Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ் நிகழ்வை குழப்ப சில ஊடகங்கள் சதி செய்வதாக சுரேஷ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு

Featured Replies

எழுக தமிழ் நிகழ்வை குழப்ப சில ஊடகங்கள் சதி செய்வதாக சுரேஷ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு

 

 

எழுக தமிழ் நிகழ்வை குழப்ப சில ஊடகங்கள் சதி செய்வதாக சுரேஷ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு



எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்பவர்கள் எழுக தமிழ் என்ற செற்பதத்துடன் அவர்களது பதாதைகளுடன் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஏற்பாடுக் குழு சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்.

அது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது,

எதிர் வரும் சனிக்கிழமை 24 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு எழுக தமிழ் மக்கள் பேரணி நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்றளிலிருந்தும் யாழ் பல்கலைக்கழக முன்றளிலிருந்தும் ஆரம்பமாகி யாழ் முற்றவெளியை சென்றடைய இருக்கின்றது.

முற்றவெளியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்த்தில் முதலமைச்சரும்,தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும் உரையாற்றுவதுடன் முக்கியமான பிரகடணங்களும் மேற்கொள்ளப்படும்.

யாழ்ப்பாணம் கச்சேரி முன்றல்,,கல்வியங்காடு என்ற இடங்கள் மாற்றப்பட்டு நல்லூர் மற்றும் யாழ் பல்கலைகழக முன்றலில் இருந்து மாத்திரம் பேரணிகள் புறப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

வடமராட்சி,தென்மராட்சி,வலிகாமத்தின் பலபகுதிகள், தீவகத்திலிருந்தும் மக்கள் இலகுவாக இப்பேரணியில் பங்கு கொள்ளும் பொருட்டு பேரூந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இருந்த போதும் தமது சொந்த வாகனங்களில் வரக்கூடியவர்கள் அனைவரும் 9.00 மணிக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கும் இடங்களுக்கு வருமாறும் அன்புடன் வேண்டுகின்றோம்.

பேரணியை குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன. பேரணிக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் சட்டபூர்வமாக செய்யப்பட்டிருக்;கின்றன என்பதை மக்களுக்கு அறியத்தருவதுடன் யாழ் மாவட்டத்தின் அனைத்து வர்த்தக சங்கங்களும் தமது வியாபார நிலையங்களைப் பூட்டி எழுக தமிழ் பேரணியில் பங்கு கொள்வதாக அறிவித்துள்ளனர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

அத்துடன் யாழ் மாவட்டத்திலுள்ள தொழிற்சங்கங்களும்,சிவில் அமைப்புக்களும்,பொது அமைப்புக்களும்,பல்கலைக்கழக சமூகமும் மற்றும் கற்றல் கற்பித்தல் சமூகங்களும் பேரணியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் மேற்குறிப்பிட்ட அனைத்து அமைப்பினரும் எழுக தமிழ் என்ற செற்பதத்துடன் அவர்களது பதாதைகளுடன் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம். என குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136237/language/ta-IN/article.aspx

1 hour ago, நவீனன் said:

யாழ் மாவட்டத்தின் அனைத்து வர்த்தக சங்கங்களும் தமது வியாபார நிலையங்களைப் பூட்டி எழுக தமிழ் பேரணியில் பங்கு கொள்வதாக அறிவித்துள்ளனர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

 

1 hour ago, நவீனன் said:

அத்துடன் யாழ் மாவட்டத்திலுள்ள தொழிற்சங்கங்களும்,சிவில் அமைப்புக்களும்,பொது அமைப்புக்களும்,பல்கலைக்கழக சமூகமும் மற்றும் கற்றல் கற்பித்தல் சமூகங்களும் பேரணியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்

சனிக்கிழமை தெரியும் :grin:

