Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க் கட்சித்தலைவர் ஏன் கிளிநொச்சி சந்தைக்கு வரவில்லை : பத்தரமுல்லை சீலரத்தின தேரர் கேள்வி

Featured Replies

எதிர்க் கட்சித்தலைவர் ஏன் கிளிநொச்சி சந்தைக்கு வரவில்லை :  பத்தரமுல்லை சீலரத்தின தேரர்  கேள்வி

 

(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட எதிர்க் கட்சித்தலைவர் ஏன் சந்தை தொகுதிக்கு வரவில்லை என பத்தரமுல்லை சீலரத்தின தேரர்  கேள்வி கேள்வியெழுப்பியுள்ளார்.

20160920_100850.jpg

இன்று கிளிநொச்சி சந்தைத்தொகுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உலருணவு பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 

20160920_102530.jpg

நான், இனவாதம் பேசவில்லை. பாதிக்கப்பட்ட உங்களின் நிலை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருவேன். உங்களுக்கு உதவி செய்யுமாறு பேசுவேன். நாம் அனைவரும் ஒரு நாட்டை சேர்ந்தவர்கள், இனவாதம் பேசவேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆனால், உங்களது வாக்குகளால் மக்கள் பிரதிநிதிகளாக்கப்பட்டவர்கள் உங்களுக்கு உதவ வேண்டும். டக்ளஸ் தேவானந்தா, உங்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர். அவர் உங்களை இன்று வரை சந்திக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், தமக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி வழங்கப்படவில்லை என்று இனவாதம் பேசினார். இன்று பதவி கிடைத்தவுடன் அமைதியாக இருக்கின்றார். அவரும் இன்று வரை உங்களை வந்து சந்திக்கவில்லை.

20160920_102838.jpg

இன்று அரசியலில் உள்ளவர்களின் உறவினர்கள் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களா? யாருடைய உறவினராவது யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்களா? அக்காலத்தில் அரசியல்வாதிகள், சுகபோக வாழ்க்கையை அனுபவித்தார்கள். இன்று யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த நீங்கள் இன்று மீண்டும் இழப்பினை சந்தித்துள்ளீர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

20160920_103240.jpg

20160920_103305.jpg

20160920_103310.jpg

20160920_103316.jpg

http://www.virakesari.lk/article/11559

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

அவருக்கு செய்திகள் படிப்பதற்கே நேரம் போதவில்லை

இப்படியே  போனால் உங்களுக்குத்தான்  தமிழரின் வாக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு எப்படி எழுகதமிழை முறியடிப்பது நிற்பாட்டுவது என்று யோசிக்கவே நேரமில்லாமலிருக்கேக்கை ..... எரிஞ்சாலென்ன  சாம்பலாகினாலென்ன...

  • கருத்துக்கள உறவுகள்

சனாதிபதியும் பிரதமரும் வரவில்லையாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20.9.2016 at 4:35 PM, நவீனன் said:

டக்ளஸ் தேவானந்தா, உங்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர். அவர் உங்களை இன்று வரை சந்திக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், தமக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி வழங்கப்படவில்லை என்று இனவாதம் பேசினார். இன்று பதவி கிடைத்தவுடன் அமைதியாக இருக்கின்றார். அவரும் இன்று வரை உங்களை வந்து சந்திக்கவில்லை.

தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கெல்லோ.....அதாலை அவையள் வராயினம்.....வந்து பார்க்கிறதாலை அவையளுக்கு ஒரு சொட்டு பிரயோசனமும் இல்லை....

அது சரி அவையள் வந்தும் என்னத்தை புடுங்கி எறியப்போயினம்.....ஆக மிஞ்சிப்போனால் போராட்டம் வெடிக்கும் எண்டுவினம்....பிரியும் எண்டுவினம்...பொறுமைக்கும் எல்லை உண்டு எண்டுவினம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்--------என்னது கிளிநொச்சி எரிஞ்சிரிச்சா?

16 minutes ago, குமாரசாமி said:

 

அது சரி அவையள் வந்தும் என்னத்தை புடுங்கி எறியப்போயினம்.....ஆக மிஞ்சிப்போனால் போராட்டம் வெடிக்கும் எண்டுவினம்....பிரியும் எண்டுவினம்...பொறுமைக்கும் எல்லை உண்டு எண்டுவினம்.:cool:

50 வருடமாய் 

  • கருத்துக்கள உறவுகள்

அது ஆனந்த சங்கரியின் தொகுதி அதனால் அவ்ர் வர்வில்லை

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கெல்லோ.....அதாலை அவையள் வராயினம்.....வந்து பார்க்கிறதாலை அவையளுக்கு ஒரு சொட்டு பிரயோசனமும் இல்லை....

அது சரி அவையள் வந்தும் என்னத்தை புடுங்கி எறியப்போயினம்.....ஆக மிஞ்சிப்போனால் போராட்டம் வெடிக்கும் எண்டுவினம்....பிரியும் எண்டுவினம்...பொறுமைக்கும் எல்லை உண்டு எண்டுவினம்.:cool:

எரியுற வீட்டில் புடுங்கி எடுக்கும் கூட்டம் என்று சொல்ல வாறியள் போல் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.