Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஸ்கந்தாவின் தனிப்பட்ட அவலத்தில் எல்லோரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.

அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். இவர் ஊர் உத்தியோகத்தில் பிசி. பிள்ளைகளை கவனிக்க நேரம் இருக்கவில்லை போல் உள்ளது.

கல்வி கற்க என வெளியே சென்று வந்த மூத்தவர் தான் இந்த, திருட்டுக்கு கும்பலின், bmw கார் எடுப்புகளில், காதல் வலையில் வீழந்து... பிடிவாதத்தால் இன்று தந்தையையும்... தாயையும்... குடும்பத்தினையும் அவலத்தில், அவமானத்தில் இழுத்து விடடார்.

சொல்லி வளர்த்து இருக்க வேண்டும். 

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

:- 

மாவீரர் நாள் 2 பிரிவாக நடக்கிறதுக்கும் ஸ்கந்தா உடந்தை ... இதிலே என்ன ஆச்சரியம் ...அப்பா 10 அடி  பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வான் என்பது இங்கே தெரிகிறது...

மேற்கு நாடுகளில் பண மோசடிககுறறங்களில் தமிழர் ஈடுபடுவது தொடர்பாக செய்திகள் வரும்போது நாம் ஒரு விடயததை மறந்து விடுகிறோம். நாம் தமிழர் அனைவரும் தென்கிழககு ஆசியாவில் இருந்து குடிபெயர்தவர்கள். கடந்த பல தசாப்தங்களாகவே தமது சொந்த தாய்நாடடு மககளின் வரிபபணததை திருடி வசதியாக வாழும் அரசியல்வாதிகள், அரசாங்க் உததியோகததர்களை பெருமளவில் கொண்டிருக்கும் நாடுகளான இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த மககள் கூட்டத்தில் இபபடியான பண மோசடிகள் இருபபது இயற்கை தானே. இதற்கும் தமிழ் தேசியம் சிங்கள தேசியம் என்ற வேறுபாடு இலலை. எலலோரும் அந்த ஊழல் நாடுகளில் இருந்து வந்தவர்களே.சுதந்திரததின் பினனர் இலங்கையை ஆட்சி செய்த அரசியல்வாதிககள், அரச அதிகாரிகள் தமது சொந்த தாய்நாட்டு மககளின் வரிபபணததில் திருடிய தொகை எவ்வளவ இருககும் என்று யாராவது எணணி பார்தததுண்டா? அரசன் எவ்வழி மககள் அவவழி.

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியின்ட கதையைப் பார்த்தால் ஸ்கந்தா எந்தத் தப்புமே செய்யாத,மக்களது பணத்தை கொள்ளையடிக்காத ஒரு அப்பாவி.அவரது மகள் தான் அநியாயமாய் போய் கள்ளக் காட் போடுறவனிடம் ஏமாந்திட்டாள் என்ட மாதிரி இருக்குது.

அப்பாவி மக்கள் குளிரிலும்,பனியிலும் நின்று உழைச்ச காசை தேசியம்,புலி என்று சொல்லி ஸ்கந்தா ஏமத்தினதை விட அந்த பெடியன் ஒன்றும் பெரிசாய் ஏமாத்தேல்ல.

பெனிபிட் எடுத்துக் கொண்டு கள்ள வேலை செய்து கொண்டு சாமத்திய வீடோ/கல்யாணமோ செய்யிறதை விட,கள்ளக் காட் அடிக்கிறதை விட, மிகவும் கேவலமானது மக்களது தேசியம் சார்ந்த உணர்வை பாவித்து அதை கொச்சப்படுத்தி காசு புடுங்கிறது...இவர் மட்டுமல்ல இவரைப் போல காசு புடுங்கினவர்கள் எல்லாம் ஏழேழு தலை முறைக்கும் நரகத்தை அனுபவிப்பார்கள்.

துல்பனின் கருத்தைப் பார்த்தால் எல்லோரும் காசு அடிக்கினம் அதாலே ஸ்கந்தாவும் அடிச்சிட்டுப் போகட்டும் என்று சொல்கிற மாதிரி இருக்குது....வி.அண்ணா என்ன என்டால் அவரின்ட[ஸ்கந்தா] மகள் ஆசைப் பட்டாள் ஆகவே ஊரான் வீட்டு சொத்தையாவது வித்து கல்யாணம் செய்து குடுத்தது சரி என்று சொல்ற மாதிரி இருக்கு.

