Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்புலிகள் 25 ஆண்டுகள் சுதந்திர தாயகத்திற்காகப் போராடினார்கள் - பிபிசி புகழாரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞனை 10 வருடங்கள் விசாரணை இன்றி சிறையில்.. வைத்திருந்துவிட்டு.. 2005 இல் மைத்திரியை கொல்ல வந்ததாக.. கடந்த ஆண்டில்.. தான்.. 10 வருட சிறைத்தண்டனை விதித்த விநோதத்தை மறைக்க அவருக்கு சொறீலங்கா சிங்கள சனாதிபதி இன்று பகிரங்க மன்னிப்பு வழங்கி அந்த தமிழ் அரசியல் கைதியை விடுதலை செய்தார் என்ற செய்தியோடு..

Jenivan, now aged 36, was taken into custody in April 2006, accused of being part of an attempt a year earlier to kill Mr Sirisena, who was then a senior cabinet minister.

He was sentenced by the Polonnaruwa High Court only in July last year.

In pardoning him, Jenivan's lawyer said the president had taken into account the fact that the former militant had already been detained for 10 years.

Jenivan was arrested in 2006, but was only convicted - and given a 10-year prison sentence - last year.

இப்படி அநியாயமாகத் தடுத்து வைத்துள்ள மிச்ச அரசியல் கைதிகளை விடுவிப்பாரா.. என்று கேள்வி இருக்க..

The Tamil Tigers' 25-year fight for an independent state in the north of the country ended in their defeat in 2009.

விடுதலைப்புலிகள் சுதந்திர தாயகத்திற்காக போராடினார் என்றும் அது 2009 அவர்கள் தோற்கடிப்பட்டதில் நிறைவடைந்துள்ளதாகவும் பிபிசி குறிப்பிட்டுள்ளதோடு..

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) was a separatist rebel group led by Velupillai Prabhakaran who, to his followers, was a freedom fighter struggling for emancipation for the minority Tamils.

தமிழீழ தேசிய தலைவர் 2009 இல் வீரச்சாவடைந்து விட்டதாகவும்... இருந்தாலும் அவர் அவரைப் பின்பற்றும் மக்களால்.. விடுதலை வீரராகப் போற்றப்படுவதாகவும் அவருடைய படத்தையும் பிரசுரித்து பிபிசி இன்று கட்டுரை வரைந்துள்ளது.

கூடவே மைத்திரி மற்றும் அவரால் பொது மன்னிப்பளிக்கப்பட்ட அரசியல் கைதியின் படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Velupillai Prabhakaran

The LTTE was led by Velupillai Prabhakaran, who was killed in 2009

Sri Lankan president Maithripala Sirisena holds the hands of a former Tamil Tiger insurgent Sivaraja Jenivan after setting him free during a function to mark the first anniversary of his election to the prime minister's office in Colombo

The president forgave the former Tamil Tiger militant at a public celebration marking his first year in office.

போரின் போது அரசாங்கப்படைகள் யுத்தக்குற்றம் புரிந்தனர் என்ற குற்றச்சாட்டு வலுவுடைய ஒன்று என்று சிறீலங்கா விசாரணைத்தரப்பு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் பிபிசி செய்தி மேலும் கூறுகிறது.

In October a government-led inquiry found that there were "credible" allegations that the army had committed war crimes during the conflict.

http://www.bbc.co.uk/news/world-asia-35265792

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் சுதியை மாத்துறாங்கள் எண்டால் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கு.. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாற்றம் இரண்டு அடிப்படைகளில் இருக்கலாம்..

1. புலம்பெயர் நாடுகளில் மக்கள் தமிழ் புலிகள் மீது காட்டும் ஆதரவு. அந்த மக்களின் வாக்கு பலங்கள்.

2. மேற்குலக நோக்கங்களை பிராந்தியத்திற்குள் தமிழர்கள் மூலமும் நிறைவேற்றிக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள்.

எதுஎப்படியோ.. இவர்கள்.. பூசித்திரிந்த பயங்கரவாத முலாமை அவர்களே கைவிட ஆரம்பித்திருக்கிறார்கள். அது தமிழ் மக்கள் போராளிகள் மீது நல்கிய.. நல்கும்.. தார்மீக ஆதரவின் வெளிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி எனலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களம் கதை,வசனம்,டைரக்சன் எல்லாத்தையும் ஒரு மார்க்கமாய்த்தான் கொண்டு போகுது.  இப்ப போய் பிபிசி ஏன் றிவேஸ்கியர் போட்டது எண்டு ஒண்டுமாய் விளங்கேல்லை.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) was a separatist rebel group led by Velupillai Prabhakaran who, to his followers, was a freedom fighter struggling for emancipation for the minority Tamils.

The group used suicide bombings to attack Sri Lanka's capital, Colombo, in the 1990s, killing high-profile figures including former Sri Lankan President Ranasinghe Premadasa.

In the closing stages of the war in 2009, both sides were accused of committing atrocities.

