Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு அன்பான அவசரமான வேண்டு கோள்.

தேசத்தின் குரல் பாலா அண்ணை அவர்களின் அஸ்தியை வைத்து ஆபத்தான அரசியல் ஒன்று நடக்கிறது.இந்த அஸ்தி வைத்து நினைவு தூபி கட்ட முயன்ற வரலாற்று மையத்தினர் அதற்கான அனுமதியை அடேல் அன்ரியிடம் பெற்றிருக்க வேண்டும்.தேசத்தின் குரல் பாலா அண்ணை அவர்கள் தேசத்தின் சொத்து என்ற வகையில் அவருக்கான நினைவு தூபியை கட்ட தங்களுக்கு உரிமை இருக்கிறது என்று வரலாற்று மையத்தினர் கருதினாலும் நல்லெண்ண அடிப்படையிலாவது இந்த தகவலை அடேல் அன்ரியிடம் அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும்.இது முதல் தவறு. அடுத்து இந்த பிரச்சனையை கையிடுத்த நபர்கள் அடேல் அன்ரியை மறுப்பு அறிக்கை விடும் படி செய்து ஒரு அரசியல் சதி திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
இதை சமூக அக்கறையுள்ள பொது நபர்களின் அனுசரணையுடன் அடேல் அன்ரியையும் அழைத்து பேசி ஒரு இணக்கமான முடிவுக்கு வந்திருக்க முடியும்.அதை செய்யமால் அறிக்கை வெளியிட வைத்து அதை ஊடக வெளியிலே வெளியட்டு பரபரப்பு பிரச்சனையாக்கியதன் பின்னணியல் தான் ஒரு சதித்திட்டம் அடங்கியுள்ளது.
சிறீலங்கா அரசாங்கம் நீண்ட நாட்களாக அடேல் அன்ரியை குறிவைத்திருக்கிறது.விடுதலைப்புலிகள் போர் குற்றம் இழைத்திருக்கிறார்கள்.அடேல் அன்ரி இந்த போர் குற்றத்தின் பங்காளி என்று கூறி அவரை குற்றவாளிக் கூட்டில் நிறுத்த தருணம் பார்த்துக்கொண்டு அலைவது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.
பாலா அண்ணரின் மறைவுக்கு பின்னர் ஒதுங்கியிருந்த அன்ரியை அவர் இப்போதும் விடுதலைப்புலிகள் ஆலோசகராக இருந்து அவர்களை வழி நடத்த முயல்கின்றார் என்று காட்ட சிறீலங்கா அரசாங்கம் முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.