உண்மையாகவே நாட்டின் மேல் பற்றுக் கொண்ட ஒருவர் என்டால் தன்ட காசை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்காட்டிலும், தான் மக்களிட்ட புடுங்கின காசையாவது அந்த மக்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கலாம். உண்மையான நாட்டை நேசிக்கிற ஒருவராலே எப்படி இந்த நேரத்தில இப்படி ஒரு கல்யாணத்தை செய்ய முடிஞ்சது? அதுவும் மக்களிட்ட புடுங்கின காசை வைத்துக் கொண்டு?...நாளைக்கும் இவர்கள் தான் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு உண்டியல் குலுக்கிக் கொண்டு வருவார்கள்.மானம் கெட்டவர்கள்

16 hours ago, Nathamuni said:

ஸ்கந்தாவின் தனிப்பட்ட அவலத்தில் எல்லோரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.

அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். இவர் ஊர் உத்தியோகத்தில் பிசி. பிள்ளைகளை கவனிக்க நேரம் இருக்கவில்லை போல் உள்ளது.

கல்வி கற்க என வெளியே சென்று வந்த மூத்தவர் தான் இந்த, திருட்டுக்கு கும்பலின், bmw கார் எடுப்புகளில், காதல் வலையில் வீழந்து... பிடிவாதத்தால் இன்று தந்தையையும்... தாயையும்... குடும்பத்தினையும் அவலத்தில், அவமானத்தில் இழுத்து விடடார்.

சொல்லி வளர்த்து இருக்க வேண்டும். 

ஸ்கந்தா படங்களில் வரும் வில்லனை விட படு பயங்கரமான ஆள் . பொட்டர் ஆள் எனப்படும் சங்கீதனை பெரும் புலியாய் பிலிம் காட்டியதில்  இவரின் பங்கு கணிசமானது இவரின் தூண்டுதலில் சங்கீதன் இயங்குவது உண்மை முடிந்தால் சங்கீதன் பொது வெளியில் வந்து மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும் பார்க்கலாம் முடியாது அதுக்கு மூளையே இல்லையே. ஸ்கந்தா இலண்டனில் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துகளை ஏப்பம் விட்டவர் இல்லை என்று நாதமுனியால் நிரூபிக்க முடியுமா ? 

Edited by spyder12uk

6 hours ago, ரதி said:

நாதமுனியின்ட கதையைப் பார்த்தால் ஸ்கந்தா எந்தத் தப்புமே செய்யாத,மக்களது பணத்தை கொள்ளையடிக்காத ஒரு அப்பாவி.அவரது மகள் தான் அநியாயமாய் போய் கள்ளக் காட் போடுறவனிடம் ஏமாந்திட்டாள் என்ட மாதிரி இருக்குது.

அப்பாவி மக்கள் குளிரிலும்,பனியிலும் நின்று உழைச்ச காசை தேசியம்,புலி என்று சொல்லி ஸ்கந்தா ஏமத்தினதை விட அந்த பெடியன் ஒன்றும் பெரிசாய் ஏமாத்தேல்ல.

பெனிபிட் எடுத்துக் கொண்டு கள்ள வேலை செய்து கொண்டு சாமத்திய வீடோ/கல்யாணமோ செய்யிறதை விட,கள்ளக் காட் அடிக்கிறதை விட, மிகவும் கேவலமானது மக்களது தேசியம் சார்ந்த உணர்வை பாவித்து அதை கொச்சப்படுத்தி காசு புடுங்கிறது...இவர் மட்டுமல்ல இவரைப் போல காசு புடுங்கினவர்கள் எல்லாம் ஏழேழு தலை முறைக்கும் நரகத்தை அனுபவிப்பார்கள்.

துல்பனின் கருத்தைப் பார்த்தால் எல்லோரும் காசு அடிக்கினம் அதாலே ஸ்கந்தாவும் அடிச்சிட்டுப் போகட்டும் என்று சொல்கிற மாதிரி இருக்குது....வி.அண்ணா என்ன என்டால் அவரின்ட[ஸ்கந்தா] மகள் ஆசைப் பட்டாள் ஆகவே ஊரான் வீட்டு சொத்தையாவது வித்து கல்யாணம் செய்து குடுத்தது சரி என்று சொல்ற மாதிரி இருக்கு.

