Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவச் சப்பாத்துக்கள் தீர்மானிக்கப்போகும் ஓயாத அலைகள் ஐந்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்பால் இராணுவத்தை பற்றி ஒரு ஆய்வுகட்டுரை எழுதினால் அவர் அறிந்தது தெரிந்தது இராணுவநன்பர்கள் முல புரிந்தது அதை விட த்னது இராணுவத்தின் மீது உள்ள நம்மிக்கையில் எழுதுகிறான் அதைல் பாதி உண்மையும் இருக்கும் பாதி போயும் இருக்கும் ஏன் சில நடைமுறை சாத்தியபாடத் விடையங்களும் இருக்கு அதுக்கு எதிர் விமர்சனம் வைப்பவன் அவனை விட தெரிந்தவனாக இருக்கனும்

இல்லை என்றால் இப்போது உங்களை போல நல்ல நக்கல் ஆய்வுகள் தான் எழுத முடியும்.

  • Replies 61
  • Views 6.7k
  • Created
  • Last Reply

நல்லவனின் கட்டுரையை படிச்ச உடனை ஆனந்தக்கண்ணீர் அது பாட்டுக்கு வர ஆரம்பிச்சிட்டுது... அருமை... உதை படிச்சு முடிச்சதும்( நான் திருந்தீட்டன்..) தமிழ் நாதத்திலை இன்னும் ஒரு இராணுவ ஆய்வை யாரோ "ஜெயராஜாம்".. எனக்கு ஆர் எண்டே தெரிய இல்லை... உந்தாள் ஏதோ ஈழநாதமாம் அந்த பேப்பருக்காக எழுதி இருக்கிறார். உந்த பேப்பர் மட்டும் வன்னியில இருந்து வந்து இருக்கவேணும் புலிகள் பேப்பர் காறனுக்கு சாத்துத்தான் குடுத்து இருப்பினம்... நல்லவேளை இங்கை புலம்பெயர்ந்து இருகிறதால தப்பிச்சார் போலகிடக்கு...

அது சரி ஈழநாதம் எந்த நாட்டிலையப்பா இலவசமாய் வாறது எண்டு யாராவது சொல்லுவீங்களோ..??

நான் படிச்சதை நீங்களும் படிக்க வேண்டாமே...

http://www.tamilnaatham.com/articles/2007/...jeyaraj/25.html

http://www.tamilnaatham.com/articles/2007/...jeyaraj/25.html

இதை வல்லவர்கள் நல்லவர்களான குறுக்ஸ், நல்லவன் அண்ணாமார்களின் கண்களிலை காட்டிப்போடாதேங்கோ... உநத் நாசமறுவான் ஜெயராசுக்கு நேரிலை போய் சாத்திப்போடுவினம்... !

நல்லவன் எழுதியது தெளிவாக டிபிஎஸ் ஜெயராஜ் எண்டு. இங்கை ஒரு முத்தின மனநோயாளி அதை ஈழவன் எழுதின ஈழநாதத்திற்கு எழுதும் ஜெயராஜ் ஓடு குழப்பி புலம்புது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆய்வு செய்வதற்கு ஆயிரம் விடயம் இருக்க ஒரு அற்ப சப்பாத்தை பற்றி எழுதியிருக்கிறீர்களே.. இதை என்னண்டு சொல்ல..

ஆய்வு எழுதுவதற்கு பெரிய அறிவு இருக்கவேண்டும் என்றுதான் இவ்வளவு நாளும் நினைத்தேன்.. ஒரு பேனையும் பேப்பரும் இருந்தால் காணும் எண்டு இப்பதான் அறிகிறேன்..

நான் எழுதியது ஈழநாதத்திற்கு எழுதும் ஜெயராஜ் பற்றியே டிபிஎஸ் ஜெயராஜ் பற்றி அல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலா,

நீங்கள் இணைச்ச இணைப்பிலயிருக்கிற கட்டுரையில சொல்லப்பட்டதுக்கு எதிராக இருக்கும் என்னுடைய கருத்து என்னவென்று சுட்ட முடியுமா?

ஒன்றில் நானெழுதியது உங்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை, அல்லது குறிப்பிட்ட இணைப்பிலிருக்கும் கட்டுரையில் எழுதப்பட்டதை வாசிக்கத் தெரியவில்லை.

வாகரை விடுபட்டதையும் அதுபோல் இன்னும் நடக்கக்கூடும் என்பதையும் மேலே எழுதியிருக்கிறேன்.

ஆட்பலத் தக்க வைப்புக்காக வாகரை கைவிடப்பட வேண்டியதையும், இன்னும் அதுபோல் நடக்ககூடுமென்பதையும் நான் சொல்லியிருக்கிறேன், ஜெயராச்சும் அதைத்தான் எழுதியிருக்கிறார்.

ஈழநாதம் ஜெயராச்சுக்கு 120 மி.மீ மோட்டார் எண்டா என்ன, 122 மி.மீ ஆட்லறி எண்டா என்ன, அதுகள் என்னென்ன செய்யும், கிபிர் என்ன செய்யும், சாம் ஏவுகணை என்ன செய்யும் எண்டு தெரிஞ்சிருக்கும்.

அது வன்னியில இருக்கும், பிற்காலத்தில் இருந்த பொதுமகனொருவனுக்கே தெரியும்.

'ஈழநாதம்' ஜெயராச்சின் குறிப்பிட்ட கட்டுரையோடு எனக்கு எந்தப்பிரச்சினையுமில்லை.

நானெழுதிய, என்னால் சொல்லப்பட்ட கருத்துக்களோடு சம்பந்தப்பட்டு கதையுங்கள்.

ஆய்வு எழுதுவதற்கு பெரிய அறிவு இருக்கவேண்டும் என்றுதான் இவ்வளவு நாளும் நினைத்தேன்.. ஒரு பேனையும் பேப்பரும் இருந்தால் காணும் எண்டு இப்பதான் அறிகிறேன்..

கிஷ்ணா,

அதைத்தான் நானும் சொல்கிறேன்.

என்னுடைய கட்டுரையோடுதான் அந்த விசயம் உங்களுக்குத் தெரிஞ்சதெண்டா அதுதான் நானெழுதின கட்டுரையின்ர வெற்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்யா,

ஏற்கனவே அவ்வப்பொது பிழைகள் பற்றிக் கதைத்ததுதான்.

எங்கள் ஆய்வாளர்களின் கட்டுரைகள் பற்றிய பொதுவான ரெம்பிளேட் எப்பிடி எண்டு பாத்தா நானெழுதின மாதிரித்தான்.

பிரபலமான கவிஞர்களுக்கு ஒரு அழுத்தம் இருக்கிறது. விரும்பியோ விரும்பாமாலோ சில விசயங்களுக்கு அவர்கள் கவிதை எழுதியாக வேண்டும்.

எங்கட புதுவையண்ணைக்கு அப்பிடியொரு பிரச்சினை இருக்கு.

சுனாமி வந்தா கவிதை கொட்டுதோ இல்லையோ அவரொரு கவிதை எழுதியே ஆகவேணும்.

பெரிய படுகொலை நடந்தா எழுதியாகவேணும்.

