Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி ; மட்டக்களப்பின் மனதை உருக்கும் கதைகள்

Featured Replies

3377_1459637421_PhototasticCollage-2016-

பிள்ளைக்கு 14 வயசாச்சு… போன வருசமே கட்டிக் குடுத்திருக்கணும்… பிந்திட்டுது. இன்னும் ஒன்டு ரெண்டு மாசம்தான் எங்களோட இருப்பாள்.. நாங்கள் பிந்தினாலும் அவளா ஒரு துணை தேடிடுவாள்’ என்று மிக சர்வ சாதாரணமாக சொன்னார் ரேவதி.

வாகரையின் காட்டோர குடியிருப்பொன்றில் வசிக்கும் ரேவதிக்கு இப்பொழுது 31 வயது. தனது இரண்டாவது மகள் இன்னும் திருமணம் முடிக்காமலிருப்பது அவருக்கு பெரும் பதைபதைப்பை கொடுக்கிறதென்பதை அவருடன் பேசும்போது புரிந்து கொண்டோம். 31 வயதிலேயே பேரக் குழந்தையை கண்டுவிட்டவர் ரேவதி. அவரது மூத்த மகள்- தற்போது திருமணத்திற்கு காத்திருப்பவளின் அக்கா- தற்போது ஒன்றரை வயது குழந்தையின் தாய். ரேவதியின் மூத்த குழந்தைக்கு வயது 16.

இந்த அதிர்ச்சி கதையை வாகரைக்கு செல்வதற்கு முன்னரே அறிந்து விட்டோம். மட்டக்களப்பின் மீள்குடியேற்ற பிரதேசங்களில் தலைவிரித்துள்ள பெரும் சமூகக்கொடுமையான இளவயது திருமணங்கள் பற்றிய அதிர்ச்சிகதைகளை அறிந்ததன் பின்னர் அந்த பகுதிகளிற்கு சென்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தநடவடிக்கைகளில் சிக்கி 2006 இல் இடம்பெயர்ந்து 2007 இல் மீள்குடியேறிய வவுணதீவு,  வெல்லாவெளி,  கொக்கட்டிச்சோலை,  வாகரை,  கிரான், செங்கலடி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் சிறுவயது திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன.

இந்தப்பகுதிகளில் 14- 17 வயதிற்குள் சிறுமிகள் திருமணம் செய்து குழந்தை பிரசவிப்பது சர்வ சாதாரண விடயம் என்கிறார்கள் அதிகாரிகள்.

யுத்த நெருக்கடி, கல்வியறிவின்மை உள்ளிட்ட பலவற்றை இதற்கு காரணங்களாக சொல்கிறார்கள். யுத்தகாலத்தில் இந்தப் போக்கு சற்று எல்லை மீறியது என்பது அதிகாரிகளின் கருத்து.

தங்கள் பிள்ளைகள் ஆயுத மோதல்களிற்குள் சிக்கிவிடக் கூடாதென்பதற்காக இளவயது திருமணத்தை பெற்றோர் கேடயமாக பயன்படுத்தியுள்ளனர். பராயமடைந்ததுமே சிறுமிகளை யாருக்காவது திருமணம் செய்து வைத்துள்ளனர். அது தவிர வறுமையும் இதற்கு காரணங்களிலொன்றாகியுள்ளது.

யுத்தத்தில் சிக்கி கணிசமான ஆண்கள் இந்தப்பகுதிகளிலும் இறந்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய சிறுமிகள் வறுமை காரணமாக இளவயதிலேயே திருமணம் செய்ய வேண்டிய நெருக்கடியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப்பகுதி கிராமசேவகர் ஒருவர் கூறினார்.

பல்வேறு காரணங்களினால் நடந்த இளவயது திருமணங்கள் இப்பொழுது சம்பிரதாயமாகிவிடும் அபாயத்தையும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இளவயது திருமணம் என்றாலே அதில் நிறைய சிக்கல்கள் இருக்கும் என்பது புரியக்கூடியதுதான். இந்தப்பகுதிகளில் உள்ள பிரதான சிக்கல் இளவயது திருமணம் இளவயது விதவைகளை உருவாகுவதுதான்.

