Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு, 50 பேர் பலி

Featured Replies

ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு

 

இரவு கேளிக்கையகம் ஒன்றில் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஓர்லாண்டோ நகரிலுள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.

160612100744_orlando_shooting_640x360_ep

 

 ஒரு பாலுறவுகாரர்கள் கேளிக்கையகத்தில் பலர் சுட்டப்பட்டுள்ளனர்.

குறைந்தது இருபது பேர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கிதாரி பணய கைதிகளை வைத்திருப்பதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

160612101424_florida_nightclub_firing_62

 குறைந்தது 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், பணய கைதிகள் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது

ஓர்லாண்டோ பிரிமியர் ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்தி கொள்ளும் கேளிக்கையகத்திற்கு வெளியே காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை டிவிட்டரில் பதிவேற்றப்பட்ட காணொளி பதிவுகள் காட்டுகின்றன.

160612101621_shooting_florida_nightclub_

 டஜன்கணக்கான அவசர ஊர்திகள் சிகிச்சை அளித்து வருகின்றன.

இந்த சம்பவம் அதிகாலையில் நடைபெற்றுள்ளது. டஜன்கணக்கான அவசர சிகிச்சை வாகனங்கள் சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டுள்ளன. இன்னும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

http://www.bbc.com/tamil/global/2016/06/160612_orlandoshoot

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு, 50 பேர் பலி

 

அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

 

160612082735_orlando-shooting_640x360_or

 

அமெரிக்காவில் நடைபெற்றுள்ள இரவு கேளிக்கையக தாக்குதலில் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

அந்த துப்பாக்கிதாரி, தாக்குதல் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் காவல்துறையினரை நோக்கி சுட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என புலனாய்வு மேற்கொள்ளப்படுவதாக ஃபுளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

160612100502_orlando_map_512x288_bbc_noc

 

 ஓர்லாண்டோ இரவு கேளிக்கையக தாக்குதல் ஒரு பயங்கரவாத தாக்குதலாக புலனாய்வு மேற்கொள்ளப்படுகிறது

காயம் அடைந்த மேலும் 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை தனியாக நடத்தியுள்ளதாக கருதப்படும் சந்தேக நபர் உள்ளூர் பகுதியை சார்ந்தவர் அல்ல என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

160612105922__89952443_e5f852cb-6df4-43e

 

 ஓர்வாண்டோவின் முதல்தர ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்தும் கேளிக்கையகத்தில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதல் நடைபெற்றுள்ள பல்ஸ் இரவு கேளிக்கையகம், ஒர்லாண்டோவின் முதல்தர ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்தி கொள்கிறது.

http://www.bbc.com/tamil/global/2016/06/160612_orlandoshooting

  • கருத்துக்கள உறவுகள்

Orlando, Florida (CNN)Fifty people were killed inside Pulse, a gay nightclub, Orlando Police Chief John Mina and other officials said Sunday morning, just hours after a shooter opened fire in the deadliest mass shooting in U.S. history.

At least 53 more people were injured, Mina said. Police have shot and killed the gunman, he told reporters.

 

http://www.cnn.com/2016/06/12/us/orlando-nightclub-shooting/index.html

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

Orlando Nightclub Shooting: Mass Casualties After Gunman Opens Fire in Gay Club

At least 50 people are dead and more than 50 others are wounded after a gunman opened fire and took hostages at a gay nightclub in Orlando, Florida, early Sunday morning, police said.

Officials said a hostage situation developed after the gunman stormed the Pulse Nightclub about 2 a.m.

The shooter was identified by several law enforcement sources as Omar Mateen, 29.

He was shot dead about three hours later when a SWAT team entered the club, police said. A handgun and an assault rifle were recovered at the scene, according to police.

http://www.nbcnews.com/storyline/orlando-nightclub-massacre/orlando-nightclub-shooting-emergency-services-respond-reports-gunman-n590446

  • கருத்துக்கள உறவுகள்

இது தீவிரவாதத் தாக்குதல் என தெரிகிறது.

