Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் புதிய கட்சியில் மகிந்த இருப்பார்': கோட்டாபய

Featured Replies

இலங்கையின் புதிய கட்சியில் மகிந்த இருப்பார்': கோட்டாபய

  • 150122115213_gotabaya_rajapaksa_512x288_
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார்

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உருவாகவுள்ள கட்சியில், மஹிந்த ராஜபக்ச நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் புதிய கட்சியொன்று உருவாகவுள்ளதாக ஊடகங்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் பிபிசி வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் தற்போது எதிர்க்கட்சி என்று ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமையினால் மக்களின் நியாயமான தேவைகளுக்காக போராடுவதற்கு பலமான ஒரு எதிர்க்கட்சி தேவைப்படுவதாக அவர் கூறினார்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் (சம்பந்தன்), மக்களின் பொதுப் பிரச்சனைகள் பற்றி பேசாமல், ஒரு பிரதேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது குறித்த ஒரு சமூகத்தினரின் பிரச்சனைகள் பற்றி மட்டும் பேசும் ஒருவராக இருக்கிறார் எனவும் கோட்டாபய குற்றச்சாட்டினார்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள கட்சியின் தலைவர் யார் என்று இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், மக்களை ஒன்று திரட்டுவதற்காக முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவம் முக்கியமானதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

http://www.bbc.com/tamil/global/2016/01/160122_gottabaya_party

இப்படியே எல்லோரும் புதிய கட்சிகளைத் தோற்றுவித்தால் யார் என்ன செய்கிறார்கள் என்று எதுவும் புரியவில்லை. என்ன செய்வது, ஜனநாயகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி ஆருக்கு என்னத்துக்கு பயந்து கோத்தவாயனை இன்னும் உள்ளுக்கை போடாமல் இருக்கிறாங்கள்????  confused0006.gif

22 minutes ago, குமாரசாமி said:

அதுசரி ஆருக்கு என்னத்துக்கு பயந்து கோத்தவாயனை இன்னும் உள்ளுக்கை போடாமல் இருக்கிறாங்கள்????  confused0006.gif

அவுஸில இருந்து படையணி இறங்கும் என்ற பயம் தான்tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்கை போட்டால் அண்ணன் தம்பிக்கு  ஆதரவு கூடிவிடும் அதிலும் சீனாவின் ஒரே ட்ரம் கார்ட் தற்போதைக்கு இவர்கள்தான் மேற்குலகு அதிக அழுத்தம் குடுக்காத சொரிலங்கவுக்கான தடுப்பணையாக  ரணிலுக்கு இவர்கள் தெரிகின்றனர்.

எல்லாத்தையும் பொது வெளியில் கதைக்கனும் இரு பக்கமும் பார்க்கணும் கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்பமே எனும் எம்மைபோல் கேனைபயளுகளா அவங்கள் ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தெனாலி said:

அவுஸில இருந்து படையணி இறங்கும் என்ற பயம் தான்tw_confused:

அட அதுவே விசயம்....நானும் என்னமோ ஏதோ எண்டு கலங்கிப்போனன்......தாங்ஸ்பா 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தெனாலி said:

அவுஸில இருந்து படையணி இறங்கும் என்ற பயம் தான்tw_confused:

எந்தக்கேள்விக்கு என்ன பதில் எழுதவேண்டும் என்ற பொது அறிவு இல்லாத கூட்டம். எதுக்கு எடுத்தாலும் ஒன்றில் புலிவாந்தி அல்லது புலிவால் வாந்தி. என்ன செய்யிறது பானையில இருந்தால்தானே அகப்பையில வரும். ம் ம் சும்மா ஊரில விசிலடிச்சு திரிஞ்சிட்டு கனடாவுக்கு  போய் கையை தூக்கினதுகளட்ட வேற என்னத்தை எதிர்பார்க்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

எந்தக்கேள்விக்கு என்ன பதில் எழுதவேண்டும் என்ற பொது அறிவு இல்லாத கூட்டம். எதுக்கு எடுத்தாலும் ஒன்றில் புலிவாந்தி அல்லது புலிவால் வாந்தி. என்ன செய்யிறது பானையில இருந்தால்தானே அகப்பையில வரும். ம் ம் சும்மா ஊரில விசிலடிச்சு திரிஞ்சிட்டு கனடாவுக்கு  போய் கையை தூக்கினதுகளட்ட வேற என்னத்தை எதிர்பார்க்கிறது 

புலி புலி என்று பல சகாப்தங்களாக கத்தி கத்தி பழகிவிட்டது. இப்ப அவர்கள் இல்லை என்றால் யாரால் சும்மா இருக்கமுடியுமோ இல்லையோ இவர்களால் நிச்சயம் முடியாது. புலிவாலாவது கிடைத்தால் போதம் என்று தேடித்தேடி அலைகிறார்கள். உருப்படியாக தமிழர்க்கு உதவிகள் தீர்வு என்றால் அதைப்பற்றி விவாதிக்கலாம் பேசலாம். எப்பவாவது அது சம்பந்தமாக  எழுதியிருக்கின்றார்களா? அப்படியான திரிகளில் கூட இவர்களது எழுத்து எது சார்ந்து இருக்கு...?

13 hours ago, தெனாலி said:

அவுஸில இருந்து படையணி இறங்கும் என்ற பயம் தான்tw_confused:

இதில் எங்கு புலி என்று இருக்கு ,

புலி புலி என்று பிழைப்பு நடத்தியவர்களுக்கு என்ன எழுதினாலும் புலியாய் தெரியுது .

யாரும் மறந்தாலும் நீங்கள் மறக்கமாட்டீர்கள் அவ்வளவு சுகம் கண்டாச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

படை என்றால் யாரென்று குழந்தைக்கும் தெரியும்....

சோறு என்றால் யாரென்றும் தெரியும்....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.