Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலமைப்பரிசில் பரீட்சையில் வடக்கு மாணவர்கள் தேசியரீதியில் சாதனை

Featured Replies

நேற்றிரவு வெளியிடப்பட்ட தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியிலும், மாகாண, மாவட்ட ரீதியிலும் முதலிடத்தை பெற்றுகொண்டார்.
5-10-2016%209.10.3%201.jpg
அத்துடன், குளியாப்பிட்டிய, அஸ்ஸெத்தும சுபாரதி பாடசாலையில் கல்வி பயிலும் ருவன்யா மெத்மி குணசேகர என்ற மாணவியும் 195 புள்ளிகளைப் பெற்று  முதலிடத்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் இரண்டாமிடத்தினையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தினையும் பெற்றுள்ளார்.
அத்துடன், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த கேதீசன் துஷானன் மற்றும் ஜோன் பொஸ்கோ பாடசாலையை சேர்ந்த கிளமென்ற் லின்ரன் விஜயக்குமார் பற்றிக் ஆகிய இருவரும் 191 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
 
5-10-2016%209.10.34%202.jpg
 
5-10-2016%209.10.1%203.jpg
 
5-10-2016%209.10.27%204.jpg

எதிர்கால வைத்தியரதும், பொறியியலாளரதும் கனவு நிறைவேறுமா?

தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட ரீதியில் இரண்டு மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

மன்னார் - அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவன் ஹிஜாஸ் ஹினான் அஹமட் மற்றும் மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி விமலதாசன் ஜொசிபியா ஆகிய இரு மாணவர்களும் 180 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பெற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் வைத்தியராக வந்து எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என 180 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவரான மாணவி விமலதாசன் ஜொசிலியா தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் 180 புள்ளிகளை பெற்று மாவட்டத்தின் முதல் இடத்தை பெற்றுள்ளேன். முதலில் கடவுளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மேலும் கற்பித்து தந்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர், ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். நான் வீட்டில் சுயமாகவே கற்று வந்தேன். பாடசாலையில் கற்பித்து தருவதை வீட்டில் படித்தேன்.தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லவில்லை எனவும் மாணவி தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதே வேளை எதிர்காலத்தில் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என முதல் இடத்தைப்பெற்ற மாணவனான ஹிஜாஸ் ஹினான் அஹமட் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதற்கு காரணம் எனது பாடசாலையின் ஆரம்ப பிரிவு ஆசிரியரான திரு.சுபாஸ் அவர்களும், பாடசாலை அதிபரான மாஹிர் அவர்களுமே.

மேலும் எனக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களுக்கும் குறிப்பாக எனது பெற்றோருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன் எனவும் குறித்த மாணவன் கூறினார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/education/01/119971?ref=home

3 hours ago, Newsbot said:

நேற்றிரவு வெளியிடப்பட்ட தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியிலும், மாகாண, மாவட்ட ரீதியிலும் முதலிடத்தை பெற்றுகொண்டார்.

 

Grade Five Scholarship Examination 2016: Top scorers revealed

 Oct 05, 2016  Melanie Santiago  Local, News Ticker, Top Slider  0

 
 

Grade Five Scholarship Examination 2016: Top scorers revealed

The results of the top scorers of the Grade Five Scholarship Examination have been released by the Department of Examinations.

Accordingly, Sithinjaya Neran Samarawickreme from Urugamuwa Methodist Primary School in Matara obtained the highest mark of 196.

The second highest mark of 195 has been obtained by Ruwanya Methmini Gunasekara from Assadhdhuma Prabharathi Primary school in Kuliyapitiya and  Kokuladhasan Abisighan from Rambhekulam Maha Vidyalaya, Vavuniya.

http://newsfirst.lk/english/2016/10/grade-5-scholarship-examination-2016-top-scorers-revealed/150745

Grade 5 Scholarship Exam top performers

2016-10-05 10:03:31
 3
 5279

     

 

 

image_1475642276-a576ed702e.jpgThe results of the island wide top scorers of the Grade 5 Scholarship Examination 2016 had been released by the Department of Examinations.