இந்த முயற்சியில் தன்னை தமிழனாக இனங்காட்டிவரும் சிங்கள நரி ஒன்று பின்நின்று செய்படுகிறது.தமிழ் சமூகத்தை பிளவு படுத்த சிங்கள தாய்க்கும் தமிழ் தந்தைக்கும் பிறந்த லக்ஷ்மன் கதிர்காமரை பயன்படுத்தியதைப் போன்று சிங்கள தாய்க்கும் தமிழ் தந்தைக்கும் மகனாகப் பிறந்த இந்த நரியை சிறீலங்கா புலனாய்வு துறை நீண்டகாலமாக பயன்படுத்தி வருகிறது.இந்த நரி தனது புனைபெயருக்கு பின்னால் கலாநிதி என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டு பல நாச வேலைகளை செய்து வருகிறது.அண்மையில் வரலாற்று மையத்தை மாட்டுப் பண்ணை என்று இந்த நரி எழுதியது.இந்த நரிக்கு வடமாரட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லமும் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லமும் மாட்டு மற்றும் செம்மறியாட்டு பண்ணைகளாக இருந்தவை என்பது தெரியாது.கனகபுரம் மாவிரர் துயிலும் இல்லம் கட்டாக்காலி மாடுகள் வந்து படுத்துறங்கும் மேயும் நிலமாகவே இருந்து.என்னதான் கருத்து முரண்பாடுகள் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் எந்த வெரு தமிழனும் மாவீரர்களது படத்தையோ நினைவு கல்லையோ வைத்து வணக்கம் செய்யும் இடத்தை மாட்டுப்பண்ணை போன்ற தகாத வார்த்தைகளை சொல்லி இழிவு படுத்த மாட்டார்கள்.ஒட்டுக் குழுக்கள் கூட இந்த சொல்லை பயன்படுத்த மாட்டார்கள்.தமிழனத்தை கருவறுக்க வேண்டும் மாவிரர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற சிங்கள பேரினவாத வெறி இந்த நரியிடம் இருந்து இயல்பாக வெளிப்பட்டிருக்கிறது.இந்த நரியன் வலையில் பலர் விழுந்திருக்கிறார்கள்.
குறிப்பாக வல்லை மக்களுக்கு...... எங்கள் இனத்துக்கு பெருமை சேர்த்த வல்லை மண்ணில் பிறந்த ஒருவர் இந்த நரியின் வலையில் விழுந்து தொடாந்து பாரிய தவறுகளை இழைத்து வருகிறார்.இந்த நரியால் அன்ரிக்கும் தமீழீழப் போராட்ட செய்பாடுகளுக்கும் ஏற்படப் போகும் பேராபத்தை நாங்கள் எல்லோரும் பொறுமையாக இருந்து சிந்தித்து கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
வல்லை மக்கள் அன்ரியிடம் பேசி இந்த பிரச்சனையை சமாதான முறையில் பேசி முடிவெடுக்க முயல வேண்டும்.அன்ரியின் அறிக்கையை திரும்ப பெற வைத்து அவருக்கு விருப்பம் இல்லை என்றால் பால அண்ணைக்கு கல்லறை கட்டுவதை நிறுத்துவிக்க வேண்டும்.
ஜேர்மனியிலே பிறந்த கார்ல் மார்க்சுக்கு லண்டனலிலே கல்லறை இருக்கும் போது பாலா அண்ணைக்கு இருப்பது ஒன்று பிழையான விடயமல்ல.
இதை வைத்து அன்ரியை சிக்க வைக்கும் சதித்திட்டத்தையும் இணையத்திலே பொய்யும் புரட்டும் எழுதி தமிழ் மக்களை பிளவு படுத்தும் சதித்திட்டத்தையும், நாங்கள் எங்களுக்காக உயிரைக் கொடுத்த மாவீரர்களின் பேரால் முறியடிப்போம் வாருங்கள்.
பின் குறிப்பு : நான் குறிப்பிடும் தமிழ் பேசும் சிங்கள நரியின் தாய்மாமன் தான் சிறீலங்கா புலனாய்வு துறை தலைவர்.

 

https://www.facebook.com/siva.sinnapodi?fref=ts

https://www.facebook.com/profile.php?id=100008219236786&fref=nf&pnref=story

17 hours ago, MEERA said:

கள்வர் கூட்டம் ஒன்று ஒரு குடுவையில் சாம்பலை வைத்துக்கொண்டு இது உங்கள் இறந்து போன தாயினதோ தந்தையினதோ என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? 

நீங்களும்  லண்டனில் இருப்பதால்......

ஐரோப்பிய நாடுகளில் எவரும் குடுவையில் அஸ்தியை வைத்துக்கொள்ளமுடியுமா??

அதற்கான சட்டம் ஒழுங்கு படிமானங்களை மீறமுடியுமா??

பாலா அண்ணையின்  அஸ்தி  இரண்டாக கொடுக்கப்பட்டது உண்மையா?

கொடுக்கப்பட்டிருந்தால் இரண்டாவது எங்கே??

இரண்டாவது சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தால்????

அதை அவர்கள் தற்பொழுது சொல்வதில்

அல்லது அதை மரியாதையுடன் எங்காவது வைப்பதில் என்ன பிரச்சினை??

இவற்றிற்கான பதில்கள் தெரிந்தால் தான் தெளிவுறமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இதை சமூக அக்கறையுள்ள பொது நபர்களின் அனுசரணையுடன் அடேல் அன்ரியையும் அழைத்து பேசி ஒரு இணக்கமான முடிவுக்கு வந்திருக்க முடியும்.

தங்கள் முகமூடி கிளிந்தவுடன் இப்படி அந்தர்பல்டி அஸ்தியை வைக்கும் போது ஏன் அடேலுடன் கலந்து ஆலோசிக்கவில்லை ?

