Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வன்முறைகள்மூலம் மக்களின் வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா? யாழ் ஆயர் ஆதங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிலர் எழுதி இருக்கும் கருத்துக்களைப் பார்க்க வேடிக்கையாக இருக்குது...ஊரில் இருக்கும் கிரிஸ்தவ மத நிறுவனங்களுக்கு வெளி நாட்டில் உள்ள அமைப்புகளால் பணம் அனுப்பப்படுகிறது...தங்கட செலவுகள்,ஆட்களை மதம் மாத்துகின்ற செலவு போக மிச்சத்தை அநாதை இல்லம்,முதியோர் இல்லம் என கட்டிப் கொஞ்சப் பேரை பாராமரிக்கிறார்கள் தான்.இல்லையென சொல்லவில்லை...இங்கு அர்ஜீன் அண்ணா ஒரு ஆயர்,ஒரு ஏழைப் பெண்ணை ஏமாத்தி அந்தப் பெண்ணின் காணியில் முதியோர் இல்லம் நடத்துகிறார் என எழுத,ஆயரின் சமூக சேவையை அறியத் தந்ததிற்கு நன்றிகள் என ஒருவர் எழுதுகிறார்...இவர்களை பொறுத்த வரை யாரும்,யாரையும் ஏமாத்தி சமூக சேவைகள் செய்யலாம்...நல்லை ஆதீனம் உந்த கேடு கெட்ட செயலை செய்திருந்தாலும் உவர்கள் இப்படித் தான் எழுதி இருப்பார்கள்.அந்த ஏழைப் பெண் எக் கேடு கெட்டாலும் இவர்களுக்கு அக்கறை இல்லை.

ஊரில் இருக்கும் ஜயர்மார்களுக்கு மக்களால் கொடுக்கப்படும் தட்சனையும்,அரச
மாதத் சம்பளமும் தான் வருமானம்...யார் என்டாலும் தங்கட வருமானத்தை பெருக்கி கொள்ளத் தான் பார்ப்பார்கள்.இவர்களை என்ன வீடு வீடாய்ப் போய்ப் பிரச்சாரம் செய்ய சொல்கிறீர்களா? அல்லது பாதிரிமார்கள் செய்வது மாதிரி ஆட்களை பலவந்தமாக மதமாற்றம் செய்யச் சொல்கிறீர்களா?...இப்பவும் நல்லூரில் 1ரூபாய் தான் அர்ச்சனை சீட்டு,சமய வகுப்புகள் நடத்திக் கொண்டு தான் இருக்குது.

இங்கே இருக்கும் இவர்கள் காசு,காக ஓவர்டைம் அது,இது என்று ஓடியாடி உழைப்பினம்.ஆனால் ஜயர்மார் உழைச்சால் பிழை...பெரும் பலமிக்க கிரிஸ்தவ பாதிரிமார்கள் சொல்லியே உலகம் கேட்கவில்லை. ஜயர்மார் சொல்லித் தான் உலகம் கேட்கப் போதாக்கும்.

லண்டனில் இருக்கிற ஒவ்வொரு கோயில்களும் இப்ப ஊரில என்னென்ன சேவை செய்கிறது என்று விபரம் தெரிய வேண்டுமென்டால் கோயில்களது பெயரையும்,தொலைபேசி இலக்கத்தையும் எடுத்துத் தாறன் அடிச்சு விசாரிச்சுப் பாருங்கோ.அதை விடுத்து சும்மா கண்ட பாட்டுக்கு கதைக்க வேண்டாம்.

ஊரில காணி இருந்தால்[முக்கியமாக இந்தத் திரியில் எழுதியவர்கள்] அதை யாரும் அநாதை,முதியோர் இல்லத்திற்கு கொடுக்கலாம்.அது ஆயரால் நடத்தப்படும் இல்லமாக இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் தயது செய்து அங்குள்ள கஸ்டப்பட்ட மக்களது காணிகளை,வீடுகளை புடுங்க வேண்டாம்.

  • Replies 63
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்கள்பற்றி எனக்கு அதிகம் தெரியாது அறிந்து கொள்ளவேண்டிய அக்கறையும் இருந்ததில்லை. என்று முன்பே நான் எழுதியுள்ளேன். இங்கு சாட்சியங்களுடன்கூடிய ஒருவரின் பதிவின்படி ஆயர் அத்தனை கெட்டவரென்றால்...! அருடைய உடல்நலன்பற்றி இந்துக்குருமார் பேரவையும் கவலைகொள்ளவேண்டிய அவசியம் என்ன..?? இன்று சிங்கள அரசு எப்படித் தமிழர்களை தனது கோரப்பிடிக்குள் வைத்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் "அரச அதிபர் தலையிட்டும் இராயப்பு யோசப் ஆண்டகையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது" என்பதை நம்புவதும் கடினமாக உள்ளது. இந்தத் திரியில் ஆயர்மாரை உயர்த்தவோ, புகழவோ நான் முயலவில்லை. ஆயர்மாருடன் ஒப்பிடும்போது ஐயர்மார் எங்கு உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டவே விளைந்தேன்.

இராயப்பு யோசப் ஆண்டகை விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம்; இந்துக்குருமார் பேரவை

http://ttnnews.com/ on: May 05, 2015

மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தினைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை தெரிவித்துள்ளனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள்  நோய் வாய்ப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு நாம் மிகவும் வேதனையடைந்தோம்.
 இவர் மிக விரைவில் குணமடைந்து மன்னார் வந்து தம் பணி தொடர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
 இவர் பூரண சுகம் பெற வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை தமது செய்தியில் தெரிவித்துள்ளனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2016 at 11:26 PM, arjun said:

வவுனியா ஏழைப்பெண்ணுக்கு மன்னார் ஆயரினால் ஏற்பட்ட கொடூரம்:அதிர்ச்சியூட்டும் தகவல்(photos)

on: மே 08, 2016

வவுனியா மன்னார் வீதி 5ம் கட்டையில் அமைந்துள்ளது அன்னை திரேசா அன்பகம் இது முதியோர்களை பராமரிக்கும் நிலையமாக செயற்பட்டு வருகின்றது

ஆனால் இவ் அமைவிடமானது 1957.06.20 காலப்பகுதியில் அரசாங்கத்தால் வளங்கப்பட்ட R5220 5ஏக்கர் சுற்றளவு கொண்ட காணியாகும் இக்காணியின் உரிமையாளர் திரு.தைரஸ் எதிர்நாயகம் லூயிஸ் என்பவர் இறந்துவிடவே இக்காணி அவருடைய மணைவி திருமதி.லின்டா மனோன்மணி என்பவருக்கு உரித்தானது

இவர்கள் இருவருக்கும் வாரிசுகள் இல்லாதவிடத்து 3மாத குழந்தையான பெண் குழந்தை ஒன்றை 1972ல் தத்தெடுத்ததுடன் அப்பிள்ளைக்கு ரொசான் நிர்மலா லூயிஸ் என்றும் பெயர் சூட்டினர்

