Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்!

Featured Replies

 

நகைச்சுவை நடிகர் குமரி முத்து காலமானார்!

kumari.jpgசென்னை: நகைச்சுவை நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

நகைச்சுவை நடிகர் குமரி முத்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை குமரி குத்துவின் உயிர் பிரிந்தது. 

நடிகர் குமரி முத்து முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தனது வித்தியாசமான சிரிப்பினால், மக்களை சிரிப்பூட்டி பிரபல்யமானவர். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர், 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குமரி முத்து நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இவர், தி.மு.க. பேச்சாளராகவும்

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பெயர்.. குமரி முத்து என்று இன்று தான் தெரியும்!

இவரது திரைப் பெயர்.. கல்லாப்பெட்டி சிங்காரம் என்று நினைக்கிறேன்!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் சிரிப்பு ஸ்பெசல். 

இரங்கலும் கண்ணீரஞ்சலியும். 

காலம் புதிய வரவுகளையும் பழைய பிரிவுகளையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. மனித மனமோ தினமும் ஏமாற்றங்களை கண்டாலும் திடப்படுத்திக் கொண்டு முன்னேறுகிறது.. எல்லை வரையறை என்று தெரிந்தும். இதுதான் வாழ்க்கை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

இவரது பெயர்.. குமரி முத்து என்று இன்று தான் தெரியும்!

இவரது திரைப் பெயர்.. கல்லாப்பெட்டி சிங்காரம் என்று நினைக்கிறேன்!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

தன்னுடையா மாறுகண் பார்வையோடு கூடிய  வித்தியாசமான சிரிப்பாலும்  எல்லோரையும் சிரிக்க வைய்த்த கலைஞனுக்கு  கண்ணீர் அஞ்சலிகள்

இல்லை புங்கை அண்ணா. கல்லாப்பட்டி சிங்காரம் வேறு. குமரிமுத்து வேறு.
இருவரும் சில படங்களில் ஒன்றாக நடித்திருக்கிரார்கள். டார்லின் டார்லின் டார்லிங் ...படத்தில் பாக்கியராஜின் அப்பா தான் கல்லாப்பெட்டி சிங்காரம்.

கல்லாப்பெட்டி சிங்காரம் ஏற்கனவே இயற்கை எய்திவிட்டார்..

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sasi_varnam said:

தன்னுடையா மாறுகண் பார்வையோடு கூடிய  வித்தியாசமான சிரிப்பாலும்  எல்லோரையும் சிரிக்க வைய்த்த கலைஞனுக்கு  கண்ணீர் அஞ்சலிகள்

இல்லை புங்கை அண்ணா. கல்லாப்பட்டி சிங்காரம் வேறு. குமரிமுத்து வேறு.
இருவரும் சில படங்களில் ஒன்றாக நடித்திருக்கிரார்கள். டார்லின் டார்லின் டார்லிங் ...படத்தில் பாக்கியராஜின் அப்பா தான் கல்லாப்பெட்டி சிங்காரம்.
 

சரியான தகவலுக்கு நன்றி..சசி!

தமிழ் சினிமா உலகிலிருந்து எவ்வளவு தூரம் விலகிப் போய் விட்டேன் என்று இப்போது தான் தெரிகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

சரியான தகவலுக்கு நன்றி..சசி!

தமிழ் சினிமா உலகிலிருந்து எவ்வளவு தூரம் விலகிப் போய் விட்டேன் என்று இப்போது தான் தெரிகின்றது!

சினிமாவை விட்டு தள்ளி நிற்பதில் குறை ஒன்றுமில்லை அண்ணா . நீங்கள் இயல்பாய் தமிழ் உணர்வோடு ஒன்றர கலந்து நிற்பதே பெருமை.

ஆஹாஹாஹாஹாஹாஹாஹா.. மறக்க முடியாத குமரி முத்து!

ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஆனால் குமரிமுத்துக்கு அந்த சிரிப்புதான் அடையாளம். சிரிப்பு நடிகர்களால் மற்றவர்கள்தான் சிரிப்பார்கள். ஆனால் இவரது சிரிப்புதான் இவரது அடையாளமாகவும் மாறியது எவ்வளவு பொருத்தம் பாருங்கள். தனது கண்ணையும் கூட தனது பலமாக மாற்றிக் கொண்டவர் குமரி முத்து. இவரது சிரிப்பும், இவர் நடித்த காட்சிகளும் மறக்க முடியாதவை. கடைசி வரை திமுக காரராகவே இருந்து மறைந்தவர் குமரி முத்து. தான் உண்டு, தனது வேலை உண்டு என்றும் இருந்தவர். அமைதியானவர், அன்புள்ளம் கொண்டவர்.
 

நாடக நடிகர்

குமரி முத்து அடிப்படையில் நாடக நடிகர். மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் சினிமாவுக்கு வந்தார். 60களின் இறுதியில் நடிக்க அவர் அவர் நடிக்காத நடிகர்களே இல்லை என்று கூறலாம்.

எம்.ஜி.ஆர். - சிவாஜி எம்.ஜி.ஆர். -

சிவாஜி படங்களில் ஆரம்பித்த இவரது நடிப்பு அஜீத், விஜய் வரையும் தொடர்ந்தது. நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு வலம் வந்தவர் குமரி முத்து.

சிரிப்பு

ஆஹாஹாஹாஹா என்று இவர் சிரிக்கும் ஸ்டைலே தனி. அந்த சிரிப்புதான் குமரிமுத்துவின் அடையாளமாகவும் மாறிப் போனது.

மறக்க முடியாத படங்கள்

இவரது நடிப்பில் நண்டு, கோழி கூவுது, ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் காமெடி பேசப்பட்டது.

பாக்யராஜுடன்

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் இவர் காமெடியில் கலக்கியிருப்பார். வெகுவாகப் பேசப்பட்டது இவரது கேரக்டர்.

திமுக பேச்சாளர்

கடைசி வரை தனது கொள்கையிலிருந்து இறங்காமல் திமுகவில் செயல்பட்டு வந்தவர் குமரிமுத்து. திமுகவில் மேடைப் பேச்சாளராக வலம் வந்தவர். பதவி என்று எதையும் எதிர்பார்க்காமல் செயல்பட்டவர்.


Read more at: http://tamil.filmibeat.com/specials/kumarimuthu-no-more-039046.html

 

 

 

சிரிப்புக்கே புகழ் பெற்றவர் மறைந்து விட்டார்- குமரிமுத்து மறைவிற்கு கருணாநிதி, ஸ்டாலின் இரங்கல்

 

தமிழ் சினிமாவில் காமெடியில் கோலோச்சிய நடிகர் குமரிமுத்து இன்று காலமானார். அவருடைய மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி, ''திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலை வரும், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும், குணச்சித்திர நடிகருமான குமரி முத்து அவர்கள் இன்று காலையில் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து திடுக்கிட்டேன். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் குடும்பத்தினருடன் என்னை வந்து சந்தித்து, மருத்துவ மனையிலிருந்து உடல் நலம் பெற்று வீடு திரும்பி விட்டதாகவும், மருத்துவ மனையில் சிகிச்சை பெற உதவியதற்காக நன்றி தெரிவித்துவிட்டும் சென்றார். இவருடைய சிரிப்பே இவரது புகழை அதிகப்படுத்தியுள்ளது.

திரைப்படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் "கலைமாமணி", "கலைச்செல்வம்", ஆகிய விருதுகளைப் பெற்றவர். பகுத்தறிவுப் பாசறையாம் திராவிடர் கழகம் இவருக்கு "பெரியார் விருது" வழங்கி கௌரவித்துள்ளது. குமரி முத்துவின் மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூலில், ''கலையுலகில் கழகத்தின் கொள்கை முழக்கமாக விளங்கிய நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.