பிரிவினைவாதக் கிளர்ச்சிக் குழுவாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தம்மைப் பின்பற்றியவர்களுக்கு, சிறுபான்மைத் தமிழர்களின் இனவிடுதலைக்காகப் போராடிய ஒரு சுதந்திரப் போராளியாக இருந்தார்.

1990களில் இந்தக் குழு, முன்னாள் இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாஸ அடங்கலாக பல உயர்மட்டத் தலைவர்களைக் கொல்லுவதற்கு இலங்கைக் தலைநகர் கொழும்பில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடாத்தியது.

2009 இல் போர் முடிவுற்ற சமயத்தில் இரு தரப்பும் வெறியாட்டமாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

http://www.bbc.co.uk/news/world-asia-35265792

ஐயோ பாவம்...விசிலடிக்க ஒன்றும் கிடைக்காமல் இப்படி உப்புசப்பற்ற விசயத்திற்கு விசிலடிக்கும் நிலமை ஏற்பட்டது வருந்ததக்கது. தவிர பிபிசி ஒரு சுதியையும் மாற்றவும் இல்லை. அவர்கள் எப்பவுமே seperatist rebels என்ற பதத்தையே பாவிப்பார்கள். சி என் என் போன்ற செய்தி தளங்களும் அது போலவே. 
கொஞ்சம் பொறுமை காக்கவும்..பேரவை வெட்டுவோம் புடுங்குவோம் என்று புறப்பட்டிருக்கிறார்கள்..சிறிது காலத்தில் அவர்களுக்காக சுப்பரா விசிலடிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தெனாலி said:

ஐயோ பாவம்...விசிலடிக்க ஒன்றும் கிடைக்காமல் இப்படி உப்புசப்பற்ற விசயத்திற்கு விசிலடிக்கும் நிலமை ஏற்பட்டது வருந்ததக்கது. தவிர பிபிசி ஒரு சுதியையும் மாற்றவும் இல்லை. அவர்கள் எப்பவுமே seperatist rebels என்ற பதத்தையே பாவிப்பார்கள். சி என் என் போன்ற செய்தி தளங்களும் அது போலவே. 
கொஞ்சம் பொறுமை காக்கவும்..பேரவை வெட்டுவோம் புடுங்குவோம் என்று புறப்பட்டிருக்கிறார்கள்..சிறிது காலத்தில் அவர்களுக்காக சுப்பரா விசிலடிக்கலாம். 

என்ன செய்வது? எல்லோருக்கும் பிடித்தமாதிரி இருக்க கடவுளாலும் முடிவதில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தெனாலி said:

ஐயோ பாவம்...விசிலடிக்க ஒன்றும் கிடைக்காமல் இப்படி உப்புசப்பற்ற விசயத்திற்கு விசிலடிக்கும் நிலமை ஏற்பட்டது வருந்ததக்கது. தவிர பிபிசி ஒரு சுதியையும் மாற்றவும் இல்லை. அவர்கள் எப்பவுமே seperatist rebels என்ற பதத்தையே பாவிப்பார்கள். சி என் என் போன்ற செய்தி தளங்களும் அது போலவே. 
கொஞ்சம் பொறுமை காக்கவும்..பேரவை வெட்டுவோம் புடுங்குவோம் என்று புறப்பட்டிருக்கிறார்கள்..சிறிது காலத்தில் அவர்களுக்காக சுப்பரா விசிலடிக்கலாம். 

சுமந்திரனும் சின்ன விடயங்களை விட்டு பெரிய விடயங்களில் கவனம் செலுத்துவதாக சொல்லி இருக்கிறார். பார்க்கலாம். இன்னும்  நல்ல காலம் பிறக்க 51 கிழமை இருக்கெண்டால் பாருங்கோவன்.

Upon taking power, Mr Sirisena pledged a truth and reconciliation commission to investigate the claims of abuses.

In October a government-led inquiry found that there were "credible" allegations that the army had committed war crimes during the conflict.

In the same month, 223 Tamil prisoners went on hunger strike demanding to be freed. Some have been released but most remain in prison.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அண்ணன் வரிக்கு வரி மொழிபெயர்த்துக்காட்டிறார்.. இன்னொரு அண்ணன்.. அந்தக் காலம் தொட்டு இதைத்தான் சொல்லினம் என்றார்.

ஆனால்.. இடையில் சுருதி மாற்றி சம் சும் கும்பல்.. உலகின் முன்னாடி புலிகள் பயங்கரவாதிகள் என்றார்கள்..  பிரபாகரன் வன்முறையாளர் என்றார்கள்.. தமிழீழத்தை தமிழ் மக்கள் கேட்கவில்லை என்றார்கள்....

உள்ள உள்ளவர்கள்.. புலிகள் என்றார்கள்...

ஆனால்.. பிபிசி இன்றைய பொழுதில்.. பிரபாகரனையும்.. தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தையும்.. சிங்கள அரச படைகளின்.. போர்க்குற்றங்களையும் .. உள்ள உள்ளவர்களை தமிழ் கைதிகள்.. (புலிகள் என்று உச்சரிக்கவில்லை).. என்றும் சொல்ல வேண்டிய தேவை என்ன..??!