காலம் கடந்தது பிள்ளையும் வளர்ந்தது திருமணமும் முடிந்தது பின்பு 1990 களில் ஏற்பட்ட யுத்தத்தினால் அப்பெண் இருப்பிடத்தை விட்டு இடம்பெயர்ந்தார் மூன்று ஆண்டுகள் கழித்து வந்த போது அவ்விடத்தில் இரானுவ முகாம் இருந்தை கண்டு அதிர்ச்சியுற்று மீண்டும் அவர் தற்காலிகமாக இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார்

மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக மத்திய கிழக்கு நாட்டிற்கு பணிக்காக சென்று நாடு திரும்பிய வேளையில் தான் அவருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி

ஆம் அவர் தனது இடத்திற்கு வந்த பொழுது அங்கு அன்னை திரேசாவின் முதியோர் இல்லம் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்று அவர்களிடம் வினாவியபோது “இது மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களின் கீழ் நடாத்தப்படுகிறது நீங்கள் அங்கு செல்லுங்கள் “என்று கூறவும் அவரும் அங்கு செல்லவே அவருக்கு அங்கும் அதிரச்சி காணப்பட்டுள்ளது ஆயரினால் ஒரு கடிதம் அப்பெண்ணுக்கு காட்டப்பட்டுள்ளது அதில் அக்காணியை இவரது வளர்ப்பு தாயாரால் விற்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது ஆனால் இதில் முக்கிய விடயம் என்னவெனில் தாயார் இறந்த திகதிக்கு பின்னரே அக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அதில் ஒப்பம் தனது தாயாரது இல்லை என்றும் அப்பெண் வாதிடவே “உன்னால் முடிந்ததை செய்யென்று” ஆயரவர்கள் கூறி வலுக்கட்டாயமாக களைத்து விட்டுள்ளனர் அப்பெண்ணை

பின்பு அப்பெண் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு இட்டும் எந்த பலனும் கிடைக்காத விடத்தில் வவுனியா பிரதேச செயலகத்தில் 2011ம் ஆண்டளவில் முறைப்பாடு செய்துள்ளார் அப்போதிருந்த பிரதேச செயளாலரினால் விசாரனை மேற்கொண்டு இரு பகுதியிரையும் இனக்கப்பாட்டிற்கு கொண்டுவந்ததுடன் அக்காணியில் சமூக சேவை ஒன்று இடம்பெருவதை கருத்தில் கொண்டு அக்காணியை இரண்டாகப் பிரித்து கொடுக்கப்பட்டது இதில் பிரதான மன்னார் வீதியில் அண்மித்து(lot4 படத்தில் காணப்படுகிறது) 4பரப்பு காணியும் பிரதான வீதியில் வாயில் அமைத்து 1.1/2 ஏக்கர் காணியும் அப்பெண்ணிற்கு பிரித்து கொடுக்கப்பட்டதுடன் அவருடைய இல்லத்திற்கு பதிலாக வீடொன்றும் கட்டிகொடுப்பதாக ஆயர் தரப்பினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது அத்துடன் அக்காணியை இரண்டாக பிரித்து எல்லை கல்லும் போடப்பட்டு வேலியும் அமைக்கப்பட்டது

சற்று ஆறுதல் அடைந்த அந்த ஏழை பெண் அக்காணியில் தற்காலிகமாக ஒரு கொட்டிலை அமைத்து வாழந்து வந்துள்ளார் இவ்வாறு இருக்கையில் தனது மகளிற்கு வரன் கூடி வரவே பிரதான வீதியினருகே இவருக்கு வழங்கப்பட்ட அக்காணியை தனது மகளிற்கு சீதனமாக வழங்கி அம்மகளின் திருமணத்துக்காக வெளியூர் சென்று 6மாத காலத்தின் பின் தனது இருப்பிடத்திற்கு வந்த பொழுது காத்திருந்தது அதிர்ச்சி

மகளுக்கு சீதனமாக வளங்கிய அக்காணியை சுற்றி முற்றிலும் மதில் கட்டப்பட்டு ஆயரினால் அபகரிக்கப்பட்டிருந்தது இது தொடர்பாக பிரதேச செயளாலரிடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை மேலும் பிரதேச சபையை நாடிய போது அவர்கள் உடனடியாக மதில் கட்டுவது தவறு எனவும் பிரதேச சபை அங்கிகாரம் இல்லாமல் மதில் கட்டுவது குற்றமென்றும் கடிதம் அனுப்பியுள்ளனர் ஆனாலும் ஆயர் அதை கருத்தில் கொள்ளாது மதிலை கட்டியுள்ளார் என்று கூறியுள்ளனர்

இவ்வாறு இப்பெண் அங்குமிங்குமாக அலைந்து இறுதியில் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டதுடன் தனது மகளுடைய வாழ்வும் நாசமானதாக எமது செய்தியாளரிடம் கூறினார் அத்துடன் இது சம்பந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்கும் கடிதம் அனுப்பியும் அரச அதிபர் தலையிட்டும் இராயப்பு யோசப் ஆண்டகையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது என்று புலம்பினார்

மேலும் எமது செய்தியாளர் ஏன் நீங்கள் வழக்கு தாக்கல் பண்ணவில்லை என்றதற்கு தன்னிடம் வசதிவாய்ப்பு இல்லை என்றும் தன் கணவரும் யுத்த காலத்தில் பிரிந்து விட்டதாகவும் தான் தனி மரமாக நிற்பதாகவும் கண்ணீர் மல்க கூறியதும் எமது செய்தியாளர்கள் கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்ததை காணக்கூடியதாக இருந்தது அத்துடன் தனக்கு ஒரு தீர்வை பெற்றுத்தருமாறும் எம் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்

இவ்வாறான பெரும் புள்ளிகள் உயர் பதவிகளில் இருந்து கொண்டு ஏழை மக்களை நசுக்கும் இந்த கலாச்சாரம் எப்போது தான் ஓயப்போகின்றது??? இதிலே குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அப்பெண்ணும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதாகும்

30 வருட போராட்டத்தில் இன்னுமொரு இனம் எம்மை ஆழக்கூடாது என்று போராடிய எம் இனத்துக்குள்ளேயே இவ்வாறான கொடூரங்கள் இடம்பெருவது மனவேதனைக்குறிய விடயமாகும்

image

image

image

image

image

இதற்கு பெயர் தான் சாத்தான் வேதம் ஓதுதல் .

சாத்தானின் பல பந்திகளில் வேதம் ஓதியிருகின்றீர்கள் ,

மதங்களை பற்றி இந்த திரியில் பேச வேண்டிவந்ததிற்கு ஒரே காரணம் முதலில் வந்த பின்னோட்டம் தான் .

இங்கு மதமோ அல்லது அதை பின்பற்றுபவர்கள் பற்றியோ இல்லை பிரச்சனை .எல்லா மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கின்றார்கள் .அதை முதலில் விளங்கிகொள்வதுதான் முக்கியம் .

