Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை கோரி பேரணி: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Featured Replies

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை கோரி பேரணி: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 
 
சென்னை பேரணியில் பங்கேற்று ஃபேஸ்புக் தளத்தில் பகிரப்பட்ட படங்களுள் ஒன்று.
சென்னை பேரணியில் பங்கேற்று ஃபேஸ்புக் தளத்தில் பகிரப்பட்ட படங்களுள் ஒன்று.

ராஜிவ் கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் முடியும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்று வருகிறது.

அற்புதம்மாள் தலைமையில் சென்னை - எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் முடிவடைகிறது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் ஜனநாதன், கௌதம், ரமேஷ் கண்ணா, நடிகர் சத்யராஜ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

''பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே முடிவு செய்துள்ளார். மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்ய கருணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சீமான் கூறியுள்ளார்.

''7 பேரை விடுவிக்க தமிழக அரசு முன் வந்தாலும் மத்திய அரசு தடை செய்யக்கூடாது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரை சிறையில் வைத்திருப்பது மனிதநேயத்துக்கு அப்பாற்பட்டது'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

பேரணியில் அற்புதம்மாள் பேசியதாவது:

‘‘7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 முறை நடவடிக்கை எடுத்தார். அது, தடைபட்டு நிற்கிறது. இந்த முறை விரைந்து 7 பேர் விடுதலைக்கு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்த இந்த பேரணி நடத்துகிறோம்.

வேலூரில் தொடங்கி சென்னை கோட்டையில் பேரணி முடிவதாகத்தான் திட்டமிட்டோம். 3 மாவட்டங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் வேலூரில் பேரணி தொடங்க முடியாது. வேறு ஏதேனும் மாற்றத்துடன் திட்டமிடுங்கள் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். அதனடிப்படையில் சென்னை எழும்பூரில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெறுகிறது.

பேரறிவாளன் உட்பட 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் பிரிவை வார்த்தைகளால் விளக்க முடியாது. தற்போது எல்லோருக்கும் 7 பேர் விடுதலையாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. நிறைய உண்மைகள் வெளிப்பட்டுள்ளன. அதில் என் மகன் பேரறிவாளன் நிரபராதி. அவனுக்கும் ராஜிவ் கொலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உலகம் முழுக்கப் பரவி உள்ளது. இந்த வழக்கே சலசலப்புக்கு உண்டாகி இருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் பேரறிவாளன் ஒரு முறை கூட பரோலில் வெளிவரவில்லை. இளமைக்காலம் முழுவதும் பேரறிவாளனுக்கு சிறையிலேயே போய் விட்டது. இப்போது நோயாளியாக வெளியே வரப் போகிறான்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாகி வெளியே வர வேண்டும். அவர்களுக்கென்று வாழ்க்கை இருக்கிறது.

உலகம் முழுக்க பார்த்தால் 25 ஆண்டுகளில் ஒரு முறை கூட பரோலில் வெளிவராத சிறைவாசிகளே இல்லை. ஆனால், இந்த 7 பேருக்கும் எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. சாதாரண சிறைவாசிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட 7 பேருக்கும் கிடைக்கவில்லை. 7 பேருக்கும் கிடைத்திருக்கும் தண்டனை மிகவும் கொடுமையானது.

இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் மட்டுமே முடியும். எங்கள் கோரிக்கையை ஜெயலலிதா தான் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக முதல்வரையும் சந்திக்க உள்ளோம்'' என்றார் அற்புதம்மாள்.

http://tamil.thehindu.com/tamilnadu/பேரறிவாளன்-உட்பட-7-பேர்-விடுதலை-கோரி-பேரணி-சென்னையில்-ஆயிரக்கணக்கானோர்-பங்கேற்பு/article8718099.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடக்க வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லதே நடக்க வேண்டும்...!