கலைவாணர் என்.எஸ்.கே.வைப் போலவே குமரி மாவட்டத்திலிருந்து கலைத்துறைக்கு வந்த குமரி முத்து அவர்களும் கலைவாணர் போலவே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவையை நமக்கு வழங்கியவர். தன் வாழ்நாளின் இறுதி வரை உறுதிமிக்க தி.மு.க.காரராக வாழ்ந்தவர்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.



Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-stalin-condolence-kumarimuthu-death-247950.html

ஆழ்ந்த அஞ்சலிகள்...!!!

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 குணச்சித்திரத்திலும் , நகைச்சுவையிலும் அசத்தும் குமரிமுத்துவுக்கு ஆழ்ந்த  இரங்கல்கள்....!

5 hours ago, புங்கையூரன் said:

இவரது பெயர்.. குமரி முத்து என்று இன்று தான் தெரியும்!

இவரது திரைப் பெயர்.. கல்லாப்பெட்டி சிங்காரம் என்று நினைக்கிறேன்!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

vlcsnap-2012-10-14-11h23m45s202.png

கல்லாப் பெட்டி சிங்காரம்...!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

 குணச்சித்திரத்திலும் , நகைச்சுவையிலும் அசத்தும் குமரிமுத்துவுக்கு ஆழ்ந்த  இரங்கல்கள்....!

vlcsnap-2012-10-14-11h23m45s202.png

கல்லாப் பெட்டி சிங்காரம்...!

நன்றி....சுவியர்!

ஆழ்ந்த இரங்கல்கள்

  • தொடங்கியவர்

இந்த சிரிப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் போராட்ட குணம் யாருக்குத் தெரியும்?

 

ன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூர் கிராமத்துக்கு அப்போது' பாவைக்கூத்து ' நடத்த ஒரு பிரபலமான ஒரு நாடகக் குழு வந்திருந்தது. அன்றைய தினம் அதே கிராமத்தில் மற்றொரு நாடகமும் நடந்தது. அதனை பார்க்க பாவைக்கூத்துக் குழுவும் அமர்ந்தது.  நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிற்காக திரைக்குப் பின்னாலிருந்து ஏற்ற இறக்கங்களுடன் ஒருவர்  குரல் கொடுத்துப் பாடினார் . அவர் பாடிய முறை  அக்குழுவினருக்கு மிகவும் பிடித்துப் போனதால் குரல் கொடுத்த நடிகரை அழைத்து பாராட்டிய அவர்கள்,  அவரையும் தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டனர்.

kumari%281%29.jpg

அப்போது  நாடக உலகுக்கும்,  பின்னாளில் திரையுலகுக்கும் திறமையான நடிகர் ஒருவர் கிடைத்தார். ஊர் ஊராக அந்தக் குழுவினருடன் சுற்றி நாடக அனுபவம்பெற்ற அவர்தான் பின்னாளில் வெடிச்சிரிப்பால் ரசிகர்களை அதிர வைத்த குமரி முத்துவாக மாறினார்.

நடிகர் குமரிமுத்து உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.  நகைச்சுவை நடிகர் என தொழில் ரீதியாக அவரை குறிப்பிட்டாலும்,  சுயமரியாதை குணமும் திராவிடக்கொள்கையில் தீவிர பற்றும் கொண்டவர் குமரிமுத்து. சினிமாவில்தான் குமரிமுத்து. நாடக உலகில் அந்நாளில் அவரது பெயர் வாத்தியார் முத்து.

ஆயிரம் ஆயிரமாம் கலைஞர்களை கண்ட சினிமாவில் ஆச்சர்யமாக ஒரு சிலர் மட்டும் தங்களது அங்க சேஷ்டைகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் குமரிமுத்து. “ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாாா”... என அரைப்புள்ளி, கமா, முழுப்புள்ளி இன்றி ஒரு வார்த்தையை இழுத்து நீட்டி முழுக்கி சிரிப்பது என்பது அவரது பாணி. அவரது பெயரை குறிப்பிட்டால் நம்மையுமறியாமல் அவரது பாணியிலேயே ஒருமுறை சிரித்துவிடுவோம். அதுதான் குமரிமுத்து.

நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்ல, தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய குமரிமுத்து,  சினிமாவுக்கு முதல்தலைமுறை நடிகர் அல்ல. அவரது சகோதரர் நம்பிராஜன் அந்நாளில் மேடை மற்றும் சினிமா பிரபலம்தான். பராசக்தியில் பூசாரியாக வருபவர்தான் குமரிமுத்துவின் சகோதரர். இவரது அண்ணியும் பிரபல நடிகையே. தாம்பரம் லலிதா என்றால் அந்நாளில்  கொடுமையான அண்ணி, வெடுக் வெடுக் என பேசும் ஈவு இரக்கமற்ற பெண்மணி போன்ற கதாபாத்திரம் என்றால் அவர்தான் நினைவுக்கு வருவார். மீண்ட சொர்க்கம், பாகப்பிரிவினை, தெய்வப்பிறவி, உள்ளிட்ட படங்களில் தாம்பரம் லலிதாவின் நடிப்பு பிரபலம்.

kums%20.jpg

பள்ளிப்பருவத்திலேயே நாடகங்கள் மீது காதல் கொண்ட குமரிமுத்து, அப்போதே சொந்தமாக நாடகங்கள் நடத்தினார். நாடகங்கள் மீதான காதலால் எட்டாம் வகுப்போடு புத்தகப்பைக்கு விடை கொடுத்து விட்டு, சென்னைக்கு ரயில் ஏறினார். சகோதரர் நம்பிராஜன் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அண்ணனிடம் இருந்து சமிக்ஞை கிடைக்காததால் தனது முயற்சியிலேயே வைரம் நாடக சபாவின் நாடகங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்தார்.

ஆயினும் சினிமா வாய்ப்புகள் சிரமமாகவே இருந்தது. நொந்துபோய் ஊருக்கு திரும்பினார் குமரிமுத்து. இந்நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டவர்.  இதில் பல நாடகங்களை இயக்கவும் செய்தார். நாடகங்களில் பிரதான நகைச்சுவை வேடம் ஏற்று மக்களிடையே பிரபலம் அடைந்தார். அந்த ஆசையில் மீண்டும் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார் குமரிமுத்து.

அண்ணனின் முயற்சியில் சிறுசிறுவேடங்கள் எப்போதாவது கிடைத்தன. கூட்டத்துடன் கூட்டமாக எட்டாவது வரிசையில் நிற்கும் வாய்ப்புதான் அவருக்கு அப்போது கிடைத்த பெரிய வாய்ப்பு.  70களின் மத்தியில் சில படங்களில் தலைகாட்டினார் குமரிமுத்து. சினிமா உலகில் வாய்ப்பு கேட்டு அலைந்தபோது அவரது பெயர் கே.எம்.முத்து. சினிமா உலகை பீடித்திருக்கும் ராசி,  நம்பிக்கை இவரையும் விடவில்லை. ராசிக்காக தன் பெயரை குமரி முத்து என மாற்றிக்கொண்டார்.

1968 ல்,  சென்னை  மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் குமரிமுத்துவின் நாடகம் அரங்கேறியது. அந்த நாடகத்தை பார்க்க வந்த பிரபல கதை-வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனுக்கு குமரிமுத்துவின் நடிப்பு பிடித்துவிட,  எல்.பாலுவிடம் அவரை அறிமுகப்படுத்தினார். விளைவு,  பாலு அப்போது இயக்கிவந்த ‘பொய் சொல்லாதே’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாகேஷுடன் ஒரே ஒரு காட்சியில் முடிதிருத்துபவராக வருவார். தொடர்ந்து ‘தங்கதுரை’  நடிகை தேவிகா சொந்தமாக தயாரித்த ‘’வெகுளிப் பெண்’’ என சில படங்களில் நடித்தார். ‘இவள் ஒரு சீதை’ படத்தில் காந்திமதியுடன் இணையாக நடித்தார்.

