Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனிதம் தலைகுனிந்துவிட்டது : யாழில் இடம்பெற்ற துன்பியல் சம்பவம் ( காணொளி இணைப்பு)

Featured Replies

மனிதம் தலைகுனிந்துவிட்டது : யாழில் இடம்பெற்ற துன்பியல் சம்பவம் ( காணொளி இணைப்பு)

( மயூரன் )

யாழ் நகரிலுள்ள உணவகமொன்றின் முன்பாக யாசகர் ஒருவரை உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் நீர் ஊற்றி துரத்தும் காணொளி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

jaffna.jpg

குறித்த கடை முன்பாக யாசகம் பெற்றுவந்த வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடன், நீரினை அவர் மீது ஊற்றி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தியுள்ளார். 

http://www.virakesari.lk/article/12586

அவரை அகற்றுவதற்கு பலவழிகள் இருக்கும் போது தண்ணீரை ஊற்றுவது கொடுமை.
 
கடந்த ஆட்சியில் இருந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் பிச்சைக்காரர்களை கடத்தி கொலைசெய்திருந்தார்கள். 

10 hours ago, போல் said:

அவரை அகற்றுவதற்கு பலவழிகள் இருக்கும் போது தண்ணீரை ஊற்றுவது கொடுமை.
 
கடந்த ஆட்சியில் இருந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் பிச்சைக்காரர்களை கடத்தி கொலைசெய்திருந்தார்கள். 

இந்த விஷயத்தில் முஸ்லீம்களுக்கு எதிராகவும் ஏதும் சொல்லியிருக்கலாமே?  மறந்து விட்டீர்களா  

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, போல் said:

அவரை அகற்றுவதற்கு பலவழிகள் இருக்கும் போது தண்ணீரை ஊற்றுவது கொடுமை.
 
கடந்த ஆட்சியில் இருந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் பிச்சைக்காரர்களை கடத்தி கொலைசெய்திருந்தார்கள். 

இவர்  வேற அடிக்கடி குண்டுகள் போட்டுகிட்டு :11_blush::11_blush:

யாழ் பாணத்தில் என்ன இலங்கையில் எல்லா பகுதிகளிலும் நடக்கிறது  அது வெளியில் வரும் போதுதான் கன்பேர் பொங்கி எழுகிறார்கள்  ஆனால் அந்த பெரியவரை அதுவரைக்கும் ஒருவர் கூடவா காணவில்லை அல்லது கண் தெரியாதவர்கள்தான் அந்த பகுதியில் போய் வருகிறார்களா என்ன நமக்கு முன்னே நடக்கிறது ஆனால் அடுத்தவன் போட்டோவோ அல்லது வீடியோ  புடிச்சு போட்டா மட்டும் பொங்கி எழுவது 

அந்த மனிசரை எத்தனை பேர் முதியவர் காப்பகம் சேர்க்க நினைத்ட்கிருப்பீர்கள் அதை செய்ய நேரமில்லை ஆனால் வீடியோ எடுக்க நேரம் இருக்கிறது சமூக ஆர்வலர்கள் உங்கள் பணி தேவை ஆனால் தேவையானவையே தேவை 

39 minutes ago, முனிவர் ஜீ said:

இவர்  வேற அடிக்கடி குண்டுகள் போட்டுகிட்டு :11_blush::11_blush:

குண்டுகள் வெடிக்குதா வெடிக்கலையா?  

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பௌத்த மதவாத  அரச பயங்கரவாதிகள்  ஆளும்  நாட்டில்  இது சாதாரணம் :grin:

.

.

.

.

.

.

..

தண்ணி ஊத்தினது  தமிழனா ,சிங்களவனா, இல்ல முஸ்லீமா  எண்டு  சொன்னீங்கலண்டா :unsure:  இன்னும் கொஞ்சம்  வசனம்  சேர்க்கலாம் :102_point_up_2:

  • கருத்துக்கள உறவுகள்

Mohan Rj Kanesh நேற்றையதினம் நமது சமுதாயம் மீது அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ளும் அதிகமாநோரால் முகநூலிலும் இணையத்திலும் பகிரப்பட்ட விடயம் யாசகம் செய்யும் முதியவர் ஒருவர் கடை வாசலில் கடையில் வேலை செய்பவர் ஒருவரால் தண்ணீரூற்றி விரட்டப் படும் காட்சி.....

இதை வி
மர்சித்தவர்களும் யாசகம் செய்தவரும் வேற்றுகிரக வாசிகள் இல்லை. எனக்குத் தெரிந்து அவர் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு மேலாக யாழ் நகரில் நட மாடுபவர். இவரின் நடவடிக்கைகள் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், வியாபாரம் செய்யும் கடை வாசலில் உற்கார்ந்து இருந்து போற வாறவர்களுடனும் பென்களுடனும் தகாத வார்தை பிரயோகம் செய்தல் போன்ற அருவருக்கத் தக்க வகையில் நாகரிகம் மற்ற செயல்கள் செய்தல்.