உண்மையாகவே நாட்டின் மேல் பற்றுக் கொண்ட ஒருவர் என்டால் தன்ட காசை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்காட்டிலும், தான் மக்களிட்ட புடுங்கின காசையாவது அந்த மக்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கலாம். உண்மையான நாட்டை நேசிக்கிற ஒருவராலே எப்படி இந்த நேரத்தில இப்படி ஒரு கல்யாணத்தை செய்ய முடிஞ்சது? அதுவும் மக்களிட்ட புடுங்கின காசை வைத்துக் கொண்டு?...நாளைக்கும் இவர்கள் தான் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு உண்டியல் குலுக்கிக் கொண்டு வருவார்கள்.மானம் கெட்டவர்கள்

வணக்கம் ரதி. நான இங்கு ஸ்கந்தா என்ற நபர் பற்றியோ அவர உத்தமர் என்றோ அவரின் பண மோசடியைப் பற்றியோ பேசவரவில்லை. அவர் யார் என்றோ என்ன நிறம் என்றோ எனக்கு தெரியாது. பொதுத்துறையில் ஊழல்  என்பது தமிழர்கள் உட்பட எமது தெற்காசிய பிராந்திய நாடுகளில்  பிரபல்யமானது. அது ஒன்றும் புதிய விடயம் அல்ல என்பதையே கூற வந்தேன். புலம் பெயர் நாடுகளிலும்  எமது தாயகத்திலும் ஆலயங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டால்  தற்போதய சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணமோசடிகளே பல மில்லியனகளை தாண்டும். அண்மையில் தாயகம் சென்றிறிருந்த போது அங்கு பொதுத்துறையிலும்  ஆலயங்களிலும் நடைபெற்றுகொண்டிருக்கும் ஊழல்களையும் அதை பற்றி மக்களுக்கு கூட பெரிய அக்கறையும் இல்லாதையும் காணமுடிந்தது. இவ்வாறான மக்களின் தவறுகளே நாங்கள் கூறிய ஸ்கந்தா போன்ற மோசடி நபர்கள உருவாக காரணம். இவரைப்போல பல மோசடி நபர்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் பொதுத்துறையில்்இன்னமும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இனங்கண்டு ஆதாரத்துடன் காட்டிக் கொடுப்பதன் மூலம் பொதுத்துறை ஊழல்களை தமிழர்களிடையே இல்லாமல்  செய்ய முடியும்.  அதை விடுத்து இவரை மட்டுமே திட்டிக்கொண்டு இருப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. எம்மை சுற்றி அன்றாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும. சகல ஊழல்களிலும் கவனம் செலுத்தவேண்டும்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

...வி.அண்ணா என்ன என்டால் அவரின்ட[ஸ்கந்தா] மகள் ஆசைப் பட்டாள் ஆகவே ஊரான் வீட்டு சொத்தையாவது வித்து கல்யாணம் செய்து குடுத்தது சரி என்று சொல்ற மாதிரி இருக்கு.

தயவு செய்து திரியை

எனது கருத்தை வாசித்து பதில் எழுதப்பழகுங்கள்.

இந் த திரியின் தலைப்பு மாப்பிள்ளையின் திருகுதாளம் பற்றியது தான்.

எனக்கு அவரது மாமனாரையோ அவரது திருகுதாளங்களோ தெரியாது

அவரைப்பற்றி  நீங்கள் எழுதுகின்றீர்கள் என்பதற்காக அதை வேத வாக்காக எடுக்கவும் முடியாது

அவரைப்பற்றி இனி நானே அறிந்து கொள்ள முயல்வேன்

இங்கே மாப்பிள்ளையின் திருகுதாளம் பற்றியும்

இங்குள்ள பெற்றோர்களின் திருமணத்தில் பெற்றோர்களின் பங்கு பற்றியுமே நான் எழுதியது

அதில் தவறிருந்தால் சொல்லுங்கள்.

லண்டனில் அமைந்துள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தமது நண்பர்கள் உறவினர்கள் சூழ நடத்தப்பட்ட இத் திருமண வைபவத்தின் ஒரு நாளைக்கான செலவுத் தொகை ஒரு லட்சம் பவுண்ஸ்.

