Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் - முஸ்லிம் கூட்டு அரசியல் தீர்வுகள் சாத்தியமா?

Featured Replies

 
தமிழ் - முஸ்லிம் கூட்டு அரசியல் தீர்வுகள் சாத்தியமா?
 

article_1452658246-aube.jpgஅரசாங்கம், புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதேவேளை, தமிழர்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பிரதான கட்சியாகக் கருதப்படும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த விடயத்தில் கூட்டாகச் செயற்படுவதற்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. இந்த முயற்சிகள் எந்தளவு நடைமுறை சாத்தியமானவை என்பதை சற்று ஆராய்வது பொருத்தமாகும்.

புதிய அரசியலமைப்பொன்றை முன்வைப்பதற்கான அரசாங்கத்தின் இந்த முயற்சியோடு, கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டு, அரசாங்கத்துக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் மிகவும் முக்கியமானதாகியுள்ளது.

பதவிக்கு வரும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தொடர்பாகவும் ஊழல், ஒழிப்பு தொடர்பாகவும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறுமா என்ற பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அந்த நிலையிலேயே, புதிய அரசியலமைப்பொன்றை வரைவதைப் பற்றிய முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார, ஊழல் நிறைந்த, இனவெறியர்களுக்கு பொருத்தமான ஆட்சியோடு ஒப்பிடும் போது, தற்போதைய அரசாங்கம் இன்னமும் சிறந்த அரசாங்கமாகவே தெரிகிறது. ஆயினும் போகிற போக்கைப் பார்த்தால் தற்போதைய ஆட்சி, மஹிந்தவின் ஆட்சியை விஞ்சினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது போன்ற மிகவும் உணர்ச்சிகளை தூண்டக் கூடிய விடயங்களோடு சம்பந்தப்பட்டுள்ளதால், புதிய அரசியலமைப்பொன்றை வரையும் முயற்சியானது ஒரு வகையில் அரசாங்கத்தின் இருப்பையே தீர்மானிக்கக்கூடிய பாரதூரமான விடயமாகும்.

அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்காக, அரசாங்கம் அமுலாக்கப் போகும் அரசியலமைப்புச் சபையென்ற பொறிமுறையை அறிமுகப்படுத்த முன்னரே, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன மற்றும் உதய கம்மன்பில போன்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு இணைக்கப்படப் போகிறது என்றும் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கிய இடம் இல்லாமல் போகப் போகிறது என்றும் ஒற்றை ஆட்சி முறை இல்லாதொழிக்கப்படப் போகிறது என்றும் கூறி சிங்கள மக்கள் மத்தியல் பீதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்

காங்கிரஸும் இரு சமூகங்களையும் பாதிக்கும் விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து, இனப்பிரச்சினை விடயத்தில் ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்தின் அரசியலமைப்பு தயாரிப்புப் பணியை எதிர்நோக்கப் போகின்றன. ஏற்கெனவே, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான

இரா. சம்பந்தனின் தலைமையிலான கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்றும், அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் தலைமையிலான

தூதுக்குழுவொன்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

நிச்சயமாக சிங்கள மக்களும், குறிப்பாக பேரினவாதக் கட்சிகளின் தலைவர்களும் இந்த முயற்சியை சந்தேகக் கண் கொண்டே பார்ப்பார்கள். அதேவேளை, பல தமிழ், முஸ்லிம் அமைப்புக்களும் தமிழ் ஊடகங்களும் இந்த முயற்சியை பாராட்டியுள்ளன. உண்மையிலேயே எடுத்த எடுப்பிலும் மேலோட்டமாகவும் பார்த்தால் இது சிறந்த முயற்சியாகவே தெரிகிறது. ஆனால், இம் முயற்சி நடைமுறைச் சாத்தியமா என்பது சந்தேகமே. இந்த முயற்சி அநாவசியமானது என்பது இதன் அர்த்தமல்ல. ஆனால், வரலாற்று அனுபவங்களின் படி இது சாத்தியமா என்ற கேள்வியையே எழுப்புகிறோம்.

