Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனைச் சந்திக்காமலேயே திரும்பிய சுஷ்மா..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெல்லி: இலங்கைக்கு சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனை மட்டும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரைத் தவிர மற்றவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் சுஷ்மா. இது எந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு உதவி புரியும் என்று தெரியவில்லை.

 அதை விட முக்கியமாக தமிழர்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக எதுவும் விவாதிக்கப்பட்டது போலவும் தெரியவில்லை. தமிழ் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்த விக்னேஷ்வரனை சுஷ்மா சந்திக்கவில்லை என்பதிலிருந்தே தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான ஆக்கப்பூர்வமான பேச்சுக்கள், சுஷ்மாவின் பயணித்தின்போது இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பதை ஊகிக்க முடிகிறது. 

அதேசமயம், இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான ஆர். சம்பந்தனை சுஷ்மா சந்தித்துப் பேசினார். கிழக்கு மாகாண தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இந்திய வம்சாவளி தமிழர்களின் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதேபோல இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்களையும் சுஷ்மா சந்தித்துப் பேசினார்.

ரணிலுடன் ஒரு மணி நேர சந்திப்பு

07-1454823770-sushma-ranil.jpg

தனது பயணத்தின்போது ரணில் விக்கிரமசிங்கேவுடன் ஒரு மணி நேரம் தனியாகப் பேசினார் சுஷ்மா. அப்போது இரு தலைவர்களம் பரஸ்பரம் தத்தமது நாடுகளில் முதலீடுகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டனர். திரிகோணமலையில் இரு நாடுகளும் இணைந்து ஏற்படுத்தவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்துத்தான் இருவரும் முக்கியமாகப் பேசியுள்ளனர். அனைத்து நிலைகளிலும் இரு நாடுகளும் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரணில் வற்புறுத்தினாரம்.
 

07-1454823747-sushama-ceyloncongress.jpg

தமிழர் பிரச்சினை? 
இந்த சந்திப்பின்போது எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் பேசி முடித்த பின்னர் தமிழர் பிரச்சினை குறித்தும் பொதுவாகப் பேசியுள்ளனர் இரு தலைவர்களும். இந்தப் பேச்சின்போது சுஷ்மா சுவராஜ் தரப்பில் அதாவது இந்தியத் தரப்பில் எந்த வலியுறுத்தலும் முன்வைக்கப்பட்டதாக தெரியவில்லை.

மாறாக, ரணிலே பொதுவாக தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் குறித்து இலங்கை அரசு தன்னாலான முயற்சிகளைத் தொடரும் என்று தெரிவித்தாராம்.

07-1454823762-sushma-sirisena.jpg

சிறிசேன - சந்திரிகா தனது பயணத்தின்போது அதிபர் சிறிசேன, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் சுஷ்மா. இந்த சந்திப்புகளிலும் பொதுவான பேச்சுக்களே இடம் பெற்றுள்ளன.

07-1454824043-sambandan-300.jpg

சம்பந்தன் - முஸ்லீம் தலைவர்கள் மேலும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவருமான ஆர். சம்பந்தனுடனும் சுஷ்மா பேசினார். இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்கள், கிழக்கு மாகாண தலைவர்கள், தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துள்ளார் சுஷ்மா.

07-1454824083-wigneswaran24-600.jpg

விக்னேஷ்வரனைப் புறக்கணித்தார் இத்தனை பேரைச் சந்தித்த சுஷ்மா, இலங்கை வடக்கு மாகாண மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் விக்னேஷ்வரனை மட்டும் சந்திக்கவில்லை. அவரைச் சந்திக்கக் கூடாது என்று சுஷ்மாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மக்களின் அங்கீகாரம் பெற்றவரைச் சந்திக்காமல் எப்படி தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரான, அங்கீகாரம் பெற்றவரான, முதல்வர் பொறுப்பில் இருக்கக் கூடியவரை புறக்கணித்து விட்டு சுஷ்மாவின் இந்த இலங்கை பயணம் இனிதே முடிவுற்றுள்ளது.

தமிழர்களுக்கு பலன் இருக்க வாய்ப்பில்லை உண்மையில் சுஷ்மாவின் இந்தப் பயணம் ஈழத் தமிழர்களுக்கு நலன் பயக்குமா என்பது சந்தேகம்தான். அதேபோல ராமேஸ்வர் மீனவர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். அதுகுறித்தும் கூட ஆக்கப்பூர்வமாக பேசப்படவில்லை என்றே தெரிகிறது.
 

இந்திய வர்த்தக நலனே பிரதானம் இந்த கூட்டு மாநாடு மற்றும் சந்திப்புகளின் முக்கிய நோக்கம் இரு நாட்டு வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதும், முதலீடுகளை அதிகரிப்பதுமே என்றே தெரிகிறது, கருதப்படுகிறது.

07-1454823739-sushma-return.jpg

http://tamil.oneindia.com/

  • கருத்துக்கள உறவுகள்

 அவர்கள்  எப்போதுமே உண்மையையும், உண்மையானவர்களையும் சந்திப்பதில்லை. தங்களுக்குஉண்மையானவர்களை மட்டுந்தான் சந்திப்பார்கள். உதெல்லாம் முதல்வரை தனிமைப்படுத்தி வெட்டியாளும் தந்திரம்.  

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் பழைய  ஏழரை நாட்டிற்குள் நுழைந்திருக்கிறது ....
அட்டமத்து சனி திரும்பவும் ஒட்டபோகிறதோ தெரியாது ......நினைக்கவே கிருமி கலங்குது 

  • கருத்துக்கள உறவுகள்

அவைட வார்த்தைக்கு சலாம் போடுறவை மட்டும் தான் அவை சந்திப்பினம். இதுதான் அவையிட ஹிந்திய இறையாண்மைக் கொள்கை. இது தெரியாமல்....................... நாங்க இன்னும். அதுவும் ஹிந்தியாவின் நயவஞ்சங்களால் அழிந்து ஒழிந்த நிலையிலும்....... அதனை இன்னும்.. நம்பிக்கிட்டு... எதிர்பார்த்துக்கிட்டு. பரிதாபம் எங்கள் நிலை தான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கறைப்பட்ட கரங்களைக் குலுக்குவதை விடவும்... குலுக்காமல் விட்டதே ..முதல்வருக்கும் நல்லது! அவரது அரசியல் எதிர்காலத்துக்கும் நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

 

விக்கி ஐயா

ஈழத்தமிழரின் நலன் சார்ந்து சரியான பாதையில் பயணிக்கின்றார் என்பதற்கு  இது சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனை சந்தித்திருந்தால் மட்டும் தமிழர்களுக்கான உரிமைகள் அனைத்தும் உடனே கிடைத்துவிடுமாக்கும், அட போங்கப்பா... :(

இலங்கைத் தமிழர்களில், ஈனத்தமிழர்களாக இருப்பவர்களும் என்று ஈழத்தமிழராக மாறுகின்றனரோ அன்றுதான் உரிமையும், மதிப்பும், கவுரவமும் தேடிவரும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.