2 hours ago, விசுகு said:

ண்மையில் வரலாற்று மையத்தை மாட்டுப் பண்ணை என்று இந்த நரி எழுதியது

நீங்களே அது வேண்டும்போது பண்ணை நிலம் என்றுதான் சொன்னது மற்றபடி எனக்கு இந்த உளவாளிக்கு வக்காலத்து வேண்டும் எண்ணம் கிடையாது .

2 hours ago, விசுகு said:

குறிப்பாக வல்லை மக்களுக்கு...... எங்கள் இனத்துக்கு பெருமை சேர்த்த வல்லை மண்ணில் பிறந்த ஒருவர் இந்த நரியின் வலையில் விழுந்து தொடாந்து பாரிய தவறுகளை இழைத்து வருகிறார்.இந்த நரியால் அன்ரிக்கும் தமீழீழப் போராட்ட செய்பாடுகளுக்கும் ஏற்படப் போகும் பேராபத்தை நாங்கள் எல்லோரும் பொறுமையாக இருந்து சிந்தித்து கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

நீங்கள் தான் தோன்றித்தனமாகவும் முட்டாள்தனமாகவும்  செய்யும் செயற்பாடுகள் பிழைத்தால் உங்களை சமனிலைபடுத்த ஏன் வல்வையர்கள் வரனும் ? உங்கள் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து செய்வது உண்டா ?

முதலில் இந்தப்பிரசனையை கிளப்பியது நீங்கள் தான் அப்போது பேராபத்து சிங்கள அரசால் வரும் என்பது இங்குள்ள சின்னபிள்ளைகளுக்கு கூட தெரியும் அவ்வளவுக்கு உங்களுக்கு அறிவு எனும்போது நகைக்க வைப்பதாக உள்ளது உங்கள் செயற்பாடுகள்.

இது சிவா சின்னபொடிக்கும் மற்றும் பிரச்சினைகளை வளர்ப்போருக்கும் ஆனா பதில்கள் ஒவ்வொருமுறையும் முட்டாள்தனமாக நடந்துவிட்டு கடைசியில் கலந்து கதைப்பம் என்பது இவர்களின் வாடிக்கை.அடேல் தனது பதிலில் தெள்ள தெளிவாக ஒரு அஸ்த்தி தான் என்று குறிப்பிட்டுவிட்டா தனது கணவரின் பெயரை தவறானவர்கள் வியாபார நோக்கத்துக்கு பாவிப்பது பற்றியும் சுட்டிக்காட்டி உள்ளா இதற்க்கு மேலும் அவர்கள் மல்லுக்கட்டினால் சொல்வதுக்கு ஒன்றுமில்லை .

2 hours ago, விசுகு said:

பாலா அண்ணையின்  அஸ்தி  இரண்டாக கொடுக்கப்பட்டது உண்மையா?

கொடுக்கப்பட்டிருந்தால் இரண்டாவது எங்கே??

விசுகு அண்ணேய்  அடேலின் மறுப்பறிக்கையில் அவ உறுதியாக  அஸ்த்தி ஒன்றுதான் என்று சொல்லியுள்ளா கவனிக்கவும் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய வியாபாரிகளும் திருடர்களும் தாங்களாக முரண்பட்டுக் கொள்வதில்லை! எப்பவும் ஒரு சிங்களவன் (அல்லது அரைச் சிங்களவன்) தான் பின்னுக்கிருந்து குத்தி விடுகிறான்! வெக்கமில்லையா இவங்களுக்கு? சொந்தப் புத்தியில்லாதவர்களுக்கு ஏன் அமைப்புகளும் நிலையங்களும் காசு சேர்ப்பும்?

  • கருத்துக்கள உறவுகள்

கூடாது செய்பவர்கள் எல்லாம் அவங்களின் ஆட்கள் ......

நாங்கள் அறிவாளிகள் 
நல்லவர்கள் எல்லாம்   எங்களுக்கு சொந்தகாரர் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 நீங்களும்  லண்டனில் இருப்பதால்......

ஐரோப்பிய நாடுகளில் எவரும் குடுவையில் அஸ்தியை வைத்துக்கொள்ளமுடியுமா??

அதற்கான சட்டம் ஒழுங்கு படிமானங்களை மீறமுடியுமா??

