Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் மது பாவனையில் முதலிடத்தில் யாழ் மாவட்டம்.

Featured Replies

இலங்கையில் மது பாவனையில் முதலிடத்தில் யாழ் மாவட்டம்.
 
இலங்கையில் மது பாவனையில் முதலிடத்தில் யாழ் மாவட்டம்.
 
இலங்கையில் மது பாவனையில்,யாழ்ப்பாண மாவட்டம்முதலாவது இடத்திலும் நுவரெலியா மாவட்டம்  இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
1466938364_images%20%281%29.jpg
நாட்டு மக்களின் எதிர்காலம் நலன் கருதி ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் ‘மதுவுக்கு முற்றுப்புள்ளி’ என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மது ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் அங்கு கூறுகையில், நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றார்கள். அந்தவகையில் உங்களின் வாழ்க்கை பற்றி நீங்கள் சிந்திக்கின்றீர்களா? அல்லது சிந்திக்க முயற்சி செய்கின்றீர்களா? இந்த நாட்டில் போசாக்கு இன்மையால் 18 வீதமானவர்கள் இருக்கின்றார்கள்.
 
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலே அதிகமானவர்கள் போசாக்கு இன்மையால் வாழ்கின்றார்கள். இங்கு வாழ்கின்ற மக்களிடம் நான் கேட்கின்றேன் இது ஒரு கௌரவமான விடயமா என்று. நான் சர்வதேச மாநாட்டிற்கு சென்று நமது நாட்டில் 18 வீதமானவர்கள் போசாக்கு இன்மையால் வாழ்க்கின்றார்கள் என கூறும் பொழுது வெட்கப்பட்டேன்.
 
அதிகமாக போசாக்கு இன்மையினால் வாழும் இந்த நுவரெலியா மாவட்டத்தில் இப்பிரச்சினையை முதலில் விரட்டியடிக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும். தோட்டப்புற மக்கள் பொருளாதார வசதியின்மையால் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் எதிர்நோக்கி வருகின்றார்கள். இது ஒரு இரகசியம் அல்ல. தோட்டப்புற மற்றும் ஏனைய மக்களுடைய பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப நாம் அனைவரும் அரப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
 
இந்த பொருளாதார பிரச்சினையை கட்டியெழுப்புவதற்கு எமக்கு இருக்கின்ற சவால்கள் தான் என்ன? ஏழை, வறுமை அதிகரிக்க காரணம் என்ன? அதில் முக்கியமான விடயம் தான் இந்த மாவட்டத்தில் இருக்க கூடிய போதைப்பொருள் பாவனை பிரச்சினையாகும். இந்த பிரச்சினையை முதலாவதாக நுவரெலியாயில் இல்லாதொழிக்க வேண்டும்.
 
இந்த நாட்டில் சட்டபூர்வமாக அனுமதி பெற்று மதுவை விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிகமான வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் மாவட்டங்களை முதலாம், இரண்டாம், மூன்றாம் என வரிசைப்படுத்தி எனக்கு கூற முடியும். அந்தவகையில் முதலாம் இடத்தில் யாழ்ப்பாணமும், இரண்டாம் இடத்தில் நுவரெலியா மாவட்டமும், மூன்றாம் இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் காணப்படுகின்றது.
 
நுவரெலியா மாவட்டத்தில் வருடத்திற்கு 1600 கோடி ரூபா இங்குள்ள மக்கள் மதுவுக்காகவும், புகைத்தலுக்காவும் செலவு செய்கின்றார்கள். எனவே இந்த பிரச்சினையிலிருந்து நாம் விடுப்படுவதற்கு சிந்திக்க வேண்டியதோடு அனைவரும் ஒன்றுப்பட்டு செயல்பட்டு இவ்விடத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/14251

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமும் பொலிஸும் எங்கிருந்து மதுபாணம் வாங்கினமாம் .அவ்ர்களும் இதனுள் அடக்கம். அவர்களுக்கு கொழும்பிலிருந்தோ போகுது? அவர்களும் யாழ் தவறனைகளில் தான் வாங்கி குடிப்பார்கள் .....அப்படி பார்த்தால் இராணுவத்தயும்  யாழ்ப்பாணத்தான் என்றுதான் சொல்ல வேண்டும்..