சராசரியாக 15,16 வயது சிறுமிகளை 20-22 வயது வாலிபர்களிற்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர்கள் சில மாதங்கள் ஒன்றாக இருந்து சிறுமிகள் கர்ப்பவதியாகும் சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளிற்கு தொழில் தேடி செல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இரண்டு வருட ஒப்பந்தத்தில் செல்கிறார்கள். சிலர் முன் பின்னாக திரும்பி வருவதுண்டு.

மத்திய கிழக்கிலிருந்து அவன் திரும்பி வந்ததன் பின்னர் பெரும்பாலானவர்கள் தமது மனைவிகளுடன் வாழ்வதில்லை. இதற்கு இரண்டு காரணங்களை சொல்கிறார்கள்.

1, கணவன் வெளிநாட்டிலிருந்த சமயத்தில் மனைவியைப் பற்றி ஊரில் பரவும் தகவல்.

2, வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்கள் அப்பாவிகளான கிராமத்து சிறுமிகளுடன் வாழ விரும்புவதில்லை.

இந்த சமயத்தில்த்தான் அந்தச் சிறுபெண்கள் பெரும் விலை கொடுக்கிறார்கள். இரண்டோ மூன்று வயதில் கையில் ஒரு குழந்தையிருக்கும். அப்பொழுதுதான் 18 வயதை எட்டிப்பிடித்திருப்பார்கள். சட்டப்படி பெண்கள் திருமண வயதையடையும் சமயத்தில் இவர்கள் கணவனை பிரிந்தவர்களாகிறார்கள்.

கணவனால் கைவிடப்பட்ட இந்தப் பெண்களிற்கு சட்டத்தில் எந்த கருணையும் கிடையாது. ஏனெனில் பதினெட்டு வயதின் முன்பாக சட்டபூர்வமற்ற திருமணங்களைத்தான் இவர்கள் செய்திருந்தார்கள். தெய்வத்தையும் ஊர் பெரியவர்களையும் சாட்சி வைத்து நடந்த திருமணங்களிற்கு சட்டபூர்வ விவாகரத்து எப்படி கிடைக்கும்?

இதுதவிர முறையற்ற உறவுகளும் பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. சிறுமிகளை திருமணம் செய்யும் வாலிபர்கள் பெரும்பாலானவர்கள் அந்த சிறுமியுடன் நீண்டகாலம் வாழ்வதில்லை. வேறொரு துணையை நாடுகிறான். இளவயதில் கணவனை பிரிந்த பெண்கள் குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட அத்தியாவசிய நெருக்கடிகள் நேரும்போது முறையற்ற வேறு உறவுகளை ஏற்படுத்துவதும் நிகழ்கிறது.

இளவயது திருமணங்களிற்கு முக்கிய காரணமாக அரசசார்பற்ற தொண்டு நிறுவன பிரதிநிதியொருவர் குறிப்பிட்டது, உயர் வகுப்பு பாடசாலைகள் குறைவாக காணப்படுவதையே. ‘பாடசாலை பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். எட்டு, ஒன்பதாம் வகுப்பின் பின்னர் படிப்பதாயின் அதிக தூரம் பயணிக்க வேண்டும். அதற்கான பொருளாதார வசதியில்லாததால் பலரும் வீட்டிலிருக்கிறார்கள். அப்பொழுதுதான் திருமணம் செய்கிறார்கள்’ என்றார்.

மட்டக்களப்பின் பெரும் சமூக அவலமாக மாறிவிட்ட இளவயது திருமணங்களை தடுப்பதுதான் ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கு அத்தியாவசியமானது.

(மட்டுமைந்தன்)

3377_1459637421_3.jpg

3377_1459637421_S3140023.jpg

 

3377_1459637421_S3140027.jpg

http://battinaatham.com/description.php?art=3377

  • Replies 54
  • Views 21.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்ருக்குக் கருத்து எழுதவே யாழில் உள்ளவர்களுக்கு நேரம் இல்லை. நீங்கள் வேறு ஆதவன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்படியானவர்ருக்குக் கருத்து எழுதவே யாழில் உள்ளவர்களுக்கு நேரம் இல்லை. நீங்கள் வேறு ஆதவன்.   