  • தொடங்கியவர்
சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமிழர்களையும், தமிழர்களின் கலை கலாசாரப் பண்பாடுகளையும் காப்பாற்றுவதே ”எழுக தமிழ்” பேரணியின் நோக்கம்
சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமிழர்களையும், தமிழர்களின் கலை கலாசாரப் பண்பாடுகளையும் காப்பாற்றுவதே  ”எழுக தமிழ்”  பேரணியின் நோக்கம்

”எழுக தமிழ்” என்ற மாபெரும் பேரணியின் நோக்கம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமிழர்களையும், தமிழர்களின் கலை கலாசாரப் பண்பாடுகளையும் காப்பாற்றுவதே என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி த்துள்ளதாவது

 வடக்கு கிழக்கு பிரதேசங்களை யுத்தத்திற்கு பின்னர் மிக வேகமாக சிங்கள் பௌத்த மேலாதிக்கத்திற்குள் கொண்டுவரக் கூடிய போக்கினை நாம் காண்கின்றோம் .

மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் கூட புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் இராணுவத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைக்கப்படுவதனூடாக சிங்கள, பௌத்த கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மேல் திணிப்பதுவும் தமிழ் மக்களுடைய கலை பண்பாட்டு கலாச்சாரத்தை அழிப்பதை இந்த அரசாங்கமும் முன்னெடுத்து  வருகின்றது..            

தற்போது அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படுகிறது. இந்த அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகவுள்ளது. இந்த 'எழுக தமிழ்' பேரணியினூடாக சர்வதேசத்திற்கும் இலங்கை அரசிற்கும் அமையப்போகின்ற அரசியல் சாசனம் சமஷ்டியாக அமைய வேண்டுமென வலியுறுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.

எம்முடைய இந்தப் பேரணியானது அமையப் போகும் அரசியல் சாசனத்தை குழப்பி விடுமென்று பலரும் பல்வேறாக கருத்துக்க ளை வெளியிடுகின்றனர். இப்பேரணியின் நோக்கம் சிங்கள, பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமிழரையும் தமிழர் கலாசா ரத்தையும் காப்பாற்ற வேண்டு என்பதே எமது நோக்கமாகும்.

மேலும், யுத்தத்திற்கு பிற்பாடு தமிழரின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இராணுவம் பிடித்து வைப்பதிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காக நீதியை வேண்டியும் இவ்வாறான பல காரணங்களுக்காகவும் இப்பேரணி நடாத்தப்படுகின்றது.

இப்பேரணியானது தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தே நடாத்தப்படுகின்றது. இப்பேரணியில் பல கோரிக்கை களை முன்வைத்துள்ளோம். அதாவது, வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் தமிழர்களின் சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் அதனடிப்படையில் சமஷ்டி உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களும் தமிழர்களுடைய வளங்களும் பொருளாதாரமும் திட்டமிடப்பட்ட முறையில் அழிக்கப்பட்டு வருகின்றன. சிங்கள மக்கள் மீன்பிடி வலைகளை அழிக்கின்றனர், கரை வலைப்பாடுகளை ஆக்கிரமிக்கின்றனர், சிங்கள மக்களுக்காக தமிழர்களின் பூர்வீக காணிகள் பிடுங்கப்படுகின்றன. சர்வதேசத்திற்கு இதனை வெளிப்படுத்தும் முகமாக இப் பேரணி அமையும்.

இப்பேரணி தெற்கில் கூட எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் யாழ் வந்த பிரதமர் கூட இப் பேரணி பற்றி ஆவலாக விசாரித்துள்ளார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும்   குறிப்பிட்டுள்ளார்.  

http://onlineuthayan.com/news/17981

  • கருத்துக்கள உறவுகள்

 

14448891_10209119951469694_3740236129873278699_n.jpg?oh=a42639f139d4c032913107df106dcbd0&oe=58834056

மக்கள் போராட்டங்கள் காலத்தின் தேவை!
முடிவில் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதில் அரசியலை கலக்காமல் இருக்க வேண்டும்.
பேரணி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

எழுக தமிழ் பேரணிக்குத் தூர இடங்களிலிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள்

