Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐயோ அம்மா அருள் புரியுங்க தாயே

Featured Replies

jaya-feet_070119.jpg

:):(:D:D :P :P :P :D:D:D:D

  • Replies 86
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயே இது என்ன மனுசரின்ட காலில்ல மனுசன் விழுறது

ஐயே இது என்ன மனுசரின்ட காலில்ல மனுசன் விழுறது

உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கிறது.

இதுதான் 'பய' பக்தி.

இந்த முந்நாள் நடிகையிடம் பணமும் அதிகாரமும் உள்ளவரை இவர் கடவுள் போன்றவர்.

தன்னிடம் பணியாதவரை ஒரு கை பார்த்துவிடுவார். பணிபவரை இரு கைகளாலும் ஆசீர்வதிக்கிறார்.

இப்படி இந்த ஆண்கள் இந்த பெண்மணியின் காலில் விழுவதை நான் உள்ளுர ரசிக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா வறுமைக்கோட்டின் கீழ இருக்கிற நாடு என்டு சொல்லீனம். பாத்தா அப்படி தெரியேலையே. எங்கயே அரிசி மலிவாக கிடைக்குது போல.

இப்படி இந்த ஆண்கள் இந்த பெண்மணியின் காலில் விழுவதை நான் உள்ளுர ரசிக்கிறேன்.

ஏனுங்கண்ணா, பொண்ணு கால்ல பசங்க விழுந்து சமத்துவத்தத் தாண்டி மேல போய்டானுங்கண்ணா? இல்ல, இந்த பசங்கள்ளாம், தன்மானம், சுயமரியாதை, இத்தியாதி... எல்லாத்தையும் அந்த பொண்ணு காலடீல கொணாந்து கொட்டீட்டானுங்கண்ணா ?

  • தொடங்கியவர்

பயபக்தியுடன் பத்தினி தெய்வத்தை கும்பிடுகிறார் வேட்டி கட்டினவர் என்ன கொடுமையப்ப்பா இது

211.jpg

Edited by ஈழவன்85

ஜெயலலிதா நடிகையாக இருந்த பொழுது அவர் ஆண்களால் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சினிமாத்துறை என்று அல்ல அரசியல்துறை சார்ந்தவர்களாலும் பல தொல்லைகளுக்கு உள்ளானவர். எம்ஜிஆருடன் அவர் நெருக்கமாக இருந்ததும் ஒரு பாதுகாப்புக்காக என்று பலர் சொல்வார்கள்.

(பல ஆண்டுகளுக்கு முன்பு மூப்பனார் வீட்டுத் திருமணம் ஒன்றில் நடிகையாக இருந்த ஜெயலலிதா நடன நிகழ்ச்சி செய்திருக்கிறார். பின்பு அதே மூப்பனார் கூட்டணிக்காக ஜெயலலிதாவின் பின்னும் முன்னும் அலைந்தார்.)

இப்படி நடிகையாக இருந்து ஆண்களால் அடக்கப்பட்ட, கசக்கப்பட்ட ஒரு பெண் அதிகாரம் வந்ததும், ஆண்களை காலில் விழ வைத்துப்பார்ப்பது எனக்கு பெரிய தவறாகப்படவில்லை.

என்னதான் இருந்தாலும் இந்த ஜன்மங்கள் இப்படி கூனி குறுகி நிற்பதை பார்க்க சகிக்க முடியவில்லை.

Edited by lisa01

எமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பவர் ஒருவர் முன்னால் பயபக்தியுடன் நிற்பதில் தவறு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!

மானம் கெட்ட தமிழன் எங்கேயோ ஒருந்து வந்த வேற்று மொழி மாநில பெண்ணிடம் விழுந்து கிடப்பது அசிங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வறுமைக்கோட்டின் கீழ இருக்கிற நாடு என்டு சொல்லீனம். பாத்தா அப்படி தெரியேலையே. எங்கயே அரிசி மலிவாக கிடைக்குது போல.

அரிசி வியாபாரத்துக்கு அம்மணியின் போட்டோவை போட்டால் தப்பே இல்லை

  • தொடங்கியவர்

எமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பவர் ஒருவர் முன்னால் பயபக்தியுடன் நிற்பதில் தவறு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!

ம் அது உண்மை ஆனால் ஏன் ஜெயலலிதாவை???????????????????????????????????????????

ம் அது உண்மை ஆனால் ஏன் ஜெயலலிதாவை???????????????????????????????????????????

