Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் முதலிடத்துக்கு வந்தது வடக்கு மாகாணம்! - யாழ். மாவட்டமும் முதலிடத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2015ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில், அகில இலங்கை அளவில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன.

   

பரீட்சை திணைக்களத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் வீதம் 65.23 ஆகும். பரீட்சை திணைக்களத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் வீதம் 66.32 ஆகும். மாகாண மட்டத்தில் சபரகமுவ, மேல், ஊவா மற்றும் தென் மாகாணங்கள் முறையே 2ம், 3ம், 4ம் மற்றும் 5ம் இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் இரத்தினபுரி, மன்னார், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் 2ம், 3ம், 4ம் மற்றும் 5ம் இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.

கடந்த 2014ம் ஆண்டில் சிறந்த மாகாணமாக சப்ரகமுவ மாகாணமும், சிறந்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டமும் பதிவாகியிருந்தன.

http://www.seithy.com/breifNews.php?newsID=149366&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

கல்வியே எமது சொத்து...

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

மாவட்ட மட்டத்தில் இரத்தினபுரி, மன்னார், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் 2ம், 3ம், 4ம் மற்றும் 5ம் இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.


 

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர். உள்ளம் துள்ளிக் குதிக்குது. ஆனால் இது போதாது  இந்த வீதம் 90 க்கும் அதிகமாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் உயர்தரப்பரீட்சை எடுக்கும் வரை நல்லொழுக்கம் உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். பரீட்சை பெறுபேறுகள் குறைய எடுத்தவர்களும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்க்களும்தான் இன்றைய சூழலில் மனமுடைந்து கடைசியில் கெட்ட பழக்கவழக்கங்களுக்கு  அடிமையாகி சீரழிந்து போகிறார்கள். அவர்களையும் பல்வேறு தொழில் கல்விகளை கற்க வைத்து எமது சமுதாயத்தை எந்தவகையில் முன்னேற்றலாம் என்று கருத்தாடலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில்... போர் காலத்திலேயே இவை பெறப்பட்டவை தான். ஆனாலும் கிளிநொச்சி.. மன்னார்.. மட்டக்களப்பு மாவட்டங்களில் சித்திபெறுவோர் வீதம் அதிகரிப்பு என்பது.. பரீட்சை எழுதுவோரின் மொத்த தொகை சார்ந்தும் உள்ளது. உந்தச் சதவீதம் உண்மையான வளர்ச்சியின் அறிகுறியா என்பது ஆய்வுக்கு உட்பட வேண்டியது.. ஏனெனில்..

கடந்த காலங்களில்.. மாணவர்களின் இடம்பெயர்வால்.. சித்தி வீதம் என்பது குறைவடைவது போல் இருந்தாலும்.. மொத்த எண்ணிக்கை சார்ந்து இதில் ஒரு மாயை நிலை உள்ளது.

6/10 = 60%

2000/10000 = 20%

சதவீத அடிப்படையில் வைச்சுக் கொண்டு சரியான மதிப்பீட்டைச் செய்வது கடினம்.

சரியான புள்ளிவிபர பகுப்பாய்வு இங்கு அவசியம்.

எதுஎப்படியோ... வடக்குக் கிழக்கு மக்களின் மூலதனமே கல்வி என்பதால்.. அதில் அவர்கள் நிச்சயம் வளர்ச்சியும்.. உறுதியும்.. அடைவது மிக மிக மிக அவசியம். அது நியாயமாக எட்டப்பட்டால் மிக்க மகிழ்ச்சியே. tw_blush:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழரசு said:

2015ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில், அகில இலங்கை அளவில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன.

 

7 hours ago, விசுகு said:

நல்ல செய்தி

கல்வியே எமது சொத்து...

சிங்களவர்களை கதிகலங்க வைக்கும் செய்தி இது. கவனம்

விகிதாசாரங்கள் அது இது என்று தமிழ் இளைஞர்கள் காணாமல்  போனதும் அவர்கள்  அழிக்கப்பட்டதும்....இனக்கலவரம் தொடக்கம்  இன அழிப்பு வரைக்கும் மூல காரணம்............. ஈழத்தமிழனின் கல்விதான் அடிப்படைக் காரணம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.