மட்டக்களப்பில் இது தொடரத்தான் செய்கிறது ஆரம்ப காலத்தில் விடுதலை புலிகள் பிள்ளைகளை பிடித்து செல்கிறார் என்று கூறி இந்த திருமணத்தை நியாயப் படுத்தினார்கள் ஆனால் தற்போதைய கிராமத்தில் இருக்கும் நிலைமை வறுமை தொழில் இல்லை இதன் காரணமாக சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை திருமண பந்தத்தில் இணைத்து விடுகிறார்கள் கட்டுனவனாவது சோறு கொடுப்பான் என நினைத்து  கட்டுவன் சோறு கொடுக்கானோ இல்லையோ ஒரு பிள்ளையை கொடுத்து விட்டு வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக செல்கிறான் இதனால்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் கிழக்கில் தொடர்ந்து கொண்டு செல்கிறது. 

மட்டக்களப்பில் உள்ளகிராமங்களில் (வாகரை)கிராமத்தில் கல்வியறிவு மிகவும் கீழே மட்டத்தில் இருக்கிறது இன்றுவரை  இது அரச அதிகாரிகளின் கவன குறைவும் கூட 

  • கருத்துக்கள உறவுகள்

உப்படி கொஞ்ச குறூப் உலகம் பூராவும் இருக்குது.

இங்கிலாந்திலும் கூட 16 வயதில்.. குழந்தை.. 32 வயதில் பாட்டியாவது எல்லாம் நடக்குது.

ஏன் எம் புலம்பெயர் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடப் பெட்டையள்.. பண்ணுற கூத்து...... 13 வயசில கருக்கலைப்புச் செய்வதும் நடக்கிறது.

இது ஒரு நோகமல் நொங்கு குடிக்கும் மனப்பான்மையின் விளைவு.

முன்னர் புலி சாட்டு. இப்ப வறுமை சாட்டு.

கட்டாந்தரையாகக் கிடக்கும் நிலத்தை வளமாக்க மனிதன் உழைக்கனும். மூளை வளர மனிதன் படிக்கனும்.. இதனை அவரவர் முயற்சியில் தான் செய்யலாம். அடுத்தவன் இவைக்காகச் செய்ய இயலாது.

வறுமை என்பதைக் கண்டு பயந்தால்.. அது துரத்தான் செய்யும். வறுமையைப் போக்கனுன்னா.. படிக்கனும்.. உழைக்கனும்.. மொத்த சமூகம் சேர்ந்து இதைச் செய்தால்.. நாடும் நிலமும் மக்களும் முன்னேறுவார்கள்.

இலவசங்கள்.. இலவசம்.. நன்கொடை.. திருமணம் மூலம் காசு.. திருமண மூலம் இலாபம்.. இவை தான் எம் இனத்தை சீரழிவு சிந்தனைக்கு.. இட்டுச் செல்கிறதோ என்ற எண்ணத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்தில் அதிக வெளிநாட்டுக் காசு சீரழிக்குது என்றால்..

வாகரையில்... அது இன்னொரு வடிவில்.

காசு சரியாக முதலிடப் படாமையும்.. மனித உழைப்புக்கு அது வழிகாட்டாமல்.. மனித சோம்பேறித்தனங்களுக்கு வழி சமைப்பதாலும்..  தான் இலவசக் கல்வி உள்ள ஒரு நாட்டில் பள்ளிக்கூடம் போகாமல் பள்ளி அறைக்குப் போகும் எண்ணம் உதிக்க முக்கிய காரணம்.

இவர்களுக்காகப் பரிதாப்பப்பட முடியவில்லை. மாறாக இவர்களுக்கு தகுந்த உழைப்புக்கான கல்வியும் வழிகாட்டுதலும் சிறிய முதலீடுகளை அந்தப் பிரதேசங்களில் உழைப்பு வருமானம் காட்ட முன் வைப்பதுமே முக்கியம்.

குறிப்பாக பாலியல் கல்வி இவர்களுக்கு மிக மிக மிக மிக மிக அவசியம்.

தேவையற்ற கர்ப்பம்.. குழந்தை பெறுதல்களை தடுக்க...! tw_warning:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் சுமார் 90000 பேர் கணவனை இழந்தவர்கள் இருக்குறார்கள் இந்த பெண்கள் என்ன செய்ய முடியும் 

அண்மையில் ஒரு வெளிநாட்டில் இருந்து வந்தவர் பல லட்சம் பெறுமதி வாய்ந்த வீடு ஒன்றை கட்டி அழகு பார்க்கிறார் அதுவே மத்தியகிழக்கு போய் வந்த முஸ்லிம் நபர் ஒரு சில லட்சம் பெறுமதியான கடை ஒன்று கட்டி பல தமிழ் பெண்களை வைத்து வியாபாரம் செய்து பல லட்சம்களை உழைக்கிறார் 