Sithija Niran Samarawickrama of Methodist School, Matara topped the list of Grade 5 Scholarship takers for 2016 with 196 points.

Releasing the names and scores of the top scorers for the island wide examination, the Examinations Department said that Ruwanya Methmini Gunasekara of Kuliyapitiya Assedduma Subarathi Vidyalaya and Kokulathasan Abisigan of Rambaikulam Girls' Maha Vidyalayala in Vavuniya came in second with 195 marks.

Nine students tied at third place with 194 marks; Rajapaksa Appuhamilage  Nadini Sandesna Rajapaksa of Dedigama Parakumba Maha Vidyalaya, Kegalle, Ethugala Mudiyanselage Thejana Kawsith Wijekoon of Aswedduma Subharathi Vidyalaya Kuliyapitiya, Mapa Mudiyanselage Nethmi Subodhini of Ibbagamuwa Adarsha Maha Vidyalaya, Udayarajan Koshikan of Sri Koneswara Hindu College Trincomalee,  Rajapaksa Liyana Pathirannehelage Senith Dilvan Rajapaksa of Wickramashila Madya Maha Vidyalaya, Giriulla, Inesh Dulanjana Chandrasiri of Joseph Vaz College, Wennappuwa, Lisadi Imethma Handapangoda of Royal College Horana, Rehara Binoli Miskin of Munidasa Kumarathunga Kanishta Vidyalaya, Kaduwela, Umashankar Jayani of Hindu Primary School Jaffna.

http://www.dailymirror.lk/116882/Grade-Scholarship-Exam-top-performers

Edited by ஜீவன் சிவா

பொறியியலாளராக வரவேண்டும்! கிளிநொச்சியில் முதலிடம் பெற்ற வட்டக்கச்சி மாணவனின் இலட்சியம்!!

பாடசாலையிலும் வீட்டிலும் மாத்திரமே கல்வி கல்வி கற்றேன், இதனைத் தவிர எனதுகிராமத்தில் வீட்டிற்கு அயலில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது கற்றுக்கொள்வேன் என கிளிநொச்சி மாவட்டத்தில் 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற மாணவன் யுகதீபன் நுகாந் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி, வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற நுகாந் 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மாயவனூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த நுகாந்தின் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றார். தாய் வீட்டுப்பணி, நுகாந் வீட்டுக்கு மூத்த பையன் அவனுக்கு கீழ் இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் உள்ளனர்.

வழமை போன்று பாடசாலைக்கு செல்வது அங்கு வகுப்பாசிரியர் தேவராசா நிகேதரனின் கற்பித்தல் மற்றும் அவரால் பாடசாலைகளில் மாலை நான்கு முப்பது மணி வரை நடத்தப்படும் மேலதிக வகுப்பு. இதுவே நுகாந்தின் கற்றல்.

இதனைத் தவிர தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டுக்கு நேரம் கிடைக்கும் போது சென்று கற்றுக்கொள்வது. மேலும் இரவு ஒன்பது மணி வரை படிப்பது. அதனை தவிர பல வேளைகளில் அதிகாலை ஜந்து மணிக்கு எழுந்து கற்பது. இதனைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இந்த நிலையில் குறித்த மாணவன் இந்த தடவை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொள்வதற்கு பாடசாலை அதிபரின் ஊக்கமும் வழிகாட்டலும் பெற்றோரின் ஒத்ழைதுப்பு என்பன நுகாந்தை சாதிக்க வைத்திருக்கிறது.