யாழ். குடாநாட்டில் நாளை நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தென்மராட்சி மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசங்களிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சிப் பிரதேசத்தில் நாவற்குழி, கைதடி, நுணாவில், கனகம்புளியடி, சாவகச்சேரி, மீசாலை, கொடிகாமம், புத்தூர்ச் சந்தி ஆகிய இடங்களிலிருந்து பேரணி ஆரம்பமாகவிருக்கும் நல்லூர் ஆலயம் வரை பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் பளை, புலோப்பளை, அரசர் கேணி, கச்சார் வெளி, செல்வபுரம், கிளாலி, மாசார், சோரன்பற்று, இயக்கச்சி ஆகிய இடங்களிலிருந்து பேரணி ஆரம்பமாகவிருக்கும் நல்லூர் ஆலயம் வரை பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

தென்மராட்சி பேருந்து ஒழுங்குகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு 077714820, 07778733425 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும், பச்சிலைப்பள்ளிப் பேருந்து ஒழுங்குகள் குறித்து அறிந்து கொள்வதற்கு 0778721432 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளுமாறு பேரணி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.tamilwin.com/transport/01/118616?ref=morenews

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம்-சித்தார்த்தன் எம்.பி. அழைப்பு..!!

 

Image result for சித்தார்த்தன் எம்.பி.

உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் எழுக தமிழ் பேரணி தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளை 24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள். இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு எமது உரிமைகளை நிலை நாட்டுவதற்கு குரல் கொடுக்க வேண்டும்.

சர்வதேச சமூகமாக இருந்தால் என்ன, வளர்ச்சியடைந்த நாடுகளாக இருந்தால் என்ன அவை அனைத்தும் தனது நலன்களை முதன்மைப்படுத்தி நாடுகளுக்கிடையிலான உறவுகளையே பேணும்.

அந்த வகையில் அவை அரசாங்கத்துடன் மட்டுமே இணைந்து செயற்படும். பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்போது மட்டுமே அவை அவற்றின் மீதும் கரிசனை செலுத்தும்.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் அளித்த வலிமைமிக்க ஆணை தான் முதன் முதலில் சர்வதேச சமூகம் எம்மீது கவனத்தைச் செலுத்துவதற்கு வழிவகுத்தது. அப்போது ஆட்சி அமைத்த ஜே.ஆர். மேற்குலக நாடுகளின் துணையுடன் எம்மீது திட்டமிட்ட அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது வேறுவிடயம்.

2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஷ எம்மை அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து அடிமையாக வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலை வகுத்து நடைமுறைப்படுத்தி வந்தார்.

சர்வதேசத்தின் காய்நகர்த்தல்கள் அந்த திசையிலேயே செல்கின்றன. உலகில் சமாதானத்தை தோற்றுவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐ.நா. சபையும் வல்லரசுகளின் பிடியில் சிக்கி அவர்களின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் நிலையில் உள்ளது. இத்தகைய நெருக்கடிகளுக்கிடையிலேயே நாம் எமக்கான உரிமைகளைப் பெறவேண்டியுள்ளது. எனவே நாம் வீதியில் இறங்கி குரல்கொடுத்தால் மட்டுமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

இறுதியாக நடைபெற்ற யுத்தத்தின் பேரால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களுக்கு நீதி வேண்டியும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கும் எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருக்கும் எமது காணிகளை மீட்பதற்கும் தமிழ் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலைத் தடுத்து நிறுத்துவதற்கும்

இதுவரை காலமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் படையினராலும் பாதுகாப்புத் தரப்பினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் கடத்திச் செல்லப்பட்டும், கைது செய்யப்பட்டும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் மற்றும் இறுதியாக நடைபெற்ற யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிய வலியுறுத்தியும் என்ன காரணத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதே தெரியாமல் அரசியல் காரணங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரியும், மறுக்கப்பட்ட மீனவ சமுதாயத்தின் உரிமையை மீளப்பெறுவதை வலியுறுத்தியும் தமிழரின் வாழ்விடங்களில் காணி அபகரிப்பின் சின்னமாக புத்தர் சிலைகளை நிறுவுவதைக் கைவிடுமாறு கோரியும்

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டு குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களதும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அமைப்பினர், தர்மத்தை நிலைநாட்ட விரும்புவோர், உண்மையான ஜனநாயகத்தை விரும்புவோர், தமிழ் தேசிய இனத்தின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பும் அனைத்து முற்போக்கு சக்திகள் ஆகியோரதும் கடமையாகும்.