சிலருக்கு ஆயர் இராயப்புவை மதவெறியராக, அடிதடிகாரராக, பொதுபலசெனாவாக விமர்சிக்க வேண்டிய தேவையுள்ளது. கோவிலுக்கு சொந்தமான காணிகள் இருக்க ஏழையின் காணியை அபகரித்து வயோதிபமடம் கட்டுவதற்கு ஆயர் ஒன்றும்  சர்வாதிகாரப் பிக்குவோ, அரசியல்வாதியோ கிடையாது. இங்கு பெத்த பிள்ளைகள் கூட பெற்றோரை பராமரிப்பது கிடையாது. யாராவது பாத்துப் பராமரித்தால் அந்த நன்றிக்கடனுக்கு தமது சொத்தை அவர்கள் எழுதி விடுவார்கள். ஆனால் பெற்றோர் இறந்தபின் சொத்துச் சண்டைக்கு வருவினம். ஒரு சமயம் இந்தப்பெண் தனது தாயை பராமரிக்காமல் விட்டிருந்தால், அந்தத்தாய் தனது காணியை கோவிலுக்கு  எழுதி இருக்கிறா. தனது தாய் இறந்த ஆண்டு சொல்லாமல், இறந்தபின் திகதி எழுதப்பட்டுள்ளது என்று சொல்கிறார். தாய் இறக்கும்போது இவர் தாயுடன் இருக்கவில்லை, தாய் இவருக்கு காணியை  எழுதவும் இல்லை என்பது புரிகிறது. தாய் இவரை வளர்த்தபடியால் பாதிக் காணியை கொடுக்க சம்மதிக்கப் பட்டிருக்கலாம். இணைக்கப்பட்டுள்ள கடிதத்தின் கடைசி வரியை வாசியுங்கள். "உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் முன்னைய பிரதேச செயலாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளது." என்றுள்ளது. எனக்கு வழக்குப்போட வழியில்லை என்று சொன்னால் அவர் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுமா?

நடுநிலையான பத்திரிகைக்காரர் மற்றப் பக்கத்து கதையையும் கேட்டு எழுதி இருக்கலாமே? கதை கேட்டு கண்ணீர் விட்டவர்கள் அந்தப்பெண் நீதிமன்றம் போக உதவி இருக்கலாமே? போலி ஆவணங்களோட வழக்குத் தொடரலாமா? பெண்ணின் நியாயம் கேட்டா? ஆயருக்கு சேறடிக்கவா இந்தக் கதை எழுதப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2016 at 7:31 AM, ரதி said:

இதில் சிலர் எழுதி இருக்கும் கருத்துக்களைப் பார்க்க வேடிக்கையாக இருக்குது...ஊரில் இருக்கும் கிரிஸ்தவ மத நிறுவனங்களுக்கு வெளி நாட்டில் உள்ள அமைப்புகளால் பணம் அனுப்பப்படுகிறது...தங்கட செலவுகள்,ஆட்களை மதம் மாத்துகின்ற செலவு போக மிச்சத்தை அநாதை இல்லம்,முதியோர் இல்லம் என கட்டிப் கொஞ்சப் பேரை பாராமரிக்கிறார்கள் தான்.இல்லையென சொல்லவில்லை...இங்கு அர்ஜீன் அண்ணா ஒரு ஆயர்,ஒரு ஏழைப் பெண்ணை ஏமாத்தி அந்தப் பெண்ணின் காணியில் முதியோர் இல்லம் நடத்துகிறார் என எழுத,ஆயரின் சமூக சேவையை அறியத் தந்ததிற்கு நன்றிகள் என ஒருவர் எழுதுகிறார்...இவர்களை பொறுத்த வரை யாரும்,யாரையும் ஏமாத்தி சமூக சேவைகள் செய்யலாம்...நல்லை ஆதீனம் உந்த கேடு கெட்ட செயலை செய்திருந்தாலும் உவர்கள் இப்படித் தான் எழுதி இருப்பார்கள்.அந்த ஏழைப் பெண் எக் கேடு கெட்டாலும் இவர்களுக்கு அக்கறை இல்லை.

ஊரில் இருக்கும் ஜயர்மார்களுக்கு மக்களால் கொடுக்கப்படும் தட்சனையும்,அரச
மாதத் சம்பளமும் தான் வருமானம்...யார் என்டாலும் தங்கட வருமானத்தை பெருக்கி கொள்ளத் தான் பார்ப்பார்கள்.இவர்களை என்ன வீடு வீடாய்ப் போய்ப் பிரச்சாரம் செய்ய சொல்கிறீர்களா? அல்லது பாதிரிமார்கள் செய்வது மாதிரி ஆட்களை பலவந்தமாக மதமாற்றம் செய்யச் சொல்கிறீர்களா?...இப்பவும் நல்லூரில் 1ரூபாய் தான் அர்ச்சனை சீட்டு,சமய வகுப்புகள் நடத்திக் கொண்டு தான் இருக்குது.

இங்கே இருக்கும் இவர்கள் காசு,காக ஓவர்டைம் அது,இது என்று ஓடியாடி உழைப்பினம்.ஆனால் ஜயர்மார் உழைச்சால் பிழை...பெரும் பலமிக்க கிரிஸ்தவ பாதிரிமார்கள் சொல்லியே உலகம் கேட்கவில்லை. ஜயர்மார் சொல்லித் தான் உலகம் கேட்கப் போதாக்கும்.

லண்டனில் இருக்கிற ஒவ்வொரு கோயில்களும் இப்ப ஊரில என்னென்ன சேவை செய்கிறது என்று விபரம் தெரிய வேண்டுமென்டால் கோயில்களது பெயரையும்,தொலைபேசி இலக்கத்தையும் எடுத்துத் தாறன் அடிச்சு விசாரிச்சுப் பாருங்கோ.அதை விடுத்து சும்மா கண்ட பாட்டுக்கு கதைக்க வேண்டாம்.

ஊரில காணி இருந்தால்[முக்கியமாக இந்தத் திரியில் எழுதியவர்கள்] அதை யாரும் அநாதை,முதியோர் இல்லத்திற்கு கொடுக்கலாம்.அது ஆயரால் நடத்தப்படும் இல்லமாக இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் தயது செய்து அங்குள்ள கஸ்டப்பட்ட மக்களது காணிகளை,வீடுகளை புடுங்க வேண்டாம்.