டொனால்ட் வெல்லப் போறார்...:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Das Handy-Display zeigt den letzten Chat einer Mutter mit ihrem Sohn

இது மகன் தாய்க்கு அனுப்பிய குறுந்தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Das Handy-Display zeigt den letzten Chat einer Mutter mit ihrem Sohn

இது மகன் தாய்க்கு அனுப்பிய குறுந்தகவல்.

ஒரு சிலரின் வேள்விக்கு பலியாகிறார்கள் பலர் 

  • கருத்துக்கள உறவுகள்

48859121.cached.jpg

இவர் தான் அந்த கொலை காரர் என்றும் நியூயோர்க்கில் பிறந்த இவர் ஆப்கானை பிறப்பிடமாக கொண்ட பெற்றோரை உடையவர். பொலிசாரால் இவர் கொல்லப்பட்டு விட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஒருவனால்.... 50 பேரை சுட்டுக் கொல்வது என்பதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும்.
இவ்வளவு பெருந் தொகையான மக்கள் கொல்லப் பட்டதை ... அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவாலாகவே கருத வேண்டும்.

  • தொடங்கியவர்

ஆர்லான்டோ பயங்கரம்: 3 மணி நேரத்தில் முடிந்து போன உமர்... மனைவியை மதிக்காதவர், அடித்து உதைப்பவர்!

13-1465793891-omar-mateen1-600.jpg

 ஆர்லான்டோ: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லான்டோ நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்க மக்களை உலுக்கியுள்ளது. இதை தீவிரவாத தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் பெயர் உமர் மாட்டீன். இவரை பின்னர் போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தெரிவித்து விட்டே செய்துள்ளார் உமர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

 

போலீஸாருக்குத் தகவல் தெரிவித்த 3 மணி நேரத்திற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் உமர் குறித்து அவரது முன்னாள் மனைவி சித்தோரா யூசப்பியும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஒரு நல்ல கணவராக இருந்ததில்லை. எப்போது பார்த்தாலும் என்னை அடித்து உதைப்பார். திட்டுவார், துன்புறுத்துவார். அவர் நிலையான மனிதராக இல்லை என்று சித்தோரா கூறியுள்ளார்.

 

30 பேரின் உயிரிழக்குக் காரணமான உமருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நேரடித் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

போலீஸுக்குத் தெரிவித்து விட்டு

உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 2 மணிக்கு 911 அவசர சேவை தொலைபேசியை அழைத்து நகரில் உள்ள ஒரு முன்னணி ஓரினச்சேர்க்கையாளர் பாரில் தாக்குதல் நடத்தப் போவதாக கூறியுள்ளார் உமர். தனது பெயரையும், தான் இருக்கும் இடத்தையும் கூட அவர் கூறியுள்ளார். மேலும் தான் ஐஎஸ் அமைப்பை பின்பற்றுபவர் என்றும் கூறியுள்ளார்.

 

5 மணிக்கு எல்லாம் முடிந்தது

5 மணிக்கு எல்லாம் முடிந்து விட்டிருந்தது. 5 மணியளவில் உமர் மரணச் செய்தியை போலீஸார் அறிவித்தனர். அவரது உடலும் மீட்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமான உமர் கடைசியில் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி விட்டார்.

 

தனி நபர் தீவிரவாதம்

உமருக்கு நேரடியாக ஐஎஸ் தீவிரவாதிகளுடனோ அல்லது அமைப்புடனோ தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு தனி நபர் தீவிரவாதியாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்

இவரது குடும்பத்தினரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது உமருக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைக் கண்டாலே பிடிக்காதாம். எனவே அவர்களைக் குறி வைத்தே உமர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உமர் இதற்கு முன்பு எந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர் இல்லையாம்.

 

2 முறை கண்காணிக்கப்பட்டவர்

அதேசமயம், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐயின் கண்காணிப்பில் இவர் 2 முறை வைக்கப்பட்டுள்ளார். ஒருமுறை இஸ்லாமிய அமைப்புகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக கூறியபோது கண்காணிக்கப்பட்டார். அடுத்து, சிரியாவுக்குச் சென்று தற்கொலைப் படைத் தீவிரவாதியாக மாறிய புளோரிடா நபருடன் தனக்குத் தொடர்புள்ளதாக கூறியபோது கண்காணிக்கப்பட்டார். ஆனால் இரண்டு முறையும் இவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.

