின்தங்கி இருப்பதற்கும் இதுவே காரணம் என்பதுவே என்னுடைய நிலைப்பாடு.  

... Language doesn’t usually matter all that much if you look at the intent and the actual facts of the matter, but what happens is that the press picks up on it as if it was the most important thing in the world, and you get this fake bubble of newsworthiness.

“There are a lot of myths drifting around about grammar that really are myths and always have been; things that are alleged to be incorrect whereas in fact they are perfectly correct”

நன்றி 

மேலே நான் மேல்கோள் காட்டியது 

"Grammarian Geoff Pullum"
The Gerard Visiting Professor of Cognitive, Linguistic and Psychological Sciences at Brown University and
Professor of General Linguistics, University of Edinburgh

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாலி said:

    மேலே கறுத்த தடித்த எழுத்தில் காட்டப்பட்ட கேள்விகளின் இலக்கணத் தரத்தில் இருந்து புரிகின்றது அண்ணா உங்களின் ஆங்கிலத்தின் தரம். எனவே மிகுதியை எப்படி விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என ஊகித்துக்கொள்கின்றேன். நன்றி!

what is national question?  இதிலென்ன இலக்கணப்பிழை  கண்டீர் வாலியாரே??

2 hours ago, arjun said:

அது ஒன்றும் வெற்றி அழிக்கவில்லை என்பது அண்ணைக்கு தெரியாது போல .

ஆனால் அப்போது மட்டும்தான் இலங்கை அரசும், மேற்குலகமும், கூட்டாக தாமே வந்து சுயாட்சித்தீர்வை முன்வைத்தன. இப்போ நாங்கள் ஒரு தீர்வுத்திட்டத்தை தூக்கிக்கொண்டு திரியவேண்டி இருக்கு. வித்தியாசம் விளங்குதோ ??

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தடித்த எழுத்தில் நான் எழுதிய கேள்வி இரண்டும்...  இந்த பேட்டியிலே ஐயா பதில் கூறும் சமயம் இடைமறித்து கேட்கும் கேள்வியின் தோரணையில் எழுதினேனே தவிர, கட்டுரை எழுதும் நோக்கத்தோடு எழுதவில்லை.
அதிலும் (மொழி ரீதியில்) தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் பிழையை சுட்டிக்காட்டினால் நான் ஏற்றுக்கொள்கிறேன். 
கற்றுக்கொண்டால் குற்றமில்லை...

சரி யாராச்சும் தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்கப்பா ...What is the "National Question" that the opposition leader is referring in this interview? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

ஆனால் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது தமிழ்ச்செல்வன் வகையறாக்கள் தானே! கடைசி கட்ட பேச்சுவார்த்தைகளில் யதார்த்தத்தை செப்பினதுக்காக பாலசிங்கத்தை ஒதுக்கி வச்சதும் தெரியும். 

தமிழ்செல்வனையும், கருணாவையம் அரசியல் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவைத்ததே தலைவர் செய்த மிகப்பெரிய தவறு. நானும் ஒப்புக்கொள்கிறேன். பாலசிங்கத்தையும் பாலகுமாரையும் ஈடுபடுத்தியிருக்கலாம். ம் ம் ஆனைக்கும் அடி சறுக்கும். தமிழனின் தலைவிதி அன்றே மாறிவிட்டது.

1 hour ago, arjun said:

சர்வதேசத்திற்கு எமது போராட்டம் எப்ப பயங்கரவாதம் ஆனதோ அன்றில் இருந்தே எமக்கான தீர்வு பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டது .செல்லும் இடமெல்லாம் சம் சும் புலிகளை போட்டு வாங்குவது புலிகளே பயங்கரவாதிகள் நாங்கள் அல்ல என்பதை அவர்களுக்கு எடுத்தது சொல்லத்தான் .