பெரிய வெற்றி நடந்தா எழுதியே ஆகவேண்டும்.

செஞ்சோலைப் படுகொலை நடந்தபோது நடந்தது இது.

என் நண்பர் ஒருவர் அடுத்தநாள் கேட்டார், "புதுவை அண்ணை செஞ்சோலைக்கு இன்னும் கவிதை எழுதேலயோ?" எண்டு.

ஆனால் இது மக்களின், இரசிகர்களின், வாசகர்களின் எதிர்பார்ப்பு.

அதுபோல்தான் எங்கள் ஆய்வாளர்களும் நிர்ப்பந்தம் இருக்கிறது. இது இரசிகர்களால், மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது என்று சொல்வதைவிட ஆய்வாளர்களே தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட நிர்ப்பந்தம்.

கிழமைக்கொரு கட்டுரை எழுதவேணும், எங்கயாவது ஒரு சண்டை நடந்தா அதை மையமாகவைத்து - சண்டையின் தார்ப்பரியத்தைப்பொறுத்து நாலோ ஐந்தோ கட்டுரைகள் எழுதவேணும் எண்ட நிலையில இருக்கினம் போல கிடக்கு.

மக்களின் குழப்பத்தைத் தீர்க்கும் பணியைத் தங்கள் தலைமேல் தாங்களே தூக்கிப்போட்டுக்கொண்டு அல்லது அப்படியாக தாமே சொல்லிக்கொண்டு எழுதுகிறார்கள்.

ஆனால் மக்களைக் குழப்பியது யார் என்ற கேள்வி பற்றி யோசிப்பதில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாரதர்,

நான் முன்பு குறிப்பிட்டது நீங்களும் குறுக்கால போவானும் ஒத்துக்கொண்டதென்பது நான் சொன்னதையே.

அரூஸ் எழுதினது சரியென்று நீங்கள் சொன்னதாகவோ அந்த இடத்தில் என்னோடு கருத்துவேறுபாடு வந்ததென்றோ சொல்லவில்லை.

இப்போதுதான் ஞாபகம் வந்தது, அக்கட்டுரை, மேலே ஈழவன் சொன்ன அரூஸின் கட்டுரை.

'ஈழநாதம்' ஜெயராச்சின் குறிப்பிட்ட கட்டுரையோடு எனக்கு எந்தப்பிரச்சினையுமில்லை.

நானெழுதிய, என்னால் சொல்லப்பட்ட கருத்துக்களோடு சம்பந்தப்பட்டு கதையுங்கள்.

நான் அதை குறிப்பிடவில்லை அதில் வரும் இந்த வசனத்தை வைத்து இன்னும் ஆய்வு கட்டுரை வரும் பாருங்கள்

சிறிலங்கா அரச தரப்பிற்கு ஆதரவான இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் உட்பட பல விமர்சகர்கள் விடுதலைப் புலிகள் தந்திரோபாயமாகப் பின் வாங்கிக்கொண்டனர் என்றே இதனைக் குறிப்பிடுகின்றனர். அதாவது இராணுவம் விடுதலைப் புலிகளை முறியடித்தோ தோற்கடித்தோ வாகரைப் பிரதேசத்தைக் கைப்பற்றவில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

தங்கள் மேதாவித கற்பனை குதிரைகளை தட்ட விட்டிருபீனம் நம் அய்வாளர் மார்

நல்லவன் எழுதியது தெளிவாக டிபிஎஸ் ஜெயராஜ் எண்டு. இங்கை ஒரு முத்தின மனநோயாளி அதை ஈழவன் எழுதின ஈழநாதத்திற்கு எழுதும் ஜெயராஜ் ஓடு குழப்பி புலம்புது.

மற்றவனை திட்டும் நீங்கள் பிறந்த பிறவிப்பயன் போல... ஏதோ சீத்தலை சாத்தனார் ரேஞ்சில புலம்புறியள்...

பன்னாடை இண்டைக்கு திட்டாதவரைக்கும் சந்தோசம்... அது சரி ஈழநாதம் ஜெயராசும். வன்னியில் இருந்து புலிகள் பாயப்போறார்கள் எண்ட மாதிரித்தானே எழுதி இருக்கிறார்... அப்ப விட்ட பிரதேசங்களை மீட்கலாம் எண்டுறாப்போல இருந்துதே... அப்ப புட்பக விமானம் எல்லாம் வாடகைக்கு எடுக்க வேண்டி வராது...

ஆ... சொல்ல மறந்திட்டன்... ஏதோ நிதர்சனமாம்... கலை பண்பாட்டு பிரிவில இருக்கிறவை தயாரிச்ச "ஈரத்தீ" எண்டு ஒருபடம் இண்டைக்கு பாத்தனான்... ஒரே அலம்பல்... எப்பிடி ஆனையிறவு தளத்திலை ஆட்லறியை தாக்கி அளிச்சனாங்கள் எண்டு அனியாயத்துக்கு வெளிக்கொண்டு வருகினம்... அதுகுள்ளை வேவுக்கு போற சீன் வேற... எப்பிடி இராணுவ முக்காமுக்கை ஊடுருவீனம் எண்ட சீன் வேற... நல்ல வேளை நீங்கள் உந்த படத்தை பாக்க இல்லை...

ஒருவேளை உந்தபடத்தாலை இராணுவ இரகசிங்கள், புலநாய்வு தகவல்கள் , வைத்திருக்கும் ஆயுத விபரம், பயிற்ச்சி முறை, எல்லாம் வெளியில போனால் என்ன செய்யுறது எண்ட கவலை உங்களுக்கு வந்து படுத்த படுக்கையாகி இருப்பியள்... ஏற்கவே வயசு போன நேரத்தில பாலா அண்ணா செய்யாமல் விட்டுபோனதை செய்ய வெளிக்கிட்டு இருக்கிறீயள்.. எதுக்கும் பிறசர் ஏறாமல் உடம்பை பாத்துக் கொள்ளுங்கோ...

தலா,

நீங்கள் இணைச்ச இணைப்பிலயிருக்கிற கட்டுரையில சொல்லப்பட்டதுக்கு எதிராக இருக்கும் என்னுடைய கருத்து என்னவென்று சுட்ட முடியுமா?

ஒன்றில் நானெழுதியது உங்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை, அல்லது குறிப்பிட்ட இணைப்பிலிருக்கும் கட்டுரையில் எழுதப்பட்டதை வாசிக்கத் தெரியவில்லை.

வாகரை போல இன்னும் விடுபடும் எண்டு சொன்னதை தவிர ஜெயராஜ் போல எந்த ஆக்க பூர்வமான விடயங்களையும் நீர் ஆராய்ந்து இருக்க வில்லை...

