Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றில் முதல் முறையாக எவரெஸ்ட் உச்சிக்கு ஏறும் இலங்கையர்கள்!

Featured Replies

வரலாற்றில் முதல் முறையாக எவரெஸ்ட் உச்சிக்கு ஏறும் இலங்கையர்கள்!
 
வரலாற்றில் முதல் முறையாக எவரெஸ்ட் உச்சிக்கு ஏறும் இலங்கையர்கள்!
இலங்­கையில் முதன் முத­லாக மலை­யேறும் வீரர்­க­ளான ஜயந்தி குரு மற்றும் ஜோன் பீரிஸ் ஆகியோர் எவரெஸ்ட்
சிக­ரத்தின் உச்­சிக்கு ஏறும் பய­ணத்தை ஆரம்­பிக்­க­வுள்­ளனர்.
 
இது­வ­ரையில் எவரெஸ்ட் மலை உச்­சிக்கு இலங்­கை­யர்­க­ள் எவரும் ஏறி­ய­தில்லை. இந்­நி­லையில் இலங்கை வர­லாற்றில் புதிய பெயரைப் பதி­வ­தற்­கான இந்த சாதனை முயற்­சியில் கள­மி­றங்­கி­யுள்­ளனர் இவர்கள்.
 
8488 மீற்றர் உய­ர­மான எவரெஸ்ட் மலையின் உச்­சிக்கு ஏறும் பய­ணத்தை எதிர்­வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்­பிப்­ப­தற்கு அவர்கள் திட்­ட­மிட்டுள்­ளனர்.
 
எவரெஸ்ட் மலைச் சிக­ர­மா­னது இமய மலைத் தொடரின் ஒரு பகுதி. இது நேபாளம் மற்றும் திபெத்தில் அமைந்­துள்­ளது. இந்த எவரெஸ்ட் மலை உச்­சியே உலகின் அதி உய­ர­மான சிக­ர­மாகத் திகழ்­கின்­றது. இந்த மலை உச்சியை வெற்­றி­க­ர­மாக அடைந்­த­வர்கள் சிலரே.
 
ஜயந்தி குரு உடும்­பல என்ற வீராங்­கனை மலை ஏறும் வீர­ாங்க னையாக திகழ்­வ­துடன் 2003ஆம் ஆண்டு தொடக்கம் தொழில் ரீதி­யான மலை ஏறி­யாக அறி­யப்­ப­டு­கின்றார். இந்தப் பயணம் குறித்து கருத்து தெரி­வித்த ஜயந்தி, எவரெஸ்ட் மலைக்கு ஏறு­வ­தென்­பது அவ்­வ­ளவு எளி­தல்ல என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். எமக்கும் அது தெரியும். ஆனாலும்
நம்­பிக்­கையை அதி­க­மாக நாம் கொண்டு செல்­கிறோம். மலை ஏறு­வ­தற்கு எவ்­வ­ளவு சக்தி அவ­சி­யமோ அதே­அள­வான சக்தி இறங்­கு­வ­தற்கும் அவ­சியம். எது எப்­ப­டியோ எமது இந்தப் பய­ணத்தை நாம் வெற்­றி­க­ர­மாக முடித்துக் காட்­டுவோம் என்றார்.
 
இது குறித்து ஜோன் பீரிஸ் கருத்து தெரி­விக்­கையில், நானும் ஜயந்­தியும் பல பிற சிக­ரங்­களை ஒன்­றாக ஏறி இருக்­கிறோம். இறுதி இலக்­கான எவரெஸ்ட் மலைச்சிக­ரத்தை வெற்றி கொள்வ­தற்­காக இரு­வரும் ஒன்றாகப் புறப்­ப­டுகின்றோம்.
 
எவரெஸ்ட் உச்­சிக்கு செல்­ல­வுள்ள முத­லா­வது இலங்­கை­யர்கள் என்ற கௌர­வத்தை நாங்கள் பெரு­மை­யாகக்
ரு­து­கின்றோம். நாட்டிற்காக புதிய சாதனை வரலாறு ஒன்றை படைப்பதற்காக எம்மை நாமே உந்தித் தள்ளுகின்ற இந்த வாய்ப்பினை எண்ணி நாம் மகிழ்கின்றோம் என்றார்.
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் !
கால நிலை தான் எவரெஸ்டில் ஏறுபவர்களுக்கு பெரும் எதிரி 
இவர்கள் ஏறும் காலத்தில் சீராக இருக்கும் என்று எண்ணி கொள்கிறேன் !