புலிகள் இப்ப இல்லை அப்ப உடனே தீர்வை எடுங்கள் என்று சொல்லும் அண்ணையும் அரசியலில் அ தானே பிறகு எப்படி இந்த விடயங்கள் விளங்கும் 

புலிகள் இருந்தபோது இராணுவச்சமநிலை இருந்தது அதனால்தான் சர்வதேசமும் ஸ்ரீலங்கா அரசும்  தீர்வுத்திட்டங்களுடன் ஓடோடி வந்தன. இப்போ எதுவும் இல்லை அவன் தாறதை சம்சும் பொத்திக்கொண்டு வாங்கவேண்டியதுதான்.

இது தலைவர் டெல்கியில் சொன்னது -   அவங்கள் சொல்லுவதற்கு எல்லாவற்றிகும் தலையாட்டுங்கள் ஆனால் நாங்கள் அங்க அடிப்பம் .

இது தலைவர் ரணிலுடனான சமாதான  ஒப்பந்தத்தின் பின் போராளிகளுக்கு சொன்னது -  இந்த சமாதான ஒப்பந்தம் எம்மை மீள கட்டியமைப்பதற்கும்  ஆயுதங்களை இறக்குவதற்கான காலமாகும் .

நோர்வே பேச்சுவார்த்தையின்போது அரசு தரப்பு இந்த பேச்சை டேப்பில் ஓட விட்டதாக கேள்வி .

பேச்சுவார்த்தைகளில் புலிகளின் நம்பகத்தன்மை உலகம் அறிந்தது .

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:

அந்த தடித்த எழுத்தில் நான் எழுதிய கேள்வி இரண்டும்...  இந்த பேட்டியிலே ஐயா பதில் கூறும் சமயம் இடைமறித்து கேட்கும் கேள்வியின் தோரணையில் எழுதினேனே தவிர, கட்டுரை எழுதும் நோக்கத்தோடு எழுதவில்லை.
அதிலும் (மொழி ரீதியில்) தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் பிழையை சுட்டிக்காட்டினால் நான் ஏற்றுக்கொள்கிறேன். 
கற்றுக்கொண்டால் குற்றமில்லை...

சரி யாராச்சும் தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்கப்பா ...What is the "National Question" that the opposition leader is referring in this interview? 

மேலே நீங்கள் கேட்டதில் எந்த இலக்கணத்தவறும் இல்லையே.

National question is.....  வினாவடிவில்..  what is national quesion?!

what reason again?  short question pattern in english.. what about u.. what book again..?! tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

சர்வதேசத்திற்கு எமது போராட்டம் எப்ப பயங்கரவாதம் ஆனதோ அன்றில் இருந்தே எமக்கான தீர்வு பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டது .செல்லும் இடமெல்லாம் சம் சும் புலிகளை போட்டு வாங்குவது புலிகளே பயங்கரவாதிகள் நாங்கள் அல்ல என்பதை அவர்களுக்கு எடுத்தது சொல்லத்தான் .

புலிகள் இப்ப இல்லை அப்ப உடனே தீர்வை எடுங்கள் என்று சொல்லும் அண்ணையும் அரசியலில் அ தானே பிறகு எப்படி இந்த விடயங்கள் விளங்கும் 

எமது நியாயமான போராட்டத்தையும் பயங்கரவாத இயக்கமாக  மாற்றியது ஜார்ஜ் புஷ்ஷின் அன்றைய அரசியல். அதற்கான  பலனை அமரிக்கா இப்போதும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஈராக்கில், சிரியாவில், என்ன செய்வது நாம் பலிக்கடாவாக்கப்பட்டுவிட்டோம்..

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

தமிழ்செல்வனையும், கருணாவையம் அரசியல் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவைத்ததே தலைவர் செய்த மிகப்பெரிய தவறு. நானும் ஒப்புக்கொள்கிறேன். பாலசிங்கத்தையும் பாலகுமாரையும் ஈடுபடுத்தியிருக்கலாம். ம் ம் ஆனைக்கும் அடி சறுக்கும். தமிழனின் தலைவிதி அன்றே மாறிவிட்டது.

பேச்சுவார்த்தைகளுக்கு இணைத்தலைமை நாடுகள், இந்தியா என எல்லோரும் உள்நோக்கங்களுடன் தான் போனார்கள். நாங்களும் அப்படியே போனோம்.. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.