Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப்பிரதமர் திறந்து வைத்தார்...

Featured Replies

இந்தியப்பிரதமர் திறந்து வைத்தார்...
 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பிரஸ் மூலம் இணைந்து கொண்டு விளையாட்டரங்கத்தை திறந்துவைத்தார்.

article_1466226928-0.jpg

article_1466226966-09.jpg

- See more at: http://www.tamilmirror.lk/174974/இந-த-யப-ப-ரதமர-த-றந-த-வ-த-த-ர-#sthash.sNb4scHB.dpuf
  • தொடங்கியவர்

துரையப்பா மைதானம் பொருளாதாரத்தின் அடையாளம் : காணொளி காட்சி மூலம் மைதானத்தை திறந்து வைத்து மோடி தெரிவிப்பு

 

யாழ். துரையப்பா மைதானம் வெறும் செங்கல் மற்றும் மணலால் கட்டப்பட்டதல்ல. இது இருநாட்டினதும் ஒருங்கிணைப்பு உத்வேகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

maxresdefault__1_.jpg

இந்தியா சார்பில் 15 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை டெல்லியில் இருந்த படியே பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Modi.jpg

காணொளி காட்சி மூலம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் இலங்கை சென்ற போது யாழ்ப்பாண மக்கள் என்னை அன்போடு வரவேற்றமை மறக்க முடியாத சம்பவமாகும். இலங்கை மக்களுடன் ஒன்றிணைந்த செயற்படுவதனால் இந்நாள் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றது.

இந்த நிகழ்வானது இலங்கை மற்றும் இந்தியாவிற்கான உறவை பலப்படுத்தும். ஐ.நாவின் யோகா தினத்திற்கு இலங்கைதான் முதலில் ஆதரவளித்தது. 

நாம் இலங்கையின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/7714

  • தொடங்கியவர்
துரையப்பா விளையாட்டரங்கு திறப்பு
துரையப்பா விளையாட்டரங்கு திறப்பு
5098a6c6-4a38-4f46-af38-be0689bf34f8-720
இந்திய அரசாங்கத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து (டிஜிட்டல் காணொளி ஊடாக) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார்.
 
 
55067b8d-ff07-46ec-9f99-d9d920d01056.jpg
இதனைத் தொடர்ந்து, யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றும் விசேட யோகா நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
 
1d9b07d8-dd57-4955-8c78-f9c39fc0831f.jpg
இந்நிகழ்வுகளில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே.சிங்ஹா, யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன், முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண ஆளுனர், உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
8cb0cfaf-11a4-467e-88af-22fdca70bdf2.jpg
வடமாகாணத்தின் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், மற்றும் இளையோரின் மேம்பாட்டை கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கத்தினால் 145மில்லியன் ரூபா செலவில் துரையப்பா விளையாட்டரங்கின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

http://onlineuthayan.com/news/13861

சுஷ்மாவுக்கு இந்த முறையும் ஏதாவது அன்பளிப்புக்கள் கிடைக்குமா?

  • தொடங்கியவர்

யாழ் துரையப்பா விளையாட்டரங்கு திறந்து வைப்பு

 

 

யாழ் துரையப்பா விளையாட்டரங்கு திறந்து வைப்பு

 

புனர்நிர்மானம் செய்யப்பட்டு நவீனமாயமாக்கப்பட்ட யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கு உத்தியபூர்வமாக இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி மூலமாகவும் உத்தியபூர்வமாக திறந்து வைத்தனர்.

இன்று திறந்து வைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டு அரங்கில் முதல் நிகழ்வாக மாணவர்களின் யோகா பயிற்சிகள் இடம்பெற்றன.

கண்ணாடியினால் பொறுத்தப்பட்ட மேடையில் அமர்ந்திருந்து யோகா பயிற்சியினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் செய்மதி மூலம் யோகா பயிற்சியினை பார்வையிட்டனர்.

அத்துடன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் இந்திய தூதுவர் வை.கே.சிங்கக மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை மற்றும் இந்திய தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, பின்னர் பாடாசலை மாணவர்களுக்கு யோகா பயிற்சி நெறிகள் வளவாளர்களினால் அளிக்கப்பட்டன.