தமிழ் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் கூட்டாகச் செயற்பட முயற்சித்த முதலாவது முறை இதுவல்ல. அரசாங்கங்கள்,

அப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முற்பட்ட 1980களில் இருந்தே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவை எதுவுமே வெற்றிபெறவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

அதனால் இனி ஒருபோதும் தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக ஐக்கியமாக செயற்பட முடியாது என்றோ அல்லது அவ்வாறு செயற்படக் கூடாது என்றோ முடிவுக்கு வர வேண்டியதில்லை. ஆனால், கடந்த கால முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன. அந்த முயற்சிகளின் போது அந்தந்த தரப்பினரின் எந்தெந்தக் குறைகள் தோல்விக்கு காரணமாயின, அந்த குறைகளை தவிர்க்க முடியுமா என்பனவற்றை ஆராய்ந்தே, இனி ஐக்கியத்துக்கான அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து, இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஆலோசனைகளை முன்வைக்க எடுத்த முதலாவது முயற்சியாக, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரபும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற குமார் பொன்னம்பலமும் 1988ஆம் ஆண்டு முற்பகுதியில் மேற்கொண்ட முயற்சியை சுட்டிக் காட்டலாம்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு தனியானதோர் மாகாண சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோஷத்துடனேயே 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

1988ஆம் ஆண்டிலும் மு.கா. அந்த நிலைப்பாட்டிலேயே இருந்தது. தமிழர்கள் அப்போது வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அம் மாகாணங்கள் அப்போது 'தற்காலிகமாக' இணைக்கப்பட்டும் இருந்தன.

இந்த நிலையில் தான், பொன்னம்பலமும் அஷ்ரபும் பேச்சுவார்த்தை நடத்தினர். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இரு சாராரினதும் நிலைப்பாடுகளும் வெகுவாகப் பாதிக்கப்படாது, அவற்றுக்கிடையே ஒருவித சம நிலையை ஏற்படுத்தும் வகையில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன்படி, வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் இணைக்கப்பட்டு, தமிழ் மாகாண சபையொன்றையும் இரு மாகாணங்களிலும் ஒன்றோடொன்று ஒட்டியில்லாத முஸ்லிம் பகுதிகளை நிர்வாக ரீதியாக இணைத்து நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாண சபையொன்றையும் உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது.

அதற்கு முன்னர் அதிகாரப் பரவலாக்கலின் போது முஸ்லிம்களுக்கும் தனியானதோர் அலகு இருக்க வேண்டும் என்றும் அதற்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் எந்தவொரு தமிழ் தலைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை ஏற்றுக் கொண்ட முதலாவது தமிழ் தலைவர் குமார் பொன்னம்பலமே.

1988ஆம் ஜனாதிபதித் தேர்தலுக்காக இவ்விரண்டு கட்சிகளும் உள்ளிட்ட 8 அரசியல் கட்சிகள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையில் கூட்டணியொன்றை அமைத்தன. ஜனநாயக மக்கள் முன்னணி என்ற அந்தக் கூட்டணியும், பொன்னம்பலம் -அஷ்ரப் ஒப்பந்தத்தை ஏற்று அதன் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சேர்த்துக் கொள்ள இணங்கியது.

ஆயினும், தேர்தல் கூட்டணியை உருவாக்கும் ஒப்பந்தத்தில், 8 கட்சிகளும் கைச்சாத்திடவிருந்த நாளன்று காலையில், இணங்கப்பட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை அஷ்ரப் கண்டு பிடித்தார். அத்தோடு, அவரும் பொன்னம்பலமும் அக் கூட்டணியிலிருந்து விலகிவிட்டனர். எஞ்சிய 6 கட்சிகளும், பொன்னம்பலம் - அஷ்ரப் ஒப்பந்தத்தை தமது வேலைத் திட்டத்திலிருந்து நீக்கிவிட்டு அதில் கைச்சாத்திட்டன.