  • கருத்துக்கள உறவுகள்

வலலாற்றில முதல் தடவையா?

இராவணர் ஏறி போய் வீணை வாசித்து சிவலிங்கம் வாங்கியாந்தவர், முன்னம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

தவறு நாதம் , இராவணர் தூக்கப் போய்த்தான் வீணை வாசித்து விடுதலை ஓடர் பெற்றுக் கொண்டு வந்தவர்...!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் தூக்கப் போனது கைலாய மலையில். Mount Kailash.

இது எவரெஸ்ட். Mount Everest. இமய மலைத்தொடர்சியில் கணிசமான இடவெளியில் இருக்கும் இரு வேறு பட்ட மலைகள்.

இனி செந்தில் வாழப்பழக் கணக்கு ரேஞ்சுக்கு, சடையல் பதில்களை ஆரம்பிக்கவும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இராவணன் தூக்கப் போனது கைலாய மலையில். Mount Kailash.

இது எவரெஸ்ட். Mount Everest. இமய மலைத்தொடர்சியில் கணிசமான இடவெளியில் இருக்கும் இரு வேறு பட்ட மலைகள்.

இனி செந்தில் வாழப்பழக் கணக்கு ரேஞ்சுக்கு, சடையல் பதில்களை ஆரம்பிக்கவும்.

ஆகா,

வந்துடாரையா, வந்துட்டாரு...

:grin: இப்படி போடும் போது, சீரியஸா எடுக்கக் கூடாது என்று எத்தினை தரம் சொல்லணும், நைனா?

உடனே டென்சன் ஆகிற பாட்டி தான். tw_anguished:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அந்தோணியாருக்கு பகிடியும் தெரியேல்ல வெற்றியும் தெரியேல்ல ???

  • கருத்துக்கள உறவுகள்

நாதா

முன்னர் ஒருமுறை எனக்கு நீங்கள் எழுதியதை ஞாபகத்தில் வந்து தொலைக்குது...

இப்ப புரியுதா?

நாம் என்ன பண்ணும்???

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன அண்ணரே வந்துட்டார். 

மாயி அண்ணன் வந்திருக்காக

மாப்பிள்ளை மொக்க சாமி வந்திருக்காக அப்படியே

இனசனமெல்லாம் ஒண்டா கூடி கோச்சானை புரட்டி எடுக்க வேண்டியதுதான்.

பிறகு நாளைக்கு வேட்டிய நல்லாத் தோச்சுக் கட்டிக் கொண்டு வந்து

குழுவாதம் பாரீர் பாரீர் எண்டு மூக்கசிந்தினாப் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிறகென்ன அண்ணரே வந்துட்டார். 

மாயி அண்ணன் வந்திருக்காக

மாப்பிள்ளை மொக்க சாமி வந்திருக்காக அப்படியே

இனசனமெல்லாம் ஒண்டா கூடி கோச்சானை புரட்டி எடுக்க வேண்டியதுதான்.

பிறகு நாளைக்கு வேட்டிய நல்லாத் தோச்சுக் கட்டிக் கொண்டு வந்து

குழுவாதம் பாரீர் பாரீர் எண்டு மூக்கசிந்தினாப் போச்சு.

ஓடி ஓடி முதுகை கொடுக்கிற தியாகி ஐயா, நீங்க!

நீங்க ஒரு மனிசனா....

சா, தெய்வமையா, தெய்வம்..:grin:

அதெல்லாம் இருக்கட்டும்... கைலாய மலைக்கு இராவணன் போன காலத்தில, பக்கத்து மலைக்கு  எவர்றேஸ்ட் என்று இங்கிலீஷ் சில் பெயர் இருந்ததோ தல ? :unsure:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

200px-Hindukailash.JPG

கைலாய மலை. சிவனும், பார்வதியும் குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர்.

பாவங்களைப் போக்கிக்கொள்ள, மலை ஏறுபவர்களிடம் தேங்காய், பழம், கற்பூரம் கொடுத்துவிடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஓடி ஓடி முதுகை கொடுக்கிற தியாகி ஐயா, நீங்க!