ஓரு சில வாரத்துக்கு முன்னர் யாழ் நகரில் வடைக்கு பெயர்போன சாப்பாட்டுக் கடை உரிமையாளரால் தும்புதடியால் அடித்து விரட்டி பொலிஸ்சில் முறைப்பாடும் செய்யப்பட்டது என் கண்கூடாக நடந்தது. இது பலரும் காணும் வகையில் கடை வாசலில் நடை பெற்றது. அதன் பின் பொலிஸ் வந்து விரட்டிவிட்டு கண்டும் காணாமலும் போனார்கள்.

யாழ் நகரில் பிச்சை எடுக்காமால் கையில் குழந்தையுடன் ஊதுபத்தி விற்க்கும் எத்தனையோ பென்களை கண்டு இருக்கிறேன் இப்படி இருக்கும் போது இதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டவரின் மனநிலை இதை வைத்து பெயர் தேடும் நோக்கம் தவிர வேறு எதுவும் இல்லை. அப்படி இல்லை என்றால் அவர் அந்த இடத்தில் புகைப்படம் எடுப்பதை தவிர்த்து அவருக்கு உதவியிருக்க வேண்டும்.

தயவுசெய்து சுயலாபத்துக்காக அடுத்தவர்களை பயன்படுத்தாதீர்கள்

  • தொடங்கியவர்

தண்ணீர் ஊற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வயோதிபர் பத்திரமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் சேர்ப்பிப்பு

நடவடிக்கை எடுத்த யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளரும் மனித உரிமை ஆர்வலருமான திருமதி றசிகலா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

மேலும் இது போன்ற பலரையும் உரிய இடங்களில் சேர்த்து அவர்களை சரியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இதில் செயற்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இது தொடர்பாக உண்மையை ஆய்வு செய்து நான் பதிவு செய்த தகவலை தங்கள் இணையத்தளங்களில் பதிவேற்றங்கள் செய்தமையும் நன்றியோடு நினைக்கிறேன்.

லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்.

14633038_1084810318235414_89799074546782

14720583_1084810418235404_14091990203685

14650714_1084810441568735_18795717279610

  • கருத்துக்கள உறவுகள்

இவரை போல் பலபேர் திரிகிறார்கள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க முடியாமல் சில பேர் ஓடி விடுகிறார்கள்  மட்டக்களப்பில் தானியார் பஸ் நிலையம் அருகாமையில் பலர் அங்கேயே வசிக்கிறார்கள்  போய் வரும் பயணிகளிடம் பிச்சை கேட்பது (ஆண் ) பிறகு அந்த காசை கொண்டு அதே பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்னால் உள்ள  பாரில் சாரயாலம் வாங்கி குடிக்கிறார் 

எனது காலில் விழுந்து சாப்பிட வில்லை காசு தாங்கள் என்று கேட்டார் ஒரு ஆண் நான் ஐம்பது ரூபாயை கொடுத்தேன் அவரையே உற்று நோக்கியிருந்த எனக்கு அந்த காட்சி மனவ்ருத்தமாக இருந்ட்கது  பிறகு அவர் வரும் போதெல்லாம் யாரும் அவருகுக்கு காசு கொடுக்க வேண்டாம் என்பேன் இப்படி கனபேர் திரிகிறார்கள் பிச்சைக்காரன் பெயரில் 

4 hours ago, நந்தன் said:

சிங்கள பௌத்த மதவாத  அரச பயங்கரவாதிகள்  ஆளும்  நாட்டில்  இது சாதாரணம் :grin:

.தண்ணி ஊத்தினது  தமிழனா ,சிங்களவனா, இல்ல முஸ்லீமா  எண்டு  சொன்னீங்கலண்டா :unsure:  இன்னும் கொஞ்சம்  வசனம்  சேர்க்கலாம் :102_point_up_2:

ஏன் இந்த கொலை வெறி :11_blush:

4 hours ago, போல் said:

குண்டுகள் வெடிக்குதா வெடிக்கலையா?  

நீங்க போடுற குண்டு சத்தமாய்தான் வெடிக்கும் போல் அண்ணை :11_blush:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

Mohan Rj Kanesh நேற்றையதினம் நமது சமுதாயம் மீது அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ளும் அதிகமாநோரால் முகநூலிலும் இணையத்திலும் பகிரப்பட்ட விடயம் யாசகம் செய்யும் முதியவர் ஒருவர் கடை வாசலில் கடையில் வேலை செய்பவர் ஒருவரால் தண்ணீரூற்றி விரட்டப் படும் காட்சி.....