ரதி உங்களுக்கு பாதிரிமாரை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று எழுதுங்கள். அதற்காக அபாண்டமாக எல்லாம் எழுதக்கூடாது. "தங்கட செலவுகள் போக" என்று எதைக் கூறுகிறீர்கள்? ஒரு பாதிரியார் தனது தாய், தந்தை,உறவு எல்லாம் துறந்துதான் பணிபுரிய வருகிறார்கள். போகிற இடத்தில் தங்கி, கொடுப்பதை உண்டு பணி செய்கிறார்கள். பணிக்காலம் முடிந்ததும் வேறொரு ஊருக்குப் போகிறார்கள். அவர்களுக்கு என்றொரு சொந்த வீடோ, ஊரோ கிடையாது  அவர்களுக்கு சொந்தமானது ஒரு உடுப்புப் பெட்டி மட்டுந்தான். அவர்கள் யாரையும் வற்புறுத்தி மதம் மாற்றுவது கிடையாது, மாற விரும்புபவர்களை தடுப்பதும் கிடையாது. பல கிறிஸ்தவ பாடசாலைகளில் படிக்கும் இந்து மாணவர்களுக்கு தமது மத வழிபாடுகள் செய்வதற்கு தடையேதுமில்லை மாறாக அதற்கான  ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அந்த விடுதிகளில் தங்கிப்படித்த மாணவர்களை கேட்டுப்பாருங்கள், அவர்கள் இன்றும் இந்துக்களாகவே இருக்கிறார்கள். +ம் ஒரு இந்துக்குடும்பத்தில் பிறந்த பெண் கிறிஸ்தவ விடுதியில் தங்கிப்படித்து ஆசிரியரானார். இந்துமுறைப்படி திருமணமும் செய்து கொண்டார். கணவரால் பல கொடுமைகள் அனுபவித்தார். கணவர் இறந்த பிற்பாடு அவருக்கும், குழந்தைகளுக்கும் துணையாயிருந்து படிப்பித்து அவர்களும் நல்ல உத்தியோகம் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் மதம் மாற்றப்படவில்லை. தனது 76வது வயதில் பிரான்சிலுள்ள லூட்ஸ் என்ற இடத்தில் யார் வற்புறுத்தலும் இல்லாமல் தானாகவே கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார். இதுமட்டுமல்ல எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன.  அன்னை திரேசா, வீடுவீடாகச் சென்று பிச்சை எடுத்துத் தான் அனாதைச் சிறுவர்களை பராமரித்தார். வெளிநாட்டு நிறுவனங்கள் பணம் அனுப்பியிருந்தால் அவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஒரு தடவை ஒரு  தனவந்தரிடம் இரக்கச்சென்றார். அவனுக்கு அந்த மதத்தின் மேலுள்ள வெறுப்பினால் அவரின் கையை நீட்டச் சொல்லி அந்தத் தாயின் கையிலே காறிஉமிழ்ந்தான். ஆனால் அவர் சிறிதும் கோபப் படாமல் சிரித்தபடியே கையை தனது சேலையில் துடைத்தபடி மற்றக் கையை நீட்டி எனக்கு உரிய பங்கைத் தந்துவிட்டீர் இனி ஏழைகளுக்குரிய பங்கைத்தாரும் என்று கேட்டாராம். அந்தத் தாய் இறந்தபோது அவருடைய சொத்தாக இருந்தது, ஒருசாறியும் அதாவது உடுத்த சாறிக்கு மேலதிகமாக இன்னொன்றும், ஒரு வாளியுந்தான்.இப்படித்தான் பாதிரிகளுடைய வாழ்வு. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை கோவிலுக்கு கொடுக்கிறார்கள். அதிலொரு பகுதியை பாதிரியாரின் பாராமரிப்புக்கும் மக்களே கொடுக்கிறார்கள். விரும்பினால் நீங்களும் அவ்வாறு செய்யுங்கள். ஆனால் அவர்களைப் பார்த்து வயிறு எரியாதீர்கள். சிங்களவன் அடிக்கேக்கை ஐயர், பாதிரி என்று பார்த்து அடிப்பதில்லை. தமிழன் என்றுதான் அடிக்கிறான். ஆனால் நாங்கள் ஐயர் என்றும், பாதிரி என்றும் பாத்து சேறடிக்கிறோம். "கேள்விச் செவிடன் ஊரைக்கெடுத்தானாம்" என்பதுபோல் எழுதாமல் தெரிந்தவர்களிடம் கேட்டு,ஆராய்ந்து நல்லதை எழுதுங்கள். வேற்றுமையை வளர்க்காதீர்கள். அந்தப் பெண்மேல உங்களுக்கு அக்கறை இருந்தால் ஒன்று செய்யுங்கள். வழக்குப்போட வழியில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ஏதாவது செய்து நீதியைப் பெற்றுக் கொடுங்கள். உறுதியை தொலைத்துப் போட்டேன் என்று சொல்லாமல் இருந்தால்ச்சரி. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்,நான் அருட் சகோதரிகளால் நடத்தப்படும் பாடசாலையில் தான் படித்தேன்.அவர்கள் எப்படியானவர்கள் என எனக்குப் பாடம் படிப்பிக்க வேண்டாம்.புத்த பிக்குகளும் தாங்கள் பிச்சை பாத்திரம் ஏந்தி சாப்பிடுவதாகத் தான் சொல்கிறார்கள்...நான் எல்லாப் பாதிரிமார்கள் கெட்டவர்கள் என்றோ அல்லது எல்லா ஜயர்மார்களும் நல்லவர்கள் என்றோ சொல்லவில்லை.

ஜயர்மாரை மற்றவர்களோடு சேர்ந்து கேவலமாக எழுதும் போது உங்களு வலிக்கவில்லை.பாதிரிமாரை சொல்லும் போது வலிக்குதாக்கும். ஊர் புதினத்தில் மதத்தை வைத்து சண்டை போட நான் வரவில்லை. நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

சாத்தான்,நான் அருட் சகோதரிகளால் நடத்தப்படும் பாடசாலையில் தான் படித்தேன்.

ரதி

அருட் சகோதரிகள் எப்படி உங்களை மதம் மாற்றாமல் படிப்பித்து விட்டார்கள்?

இந்து பாடசாலைகள் இருக்க எதற்காக இந்த அருட் சகோதரிகளின் பாடசாலையில் சேர்ந்தீர்கள்? பணம் ஏதும் தந்தார்களா?

அல்லது மதம் மாறுவதாக வாக்களித்து பணத்தையும் வாங்கி படிப்பையும் முடித்து விட்டு பின்னர் மதம் மாறாமல் விட்டு விட்டீர்களா?

அல்லது முதலில் மதம் மாறி பணத்தையும் பெற்று படிப்பையும் முடித்து விட்டு பின்னர் மீண்டும் இந்துவாக மதம் மாறி விட்டீர்களா?

நீங்கள் சொல்வது போல இந்த அருட் சகோதரிகள் மதம் மாற்றுவதற்காக பணம் தருவதும் படிப்பித்து விடுவதும்  உண்மையாக இருந்தால் உங்கள் வரலாற்றில் பொய்மை இருக்க வேண்டும். அல்லது நீங்கள் மதம் மாற்றுவது பற்றி\ சொல்வது பொய்யாக இருக்க வேண்டும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

On 5/13/2016 at 5:23 AM, ரதி said:

ஜயர்மாரை மற்றவர்களோடு சேர்ந்து கேவலமாக எழுதும் போது உங்களு வலிக்கவில்லை.பாதிரிமாரை சொல்லும் போது வலிக்குதாக்கும்.