தான் வருங்காலத்தில் ஒரு பொறியியலாளராக வர வேண்டும் என்ற இலட்சியத்தில் இருப்பதாகவும் நுகாந் குறிப்பிட்டார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/education/01/119997?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோருக்காக நடாத்தப்படும் ஒரு பரீட்சை பாவம் மாணவர்கள் இங்கே வாழ்த்துகள் பரிமாற்றம் மட்டுமே. மிஞ்சிய ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகண மாணவர்களின் புள்ளி விபரங்களை காணோம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம் 

 

( எஸ்.என்.நிபோஜன்)

 
நேற்று வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம் பெற்றுள்ளது.DSC08129.JPG இதனடிப்படையில்   மாணவர்கள் மூவர் 182 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தையும் 181 புள்ளியை பெற்று 04 ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு 34 பேர் சித்தியடைந்துள்ளனர்.
செல்வன் மு.அபிசங்கர், செல்வன் மு.தேனகன், செல்வன் ச. புகழ்வேந்தன் ஆகியோர் 182 புள்ளிகளைப்பெற்று முதலிடத்திலும் செல்வி த.எழிலரசி 181 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் நான்காமிடத்திலும் உள்ளனர்.DSC08126.JPG தொடர்ச்சியாக ஜந்து வருடங்களாக இப்பாடசாலை மாவட்ட ரீதியில் முதலிடத்தில் காணப்படுவதோடு இம்முறை  80 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 34 பேர் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது 

http://www.virakesari.lk/article/12098

புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் இதோ...

 

 
2016ம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் சிங்கள மொழி மூலம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு 159 புள்ளிகள் வெட்டுப்புள்ளிகளாக பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன.

தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக கீழே காணலாம்.

கொழும்பு - 153

கம்பஹா - 153

களுத்துறை - 153

கண்டி - 153

மாத்தளை - 153

நுவரெலியா - 150

காலி - 153

மாத்தறை - 153

ஹம்பாந்தோட்டை - 149

யாழ்ப்பாணம் - 152

கிளிநொச்சி - 150

மன்னார் - 150

வவுனியா - 151

முல்லைத்தீவு - 150

மட்டக்களப்பு - 151

அம்பாறை - 151

திருகோணமலை - 151

குருணாகல் - 153

புத்தளம் - 151

அநுராதபுரம் - 151

பொலன்னறுவை - 151

பதுள்ளை - 151

மொனராகலை - 149

இரத்தினபுரி - 151

கேகாலை - 153

http://tamil.adaderana.lk/news.php?nid=84179&mode=lead

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுநகர் வின்சன்ட் பாடசாலையில் 57 பேரும்

கல்முனை கார்மேமேல் பற்றிமா பாடசாலையில்  67பேருமாக பாஸ் பண்ணியுள்ளார்கள் இதர பாடசாலைகளில் குறைந்த விகிதத்தில் பாஸ் பண்ணியுள்ளார்கள் 

6 hours ago, ரதி said:

கிழக்கு மாகண மாணவர்களின் புள்ளி விபரங்களை காணோம்

151

வெற்றி பெறறவர்களை விட தோல்வியடைந்தத மாணவர்களை வாழ்த்த வேண்டும் இந்த வெற்றுப்பரீட்சையில்

8 hours ago, முனிவர் ஜீ said:

பெற்றோருக்காக நடாத்தப்படும் ஒரு பரீட்சை பாவம் மாணவர்கள் இங்கே வாழ்த்துகள் பரிமாற்றம் மட்டுமே. மிஞ்சிய ஒன்று

 

22 minutes ago, முனிவர் ஜீ said:

வெற்றி பெறறவர்களை விட தோல்வியடைந்தத மாணவர்களை வாழ்த்த வேண்டும் இந்த வெற்றுப்பரீட்சையில்

மனிதனின் மூளை வளர்ச்சி பிள்ளைகளின் சிறு பிராயத்திலேயே முடிவடைவதாக அறிவியல் கூறுகிறது. குறிப்பாக பகுத்தறிவு, புத்திகூர்மை, விவேகம் போன்றவை சிறு பிராயத்தில் அடையும் துரித வளர்ச்சியை பின்னர் அடைய முடியாது என்று சொல்கின்றனர்.

இது தொடர்பான துல்லியமான தகவல்களை இந்தத் துறையில் புலமை பெற்றுவரும் நெடுக்கர் வழங்கினால் நன்றாக இருக்கும்.