  • தொடங்கியவர்

மது மூலம் அதிக வருமானம் ஈட்டித்தருவதில் 1வது இடத்தில் யாழ். : நிலைமை மாறவேண்டும் என்கிறார் ஜனாதிபதி

b2a07065-4abf-4a2c-b82a-1464864be46a.jpg

அரசாங்கத்தின் சட்டரீதியான அனுமதி பெற்று மது விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண மாவட்டமும் இரண்டாம் இடத்தை நுவரெலியா மாவட்டமும் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்றுள்ளன. இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் மதுவற்ற நாடு எனும் வேலைத்திட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சித்திட்டம் இன்று) ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம்,பாராளுமன்ற உறுப்பினர்களான முத்துசிவலிங்கம்,கே.கே.பியதாச,மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க,மத்திய மாகாண சபை அமைச்சர் ரமேஸ்வரன்,நுவரெலியா மாநகர முதல்வர் மகிந்த தொடம்பே கமகே,மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், ஏ.பி.சக்திவேல், பிலிப்குமார்,கணபதிகணகராஜ, எஸ்.பீ.ரட்ணாயக்க, நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.எச்எம்.மீகஸ்முல்ல உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகளும் அரச உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில் 

மது விற்பனையில் பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுடைய விபரங்களை எனக்கு முன்பதாக பேசிய பலர் சுட்டிக்காட்டினார்கள்.  ஆனால் எனக்கு அவர்களை சுட்டிக்காட்ட முடியாது. அப்படி செய்தால் எனக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது. அது அந்த அளவிற்கு சக்திவாய்ந்த ஒரு விடயமாகும். ஆனால் ஏதோ ஒரு வகையில் இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

மாவட்டங்களில் மாதம் தோறும் நடைபெறுகின்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும்,பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் மது ஒழிப்பு தொடர்பாக கட்டாயமாக நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கு எமது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமைதாங்க வேண்டும். தனி ஒருவரால் மட்டும் இதனை சாதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும்.

நான் பல சர்வதேச மகாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற பொழுது எமது நாட்டில் 18 வீதமான போஷாக்கின்மை இருப்பதை எனது வாயால் பேசும் பொழுது  வெட்கித்தலைகுனிந்திருக்கின்றேன். இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காக அதிக போசாக்கு குறைந்த மாவட்டமாக திகழும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து அந்த செயல்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது உழைப்பில் அதிகமான பகுதியை மதுபானத்திற்காக செலவு செய்கின்றார்கள். இதன் காரணமாக அவர்களுடைய சமூக பொருளாதார சீரழிவுகள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்லாமல் பெண்களும் இந்த விடயத்தில் ஈடுபடுவதால் இந்த பாதிப்புகள் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம். எனவே அதற்கான முறையான ஒரு வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் அனைத்து அலுவலகங்களிலும் போதை ஒழிப்பு தொடர்பாக விசேட பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்த செயல்திட்டம் தொடர்பாக செயற்பட வேண்டும். இதற்கான விசேட சுற்றறிக்கைகளை நாம் கடந்த வருடத்தில் எல்லா திணைக்களங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய அலுவலகங்களில் மதுபானத்தை பாவிப்பவர்களை அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

இங்கு வருகை தந்திருக்கின்ற அனைவரும் மது ஒழிப்பை அமுல்படுத்துவதாக காலையில் தங்களுடைய வலது கரத்தை நீட்டி சத்தியபிரமாணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். எனவே நீங்கள் அனைவரும் இன்று பகல் உணவின்போதோ அல்லது மாலை வேளையின்போதோ அல்லது குளிர் அதிகமாக இருக்கின்றது என்ற காரணத்தை காட்டியோ அந்த சத்திய பிரமாணத்தை மீறமாட்டீர்கள் என நான் நினைக்கின்றேன்.