மிக குறைபாடு என்ன எண்றால் புலிகள் சம்பந்தமான மாயை சொல்ல பட வேண்டாம் ஆனால் நிகள்கால நிலமைகள் எல்லாருக்கும் தெளிவாக்க பட வேணும்... சிங்களவன் பலருக்கு தெரிந்த உண்மைகள் எங்களவர் எவருக்கும் தெரிந்தே இல்லை.. எங்களால் சிங்களவனை வெல்லவே முடியாது என்பதை சொல்லும் தமிழர்கள் தொகை அதிகம்... எங்களின் வளங்கள் என்ன நோக்கம் என்ன.. எதுவரை எங்களால் தாக்கு பிடிக்க முடியும் என்னும் தெளிவான சிந்தனைகளை தோற்று விக்காவரைக்கும் தமிழர்களை கொன்டு உங்கள் எவராலும் ஒரு துரும்பைக்கூட அசைக்க வைக்க முடியாது...

சிங்களவன் தமிழன் பலவீனமானவன் எண்று சொல்லி சொல்லியே சிங்களவனை உசுப்பேத்தி விட்டு தமிழர்களை அடிமை படுத்துறான்.. எழுந்து நிக்க தெம்பைகூட விடுவதில்லை. சிங்களவனால் என்ன வேணும் எண்டாலும் செய்ய முடியும் எண்று நம்புபவந்தான் விடுதலை பாதையை விட்டு விலகி தன்னை மட்டும் காப்பாத்தும் நிலைக்கு போய்க்கொன்டு இருக்கிறான்... போராட்டம் என்பது அவனால் வெல்லப்பட கூடியதாய் இல்லை.. அது போலதான் பலரும் ஒரு கேள்விக்குறியோடு வாழ்கிறார்கள்..

கிணத்துக்கை இருக்கும் தவழையை போல இருக்கும் சனத்தை வெளியிலை கொண்டு வர என்ன செய்ய போகிறீர்கள்... போராட்டத்தின் மீது நம்பிக்கையை கொண்டுவர என்ன செய்ய போகிறீர்கள்... மக்கள் தாங்களாக முன்வந்து உதவிகளை வளங்க என்ன செய்ய போகிறீர்கள்...? அதுக்காக ஆயுத விபரங்களை வெளியிட தேவை இல்லை..

சும்மா எங்களுக்க அடிபடாமா, இப்ப எல்லாரும் ஒரே நோக்கதுக்காக என்ன சொல்லி இருக்குறீங்க என்பதை இப்படித் தொகுப்பமா?

1)புலத்தில களைத்தைப்போலவே மக்களுக்கு நடக்கும் சம்பவங்களை விளக்க வேண்டியம் அவசியம் இருக்கு.

2) இல்லாட்டி புலத்தவர் மத்தியில் ,எதிரியினதும் அவனது கைக்கூலிகளினதும் (எங்கட சமாதனம் அன்ணரைபோல) உங்களால போராட ஏலாது வெல்ல ஏலாது நீங்க தோக்குறியள் என்னும் பிரச்சாரத்திற்கு பதிலில்லாமல் போகும்.

3) நடக்கும் சம்பவங்களைப்பற்றி எழுதுவோர் கூடிய சிரந்தை எடுத்து உண்மைத் தகவல்களின் அடிப்படையில் எழுதுவதே இந்தனம்பிக்கைக் கட்டி எழுப்ப தொடர்ந்து பேண உதவும்.

4)வெறுமனே இராணுவ ரீதியான ஆய்வுகள் மட்டும் இன்றி அரசியல் ரீதியாக, புலத்தவர நோக்கி அவர்கள் பணி என்ன என்பதையும் சேர்த்துச் சொல்ல வேணும்.

5)வரலாற்றில் என்ன நடந்தது என்பதையும் சொல்லி இனி என்ன நடக்கலாம் அதுக்கு எங்கட பங்களிப்பு என்னவா இருக்க வேனும் எண்டதையும் சொல்ல வேனும்.

6) அதோட எதிரியின் ஒவ்வொரு பிரச்சாரத்தையும் முறையடிக்கும் வண்ணம் எல்லா இடத்திலையும் எழுத வேணும்.

புல ஊடகங்களில் எழுதுவோர் இவை பற்றிக் கரிசனை எடுக்கும் படி வேண்டிக் கொள்கிறோம்.உங்கள் ஆய்வுகள் கற்பனை என்று தெரிந்தால் அவற்றின் நம்பகத் தன்மை இல்லாது போய் விடும் ஆகவே உண்மையை எழுதுங்கள்.தேவையில்லாத கற்பனைகள் வேண்டாம்.ஏனெனில் உண்மையாகவே புலிகளின் பலம் என்ன என்பது இன்னும் எவராலுமே அறியப்படவில்லை.

தாயகத்தில் உள்ளவர்கள் யுத்த நெருக்கடிகள் அழுத்தங்கள் அவலங்களில் தினம் தினம் வாழ்பவர்கள். எதிரியின் உளவியல் அழுத்தங்கள் மத்தியில் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்களின் சிதறிய உயிரற்ற உடல்களை பார்க்கும் பொழுது அவர்களிற்கு பல எண்ணங்கள் தோன்றும். உயிர்போகும் சூழ்நிலையில் ஆயுதம் ஏந்திப் போராடுவதா இல்லை எதிரியிடம் சரண அடைவமா அகதியாக இந்தியா ஓடுவமா கொழும்பு ஓடுவமா வெளிநாடு ஓரடுவமா என்ற எண்ணங்கள் வரும்.

இவர்களிற்கு புலிகளின் பலம் பற்றி ஊக்குவிப்புகள் தேவை, புலிகள் பின்வாங்கினால் அது பற்றிய ஒரு பாதகம் அற்ற மாறாக ஒரு சாதகமான கண்ணோட்டம் தேவை போர்க் களத்திற்கு தயார்படுத்த. ஏன் என்றால் அவர்கள் அவலத்தை நேரே அனுபவிக்கிறார்கள். அந்த உளவியல் அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் உயிரை காத்துக் கொள்ள எங்காவது தப்பி ஓடுவமா ஒதுங்கி தன்னை தானே பாதுகாப்பமா இல்லை உயிரைக் கொடுத்து போராட தயார் ஆவமா என்று பார்க்கும் பொழுது தெரிவு கடினமாக இருக்காது. அதுவும் ஒரு பலவீனமான மிகுந்த நெருக்கடிகளை எதிர் கொள்ளும் தரப்பாக காணப்படுபவர்களோடு இணைவமா விடுவமா என்பது ஒரு சிக்கலான கேள்வியாகவே இருக்காது. தினம் தினம் காலை மாலை என்று வேறுபாடின்றி யுத்த அவலத்தில் எதிரியின் திட்டமிட்ட பல்வேறு பட்ட நெருக்கடியில் வாழ்பவர்களிற்கு புலிகளின் பலம் பற்றிய நம்பிக்கையூட்டல்கள் நினைவூடல்கள் தேவை. ஏன் என்றால் அவர்கள் மனதளவில் உடைந்து ஒடிந்து போகக் கூடிய ஒரு பொறியில் சிக்கி இருக்கிறார்கள். இவர்களிற்கு போராட்டம் என்பதும் போராளியாவது என்பதும் முழு நேர விடையம்.