கிழக்கில் பல முஸ்லிம்கள் கடைசியில் பல தமிழ் பெண்கள் வேலை செய்கிறார்கள்  வேலைக்காகள் வெளிநாட்டில் உழைக்கும் கணவனுக்கு சம்பளம் குறைவு அதனால் வீட்டில் செலவுகளை அடைக்க முடியாமல் பல பெண்கள் இப்படி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் அதை பயன்படுத்தி சில காம பிசாசுகள் அவங்களை தங்கள் சுயத்துக்காக பயன்படுத்தியும் மதம் மாற்றும் நடவடிக்கைகளையும் செய்து வருகிறார்கள் கிழக்கில் 

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் கடின உழைப்புக்கு முன்னிற்காது சுகமாகக் காசு பார்க்கவே வன்னியிலும் யாழிலும் விரும்புகின்றனர். அவர்களாகத் திருந்தினாலன்றி நாம் என்ன செய்ய முடியும் ?? அங்கு பொய் உதவுபவர்கள் கூட வெறுத்துப் பொய் தான் திரும்புகின்றனர்.

On 4/3/2016 at 5:28 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்படியானவர்ருக்குக் கருத்து எழுதவே யாழில் உள்ளவர்களுக்கு நேரம் இல்லை. நீங்கள் வேறு ஆதவன். 

இதில் வந்து என்ன எழுதவேண்டும் என்று எதிர்பார்கின்றீர்கள் ?

முப்பது வருடங்கள் போரை நடாத்தியவர்கள் தான் இவர்களுக்கு பதில் சொல்லவேண்டும் .

முப்பது வருடங்கள் போரை மக்கள் மீது திணித்தவர்கள் முடிந்துபோனார்கள் 

நிதானமாக அரசியல் செய்தவர்கள் இன்றும் நாட்டில் அரசியல் செய்கின்றார்கள் இனியும் செய்வார்கள் .

அவர்கள்தான்  போரை திணித்தவர்களுக்கும்  இப்போ உதவி செய்கின்றார்கள் .

12938299_586305894876715_240502043490002

Edited by arjun
படம் இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, arjun said:

இதில் வந்து என்ன எழுதவேண்டும் என்று எதிர்பார்கின்றீர்கள் ?

முப்பது வருடங்கள் போரை நடாத்தியவர்கள் தான் இவர்களுக்கு பதில் சொல்லவேண்டும் .

கொஞ்சம்  மனச்சாட்சியோடு பேசுங்கள்

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது

நீதி நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நல்லநிலையே இருந்தது

தற்பொழுது இந்த நிலைக்கு அவர்கள் இல்லாததே காரணம்

அழித்த நீங்கள் தான் காரணம்

பொறுப்பெடுக்கணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, arjun said:

முப்பது வருடங்கள் போரை மக்கள் மீது திணித்தவர்கள் முடிந்துபோனார்கள் 

நிதானமாக அரசியல் செய்தவர்கள் இன்றும் நாட்டில் அரசியல் செய்கின்றார்கள் இனியும் செய்வார்கள் .

அவர்கள்தான்  போரை திணித்தவர்களுக்கும்  இப்போ உதவி செய்கின்றார்கள் .

அவர்கள் அரசியல்தான் செய்கிறார்கள். தங்களுக்கு மட்டும். மக்களுக்கு அல்ல

1 minute ago, குமாரசாமி said:

அவர்கள் அரசியல்தான் செய்கிறார்கள். தங்களுக்கு மட்டும். மக்களுக்கு அல்ல

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தநடவடிக்கைகளில் சிக்கி 2006 இல் இடம்பெயர்ந்து 2007 இல் மீள்குடியேறிய வவுணதீவு,  வெல்லாவெளி,  கொக்கட்டிச்சோலை,  வாகரை,  கிரான், செங்கலடி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் சிறுவயது திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன .

மேலே உள்ள செய்தி விசுகருக்கு .

இது உங்களுக்கு .

12936660_615399951950937_215977498071251

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, arjun said:

இதில் வந்து என்ன எழுதவேண்டும் என்று எதிர்பார்கின்றீர்கள் ?

முப்பது வருடங்கள் போரை நடாத்தியவர்கள் தான் இவர்களுக்கு பதில் சொல்லவேண்டும் .