மதுவற்ற ஒரு சமூகமாக நாம் மாற்றம் பெற்றால் பல மாற்றங்களை எமது நாட்டில் ஏற்படுத்த முடியும். நாட்டிற்கு சிறந்த தலைவர்களாக குடும்பத்தின் நல்ல தலைவனாக பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக சமூகத்திற்கு ஒரு வழிகாட்டியாக முன்னோக்கி செல்ல முடியும் என்றார்.  

http://www.virakesari.lk/article/8134

4 minutes ago, putthan said:

இராணுவமும் பொலிஸும் எங்கிருந்து மதுபாணம் வாங்கினமாம் .அவ்ர்களும் இதனுள் அடக்கம். அவர்களுக்கு கொழும்பிலிருந்தோ போகுது? அவர்களும் யாழ் தவறனைகளில் தான் வாங்கி குடிப்பார்கள் .....அப்படி பார்த்தால் இராணுவத்தயும்  யாழ்ப்பாணத்தான் என்றுதான் சொல்ல வேண்டும்..

ஏனைய மாவட்டங்களில் உள்ள போலீஸ், இராணுவம் குடிப்பது இல்லையா..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கு மலையம்.. தமிழ் மக்களை சொறீலங்காவின் நல்ல "குடி"மக்களாக்கி இருக்கிறார்கள்.. சிங்கள ஆட்சியாளர்களும் இராணுவமும். புலம்பெயர் தமிழர்கள் விசிறி எறிய..  இராணுவம் ஊற்றிக்கொடுக்க.. இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுக்கு மேலதிகமாக ஹிந்தியாவில் கேரளாவில் இருந்து கஞ்சா.. இலவச இறக்குமதி. 

எனி தனி இராட்சியம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அது "தண்ணி" இராட்சியமாச்சுது. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நவீனன் said:

மது மூலம் அதிக வருமானம் ஈட்டித்தருவதில் 1வது இடத்தில் யாழ். : நிலைமை மாறவேண்டும் என்கிறார் ஜனாதிபதி

b2a07065-4abf-4a2c-b82a-1464864be46a.jpg

அரசாங்கத்தின் சட்டரீதியான அனுமதி பெற்று மது விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண மாவட்டமும் இரண்டாம் இடத்தை நுவரெலியா மாவட்டமும் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்றுள்ளன. இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் மதுவற்ற நாடு எனும் வேலைத்திட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சித்திட்டம் இன்று) ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம்,பாராளுமன்ற உறுப்பினர்களான முத்துசிவலிங்கம்,கே.கே.பியதாச,மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க,மத்திய மாகாண சபை அமைச்சர் ரமேஸ்வரன்,நுவரெலியா மாநகர முதல்வர் மகிந்த தொடம்பே கமகே,மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், ஏ.பி.சக்திவேல், பிலிப்குமார்,கணபதிகணகராஜ, எஸ்.பீ.ரட்ணாயக்க, நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.எச்எம்.மீகஸ்முல்ல உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகளும் அரச உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில் 

மது விற்பனையில் பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுடைய விபரங்களை எனக்கு முன்பதாக பேசிய பலர் சுட்டிக்காட்டினார்கள்.  ஆனால் எனக்கு அவர்களை சுட்டிக்காட்ட முடியாது. அப்படி செய்தால் எனக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது. அது அந்த அளவிற்கு சக்திவாய்ந்த ஒரு விடயமாகும். ஆனால் ஏதோ ஒரு வகையில் இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

மாவட்டங்களில் மாதம் தோறும் நடைபெறுகின்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும்,பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் மது ஒழிப்பு தொடர்பாக கட்டாயமாக நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கு எமது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமைதாங்க வேண்டும். தனி ஒருவரால் மட்டும் இதனை சாதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும்.