  • தொடங்கியவர்

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை கோரி பேரணி: முதல்வரின் தனிப்பிரிவில் அற்புதம்மாள் மனு

 
 
எழுவர் விடுதலை கோரி சென்னையில் நடைபெற்ற பேரணி. | படம்: ம.பிரபு
எழுவர் விடுதலை கோரி சென்னையில் நடைபெற்ற பேரணி. | படம்: ம.பிரபு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில வாகன பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

7 தமிழர்களை விடுதலை செய்ய முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். ஏனென்றால் அது முதல்வரால் மட்டும் தான் முடியும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்றது. அற்புதம்மாள் தலைமையில் சென்னை - எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் முடிவடைந்தது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் ஜனநாதன், கௌதம், ரமேஷ் கண்ணா, நடிகர் சத்யராஜ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்த பேரணியில் பங்கேற்ற சீமான் ''பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே முடிவு செய்துள்ளார். மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்ய கருணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

''7 பேரை விடுவிக்க தமிழக அரசு முன் வந்தாலும் மத்திய அரசு தடை செய்யக்கூடாது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரை சிறையில் வைத்திருப்பது மனிதநேயத்துக்கு அப்பாற்பட்டது'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

02_2890962a.jpg

பேரணியில் அற்புதம்மாள் பேசியதாவது:

‘‘7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 முறை நடவடிக்கை எடுத்தார். அது, தடைபட்டு நிற்கிறது. இந்த முறை விரைந்து 7 பேர் விடுதலைக்கு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்த இந்த பேரணி நடத்துகிறோம்.

வேலூரில் தொடங்கி சென்னை கோட்டையில் பேரணி முடிவதாகத்தான் திட்டமிட்டோம். 3 மாவட்டங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் வேலூரில் பேரணி தொடங்க முடியாது. வேறு ஏதேனும் மாற்றத்துடன் திட்டமிடுங்கள் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். அதனடிப்படையில் சென்னை எழும்பூரில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெறுகிறது.

பேரறிவாளன் உட்பட 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் பிரிவை வார்த்தைகளால் விளக்க முடியாது. தற்போது எல்லோருக்கும் 7 பேர் விடுதலையாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. நிறைய உண்மைகள் வெளிப்பட்டுள்ளன. அதில் என் மகன் பேரறிவாளன் நிரபராதி. அவனுக்கும் ராஜீவ் கொலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உலகம் முழுக்கப் பரவி உள்ளது. இந்த வழக்கே சலசலப்புக்கு உண்டாகி இருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் பேரறிவாளன் ஒரு முறை கூட பரோலில் வெளிவரவில்லை. இளமைக்காலம் முழுவதும் பேரறிவாளனுக்கு சிறையிலேயே போய் விட்டது. இப்போது நோயாளியாக வெளியே வரப் போகிறான்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாகி வெளியே வர வேண்டும். அவர்களுக்கென்று வாழ்க்கை இருக்கிறது.

உலகம் முழுக்க பார்த்தால் 25 ஆண்டுகளில் ஒரு முறை கூட பரோலில் வெளிவராத சிறைவாசிகளே இல்லை. ஆனால், இந்த 7 பேருக்கும் எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. சாதாரண சிறைவாசிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட 7 பேருக்கும் கிடைக்கவில்லை. 7 பேருக்கும் கிடைத்திருக்கும் தண்டனை மிகவும் கொடுமையானது.

இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் மட்டுமே முடியும். எங்கள் கோரிக்கையை ஜெயலலிதா தான் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக முதல்வரையும் சந்திக்க உள்ளோம்'' என்றார் அற்புதம்மாள்.

அதற்குப் பிறகு கோட்டைக்கு சென்று தலைமைச் செயலகத்தில் அற்புதம்மாள் 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ''என் மகனை விடுவிப்பதாக முதல்வர் அறிவித்த போது, நான் அவரிடம் கண்ணீர் மல்க நன்றி சொன்னேன். ‘உங்கள் மகன் வரப்போகிறார். ஏன் அழுகிறீர்கள்’ என்று முதல்வர் என்னை ஆறுதல்படுத்தினார். உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினைப் பற்றியெல்லாம் நாங்கள் பேசவில்லை. மத்திய அரசா, மாநில அரசா என்கிற நிலை தான் உள்ளது. முதல்வரைத் தான் நாங்கள் நம்பியுள்ளோம். 7 தமிழர்களை விடுதலை செய்ய முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். ஏனென்றால் அது முதல்வரால் மட்டும் தான் முடியும்.