ஈழத்தமிழரின் அன்புக்குப் பாத்த்திரமாக தமிழீழத்தேசியத்தலைவர் உள்ளது போல் செல்வி ஜெயலலிதாவை தமிழக மக்கள் மரியாதை செய்ய மாட்டார்கள் என்று உங்களால் கூற முடியுமா? கலைஞர் கருணா நிதியை விட செல்வி ஜெயலலிதாவையே தமிழக மக்கள் கூடுதலாக விரும்புகின்றார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு மிகுந்த ஆதரவு அளிக்கவில்லை என்பதற்காக தமிழக மக்கள் அவரிடம் கொண்டுள்ள மரியாதையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. செல்வி ஜெயலலிதாவை வழிகாட்டியாகப் பின்பற்றும் ஆயிரம் ஆயிரம் தமிழக மக்கள் இருக்கின்றார்கள் என்பது தமிழகம் அறிந்த உண்மை.

மற்றும்படி செல்வி ஜெயலலிதாவை நான் தலையில் வைத்துக் கொண்டாடுவதாக மட்டும் தயவு செய்து நினைக்க வேண்டாம்!

  • தொடங்கியவர்

மாப்பிள்ளை

தலைவரை காலில் விழுந்து கும்பிடுவதை நிச்சயம் விரும்பமாட்டார் என்பது நிச்சயம் .தன் காலில விழுந்து கும்பிடச்சொல்லுவது ஒருவித அகங்காரம்

மனிதனின் காலில் விழுந்து இன்னொருவன் வால் பிடிக்கத்தேவையில்லை என்பது என் கருத்து

ஈழவன்,

உங்கள் கருத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் ஒரு விடயத்தை நீங்கள் தவறாகப் புரிந்து வைத்துள்ளீர்களோ என நான் சந்தேகிக்கின்றேன்.

அதாவது பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்பது தமிழரின் ஒரு நீண்ட காலப்பண்பாடு. ஈழத்தமிழரை விட தமிழகத்தமிழர்கள் இப்பண்பாட்டை கூடுதலாக பின்பற்றி வருவதாக நான் நினைக்கின்றேன். ஏனென்றால் எனது அப்பா, அம்மாவிடம் நான் சில தடவைகள் முசுப்பாத்திக்கு விழுந்ததை தவிர வேறு ஒருவர் காலில் விழுந்து வணங்கியதாக எனக்கு நினைவில்லை. எனென்றால் இவ்வாறான நடைமுறைகள் எனக்கு சொல்லித் தரப்படவில்லை. ஆனால் இதை என்னில் உள்ள ஒரு குறைபாடாகவே நான் கருதுகின்றேன்.

ஏனென்றால் பெரியவர்கள், அறிஞர்கள், தலைவர்களிடம் வீழ்ந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவதால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. மாறாக எமக்கு தன் நம்பிக்கை பெருகும். எமது ஆணவம் எம்மை விட்டு அகழும். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து!

  • தொடங்கியவர்

மாப்பிளை உங்களின் கருத்துடன் எனக்கு உடன்பாடே ஆனால் நான் இரண்டாவதா இணைத்த படத்தில் எப்படி கூனி குறுகி கதைகிறார் பாருங்க உண்மையான தலைவன் இவற்றை விரும்பமாட்டான் என்பது என் கருத்து

இதை விடக்கொடுமை ஜெயலலிதாவிடம் அவரை விட மூத்தவர்கள் காலில விழுறது.

நான் யாரினது காலிலும் இதுவரை விழுந்தது இல்லை என் பெற்றோரிடமும் கூட என் பெற்றோரும் அதனை விரும்பவில்லை

என்னை பொறுத்தவரையில் இன்னொருவனின் காலை பிடிச்சு இன்னொருவன் வாழதேவையில்லை என்பதே

Edited by ஈழவன்85

"தன் காலில விழுந்து கும்பிடச்சொல்லுவது ஒருவித அகங்காரம் "

யெயலலிதாவுக்கு நிறையவே அகங்காரம் உண்டு. ர்ழவன் உங்கள்கருத்தே என் கருத்தும்

சிவா

ஈழவன்,

செல்வி ஜெயலலிதா தன்னிலும் வயதில் மூத்தவர்கள் அவருக்கு முன்னால் கைகட்டி வணங்கி நிற்பதை விரும்புவாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஏழ்மையில் வாடும், ஒடுக்கப்பட்ட மக்கள் அவரை சந்திக்கும் போது அவருக்கு முன்னால் அடங்கி ஒடுங்கி நிற்பத்தற்கு செல்வி ஜெயலலிதா என்னதான் செய்திட முடியும்? எமக்கு இது அநாகரிகமாகத் தெரிந்தாலும் அவ்வேழை மக்களிற்கு அவர் கடவுளாகத்தென்பட்டால் கூட ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

நாம் ஈழத்தமிழராக இருப்பதால் இதைப் பார்ப்பதற்கு எமக்கு சங்கடமாக இருந்தாலும் தமிழகத் தமிழர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் எப்போதாவது ஜெயா தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்தது உண்டா? பார்த்திருந்தால் தினமும் செல்வி ஜெயலலிதாவை தரிசிக்க கட்சி ஆதர்வாளர்கள், தொண்டர்கள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள், எமது மனதைக் கொள்ளை கொண்ட தமிழகக் கலைஞர்கள் என பலரும் அவரிடம் வருகைதந்து ஆசீர்வாதம் வாங்குவதை அறிந்திருப்பீர்கள்.