ஒருவரின் இறுதிச்சடங்கின்  போது "funeral directors" இடம் உங்களுக்கு அஸ்தி வேண்டும் என்று கூறினால் அவர்கள் எல்லாம் முடிந்து 2/3 நாட்களில் ஒரு பிளாஸ்டிக் குடுவையில் தருவார்கள். அதன் பிறகு அது உங்களுடையது.

சட்டம் ஒழுங்கு தெரியாது

பாலா அண்ணையின்  அஸ்தி  இரண்டாக கொடுக்கப்பட்டது உண்மையா?

பொதுவாக ஒரு பிளாஸ்டிக் குடுவையில் கொடுப்பார்கள், நீங்கள் உங்க வசதிப்படி பத்தாகவும் கொட்டி வைக்கலாம்.

கொடுக்கப்பட்டிருந்தால் இரண்டாவது எங்கே??

தலமைச்செயலக நண்பர்களின் கூற்று " 2 வது அஸ்தி சாந்தனால் ஸ்கந்தாவிடம் கொடுக்கப்பட்டு இப்போது வரலாற்று மையத்திடம்". வரலாற்றை மையத்தில் ஸ்கந்தா ஓர் முக்கிய புள்ளி.

இரண்டாவது சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தால்????

அதை அவர்கள் தற்பொழுது சொல்வதில் 

அல்லது அதை மரியாதையுடன் எங்காவது வைப்பதில் என்ன பிரச்சினை??

பாலா அண்ணா உயிருடன் உள்ள போதே தனக்கு இங்கு கல்லறை வைக்க வேண்டாம் என்று ஆணித்தரமாக கூறிவிட்டார். உங்கு பிரான்சில் உள்ளது போன்று 2007 இல் புலிகளுக்கு இங்கு செய்யத்தெரியாமலா இருந்தார்கள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கேள்வி, 

உந்த காணியை வாங்க எத்தனை புலுடாக்கள் விட்டார்கள்,

உங்கள் பிள்ளைக்கு சகோதரருக்கு கல்லறை கட்டுறம் ( மாவீரர் குடும்பத்திற்கு)

சிவன் கோயில் கட்டுறம் பின்னால ஆறு இருக்கிறது அஸ்தியை கரைக்கலாம், வருடாவருடம் பிதிர் கடன் செய்யலாம் (சைவ ஆட்களுக்கு)

பழைய சேர்ச் இருக்கு இடித்து பெரிதாக கட்டலாம் ( கிறீஸ்தவர்களுக்கு)

பெரிய மண்டபம் கட்டப்போறம் உங்ட விழாக்களை அங்கு வைக்கலாம், மற்ற மண்டபக்காரர் மாதிரி கெடுபிடி இல்லை

இப்படி பல, ஆனால் பாலா அண்ணரின் அஸ்தியை பற்றி ஒன்றும் கூறவில்லை. இப்போது மட்டும் ஏன்????

எனது ஊகம்

இந்த முறை வரலாற்று மையத்தில் மாவீரர் தினத்திற்கு வந்தவர்கள் 5 ஆயிரம், அதுவும் கார் விட்டு ஏற்றியவர்கள் பலர். மாவீரர் தினம் முடிய கணக்கு பார்த்திருப்பார்கள்.  என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கியவர்களுக்கு திடீரென உதித்தது "ஸ்கந்தாவின் பாலா அண்ணரின் அஸ்தி" என்ற அஸ்திரம். 

மாவீரர் தினம் முடிந்தவுடன் தூங்கிவிடும் TCC இனர் பாடு இனி திண்டாட்டம் தான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Maruthankerny said:

கூடாது செய்பவர்கள் எல்லாம் அவங்களின் ஆட்கள் ......

நாங்கள் அறிவாளிகள் 
நல்லவர்கள் எல்லாம்   எங்களுக்கு சொந்தகாரர் 

எங்குதான் குத்து வெட்டு இல்லை இங்கு எந்தசந்தர்ப்பத்திலும் இங்குள்ளவர்கள் நல்லவர்கள் அல்லது அறிவாளிகள் என்றோ கூறப்படவில்லை ஒற்றுமையாக இருக்க முடியவில்லையா குழப்பம் பண்ணாமல்தன்னும் இருங்கள் அதுகூட முடியவில்லை என்ன செய்வது.

