Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனுக்கு “வாழும் வீரர்” விருது வழங்கி மதிப்பளித்தது கனடிய தமிழர் பேரவை! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு “வாழும் வீரர்” விருது வழங்கி மதிப்பளித்தது கனடிய தமிழர் பேரவை! 
[Tuesday 2016-01-19 07:00]

கனடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“வாழும் வீரர்”  (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.  திரு சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்திரு ம.ஏ.சுமந்திரன், விருதைப் பெற்றுக் கொண்டார்.

கனடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“வாழும் வீரர்”  (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.  திரு சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்திரு ம.ஏ.சுமந்திரன், விருதைப் பெற்றுக் கொண்டார்.
கனடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“வாழும் வீரர்” (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். திரு சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்திரு ம.ஏ.சுமந்திரன், விருதைப் பெற்றுக் கொண்டார்.

   இந்த விழாவுக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டிஒன் (Stephane Dion), குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் யோன் மக்கலம், ஒன்ரேறியோ மாகாண முதலமைச்சர் கத்லீன் வின், ஒன்ரேறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அன்ரியா கோர்வத், ரொறன்ரோ மாநகர சபை மேயர் யோன் ரோறி, மார்க்கம் நகர சபை மேயர் பிராங் ஸ்காப்பித்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி உட்பட மூன்று தட்டு அரசுகளில் உள்ள உறுப்பினர்கள் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கனடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டிஒன் பேசும் போது இலங்கையில் நீடித்து நிலைத்து வரும் இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வு காண்பதில் கனடா அக்கறையோடு இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேசும் போது கடந்த ஒக்ரோபர் முதல் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவும் சிறிலங்கா அரசும் கூட்டாக முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கனடாவின் பங்களிப்பு முக்கியமாக அமைந்திருந்தது என்றும் அதற்காக கனடிய அரசுக்கு நன்றி சொல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடமைப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீண்டகாலம் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டலாம் என்ற நம்பிக்கை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கிறது. அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.

ஆயிரத்துக்கும் அதிகமான விருந்தினர் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள்.

http://www.seithy.com/breifNews.php?newsID=149562&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

லூசுபயலுக எனக்கு வீரர் என்றால் வேறு மாதிரி 
சொல்லி தந்து விட்டாங்கள் வாத்திமார்!

சர்வேதேச வீரர் என்றேல்லா வந்திருக்க வேண்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஐயாவுக்கு ஒரே விருது தான்....கம்பன் கழகம் மாருதி விருது கொடுக்க காத்திருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ தமிழ் இனத்துக்கு செய்து இறந்த டேவிட் ஐயாவுக்கு என்ன விருது கொடுக்கப்போகிறார்கள்?

CTC முழுக்க முழுக்க புலிகளின் ஆதரவு அமைப்பு .2009 முதல் ஊடகங்களில் இவர்கள் பேட்டிகளை இன்றும் பார்க்கலாம் .

2009 பின்னர் பல புலம் பெயர் அமைப்புகள் போல அவர்கள் நிறமும் மாற தொடங்கிவிட்டது .முள்ளிவாய்காலுக்கு முன்னர் கூட இவர்கள் புலிகள் ஆதரவு படம் போட்டது தமது கனேடிய அரசியல் ,வியாபார தேவைகளுக்குத்தான்.தமிழர்களுக்கு இது ஒன்றும் புதியவிடயமல்ல .

நாட்டில் இருந்த ,இப்போ இருக்கும் எமது அரசியல் கட்சிகள் ஆகட்டும் புலம்பெயர் அமைப்புகள் ஆகட்டும் தமது தனிப்பட்ட நலன்களுக்கு அடுத்துத்தான் மக்கள் சேவையும் தேவையும் 

போனவாரம் நடந்த பொங்கல் விழா அப்பட்டமாக அதை வெளிக்காட்டியது .பாதர் இமானுவேல் ,சுரேன் சுரேந்திரன் ,லிபரரா ,முக்கிய கனேடிய வியாபாரிகளால் விழா நிரம்பியிருந்தது .இலங்கை அரசு கூட இவர்களின் மீதான தடையை எடுத்துவிட்டது .

இனியாவது இவர்கள் செயற்பாடுகள் சற்றேனும் நாட்டில் இருக்கும் மக்களுக்காக இருந்தால் சந்தோசம் .சம்பந்தருக்கு பட்டமோ சுமந்திரனுக்கு அழைப்போ இவர்கள் செய்தது பெரிய விடயம் அல்ல .நாளை இவர்களே புலிகளை பயங்கரவாதிகள் என்றும் சொல்லாமல் விட்டால் சரி . 

பாவம் போராட போன போராளிகளும் பாதிப்படைந்த மக்களும் தான் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தில் கொடுக்காமல் வாயால் வாழ்ந்த வீரர் என்று நேரிடையாகவே கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

12592426_1074284542602194_31067927597537

இரா.சம்பந்தன் அவர்கள்  “வாழும் வீரர்” (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

தாம் வரித்துக்கொண்ட கொள்கைக்காக உயிர் விடுவது  தான் "வீரம்" என்ற நிலை மாறி, 
இன்று உயிர்  வாழ்வதே  "வீரம்" என்றாகிவிட்டது.........

எனது கருத்தல்ல. Facebook ல் வாசித்தது.  

Edited by trinco

12439509_456117751261114_716769180800743

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் வெட்டி வீரர் விருது தான் இந்த விருதுக்கு சரியான தலைப்பு.

tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.