எங்கள் காலத்திலும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லாமல் நண்பர்கள் சிலருடன் கூடி விளையாட்டாகவும் ஈடுபாட்டுடனும் படித்து இந்தப் பரீட்சையை எழுதி சித்தியடைந்த ஞாபகம் வந்து செல்கிறது. அக்காலத்தில் எமது பெற்றோர்கள் தேவையான சில புத்தகங்களை வாங்கித் தந்ததுடன், நண்பர்கள் கூடிப் படிக்கும் வசதியையும் ஏற்படுத்தி தந்திருந்தார்கள். இதைவிட அவர்கள் மூலம் எந்தவித அழுத்தமும் எமக்கு இருந்ததாக ஞாபகம் இல்லை.

இதை போட்டிப் பரீட்சையாக, பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்பி மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் ஒரு விவேக விளையாட்டாக எடுத்தால் அது நிச்சயம் மாணவரில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனது நம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முனிவர்ஜீ இந்த கொலசிப் பாஸ் பண்ணின எத்தனையோ வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தனியார் பாடசாலையில் சேர்ந்து இலவசமாய் கற்கக் கூடிய வசதி இருக்குத் தானே!

  • கருத்துக்கள உறவுகள்
On 5.10.2016 at 7:14 PM, முனிவர் ஜீ said:

பெற்றோருக்காக நடாத்தப்படும் ஒரு பரீட்சை பாவம் மாணவர்கள் இங்கே வாழ்த்துகள் பரிமாற்றம் மட்டுமே. மிஞ்சிய ஒன்று

உண்மைதான்
70 இன்முடிவுகளில் எந்தவிதமான பிரத்தியேகமான வகுப்புக்களும் இல்லாமல் பாடசாலையில் படித்த  அறிவுடன் இந்தப் பரீட்சையில்
தேர்வு பெற்றவர்களும் இருக்கின்றார்கள்
இப்போது இந்தப்பரீட்சை பெற்றோர்களுக்கிடையிலான போட்டிப் பரீட்சையாக மாறிக் குழந்தைகளை இயந்திரமாக்கி அவர்களுடைய மனா நிலையைக்கூடப் பாதிக்கும் அளவிற்கு வந்துவிட்ட்து.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

ஏன் முனிவர்ஜீ இந்த கொலசிப் பாஸ் பண்ணின எத்தனையோ வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தனியார் பாடசாலையில் சேர்ந்து இலவசமாய் கற்கக் கூடிய வசதி இருக்குத் தானே!

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அவசர வேண்டுக்கோள்!
October 06.2016

புலமை பரிசில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில்,  வெற்றி பெற்ற மாணவர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் பரீட்சையில் சித்தியடையாத பெரும்பாலான மாணவர்கள் பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் படங்களை காட்சிப்படுத்த பெற்றோர், பாடசாலை மட்டத்திலோ பணஅறவீடுசெய்து காட்சிப்படுத்துவதை இந்த வருடத்திலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வியமைச்சு அவசரமாக சுற்று நிரூபமொன்றை நேற்று சகல கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

ஏதேனும் பாராட்டினை மேற்கொள்ள வேண்டுமாயின் அது ஏனைய மாணவர்களை பாதிக்காத வகையில் பாடசாலையினுள் அடங்கும் நிகழ்ச்சித் திட்டத்தினுள் மாத்திரம் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை தேர்ச்சியடைந்தவர்கள் எனக்கருதி அவர்களது படங்களை பெரிதாக காட்சிப்படுத்துவதனால் அடுத்த கட்ட மாணவர்களின் மனநிலை வெகுவாக பாதிக்கப்படுவது உணரப்பட்டுள்ளது.

காலப்போக்கில் புலமைப்பரிசில் என்னென்ன காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது எதிர்பார்க்கப்பட்ட இலக்கை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அடைந்ததாகவே கருதமுடிகிறது.