இதனை வலியுறுத்தி நாங்கள் நடத்திய பேரணியில் இனம், மொழி, சாதி பார்க்காமல் அரசியல் கட்சிகளும், கலைத்துறையினரும் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அற்புதம்மாள் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பேரறிவாளன்-உட்பட-7-பேர்-விடுதலை-கோரி-பேரணி-முதல்வரின்-தனிப்பிரிவில்-அற்புதம்மாள்-மனு/article8718099.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் இருபெரும் கட்சிகள் இதுபற்றி மூச்சுவிடக் காணோம்.. ஒருவேளை தமிழக மக்களின் நாடித்துடிப்பை இன்னமும் அளந்துகொண்டிருக்கிறார்களோ என்னவோ?

விரைவில் இவர்கள் விடுதலை பெறவேண்டும்.. தமிழக கட்சிகள் ஒற்றுமையுடன் குரல்கொடுத்தால் நன்று.

தமிழ்நாட்டு  அரசால்  ஒருநாளும்  முடியாது  வெறும்  அரசியல்  விளையாட்டு  இது ....தூக்கில  இருந்து  சட்டபடி  வெளிவந்தது  போல  சட்டம்  தான்  செய்யணும்  அதையும்  அதுக்கு  வைகோ  போன்றவர்கள்  தான்   உதவ  வேணும்  சீமான்  போன்ற  வெறும்  வாய்சவடலுகள்  பிரயோசனம்  இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அஞ்சரன் said:

தமிழ்நாட்டு  அரசால்  ஒருநாளும்  முடியாது  வெறும்  அரசியல்  விளையாட்டு  இது ....தூக்கில  இருந்து  சட்டபடி  வெளிவந்தது  போல  சட்டம்  தான்  செய்யணும்  அதையும்  அதுக்கு  வைகோ  போன்றவர்கள்  தான்   உதவ  வேணும்  சீமான்  போன்ற  வெறும்  வாய்சவடலுகள்  பிரயோசனம்  இல்லை .

வைக்கோவா? சரிதான்....

நீங்கள் முதலில் இங்குள்ள அரசியல், சட்ட சிக்கலை புரிந்து கொள்ளுங்கள்.

உச்ச நீதிமன்றில், சதாசிவம் தலைமை நீதிபதியாக இருக்கையில், விடுதலை மிக நெருக்கமாக வந்தது. அது ஒரு தேர்தல் காலமாகையால், அவர்கள் இப்போது விடுவிக்கப் பட்டால், அது ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க காரணமாகலாம் என்பதை சதாசிவம் அறியாரோ என்று, முரசொலியில், கட்டுமரம் எழுதப் போக, அவர் பாரத்தினை, அரசியல் அமைப்பு பெஞ்சிடன் கொடுத்து விட்டு, ஓய்வு அடைந்தார்.

அரசியல் அமைப்பு பெஞ்சோ, மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து தண்டனை வாங்கிக் கொடுத்த வழக்குகளில் மத்திய அரசின் அங்கீகாரம் இன்றி விடுவிக்க முடியாது என்று ஒரு தீர்ப்பும், அதே வேளை, மாநில அரச சிறையில் இருக்கும் கைதிகள், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இருப்பின் அவர்களை வேறு ஒரு பிரிவின் கீழ் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று சொல்லியும் உள்ளது.

சட்ட வழிமுறை முடிவை அடைந்து விட்டது. கட்டுமரம் பண்ணிய நரித்தனமான வேலை.

தமிழக அரசு ஆங்கீகாரம் கேட்ட போது, மத்திய அரசு ஏறக்குறைய முடியாது என்று சொல்லி விட்டது. இந்த முடிவு அறிவிக்கப்பட்ட போது, தேர்தல் சமயமாக இருந்ததால், உள்ளூர் பா.ஜ.கஅரசியல் வாதிகள், கோரிக்கையின் மேல், அவ்வாறு முடிவு எட்டப்படவில்லை, தவறான செய்தி.. இன்னும் ஆலோசிக்கிறோம் என்று மாத்தி அடித்து விட்டார்கள்.

இப்போது, அம்மா அதிரடியாக மாநில அரசுக்கு உரிய அதிகாரம் மூலம் அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டு உள்ளது.

இது முள்ளில் விழுந்த சீலையினை கிழியாமல் எடுப்பது போன்றது.

ஒரு பக்கம் மத்திய அரசு உறுதியாக மறுக்கலாம், மறு பக்கம் தமிழக அரசின் உத்தரவில் கையெழுத்து வைக்க வேண்டிய கவர்னர் மீது மத்திய அரசு  அழுத்தம் கொடுத்து இழுத்தடிக்கலாம்.