1988ஆம் ஆண்டு, பொன்னம்பலம்- அஷ்ரப் ஒப்பந்தத்துக்;கும் ஜனநாயக மக்கள் முன்னணியை அமைக்கும் முயற்சிக்கும் இடைப்பட்ட ஒரு சில மாத காலத்தில், மேலும் இரண்டு தமிழ் முஸ்லிம் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அதில் ஒன்று இலங்கையில் உருவாகிய இரண்டாவது முஸ்லிம் கட்சியாக எம்.ஐ.ஏம். மொஹிதீனின் தலைமையில் உருவான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டன. அதற்காக காலஞ்சென்ற கலாநிதி பதியுதீன் மஹ்மூதின் தலைமையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின்

தூதுக்குழுவொன்று 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னைக்குச் சென்றது.

எதிர்க்கால, வட கிழக்கு மாகாண சபையொன்றிலும் அதன் அமைச்சரவையிலும் முஸ்லிம்களுக்கு 30 சதவீத இடம் ஒதுக்கப்படும் என புலிகள் அப்போது இணக்கம் தெரிவித்தனர். வடக்கு - கிழக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம் மக்களுக்கான காணி உரிமையின் விகிதாசாரமும் அறிவிக்கப்பட்டது. அவ்வாறெல்லாம் இணக்கம் தெரிவித்த புலிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வட மாகாணத்தில் இருந்து அத்தனை முஸ்லிம்களையும் விரட்டிவிட்டனர்.

புலிகளுடனான ஒப்பந்தத்துக்கு ஓரிரு வாரங்களுக்குப் பின்னர், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் மற்றொரு

தூதுக்குழுவொன்று சென்னைக்குச் சென்று காலஞ்சென்ற எம். சிவசிதம்பரத்தின் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தூதுக்குழுவொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிலும், புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையொத்த ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. ஆனால், அதனை இரு சாராரும் விரைவிலேயே மறந்துவிட்டனர்.

புலிகளும் புளொட்டும் தவிர்ந்த சகல தமிழ் கட்சிகள் மற்றும் இயக்கங்களும் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டன. ஆயினும், புலிகளுக்கும் இந்திய படையினருக்கும் இடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் புதிய தீர்வுகளைத் தேட அவை முற்பட்டன. அதன் பிரகாரம் 8 தமிழ் கட்சிகளும் முஸ்லிம்

காங்கிரஸும் 1990ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.

அதன்படி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பிரதேசங்களை இணைத்து, தமிழ் மாகாண சபையொன்றையும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை நிர்வாக ரீதியாக இணைத்து முஸ்லிம் மாகாண சபையொன்றையும் உருவாக்கி அவற்றுக்கு மேலாக இரண்டையும் நிர்வகிக்கும் உயர் சபையொன்றையும் (யுpநஒ ஊழரnஉடை) உருவாக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரண்டு இனவாரி சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்க முற்பட்டபோது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 1996ஆம் ஆண்டு இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக, அப்போதைய அரசியலமைப்புத்துறை அமைச்சராகவிருந்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அப்போதும் இதே தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் பொதுவான நிலைப்பாடொன்றை முன்வைப்பதற்காகவென ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்ததை நடத்தினர்.

அப்போதும் 1990ஆம் ஆண்டைப் போலவே இரண்டு இனவாரி சபைகளும் அவ் இரண்டுக்கும் மேலால் உயர் சபையொன்றும் (யுpநஒ உழரnஉடை) உருவாக்கப்படுமென தமிழ் - முஸ்லிம் கட்சிகள் முடிவு செய்தன. ஆனால், அப்போதும் இரண்டு இனவாரி சபைகளின் எல்லைகளை நிரணயிக்க முற்பட்டபோது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.