தேர்வு வகைக்குட்பட்ட புலமைப் பரீட்சையினுள் தேர்ச்சி பெறுபவர்கள் என்றில்லை. ஒருவருடத்திற்கு உதவிப்பணம் பெறுவதற்கும் உயர்பாடசாலை அனுமதி பெறுவதற்கும் தகுதியானவர் என்ற தகுதியை மட்டுமே பெறுகின்றார்கள்.

சிலவேளை இவர்களைக்காட்டிலும் ஏனையவர்கள் க.பொ.த சா.த மற்றும் உ.த பரீட்சைகளில் கூடுதலான சித்திகளை காட்டுகின்றனர்.

இவ்வாறான கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்தை கல்வியமைச்சின் செய்லாளர் டபிள்யு.எம்.பந்துசேன அனுப்பியுள்ளார்.

நன்றி - லங்காபுரி

 

 

இருக்கிறது ஆனால் மேலும் மேலும் அவர்களால் அந்த தனியார் பாடசாலையில் படிப்பது என்பது மிகப்பெரிய தலைப்பாரம் போல் இடைநடுவே விட்டு விடுகிறார்கள் 

அங்கும் போட்டி தன்மையே

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, போல் said:

.

இதை போட்டிப் பரீட்சையாக, பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்பி மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் ஒரு விவேக விளையாட்டாக எடுத்தால் அது நிச்சயம் மாணவரில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனது நம்பிக்கை.

நீங்கள் சொல்வதும் உன்மைதான் ஆனால் இதை பெற்றோர்கள் அடுத்ததவர்க மத்திதியில் தங்களை பிரபல்ய படுத்த தங்கள் குழந்தைகளை படுத்தி எடுக்கிறார்கள்

உதாரணம் அடுத்தவன் பிள்ளை ஆங்கில மொழியில் கற்பதால் தன் பிள்ளையும் ஆங்கில மொழியில் கற்கவேண்டும் என்று ஒரு பெற்றோர் வந்திருந்தனர் பிள்ளையிடமும் வினவினோம் ஓம் தலையை ஆட்டியது இரண்டாவது மாதம் பிள்ளை அழுதுகொண்டு வந்தது ஏன் என்று விசாரித்து ப்பார்த்தால் தன்னால் முடியவில்லை என்றும் பெற்றோர்களின் வற்புறுத்தலால்தான் நான் உடனே பட்டேன் என்றது பிறகு அதிபருக்கு அறிவித்து தமிழ் மொழி மூல படிப்பிற்கு மாற்றப்பபட்டது

3 hours ago, வாத்தியார் said:

உண்மைதான்
70 இன்முடிவுகளில் எந்தவிதமான பிரத்தியேகமான வகுப்புக்களும் இல்லாமல் பாடசாலையில் படித்த  அறிவுடன் இந்தப் பரீட்சையில்
தேர்வு பெற்றவர்களும் இருக்கின்றார்கள்
இப்போது இந்தப்பரீட்சை பெற்றோர்களுக்கிடையிலான போட்டிப் பரீட்சையாக மாறிக் குழந்தைகளை இயந்திரமாக்கி அவர்களுடைய மனா நிலையைக்கூடப் பாதிக்கும் அளவிற்கு வந்துவிட்ட்து.

இது மறுக்க முடியாத உன்மை

23 minutes ago, முனிவர் ஜீ said:

நீங்கள் சொல்வதும் உன்மைதான் ஆனால் இதை பெற்றோர்கள் அடுத்ததவர்க மத்திதியில் தங்களை பிரபல்ய படுத்த தங்கள் குழந்தைகளை படுத்தி எடுக்கிறார்கள்.

பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்களின் தேவையற்ற பேராசைகளால், பொறுப்பற்ற சிந்தனைகளால் இந்த புலமைப்பரிசில் பரீட்சை அதன் குறிக்கோளில் இருந்து விலகியிருக்கிறது.

4ம், 5ம் தர மாணவர்களை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்பும் பெற்றோர்களும், அவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களை எடுக்கும் ஆசிரியர்களும், அவர்களை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்ப தூண்டும் ஆசிரியர் - அதிபர்கள் அனைவரும் சமூக விரோதிகளாகவே கணிக்கப்பட வேண்டியவர்கள்.