கிஷோக், கிருதிகா என்ற இரண்டு தமிழர்களின் திருமணத்திற்கு 400 விருந்தாளிகள் சமூகமளித்திருந்தனர். தலைக்கு £150 விருந்து வழங்கப்பட்டுள்ளது. திருமண விழாவில் ‘அறுக்கப்பட்ட’ கேக் இன் விலை £3500. அவர்கள் உட்கார்ந்து திருமணவைபவத்தை நடத்திய மண்டபத்தின் நாள் வாடகை (£60000) அறுபதாயிரம் பவுண்ஸ்.

ASIAN BRIDE LUXE WESBSITE Name of Bride & Groom: Kishok Thavarajah & Kiruthiga Skanthatheva Hometown(s): Brixton/Harrow, London Date of wedding & registry: 16th July 2016 Catering: Ragamama Ragasaan Venue: Grosvenor House, Park Lane ASIAN BRIDE LUXE WESBSITE
Name of Bride & Groom:
Kishok Thavarajah & Kiruthiga Skanthatheva
Hometown(s):
Brixton/Harrow, London
Date of wedding & registry:
16th July 2016
Catering:
Ragamama Ragasaan
Venue:
Grosvenor House, Park Lane

இவ்வளவு செலவுகளையும் ஏற்றுக்கொண்ட கிஷோக்கின் வருடாந்த வருமானம் (£16000 /Year) பதினாறாயிரம் பவுண்ஸ்கள் மட்டுமே என்கிறது சண். திருமணம் நடைபெற்று சரியாக ஒரு வாரத்தின் பின்னர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள நீதிமன்றத்தில் கிஷோக்கிற்கு எட்டுமாத சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. வங்கி அட்டை மோசடி தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தாலேயே கிஷோகிற்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

நாதமுனியின்ட கதையைப் பார்த்தால் ஸ்கந்தா எந்தத் தப்புமே செய்யாத,மக்களது பணத்தை கொள்ளையடிக்காத ஒரு அப்பாவி. 

11 hours ago, spyder12uk said:

ஸ்கந்தா இலண்டனில் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துகளை ஏப்பம் விட்டவர் இல்லை என்று நாதமுனியால் நிரூபிக்க முடியுமா ? 

ஆகா,

நான் எங்க அந்தாளுக்கு வக்காலத்து வாங்கினேன்?

மேலே ஸ்கந்தா எப்படி பணமுதலை ஆனார் என்று விபரமாகப் பதிந்துள்ளேனே.

நான் பின்னர் சொல்லவந்தது, பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் தந்தைகளுக்கான பாடம். வீட்டிலிருந்து பாடசாலை, பாடசாலையில் இருந்து வீடு என காரில் பயணிக்கும் பிள்ளை, பாடசாலைக்கல்வி முடித்து தனியே பஸ்ஸில் படிக்க போய்வரும் போது, இந்த மாதிரி போக்கிரிகள், திருடர் கண்ணில் பட்டுத் துழைத்தால்...... அவ்வளவுதான்.

காலைல வாய் கழுவுவதே பியரில் தான் எனும் வீச்சு ரொட்டி போடுபவர், கிங்ஸ் கொலீயில் மெடிசின் படிக்கிற பெட்டய, நண்பணின் பிக்கப்பில போய், பிக்கப் பண்ணின கதையும் இருக்குது.

ஸ்கந்தாவின் மகளுக்கும் இதே தான் நடந்திருக்கும். இந்த கள்வனை விட, வீச்சுரொட்டி எவ்வளவோ மேல்.

நான் சொல்ல வந்தது இது பற்றி, இதற்கும், ஸ்கந்தா சுத்தலுக்கும் என்ன தொடர்பு ?

முக்கியமா இந்த விசயம், பெண்களுக்கு, குறிப்பாக ரதியக்காவுக்கு நன்கு புரியவேண்டுமே...

