Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியிடு

Featured Replies

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியிடு

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியிடு:-


தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக எவ்.ரீ.எல்கே என்ற ஆங்கில இணையம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு தரப்பினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழினியின் ஓர் போர்வாளின் நிழலில் நூல் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தின மற்றும் வேறும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த காலங்களில் பணம் திரட்டிய தரப்பினர் தற்போது பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்து புலிகளை மீளவும் இயங்கச் செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளவும் சர்வதேச ரீதியாக இயங்கச் செய்ய எவ்வித சாத்தியமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் சில பகுதிகளில் தமிழ் வர்த்தக நிலையங்களில் இந்த நூல் விற்பனை செய்ய செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் பிரித்தானியாவில் வாழ்ந்த போது புலிகளில் இணைந்து கொள்ளுமாறு சில முகவர்கள் கோரியதாகவும் பொட்டு அம்மான் தலைமை தாங்க உள்ளதாகவும் குறிப்பிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அறிவு குறைந்த தமிழர்களே இவ்வாறு பிரசாரங்களில் இலக்கு வைக்கப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைப் பயன்படுத்துவோர் இவ்வாறு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132830/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியிடு

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியிடு:-






கல்வி அறிவு குறைந்த தமிழர்களே இவ்வாறு பிரசாரங்களில் இலக்கு வைக்கப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைப் பயன்படுத்துவோர் இவ்வாறு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132830/language/ta-IN/article.aspx

யாழில் ஒரு சிலர் பாவிக்கும் வசனம் போல கிட‌க்குtw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ஒட்டுக்குழு அரசியலுக்கு தேவையான அடிப்படை தகுதியே இதுதான் இப்ப. "எனக்கு புலம்பெயர் தமிழர்களால் அச்சுறுத்தல்" என்று இல்லாத அச்சுறுத்தலை இருப்பது போல உருவகிச்சுப் புலம்புறது. அதுவும் சிங்களவன்ர.. ஹிந்தியாவின்ர காலடியில் நின்று புலம்பனும்.. அப்பதான் சம்பந்தட்டவை கடைக்கண் காட்டுவினம்.

முன்னம் புலிகள். இப்ப புலி ஆதரவாளர்கள். எப்பவும் ஒட்டுக்குழு அரசியலின் மாற்றுக் கொள்ளை புலி எதிர்ப்பு.. புலி வாந்தி. இதுதான் அவைட மாற்றுக் கருத்து சன நாய் அகம். இதுக்கு ஒரு வக்காளத்துக் கூட்டம். இதுங்க எல்லாம் இந்த உலகில் வாழ..நல்ல மனிதர்கள் சாகிறார்கள் என்பதை இட்டுத்தான் கவலை. tw_angry:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டுமாம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி எழுதிய ' ஓர் போர்வாளின் நிழலில்' நூலில் குறிப்பிடப்பட்ட விடயம் சரி. தமிழினியின் கணவர் அதனை வைத்து பிழைப்பு நடத்துவதுதான் ரசிக்க முடியவில்லை.

உண்மையில் நூலினை வெளியிட்ட பின்னர் இவர் பேசாமல் இருந்திருந்தால் அந்த நூலுக்கு உரிய மரியாதை தானாகவே கிடைத்து இருக்கும். ஆனால், இவர் செய்கின்ற அலப்பறைகளால் அந்தப் புத்தகத்தின் கனதி மழுங்கடிக்கப்படுகின்றது என்பதே உண்மை.

வேடிக்கை என்னவென்றால் தமிழினியின் கணவர் தமிழினியின் மறைவை வைத்து வன்னியில் தனக்கு வீடு கட்டுவதற்கும் தமிழினியின் பெற்றோருக்கும் உதவ வேண்டும் என்று பலரிடம் நிதி உதவி கேட்டு இருந்தார். இவரின் சுத்து-மாத்துக்களை அறிந்து கொண்ட பின்னர் பல நல்ல உள்ளங்கள் ஒதுங்கி விட்டன.

தற்போது தமிழினியின் பெற்றோருடனும் தொடர்பு இல்லை என்றே கூறுகின்றனர்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அடுத்த பிஸினஸிற்கு ஆள் பிளான் போடுகின்றார்.

அது என்ன அடுத்த புத்தகமோ 

சிங்களத்தில் கூட மொழி பெயர்ப்பு செய்து வெளியீட்டாச்சு போல இதுகளுக்கு எல்லாம் நம்ம சனம் பொங்கமாட்டிச்சினும். 

14 hours ago, nirmalan said:

தமிழினி எழுதிய ' ஓர் போர்வாளின் நிழலில்' நூலில் குறிப்பிடப்பட்ட விடயம் சரி.

அவை சரி என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.