"காய்த்த மரத்திற்கே கல்லடி விழும்." நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள்  யூட். சிலர் நினைப்பது தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு கலைந்து  போய்விட வேண்டும், எதிர்த்து கதைக்கக் கூடாது என்று.   அப்படி தெரிந்ததை யாரும் சுட்டிக் காட்டினால்எனக்குப் பாடம் படிப்பிக்க வேண்டாம், வகுப்பெடுக்க வந்துவிட்டார்கள்." இப்படி பதில் வரும். நிட்சயமாக ரதி சோரம் போயிருக்க மாட்டா, இந்த வசனத்தைப் பாருங்கள், நான் எங்கேயும் ஐயர்மாரை கேவலமாக எழுதவில்லை. இது அபாண்டம்.

On 5/11/2016 at 7:31 AM, ரதி said:

தங்கட செலவுகள்,ஆட்களை மதம் மாத்துகின்ற செலவு போக மிச்சத்தை அநாதை இல்லம்,முதியோர் இல்லம் என கட்டிப் கொஞ்சப் பேரை பாராமரிக்கிறார்கள் தான்

இவருடைய இந்த எழுத்துக்களில் இருந்த அறியாமைக்குத்தான் பதில் எழுதினேன். இதில் என்ன வலி இருக்கிறது? எங்கே சண்டை இருக்கிறது? ஒருவர் தனக்குத் தெரிந்தவரைப் பற்றி கொடுக்கும் சான்றிதழை விட அவரவர் எழுத்துக்கள் அவர்களை துல்லியமாகக் காட்டித் தந்து விடும். அதனாலேதான் நினைத்ததை தொடர்ந்து பதிலெழுதாமல் விட்டேன்.

மதம் சார்பாக ஒரு திரி திறந்தால் மனம் விட்டு உரையாடலாம் 

போப் தொடக்கம் மதம் மாற்றும் பாதிரிகள்  வரை சீலையை உரித்துவிடலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் ஒருமுறை முசுலீம்கள் தமிழர்களைத் தாக்கியவேளையில் அங்கு காவல்துறைக்குப் பொறுப்பாக ஏ.எஸ்.பி இராசசுந்தரம் இருந்தார். அவர் என் சொந்தத்தில் திருமணம் செய்திருந்ததால் அவருடன் பேசும் சந்தர்ப்பம் எனக்கிருந்தது. அவர் என்னிடம் கேட்டது இன்றும் என் காதில் ஒலிக்கிறது.

"முசுலீமுக்குப் பிரச்சனை என்றால் ஹாஜியார் வருகின்றார். கிறித்தவர்களுக்குப் பிச்சனை என்றால் பாதிரியார் வருகின்றார். சிங்களவர்குப் பிரச்சனை என்றால் பிக்கு வருகிறார். தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் எந்தக் குருவும் வருவதில்லை."  

இது இன்று நேற்று நடந்ததல்ல, தமிழர்கள் ஆயுதப் போராட்டக் காலத்திற்கு முன்பு நடந்தது. ஏன் தமிழர்களுக்கு மதகுரு இல்லையா? அல்லது தமிழர்களுக்கு மதம் இல்லையா.???   
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

இது இன்று நேற்று நடந்ததல்ல, தமிழர்கள் ஆயுதப் போராட்டக் காலத்திற்கு முன்பு நடந்தது. ஏன் தமிழர்களுக்கு மதகுரு இல்லையா? அல்லது தமிழர்களுக்கு மதம் இல்லையா.???   
 
தமிழர்களுக்கு பல மதங்கள் உண்டு அதுதான் பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் ஒருமுறை முசுலீம்கள் தமிழர்களைத் தாக்கியவேளையில் அங்கு காவல்துறைக்குப் பொறுப்பாக ஏ.எஸ்.பி இராசசுந்தரம் இருந்தார். அவர் என் சொந்தத்தில் திருமணம் செய்திருந்ததால் அவருடன் பேசும் சந்தர்ப்பம் எனக்கிருந்தது. அவர் என்னிடம் கேட்டது இன்றும் என் காதில் ஒலிக்கிறது.

"முசுலீமுக்குப் பிரச்சனை என்றால் ஹாஜியார் வருகின்றார். கிறித்தவர்களுக்குப் பிச்சனை என்றால் பாதிரியார் வருகின்றார். சிங்களவர்குப் பிரச்சனை என்றால் பிக்கு வருகிறார். தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் எந்தக் குருவும் வருவதில்லை."  

இது இன்று நேற்று நடந்ததல்ல, தமிழர்கள் ஆயுதப் போராட்டக் காலத்திற்கு முன்பு நடந்தது. ஏன் தமிழர்களுக்கு மதகுரு இல்லையா? அல்லது தமிழர்களுக்கு மதம் இல்லையா.???   
 
"முசுலீமுக்குப் பிரச்சனை என்றால் ஹாஜியார் வருகின்றார்." - உண்மை

"கிறித்தவர்களுக்குப் பிரச்சனை என்றால் பாதிரியார் வருகின்றார்" - இதுவும் உண்மை.

"சிங்களவர்குப் பிரச்சனை என்றால் பிக்கு வருகிறார்." - இது அறியாமை தரும் தவறு. பௌத்த சிங்களவர்களுக்கு பிரச்சினை என்றால் தான் பிக்கு வருகிறார்.

  • கிறீஸ்தவ சிங்களவர்களுக்கு பிரச்சினை என்றால் எங்கே பிக்கு வருகிறார்?
  • பிக்குகள் தலைமையில் கிறீஸ்தவ சிங்களவர்களின் ஆலயங்கள் கடந்த ஆட்சியில் உடைக்க படவில்லையா?
  • கிறீஸ்தவ சிங்கள பாதிரிகள் பிக்குகள் தலைமையில் தாக்கப்படவில்லையா?

இலங்கையில் தமிழரின் இன்றைய நிலைக்கு இவ்வாறான அறியாமையும் அதன் வழி எடுக்கப்பட்ட முடிவுகளும் முக்கியமான காரணங்கள்.

"தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் எந்தக் குருவும் வருவதில்லை."

தமிழ் மதம் அல்ல - மொழி. மொழிக்கு எங்கே மதகுரு இருக்கிறார்? தமிழ் பண்டிதர்கள் தான் தமிழ் மொழிக்கான குருக்கள். அவர்களையா வரச்சொல்கிறீர்கள்?

மொழிக்கும் மதத்துக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு முட்டாள்களாக இருக்கும் மக்கள் இவ்வளவு காலமும் தப்பி பிழைத்து இருப்பதே அதிசயம். இந்த அளவு அறிவிலியான இராசசுந்தரம் போன்றவர்கள் காவல் துறைக்கு பொறுப்பாக இருந்ததால் தான் தமிழ் மக்களின் வாழ்வில் பாதுகாப்பு என்பதே இல்லாமல் பொய் விட்டது.

