Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக தேர்தல் பற்றி ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தேர்தல் பற்றி உறவுகள் எல்லாம் ஒவ்வொரு பக்கமாக விமர்சனங்களும் ஆதரவுகளும் தொடரும் இவ்வேளையில்....
ஒரு விடயத்தை பதியலாம் என நினைக்கின்றேன்.
ரொம்ப சுயநலமான ஈழத்தமிழன் நான்.
எமக்காக எவர் பேசினாலும் எமக்காக எவர் உழைத்தாலும் அவரை ஆதரிப்பதே எமது இன்றையநிலை. தேவை.
எல்லோருக்கும் காலம் கொடுத்துப்பார்த்தாச்சு
ஒன்றுமே நடக்கல. ஏமாற்றமும் துரோகமும் தான் மிச்சம். இந்த முறை சீமானுக்கு கொடுத்துப்பார்க்கலாம். சீமானும் ஏமாற்றினா? ஏன் இருப்பவர்களில் எவராவது திறமா? அவர்களைவிட சீமானால் ஏமாற்றமுடியுமா என்ன? இன்னும் 50 வருடம் போனாலும் அந்த திறமை சீமானுக்கு வராது.
ஒன்றுமட்டும் நிச்சயம்.
தமிழகம் தமிழரின் கைக்கு வரணும்
அல்லது இந்தியா உடையணும்
இல்லாது விட்டால் ஈழத்தமிழினம் இனி நிமிராது. தமிழர் என்ற ஒரு இனம் உலகில் இராது.
ரொம்ப சுயநலமான தமிழன் நான்.

இந்த முறை தேர்தலில் சீமானுக்கு நான் எதிர்பார்ப்பது 10 வீத வாக்கே. அது வந்தால் அடுத்தமுறை எல்லோரும் வரிசையில் வந்து சீமானுக்குப்பின்னால் நிற்பார்கள். அடுத்த முதல்வர் அவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்..... சீமான் வெற்றி பெற வேண்டும் என்றே, விரும்புவதில் வியப்பில்லை.
ஆனால்.. அது, தமிழக இரு பெரும் திராவிட கட்சிகளின், பண பலத்துக்கு முன்னால்... கேள்விக்குறியான விடயம்.
சீமான் வந்தால்... தமிழ் நாடு உருப்படும், வராவிட்டால்... இன்னும் கெட்டுப் போகும்.

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, மலையாளத்தவர்.
அவர் ஆறு மாதத்திற்கு முன்பு கொடுத்த பேட்டியில்.....
"தமிழகத்தை அந்நிய திராவிட இனத்தவர், 50 வருடமாக தொடர்ந்து ஆள்வது சரியல்ல... இம்முறை ஒரு தமிழன் முதலமைச்சராக வந்தால்.... அந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கா விட்டாலும், நான்... நேரில் வந்து வாழ்த்துவேன்."  என்று தெரிவித்து இருந்தார். 

மற்றவனே...... தமிழனை, பார்த்து ஆதங்கப் படும் போது...
நாம்.... "ரஜனி வாய்ஸ் கொடுப்பாரா",  "ஜெனொலியா....  மீண்டும் நடிக்க வர மாட்டாரா" என்று, கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்சி மாற்றம் வரவேண்டும் அதுதான் அநேகரின் விருப்பமும்......50 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சியமைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் போது ஊமையாய் இருந்தவர்கள்.......சீமான் வந்து நேருக்கு நேர் கேள்விகேட்டு...உள்ளதை சொல்லி தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது...
எலிகளும் பூனைகளும் சீமானைப்பார்த்து கேள்வி கேட்பதுதான் நகைப்புக்குரியதாக இருக்கின்றது.

கருணாநிதியைப்பற்றியும் ஜெயலலிதாவைப்பற்றியும் பகிரங்கமாக தெரிந்தும் சீமானை எதிர்ப்பவர்களைப்பற்றி என்ன சொல்வது?????