53 minutes ago, MEERA said:

பாலா அண்ணையின்  அஸ்தி  இரண்டாக கொடுக்கப்பட்டது உண்மையா?

அடேலின் விளக்க கடிதத்தின் படி அஸ்தி  இரண்டாக வில்லை ஒன்றுதான் ஸ்கந்தாவை பற்றி இங்கு நான் சொல்லதேவையில்லை அவ்வளவு யோக்கியமானவர் புலம் பெயர் வியாபரத்துக்கு எதையும் செய்ய துணிந்தவர் .

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

விசுகு ஐயா எந்த தலைமைச் செயலக அநாமேதயப் பேர்வழியின் முகநூல் பதிவை வெட்டி ஒட்டியுள்ளீர்கள் என்று தெரியாது. இந்த அறிக்கைகள் எல்லாம் விடுதலைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் இயங்குபவர்களின் சீரழிவுகளைத்தான் அப்பட்டமாகக் காட்டுகின்றது. இரண்டு பகுதியினரும் தடுப்புக்குப் போய்வந்தவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவர்களை வைத்து தமது பிழைப்புவாத அரசியலை செய்ய எதுவித கூச்சமும் இல்லாமல் செய்கின்றார்கள்.

கிருபன்

இவர்கள் யார்?

எந்த அமைப்பை  சார்ந்தவர்கள் என்று எனக்கு தெரியாது

நேற்று அது பார்வைக்கு கிடைத்தது

இன்று சிவா சின்னப்பொடி அண்ணையின் முகநூலில் இது கிடைத்தது

அவ்வளவு தான்.

மற்றும்படி 

மாபெரும் அமைப்பின்

அழிவு

தோல்வி

உடைவு...

எப்பொழுதும் அதிகம் பேசப்படும்.

உண்மைகள் வெளி வரும் காலமிது

அமைதியுடன் காத்திருக்கின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம் அடேலின் மனைவியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமானதா தெரியல்ல. ஒரு போராளியா அறிமுகமானது தான் வரலாறு. அதுமட்டுமன்றி.. அவர் ஒரு போராளி. மாவீரர். ஏனைய மாவீரர்களுக்குரிய மதிப்பும் மரியாதையும் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

அடேல் ஆன்ரி இவ்வளவு அழிவுகள் நிகழும் போதும்..  வாயே திறக்கல்ல. உண்மையில்.. இது அவா எழுதின கடிதமா.... இல்ல.. அவாக்குப் பின்னாடி இருப்பவர்கள் எழுதி அல்லது எழுதி விச்ச கடிதமா..?! இப்ப நத்தாருக்கு புதுவருசத்துக்கு வாழ்த்துச் சொல்லுறவா.. முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு ஏன் அஞ்சலி செய்வதில்லை...??!.. ஒரு காலத்தில் புலி வரிச் சீருடை தரிச்சது கெளரவம்.. இப்ப அது அகெளரவமாப் படுகுதோ என்னமோ..?!.. அன்ரன் அண்ணாவின் அஸ்தியே நதியில ஓடனும்.. ஆனால்.. மற்றைய போராளிகளின் வித்துடல்.. வன்னியில் மட்டுவில் புதைகுழியில் கிடந்து அழுகனும்... இப்படி அன்ரன் அண்ணர் கனவிலும் நினச்சிருப்பாரோ... என்று தெரியல்ல. இயக்கத்துக்கு உண்மையா இருந்திருந்தா..??! இவற்றுக்கு அடேல் ஆன்ரி இன்னொரு கடிதம் எழுதி விளக்கினால்.. உலகம் விளங்கும். )

அன்ரன் அண்ணா.. ஏனைய போராளிகளுக்குரிய மதிப்பளிக்கபட வேண்டியவர்.. மாவீரர்களுக்குரிய மதிப்பு தமிழர்கள் இந்த உலகில் வாழும் வரை அளிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை.

===========

புத்தரின் பல்லு.. மயிரை வைச்சு ஒரு சமயம். ஜேசு நாதரின் சால்வையை வைச்சு ஒரு சமயம். நபியின் ஜட்டியை வைச்சு ஒரு சமயம்.. இப்படி உலகத்தில எத்தனையோ வியாபாரங்கள் நடக்குது. எத்தனையோ சனம் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் சாகுது. ஏன்.. வளர்ந்த நாடுகளில் கூட காசிருந்தும்.. பாசம் நேசம் தெரியாமல்.. மில்லியன் கணகான வயோதிபர்கள்.. அவலத்தில் விடப்பட்டுள்ளனர். இதெல்லாம் பலருக்குத் தெரியவில்லை.