அதே வேளை அம்மா 14ம் திகதி மோடியினை சந்திக்கிறார். அதிமுக க்கு 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், பாஜக வின் மத்திய அரசுடன் இணையக் கூடும் என்ற பேச்சு அடிபடுகின்றது. அம்மா ஆசீர்வாதத்துடன் நடந்த இந்த பேரணியினை சொல்லி, மோடியுடன் தனியே பேசி, இந்த விவகாரத்தினை சுமூகமாக முடிக்க இறைவன் அருள வேண்டும்.

மறு புறத்தே கட்டுமரம் என்ன கபட அரசியல் ஆடுமோ தெரியவில்லை. முன்னர் நளினி தனது விடுதலை கோரி, பல போராடங்களை சிறையில் நடத்திய போது, அவரது அறையில் மொபைல் சிம் இருந்ததாக கூறி, செட் அப் பண்ணி, இந்த பிரச்னையினை வைத்தே, சிறையில் ஒழுங்காக இருக்க வில்லை என்று, நன்னடத்தை சான்றிதழ் தர மறுத்து, உன் விடுதலையினை இழுத்து அடிப்போம் என்று பய முறுத்தியே பணிய வைத்தவர், கருணாநிதி. 

இந்த நிலையில், வைகோ என்ன பண்ண முடியும் என்கிறீர்கள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

- பேரறிவாளன் தந்தையின் கண்ணீர் கவிதை!

காற்றே! 

'காற்றே காத்திரு…. !'
உன்னை வேண்டுகிறேன்.
இன்னும் சிறிது காலம்
உடலோடு ஒத்துழைத்து
உதவ வேண்டுகிறேன்.
என் மகனை நான்
தழுவும்வரை……
 
என் கண்ணுக்குத் தெரியாமல்    
நான் அழுகின்றேன்.
கால் நூற்றாண்டுகளாக…
இமயத்தில ஏற நான்
பயின்றபோது
இமயத்துப் புலி
டென்சிங் நார்கே
எனதொரு காலை
அவர் தோள்மீதும்
மறுகாலை
அவர் உள்ளங்கையாலும்
தாங்கிட  
இமயம் ஏறிய என்
கால்களோ இன்று    
வேலை நிறுத்தம்
செய்கின்றன !
  
மூளையோ எப்போதும்
தொடர்பு எல்லைக்கு
அப்பால்...என்று
தடைபோடுகிறது!
தடுமாறுகிறது!
ஈரல்கள் அவ்வப்போது
உன் வரவைத் தடுத்து
இரண்டகம் செய்கின்றன!
அச்சம் ஊட்டுகின்றன!    
சில பற்களோ பாவம்
எழுபத்து நான்கு ஆண்டுகள்
எனக்காக உழைத்து
இறுதியாகப் பிரிந்தே விட்டன.!
உணவுப் பாதையோ
குண்டும் குழியுமாக உள்ள
சிற்றூர் பாதையாக…..!
என் இறுதி காலத்தில்
எனக்குத் துணையாக 
இருக்க வேண்டிய
என் மனைவியோ
அவளின் இறுதிக் காலத்தில்
தன்னையும் மறந்து
என்னையும் மறந்து
தனித்து விட்டுவிட்டு
இன்னும் எங்கள்
மகனைத் தேடி அலைந்துகொண்டு
இருபத்தைந்து ஆண்டுகளாய்……!                                                                               

ஊழிக்காற்றே! நான்
எதைத்தான் தாங்கிக்கொள்வது?
எப்படி?எத்தனைக் காலம்?
இதற்காக நான்
என்னை அழித்துக் கொள்ள
நேர்ந்தாலும் அது
எம் இனத்திற்குப் பயன்படுவதாக
அமையுமே யன்றி
வீணாக இல்லை.                                                                                                                                                                                            
மானிடத்திற்கு என்
பங்களிப்பு ஏதுமில்லாப்
பயனற்ற வாழ்வை
நானும் விரும்பவில்லைதான்.
எனவே என்னைவிட்டு
நீ விடுதலை பெற எண்ணுவது
சரியானதுதான்.
ஆனால் சற்றே பொறு
நான் பொறுத்திருப்பதுபோல.