2012ஆம் ஆண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் கூட்டு நிலைப்பாடொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என சம்பந்தன் கூறியிருந்தார். ஆனால், அதற்காக எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இனி மேலும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாட்டை காண முற்படுவதாக இருந்தால் இந்த கசப்பான வரலாற்றை மறக்காது, அதிலிருந்து பெற வேண்டிய பாடங்களை பெற்று அவற்றை முறையாக பாவித்தே முன் நகர வேண்டும். அத்தோடு, என்ன பொது நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டாலும் அதனை சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் முன்வைப்பதற்கான உத்திகளையும் கண்டறிய வேண்டும்.

அவ்வாறில்லாது தமது கருத்தை சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என அவர்களைத் திட்டி தமிழ் - முஸ்லிம் மக்களிடையே அரசியல் இலாபம் தேட முற்படுவதிலும் அர்த்தமில்லை.

- See more at: http://www.tamilmirror.lk/163679/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%AE-%E0%AE%B8-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%AE-#sthash.AYgBLx3W.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஆயிரம் தமிழர்கள் சாகும் போது சக மனிதர்கள் என்று கூட வராத கூட்டு.. எனி எதற்கு.  அதுங்க அதுங்களாகவே இருக்கட்டும். நாங்க நாங்களாகவே இருந்திக்கிறம். அரசியல் என்று வந்தா.. பதவின்னு ஒன்று வரும். அது வேணுன்னா.. கூட்டு தன்பாட்டில வரும். இதுங்க சகவாசமே இப்ப உலகத்தில ஆபத்தா மாறிக்கிட்டு இருக்கு. நாங்க தான் தேவை இல்லாமல்.. புட்டும் தேங்காய் பூவும் ஆக்கி.. நாறிப் போய் கிடக்கிறம். அவங்க நம்மை நார் நாராக்கி அதில வகுந்து பிழைக்குதுங்க. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகால அடிப்படையில் தமிழ் முஸ்லிம் இணக்கத்துடனான வடகிழக்கு இணைப்பே தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பானதாகும், அனைத்து தமிழ் தமிழ் முஸ்லிம் கிராமங்களும் பாரம்பரிய பிரதேசங்களும் அடிப்படையில் வடகிழக்கு மாகாணம் தமிழ் அலகாகவூம் முஸ்லிம் அலகாகவும் இயங்குகிறது என இரு சாராரும் ஒப்புக்கொள்வது அடிபடையான அவசியம்.

வடகிழக்கு இணைப்பை தமிழர் அடிபடை உரிமையாக கொண்டுள்ளனர் என்பதை முஸ்லிம்களும் முஸ்லிம் அலகு தனது முடிவை எடுக்கும் உரித்துள்ளது என்பதை தமிழரும் ஏற்றுகொண்டே ஆகவேண்டிய ஒரு சூழல் உருவாகி வருகிறது. 

தமிழர் தமது வட கிழக்கு அலகுகளின் இணைப்பின் அடிப்படையிலேயே போராடியும் தேர்தலில் வாக்களித்தும் உள்ளனர். வடகிழக்கு இணைப்பில் சேர்வதா தனித்துச் செல்வதா என்கிற தீர்மானம்பற்றி முஸ்லிம்கள் மக்கள் மத்தியில் தீவிரமாக விவாதிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறேன்.

முஸ்லிம் அலகுகள் இணைந்தாலும்  தனித்துச் சென்றாலும் வடகிழக்கு இணைபாட்ச்சி அரசானது அதிகாரமுள்ள மாவட்ட ஆட்ச்சி அடிப்படையில் பரந்த அதிகார பரவலாக்கலை கொண்ட அரசாக அமைதல் வேண்டும். இதுவே எனது கருத்தாகும் - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்.   