இன்னொருவன் காலைப் பிடிச்சு இன்னொருவன் வாழத்தேவையில்லை என்பதில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் இன்று உலகில் இதுவா நடக்கின்றது? நாம் வாழும் மிகவும் வளர்ச்சி பெற்ற மேலைத் தேய நாடுகளில் கூட காலைப் பிடிக்கும் களாச்சாரத்தை நீங்கள் தாராளமாகக் காணாலாம். தமிழகம் மட்டும் இதற்கு எவ்வாறு விதிவிலக்காக இருக்க முடியும்?

நானும்தான் பாக்கிறன் நம்ம கால்ல யாராவது விழுகிறார்களா? என்று..... விழுந்தால் ஆசீர்வாதம் கொடுத்த பெருமை நம்மைச் சேருமில்லையா?....

கால்ல விழுந்து தொழுகை செய்யாட்டாலும் பரவாயில்லை வாலைப் பிடிச்சு சுழட்டி விசுக்காதீங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் இது ரொம்ப ஓவர் :angry:

  • கருத்துக்கள உறவுகள்

உது பரவாயில்லை, சிட்னியில சில ஆண்கள் கல்யாணத்தின் பின்பு, மனைவியிடம் உப்பிடித்தான் பயந்து போய் (திட்டு, அடி தாங்காமல்) காலில் விழுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மானம் கெட்ட தமிழன் எங்கேயோ ஒருந்து வந்த வேற்று மொழி மாநில பெண்ணிடம் விழுந்து கிடப்பது அசிங்கம்.

வேற்று மொழி பேசலாம் வேற்று மாநிலத்தில் பிறந்திருக்கலாம்..ஆனால் மரபு வாழ்வியல் அறநெறி நின்றால் அவர்கள் எல்லாம் தமிழர்கள்.

என்ன புதிசா இருக்கு என்று நினைக்காதேங்கோ இதுதான் இப்ப முற்போக்கான கோட்பாடு. அம்மா வழி முற்போக்கு வழி..! பெரியார் வழி..! :huh::huh:

  • கருத்துக்கள உறவுகள்

உது பரவாயில்லை, சிட்னியில சில ஆண்கள் கல்யாணத்தின் பின்பு, மனைவியிடம் உப்பிடித்தான் பயந்து போய் (திட்டு, அடி தாங்காமல்) காலில் விழுகிறார்கள்.

நாட்டில மட்டுமா வீடுகளிலும் ராச்சியம் அவைட கையிலதானே. விழுந்து கும்பிட்டு.. தான் காரியம் சாதிக்கனும் என்றிருக்காக்கும். என்ன நல்ல உடற்பயிற்சி ஆண்களுக்கு..! :huh::huh:

கல்வி அறிவின் வளர்ச்சியில் இப்படியான செயல்கள் கானாமல் போய் விடும்...என்ன இருந்தாலும் இலங்கை தெற்காசியாவின் சமூக நல வல்லரசு..இலங்கையின் கல்வியறிவு வீதம் 94% ..தமிழகத்திலோ எமது சகோதரத் தமிழர்களின் தற்போதய நிலைதான் இது...ஏனெனில் ஒரு சாரார் ப்ணத்திலும் கல்வியறிவிலும் அதிக உயர் நிலையை அடைய மறு சாரார் ( பெரும்பாலனவர் ) தாழத்தப்பட்டவராகவும் கல்வியறிவு குறைந்தவராகவும் உளனர்.. அதனால் அத்தகய தாழ்த்தப்பட்ட மக்கள் பண மற்றும் கல்வியில் வலிமையானவரை கண்டதும்..பயப்படுகின்றனர் அல்லது மரியாதை செலுத்துகினறனர்.. இதெல்லாம் இருக்க்க தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் எம்மை விட ( எமது தரப்பிலும் சிங்கள தரப்பிலும் உள்ள சுதந்திரத்தை விட ) அதிகமாக உள்ளது என்பது நான் விசேடமாக கண்டு வியந்த ஒரு விடயம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.