 

சட்டப்பூர்வமான துப்பாக்கிகள்

உமர் 2 துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தார். இரண்டுமே உரிய அனுமதியுடன் கூடிய சட்டப்பூர்வமான துப்பாக்கிகள்தான். அவர் எந்த வகையான மோதல், சண்டை, பிரச்சினைகளில் ஈடுபட்டவரும் அல்ல என்று கூறப்படுகிறது.

 

போலீஸாருக்கு குழப்பம்

உண்மையில் உமர் மீது என்ன மாதிரியான முத்திரை குத்துவது, இந்த சம்பவத்தை எப்படி வர்ணிப்பது என்பதில் புளோரிடா போலீஸாருக்கு குழப்பம் உள்ளதாம். அதிபர் ஒபாமாதான் இதை தீவிரவாத செயல் என்று வர்ணித்துள்ளார்.

 

சாதாரண வாழ்க்கை

இந்த சம்பவத்திற்கு முன்பு வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் உமர். ஒரு செக்யூரிட்டி கார்டாக இவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் (2வது மனைவி மூலம்) உள்ளான். போர்ட் பியர்ஸ் பகுதியில் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதியில் 2 பெட்ரூம் கொண்ட வீட்டில் தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வந்தார்.

 

ஆப்கானிஸ்தான் வம்சாவளி

நியூயார்க்கில் பிறந்தவர் உமர். இவரது பூர்வீகம் ஆப்கானிஸ்தான் ஆகும். இவரது தந்தை குடும்பத்துடன் இடம் பெயர்ந்து வந்ததாகும். இவரது தந்தை தலிபான் மீது சற்று அனுதாபமாக இருந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.


போலீஸ் ஆசை

உமருக்கு சிறு வயதிலிருந்தே போலீஸ்காரராக ஆக வேண்டும் என்று தீராத ஆசை இருந்து வந்துள்ளது. நியயார்க் போலீஸ் சீருடையைப் போட்டுக் கொண்டு இவர் நிறைய செல்பி படங்களை எடுத்து வைத்துள்ளார். தனது நண்பர்களிடமும் தான் போலீஸாக விரும்புவதாக தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

 

மனைவியிடம் கெட்ட பெயர்

இவரது முன்னாள் மனைவி பெயர் சித்தோரா யூசப்பி. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். தனது கணவர் மிகவும் கோபக்காரர் என்றும் தன்னை அடித்து உதைப்பார் என்றும் கூறியுள்ளார் சித்தோரா.

 

நிலையற்ற மனிதர்

எனது கணவர் ஒரு நிலையாக இருக்க மாட்டார். என்னை அடிப்பார். வீட்டுக்கு வந்ததும் ஏதாவது ஒரு காரணத்திற்காக என்னை அடிப்பார். துணி துவைக்கவில்லை என்றால் அடிப்பார். இப்படி ஏதாவது காரணம். ஆன்லைன் டேட்டிங் தளம் மூலமாக அவரை சந்தித்தேன். பின்னர் அவருக்காக நான் புளோரிடாவுக்கு இடம் பெயர்ந்தேன். 2009ல் திருமணம் நடந்தது. உமரின் குடும்பத்துக்குச் சொந்தமான போர்ட் பியர்ஸ் வீட்டுக்கு இடம் பெயர்ந்து வந்து வசிக்க ஆரம்பித்தேன்.

 

2011ல் விவாகரத்து

எனது கணவரின் போக்குப் பிடிக்காததால் 2011ல் விவாகரத்து செய்து விட்டேன். எனது கணவருக்கு கடவுள் பக்தி அதிகம் என்று சொல்ல முடியாது. பெரும்பாலான நேரத்தை ஜிம்மில் கழிப்பார். அவருக்கு தீவிரவாதிகள் யாருடனும் தொடர்பு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்புவேர். யாரிடமும் பகிரங்கமாக எதையும் சொல்ல மாட்டார். என்னைப் பிரிந்த பின்னர் இன்னொரு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்பெண்ணும் பிரிந்து போய் விட்டார் என்றார் சித்தோரா.