  • கருத்துக்கள உறவுகள்

உப்படித்தான் ஹிந்தியாவின்...அதி உத்தமர் காந்தி.. ஜின்னாவுக்கு பின்னால போய் பாகிஸ்தானை உருவாக்கினார். அலகு கொடுத்தால் பிரச்சனை தீர்ந்திடும். நாங்கள் அமைதியாகிடலாம் என்று. கடைசியில்.. அலகு.. குத்திக் கிழிச்சுக்கிட்டு கிடக்கு.

நாம "பெரிசா".. நினைக்கிறம் என்று காட்டப் போய்.... நம்ம காலத்தில நமக்கு நாலு பேரட்ட பெயர் வாய்ங்கிட்டுப் போறதில்லை மாட்டர்.  நாம சிந்திச்சது செய்தது நம்ம தலைமுறைகளை பாதுகாக்குமான்னு சிந்திக்கனும் செய்யனும். இதை நம் முன்னைய சட்டாம்பிகளும்.. பெரிசா நினைக்கிறவையும் செய்யத் தவறியதன் விளைவு.. நாம சீரழியுறது.

அதை நோக்கி நம் அடுத்த தலைமுறைகளை கொண்டு செல்லாமல்.. அவர்களாவது சுயமாச் சிந்திச்சு செயற்பட வழிகாட்டினால் நன்று. நாம நம்மளப் பெரிசா காட்டப் போய் கவுண்டு கிடக்கிறது போதும்.

அவன் அவன்ர வேலையை பார்க்கட்டும். வேணுன்னா.. சிங்களவனோடு போராடி அலகை வாங்கட்டும். காத்தான்குடியில் ஒரு முள்ளிவாய்க்கால் வந்தால் தான் அதன் வலியும்.. வேதனையும் தெரியும். நாங்க அப்ப பயங்கரவாதம் அழியுதுன்னு வேடிக்கை பார்க்கும் இனமாக இருக்கமாட்டோம். அது தான் தமிழனுக்கும்.. முஸ்லீமுக்கும் உள்ள வேறுபாடு.

இந்த வேறுபாடு அகலாமல்.. அடுத்தவனுக்கு எடுத்துக் கொடுக்கும்... எந்த அலகும் எமக்கு பாதுகாப்பில்லை. tw_angry:

Edited by nedukkalapoovan

1 hour ago, poet said:

வடகிழக்கு இணைப்பை தமிழர் அடிபடை உரிமையாக கொண்டுள்ளனர் என்பதை முஸ்லிம்களும் முஸ்லிம் அலகு தனது முடிவை எடுக்கும் உரித்துள்ளது என்பதை தமிழரும் ஏற்றுகொண்டே ஆகவேண்டிய ஒரு சூழல் உருவாகி வருகிறது. 

எமக்குள் இருக்கும் வேற்றுமைகள் களையப்பட்டு, ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டிய தருணம் இது. எமக்குள்ள உரிமைகள் போன்றே முஸ்லீம் சகோதரர்களுக்கும் உண்டு. அவர்களிற்கென்று ஓரு தனிஅலகு உருவாவதை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கின்றேன். இது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பல பிரச்சனைகளிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அவர்கள் போராடவில்லை, நாம் போராடினோம் எனும் விதண்டாவாதத்திற்குள் என்னை நுழைக்க விரும்பவில்லை. போராட்டமென்பது புறக்காரணிகளாலேயே உருவாக்கப்படுகின்றது. அவர்களிற்கு அத்தேவை அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம். 

இங்கு வடகிழக்கு இணைந்த தீர்வு ஒன்று வருமாயினும் அது இஸ்லாமிய சகோதரர்களது அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலேயே அமைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அலகு இங்க கருத்தெழுதிற சில பேரின்ர காணி வளவு கொல்லைக்க தானே கேட்கிறாங்கள். ஆளாலுக்கு வந்து அலகு தாறம் என்று பிரகடனப்படுத்தினம்.