கொஞ்சம் வெளிய வாங்கண்ணை..இன்னும் எவ்வளவு காலம் தான் இப்படி குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்ட போறீங்க? 
தாயக கள நிலமை புரியாமல் கதைக்கிறீர்கள் என்று பார்த்தா தமிழத்திலும் அதே நிலமை. சீமானுக்கு கட்டுகாசே கிடைக்குமோ தெரியாது இதுக்குள்ள 10% வாக்கு வேற‌

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தெனாலி said:

கொஞ்சம் வெளிய வாங்கண்ணை..இன்னும் எவ்வளவு காலம் தான் இப்படி குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்ட போறீங்க? 
தாயக கள நிலமை புரியாமல் கதைக்கிறீர்கள் என்று பார்த்தா தமிழத்திலும் அதே நிலமை. சீமானுக்கு கட்டுகாசே கிடைக்குமோ தெரியாது இதுக்குள்ள 10% வாக்கு வேற‌

http://tamilcat.com/loyola-college-survey-predicts-seeman-to-become-cm-30-april-2016/

தெனாலி,

விசுகு சொல்வதைத் தான் சென்னை லயோலா கல்லூரி சர்வேயும் சொல்கிறது.

தமது இருப்பினை உறுதி செய்யும் தேர்தலாக இது அமையும். இதே வேகத்தில் போனால், 2021ல் இன்னும் பலமாகி 2026 ல் ஆட்சியைப் பிடிக்கும் என்கிறார்கள்.

இம்முறை சீமான் MLA ஆவர் என்பது பொதுவான கணிப்பு. 

சீமானே இந்த 2021 என்பதில் தெளிவாக இருக்கிறார். 2011 தேர்தலில் போட்டி இடாமல் 5 வருடம் காத்து இருந்து, 2016ல் அடித்தளம் இட்டு 2021 ஆட்சியை பிடிக்கும் திட்டம் நோக்கி தான் இயங்குகிறார்கள்.

On 4/29/2016 at 3:13 PM, விசுகு said:

.

இந்த முறை தேர்தலில் சீமானுக்கு நான் எதிர்பார்ப்பது 10 வீத வாக்கே. அது வந்தால் அடுத்தமுறை எல்லோரும் வரிசையில் வந்து சீமானுக்குப்பின்னால் நிற்பார்கள். அடுத்த முதல்வர் அவர்தான்.

Edited by Nathamuni

10 minutes ago, Nathamuni said:

http://tamilcat.com/loyola-college-survey-predicts-seeman-to-become-cm-30-april-2016/

தெனாலி,

தமிழ் சிறி சொல்வதைத் தான் சென்னை லயோலா கல்லூரி சர்வேயும் சொல்கிறது.

தமது இருப்பினை உறுதி செய்யும் தேர்தலாக இது அமையும். இதே வேகத்தில் போனால், 2021ல் இன்னும் பலமாகி 2026 ல் ஆட்சியைப் பிடிக்கும் என்கிறார்கள்.

இம்முறை சீமான் MLA ஆவர் என்பது பொதுவான கணிப்பு. 

சீமானே இந்த 2021 என்பதில் தெளிவாக இருக்கிறார். 2011 தேர்தலில் போட்டி இடாமல் 5 வருடம் காத்து இருந்து, 2011ல் அடித்தளம் இட்டு 2021 ஆட்சியை பிடிக்கும் திட்டம் நோக்கி தான் இயங்குகிறார்கள்.

நீங்க இணைச்ச இணைப்பில 2016ல் சீமான் முதல்வர் ஆவார் என்று லயோலா கல்லூரி சர்வே சொல்லுது என்று எழுதியிருக்கு இதை லயோலா கல்லூரி தயாரிச்சதா இல்லை இவர்களை மாதிரி கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று கத்துபவர்கள் எழுதியதா? இதுதான் உண்மையான சர்வே..சீமான் இந்த லிஸ்டிலயே இல்லை

http://www.electioncommissionindia.in/2016/01/loyola-college-opinion-poll-assembly.html#axzz47KaeyTxs

இலங்கை தேர்தலில ஓட்டை சைக்கிள ஓட்ட பார்த்த மாதிரித்தான் இதுவும் முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

12 minutes ago, தெனாலி said:

2016 என்று எழுதியது நம்மாளுங்க....:grin:

வீடியோவில தெளிவா சொல்லுறாங்க. நீங்கள் தந்த லிங்க் அவர்கள் சொல்வதுடன் பொருந்துகிறது.... 

இன்னுமோர் விடயம்: தேர்தல் ஆணையம் இந்த சர்வேர்களை போடுவதில்லையே... 

Edited by Nathamuni

விசுகர் தன்னை பற்றி எழுதியது மாத்திரம் உண்மை மற்றதெல்லாம் கனவு .

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, arjun said:

விசுகர் தன்னை பற்றி எழுதியது மாத்திரம் உண்மை மற்றதெல்லாம் கனவு .

கனவு வசப்படும்....

வன்முறை இல்லாமல், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, உறுதியாக நின்றால் கனவு வசப்படும்.... ஒரு நாள்...