புலம்பெயர்ந்தவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கை நடத்தும் சூழலில் அனைத்து அடிப்படை வசதிகளையும் அதை விட மேலதிகமாகவும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்களிற்கு போராட்டம் என்பது முழு நேர விடையம் இல்லை. இவர்களின் சொந்த வாழ்க்கையில் எஞ்சியுள்ள நேரம் மிஞ்சியுள்ள பொருளாதாரம் தான் போராட்டம் நோக்கி போகிறது. தாயகத்தில் உள்ளவர்கள் போல் எதிரியின் அழுத்தத்தை தினம் தினம் அனுபவிப்பவர்கள் அல்ல தமது பங்களிப்பின் ஆழத்தை அளவை நேரடி அனுபவத்தின் அடிப்படையில் தேவை அறிந்து மாற்ற. தாயகத்தில் நடக்கும் அவலங்கள் தட்டுப்பாடுகள் பலவீனங்களை சொன்னால் காட்டினால் எழுதினால் விளக்கினால் தான் தெரியவரும் தெரிய வந்தால் தான் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வைக்கும். இவர்களால் அவற்றை அனுபவத்தில் அறிய முடியாது. அத்தோடு இவரகள் உளவியல்ரீதியில் உடைந்து ஒடிந்து போகும் சூழலில் வாழவில்லை ஊக்குவிப்புகள் கொடுத்துக் கொண்டிருக்க.

சாதாரண சொகுசு வாழ்க்கை வாழும் புலம்பெயர்ந்தவர்களிற்கு தாயகத்தில் நெருக்கடியில் உள்ளவர்களிற்கு கொடுக்கப்படும் ஊக்குவிப்புகளை வெட்டி ஒட்டினால் தமது பங்களிப்பை அதிகரிக்குமாறு தூண்டுமா? மாறாக அங்கு தேவைகள் எல்லாம் பூர்த்திய செய்யப்பட்டுவிட்டது வெற்றி செய்தியை அனுபவிப்பது தான் பாக்கி என்ற நிலைப்பாட்டைத்தான் கொடுக்கும். "ஏன் அடிக்க வில்லை" "இன்னும் ஏன் தாமதம்" என்பதை விட வேறு என்ன இவ்வாறான சூழ்நிலையில் இருப்பவர்களிடம் இருந்தும் வரும்? மிஞ்சியுள்ள நேரதையும் எஞ்சி உள்ள பொருளாதாரத்தை போராட்டத்திற்கு கொடுப்பமா இல்லையா என்று வரும் பொழுது தேவை இருக்கிறது என்ற நிர்ப்பந்தத்தை உணராத விடையத்திற்கு யாரும் ஒதுக்குவார்களா?

நாம் தாயகத்தில் இருந்து எந்தளவிற்கு தூர இருக்கிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்- அண்மைக்கால நிகழ்வுகளின் அவதானிப்பு: ஏதாவது ஒரு தனிச் சம்பவத்தில் தாயகத்தில்

30...50 பேர் என்று ஒரு நாளில் கொல்லப்பட்டால் தான் கவனயீர்ப்பு போராட்டம் செய்யும் அளவிற்கு எமது நேரத்தை ஒதுக்குவோம் ம்மை நாமே ஒழுங்கு படுத்துவோம். அதைவிட குறைந்தது எதுவும் எமது உணர்வுகளை தூண்டி நேரத்தை ஒதுக்கி ஒரு நிகழ்வை கவனயீர்பை ஏற்படு செய்ய முடியாத அளவிற்கு தாயகத்தில் அவலத்திலிருந்து நாம் தூரத்தில் இருக்கிறோம்.

15..20பேர் ஏன்றால் மின்னஞ்சலில் படங்கள் மகஜர்களை அனுப்புவோம். அதைவிட குறைந்த உயிர்பலிகள் எமக்கு சொகுசாக கதிரையில் இருந்து மின்னஞ்சல் செய்யும் அளவிற்கு கூட அருகதையற்றது என்று நினைக்கும் அளவிற்கு தாயகத்திலிருந்து தூரத்தில் இருக்கிறோம்.

5...10 பேர் கொல்லப்பட்டால் தான் எமது புலம்பெயர்ந்த ஊடகங்களிலேயே 2..3 நாட்கள் தொடர்ந்து செய்தியாக இருக்கும் தகுதியைப் பெறுமளவிற்கு எம்மவர்களில் உயிர்பலி எமக்கே மலிவாகத் தெரிகிறது.

ஏற்கனவே இந்தளவு தூரத்தில் மனதளவில் உணர்வளவில் இருப்பவர்களிற்கு அங்கு அவலங்களை நிஜ வாழ்வில் சந்திப்பவர்களிற்கு கொடுக்கப்படும் ஊக்குவிப்பு கண்ணோட்டங்களும் விளக்கங்களும் எப்படியான பலனைத் தரும்?

புலத்தில் உள்ளவர்கள் மத்தியில் எதிரிகளும் துரோகிகளும் நீங்கள பலவீனமாக இருக்கிறீர்கள் உங்களால் வெல்ல முடியாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால் அதற்கு பதில் நாங்கள் பலமாக இருக்கிறம் வெல்லுவம் பிழந்து கட்டுவம் அல்ல. நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்தது பலமாக வர முடியும் வெழுத்து வாங்க முடியும் என்று பிரச்சாரம் செய்ய அல்ல. எதிரிகளும் துரோகிகளும் எம்முன் வைப்பது அடிப்படையில் ஒரு தந்திரமான அரசியல் பிரச்சாரம். நாம் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதால் போராட்டத்தைக் தொடங்கினோம் போராட்டம் ஆயுதப்போராட்டமானது அகிம்சை வழிகள் பயன் தரவில்லை என்பதால். இன்று உள்ளக சுயாட்சி முறைக்கும் அதிகாரப் பரவலாக்கத்திற்கும் அடக்குபவர்கள் தயார் இல்லை என்று நிரூபிக்கிறார்கள். வெளியக சுயாட்சிய அதாவது முழுச் சுதந்திரத்தை விட வேறு வழியில்லை என்பது தான் பதில். தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பது எம்மீது எதிரி தனது நடத்தையால் (ஆக்கிரமிப்பு அடக்கு முறைகளால் ஏமாற்றப்பட்ட தோற்கடிக்கப்பட்ட சமாதான முயற்சிகளால்) திணித்திருக்கிறான் என்பது தான் எமது வாதமாக இருக்க வேண்டுமே அன்றி நாம் பலமாக இருக்கிறம் ஆனபடியால் ஈழத்தை எடுக்கலாம் போல கிடக்கு எடுத்தா என்ன என்ற விளக்கம் அல்ல. ஏதோ மலிவாக தக்காளி விலைப்படுது வேண்டி வத்தல் போட்ட என்ன என்றமாதிரி போயிடும்.

நாம் பிரச்சாரங்களிற்கு பதில் பிரச்சாரம் பலத்தின் அடிப்படையில் இராணுரீதியில் கொடுத்தால் அது பயங்கரவாதப் பிரச்சனையாகப் பிரச்சாரப்படுத்த நல்ல வசதியாக இருக்கும். அதற்கு பதிலாக எமக்கு கிடைக்கப் போவது அங்கீகாரம் அல்ல மாறாக அவர்களிற்கு எம்மைப் பலவீனப்படுத்தப்படுவதற்கான எதிரியோடு இணைந்த நகர்வுகளிற்கான நியாயப்படுத்தல்.