வடமாகாண பாடசாலைகளைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் யோகா பயிற்சியில் கலந்துகொண்ருந்தனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=2177&mode=head

  • கருத்துக்கள உறவுகள்

குண்டழினி யோகம் இனி உச்சத்தை தொடப்போகுது யாழ்மக்கள் நோய்யற்ற வாழ்வு வாழப்போகிறார்கள் ...எல்லா புகழும் எங்கள் மோடிக்கே......

 

சிறிலங்காவுக்கு இன்னுமொரு செய்தி இந்தியாவால் சொல்லப்படுகிறது.....டெல்லியிலிருந்து கொண்டு உங்கன்ட நாட்டின் தலைப்பில் ஒரு விளையாட்டு அரங்கை எங்களால் திறக்க முடியுமென்றால் ...........இந்திய ராஜதந்திரி ஒரு தடவை சொன்னவர் ஒரு சிகரட் பத்த வைத்து முடிப்பதற்கு முதல் சிறிலங்காவில் தங்களால் நிற்கமுடியும் என்று அதுதான் எனக்கு இப்ப ஞாபகத்திற்கு வருகின்றது....

  • தொடங்கியவர்

தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.வணக்கம் தெரிவித்தார்.

 

துரையப்பா விளையாட்டரங்கை பொதுமக்களுக்கு அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. - மோடி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.வணக்கம் தெரிவித்தார்.




இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவும் இன்று (சனிக்கிழமை) கூட்டாக சேர்ந்து இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தனர். அதன் போது  நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் இந்த விளையாட்டு அரங்கு அர்ப்பணிப்பு விழாவில் பங்கேற்றார்.

அதன் போது வீடியோ காணொளி மூலம் புது டெல்லியில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போதே தமிழ் மற்றும் சிங்கள மொழியில் வணக்கம் சொல்லி தனது உரையை ஆங்கில  மொழியில் நிகழ்த்தினார்.

துரையப்பா விளையாட்டரங்கை பொதுமக்களுக்கு அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. - மோடி

துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பதிலும் , நான் மகிழ்ச்சி அடைக்கிறேன். என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
 
இந்திய புதுடெல்லியில் இருந்து வீடியோ காணொளி மூலம் யாழில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் 
 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் யாழ்ப்பாணம் வந்திருந்த போது யாழ்ப்பான மக்கள் காட்டிய அன்பினையும் ஆதரவையும் நினைத்து பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கின்றது. உண்மையில் அந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். 

 
ஏனெனில் இந்திய நாட்டின் பிரதமர் ஒருவர் முதல் தடவையாக யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்த நாள் அன்றைய நாளாகும். மீண்டும் இன்றைய தினம் யாழ். மக்களோடும் இலங்கை மக்களோடும் இணைந்து நல்லுறவு கிடைத்தமைக்கு சந்தோசம் அடைகிறேன். 
 
துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பதிலும் , நான் மகிழ்ச்சி அடைக்கிறேன். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133226/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
துரையப்பா விளையாட்டரங்கம் திறந்துவைப்பு
 
18-06-2016 02:05 PM
Comments - 0       Views - 4

article_1466239404-aaaaaaaaaaaaa.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை (18) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைத்தார்.

article_1466239416-ccccccccccccc.jpg

article_1466239424-bbbbbbbbbbbbb.jpg

article_1466239435-eeeeeeeeeeeeee.jpg

article_1466239449-ffffffffffffffffff.jp

article_1466239463-ggggggggggggggggggggg

article_1466239477-hhhhhhhhhhhhhhh.jpg

article_1466239485-dddddddddddddd.jpg

article_1466239493-iiiiiiiiiiiiiiiiiiiii

- See more at: http://www.tamilmirror.lk/174992/த-ர-யப-ப-வ-ள-ய-ட-டரங-கம-த-றந-த-வ-ப-ப-#sthash.2jiMuKwo.dpuf
  • தொடங்கியவர்

'வணக்கம், சுப சந்தியாவக், ஐபோவான், போமஸ்துதி, நன்றி' கூறிய மோடி (காணொளி இணைப்பு)

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வணக்கம், சுப சந்தியாவக், ஐபோவான்,  தனது உரையின் ஆரம்பத்திலும் நன்றி, போமஸ்துதி என உரையின் இறுதியிலும் தமிழ், சிங்கள மொழிகளில் கூறியபோது அரசங்கத்திலிருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். Dfdfdgfgfg.gfg.jpg

 

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் புனரப்புச்செய்யப்பட்ட யாழ். அல்பிரட் துரைப்பா விளையாட்டரங்கு திறப்பு விழா இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி டில்லியிலிருந்தவாறே டிஜிட்டல் காணொளி காட்சி யூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கூட்டாக விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை மக்களுக்கான சிற்றுரையொன்றையும் ஆற்றியிருந்தார். இந்த உரையும் கணொளியூடாக மைதானத்தில் ஒளிபரப்பட்டிருந்தது. 