தமிழ்பேசும் மக்களின் பொது அமைப்புகள் வடக்குகிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், கல்விச் சமூகத்தினர், இளைஞர் மன்றங்கள், பெண்கள் அமைப்புகள், அரச மற்றும் அரச சார்பற்ற ஊழியர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக இவை எதிலும் பங்குபற்றாத பொதுமக்கள் அனைவரும் இதில் பங்குகொண்டு எமது உரிமைக்கு குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

வடக்குகிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று விரும்புகின்ற அனைவரும் இப்பேரணியில் கலந்துகொள்ளவேண்டும். மொத்தத்தில் நமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களினதும் வழிபாட்டுத் தலங்களிலும் நடைபெறுகின்ற திருவிழாக்கள் அனைத்தும் ஒரே நாளில் ஒரே இடத்தில் நடைபெற்றால் எப்படியிருக்குமோ அந்தளவிற்கு மக்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும்.

யாரோ வந்து எம்மை அழைத்துச் செல்வார்கள் என்று காத்திராமல், குடும்பத்துடன் அணி அணியாக கலந்துகொள்ள வேண்டும். இதுவே நாம் இப்பொழுது செய்யக்கூடிய அதிகபட்ச பணி. எமது வருங்கால சந்ததி தலைநிமிர்ந்து வாழ எம்மால் முடிந்ததைச் செய்வோம் வாருங்கள். இதுவரை காலமும் யாராவது எம்மை விடுவிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். இப்பொழுது அவை அனைத்தும் கைநழுவிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எமக்காக நாமே குரல் கொடுக்கும் ஒரு சூழல் எம்மால் உருவாகியுள்ளது. இதனைச் சிக்கனப் பிடித்து எமது வரலாற்றுக் கடமையைச் செய்து முடிப்போம்.

நாம் சுயகட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதை இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக்காட்டும் வகையில் எத்தகைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுத்துவிடாமல், எமது பண்பாட்டு விழுமியங்களுக்கு மதிப்பளித்து எமது கொள்கையில் உறுதியுடன் எமது கோரிக்கையின் நியாயத்தை வெளிப்படுத்தி பேரணியில் கலந்துகொள்வோம்.

இந்தப் பேரணி எமக்காக நாம் உணர்வுடன் நடத்தும் பேரணி. அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எமது ஒழுக்கத்தை நிரூபிப்போம். உணர்வோடு வாருங்கள்! ஒழுக்கமாக நடந்துகொள்ளுங்கள்!! வெற்றிபெறுவோம் என்று நம்பிக்கை வையுங்கள். எதிர்காலம் நமதென்று உறுதிகொள்ளுங்கள்.

(நன்றி : தினக்குரல் – 23.09.2016)

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2016 at 11:28 AM, ஜீவன் சிவா said:

 

சனிக்கிழமை தெரியும் :grin:

தெரிஞ்சாகணும் !
கள்ள வாக்கை வைத்து 
காண நாளைக்கு ஜனநாயக அப்பம் சுட முடியாது !

சனிக்கிழமை என்றாலும் ............. தெளியட்டும் !

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

தெரிஞ்சாகணும் !
கள்ள வாக்கை வைத்து 
காண நாளைக்கு ஜனநாயக அப்பம் சுட முடியாது !

சனிக்கிழமை என்றாலும் ............. தெளியட்டும் !

இப்ப தெரிஞ்சிருக்கும்..

தேர்தலில்  வாக்கு  செலுத்துவதற்கும்

இலட்சியப்பயணத்துக்குமான விடை.....

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.