Edited by Nathamuni

இந்த சம்பவம் ஒரு நல்ல குடும்பதில் நடந்து இருந்தால் இதுவரைக்கும் அந்த குடும்பம் ........ போட்டு செத்திருக்கும் இல்லை விவாகரத்து ஆவது நடந்து இருக்கும் அதை விட்டு ஸ்கந்தா தன் மருமகனை ஏதோ போராளி ரேஞ்சில் ஒன்றுக்கு நான்கு வக்கீல் அமர்த்தி விடயத்தை சிறிதாக்கி ukயில் சிறை 8மாதம் என்றால் உண்மையில் நாலு மாதம் இனி ஹொலிடே அது இது என்று ஒரு 20 நாள் எடுபடும் கிட்டத்தட்ட மூன்று மாத சிறை வாசத்தில் மருமகன் வெளியில் வந்து ஹனிமூன் கொண்டாடுவார்  நாங்களும் ஸ்கந்தாவின் திறமைகளை வாய் உளையாமல் கதைப்பம் கிருபன் சொன்னது போல் இங்கு குற்றம் புரிபவர்களை தூக்கி பிடிப்பதால் மீண்டும் மிண்டும் குற்றம் புரிகிறார்கள் அவர்களுக்கு இது சாதாரண நிகழ்வு 

செய்தி - மருமகன் கைது. மாமனாருக்கு எதிரான  கருத்துக்கள்.   மாமனார் அல்லது மருமகன் யார் என்பது எனக்குத் தெரியாது. எனெனில் நான் இங்கிலாந்தில் வசிப்பவனல்ல. பொதுவாக புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் அல்லது சிறுவயதில் வந்த சிறுவர்களின்  பெரும்பாலான திருமணங்கள் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகவே நடக்கின்றன. 

சில நாட்களுக்கு முன்பு படித்த செய்தி - இயக்குனர் விஜய் அமலாபோல் விவாகரத்து , அமலாபோல் தனுசுடன் தொடர்பு. இங்கு தனுஸ் செய்த தவறுக்கு மாமனார் ரஜனிகாந்த் அல்லது தகப்பன் கஸ்தூரிராஜாவை ஒருவரும் குறை சொல்லவில்லை.

ஆனந்த சங்கரியைப் பிடிக்காத ஈழத்தமிழர்கள் அவருடைய மகனுக்கு கனடாவில் வாக்களித்தார்களா? இல்லையா?.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, sivakumaran said:

என்ன சொல்ல வாறியள், சிவா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, sivakumaran said:

செய்தி - மருமகன் கைது. மாமனாருக்கு எதிரான  கருத்துக்கள்.   மாமனார் அல்லது மருமகன் யார் என்பது எனக்குத் தெரியாது. எனெனில் நான் இங்கிலாந்தில் வசிப்பவனல்ல. பொதுவாக புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் அல்லது சிறுவயதில் வந்த சிறுவர்களின்  பெரும்பாலான திருமணங்கள் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகவே நடக்கின்றன. 

சில நாட்களுக்கு முன்பு படித்த செய்தி - இயக்குனர் விஜய் அமலாபோல் விவாகரத்து , அமலாபோல் தனுசுடன் தொடர்பு. இங்கு தனுஸ் செய்த தவறுக்கு மாமனார் ரஜனிகாந்த் அல்லது தகப்பன் கஸ்தூரிராஜாவை ஒருவரும் குறை சொல்லவில்லை.

ஆனந்த சங்கரியைப் பிடிக்காத ஈழத்தமிழர்கள் அவருடைய மகனுக்கு கனடாவில் வாக்களித்தார்களா? இல்லையா?.

அதே..

எங்கள் குறியே வேறு

ஏதாவது ஒரு விதத்தில் தேசியத்துக்காக தன் கடமையை செய்த ஒருவரை எதற்குள்ளாவது  இழுத்து கேவலப்படுத்தணும்

இதனால் தான் நாங்க முன்னமே ஒதுங்கி இருந்தனாங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவணும்

அப்படியே இதற்கு ஆதரவா எவராவது எழுதினா

ஓ நீங்களும் அந்த வகை தானே என இணைப்பு கொடுக்கணும்

அப்படியே எல்லோரையும் ஓரம் கட்டிவிட்டு........???