muthu.jpg

திரைப்பட வாய்ப்புகள் குறைந்து நாடகம்,  சினிமா என இரண்டுங்கெட்டனாக குமரிமுத்து இருந்த காலங்களில் வானொலி மற்றும் மேடை நாடகங்களில் நடித்துவந்தார். கிறிஸ்துவ கலை அமைப்பு ஒன்று நடத்திய நாடகங்களில் குமரிமுத்து நடித்துவந்தபோது,  புகழ்பெற்ற இயக்குநரான மகேந்திரன் அங்கு நாடக வசனங்களை எழுதிக்கொண்டிருந்தார். அவருடன் ஏற்பட்ட சந்திப்பு, குமரிமுத்துவிற்கு சினிமாவில் நல்லதொரு இடம் கிடைக்க காரணமானது. நாடக மேடைகளில் இவரது திறமையை அறிந்திருந்த இயக்குநர் மகேந்திரன்,  80களில் தனது படங்களில் குமரிமுத்துவிற்கு நல்ல கதாபாத்திரங்களை வழங்கினார்.

குமரிமுத்துவுக்கென தனியே கைதட்டல்கள் கிடைக்க ஆரம்பித்தது அந்தநாளிலிருந்துதான். முள்ளும் மலரும்’ , ‘உதிரிப்பூக்கள்’, ‘நண்டு’ போன்ற படங்கள் குமரிமுத்துவை திறமையான நடிகராக சினிமா ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. சினிமா உலகில் நன்கு அறியப்பட்ட நடிகரானார். ‘அழகிய கண்ணே’ படம் வரை ஒன்பது படங்களில் மகேந்திரனுடன் இணைந்து பணியாற்றினார். இவருக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தவை ‘நண்டு’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஆகியவை. இனிவரும் தலைமுறைகளுக் கும் குமரிமுத்துவை அறிமுகப்படுத்தப்போகும் திரைப்படங்கள் என இவற்றை குறிப்பிட்டால் மிகையல்ல. தொடரந்து பல படங்களில் பிசியான நடிகரானார்.

kumarimuthu%20election%20campaigh.jpg

கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ படம் குமரிமுத்துவின் திறமையை சொல்லும் முக்கிய படங்களில் ஒன்று. நடிப்பில் அசரடிக்கும் ஆச்சி மனோரமாவின் கணவர் வேடம், கே.பாக்யராஜின் தந்தை கதாபாத்திரத்தில் முடிதிருத்தும் கலைஞராக  அத்தனை பேரையும் அசரடித்திருப்பார். குமரிமுத்துவின் திறமையைச் சொல்லும் மற்றொரு படம் ‘பாலைவனச் சோலை’.ஈரவிழிக்காவியங்கள், தேவி ஸ்ரீ தேவி, இது நம்ம ஆளு, கோழிக் கூவுது, கொக்கரக்கோ, தூரம் அதிகமில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று, ஏதோ மோகம், பசி, நினைவுகள், இலையுதிர்க் காலம் போன்ற 200–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் சீனியராக இருந்தாலும், தன்னைவிட இளையவர்களிடம் எந்தவிதமான ஈகோவுமின்றி நடித்தார் குமரிமுத்து. இவரது ஒற்றைப்பார்வையையும் அகன்ற சிரிப்பையும் கவுண்டமணி பல படங்களில் கிண்டலடிப்பதுண்டு. சினிமாவின் மீதும்,  ரசிகர்களை சிரிக்கவைப்பதிலும் உள்ள ஆர்வத்தில் அவற்றை அனுமதிப்பார்.

குமரி முத்து கருணாநிதியிடம் காட்டிய நேர்மை!