===========

மேலும்.. முன்னாள் போராளிகள் என்போர் சொத்துப் பிரிக்கும் போக்கிரி கூட்டத்திடம் கையேந்தி ஒரு சதமும் வாங்க முடியாது.  இயக்கம் தலைவர் கண் முன்னே இருந்த போதே சுருட்டின கூட்டமும் இருக்குது. கோவில் கட்டின கூட்டமும் இருக்குது. அதை எல்லாம் எதிர்பார்க்காமல்.. உள்ளதை கைக்கு வருவதை முதலீடாக்கி வாழப் பழகிக் கொள்ளுங்கள். எதிர்பார்த்து ஏமாறக் கூடாது.

===========

மேலும்.. வெளிநாட்டில்... இயக்கத்தின் சொத்துக்களை முடக்க உதவினதும் எங்கட ஆக்கள் தான். தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.. உட்பட ஓரளவு நியாயமாக செயற்பட்ட அமைப்புக்களையும் பயங்கரவாத அமைப்புக்களாக்கி முடக்கி.. மக்களுக்கு சென்றடைய வேண்டியவற்றை சிலர் சுருட்ட வசதி செய்து கொடுத்ததும் எம்மவர் தான். காட்டிக்கொடுத்ததும் எம்மவர் தான்.. ஏன் முன்னாள் போராளிகள் என்று சொல்வோரில் இவர்களும்... அடங்குவர்.

===========

அடிப்படை ஒன்று தான் இங்கு நோக்கப்பட வேண்டியது அவசியம்.உண்மையான ஒரு முன்னாள்.. போராளி பங்கு கேட்டு வாழும் நிலையில் இருப்பான்/ள் என்று நினைக்கவில்லை. அந்தளவுக்கு தலைவர் அவர்களை வளர்த்ததாகவும் தெரியவில்லை. சில முன்னாள் போராளிகள்.. அங்காலாய்ப்பில் என்னென்னோவோ எல்லாம் செய்து முடித்துள்ளனர். செய்து கொண்டும் இருக்கினறனர். ஒட்டுமொத்த போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்திய முன்னாள் போராளிகளும் உளர். இதை எல்லாம் தாண்டி பார்க்கும் போது... எவனோ... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.. இனம் மொழி மண் விடுதலை என்று உயிர் தந்த.. உடல் சாய்ந்த.. அந்தப் போராளிகள் மக்களை நினைவு கூற ஒரு கல்லை இந்த உலகில் எந்த மூலையில் நட்டு வைச்சாலும் அது கெளரவிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகவே பார்க்கப்பட வேண்டும். மதிக்க வேண்டும்.

அதில்.. அன்ரன் அண்ணாவின் அஸ்தி இருக்கலாம்.. இல்லாமல் இருக்கலாம். அவரின் நினைவு அதில் பதியப்படுமானால்.. அதுதான் நிலைக்கும் மக்களிடம். இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் அடல் ஆன்டி வந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்க முடியாது. ஆனால்.. அன்ரன் அண்ணாவின் நினைவிடம் இருக்க வேண்டும்.. ஏனெனில்.. அவர் மக்களின் முன் ஒரு போராளி. மாவீரர். 

(கவனியுங்கள்.. இயக்கத்துக்கு ஆயிரக்கணக்கில்.. காசு கொடுத்தவனை விட கொடுக்காதவனும் காட்டிக்கொடுத்தவனும் தான் இப்ப அதிகம் கவலைப்படுறான்.. பங்கு எங்களுக்கும் கிடைச்சிருக்கலாமோன்னு. அந்த அங்கலாய்ப்பில்... மாவீரர்கள்.. மறக்கடிக்கப்படுகிறார்கள். எத்தனையோ மாவீரர்கள்.. பெற்றோரின் விருப்புக்கு அப்பால் சென்று கூட மண்ணை மக்களை நேசித்தவர்கள். இன்று அந்தப் பெற்றோரும் அவர்களை சாட்டி பிழைக்கும் இழி நிலையையும் நாம் பார்க்கிறோம். எல்லாத்தையும் கடந்து.. மாவீரர்கள்.. இந்த பூமிப் பந்தில் நிரந்தரமாக நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.. என்ற அடிப்படை தான் நிலைநிறுத்தப்பட வேண்டும். மற்ற எல்லாம் அதற்கு அப்பால்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அடேல் அன்ரியும் பாலா அண்ணரும் இணைந்துதான் போராட்த்திற்குள் வந்தார்கள். அடேல் அன்ரி ஆயுதப்பயிற்சி பெற்ற குப்பி வழங்கப்பட்ட ஒரு போராளி. 