அதுபோக தாயகத்தில் உள்ளவர்களிற்கு அவர்களின் பாதுகாப்பு மற்றும் தயார்ப்படுத்தல் போன்றவற்றிற்கு புலிகள் வெளியிடும் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களை நாமாக வலிந்து புலத்தில் எமது தொடர்புகளை வைத்துக் கொண்டு வந்து பரப்புவது எந்தளவிற்கு அவசியமானது? இது பற்றி 6...7 மாதங்களிற்கு முன்னர் எல்லோரும் பப்பாமரத்தின் உச்சியில் இருந்த காலத்திலும் கேட்டிருந்தனான். முன்னர் போட்ட படம் மீண்டும் இணைத்திருக்கு. மேலதிக விபரங்களிற்கு படத்தைப் பார்க்கவும்.

post-1359-1169848929_thumb.jpg

Edited by kurukaalapoovan

ஐயா குறுக்காலபோவார்,

உம்மட ஆராய்ச்சிகளை வாசிக்க நல்லாத்தான் இருக்கு.

இதற்கு முதலில் எங்களை நாங்கள் திருத்திக் கொள்ளலாம். மற்றைய ஊடகங்கள் தாங்களாகவல்லோ பார்த்து திருந்த வேணும். ஏன் இவ்வளவு தூரம் போரீர். எங்கட இன்றைய யாழ் கள தமிழீழ நியூசையே பாருமன். இதில் எத்தனை மூட்டை கார்பேஜ் இருக்கென்று உமக்கு விளங்கும் தானே! எல்லாரும் ஆவாவென்று நியூசை ஒட்டுறார்கள். தமிழீழம் செய்திகள் யாழ் கள நிர்வாகத்தின் பார்வையின் பின்பே இணைக்கப்படுவது நல்லது என்று நான் நினைக்கின்றேன். தமிழீழம் சம்மந்தமான புதிய செய்திகள் இணைக்கப்படும் போது ஒட்டப்படும் போது நிருவாகத்தின் பார்வையின் பின்னரே பிரசுரிக்கப்படவேண்டும் என நான் நினைக்கின்றேன்.

மற்றைய ஊடகங்கள் பிழை விடுகின்றார்கள். அவர்கள் திருந்த வேண்டும் என்று சொல்லும் நாங்கள் முதலில் எங்களைத் திருத்திக் கொள்ளளாமே? இஞ்ச பாரும் யாழிழ, ஒட்டுப் படைகளின்ற நிதர்சனம் இணையம் சம்மந்தமான பகிடிய நம்மட பெடியள் தமிழீழம் செய்திகளில் ஒட்டி விட்டிருக்கின்றான்கள்.

முதலில் யாழ் களம் திருந்துவது எப்போது?

நாங்கள் வெறும் ஒட்டும் படையாக இருந்து கொண்டு ஒட்டுப் படைகளை எப்படி ஒடுக்குவது?

புலம்பெயர்ந்தவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கை நடத்தும் சூழலில் அனைத்து அடிப்படை வசதிகளையும் அதை விட மேலதிகமாகவும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்களிற்கு போராட்டம் என்பது முழு நேர விடையம் இல்லை. இவர்களின் சொந்த வாழ்க்கையில் எஞ்சியுள்ள நேரம் மிஞ்சியுள்ள பொருளாதாரம் தான் போராட்டம் நோக்கி போகிறது. தாயகத்தில் உள்ளவர்கள் போல் எதிரியின் அழுத்தத்தை தினம் தினம் அனுபவிப்பவர்கள் அல்ல தமது பங்களிப்பின் ஆழத்தை அளவை நேரடி அனுபவத்தின் அடிப்படையில் தேவை அறிந்து மாற்ற. தாயகத்தில் நடக்கும் அவலங்கள் தட்டுப்பாடுகள் பலவீனங்களை சொன்னால் காட்டினால் எழுதினால் விளக்கினால் தான் தெரியவரும் தெரிய வந்தால் தான் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வைக்கும். இவர்களால் அவற்றை அனுபவத்தில் அறிய முடியாது. அத்தோடு இவரகள் உளவியல்ரீதியில் உடைந்து ஒடிந்து போகும் சூழலில் வாழவில்லை ஊக்குவிப்புகள் கொடுத்துக் கொண்டிருக்க.

புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய ஒரு அற்பத்தனமான பார்வை...! மிக குறுகிய கண்ணோட்டத்தில் மக்களை வெறும் சுக போகியாய் ஊர் பிரச்சினையை விற்று வயிறு களுவுவர்களாய் இருப்பதாய் எண்ணுபவர் என்னும் போது வேறு என்னத்தை சொல்ல முடியும்...??

புலம் பெயர்ந்தவர்களை மூண்று விதமாக பிரித்து கொள்ளுங்கள்...!

  1. தமிழர் விடுதலைக்கு எப்போதும் ஆதரவானவர்கள்.. எந்த கொடுமழை, பனி, புயல் எண்றாலும் பாடு பட தயாரானவர்கள். போராட்டங்கள் எண்றாலோ கூட்டங்கள் எண்டாலோ வேலை வெட்டிகளை விட்டு ஓடி வரும் உறவுகள்.

  2. ஈழ விடுதலை பற்றி போதிய அறிவு இல்லாமல் அன்னிய வாழ்வில் திழைத்தவர்கள், தமிழர்களால் போராட்டத்தை வெல்ல முடியாது என்பதை திடமாக நம்புவதால் அவர்களின் நிலைப்பாடுக்கு காரணம்...

  3. மற்றது மாற்று இயக்கங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், புலிகளால் ஏதோ ஒரு வித்தில் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் புலிகளை வெறுப்பவர்கள், அதனாலேயே தமிழர் விடுதலையை எதிர்ப்பவர்கள்.. இவர்களில் சிலர் கூலிக்கு அரச சார்ப்பாலர்களாய் வேலை செய்பவர்கள்...!
இதிலை எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு... இந்த எல்லாருக்கும் ஏதோ ஒரு உறவு, நண்பன், பாசமானவர், சொத்து, இப்படி ஏதாவது ஒரு பற்று ஊரில் வைத்து சுமப்பவர்கள்... நாளாந்தம் அவைகளுக்கு நடக்கும் இளப்புகளை வேதனையோடு அசை போடுபவர்கள்... எங்கு அடிவிளுந்தாலும் இந்த அனைத்து தரப்புக்கும் வலிக்கும்.. போன மாசம்தான் காசு அனுப்பினான் இப்ப பார் இப்படி நடந்திட்டுதே எண்டு அங்கலாய்ப்பு எங்கும் இருக்கும்... காசு எண்டது வெறும் சடப்பொருள் அல்ல... இங்கிருந்து இவன் ஊருக்கு அனுப்பி வைத்த பாசம்...

இதை புரி பட வயசு போனால் போதாது. அதுக்கு கொஞ்சம் நல்ல மனமுன் வேணும்...!

