Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சலாவ இராணுவ முகாம் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு - 39 பேர் படுகாயம்! - படங்கள் இணைப்பு

Featured Replies

கொஸ்கம - சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Salaava_01.jpg

 

Salaava_03.jpg

Salaava_04.jpg

Salaava_07.jpg

Salaava_02.jpg

Salaava_06.jpg

Salaava_05.jpg

 

http://www.tamilwin.com/events/01/106825

 

 

முகாமுக்குள் நுழைந்தனர் இராணுவத்தினர் : 8 பேர் பலி: வீடுகள் வைத்தியசாலைகள் சேதம் : அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியானது

 

அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இராணுவத்தினர் முகாமுக்குள் இன்று காலை பிரவேசித்து தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றர்.__Salawa_-_Kosgama_.jpg

மேலும் குறித்த விபத்து சம்பவத்தால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 47 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வெடிப்பு சம்பவத்தால் சிதறிச் சென்ற வெடிப்பொருட்களால் கொஸ்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், வீடுகள், வைத்தியசாலைகள் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்தும் சேமாகியுள்ளன. 

மேலும் வெடிப்புக்கு உள்ளான பொருட்களின் சிதறல்கள் மற்றும் பாரிய வெடிப் பொருட்கள் பிரதேசத்தின் பல பகுதிகளிலுல் சிதறி காணப்படுகின்றன.

தற்போது வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியை பார்வையிடுவதற்காக  மக்கள் அங்கு வருகைத் தருவதாகவும் இதனால் இப் பகுதியில பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு தமது பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே இராணுவ முகாம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானப்படைக்கு சொந்தமான 212 என ஹெலிகொப்படர் இன்று காலை கொஸ்கம பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/7210

யுத்த களமாக காட்சியளிக்கும் கொஸ்கம பகுதி : தீ கட்டுபாட்டுக்குள் : இராணுவ வீரர் பலி, 47 பேர் படும் காயம் : நீரை பருகும் போதும் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)

Published by Gnanaprabu on 2016-06-06 09:25:30

 

அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு குறித்த பிரதேசம் யுத்தம் களம் போன்று காட்சியளிக்கின்றது. மேலும் அவிசாவளை பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  

13321611_1141255022601421_51399951504316

இதேவேளை கொஸ்கமவில் ஏற்பட்ட  தீ விபத்தையடுத்து, அப்பிரதேசத்தில் குடி நீரை பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுமாயின் 117 என்ற அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விபத்தால் அப்பகுதியில் இருந்த பாடசாலைகள், வீடுகள், வைத்தியசாலைகள் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்தும் சேமாகியுள்ளன.

 

மேலும் குறித்த விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 47 பேர் படும் காயமடைந்துள்ளதுடன் 39 பேர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மேற்படி வெடிப்புச் சம்பவத்தால் இராணுவ முகாமிலிருந்து 6 கிலோ மீற்றர் தொலைவு வரையில் குடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுத களஞ்சியமானது இராணுவத்தின் பிரதான களஞ்சியங்களில் ஒன்றாகும். இங்கு ரீ - 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் முதல் ஆர்.பி.ஜி. மல்டி பெரல் தோட்டாக்கள் வரை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை 5.42 மணிக்கு ரீ 56 ரக தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் முதலில் இரு வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மறு பகுதியில் மேலும் சில வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. இந் நிலையிலேயே தீ பரவ ஆரம்பித்து பாரிய அதிர்வுகளுடன் தொடர்ச்சியாக வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தின் இலத்திரனியல் மற்றும் இயந்திர படைப் பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இந்த இராணுவ முகாம் உள்ளது.

இராணுவ உள்ளக தகவல் ஒன்றின் படி வெடிப்புக்கள் மற்றும் அதன் அதிர்வுகளால் நள்ளிரவு 12 மணி வரையிலான காலப்பகுதிக்குள் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதுடன் 39 காயமடைந்துள்ளனர். 10 சிவில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்தநிலையில் குறித்த தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

13406880_618025075019450_436505256869383

இதேவேளை வெடிப்புக்கு உள்ளான பொருட்கள் பிரதேசத்தின் பல பகுதிகளில் காணப்படுவதாகவும், அவற்றைக் கண்டால் கைகளால் தொட முயற்சிக்க வேண்டாம் என்று  மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன்,குறித்த பொருட்களை கண்டால் 0113818609 அல்லது 0112434251 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து அவிஸாவலை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட அரச பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் இன்றையதினம் மூடப்படுள்ளதுடன், வெடிப்பு நிகழ்ந்துள்ள பகுதி வீதிகள் மூடப்பட்டுள்ளமையால் வாகன சாரதிகளுக்கு மாற்று வீதிகளை போக்குவரத்திற்கு பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளில் இன்னும் புகைமூட்டம் நிலவுவதால் குறித்த பகுதியில் சுவாசிப்பதால் சுவாசக்கோளாறுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் ஈரத்துனியால் முகத்தை மறைத்து சுவாசிப்பதே சிறந்தது அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