நான் பல சர்வதேச மகாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற பொழுது எமது நாட்டில் 18 வீதமான போஷாக்கின்மை இருப்பதை எனது வாயால் பேசும் பொழுது  வெட்கித்தலைகுனிந்திருக்கின்றேன். இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காக அதிக போசாக்கு குறைந்த மாவட்டமாக திகழும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து அந்த செயல்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது உழைப்பில் அதிகமான பகுதியை மதுபானத்திற்காக செலவு செய்கின்றார்கள். இதன் காரணமாக அவர்களுடைய சமூக பொருளாதார சீரழிவுகள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்லாமல் பெண்களும் இந்த விடயத்தில் ஈடுபடுவதால் இந்த பாதிப்புகள் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம். எனவே அதற்கான முறையான ஒரு வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் அனைத்து அலுவலகங்களிலும் போதை ஒழிப்பு தொடர்பாக விசேட பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்த செயல்திட்டம் தொடர்பாக செயற்பட வேண்டும். இதற்கான விசேட சுற்றறிக்கைகளை நாம் கடந்த வருடத்தில் எல்லா திணைக்களங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய அலுவலகங்களில் மதுபானத்தை பாவிப்பவர்களை அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

இங்கு வருகை தந்திருக்கின்ற அனைவரும் மது ஒழிப்பை அமுல்படுத்துவதாக காலையில் தங்களுடைய வலது கரத்தை நீட்டி சத்தியபிரமாணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். எனவே நீங்கள் அனைவரும் இன்று பகல் உணவின்போதோ அல்லது மாலை வேளையின்போதோ அல்லது குளிர் அதிகமாக இருக்கின்றது என்ற காரணத்தை காட்டியோ அந்த சத்திய பிரமாணத்தை மீறமாட்டீர்கள் என நான் நினைக்கின்றேன்.

மதுவற்ற ஒரு சமூகமாக நாம் மாற்றம் பெற்றால் பல மாற்றங்களை எமது நாட்டில் ஏற்படுத்த முடியும். நாட்டிற்கு சிறந்த தலைவர்களாக குடும்பத்தின் நல்ல தலைவனாக பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக சமூகத்திற்கு ஒரு வழிகாட்டியாக முன்னோக்கி செல்ல முடியும் என்றார்.  

http://www.virakesari.lk/article/8134

ஏனைய மாவட்டங்களில் உள்ள போலீஸ், இராணுவம் குடிப்பது இல்லையா..:grin:

ஐயா நவீனன், யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தின் எண்ணிக்கையும் ஏனைய மாவட்டத்தில் இராணுவத்தின் எண்ணிக்கையும் சமனா? உங்களுக்கு தெரியாததா என்ன? tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

 வருமானம் ந்ல்லா வருகுதுதானே......வாழ்க நல்லாட்சி....இதற்காகத்தான் ஆசைப்பட்டாய் ...எம்மினமே...வாழ்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுவையும் கேளிக்கைகளையும் அதிகரித்துவிட்டால் மக்கள் மந்தைகளாகி விடுவார்கள். அதன் பின்னர் அரசியல்வாதிகள் காட்டில் ஒரே மழைதான்.

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மதுபான சாலைகளுக்கு அனுமதி கொடுப்பது அரசுதான் பிறகு ஏன் இப்படி அறிக்கை விடுவது

இதில் மட்டக்களப்பு மூன்றாவது இடத்தில் இங்கு அனுமதித்த மதுச்சாலைகளை விட மீண்டும் அனுமதி பெறப்பட்டு இயங்கும் மதுச்சாலைகள் தான் அதிகமாக இருக்கிறது  . 

தமிழன் இந்த நாட்டின் குடிமகன் என்பதை நிருபிக்கிறார்கள்  இதனால் அரசுக்கு இரட்டிப்பு சந்தோசம்

சட்டரீதியில், மது விற்பனை செய்து அரசாங்கத்துக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களின் முதலாம் இடத்தை யாழ்ப்பாணமும் இரண்டாம் இடத்தை நுவரெலியாவும், மூன்றாம் இடத்தை மட்டக்களப்பும் பெற்றுள்ளன. இந்த நிலைமை மாற வேண்டும். இது ஓர் ஆரோக்கியமான செயற்பாடு அல்ல' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

' நுவரெலியா மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தமது உழைப்பின் அதிகமான பகுதியை, மதுபானத்துக்கே செலவு செய்கின்றார்கள். இதன் காரணமாக, சமூக, பொருளாதார சீரழிவுகள் அதிகளவில் ஏற்படுகின்றன.அது மட்டுமல்லாமல், பெண்களும் இந்த விடயத்தில் ஈடுபடுவதால் இந்த பாதிப்புகள் இன்னும் அதிகமாக காணப்படுகின்றன' என்றும் அவர் குறிப்பிட்டார்.