புலத்தில் உள்ளவர்கள் மத்தியில் எதிரிகளும் துரோகிகளும் நீங்கள பலவீனமாக இருக்கிறீர்கள் உங்களால் வெல்ல முடியாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால் அதற்கு பதில் நாங்கள் பலமாக இருக்கிறம் வெல்லுவம் பிழந்து கட்டுவம் அல்ல. நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்தது பலமாக வர முடியும் வெழுத்து வாங்க முடியும் என்று பிரச்சாரம் செய்ய அல்ல. எதிரிகளும் துரோகிகளும் எம்முன் வைப்பது அடிப்படையில் ஒரு தந்திரமான அரசியல் பிரச்சாரம். நாம் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதால் போராட்டத்தைக் தொடங்கினோம் போராட்டம் ஆயுதப்போராட்டமானது அகிம்சை வழிகள் பயன் தரவில்லை என்பதால். இன்று உள்ளக சுயாட்சி முறைக்கும் அதிகாரப் பரவலாக்கத்திற்கும் அடக்குபவர்கள் தயார் இல்லை என்று நிரூபிக்கிறார்கள். வெளியக சுயாட்சிய அதாவது முழுச் சுதந்திரத்தை விட வேறு வழியில்லை என்பது தான் பதில். தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பது எம்மீது எதிரி தனது நடத்தையால் (ஆக்கிரமிப்பு அடக்கு முறைகளால் ஏமாற்றப்பட்ட தோற்கடிக்கப்பட்ட சமாதான முயற்சிகளால்) திணித்திருக்கிறான் என்பது தான் எமது வாதமாக இருக்க வேண்டுமே அன்றி நாம் பலமாக இருக்கிறம் ஆனபடியால் ஈழத்தை எடுக்கலாம் போல கிடக்கு எடுத்தா என்ன என்ற விளக்கம் அல்ல. ஏதோ மலிவாக தக்காளி விலைப்படுது வேண்டி வத்தல் போட்ட என்ன என்றமாதிரி போயிடும்.

உண்மைக்கு புறப்பாய் சொல்ல வருகிறீர்கள்....!

அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமாய் நடந்த இளுபாடுகள் எல்லாமே நோர்வேயையும், இணைத்தலைமை நாடுகளும் இடையிலைதான் நிண்டது.... அவர்களைத்தாண்டி அரசாங்கம் பொய் சொல்கிறது என்பது ஏற்ப்பானதும் இல்லை உண்மையும் இல்லை..

உள்ளூராட்ச்சி சபைகளை வளங்குதல் பற்றிய சர்ச்சையும் பேரினவாதகருத்துக்களும் அதுக்கு சர்வதேச செய்தி நிறுவனங்கள் JVP மீது குத்திய முத்திரை வரை எல்லாமே வெளிச்சமானது.. சுனாமி நிதி பங்கீடு இளுபறிகள் வரை சர்வதேசம் தெளிவாக செய்திகளை வெளி கொண்டு வந்து இருக்கிறது புரிந்தும் இருக்கிறது...

இப்போதைய நிலைக்கு காரணமான துணைகுழுக்கள் விவகாரம் சர்வதேச ஊடகங்களால் இண்றுவரை மேற்கோள் போட்டு காட்டும் அளவில் இருக்கிறது... கண்காணிபு குழு அறிக்கைகள் வரை தெளிவாகத்தான் சொல்கிறது... இப்போதைய UN அறிக்கை கூட அதையே உறுதியும் செய்கிறது...

இப்போ நீங்கள் சொல்லும் புலிகளில் பலம் பற்றி சொல்லுறதில் ஏதாவது உண்மை இருக்கிறதா எண்டு பாத்தால் அதுவும் இல்லை.. ரிவிரச இராணுவ நடவடிக்கையை முடக்கிய புலிகள் தாங்களாக யுத்த நிறுத்தம் செய்தார்கள்... அப்போ புலிகளிடம் இல்லாத ஆயுதங்கள் எதுவும் இப்போ இருப்பதாக சொல்லப்படவே இல்லை... புலிகளின் விமானங்கள் கூட யுத்த நிறுத்த காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதுக்கு கதிர்காமருக்கான பதிலாய் இங்கிலாந்தின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் "ஜக்ஸ்ரோ" அது புலிகளிடம் எபோதோ இருப்பதாக முன்னரும் நீங்கள் சொல்லி இருந்தீர்களே..?? எண்டு ஞாபகப்படுத்தி இருந்தார்....! அப்படியானால் புலிகள் ஆயுதங்களை வைத்து இருப்பதும் அதில் தொழில் நுட்பம் கூடியவற்றை வைத்து இருப்பதும் சர்வதேசத்துக்கு தெரியாமல் இல்லை...

அப்படி ஆயுதங்களை வைத்து இருக்காத பலவீனமான புலிகளுடன் பேச்சு வார்த்தை என்பதுக்கு மத்தியஸ்த்தம் வகிக்க சர்வதேசம் வந்திருக்குமா....??? என்பதில் சந்தேகம் இருக்கு....!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு நல்ல கட்டுரை..

http://www.tamilguardian.com/article.asp?articleid=1072

தமிழ் காடியன் கட்டுரையில் இருந்து நான் உணர்ந்து கொள்வது சமாதான வழிகளால் அன்றி தமிழர் அரசியல் எதிர்காலம் யாராலும் காப்பாற்ற முடியாது என்பதையே ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான வழியில்போனால் சமாதானமாகவே தமிழர் தாயகம் கபளீகரம் செய்யப்படும்.. கிழக்கில்தான் இது ஏற்கனவே தொடங்கி விட்டதே.. எனவே நாம் சமாதானமாகப் போய் கிழக்கைக் கைவிடவேண்டியதுதான்.

சமாதான வழியில்போனால் சமாதானமாகவே தமிழர் தாயகம் கபளீகரம் செய்யப்படும்.. கிழக்கில்தான் இது ஏற்கனவே தொடங்கி விட்டதே.. எனவே நாம் சமாதானமாகப் போய் கிழக்கைக் கைவிடவேண்டியதுதான்.

கிழக்கு பறிபோனதற்கு காரணம் தமிழர் தரப்பின் சமாதான முனைப்பைவிட போர் முனைப்பு அதிகமாக இருந்ததினால் ஆகும்.

கிழக்கு பறிபோனதற்கு காரணம் தமிழர் தரப்பின் சமாதான முனைப்பைவிட போர் முனைப்பு அதிகமாக இருந்ததினால் ஆகும்.

:lol::D:D:D:D:D:D:D:D

என் சரத் பொன்சேகாவும் கோதபாயவும் தானே சமாதானாத் தூதுவர்கள்?

பித்தம் தலைக் கேறி விட்டது. :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் காடியன் கட்டுரையில் இருந்து நான் உணர்ந்து கொள்வது சமாதான வழிகளால் அன்றி தமிழர் அரசியல் எதிர்காலம் யாராலும் காப்பாற்ற முடியாது என்பதையே ஆகும்.