  • கருத்துக்கள உறவுகள்

அடேல் ஆன்ரி புலிச் சீருடை போட்டது 1990 களில். அன்ரன் அண்ணா இயக்கத்துக்கு வந்தது 1970 களில் என்று நினைக்கிறேன். இப்ப அதுவல்ல பிரச்சனை.. அன்ரன் அண்ணா அடேல் ஆன்ரியின் கணவர்.. என்ற படியால்.. அவரின் அஸ்தி இயற்கையில் மிதக்க.. அதே இலட்சியம் சுமந்த மற்றைய திருமணமாகாத.. ஆன மாவீரர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட அடையாளமும் இன்றிப் போகனுன்னு.. எந்த ஒரு அடிப்படை இன மனிதத் தன்மை உள்ள மனிதனும் சிந்திக்கமாட்டான்.

ஒரே ஒரு வரி போதும்.. என் கணவரின் அஸ்தி.. மற்றவர்களிடம் இல்லை. அதேவேளை எனது கணவரும் மற்றைய மாவீரர்களுக்கு சமனாக  பிரிந்து நிற்பதற்கு அப்பால் ஒற்றுமையை வலியுறுத்தி மக்களின் தேச மொழி இன விடுதலைக்காக போராடி மடிந்த போராளிகளுக்கு ஈடாக மதிக்கப்படுவதை வரலாற்றில் நிலைப்பதை மதிக்கிறேன்.. அதனை மக்கள் எங்கிருந்தாலும் ஒற்றுமையாக முன்னெடுப்பதை வலியுறுத்துகிறேன்..

என்றிட்டு போயிருக்கலாம். அனாவசிய எழுத்துக்கள் அவசியமில்லை. அதுதான் உண்மையான சக போராளிகளின் தியாகங்களை தேசிய தலைவரின் உன்னத இலட்சியங்களை மதிப்பவரின் கடமையாக இருக்கும். அதனை அடேல் ஆன்டி தவறவிட்டிட்டார் என்றே உணர்கிறேன் (உண்மையா இந்தக் கடிதம் அவரால் எழுதப்பட்டிருந்தால்.. அவரின் சுய புத்திக்கு அமைய எழுதப்பட்டிருந்தால்...இன்றேல்.. அடேல் ஆன்ரி மன்னித்துக்கொள்ளுங்கள்.. இப்படி எழுதுவதற்காக.). அவரின் மீதான மதிப்பை அவரே இழக்கச் செய்கிறார்... இப்படியான சில்லறை விடயங்களுக்கு விளக்கம் எழுதப் போய். இவற்றை சம்பந்தப்பட்டவர்களோடு பேசி தீர்ப்பதே அழகும்.. மாவீரர்களுக்கு.. நியப் போராளிகளுக்கும்.. மக்களுக்கு அளிக்கும் கெளரவமும் ஆகும். 

உலகில் எந்த நாட்டு படைவீரனினதும்... நினைவிடம் தொடர்பாக.. இப்படி அடிபட்டதா.. ஆளையாள் துப்புப்பட்டதா தெரியல்ல. என்ன ஒரு இனமடா இந்த தமிழன். எல்லாம் காசு.. புகழ் விரும்பிகள். அதில் அடேல் ஆன்ரியும் அடங்குவது கேவலம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரி எப்போது இயக்கத்தில் இணைஞ்சா எண்ட  தகவல்  கூகிள்  ஆண்டவரிம் இல்லைப்போல ,

பாலா அண்ணை இந்தியாவில்  இணைந்தபோதே அன்ரியும் இணைந்து கொண்டார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இப்படியான சில்லறை விடயங்களுக்கு விளக்கம் எழுதப் போய். இவற்றை சம்பந்தப்பட்டவர்களோடு பேசி தீர்ப்பதே அழகும்.. மாவீரர்களுக்கு.. நியப் போராளிகளுக்கும்.. மக்களுக்கு அளிக்கும் கெளரவமும் ஆகும். 