நீதியை
அடைகாத்துவரும் சூது
உண்மையைப் பொறுத்து
வானில் விடுதலையைப் 
பறக்கவிடும்வரை.…..                                             
இதுநாள்வரை நான்
இப்புவியில் இருக்க உதவிய
உனக்கும்
எங்களுக்காகப்
பேச்சாலும் செயலாலும்
மனிதத்தை வெளிப்படுத்திய
மனிதா; அனைவருக்கும்
என் நன்றியைப் படைக்கின்றேன்.
                   -அன்புடன் குயில்தாசன்

வைகோ  சட்டப்படி  வாதாடி  தூக்கில்  இருந்து  விடுதலை  வாங்கி  கொடுத்தார்  அந்த  நன்றியை  கூட  மறந்தார்  அற்புதம்  அம்மா  ...சீமானால்  ஒரு   துரும்பு  கூட  நகர்த்த  முடியாது  வேணும்  என்றால்  சீன்  போட்டு  படம்  போடலாம் அவ்வளவுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அஞ்சரன் said:

வைகோ  சட்டப்படி  வாதாடி  தூக்கில்  இருந்து  விடுதலை  வாங்கி  கொடுத்தார்  அந்த  நன்றியை  கூட  மறந்தார்  அற்புதம்  அம்மா  ...சீமானால்  ஒரு   துரும்பு  கூட  நகர்த்த  முடியாது  வேணும்  என்றால்  சீன்  போட்டு  படம்  போடலாம் அவ்வளவுதான் .

நீங்கள் விதண்டாவாதம் செய்ய முடிவு செய்து விட்டால், நான் சொல்வதற்க்கு எதுவும் இல்லை ஐயா.

அற்புதம் அம்மாவையும் குறை சொல்கிறீர்கள்.  சீமானையும் குறை சொல்கிறீர்கள். வைகோவின் அரசியல் எதிரி அம்மாவின் கைகளில் தான் 7 பேர் விடுதலை இன்று உள்ளது.

முதலே சொன்னது போல சட்ட வழிகள் அடை பட்டு விட்டன. மத்திய அரசுடன் மோதி எதுவுமே நடக்கப் போவதில்லை. சீமானோ, வைகோவோ எதுவும் செய்ய முடியாது. அரசியல் வழி ஒன்றே தான் உள்ளது. அம்மா, மனது வைத்தால், மோடியுடன் பேசி ஆவன செய்ய முடியும். வேறு வழியே இல்லை. 

அற்புதம் அம்மாவின் நிலைமை மிகப் பரிதாபகரமானது.  இது தெரிந்து தான் வைகோவே ஒதுங்கி இருக்கிறார். அதன் அர்த்தம் அற்புதம் அம்மா நன்றி மறந்து விட்டார் என்பதில்லை. 

இது புரியாமல் சும்மா எழுதுவதால் என்ன பயன் ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களவு விடுதலை என்பது காங்கிரஸ் மனசு வைச்சால் மட்டுமே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இவர்களவு விடுதலை என்பது காங்கிரஸ் மனசு வைச்சால் மட்டுமே முடியும்.

இல்லை. 

அம்மா மனது வைத்தால் மட்டுமே முடியும்.

ஆனால், அவருக்கு சொந்த வழக்குப் பிரச்னை தீர்ப்பு வர முதல் இது நடந்தாக வேண்டும். அல்லது சொந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா மனசு வைச்சாலும்,மோடி மனசு வைச்சால் அடுத்த தேர்தலோடு மோடி வீட்டுக்குப் போக வேண்டியது தான். இதைக் காரணம் காட்டியே காங்கிரஸ் தேர்தலில் வென்று விடும்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

அம்மா மனசு வைச்சாலும்,மோடி மனசு வைச்சால் அடுத்த தேர்தலோடு மோடி வீட்டுக்குப் போக வேண்டியது தான். இதைக் காரணம் காட்டியே காங்கிரஸ் தேர்தலில் வென்று விடும்

அந்தளவுக்கு இப்போது இது பெரிய பிரச்னை இல்லை. 25 வருசம்...