திரைப்படங்களில் பிரபலமானபிறகும் நாடக ஆர்வத்தை குறைத்துக்கொள்ளவில்லை அவர். தனது சொந்த நாடகக் குழுவான குமரி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நாடகக்குழுவை நீண்டநாட்கள் நடத்திவந்தார். ‘சிரிப்புத்தான் வருகுதய்யா’, ‘சிந்திக்க ஒரு நிமிடம்’ ஆகிய நாடகங்களை இந்த நாடக குழு அரங்கேற்றிவந்தது. திமுக மீதும்,  கருணாநிதி மீதும் அளப்பரிய அன்பு கொண்டவர் குமரிமுத்து. கட்சியின் சீனியர் நடிகர்கள் பலரும் ஏதோ ஒருவேளையில் மனத்தாங்கல் அடைந்து எதிர்கூடாரத்தை அண்டியபோதும் இறுதிவரை திமுக மற்றும் அதன் தலைவர் மீது பற்றுடன் இருந்தவர் குமரிமுத்து. காரணம் எதிர்பார்ப்பில்லாமல் அன்பு செலுத்தியதே.

kumarimuthu%20600%201.jpg

“இந்தப் பயலுக எல்லாம் பதவியை அனுபவிச்சிட்டு, கட்சியை விட்டு ஓடிப்போயிட்டானுங்க. எனக்கு எந்தப் பதவியும் கிடைக்காததால நானும் போகப்போறேன்னு கிளப்பி விடுறாங்க. எதையும் எதிர்பார்த்து நான் கட்சியிலே இல்லை. கலைஞர் சொன்னாலும் சொல்லாட்டாலும் நான்பாட்டுக்கு பிரச்சாரத்துக்கு கிளம்பிடுவேன். உதயசூரியனுக்கு நான் ஓட்டுக்கேட்கிறதை தலைவரும் தளபதியும்கூட தடுக்கமுடியாது. என்னைப் பற்றி தப்பான தகவல் எதுவும் வந்தா போட்டுடாதீங்க. நான் எப்பவும் ஒரே கட்சிதான்”

இது நடிகர் குமரிமுத்து கருணாநிதியிடம் காட்டிய நேர்மை. ஆனால் அந்த கருணாநிதி கடைசி வரை அவரை வெறும் பேச்சாளராகவே வைத்திருந்தார் என்பது வேறு விஷயம்.


தென்னிந்திய நடிகர் சங்க விவகாரத்தில் முதலில் பலியான நடிகரும் இவர்தான். இளம் தலைமுறை நடிகர்கள் சங்கத்தை கொண்டுசெல்லும் முறையை எதிர்த்து நீண்டபோராட்டம் நடத்தியவர். அதற்காக சங்கத்தின் நிர்வாகிகளால் அவமானத்தை சந்தித்தவர். தனது போராட்டத்தின் எதிரொலியாக சந்தாவை புதுப்பிக்கவைில்லையென காரணம் கூறி சங்க உறுப்பினராக தொடர முடியாதபோது சட்டப்போராட்டம் நடத்தினார்.

kumarimuthu%20election%20campaigh%202.jp

புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றபோது முதல் நடவடிக்கையாக அவர்கள் செய்தது, குமரிமுத்துவை தென்னிந்திய திரைப்பட சங்க உறுப்பினருக்கான அடையாள அட்டையை வழங்கியதுதான்.  இது அவரது நடிப்புக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல... போராட்டக் குணத்துக்கும் கிடைத்த வெற்றியும் கூட. 

குமரிமுத்து மறைந்தாலும் அவரது சிரிப்பொலி கேட்டுக் கொண்டுதான் இருக்கும்!

http://www.vikatan.com/news/coverstory/59772-tamila-actor-kumari-muthu-speciel-story.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் சிரிப்பாலையே திரையரங்கதை அதிர வைத்த முத்துவிற்கு அஞ்சலிகள்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.