இந்த துர்பாக்கிய சூழலை மாற்ற சம்பந்தப்பட்டவர்கள் முயல வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, போல் said:

பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்களின் தேவையற்ற பேராசைகளால், பொறுப்பற்ற சிந்தனைகளால் இந்த புலமைப்பரிசில் பரீட்சை அதன் குறிக்கோளில் இருந்து விலகியிருக்கிறது.

4ம், 5ம் தர மாணவர்களை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்பும் பெற்றோர்களும், அவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களை எடுக்கும் ஆசிரியர்களும், அவர்களை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்ப தூண்டும் ஆசிரியர் - அதிபர்கள் அனைவரும் சமூக விரோதிகளாகவே கணிக்கப்பட வேண்டியவர்கள்.

இந்த துர்பாக்கிய சூழலை மாற்ற சம்பந்தப்பட்டவர்கள் முயல வேண்டும்.

 

அதை நான் பலமுறை எழுதிவிட்டேன் இலங்கையில் தற்போது காசு பார்க்கும் தொழில்ககளில் ஒன்று வைத்தியர் மற்றொன்று ஆசிரியர்  (அந்த காலத்தில் இருந்தத ஆசிரியர் ) இலலைஇப்ப உள்ளவர்ககள் ஒரு சில ஆசான்களை தவிர 

39 minutes ago, முனிவர் ஜீ said:

உதாரணம் அடுத்தவன் பிள்ளை ஆங்கில மொழியில் கற்பதால் தன் பிள்ளையும் ஆங்கில மொழியில் கற்கவேண்டும் என்று ஒரு பெற்றோர் வந்திருந்தனர் பிள்ளையிடமும் வினவினோம் ஓம் தலையை ஆட்டியது இரண்டாவது மாதம் பிள்ளை அழுதுகொண்டு வந்தது ஏன் என்று விசாரித்து ப்பார்த்தால் தன்னால் முடியவில்லை என்றும் பெற்றோர்களின் வற்புறுத்தலால்தான் நான் உடனே பட்டேன் என்றது பிறகு அதிபருக்கு அறிவித்து தமிழ் மொழி மூல படிப்பிற்கு மாற்றப்பபட்டது

உலகில்  அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்திலும் தாய் மொழிக் கல்வியில் தான் படிக்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்கிய அறிஞர்கள் பெரும்பாலானவர்களும் தாய் மொழிக் கல்வியில் படித்தவர்களாகவே இருக்கிறார்கள்.

குறைந்தது பல்கலைக்கழக கல்வி  வரையிலாவது தாய் மொழியில் கற்கும் மாணவர்கள், விடயங்களை கிரகித்து படிப்பவர்களாகவும், புத்தாக்கதிறன் மிக்கவர்களாகவும், படைப்பாளிகளாகவும், அரிய சாதனைகள் படைக்கவல்ல அறிஞர்களாகவும், பகுத்தறிவு மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும்  பரிணமிப்பது நன்கு நிரூபிக்கப்பட்ட உண்மை.  

இதனை ஆங்கில மோகம் கொண்ட தமிழ்ப் பெற்றோர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அந்த மாணவியின் கனவுக்கு இந்த நாடு இடம் தருமா?
 
11928.jpg
 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் வட மாகாணத்தில் 2ஆம் இடத்தையும் ஈட்டிச் சாதனை படைத்த யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி செல்வி ஜயனி உமாசங்கர்,  ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில்,

எனது எதிர்காலக் கனவு ஒரு மருத்துவராக வருவது என்பதுடன் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மாணவர்களே! இளைஞர்களே! கனவு காணுங்கள் என்ற டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் அழைப்பின் ஓர் அங்கமாக மாணவி ஜயனி இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் எனக் கூறியிருந்தார் எனலாம்.