Read more at: http://tamil.oneindia.com/news/international/omar-mateen-was-an-abuser-says-former-wife-255852.html

  • தொடங்கியவர்

ஓர்லாண்டோ துப்பாக்கிதாரி இஸ்லாமிய அரசுக்கு விசுவாசமானவர்- எப்.பி.ஐ

 

ஓர்லாண்டோவில் உள்ள ஒரு பாலுறவுக்காரர்களுக்கான இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஐம்பது பேரை கொன்ற நபர், இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு விசுவாசம் செய்து கொண்டவர் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு துறை கூறுகிறது.

160613023818_omar_mateen_624x485_reuters

 

 துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒமர் மடீன்

அந்த நபர் அமெரிக்க குடிமகன் என்றும் அவரின் பெயர் ஒமர் மடீன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பல உயிர்களை பலிவாங்கிய இந்நிகழ்வு, அமெரிக்க வரலாற்றின் மிக கொடிய துப்பாக்கிச் சூடாக கருதப்படுகிறது.

    160613044254_after_orlando_shooting_624x

ஒமர் மடீன், 2013ம் ஆண்டில், தனக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறியதாக வந்த செய்திகளை அடுத்தும், அவர் தெரிவித்த சில வன்முறையைத் தூண்டக்கூடிய கருத்துக்காலை அடுத்தும்தான், அவரைப் பற்றி தங்களுக்குத் தெரிய வந்ததாக எப்.பி.ஐ ஒப்புக்கொண்டிருக்கிறது.

அந்த வழக்கில் மார்டின் முழுவதுமாக விசாரிக்கப்பட்டார் எனவும் பின் அந்த வழக்கு கைவிடப்பட்டது எனவும் மத்திய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

மடீனின் முன்னாள் மனைவி, சிடோரா யுசுஃபி, மார்டின் ஒரு உறுதியற்ற மனநிலையை கொண்டவர், வன்முறையாளர் ஆனால் அவர் மத தீவிரவாதி அல்ல என தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160613_orlando_shooting?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்

ஒமர் இதயத்தில் இவ்வளவு வெறுப்பு இருந்தது எனக்கு தெரியாது: தந்தை சித்திக்

ஒமர் மடீன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டார்கள்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், ஒரு பாலுறவுக்காரர்கள் கேளிக்கையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 50 பேரை கொன்ற ஒமர் மடீனின் தந்தை, தன்னுடைய மகனுடைய இதயத்தில் இவ்வளவு வெறுப்பு இருந்தது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

160613090437_seddique_mateen_640x360_fac

ஒமர் மடீன் தந்தை மிர் சித்திக்

நவீன அமெரிக்க வரலாற்றில், இப்படி ஒரு மோசமான துப்பாக்கிச்சூட்டை நடத்த ஒமர் மடீனை எது தூண்டியது என்பது குறித்து தன்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என ஆப்கனில் பிறந்த ஒமர் மடீனின் தந்தை மிர் சித்திக் தெரிவித்துள்ளார்.

 

மேலும், ஆப்கன் மக்களுக்கு சித்திக் அனுப்பிய வீடியோ செய்தியொன்றில், அமெரிக்க பிரஜையான தனது மகன் ஒமர் திருமணம் முடித்து குழந்தை பெற்றெடுத்தற்கு முன் நல்ல பிள்ளையாக இருந்தாகக் கூறியுள்ளார்.

 

ஒமர் மடீன் நிலையற்ற மனநிலைகாரர், வன்முறையில் ஈடுபடக்கூடியவர் என்றும் ஆனால் அவர் மதத் தீவிரவாதி என்பது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்றும் மடீனின் முன்னாள் மனைவி வர்ணித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160613_seddique_comments_on_his_son?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னவோ இத் தாக்குதல் உள் வீட்டுச் சதி என்றேபடுகிறது.ஆயுததாரியைப் பயன்படுத்தி தாக்குதல் செய்து விட்டு,அவரையும் சுட்டுக் கொன்று விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.