 'மதுவற்ற நாடு' எனும் வேலைத்திட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில், நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயேஅவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'எமது நாட்டில், சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் சட்டரீதியான மதுபான விற்பனை என இரண்டு வகை இருந்தாலும், இவை இரண்டாலும் ஏற்படுகின்ற பாதிப்பு ஒன்று என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

'மது விற்பனையில் பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். எனக்கு அவர்களை சுட்டிக்காட்ட முடியாது.

மாவட்டங்களில் மாதம் தோறும் நடைபெறுகின்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களிலும், பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களிலும், மது ஒழிப்பு தொடர்பில் கட்டாயமாக நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கு எமது அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைமை தாங்க வேண்டும். தனி ஒருவரால் மட்டும் இதனை சாதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும்.

நான் பல சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது, எமது நாட்டில் 18 சதவீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதை எனது வாயால் சுட்டிக்காட்டும் போது, நான் வெட்கித் தலைகுனிந்திருக்கின்றேன். இந்த நிலையை மாற்ற வேண்டும்' என்றார்.

'அதற்காக, அதிக போசாக்கு குறைந்த மாவட்டமாக திகழும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து அந்த செயற்றிட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.அதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசாங்கத்தின் அனைத்து அலுவலகங்களிலும் போதை ஒழிப்பு தொடர்பாக விசேட பிரிவு ஒன்றை ஏற்படுத்தி, அதில் இந்த செயற்றிட்டம் தொடர்பாக செயற்பட வேண்டும். இதற்கான விசேட சுற்றறிக்கைகளை நாம் கடந்த வருடத்தில், எல்லா திணைக்களங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய அலுவலகங்களில் மதுபானத்தை பாவிப்பவர்களை, அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டு;ம்' என தெரிவித்தார்.

'மதுவற்ற ஒரு சமூகமாக நாம் மாற்றம் பெற்றால், பல மாற்றங்களை எமது நாட்டில் ஏற்படுத்த முடியும். நாட்டுக்கு சிறந்த தலைவர்களாக குடும்பத்தின் நல்ல தலைவனாக, பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக சமூகத்துக்கு ஒரு வழிகாட்டியாக முன்னோக்கிச்செல்ல முடியும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் ஒரு பாரிய பொறுப்பு, மாணவர்களிடமும் இருக்கின்றது. நீங்கள் உங்கள் சூழலில் இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறுகின்ற பொழுது, அது தொடர்பாக உரியவர்களுக்கு அறிவிக்க முன்வரவேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில்,  மது ஒழிப்புக்காக பங்களிப்பு செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், மது வரி திணைக்கள அதிகாரிகள், ஊடகவியாலாளர்கள், பொது மக்கள் ஆகியோருக்கான சான்றிதழ்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/175635/தம-ழர-கள-ச-ற-ந-த-வ-ழ-ம-ம-வட-டங-கள-ல-மத-வர-ம-னம-அத-கம-#sthash.r4k09SWD.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை சாரயக் கடைகள் திறந்தாலும் குடிக்க மாட்டன் என தீர்மானிச்சவன் குடிக்கமாட்டான். 

யாழில் உள்ள எல்லா சாரயக்கடைகளயும் மூடினாலும் குடிக்க விரும்புவன் திருக்கோணமலைக்கு சென்றும் போத்தால் வாங்கி அடிப்பான். எல்லாவற்றிற்கும் வீணாக அரசாங்கத்தை குற்றம் சொல்ல கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilyarl.com/யாழ்ப்பாணம்-மது-பாவனையில

இந்த இணையத்தில் வந்த‌ கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.