அலகு மண் மண்ணாங்கட்டி எது என்றாலும் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களிடம் ஜனநாயக வழியில் கருத்துக் கேட்டு அவர்களின் கருத்துப் பெறப்பட்ட பின் தான் வழங்கப்படனும்.

வடக்குக்கிழக்கு மக்களின் தலைவிதியை தெற்கு மேற்கு முஸ்லீம்களும் சிங்களவர்களும் கொழும்பு வாழ் ..வெளிநாடு வாழ் தமிழர்களும் தீர்மானிக்கக் கூடாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 நெடுக்கர், நீங்கள் கிழக்கின் தற்போதய இனப்பரம்பலையும், இனவிகிதத்தையும், கணக்கில் எடுக்கவேண்டும்.

யதார்தமாக பார்த்தாலே புரியும் தற்போதய நிலமை.

எங்களின் பழம்பெருமை (அரசியல், இராணுவ பலம்) குறித்த மாயையில் இருந்து வெளிவரவேண்டும், இல்லையேல் இருப்பதையும் தக்க வைக்க முடியாமல் போகும்.

என்னவகையான தீர்வோ, முஸ்லிம்களையும் சேர்த்தே எட்டமுடியும், எட்டவேண்டும். இது தற்போதய சூழலில் என்றில்லை, நாம் இரணுவபலத்துடன் இருந்த காலத்திலும் அதே நிலமைதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் இன்னும் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆகவில்லை. மேலும்... வடக்குக்கிழக்கு பிரித்துப் பார்க்க முடியாது. வடக்குக்கிழக்கில் பெரும்பான்மை பூர்வீகத்தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் பொதுவிருப்பறிந்து தான் அலகு ஆட்டிக்குட்டி கொடுக்க வேண்டும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்று பச்சைமயமாகி உள்ளது. அங்கு கைவிரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் மாணவர்களே உள்ளனர். ஆனால் கிழக்குப் பல்கலையிலும் யாழ்ப்பாணத்திலும் பெருமளவு முஸ்லீம்கள் கல்வி கற்கிறார்கள். போதாக்குறைக்கு சிங்களவர்களும் உள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிலை அலகுகளுக்குள் அலகாக இருக்கும் தமிழ் மக்களுக்கு வரக்கூடாது.

பல முஸ்லிம் சிறுபகுதிகளை சுற்றி தமிழ் மக்களை இனச்சுத்திகரிப்பு செய்துவிட்டு.. அதாவது விரட்டி அடித்துவிட்டு இப்போ.. அவற்றை முஸ்லீம் பேரலகாக்கி வைத்திருக்கிறார்கள்.

இவை எல்லாம் அலகாகவே முடியாது. தமிழ் மக்களின் காணிகள் மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

அந்த மக்களின் விருப்பின்றி எந்த நிலமும் அவர்களிடம் இருந்து பறித்து இன்னொருவருக்கு தாரைவார்க்கப்பட முடியாது.

அது அந்த மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.

இனப்பரம்பலை சாட்டு வைச்சு தமிழ் மக்களின் காணிகளை முஸ்லீம்களுக்கு சட்ட ரீதியான அலகாக்க இடமளிக்க முடியாது. இந்த நோக்கில் தான் இப்போ வடக்கில் முஸ்லீம்கள் வாழ்ந்திராத அரச மற்றும் தமிழ்மக்களின் காணிகளையும் முஸ்லீம்கள் முன்னர் வாழ்ந்த குறிச்சிகளை மையப்படுத்தி பறித்துஎடுத்து வருகிறார்கள். இவையும் பின்னர் அலகுகளுக்குள் சேரும். இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு ஆகும்.  அடாத்தான அரசியலாகும். தமிழ் மக்களின் பொது விருப்புக்கு எதிரானதாகும்.