13254573_618026031686021_717651150246143

13344527_618025715019386_894716103380443

13336023_618026071686017_622588654468990

13315772_618026138352677_803143463174699

13344495_618025981686026_542219353946841

13321840_618025905019367_110528532887495

13346878_618025821686042_913519745231510

13346516_618025778352713_124564174342085

13319937_618025755019382_667325248537308

13339456_618025418352749_642816805365087

13336144_618025028352788_418929880547018

13346941_618025128352778_616802198643319

13330876_618025288352762_860530830691723

 

 

http://www.virakesari.lk/article/7206

  • தொடங்கியவர்

Salaava_08.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பூராக சக்தி டீ .வியில் இதை போட்டுகொண்டு அழுது வடிச்சினம்...ஆயுதக்களஞ்சியம் வெடித்துக்கொண்டே இருந்தது 
மக்கள் இடம் பெயர்ந்தவாறே இருந்தனர் 
எனக்கேதோ இதை பார்க்கும் போது கிஞ்சித்தும் கவலை வரவில்லை ...எனது இனத்தை உருத்தெரியாமல் அடித்து உருக்குலைத்த காட்சி மட்டுமே 
மனம்முன் தோன்றியது ..சானலை மாற்றி விஜய் டீ..வி பார்த்துகொண்டிருந்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மீதான ஆயுதத் தாக்குதல்களின் வலி...ஓரளவாவது சிங்களவர்களுக்குப் புரிந்திருக்கும் எனில்..ஒரு யுத்தத்தின் கொடுமை எவ்வாறு இருந்திருக்கும் என அவர்கள் உணருவார்கள் எனில்.. இந்த ஆயுதக் கிடங்கின் எரிவு நன்மையில் முடியும்!

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நேற்று பூராக சக்தி டீ .வியில் இதை போட்டுகொண்டு அழுது வடிச்சினம்...ஆயுதக்களஞ்சியம் வெடித்துக்கொண்டே இருந்தது 
மக்கள் இடம் பெயர்ந்தவாறே இருந்தனர் 
எனக்கேதோ இதை பார்க்கும் போது கிஞ்சித்தும் கவலை வரவில்லை ...எனது இனத்தை உருத்தெரியாமல் அடித்து உருக்குலைத்த காட்சி மட்டுமே 
மனம்முன் தோன்றியது ..சானலை மாற்றி விஜய் டீ..வி பார்த்துகொண்டிருந்தேன் 

இதற்கு  உலக நாடுகள் மீண்டும் ஆயுதம்  வழங்கும் 

என்ன பொருட்களின் விலைகள் வரி கூடி சென்று  அரசாங்கத்தின் கையில் சேர்ந்து நிவர்த்தி செய்யப்படும்

அது மக்களின் வாழ்க்கை செலவை இறுக்கி விடும் அவ்வளவுதான்

  • தொடங்கியவர்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

நேற்று பூராக சக்தி டீ .வியில் இதை போட்டுகொண்டு அழுது வடிச்சினம்...ஆயுதக்களஞ்சியம் வெடித்துக்கொண்டே இருந்தது 
மக்கள் இடம் பெயர்ந்தவாறே இருந்தனர் 
எனக்கேதோ இதை பார்க்கும் போது கிஞ்சித்தும் கவலை வரவில்லை ...எனது இனத்தை உருத்தெரியாமல் அடித்து உருக்குலைத்த காட்சி மட்டுமே 
மனம்முன் தோன்றியது .

எனக்கும் அதே உணர்வுகள் தான் உடனே தோன்றியது.

மக்கள் குடியிருப்புக்களை குறி வைக்காத 6 - 7 மணிநேர வெடிப்புக்கள் ஏற்படுத்திய தாக்கத்தை நேரடியாக பார்த்த சிங்களவனுக்கு, 25 வருடங்களாக தமிழ் மக்களை குறிவைத்துத் தாக்கியதால் ஏற்பட்ட சேதங்களை உணருமளவுக்கு கொஞ்சமாவது புத்தி வருமா தெரியவில்லை.

இயற்கை நீதி என்று ஒன்று உண்டு!

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத அழிப்புன்னு அமெரிக்கனும் வாலுகளும் கொடுக்கிற.. ஓசி ஆயுதங்களை வைச்சு இவங்க பண்ணுற அநியாயம்.. புத்தருக்கே அடுக்கல்ல.:rolleyes:

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெற்றோர்களை Zone 4 முகாமிலிருந்து 2009 ஜூனில் சட்டவிரோதமாக கடத்தி வந்து இந்த சலாவ முகாமில் தான் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தனர்.

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முனிவர் ஜீ said:

இதற்கு  உலக நாடுகள் மீண்டும் ஆயுதம்  வழங்கும் 

என்ன பொருட்களின் விலைகள் வரி கூடி சென்று  அரசாங்கத்தின் கையில் சேர்ந்து நிவர்த்தி செய்யப்படும்

அது மக்களின் வாழ்க்கை செலவை இறுக்கி விடும் அவ்வளவுதான்

இதுதான் உண்மை.. இத்துடன் சுற்றுச்சூழல் பாழானதும்தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bildergebnis für mullivaikkalBildergebnis für mullivaikkalBildergebnis für mullivaikkal

வீரகேசரிக்கு மட்டும்தான் படம் போடத்தெரியுமா? நமக்கும் தெரியுமடா...

Bildergebnis für mullivaikkalBildergebnis für mullivaikkal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.