அது உண்மையான சமாதான சிந்தனையுள்ளவர்களோடு செய்ய வேண்டியது. கடந்த 5 வருடமாக சமாதானம் என்ற பெயரில் சிங்களவனின் வாயைப் பார்த்துக் கொண்டு இருப்பதற்குப் பெயர் சமாதானம் அல்ல. நாங்கள் சமாதானம், என்று பார்ப்பதற்கு முன், எதிராளி அதை நியாயமாக ஏற்று இருக்கின்றானோ, என்று பார்ப்பதே முதலில் அவசியமானது

கிழக்கு பறிபோனதற்கு காரணம் தமிழர் தரப்பின் சமாதான முனைப்பைவிட போர் முனைப்பு அதிகமாக இருந்ததினால் ஆகும்.

லூசுத்தனமாகக் கதைக்காதீர். தமிழனை விடச் சிங்கள அரசு போர் முனைப்பில் இருக்கின்றபோது, தமிழன் எவ்வாறு சமாதானம் பேச முடியும். நீர் தொடர்ந்து தமிழர் தரப்பை மட்டும் குற்றம் சாட்டும் போக்கிரித்தனமாக கருத்தை விதைக்கின்றீர்.

சமாதானம்" என்பவர் என்ன நோக்கத்தோடு இங்கு செயற்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

முற்றுமுழுதாக சிறிலங்கா அரசின் பிரச்சாரத்தை வேறு வகையில் செய்கிறார்.

தமிழர்களை சோர்வடையச் செய்யக்கூடிய கருத்துக்களை முன்வைக்கிறார்.

களமுனையில் பின்னடைவுகள் ஏற்படுகின்ற பொழுது ஓடிவந்து உற்சாகமாகக் கருத்துக்களை வைக்கிறார்.

இவருக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது அவசியமா?

இவரை புறக்கணிப்பது நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம்" என்பவர் என்ன நோக்கத்தோடு இங்கு செயற்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

முற்றுமுழுதாக சிறிலங்கா அரசின் பிரச்சாரத்தை வேறு வகையில் செய்கிறார்.

தமிழர்களை சோர்வடையச் செய்யக்கூடிய கருத்துக்களை முன்வைக்கிறார்.

களமுனையில் பின்னடைவுகள் ஏற்படுகின்ற பொழுது ஓடிவந்து உற்சாகமாகக் கருத்துக்களை வைக்கிறார்.

இவருக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது அவசியமா?

இவரை புறக்கணிப்பது நல்லது!

புறக்கணிப்பது புறணிபாடுவது தமிழர்களுக்கு விடிவைத் தேடித்தரப் போவதில்லை. அதைவிடுத்து சமாதானத்தின் கருத்துக்கும் அவருக்கும் மதிப்பளித்து உங்கள் பதில் கருத்தை ஏன் அவரின் கருத்தோடு உடன்படமுடியவில்லை என்பதற்கான காரணங்களை முன்வையுங்கள். அதுதான் கருத்துக்களத்துக்கு அவசியம். புறணி பாடுவதும்..துரோகி பன்னாடை போக்கிரி என்பது அல்ல இங்கு தேவை. அது எல்லோரும் இங்கு செய்யக் கூடியதே..!

போர் முனைப்பில் விடுதலைப்புலிகளால் முழுமையாக ஈடுபட முடியாதபடி அவர்களை ஏதோ தடுத்துள்ளது என்பதை யாவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாவிலாற்றில் அடி தொடங்கியதும் மூதூரைக் கைப்பற்றிய புலிகள் அதைத் தக்க வைத்திருந்தால் இன்னும் வெற்றிகளைக் குவித்திருந்தால் திருமலை கூட இன்று தமிழர்களின் கையில் இருந்திருக்கலாம். மண்டைதீவு உட்பட பல வடக்குப் பிரதேசங்களும் தமிழர்கள் கையில் இருந்திருக்கும்.

ஆனால் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கைக்கும் அதன் சர்வதேச முக்கியத்துவத்துக்கும் மதிப்பளித்து பிடித்த இடங்களில் இருந்து போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ் வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடுக்களுக்குத் திரும்பினர். ஆனால் அரசு அந்த நிலைப்பாட்டை எடுக்கவும் இல்லை அதற்கு ஏற்ற வகையில் அரசை நடந்து கொள்ள சர்வதேசமும் தூண்டவில்லை. அப்போ ஏன் புலிகள் மட்டும் பின்வாங்கினர்...???????! வெற்றி பெற்றும் ஏன் பின்வாங்கினர்..! அந்த வெற்றிகள் தக்க வைக்கப்பட்டிருப்பின் இன்று வாகரை கூட இழக்கப்பட்டிருக்காது..?! ஆக விடுதலைப்புலிகளின் போர் முனைப்புக்கள் தீவிரமடைவதை ஏதோ ஒரூ பலமான சர்வதேச சக்தி விரும்பவில்லை.

யாழ் குடாநாட்டைப் பிடிக்கும் நிலைக்குச் சென்ற புலிகளை இந்தியாதான் தடுத்தது என்று அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்டதை இங்கு நினைவுபடுத்துதல் நன்று.

விடுதலைப்புலிகளிடம் பலம் இராணுவ வெற்றிக்கான ஆற்றல்கள் இருந்தாலும் கூட சர்வதேச ஆதரவுத் தன்மை அவற்றுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதும் பயங்கரவாததுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அரசுகளின் வல்லரசுகளின் பார்வை புலிகளையும் இலக்கு வைக்கலாம் என்பதாலும் புலிகள் சில இராஜதந்திர நகர்வுகளைச் செய்ய வேண்டி இருக்கிறது என்பது காரணங்களுடன் எதிர்வு கூறக் கூடிய ஒரு விடயம். அநேகர் காத்திருப்பது போல புலிகள் பெப் 22 கடந்தும் தாமாக வலிந்து தாக்குதல்களை நடத்தி பிரதேசங்களைப் பிடிக்கப் போவதற்கான முயற்சிகளில் இறங்கப் போவதில்லை. அதேபோல அரசின் வலிந்த இராணுவ நடவடிக்கைகளை தங்களின் இராணுவ பலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் புலிகள் மட்டுப்படுத்திய அளவில் எதிர்கொள்வர். அதனால் சில பிரதேசங்களை இழக்கவும் நேரிடும்.

ஆனால் சர்வதேச கணிப்பில் விடுதலைப்புலிகள் தொடர்பான நிலைப்பாடுகள் அவர்களுக்கு சாதகமாக வரவிட்டாலும் பாதகமாக வராது என்ற நிலை எட்டும் வரை அவர்களாக போர்நிறுத்த விதிமுறைகளை முறித்து விட முனையார்கள். அரசாங்கம் முறித்துக் கொண்டால் அது புலிகள் சர்வதேசத்தை நோக்கி வலுவான காரணங்களை முன்வைக்கவும் தங்கள் படைநகர்வுகளைச் செய்யவும் நியாயத்தை உண்டு பண்ணும். தனக்குச் சாதகமாக உள்ள சர்வதேச நிலைப்பாட்டில் உள்ள அரசு... புலிகளுக்குள்ள இந்த சிக்கலை உணர்ந்துதான் அவர்கள் மீது போரைத் திணிக்கிறது என்பது வெளிப்படை.