9 hours ago, arjun said:

மதம் சார்பாக ஒரு திரி திறந்தால் மனம் விட்டு உரையாடலாம் 

போப் தொடக்கம் மதம் மாற்றும் பாதிரிகள்  வரை சீலையை உரித்துவிடலாம் .

வர்ணாசிரம தர்மம், மனு நீதி முதல் ஆறுமுக நாவலர் கடந்து நல்லை ஆதீனம் வரை சீலையை உரிய மற்றவர்களும் காத்து இருக்கிறார்கள்.

அழிவையும் பிளவையும் விரும்பும் நீங்கள் பிரதிநித்துவ படுத்தும் பிளாட் அழிந்தது பற்றி மற்றவர்கள் பெருமளவில் கவலைப்படாதற்கான காரணங்கள் இப்போது புரிகிறது.

Edited by Jude

வர்ணாசிரம தர்மம், மனு நீதி முதல் ஆறுமுக நாவலர் கடந்து நல்லை ஆதீனம் வரை சீலையை உரிய மற்றவர்களும் காத்து இருக்கிறார்கள். -

இவர்கள் சீலைகள் பல தடவைகள் உரிஞ்சாச்சு ,

நான் எந்த மதத்தையும் நம்பாதவன் .

மதவாதிகள் எவராயினும்  ஏமாற்று வேலை செய்யவே மதத்தை பயன்படுத்துகின்றார்கள் இதில் எந்த மதமும் விதிவிலக்கல்ல .

இந்த திரியில் ஐயரை நக்கல் பண்ணியதால் மற்றவர்கள் ஒன்றும் திறம் இல்லை என்று சொல்லவே அதை பதிந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

மொழிக்கும் மதத்துக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு முட்டாள்களாக இருக்கும் மக்கள் இவ்வளவு காலமும் தப்பி பிழைத்து இருப்பதே அதிசயம். இந்த அளவு அறிவிலியான இராசசுந்தரம் போன்றவர்கள் காவல் துறைக்கு பொறுப்பாக இருந்ததால் தான் தமிழ் மக்களின் வாழ்வில் பாதுகாப்பு என்பதே இல்லாமல் பொய் விட்டது.

சில படிவங்களில் விண்ணப்பதாரி எந்தத் தேசத்தவர் என கேட்கப்படுவதுண்டு. அதனை நிரப்பும்போது நான் இலங்கைத் தமிழன், இலங்கைக் கிறித்தவன், இலங்கை முசுலீம் என விண்ணப்பதாரிகளால் நிரப்பப்படுவதுண்டு. இத்தன்மை பொதுவானது. இதற்காகத் தனிமனித தாக்குதல் மேற்கொள்பவரை எப்படி அழைப்து...? 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

படிவங்கள் பற்றிய கருத்து பற்றி நான் எழுதவில்லை. பின்வரும் கருத்து பற்றியே எழுதினேன்:

12 hours ago, Paanch said:

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் ஒருமுறை முசுலீம்கள் தமிழர்களைத் தாக்கியவேளையில் அங்கு காவல்துறைக்குப் பொறுப்பாக ஏ.எஸ்.பி இராசசுந்தரம் இருந்தார். அவர் என் சொந்தத்தில் திருமணம் செய்திருந்ததால் அவருடன் பேசும் சந்தர்ப்பம் எனக்கிருந்தது. அவர் என்னிடம் கேட்டது இன்றும் என் காதில் ஒலிக்கிறது.

"முசுலீமுக்குப் பிரச்சனை என்றால் ஹாஜியார் வருகின்றார். கிறித்தவர்களுக்குப் பிச்சனை என்றால் பாதிரியார் வருகின்றார். சிங்களவர்குப் பிரச்சனை என்றால் பிக்கு வருகிறார். தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் எந்தக் குருவும் வருவதில்லை."  

இது இன்று நேற்று நடந்ததல்ல, தமிழர்கள் ஆயுதப் போராட்டக் காலத்திற்கு முன்பு நடந்தது. ஏன் தமிழர்களுக்கு மதகுரு இல்லையா? அல்லது தமிழர்களுக்கு மதம் இல்லையா.???   
 
இங்கு கூறப்பட்ட காவல்துறைக்குப் பொறுப்பாக இருந்த ஏ.எஸ்.பி இராசசுந்தரம் பற்றியதே எனது கருத்து. அவரது பொறுப்பில் பெருமளவு மக்களின் உயிர்கள் இருந்தன. அவருக்கோ மொழிக்கும் மதத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் அளவுக்கு அறிவு இருக்கவில்லை. இவ்வாறனவர்களின் பொறுப்பில் தமிழ் மக்களின் உயிர்கள் இருந்ததனால் தான் இந்த அளவு அழிவு. அவர் தனி நபர் என்று கூறி அவரது பொறுப்பில் இருந்த மக்களின் உயிர்களுக்கு உண்டான பாதிப்பை நீங்கள் தட்டி கழிக்கிறீர்கள். இவ்வாறானால் எவரது கொலைக்கும் எவரும் பொறுப்பாக மாட்டார்கள் - உங்கள் வாதத்தின் படி கொலைகாரரும் தனி மனிதர்கள் ஆகவே அவர்கள் பற்றி எவரும் கருத்து கூறக்கூடாது. இன்றைய தமிழ் மக்களின் நிலைக்கு எவரும் பொறுப்பு ஏற்காத நிலைக்கு இவ்வாறன வாதங்களும் காரணம் ஆகின்றன.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

அழிவையும் பிளவையும் விரும்பும் நீங்கள் பிரதிநித்துவ படுத்தும் பிளாட் அழிந்தது பற்றி மற்றவர்கள் பெருமளவில் கவலைப்படாதற்கான காரணங்கள் இப்போது புரிகிறது.

விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்டம் பற்றி விமர்சிக்கும் போது வெளிவராத இது இப்போது மதம் என்றவுடன் வெளிவருகிறது.

நீங்களும் அர்சுணும் சேர்ந்து எவ்வளவு எழுதியிருப்பீர்கள். இன்று தனி ஒருவரின் அதுவும் ஒரு சில வருடங்கள் இருந்த ஓர் சாதாரண உறுப்பினரின் கருத்தை வைத்து ஓர் இயக்கத்தை எடை போட்டு இருக்கிறீர்கள், இதிலிருந்தே தெரிகிறது உங்களின் மத வெறி.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2016 at 11:26 PM, arjun said:

இங்கு மதமோ அல்லது அதை பின்பற்றுபவர்கள் பற்றியோ இல்லை பிரச்சனை .எல்லா மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கின்றார்கள் .அதை முதலில் விளங்கிகொள்வதுதான் முக்கியம் .

 சந்தர்ப்பவாதமா, மாறாட்டமா?