நீங்க ஒரு மனிசனா....

சா, தெய்வமையா, தெய்வம்..:grin:

அதெல்லாம் இருக்கட்டும்... கைலாய மலைக்கு இராவணன் போன காலத்தில, பக்கத்து மலைக்கு  எவர்றேஸ்ட் என்று இங்கிலீஷ் சில் பெயர் இருந்ததோ தல ? :unsure:

ஏன் தல,

வழமையா நீங்கள் வாசிக்கும் சன், டெய்லிமெயில் போன்ற வரலாற்று ஆவணங்களில் இதப்பற்றி ஒண்டும் எழுதேல்லயே?

கைலாயத்துக்கு ராவணன் எப்ப போனார் என்று சரியாத்தெரியாததால் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது.

ஆனால் நேபாளிகள் சகர்மாதா என்றும் திபெத்தியர்கள் சொமுலுங்மா என்றும் எவரெஸ்டை காலம் காலமாய் அழைத்து வந்துளனர்.

எவரெஸ்ட் என்பது வெள்ளைக்கார Indian Geological Survey யின் தலைவர் ஒருவரின் பெயர். அதையே மலைக்கும் சூட்டினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தல,

இன்னொரு கேள்வி: அண்மையில் அறிந்ததால்....

'பாக்கு நீரிணை' என பெயர் வர காரணம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

தெரியல்லயே?

சுவாரசியமாய் இருக்கும் போலிருக்கு, சொல்லுங்களேன்?

Palk என்பது என்ன ? அதைச் சுட்டியே பெயர் வச்சிருக்கோணும்?

கூகிள் ஆண்டவர் அருளியது:

Robert Palk என்ற ஆங்கிலேயர் பெயரில் வைத்ததாம் என்கிறது விக்கி.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில், எனக்குப் பக்கத்தில் இருக்கும் புதிதாய் வந்த வெள்ளையரின் surname: Palk (Graham Palk). அவர், நீங்கள் இந்தியரா எனக் கேட்க, இல்லை இலங்கை என்றேன். அதனால் என்ன, தொடர்பானது தான் என்று தந்த தகவல் ஆச்சரியமாக இருந்தது.

தனது பூட்டனார் தான் நீங்கள் சொன்ன Robert Palk. அவர் மதராஸ் மாநில ஆளுநராக இருந்தவர். அவரது இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தினை முறைப்படுத்தி, வள்ளங்களில் செல்வதால் உண்டான உயர் சேதங்களைக் குறைத்து, அவர் எடுத்த  நடவடிக்கையினை கௌரவிக்கும் முகமாக அவரது பெயர் இடப்பட்டதாம்.

சின்ன வயதில், பாக்கு வர்த்தகம் நடந்தமையால் வந்ததோ என்று தவறாக நினைத்ததுண்டு.

பல வருடங்களுக்கு முன்னர் எனது boss John Rippon. அவரது முப்பாட்டனார் பெயரில் சென்னை rippon building.

Edited by Nathamuni

3 hours ago, Nathamuni said:

என்ன நாதமுனி சார்
சீமான் சாயலில ஒரே முப்பாட்டன்களா இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரான் ஊரான் தோட்டத்திலே ஓரமாய் காய்த்ததாம் வெள்ளரிக்கா.

காசுக்கு ரெண்டுதான் குடுக்கச் சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்.

ஒருமுறை விமானத்தில் ஆளுனர் பிரட்றிக் நோர்த்தின் வாரிசுடன் பயணித்தேன். 11 மணி நேரமும் ஒரே சுயதம்பட்டம், குடும்பப் பெருமை.

இறங்கும் போது, welcome to Sri Lanka, I am glad that at least now the Norths are travelling with a passport and not as illegal immigrants என்று சொன்னேன் ???

அசடு தொன் கணக்கில் வழிந்தது ?

47 minutes ago, goshan_che said:

இறங்கும் போது, welcome to Sri Lanka, I am glad that at least now the Norths are travelling with a passport and not as illegal immigrants என்று சொன்னேன் ???

அசடு தொன் கணக்கில் வழிந்தது ?

பச்சை இதுக்குத்தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.