ஆனால் சொல்லுது. இதே பிபிசி முன்னர் கொடிய வன்முறைவாதிகளாக புலிகளை சித்தரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாங்கள் வரிக்குவரி.. மொழிபெயர்ப்புச் செய்யவில்லை. மேற்கோளோடு.. சுருக்கங்களை.. நாம் எம் தேசிய தலைவருக்கு அளிக்கும் கெளரவத்தோடு எழுதி இருக்கிறோம்.

பிபிசி மாகாராணி.. ராணி என்று சொல்ல.. நாம் அவாவை கிழவி என்று சொல்லியும் வருகிறோம். அதற்காக பிபிசி அப்படி எழுதும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் அவர்களின் ராணிக்குரிய மதிப்பை அளிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் எமது தேசிய தலைவரை மதிக்க நாம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறோம்.  அது சிலருக்கு விசிலடியாக தெரிகிறது. சிலருக்கு கசப்பாக இருக்கிறது.

எத்தனையோ பேர் இங்கு தாங்களும் போராடினம் என்று சொல்லினம்.. ஆனால் பிபிசி போர் ஓய்ந்து 6 ஆண்டுகளின் பின்னும் புலிகள் தான் சுதந்திரத் தாயகம் வேண்டி போராடினார்கள். பிரபாகரன் தான் விடுதலைப் போராளியாக மதிக்கப்பட்டார்.. படுகிறார் என்கிறது. மற்றவை எங்க போட்டினம். ஏன் பிபிசியின் கண்ணுக்கு அவை படல்ல...??!

மைத்திரிக்கு சமனாக பிரபாகரன்.. புலிகள் செய்தியை அலங்கரிக்கினம் என்றால்.. புலிகள் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் சுதந்திர தாயகப் போராட்டம் பற்றிய அறிதலை ஊக்கப்படுத்தி கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள் என்பது தான் இங்கு அறியப்பட வேண்டிய முக்கியம்.

தமிழ் மக்கள்.. தமிழீழம் கேட்கவில்லை என்று இப்ப யார் கதையளந்தாலும் அவர்கள் உலகின் முன் பொய்யர்கள் ஆவர். பிபிசி அந்தப் பொய்யர்களை ஏன் இப்படி இனங்காட்ட வேண்டும்..?! தங்களை மிதவாதிகள் என்றும் சனநாயகவாதிகள் என்றும் சொல்லும் அவர்களை ஏன் பிபிசி கண்டுகொள்ளவே இல்லை. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி ஒரு புலியை வெளியில் விட்டு தன்னை நல்லவராகக்காட்ட முயல

உலகமெல்லாம் மீண்டும் புலி செய்தியாகிறது...

நடக்கட்டும் நடக்கட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்தகாலத்தில அவர்கள் செய்த எவ்வளவோ நல்ல விடயங்களை செய்தியாக கூட சொல்ல மனம் இல்லாத BBC  இன்று ஏன் நீலிகண்ணீர் வடிக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும் சிங்கள ஊது குழலாக இருந்த BBC இப்ப சுருதி மாற்றுது நல்ல விஷயம்.  BBC இக்கு ஈமெயில் எழுதி முறையிட எம் ஆட்கள் இருக்காட்டி சரி.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

மைத்திரி ஒரு புலியை வெளியில் விட்டு தன்னை நல்லவராகக்காட்ட முயல

உலகமெல்லாம் மீண்டும் புலி செய்தியாகிறது...

நடக்கட்டும் நடக்கட்டும்...

 எல்லா அரசியல்வாதிகளையும் ஒரே தடவையில் விடுதலை செய்திருக்கலாம். ஒருவரை விட்டவுடன், சிங்கராஜா, உசுப்பிவிடுவார், தன்படையை. மற்றைய கைதிகளின் விடுவிப்பு எட்டாக்கனியாவிடும். மனமுண்டானால், மார்க்கமுண்டு. நாங்கள் விடுதலை செய்வோம், ஆனால் நாட்டில குழப்பமேற்படும் என்று சொல்லி தப்பலாம் அல்லவா.

ஒருவரை விட்டது கூட பொறுக்கவில்லை, சிங்களவனின் பெருந்தன்மையை நாங்கள் மதிக்கவில்லை என்று பாடம் எடுக்க வருவினம்.

எல்லோரும் ஒரே குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவருக்கு சாத்தியமென்றால், அது மற்றவர்களுக்கும் பொருந்தும். இதுவெல்லாம் தந்திரம். ஆனால் இவரின் விடுதலை, அவரின் கோரிக்கை சந்தோசமே. மற்றவர்களின் விடுதலைக்காக அவர் ஏங்குவது தெரிகிறது. தங்களுக்காக உயிர்நீத்த அந்த மாணவருக்குரிய மரியாதையையும் அவர் கொடுக்கத் தவறவில்லை. மற்றவர்களுக்காக வாழ்ந்தவர். கஷ்டங்களை அனுபவித்தவர், சந்தற்பத்திற்காய்  மாறவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.