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா அந்தப் பெடியன் ஒரு சுப்பர் மார்கெடடில் முழு நேர வேலை பாஎர்த்துக் கொண்டு இன்னொரு இடத்தில் பகுதி நேரமாக பைக்கிங் வேலைக்கு போற்வன்[மேலே செய்தியிலும் அப்படித் தான் சொல்லி இருக்கு.].
மில்லியன் கணக்கில காசு வைச்சிருந்த பெடியன் ஊரை ஏமாத்துவதற்காக ஒரு பார்ட் டைம் வேலைக்கு மட்டும் போயிருக்கலாம். வீடோ,சொத்துப்,பத்தோ அல்லது வியாபாராமோ செய்திருக்கலாம்.அதை எல்லாம் விட்டுட்டு அந்தக் காசை வைச்சுக் கல்யாணம் செய்தான் என்பதை உங்களை மாதிரி ஆட்கள் வேண்டுமானால் நம்புங்கோ...அந்தப் பெடியன் கள்ளக் காட் போடுறவன் தான் அதை அவன் முழு நேர தொழிலாக செய்யவும் இல்லை.அவ்வளவு காசு அந்தப் பெடியனிடம் இல்லை...தன்ட தகப்பனைக் காப்பாற்ற பெட்டை சொன்ன பொய்யால தான் பெடியன் இப்ப உள்ளுக்குள்ள இருக்குது.தக்ப்பனாலா எப்படி மில்லியன் பவுண்ஸ்சுக்கு கணக்கு காட்ட முடியும்? அவர் என்ன உழைச்சா சம்பாதித்தவர்?...புலியையும்,தேசியத்தையும் சொல்லி ஆட்களை ஏமாத்தி புடுங்கின காசு தானே. வரி கட்டி இருப்பாரா இல்லைத் தானே...அவர் உள்ளுக்குள்ள போறதை விட மருமகன் உள்ளுக்குள போறது அவருக்கு பாதுகாப்பு தானே அதைத் தான் அவர் செய்தார்.

இறுதி யுத்தத்திற்கு என்று சேர்த்த காசு எங்கே?
அந்தக் காசைக் கொண்டு ஊரில் இருக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட,அங்கவீனப்பட்ட போராளிகளுகோ அல்லது மக்களுக்கோ என்னத்தைக் கிழித்தவர்வர்கள்?
இப்பவும் உதவி செய்கின்றவர்கள் காசு சேர்த்து தான் அங்கிருப்பவர்களுக்கு உதவுகிறார்களே தவிர இறுதி யுத்த நேரம் சேர்த்த காசுக்கு ஒரு கணக்கும் இல்லை.
புலிகள் காணமல் போன மாதிரி,புலிகளுக்கு என சேர்த்த காசும் காணமல் போய் விட்டது. இல்லையா அண்ணா?
எவனும் கணக்கு கேட்கக் கூடாது. கேட்டால் அவர்களுடைய தேசிய செயற்பாட்டை நாங்கள் முடக்குகின்றோம் இல்லையா?
ஊரான் வீட்டுக் காசு எடுத்து தன்ட மகளின்ட கல்யாணத்தை செய்கிறதை விட நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாகலாம்.
டக்லசிஸ்ட கணக்கு கேட்போம்,மகிந்தா காசு அடிச்சதைப் பற்றி கவலைப்படுவோம்.ஆனால்,தேசியவாதிகள் காசு அடிச்சால் மட்டும் ஒரு நாய்க்கும் கேட்கின்ற உரிமை இல்லை.
தலைவர் இப்ப இருந்திருந்தால் தன்ட பேரை,இயக்கத்தை சொல்லி தங்கட சொந்த வயிற்றை வளர்க்கிறவர்களை விட அமைதியாக இருப்பவர்கள்,மாற்று
கருத்து வைப்பவர்கள் எவ்வளவோ மேல் என்று நினைத்திருப்பார்.
தலைவரைப் பின்பற்றுபவர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்கள் பார்த்து சிரிக்கும் படி இருக்க கூடாது.
உங்களுக்கு அவரைத் தெரியாது என சொல்லிக் கொண்டு திரும்ப,திரும்ப அவருக்கு சப்போட் பண்ணுவதைப் பார்க்க மன்னிக்க வேண்டும் நீங்களும் அப்படிப்ட்ட ஆளாக இருப்பீர்களோ என்பதை தவிர்க்க முடியவில்லை.என்னைப் பொறுத்த வரை தெரியாட்டில் அது பற்றிக் கதைக்கக் கூடாது.

லண்டனில் இருப்பவர்களில் பெரும்பானோருக்கு இப்ப அவரைப் பற்றி தெரியும்.இனி மேலும் இந்தத் திரியில் தேவையில்லாமல் அவரைப் பற்றி கதைத்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கு இருவரையும் தெரியாது

உங்களுக்கு தெரிந்திருக்கிறது

நந்தனுக்கும் தெரிந்திருக்கிறது..