இதை வி
மர்சித்தவர்களும் யாசகம் செய்தவரும் வேற்றுகிரக வாசிகள் இல்லை. எனக்குத் தெரிந்து அவர் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு மேலாக யாழ் நகரில் நட மாடுபவர். இவரின் நடவடிக்கைகள் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், வியாபாரம் செய்யும் கடை வாசலில் உற்கார்ந்து இருந்து போற வாறவர்களுடனும் பென்களுடனும் தகாத வார்தை பிரயோகம் செய்தல் போன்ற அருவருக்கத் தக்க வகையில் நாகரிகம் மற்ற செயல்கள் செய்தல்.

ஓரு சில வாரத்துக்கு முன்னர் யாழ் நகரில் வடைக்கு பெயர்போன சாப்பாட்டுக் கடை உரிமையாளரால் தும்புதடியால் அடித்து விரட்டி பொலிஸ்சில் முறைப்பாடும் செய்யப்பட்டது என் கண்கூடாக நடந்தது. இது பலரும் காணும் வகையில் கடை வாசலில் நடை பெற்றது. அதன் பின் பொலிஸ் வந்து விரட்டிவிட்டு கண்டும் காணாமலும் போனார்கள்.

யாழ் நகரில் பிச்சை எடுக்காமால் கையில் குழந்தையுடன் ஊதுபத்தி விற்க்கும் எத்தனையோ பென்களை கண்டு இருக்கிறேன் இப்படி இருக்கும் போது இதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில்
பதிவிட்டவரின் மனநிலை இதை வைத்து பெயர் தேடும் நோக்கம் தவிர வேறு எதுவும் இல்லை. அப்படி இல்லை என்றால் அவர் அந்த இடத்தில் புகைப்படம் எடுப்பதை தவிர்த்து அவருக்கு உதவியிருக்க வேண்டும்.

தயவுசெய்து சுயலாபத்துக்காக அடுத்தவர்களை பயன்படுத்தாதீர்கள்

தண்ணீர் ஊற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வயோதிபர் பத்திரமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் சேர்ப்பிப்பு

எல்லா வினைக்கும் ஓர் எதிர் வினையுண்டு .....
மேலே மோகன் கணேஷ் என்ற சமூக விரும்பி வீடியோ அடுத்தவரை 
சாடி இருந்தார் ..... அவரே சொல்கிறார் கடந்த 6மாதமாக இது சாதாரணமாக 
இருந்ததாம்.

ஒரே ஒரு வீடியோ முதியவரை கைதடியில் சேர்த்திருக்கிறது.

எல்லா விடயங்களையும் நாம் எந்நேரமும் எல்லா கோணத்திலும் பார்ப்பதில்லை.

கேராம் என்ற திரைப்படத்தை வெள்ளைக்காரன் ஒருவன் கோலிவுட்டில் எடுத்திருந்தால் 
இந்தியாவில் மூலை முடுக்கெல்லாம் ஓடியிருக்கும் மொழிமாற்றி. காந்தி கதை என்று போய் 
பார்த்திருப்பார்கள்.
அதை கமல் எடுத்ததால் பத்தோடு பதினொன்றாகி விட்டது.

வீடியோ அடுத்தவரை  சாடுவதை விட நாம் என்ன வெட்டி புடிங்கினோம் என்று பார்க்க வேண்டும்.
(அவர் குறைந்த பட்ஷம் அதையாவது செய்திருக்கிறார்) 

  • தொடங்கியவர்

தண்ணீர் ஊற்றி விரட்டப்பட்ட யாசகர் முதியோர் இல்லத்தில்

யாழ்.நகரப்பகுதியில் வைத்து தண்ணீர் ஊற்றி விரட்டியடிக்கப்பட்ட யாசகரை கைதடியிலுள்ள முதியோர் இல்லம் பொறுப்பெடுத்துள்ளது.

fafaf.jpg

கடந்த வாரம் யாழ் நகரிலுள்ள உணவகமொன்றின் முன்பாக யாசகர் ஒருவரை உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் நீர் ஊற்றி துரத்தும் காணொளி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியிருந்தது.

குறித்த கடை முன்பாக யாசகம் பெற்றுவந்த வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடன், நீரினை அவர் மீது ஊற்றி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் குறித்த யாசகரை கைதடியிலுள்ள முதியோர் இல்லம் பொறுப்பெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/12634

On 22/10/2016 at 9:08 AM, Maruthankerny said:

ஒரே ஒரு வீடியோ முதியவரை கைதடியில் சேர்த்திருக்கிறது.

On 22/10/2016 at 9:08 AM, Maruthankerny said:

வீடியோ அடுத்தவரை  சாடுவதை விட நாம் என்ன வெட்டி புடிங்கினோம் என்று பார்க்க வேண்டும்.
(அவர் குறைந்த பட்ஷம் அதையாவது செய்திருக்கிறார்) 

உண்மைதான் மருது - இந்த வீடியோவினால்தான் முதியவருக்கு ஒரு புகலிடம் கிடைத்திருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.