இளைஞர் பேரணிகள் அமைத்து பயங்கரவாதத்தை இரத்தப்பொட்டுகள் மூலம் ஆரம்பித்துவைத்த ஜாப்பவான்கள் இன்னும் சிங்களத்தின் அரியணையின் உச்சத்தில் தான் இருக்கிறார்கள். கணக்கு விளங்குமெண்டு நினைக்கிறன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, arjun said:

முப்பது வருடங்கள் போரை மக்கள் மீது திணித்தவர்கள் முடிந்துபோனார்கள் 

நிதானமாக அரசியல் செய்தவர்கள் இன்றும் நாட்டில் அரசியல் செய்கின்றார்கள் இனியும் செய்வார்கள் .

அவர்கள்தான்  போரை திணித்தவர்களுக்கும்  இப்போ உதவி செய்கின்றார்கள் .

12938299_586305894876715_240502043490002

40  வருடத்துக்கு பின்னர் ஒரு கூட்டம்

அதை  சொல்கிறீர்களா??

உங்க பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகுது

ஒரு போத்தல் அடித்தவனெல்லாம் பேசாமல் இருக்க.........???

1922089_603692626455003_6770528583187470

4 minutes ago, விசுகு said:

40  வருடத்துக்கு பின்னர் ஒரு கூட்டம்

அதை  சொல்கிறீர்களா??

உங்க பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகுது

ஒரு போத்தல் அடித்தவனெல்லாம் பேசாமல் இருக்க.........???

நாட்டில என்ன நடக்குது என்று எள்ளளவும் அண்ணைக்கு தெரியாது போல .

எதுக்கும் ஒருக்கா போட்டு வாங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, arjun said:

1922089_603692626455003_6770528583187470

நாட்டில என்ன நடக்குது என்று எள்ளளவும் அண்ணைக்கு தெரியாது போல .

எதுக்கும் ஒருக்கா போட்டு வாங்கோ .

அதுக்கு முதலில்  நீங்க போய் வந்தெல்லோ எழுதணும்....

சிறிதரனைக்கேட்டால் இப்படி1000 படம் காட்டுவார்

தருவார்

அங்கு என்ன நடக்குது என்று தினமும் தொடர்பில் இருக்கும் நான் ஏன் நாட்டிற்கு போகவேண்டும் .

"40 வருடத்திற்கு பின் ஒரு கூட்டம்" என்று நாட்டு நிலைமை எதுவும் தெரியாதவர்கள் தான் போகவேண்டும் .

வை கோ போல இயலாமையின் புலம்பல் என்று எனக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, விசுகு said:

அதுக்கு முதலில்  நீங்க போய் வந்தெல்லோ எழுதணும்....

சிறிதரனைக்கேட்டால் இப்படி1000 படம் காட்டுவார்

தருவார்

நல்ல பதில்.:) tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாடல் எங்கு செல்கிறது இப்பவும் அவன் இவனை குற்றம் சாட்டி இருக்கிறோம் புதிதாக ஒன்றை சிந்திக்காமல். 

ஓவ்வொரு எழுத்துக்களும் புதிதாக புதிய எதிரிகளை உருவாக்கி கொண்டு செல்கிறது

7 minutes ago, முனிவர் ஜீ said:

கருத்தாடல் எங்கு செல்கிறது இப்பவும் அவன் இவனை குற்றம் சாட்டி இருக்கிறோம் புதிதாக ஒன்றை சிந்திக்காமல். 

ஓவ்வொரு எழுத்துக்களும் புதிதாக புதிய எதிரிகளை உருவாக்கி கொண்டு செல்கிறது

சென்ற ஞாயிறு மெசோ எழுதிய பின்னோட்டத்திற்கு நான் பதில் எழுதினேன் ,

அதன் பின்  கும்மியடிக்க ஒரு கோஸ்டி எப்பவும் ஓடிவந்துவிடும் .

இது யாழில் தொடர்கதைதான் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, arjun said:

சென்ற ஞாயிறு மெசோ எழுதிய பின்னோட்டத்திற்கு நான் பதில் எழுதினேன் ,

அதன் பின்  கும்மியடிக்க ஒரு கோஸ்டி எப்பவும் ஓடிவந்துவிடும் .

இது யாழில் தொடர்கதைதான் .