எனவே உண்மை என்றே ஏற்கின்றேன்

எனவே இதில் இனி என் கருத்து இருக்காது

என்னைப்பற்றி  எழுதிய கருத்துக்கு

அவர் 7 நாளும் 15 மணித்தியாலங்கள் வேலை செய்து தான் உழைத்தவர் என நீங்களே ஒருநாள் எழுதுவீர்கள்.

நன்றி நேரத்துக்கும் விளக்கத்துக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் விசுகு அண்ணா உங்கள் மனதை நோகடிப்பதற்காக அப்படி எழுதவில்லை. புலி,புலியில் இருந்தவர்கள்,புலித் தேசியம் கதைப்பவர்கள் எந்த வித பிழையுமே செய்ய மாட்டார்கள் என்று கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுக்கிறீங்கள் பாருங்கள் அதைத் தான் பிழை என சொல்கின்றேன்....மற்றப் படி புலி,தேசியம் என்று யாராவது வந்து உங்களோடு கதைத்தால் அவர்களை கண்ணை மூடிக் கொண்டு நம்புகின்ற அப்பாவி நீங்கள் என எப்பவோ உங்களை ச்ந்தித்தவர்கள் மூலம் தெரிந்து கொண்டது.உங்கள் கருத்துக்களிலும் அது தான் பிரதிபலிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

இல்லை சகோதரி

உங்களை நான் தப்பாக எழுதவில்லை

கண்ணை மூடிக்கொண்டும் நம்புவதில்லை

என்னைப்போல் தான் மற்றவர்களும் என்ற நிலைப்பாடு தான்

ஆனால் அதற்குள்ளும் இருக்கிறார்கள்

இங்கேயே முன்னாள்கள் பலரை விமர்சித்துள்ளேன்.

ஆனால் அந்த குறிப்பிட்டவர்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தத்தையும் சாடுவதையே வெறுக்கின்றேன்.

மன்னிப்பெல்லாம் எதற்கு?

நன்றி மீண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

கண்ணை மூடிக்கொண்டும் நம்புவதில்லை

என்னைப்போல் தான் மற்றவர்களும் என்ற நிலைப்பாடு தான்

ஆனால் அதற்குள்ளும் இருக்கிறார்கள்

இங்கேயே முன்னாள்கள் பலரை விமர்சித்துள்ளேன்.

ஆனால் அந்த குறிப்பிட்டவர்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தத்தையும் சாடுவதையே வெறுக்கின்றேன்.

இந்த வரிகளுக்குள்ளேயே பல முரண்பாடுகள் உள்ளன.

தேசியச் செயற்பாட்டார்கள் பலர் வாழ்வையும் உழைப்பையும் தியாகம் செய்தவர்கள்தான், அதே நேரத்தில்  அவர்களுக்குள்ளும் வியாபாரிகளும், மோசடிக்காரர்களும், புகழ்விரும்பிகளும் இருந்தார்கள்.  எனவே தீர ஆராயாமல் வெள்ளை அடிக்க முயலக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிரச்சினையில் ஒரு பெண்பிள்ளையின் வாழ்வும் அடங்கியிருக்கிறது.அதனால் இதைப்பற்றிப் பெரிதாக எழுதுவது நல்லதாகப்படவில்லை. என்று பலர் அமைதியாக இருக்கின்றார்கள்.அதனால்தான் முகப்புத்தகம் போனற சமூக வலைத்தளங்களில் பெரிதாக எழுதவில்லை. எல்லோருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். கட்டற்ற சுதந்திரம் உள்ள இந்த நாடுகளில் பலர் வழிதவறிப் போகச் சந்தர்பம் உண்டு. ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு நன்மை தீமைகளை சொல்லி வளர்க்க வேண்டும்.என்னைப் பொறுத்தவரை பெரும்பாலலான தமிழ்மக்கள் இந்த விடயத்தைப் பொறுப்புடன் கையாண்டு இருக்கிறார்கள். அதகாக தவறு செய்தவர்களை மன்னித்து விட்டார்கள் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.ஆனால் இதைச்சம்பந்தப்பட்டவர்கள் சாதகமாகப்பயன்படுத்தக்கூடாது.விசுகரும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் கருத்துக்களை வைத்திருக்கிறார். என்று நினைக்கிறேன்.