ஆனால் அடுத்த தேர்தலில் மோடி வீடு செல்வார். எனினும் காங்கிரஸ் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லிக்குப் பறக்கும் பேரறிவாளன் ஃபைல்! -ஆச்சர்யப்படுத்தும் அடுத்தடுத்த காட்சிகள்

 

arivuamma.jpgமிழக முதல்வரின் டெல்லி விசிட்டில், தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலில், ' பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைப் பற்றிய ஃபைலும் செல்ல இருக்கிறது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். 

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் சிறை சென்று 25 வருடங்களுக்கும் மேலாகிவிட்டன. இவர்களின் விடுதலையை எதிர்நோக்கிய கோரிக்கைப் பேரணியை, கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் நடத்தினார் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள். ' முதலில் வேலூரில் இருந்து சென்னை கோட்டையை நோக்கிப் பேரணி' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

' ஏராளமான வாகனங்கள் குவிந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம்' என வேலூர் மாவட்டக் காவல்துறை 'திடீர்' தடை விதிக்க, 'எழும்பூரில் இருந்து உங்கள் பேரணியைத் தொடங்குங்கள்' என சென்னை மாவட்ட காவல்துறை 'கிரீன் சிக்னல்' கொடுத்தது. பேரணியில் ம.தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் சீமான், வி.சி.கவின் வன்னியரசு, தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன்  உள்ளிட்டவர்களும், திரையுலகில் இருந்து சத்யராஜ், விக்ரமன் உள்பட பலரும் பங்கேற்றனர். 

பேரணியில், அற்புதம் அம்மாளுடன் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் பேனர்களை அன்புமணி, சீமான் உள்ளிட்டவர்கள், அரசியல் கடந்து உயர்த்திப் பிடித்து வந்ததை அ.தி.மு.கவினர் அதிசயத்தோடு பார்த்தனர். பேரணி முடிவில், முதல்வரின் செயலாளரிடம் மனு கொடுத்த அற்புதம் அம்மாள், ' உங்க மகன் வீட்டுக்கு வருவார்' என முதல்வர் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னதை உருக்கத்தோடு நினைவு கூர்ந்தார். செயலரும், ' முதல்வரின் கவனத்திற்கு உங்கள் மனுவைக் கொண்டு செல்கிறேன்' என்றார்.

amma.jpg


இந்நிலையில், " முதல்வரின் டெல்லி பயணத்தில் ஏழு பேரின் விடுதலை பற்றிய கோப்பும் இடம் பெற்றிருக்கிறது" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர். அவர் நம்மிடம், " சிறையில் 25 ஆண்டுகளாக வாடிக் கொண்டிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர். இதற்கு மத்திய அரசு நீதிமன்றத்தின் மூலம் தடை விதித்தது. 'இவர்களை மாநில அரசே விடுதலை செய்யலாம்' என்ற அரசியல் சட்டப் பிரிவு 161 பற்றி மனித உரிமை ஆர்வலர்கள் பேசி வந்தனர். முதல்வரும் இதன் பேரில் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வந்தார். இந்நிலையில், ' மாநில அரசே விடுதலை செய்வதைவிடவும், மத்திய அரசிடம் ஆலோசித்துவிட்டு விடுதலை முடிவை அறிவிக்கலாம்' என்ற முடிவுக்கு முதல்வர் வந்திருக்கிறார். பிரதமருடனான சந்திப்பில், இதுபற்றி பேச இருக்கிறார்" என்றார். 

மாநிலங்களவையில் முன்பு பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, ' ஏழு பேரையும் விடுதலை செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்  கூறியிருந்தார். இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் ஏழு பேரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருகின்றன. தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும், ' 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்' எனக் குரல் கொடுத்திருப்பது அரசியல் அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

' முதல்வரால் மட்டுமே உறுதியான நடவடிக்கை எடுக்க முடியும்' என தொடர்ந்து பேசி வருகிறார் அற்புதம் அம்மாள். ' முதல்வரின் நாளைய டெல்லி பயணம் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை உறுதி செய்யுமா?' என ஆவலோடு எதிர்நோக்குகின்றனர் மனிதாபிமானத்தை முன்வைக்கும் அனைத்துக் கட்சிகளும். 

ஆ.விஜயானந்த்
 http://www.vikatan.com/news/tamilnadu/65137-jayalalitha-likely-raise-release-perarivalan-modi.art

  • கருத்துக்கள உறவுகள்

13406804_381132145390779_656385437065564

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.