"மதம் சார்பாக ஒரு திரி திறந்தால் மனம் விட்டு உரையாடலாம் 

போப் தொடக்கம் மதம் மாற்றும் பாதிரிகள்  வரை சீலையை உரித்துவிடலாம்"

அடுத்தவன் சட்டியில் என்ன அவியுதென்று பாக்காதையுங்கோ, உங்கட சட்டியில என்ன கருகுதெண்டு பாருங்கோ. 

அடுத்த வீட்டுக்காரன் தான் மாமிசம் சாப்பிடுவதில்லை என்றான் நம்பிவிட்டேன் .

ஒருநாள் அவரின் சட்டியை எட்டிப்பார்த்த பின் தான் தெரிந்தது அது கோழிக்கறி .

அதற்கு பிறகுதான் தெரிந்தது எனது வீட்டில்  காணாமல் போன கோழி முழுக்க முழுங்கியது அவர்தான் என்று .

எமக்கு நடந்ததும் அதுதான் .

கிட்டவே அண்ட விடக்கூடாது இந்த கோஸ்டிடியை .

நீங்களும் அர்சுணும் சேர்ந்து எவ்வளவு எழுதியிருப்பீர்கள். இன்று தனி ஒருவரின் அதுவும் ஒரு சில வருடங்கள் இருந்த ஓர் சாதாரண உறுப்பினரின் கருத்தை வைத்து ஓர் இயக்கத்தை எடை போட்டு இருக்கிறீர்கள் #

ஒரு வருடத்திலேயே என்ன நடக்கின்றது விளங்க கொஞ்ச அறிவு வேண்டும்.

முப்பது வருடங்களாக அது விளங்காதவர்கள் தான் கடைசியில் வெள்ளை கொடி பிடித்தவர்களும் உயிரை விட்டவர்களும்இன்று  பிச்சை எடுப்பவர்களும் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட அறிவு என்ன என்று எங்களுக்கு தெரியும் அர்ச்சுண்.

தமிழீழம் கேட்டு போராடப் போனவர்கள் சிங்கள எஜமானர்களின் ஏவல் நாய்களாக மாறி அப்பாவி மக்களை கடித்துக் குதறினார்கள். அதனுடன் ஒப்பிடும் போது இப்போது நடப்பது பரவாயில்லை. 

6 hours ago, arjun said:

ஒரு வருடத்திலேயே என்ன நடக்கின்றது விளங்க கொஞ்ச அறிவு வேண்டும்.

முப்பது வருடங்களாக அது விளங்காதவர்கள் தான் கடைசியில் வெள்ளை கொடி பிடித்தவர்களும் உயிரை விட்டவர்களும்இன்று  பிச்சை எடுப்பவர்களும் .

On 15. Mai 2016 at 8:41 AM, Paanch said:

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் ஒருமுறை முசுலீம்கள் தமிழர்களைத் தாக்கியவேளையில் அங்கு காவல்துறைக்குப் பொறுப்பாக ஏ.எஸ்.பி இராசசுந்தரம் இருந்தார். அவர் என் சொந்தத்தில் திருமணம் செய்திருந்ததால் அவருடன் பேசும் சந்தர்ப்பம் எனக்கிருந்தது. அவர் என்னிடம் கேட்டது இன்றும் என் காதில் ஒலிக்கிறது.

"முசுலீமுக்குப் பிரச்சனை என்றால் ஹாஜியார் வருகின்றார். கிறித்தவர்களுக்குப் பிச்சனை என்றால் பாதிரியார் வருகின்றார். சிங்களவர்குப் பிரச்சனை என்றால் பிக்கு வருகிறார். தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் எந்தக் குருவும் வருவதில்லை."  

இது இன்று நேற்று நடந்ததல்ல, தமிழர்கள் ஆயுதப் போராட்டக் காலத்திற்கு முன்பு நடந்தது. ஏன் தமிழர்களுக்கு மதகுரு இல்லையா? அல்லது தமிழர்களுக்கு மதம் இல்லையா.???   
 
தமிழருக்கும் மத குரு வருவார். அந்த தமிழர்  இறந்து அவருக்கு அந்தியேட்டி செய்து பணம் உழைக்க. செத்தவீட்டுக்கு இறுதிக்குரியை செய்ய வரமாட்டார். ஏனென்றால் அங்கு உரியவர்கள் மிகவும் கவலையுடன் இருப்பதால் பெரிதாக பணத்தை எதிர் பாரக்க முடியாதென்பதால். 

ஏன் தமிழர்களுக்கு மதகுரு இல்லையா? அல்லது தமிழர்களுக்குமதம் இல்லையா.???    /////

யார் தமிழர்கள்?

தமிழ் பேசும் மக்கள் எல்லாரும் தமிழர்களா?

1 hour ago, trinco said:

Edited by பெரியார்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

படிவங்கள் பற்றிய கருத்து பற்றி நான் எழுதவில்லை. பின்வரும் கருத்து பற்றியே எழுதினேன்:

அறிவைக் காழ்ப்புணர்ச்சியும், ஆணவமும் இன்றிப் பாவித்தால் எதனையும் புரிந்துகொள்ளலாம்.

15 hours ago, Jude said:

இங்கு கூறப்பட்ட காவல்துறைக்குப் பொறுப்பாக இருந்த ஏ.எஸ்.பி இராசசுந்தரம் பற்றியதே எனது கருத்து. அவரது பொறுப்பில் பெருமளவு மக்களின் உயிர்கள் இருந்தன. அவருக்கோ மொழிக்கும் மதத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் அளவுக்கு அறிவு இருக்கவில்லை. இவ்வாறனவர்களின் பொறுப்பில் தமிழ் மக்களின் உயிர்கள் இருந்ததனால் தான் இந்த அளவு அழிவு. அவர் தனி நபர் என்று கூறி அவரது பொறுப்பில் இருந்த மக்களின் உயிர்களுக்கு உண்டான பாதிப்பை நீங்கள் தட்டி கழிக்கிறீர்கள். இவ்வாறானால் எவரது கொலைக்கும் எவரும் பொறுப்பாக மாட்டார்கள் - உங்கள் வாதத்தின் படி கொலைகாரரும் தனி மனிதர்கள் ஆகவே அவர்கள் பற்றி எவரும் கருத்து கூறக்கூடாது. இன்றைய தமிழ் மக்களின் நிலைக்கு எவரும் பொறுப்பு ஏற்காத நிலைக்கு இவ்வாறன வாதங்களும் காரணம் ஆகின்றன.

'சமூகம்' என்ற சொல்லுக்கு விளக்கத்தை அகராதியில் பார்த்தேன். அதில் தேசத்தார், பொதுமொழி, பொதுமதம் இவைகளால் பிணைக்கப்பட்ட சன சமூகம் என்றிருந்தது. மொழியால் பிணைக்கப்பட்டாலும், மதத்தால் பிணைக்கப்பட்டாலும் அது ஒரு சமூகம்தான். ஒருசமூகத்தைக் குறிப்பிட மொழியை அல்லது மதத்தைக் குறிப்பிடலாம் என்று தெரிகிறது. ஆகவே இராசசுந்தரம் அவர்கள்பற்றித் தெரிவித்த உங்கள் சாடல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.  
 