உலகில் எந்த நாட்டு படைவீரனினதும்... நினைவிடம் தொடர்பாக.. இப்படி அடிபட்டதா.. ஆளையாள் துப்புப்பட்டதா தெரியல்ல. என்ன ஒரு இனமடா இந்த தமிழன். எல்லாம் காசு.. புகழ் விரும்பிகள். அதில் அடேல் ஆன்ரியும் அடங்குவது கேவலம். 

புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தாரின் அஸ்தி தங்களிடம் இருப்பதாகவும், அதை வைத்து ஒக்ஸ்போர்ட்டில் நினைவுத்தூபி கட்டுவதாகவும் சொல்லும் தலைமைச் செயலகத்தினரின்  நடத்தைகள் உங்களுக்கு சில்லறை விடயங்களாக இருப்பதில் வியப்பில்லை. ஆனால் அடேல் அன்ரிக்கு சில்லறை விடயமாக இருக்காது.

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நந்தன் said:

அன்ரி எப்போது இயக்கத்தில் இணைஞ்சா எண்ட  தகவல்  கூகிள்  ஆண்டவரிம் இல்லைப்போல ,

பாலா அண்ணை இந்தியாவில்  இணைந்தபோதே அன்ரியும் இணைந்து கொண்டார்

கூகிள் ஆண்டவர் எல்லாம் அறிவார். நாம் இங்கு பேச வேண்டியதை பேசிக்கிட்டு இருக்கிறம். மற்றும்படி அடேல் ஆன்ரி எப்படி அன்ரன் அண்ணாவை மறுமணம் செய்தா... அவர் எப்ப இயக்கத்துக்குள் போனார்.. பின்னாடி இவா எப்ப கணவருக்குப் பின்னால.. போனா.. எல்லாம் உங்களுக்கு தெரியாட்டிலும் கூகிள் ஆண்டவர் அறிவார். அதுவல்ல.. பிரச்சனை இங்கு............ கடிதத்தின் அடங்கு பொருள்.. அருவருக்கத்தக்க சிலதைக் கொண்டிருக்கிறது என்பது தான்.. கருத்தில் கொள்ளப்பட்டிருக்குது. :rolleyes::rolleyes:

11 hours ago, கிருபன் said:

புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தாரின் அஸ்தி தங்களிடம் இருப்பதாகவும், அதை வைத்து ஒக்ஸ்போர்ட்டில் நினைவுத்தூபி கட்டுவதாகவும் சொல்லும் தலைமைச் செயலகத்தினரின்  நடத்தைகள் உங்களுக்கு சில்லறை விடயங்களாக இருப்பதில் வியப்பில்லை. ஆனால் அடேல் அன்ரிக்கு சில்லறை விடயமாக இருக்காது.

 

இதே அன்ரன் அண்ணாட்ட... கேட்டால்.. இப்படி தான் சொல்லி இருப்பார்..

அவங்கள் என்ர அஸ்தியை வைச்சிருக்க ஆசைப்படுறாங்கள் போல. எல்லாம் எங்கட பொடியள் தானே.. விட்டுத்தள்ளு என்றிருப்பார். ஒற்றுமை என்பதும்.. பிரச்சனையின் தன்மை என்பதும்..  நாம் பிரச்சனைகளை கையாளும் வகையிலும் சொல்லாடும் வகையிலும் தான் உள்ளது. 

ஆனால்.. அடேல் ஆன்ரிக்கு..... உது தான் இப்ப சீரியஸான விசயம்.. என்றியள். அன்ரன் அண்ணா போல ஆயிரம் ஆயிரம் போராளிகள்.. போன இடம் தெரியாமல்.. தவிக்கிறம்............................ :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சரிப்பா , ஜேசுநாதர்கள்  தீர்ப்பை எழுதட்டும்.அன்டி  செய்தது சரியா பிழையா என்று .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.