அந்த செய்திக்கு என்ன செய்யலாம் செயற்படுத்தலாம் என்று யோசிக்காமல் நாம் பழைய புராணத்தை பாடிக்கொண்டு இருக்கிறோம்

 

  • கருத்துக்கள உறவுகள்

சிரத்தையுடன் கவனத்தில் கொண்டு சீரமைக்கப்படவேண்டிய விடயத்திற்குள்ளும் போராட்டம் அரசியல் என்று திணிப்பவர்களே கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளுங்கள் முடிந்தால் இத்தகைய நிலைகளில் இருந்து சிறுமிகளை  பாதுகாக்க என்ன வழி என்று தெரிந்தால் சொல்லுங்கள் மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் உங்களுக்கெல்லாம் மனச்சாட்சியே கிடையாதா? எத்தகைய மனோவியல் பாதிப்பை அந்தச் சிறுபெண்கள் எதிர்நோக்கிக் கொண்டிருப்பார்கள் என்பதை உங்களால் எள்ளளவேனும் உணர முடியுமா? ஒரு இளைய சமூகமே மீளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்க அச்செய்தியிலும் வந்து மாரித்தவக்கைகளைப்போல் கத்திக்கொள்கிறீர்களே சீ.... போய் உங்கள் முகங்களை கண்ணாடிகளில் பார்த்து நீங்களே காறி உமிழ்ந்து கொள்ளுங்கள்.

monkey_looking_in_the_mirror.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் வைச்சு.. புளொட் ஒட்டுக்குழு காடைகளால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் பெண்களுக்கு பிறந்த குழந்தைகளை சித்தார்த்தன் கவனிக்கலாமே. 

இவ்வளவு அநியாயங்கள் நடக்கும் போதும் எருமை மாடு மாதிரி உணர்ச்சி அற்றிருந்த இவர்.. இப்பதானா.. கூட்டம் போடுறார். 

இந்த இடத்தில் புளொட் ஒட்டுக்குழு காமுகர் கூட்டம் கருத்துச் சொல்ல ஒரு நாதியும் அற்றவர்கள். அதற்கு அம்னாஸ்ரி ரிப்போர்ட்கள் சாட்சி. 

புளொட் மற்றும் ஒட்டுக்குழுக்கள் 35 வருசமா சீரழிச்சதுகளும் இதுக்குள்ள தான் அடக்கம். அவைக்கு நஸ்ட ஈடும்.. வாழ்வும் கொடுக்க வேண்டியது.. அந்த புலம்பெயர்ந்து வாழும்.. அந்த ஒட்டுக்குழு ஆதரவாளர்கள் தான். :rolleyes:tw_angry:

 

இதற்குள் எழுதினால் இனி தடைதான் வரும் .

சிரத்தையுடன் சீரமைப்பவர்களுத்தான் இப்படி நிலைமை ஆகிவிட்டதே என்ற அந்த ஆதங்கமும் வரும் .

முப்பது வருடங்களின் பின் சண்கிளாசை கழட்டியதே பெரும் புண்ணியம் .

  • கருத்துக்கள உறவுகள்

சிரத்தையுடன் சீரழித்தவர்கள். தனக்கு பதவி வேண்டும் எனில் எதுவும் செய்யக்கூடியவர் சித்தர் என்றவரே.

வ்வுனியாவில் புளொட் கூட்டத்தினர் சீரழித்த பெண்கள் தான் எத்தனையோ? நிதானமாக அரசியல் செய்யவில்லை அட்டூழியம் செய்தவர்கள். 

இதை வாசித்தால் தெரியும் அவரே ஒத்துக் கொண்டது.

http://www.bbc.co.uk/news/world-south-asia-11234087

"Yes, we were accused of abductions and many other violations. I admit that. But it was a counter-action against the Tamil Tigers," he said.

 

Edited by MEERA

புலிகளை அழிக்க எந்த வேடம் எடுத்தாலும் நானும் அதற்கு ஆதரவுதான் , அதைதான் சித்தரும் சொல்லுகின்றார் .

அதன் பலன் தான் இப்போ இரண்டு உறுப்பினர்கள் அடுத்து நாலாக உருவாகும் .

நாங்கள் தான் இனி நாட்டில் அரசியல் செய்ய போகின்றோம் அடித்தளம் அந்த அளவு இருக்கு ஆயுதம் இனி வேலை செய்யாது .

விதியானது வலியது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.