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, arjun said:

அடுத்த வீட்டுக்காரன் தான் மாமிசம் சாப்பிடுவதில்லை என்றான் நம்பிவிட்டேன் .

ஒருநாள் அவரின் சட்டியை எட்டிப்பார்த்த பின் தான் தெரிந்தது அது கோழிக்கறி .

அதற்கு பிறகுதான் தெரிந்தது எனது வீட்டில்  காணாமல் போன கோழி முழுக்க முழுங்கியது அவர்தான் என்று .

எமக்கு நடந்ததும் அதுதான் .

கோழிக்கு தேவையானவற்றை கொடுத்து வேலியை சரியாய் அடைத்து வளர்த்திருந்தால் கோழி ஏன் அடுத்த வீட்டுக்கு மேயப்போகுது? ஒரு கோழி காணாமற் போகேக்கையே தடுக்க நடவடிக்கை எடுக்க துப்பில்லை தந்திரமான கதை வேற. மேயப்போன கோழியள் திரும்ப விரும்பாமல் அங்கே தங்கிவிட  பாவம் பக்கத்து வீட்டுக்காறன் வந்த கோழியளை பராமரிச்சதுக்கு திருட்டுபட்டம்  குடுக்கிறதே.அவன்  என்ன உங்கட வீட்டை வந்து பிடிச்சவனே.

23 hours ago, arjun said:

முப்பது வருடங்களாக அது விளங்காதவர்கள் தான் கடைசியில் வெள்ளை கொடி பிடித்தவர்களும் உயிரை விட்டவர்களும்இன்று  பிச்சை எடுப்பவர்களும் .

முப்பது வருசமாய் உயர்ந்து நின்றபோது பொறாமையில பேசினார்கள்,விழுந்தபோது கேவலமாகப் பேசுகிறார்கள். பேசுபவர்கள் யாரும் அவர்கள் உயர்விலோ, தாழ்விலோ எந்தப் பங்கும் செலுத்தாதவர்கள். அவர்கள் மறைந்தாலும் மக்கள் மனங்களில் வாழ்கிறார்கள்.இவர்கள் அப்பப்ப தங்கள் இருப்பை சத்தம் போட்டு  வெளிப்படுத்துவார்கள். ஓடினால் விழுந்து போவேனென்று ஒதுங்கினவை  போட்டி பற்றி விமர்சிக்கினம்.

16 hours ago, trinco said:

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் ஒருமுறை முசுலீம்கள் தமிழர்களைத் தாக்கியவேளையில் அங்கு காவல்துறைக்குப் பொறுப்பாக ஏ.எஸ்.பி இராசசுந்தரம் இருந்தார். அவர் என் சொந்தத்தில் திருமணம் செய்திருந்ததால் அவருடன் பேசும் சந்தர்ப்பம் எனக்கிருந்தது. அவர் என்னிடம் கேட்டது இன்றும் என் காதில் ஒலிக்கிறது.

"முசுலீமுக்குப் பிரச்சனை என்றால் ஹாஜியார் வருகின்றார். கிறித்தவர்களுக்குப் பிச்சனை என்றால் பாதிரியார் வருகின்றார். சிங்களவர்குப் பிரச்சனை என்றால் பிக்கு வருகிறார். தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் எந்தக் குருவும் வருவதில்லை."  

இது இன்று நேற்று நடந்ததல்ல, தமிழர்கள் ஆயுதப் போராட்டக் காலத்திற்கு முன்பு நடந்தது. ஏன் தமிழர்களுக்கு மதகுரு இல்லையா? அல்லது தமிழர்களுக்கு மதம் இல்லையா.???

பாதிரிமார் மதம், இனம் பாத்து குரல் கொடுப்பதில்ல. எங்கே, யார் நசுக்கப்பட்டாலும் அங்கே அவர்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். மக்கள் எங்கே அமைதியில் போராட்டம் எடுத்தாலும் இவர்களின் பங்கும் உண்டு. தாயக ஒளிப் பதிவுகளைப் பாருங்கள் புரியும்

  • கருத்துக்கள உறவுகள்

On 5/8/2016 at 2:08 PM, Jude said:

அர்ஜுன் சொல்வதில் உண்மை இருக்கிறது.

சுவாமி விவேகானந்தர் மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி போன்றவர்களின் சமுக பொறுப்புணர்வும் பங்களிப்பும் எந்த கிறிஸ்தவ அமைப்புகளின் பங்களிப்புடனும் ஒப்பிட முடியாத அளவு மிக உயர்வான பங்களிப்பாக அமைந்து இன்றும் மக்களுக்கு உதவி வருகின்றன. இவர்கள் ஐயர்கள் அல்ல. ஆனால் சைவ சமயத்தவர் மத்தியில் மத பின்னணியில் சமுக சேவை செய்யும் அமைப்புக்களாக இவை இருக்கின்றன. சைவ சமய கலாச்சாரத்தில் மத கிரியைகள் செய்பவர்கள் சமுக சேவை செய்யும் வகையான கட்டமைப்பு இல்லை - அப்படி இருக்க வேண்டிய தேவையும் இல்லை. 

On 5/15/2016 at 4:15 PM, MEERA said:

விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்டம் பற்றி விமர்சிக்கும் போது வெளிவராத இது இப்போது மதம் என்றவுடன் வெளிவருகிறது.

நீங்களும் அர்சுணும் சேர்ந்து எவ்வளவு எழுதியிருப்பீர்கள். இன்று தனி ஒருவரின் அதுவும் ஒரு சில வருடங்கள் இருந்த ஓர் சாதாரண உறுப்பினரின் கருத்தை வைத்து ஓர் இயக்கத்தை எடை போட்டு இருக்கிறீர்கள், இதிலிருந்தே தெரிகிறது உங்களின் மத வெறி.

என்ன வெறியில் எல்லாம் தலை கீழாக தெரியும் மீரா?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெரியார் said:

யார் தமிழர்கள்?

தமிழ் பேசும் மக்கள் எல்லாரும் தமிழர்களா?

பாற்கடலில் இருந்து பால், தயிர், மோர், வெண்ணையைத் தேடுவதுபோல்..... யாழ்களத்திற்கு வந்து தமிழர்களைத் தேடுகிறீர்களே பெரியாரே! :rolleyes: :shocked:

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, Jude said:

என்ன வெறியில் எல்லாம் தலை கீழாக தெரியும் மீரா?

எழுதிய உங்களுக்குத்தான் தெரியும் அது என்ன வெறி என்று.

(அழிவையும் பிளவையும் விரும்பும் நீங்கள் பிரதிநித்துவ படுத்தும் பிளாட் அழிந்தது பற்றி மற்றவர்கள் பெருமளவில் கவலைப்படாதற்கான காரணங்கள் இப்போது புரிகிறது.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.