இந்த நாட்டைச் சேர்ந்த; இந்த நாட்டில் மிகப் பெரும் போட்டியாக இருக்கக்கூடிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த பத்து வயது மாணவியின் விருப்பத்தில் டாக்டராக வருவது சாத்தியமாகும் ஆனால் ஜனாதிபதியாக வரமுடியுமா? என்ற கேள்வி இங்கு எழுகிறது.

இந்த எழுகையின் அடிப்படை இந்த நாட்டில் அப்படியொரு சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு கிடைக்குமா? என்பதுதான்.

உலகம் முழுவதிலும் பிறந்திருக்கக்கூடிய பிள்ளைகள் தமது விருப்பமாக அந்த நாட்டின் உச்சமான அதிகார பதவிவரை கூறமுடியும்.

ஆனால் இலங்கையில் தமிழ் இனத்தில் பிறந்த ஒரு பிள்ளை இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று தனது விருப்பத்தை கூறலாமா? அதற்கு இந்த நாட்டில் சந்தர்ப்பம் உண்டா? என்பதுதான் கேள்வி.

ஆம், இலங்கையில் தமிழினத்தில் பிறந்த ஒரு குற்றத்துக்காக, ஒரு பிள்ளையின் இலட்சியம்; இலக்கு; கனவு; விருப்பம் என்பதுகூட மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் இங்கு வேதனைக்குரியது.

ஆம், இலங்கைத் தீவின் பேரன்புமிக்க சிங்கள மக்களே! இந்த நாட்டில் தமிழ் இனத்தில் பிறந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட ஒரு பத்து வயதுப் பாலகி இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதே தனது இலட்சியம் என்று கூறியுள்ளார்.

அந்தக் குழந்தையின் இலட்சியம் நிறைவேறுவதற்கு அத்தனை சந்தர்ப்பங்களும் இந்த மண்ணில் உண்டா? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

அப்படி நீங்கள் சொல்லாமல் மெளனமாக இருந்தால் அதன் பொருள் வரமுடியாது என்பது தான்.

அப்படியானால் இந்த நாட்டில் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை உண்டு என்றும் தனித்து அபிவிருத்தியை ஏற்படுத்திவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் சொல்பவர்கள் ஒன்றை உணர வேண்டும்.

அதாவது ஈழத் தமிழ்க் குழந்தைகள் தங்கள் இலட்சியம் இந்த நாட்டில் நிறைவேறுமா என்பதை தெரிந்து கொண்டுதான் தமது இலட்சியத்தைத் தீர்மானிக்க முடியும். அந்தளவிலேயே எங்கள் நாட்டின் இனசமத்துவம் உள்ளது.

ஒரு பிள்ளையின் இலட்சியம் இனத்தின் பெயரால் தகர்க்கப்படுகிறது எனில், தமிழ் மக்கள் எப்போதுதான் தங்கள் இலட்சியம் தொடர்பில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்பதுதான் இங்கு ஏற்படக்கூடிய எழுவினா. 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11928&ctype=news

காவல்துறையின் 150 தினத்தையொட்டி சிங்களத்தில் உரையாற்றினார் தமிழ் மாணவி!

காவல்துறையின் 150 தினத்தையொட்டி சிங்களத்தில் உரையாற்றினார் தமிழ் மாணவி!

இன்று சிறீலங்கா காவல்துறையினரின் 150ஆவது ஆண்டு நிறைவுதினமாகும். 150ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிறீலங்காவின் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்ட புதிய காவல்துறை தலைமையகத்தில் இந்நிகழ்வு இன்று முற்பகல் 9.00 மணியளவில் நடைபெற்றது.

இதில் தரம் ஐந்து புலமைப்பரிசிலில் தேசிய ரீதியில் முன்றாமிடம் பெற்ற யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவியும், ஐனாதிபதி ஆவதே எனது இலக்கு என கூறிய ஜனனியை பாராட்டும் முகமாக அவருக்கு பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

பின்னர், மாணவியை உரையாற்ற வருமாறு அழைத்தபோது அவர் தனது உரையை சிங்களத்தில் வாசித்தார்.

http://thuliyam.com/?p=44625

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.