இந்த உரையின் ஆரம்பத்திலும், இறுதியிலும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இந்தியப்பிரதமர் வணக்கம், நன்றி ஆகியவற்றை தெரிவித்தார். இதனால் அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளியிட்டு ஆர்ப்பரித்தமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.virakesari.lk/article/7719

இந்திய அமைதிப் படை என்ற பெயரில் யாழ் மண்ணில் வந்திறங்கிய கொலைகாரக் கும்பலினால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பலநூறு தமிழ் பெண்களுக்கு, சித்திரவதை செய்யப்பட்டு இன்னல்களுடன் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு 28 வருடங்கள் சென்றும் இன்னமும் நீதியும், நிவாரணமும், நட்ட ஈடுகளும் கிடைக்கவில்லை. இந்த மன்னிக்க முடியாத கொடும் குற்றங்களைப் புரிந்த கொலைகாரக் கும்பலுக்கு இன்னமும் தண்டனைகளும் வழங்கப்படவில்லை.

ஆனால் இவர்கள் தொடர்ந்தும் உலகை ஏமாற்ற முயலுகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

article_1466239435-eeeeeeeeeeeeee.jpg

குறுக்காலை கேள்வி கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது.......ஜெயந்தி அக்கா ஏன் போகேல்லை? நோர்மலாய் பாரியார் சகிதமாய்த்தானே உப்பிடியான பங்சனுக்கு போகோணும்.:rolleyes:

9 minutes ago, குமாரசாமி said:

குறுக்காலை கேள்வி கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது.......ஜெயந்தி அக்கா ஏன் போகேல்லை? நோர்மலாய் பாரியார் சகிதமாய்த்தானே உப்பிடியான பங்சனுக்கு போகோணும்

ஹிந்திய தூதுவர் சின்ஹாவும் வருவதால் முன்னெச்சரிக்கையாய் தவிர்த்திருப்பார். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

குறுக்காலை கேள்வி கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது.......ஜெயந்தி அக்கா ஏன் போகேல்லை? நோர்மலாய் பாரியார் சகிதமாய்த்தானே உப்பிடியான பங்சனுக்கு போகோணும்.:rolleyes:

குறுக்காலை கேள்வி கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது..

யார் இந்த அம்மணி..? முக்கிய பதவியில் கோலோச்சுபவரா..? emboubli2.gif

9 minutes ago, ராசவன்னியன் said:

குறுக்காலை கேள்வி கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது..

யார் இந்த அம்மணி..? முக்கிய பதவியில் கோலோச்சுபவரா..? emboubli2.gif

மைத்திரியின் ஒரே ஒரு மனைவி!

10 minutes ago, ராசவன்னியன் said:

குறுக்காலை கேள்வி கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது..

யார் இந்த அம்மணி..? முக்கிய பதவியில் கோலோச்சுபவரா..? emboubli2.gif

M.R.S  Srisenaa 

 

3 minutes ago, ஜீவன் சிவா said:

M.R.S  Srisenaa 

 

மோடி இப்ப தான் Mind Your Language பார்த்து இங்கிலீஷு படிக்கிறார்.

அதற்காக அவரை முட்டாள் மோடி என்று சொல்லும் யூ டியூபை இணைக்கலாமா?

37 minutes ago, போல் said:

மோடி இப்ப தான் Mind Your Language பார்த்து இங்கிலீஷு படிக்கிறார்.

அதற்காக அவரை முட்டாள் மோடி என்று சொல்லும் யூ டியூபை இணைக்கலாமா?

நான் எங்க முட்டாள் மோடி எண்டு சொன்னன். ஜெயந்தி யார் எண்டு கேட்டதுக்கு விடையே மோடியின் வாயாலேயே சொல்லியிருந்தேன் அம்புட்டுதான். :grin:

55 minutes ago, ஜீவன் சிவா said:

நான் எங்க முட்டாள் மோடி எண்டு சொன்னன்.

நீங்கள் சொன்னதா யாரும் சொல்லேலையே? உங்களுக்கு என்ன ஆச்சு இப்பிடி எழுத? 

:):):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.