சமாதானம் கூறுவதில் ஒரு தவறு உண்டு. தற்போதைய போர் முனைப்பை ஆரம்பித்தது அரசுதான். கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புக்களுக்கு கிழக்கில் பதிலடி நடத்தியதன் மூலம் அரசுதான் அதை ஆரம்பித்தது. குண்டுவெடிப்புக்களை நடத்தியவர்கள் என்ன நோக்கத்துக்காகச் செய்திருப்பினும் அரசின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற மறைமுகமாக உதவியதன் அடிப்படையில் குண்டுவெடிப்புக்கள் கூட அரசின் பின்னணியில் அமைந்ததாக இருக்கலாம்..!

எனவே போர் முனைப்புக்களை புலிகள் தான் செய்தனர் என்பதை தற்போதைய நிலையில் உறுதியாகக் கூறிவிட முடியாது. காரணம் கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புக்களுக்கு புலிகள் உரிமை கோரவில்லை மாறாக மறுத்திருந்தனர்..!

எதுஎப்படி இருப்பினும் தமிழர் தரப்பு இன்னும் பொறுமைகாக்க வேண்டிய நிலை இருப்பதால் சமாதான உச்சரிப்பே தமிழர் தரப்பு இன்னும் பிரதேசங்களை இழப்பதையும் அழிவுகள் ஏற்படுவதையும் தடுக்க முடியும்..! அந்த வகையில் சமாதானம் சொல்வது பற்றி சற்றுச் சிந்திக்கவே வேண்டும். :P :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் வரும் கட்டுரைகளையும் விளங்கத் துப்பில்லை.. ஆங்கிலத்தில் வந்தாலும் விளங்குதில்லை. சமாதானத்தின் நோக்கமெல்லாம் தமிழர்கள் சிங்களவர்களுக்கு வழிவிட்டு இலங்கைத் தீவை சிங்களப் பெளத்த நாடாக்குவதுதான். தமிழர்களது முதல் எதிரி இப்படியான முதுகெலும்பற்ற அடிமைச் சேவகம் செய்யப் புறப்பட்ட கூட்டம்தான்.. B)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் வரும் கட்டுரைகளையும் விளங்கத் துப்பில்லை.. ஆங்கிலத்தில் வந்தாலும் விளங்குதில்லை. சமாதானத்தின் நோக்கமெல்லாம் தமிழர்கள் சிங்களவர்களுக்கு வழிவிட்டு இலங்கைத் தீவை சிங்களப் பெளத்த நாடாக்குவதுதான். தமிழர்களது முதல் எதிரி இப்படியான முதுகெலும்பற்ற அடிமைச் சேவகம் செய்யப் புறப்பட்ட கூட்டம்தான்.. B)

தமிழர் தரப்பின் போராட்ட நியாயத்தை சர்வதேசம் நோக்கி இருந்தால் அரசுக்குச் சார்ப்பான சர்வதேச நிலைப்பாடு இருக்காது. ஆனால் சர்வதேசம் அதற்கு அப்பால் உள்ளது. சர்வதேச நாடுகளுக்கு அவற்றின் நலன் தான் முக்கியம். தமிழர் தரப்பால் சர்வதேசத்தைப் பகைத்துக் கொண்டு போரோ சமாதானமோ செய்ய முடியாது என்ற உண்மையை உணர மறுப்பவர்களே இப்படிக் கருத்தெழுதுகின்றனர்.

தமிழர் தரப்பின் பலம் கூட சரியாக வெளிப்பட முடியாதபடிக்கு அரசுக்குச் சார்பான சர்வதேச நிலைப்பாடு அரசைச் செயல்பட வைக்கிறது. இந்த நிலையில் தமிழர் தரப்பு தன் பலத்தைப் பாதுகாக்க முனையுமே தவிர அரசின் செயற்திட்டங்களுக்கு ஏற்ப இழுபட்டு தன் பலத்தை இழக்காது.

தலைவரின் மாவீரர் தின உரை சர்வதேசத்துக்கு ஒன்றை விளக்கியது. நாம் அரசுக்கு நல்ல சந்தர்ப்போம் அளித்தோம் அவர்கள் அதைக் கணக்கில் எடுக்கவில்லை. போர்நிறுத்தத்தையும் மதிக்கவில்லை. எனவே நாம் மாற்று வழியில் செல்ல தீர்மானிக்கத் தூண்டப்பட்டுள்ளோம். அதற்கு சர்வதேச ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கை வைக்கின்றோம் என்று. ஆக தலைவர் கூட சர்வதேசத்தின் நிலைப்பாடுகளைக் கவனித்துத்தான் தனது உரையை கவனமாகச் செய்துள்ளார்..!

தலைவரின் உரைக்குப் பின்னர் பல விடயங்கள் நடந்துவிட்டன. தற்போது கிழக்கு நிலமை தொடர்பில் கண்காணிப்புக்குழு மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. கண்காணிப்புக்குழு கிழக்கிலிருந்து புலிகளை வெளியேற்றியமை வன்செயல்கள் பெருக வழி செய்யும்..அது ஒரு தவறான நடவடிக்கை என்று அரசைச் சாடியுள்ளது. சர்வதேச இராஜதந்திரிகளை வாகரை இழப்புக்குப் பின்னர் சந்தித்து அவர்களின் கருத்தைப் புலிகள் அறியந்து கொண்டபோது அவர்களின் கூற்றும் அரசின் எல்லா நடவடிக்கைகளும் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை என்பதாக இருந்தது. ஆக சர்வதேச நிலைப்பாடுகள் தற்போது அரசின் இரட்டை முகத்தை இனங்காணத் தொடங்கியுள்ளன. இது வாகரை பறிபோனதை விடப் பெரிய வெற்றியாகும்..! ஆனால் எந்த தமிழ் ஊடகமும் இதைப் பெரிதுபடுத்தியதாக இல்லை.

சர்வதேச நிலவரம் தமிழர் தரப்புக்கு பாதகமில்லாத வரைக்கும் புகலிடத்தில் சாப்பிட்டுவிட்டு தண்ணி அடித்துவிட்டு வெற்றிச் செய்திக்காக போராட்டம் நடத்த நினைப்பவர்களின் மகிழ்ச்சியை உண்டு பண்ணாது..!

அதுவரைக்கும் இப்படி பினாத்துபவர்களும் அரைகுறையா விளங்கிக் கொண்டு பினாத்த வேண்டியதுதான். தமிழர்களின் நிலம் இப்போ 4 தசாப்தங்களாகத்தான் பறிபோகிறது. இதை எத்தனையோ பேச்சுவார்த்தைகளில் சுட்டிக்காட்டியும் எந்த சர்வதேச நாடும் அதற்காக தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்க முன்வந்ததா..?! அவர்களுக்கு போராட்ட நியாயத்தை விளக்கலாம். ஆனால் ஏற்றுக் கொள்ள வைக்க பல படிநிலைகளைத் தாண்ட வேண்டி உள்ளது. காரணம் எதிரியும் தனக்கான நிலைப்பாடுகளை சர்வதேசத்தின் முன் வைத்துக் கொண்டுதான் இருக்கிறான். நாம் அதை முறியடிக்க பல கஸ்டங்களை தாங்கி முயற்சிகளைத் தொடர வேண்டும்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.