ஒரு காலத்தில் எல்லோரின் நம்பிக்கைக்கும் உள்ளாகி இருந்த வைகோ போல அவசரப் பட்டு அங்கும் இங்கும் ஓடி இறுதியில் போக்கிடம் இன்றி, இன்று விஜயகாந்தை தலைவராக ஏற்கும் நிலையில் போகாமல், கொண்ட கொள்கையில் உறுதியாக காத்து இருந்தால்..... கனவு வசப்படும்....

இலங்கையிலே, JR ஜெயவர்தனே தனது நேரத்துக்காக காத்திருந்தார், அவர் போலவே பிரேமதாசா. 

இன்றைய உதாரணம் ரணில்....அவர் அடைந்த தோல்விகளுக்கு அளவே இல்லை... இருந்தாலும் உறுதியாக காத்து இருந்தார் தனது நேரம் வரும்வரை...

எல்லோரும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, உறுதியாக நின்றதால் கனவு வசப்பட்டது.

அதே போல உறுதியாக  நின்றால் கனவு வசப்படும்.... ஒரு நாள்...

Edited by Nathamuni

2026 முதல்வராகும் கனவு வசப்பட முதல் விஜேய் அரசியலுக்கு வந்தால்.:unsure:

34 minutes ago, Nathamuni said:

கனவு வசப்படும்....

கனவு காணும் வாழ்க்கை யாவும் 
கலைந்து போகும் கோலங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, arjun said:

2026 முதல்வராகும் கனவு வசப்பட முதல் விஜேய் அரசியலுக்கு வந்தால்.:unsure:

அண்ண,

உங்கள் பார்வை ஏன் இப்படி தவறாகின்றது?

MGR பல்லாண்டுகள் அரசியலில் இருந்தே முதல்வரானார். மக்கள் மதிக்கும் அளவு அள்ளிக் கொடுத்து பொன்மனச் செம்மல் என்று பெயர் எடுத்தார்.

சிவாஜி தடுமாறி வெளியேறினார். முக்கிய காரணம் கருமித்தனம்.

ரஜனியோ வரவே இல்லை. கமல் ஆளை விடுங்க என்கிறார்.

விஜய் அரசியலுக்கு வருவதானால், விஜயகாந்த் வென்று காட்டி இருக்க வேண்டும். அவருக்கு புரிந்ததால் தான், கல்லா கட்ட, கூட்டணி அது இது என்று போகிறார்.

இன்று சந்தர்ப்பம் பலருக்கு கிடைப்பதனால் பலர் நடிக்க வருகின்றனர். ஆனால் அரசியலுக்கு வரும் அளவு பலம் கிடைக்காது. 

மக்களுக்கு விஜய் செய்த நல்ல காரியம் ஒன்றும் இல்லையே. தம்மை பார்த்துக் கொண்டால் மக்கள் வாக்குப் போட போவதில்லை.

அடுத்த தலைமுறை தலைவர்களிடையே, ஸ்டாலின் 66 வயது.... அன்புமணி, திருமாவளவன், சீமான்....

அடுத்த தேர்தல்களில், சாதி அரசியலுக்கு மேலே ஒருவர் தான் வருவார்..... அவர் நம்மாளு தான்..

15 minutes ago, ஜீவன் சிவா said:

கனவு காணும் வாழ்க்கை யாவும் 
கலைந்து போகும் கோலங்கள்.

Winners never quit and quitters never win.

கனவினைப் பொறுத்தது...

நீங்கள் நோர்வே பிரதமர் ஆகலாம் என கனவு காணலாம்...

ஆனால் நோர்வே அரச குடும்பத்தில் ஒருவராவேன் என்று கனவு கண்டால்.... கலைந்து போகும்.  :grin:

Edited by Nathamuni

7 minutes ago, Nathamuni said:

Winners never quit and quitters never win.

இதில எதோ உள்குத்து இருக்கிறமாதிரி தெரியுதே. இதை நீங்கள் எனக்கு சொல்லேல்லைதானே. :grin:

அட கடவுளே நீங்க எடிட் பண்ணமுதலே பதிஞ்சிட்டனே

12 minutes ago, Nathamuni said:

ஆனால் நோர்வே அரச குடும்பத்தில் ஒருவராவேன் என்று கனவு கண்டால்.... கலைந்து போகும்.  :grin:

நோர்வே இளவரசி மாற்தாக்கு  ஆரிய பிடிக்காமல் என்னை பிடிச்சால் - நானும் ஒகே பண்ணினால். நானும் அரச குடும்பம்தானே. 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2016 at 3:13 PM, விசுகு said:

தமிழக தேர்தல் பற்றி உறவுகள் எல்லாம் ஒவ்வொரு பக்கமாக விமர்சனங்களும் ஆதரவுகளும் தொடரும் இவ்வேளையில்....
ஒரு விடயத்தை பதியலாம் என நினைக்கின்றேன்.
ரொம்ப சுயநலமான ஈழத்தமிழன் நான்.
எமக்காக எவர் பேசினாலும் எமக்காக எவர் உழைத்தாலும் அவரை ஆதரிப்பதே எமது இன்றையநிலை. தேவை.
எல்லோருக்கும் காலம் கொடுத்துப்பார்த்தாச்சு
ஒன்றுமே நடக்கல. ஏமாற்றமும் துரோகமும் தான் மிச்சம். இந்த முறை சீமானுக்கு கொடுத்துப்பார்க்கலாம். சீமானும் ஏமாற்றினா? ஏன் இருப்பவர்களில் எவராவது திறமா? அவர்களைவிட சீமானால் ஏமாற்றமுடியுமா என்ன? இன்னும் 50 வருடம் போனாலும் அந்த திறமை சீமானுக்கு வராது.
ஒன்றுமட்டும் நிச்சயம்.
தமிழகம் தமிழரின் கைக்கு வரணும்
அல்லது இந்தியா உடையணும்
இல்லாது விட்டால் ஈழத்தமிழினம் இனி நிமிராது. தமிழர் என்ற ஒரு இனம் உலகில் இராது.
ரொம்ப சுயநலமான தமிழன் நான்.

இந்த முறை தேர்தலில் சீமானுக்கு நான் எதிர்பார்ப்பது 10 வீத வாக்கே. அது வந்தால் அடுத்தமுறை எல்லோரும் வரிசையில் வந்து சீமானுக்குப்பின்னால் நிற்பார்கள். அடுத்த முதல்வர் அவர்தான்.

தமிழக தேர்தல் பற்றி உறவுகள் எல்லாம் ஒவ்வொரு பக்கமாக விமர்சனங்களும் ஆதரவுகளும் தொடரும் இவ்வேளையில்....

ஒரு விடயத்தை பதியலாம் என நினைக்கின்றேன்.
ரொம்ப சுயநலமான ஈழத்தமிழன் நான்.
எமக்காக எவர் பேசினாலும் எமக்காக எவர் உழைத்தாலும் அவரை ஆதரிப்பதே எமது இன்றையநிலை. தேவை.
எல்லோருக்கும் காலம் கொடுத்துப்பார்த்தாச்சு
ஒன்றுமே நடக்கல. ஏமாற்றமும் துரோகமும் தான் மிச்சம்.

இந்த முறை சீமானுக்கு கொடுத்துப்பார்க்கலாம். சீமானும் ஏமாற்றினா? ஏன் இருப்பவர்களில் எவராவது திறமா? அவர்களைவிட சீமானால் ஏமாற்றமுடியுமா என்ன? இன்னும் 50 வருடம் போனாலும் அந்த திறமை சீமானுக்கு வராது.

ஒன்றுமட்டும் நிச்சயம்.
தமிழகம் தமிழரின் கைக்கு வரணும்
அல்லது இந்தியா உடையணும்
இல்லாது விட்டால் ஈழத்தமிழினம் இனி நிமிராது. தமிழர் என்ற ஒரு இனம் உலகில் இராது.

ரொம்ப சுயநலமான தமிழன் நான்.
இந்த முறை தேர்தலில் சீமானுக்கு நான் எதிர்பார்ப்பது 10 வீத வாக்கே. அது வந்தால் அடுத்தமுறை எல்லோரும் வரிசையில் வந்து சீமானுக்குப்பின்னால் நிற்பார்கள். அடுத்த முதல்வர் அவர்தான்.

நன்றி.... http://www.yarl.com/forum3/topic/174097-தமிழக-தேர்தல்-பற்றி/

கானொளியில் தெளிவாக 2026 என்று சால்லியிருக்கிறார்கள். கணொளி பதிவு செய்யப்பட்ட திகதிதான் 30.04.2016

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக சுப்பிரமணிய சுவாமிதான்  தேர்தல் கோமாளியாக  இருப்பார். இம்முறை வைகோ அந்த இடத்திற்கு வந்துவிட்டார். வைகோவின் முடிவுகள்  மிக பைத்தியக் காரத்தனமாக இருக்கிறது. நுணலும் தன் வாயால் கெடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.