இந்தச் செய்தியை சண் பே;பரில் வாசித்த ஒரு இந்தியன் என்னிடம் என்ன உங்கட ஆக்கள் செய்த வேலையால் ஆசிய மக்களுக்கே இழுக்கு என்று சொன்னான். வெள்ளையளுக்கும் சொன்னான். இந்தியர்கள் செய்யிற தில்லுமுல்லுகளை இதைவிட அதிகம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே அமைதியாக இருந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க வெளி நாட்டில அரசாங்கங்களை சுத்தாத தமிழர்களை காண்பதே அரிது. இதில...... ஒரு பகுதிக்கு எப்பவும் தேசியம் பேசுறவை மேலுதான் காண்டு. அவை சுத்தமென்றில்லை... எவையும் சுத்தமில்லை. இன்னொரு ஆக்கள் உட்பட. அங்க கிளறினால் தான் அவைட.. துர்நாற்றம் ஊர் அறியும். அதுவரை அடுத்தவரை குறை சொல்லி பிழைக்க வேண்டியான். மொத்தாம தமிழர்கள்.. மாற்றி யோச்சால்.. அன்றி.. இதில் அவர் இவர் என்று சுட்டுவது அவரவர் தம்மைச் சுட்டுவதாகவே அமையும். இதுதான் புகலிடத்தில் எம்மவரிடம் கண்ட உண்மை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

On 10/17/2016 at 4:40 PM, Sasi_varnam said:

"தேசிய செயல்பாட்டாளரோடு"  சார்ந்த குடும்பம், குழாம் எனும் போது 
வெறுமனே வெட்கி தலை குனியும் செயல் அல்ல, கூடவே ஆத்திரம், அசிங்கம், அவர் முகங்களில் காரி உமிழும் உணர்வையும்  ஏற்படுத்துகிறது 
இந்த பன்னாடைகளை ஒட்டு மொத்தமாக லண்டன் வாழ் சமூகம் ஒதுக்கி, அவர்கள் குறித்த மேலதிக அறியப்பாடாத அவர்களின் மொள்ள மாறித்தனங்களையும் வெளிக்கொண்டு வருவதே சரியானதை இருக்கும்.

சாதாரணமாக களவுகளையும் மொள்ளமாரி தனத்தை செய்பவரை காட்டிலும் இந்த "தேசிய" சாயம் பூசி ஊரார் பணத்தில் சுக போகம் காணும் மலம் திண்ணிகளை இனம் காண்போம். இதுவும் கூட "தேசிய" கடமையே.

ஆம். கனடா, லண்டன், பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் தேசியத்தை சாட்டி காசு பார்த்த, பார்க்கும் கூட்டத்தை எமது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி அவர்களின் இந்தத் ஈனச்செயல்களை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளை விட மிகவும் கொடியவர்கள்.தமது சுய தேவைகளுக்காக சொந்தங்களையே கூட்டிக்கொடுக்க கூடிய ஈனர்கள். எமது சமூகத்திலிருந்து நிரந்தரமாக களையெடுக்கப்பட வேண்டியவர்கள்.tw_cookie:

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
On 10/20/2016 at 10:54 AM, விசுகு said:

அதே..

எங்கள் குறியே வேறு

ஏதாவது ஒரு விதத்தில் தேசியத்துக்காக தன் கடமையை செய்த ஒருவரை எதற்குள்ளாவது  இழுத்து கேவலப்படுத்தணும்

இதனால் தான் நாங்க முன்னமே ஒதுங்கி இருந்தனாங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவணும்

அப்படியே இதற்கு ஆதரவா எவராவது எழுதினா

ஓ நீங்களும் அந்த வகை தானே என இணைப்பு கொடுக்கணும்

அப்படியே எல்லோரையும் ஓரம் கட்டிவிட்டு........???

விசுகர், யாரும் தேசியத்துக்கென்று உயிராய் உழைத்தவர்களை குற்றம் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார்கள். தேசியத்தின் பெயரைச்சொல்லி சாதாரண மக்களிடமிருந்து காசைப்பிடுங்கி உல்லாசமாக வாழ்பவர்களைத்தான் கருவறுக்கவேண்டும் என்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.