மேலும் வடக்குக்கிழக்கில் தமிழ் மக்கள் கூடிய பிள்ளைகளைப் பெற ஊக்குவிப்பும் உதவியும் வழங்குவதோடு 3 பிள்ளைகளுக்கு மேல் இருக்கும் குடும்பத்தாருக்கு வருமானம் அளிக்கக் கூடிய.. காணி நிலமும் வீடும் இலவசமாக வழங்க வேண்டும். புலம்பெயர் தமிழ் மக்களின் ஒத்துழைப்போடு இத்திட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக.. முஸ்லீம்களின் சிங்களவர்களின் இனப்பெருக்கம் மூலமான இனப்பரம்பலைக் கூட்டுதலை தமிழர் பகுதியில் மட்டுப்படுத்த முடியும். அல்லது ஒப்பீட்டளவில் சிறிதாக்க முடியும்.

ஆயுதத்தால் அவர்கள் சாதிக்காததை நாமும் சாதிக்கலாம். எங்களாலும் முடியும்... என்று எதிரிகளுக்கு இனங்காட்டா விடில் அவர்கள் எம்மிடம் எமது பலவீனத்தைப் பயன்படுத்தி.. தொடர்ந்து தட்டிப்பறிக்கவே செய்வர்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவாவுக்கும், மலையானுக்கும் அறிவு ஆய்வு அனுபவ பூர்வமானவை உங்கள் கருத்துக்கள். யதார்த்தத்தையிம் மாறிவரும் தற்போதைய நிலமைகளையும் நீங்கள் கருத்தில் எடுத்துள்ளீர்கள், தொடர்ந்து விவாதிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

 

பேச்சுவார்த்தை மூலம்  சிங்களம் எந்த தீர்வையும் தரும் என்ற நம்பிக்கை அறவேயில்லை

அப்படி தரும்பட்சத்தில்

அதைக்குளப்பும்  தரப்பாக மட்டுமே

இசுலாமியத்தமிழர்கள் பாவிக்கப்படுவார்கள்

இருப்பார்கள்

இசுலாமியத்தமிழர்கள் ஒரு போதும் 

தமிழர்களுடன் எந்த தீர்வுக்கும் வரமாட்டார்கள்

வரவும் விடமாட்டார்கள்

இது எனது தனிப்பட்டகருத்தும்   அனுபவமும்.

 

அனுபவம் tw_blush:

அண்ணை எத்தனை பேச்சு வார்த்தைக்கு போனீர்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்டாலும் கட்டுமரத்திலை ஏறி  மற்ற நாட்டுப்பிரச்சனை தீர்க்கப்போன அனுபவம் மாதிரி ஒண்டும் வராது. Pandiyar.gif

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, arjun said:

அனுபவம் tw_blush:

அண்ணை எத்தனை பேச்சு வார்த்தைக்கு போனீர்கள் .

தனிப்பட்ட என எழுதியுள்ளேன்

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, arjun said:

அனுபவம் tw_blush:

அண்ணை எத்தனை பேச்சு வார்த்தைக்கு போனீர்கள் .

இதுக்கு பேச்சுவார்த்தைக்கு போகவேண்டிய அவசியமே இல்லையே. பேச்சுவார்த்தைகளின்போதே என்னென்ன நடந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சொல்லும்போது, எழுதும்போது கேட்டு வாசித்து அறிந்தாலே போதுமானது. என்ன அதற்கு கொஞ்சமாவது போது அறிவு என்பது வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், என்னசெய்யலாம், எனதும் உங்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, அனுபவங்களும் இதக்குள் எவ்வாறு திணிப்பது....

யதார்த்தம் என்று ஒன்றுள்ளதே..... திருகோணமலை தேர்தல் தொகுதியில் தற்போதய பெரும்பாண்மை முஸ்லிம்கள்....

கிழக்கில் மட்டு மட்டுமே மிச்சம்......

சேர்ந்து பயனிப்பதே, ஒரே மொழிபேசும் எமக்கு பாதுகாப்பானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.