Jump to content

நாட்டு மீன் குழம்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

14980847_653368801508199_641439456783373

· முழு அயிலை (mackerel) சுத்தம் செய்தது - 10
· நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்

· பெரிய வெங்காயம்- 2,தக்காளி - 3 சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

· புளி - எலுமிச்சை அளவு தண்ணீரில் கரைத்து புளி கரைசலை தயார் செய்யவும்.

· பச்சை மிளகாய் (கீறியது) - 3
· வெந்தயம் - 3டீஸ்பூன்
· கடுகு - 2 டீஸ்பூன்
· சீரகம் - 2 டீஸ்பூன்
· பூண்டு - 4
· கறிவேப்பில்லை - 1 கொத்து
· மீன் மசாலா தூள் - 3 டீஸ்பூன்
· மஞ்சல் தூள் -1 டீஸ்பூன்
· மிளகாய் தூள் -2டீஸ்பூன்
· மல்லிப்பொடி - 2டீஸ்பூன்
· தேங்காய்ப்பால் - 1 டம்ளர்
· கொத்துமல்லி - 2 டீஸ்பூன்
· வதக்கிய வெண்டைக்காய் (நறுக்கியது)-10
· உப்பு தேவைக்கேற்ப

* அகன்ற பாத்திரம் சூடானவுடன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம்,வெந்தயம்,பூண்டு,பச்சை மிளகாய், கறிவேப்பில்லை நன்றாக வதக்கவும்.

* அரைத்த பெரிய வெங்காயம்-தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும்.

* மீன் மசாலா தூள்,மஞ்சல் தூள்,மிளகாய் தூள், மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும்.

* புளி கரைசலை சேர்க்கவும்..உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.மீனை சேர்க்கவும்

* வெண்டைக்காயை வதக்கிக்கொள்ளவும்

* வதக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும்.தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.

* கொத்துமல்லி தூவி இறக்கவும்

இதே முறையில் மற்ற மீன் வகைகளையும் செய்யலாம்.

FB

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அயிலை மீனை இலங்கையில் , ஈழத்தில் என்னவென்று அழைப்பது :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீனோடு வென்டிக்காய் வித்தியாசமாய்  நல்ல ருசியாய் இருக்கும்....! tw_blush:

32 minutes ago, முனிவர் ஜீ said:

அயிலை மீனை இலங்கையில் , ஈழத்தில் என்னவென்று அழைப்பது :rolleyes::unsure:

இதே முறையில் மற்ற மீன் வகைகளையும் செய்யலாமாம் . நீங்கள் விண்மீனை  மட்டும் விட்டிட்டு மற்ற எல்லா மீனையும் சமைக்கலாம்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, suvy said:

மீனோடு வென்டிக்காய் வித்தியாசமாய்  நல்ல ருசியாய் இருக்கும்....! tw_blush:

இதே முறையில் மற்ற மீன் வகைகளையும் செய்யலாமாம் . நீங்கள் விண்மீனை  மட்டும் விட்டிட்டு மற்ற எல்லா மீனையும் சமைக்கலாம்....! tw_blush:

விண்மீனையும் கறிச்சட்டிக்குள்ள போட்டு காச்சி எடுக்கிற ஆட் களாக்கும் இந்த அயிலை மீன் மட்டும் எம்மாத்திரம்   அத கண்டு பிடிக்காமல் விடுறதில்லை ராசவன்னியரை அழைத்து படத்தை போட சொன்னால் கண்டு பிடித்து போகலாம் ராசப்பரை கண்டால் ஒரு வியளம் சொல்லி விடுங்கோ  இங்க அயிலை மீன் பிரச்சினை போகுதெண்டுtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Afficher l'image d'origine

முனிவர் உங்களுக்காக கூகுள் கடலில பிடித்திருக்கு .....!  tw_blush:

எனக்கு பார்க்க கும்பிளா மீன் என்று நினைக்கின்றேன்....! :unsure: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, suvy said:

Afficher l'image d'origine

முனிவர் உங்களுக்காக கூகுள் கடலில பிடித்திருக்கு .....!  tw_blush:

எனக்கு பார்க்க கும்பிளா மீன் என்று நினைக்கின்றேன்....! :unsure: 

கும்பிளாவைத்தான் சில பகுதியில் அயிலை என்று அழைப்பார்கள். மிளகாய் தூள் , உப்பு சேர்த்து பிரட்டி பொரித்தால் நல்ல சுவையாக இருக்கும். கிரந்தி மீன் என்பதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் என அஞ்சுவார்கள் மற்றும்படி அருமையான மீன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, suvy said:

Afficher l'image d'origine

முனிவர் உங்களுக்காக கூகுள் கடலில பிடித்திருக்கு .....!  tw_blush:

எனக்கு பார்க்க கும்பிளா மீன் என்று நினைக்கின்றேன்....! :unsure: 

அட இந்த கும்பிளா மீனுக்கு இந்த அயிலை  மீன் என்ற பெயர்  நன்றி அண்ணை இது குழம்புக்கு சூப்பர் ஆனால் கூட்டு அதிகம் வைக்காமல் வெள்ளை பூடு நிறைய போட்டு தக்காளியும் இட்டு இறுகிய கறியாக வைக்க வேண்டும் அடுத்த நாள் கறி  இன்னும் சுவைக்கும் அகா ஓகோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, முனிவர் ஜீ said:

அட இந்த கும்பிளா மீனுக்கு இந்த அயிலை  மீன் என்ற பெயர்  நன்றி அண்ணை இது குழம்புக்கு சூப்பர் ஆனால் கூட்டு அதிகம் வைக்காமல் வெள்ளை பூடு நிறைய போட்டு தக்காளியும் இட்டு இறுகிய கறியாக வைக்க வேண்டும் அடுத்த நாள் கறி  இன்னும் சுவைக்கும் அகா ஓகோ

பழைய கறியுடன் கோதுமைமா புட்டு அந்தமாதிரி இருக்கும் முனிவர் ஜீ .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழரசு said:

பழைய கறியுடன் கோதுமைமா புட்டு அந்தமாதிரி இருக்கும் முனிவர் ஜீ .

நீங்கள் சுவியர்  எல்லாம் நம்ம கொம்பனி தான் போல் கிடக்கு    பழைய கறி  கொம்பனி அண்ணேtw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழைய மீன் கறி + பாண்

Posted
1 hour ago, suvy said:

இதே முறையில் மற்ற மீன் வகைகளையும் செய்யலாமாம் . நீங்கள் விண்மீனை  மட்டும் விட்டிட்டு மற்ற எல்லா மீனையும் சமைக்கலாம்....! tw_blush:

சுவியரை நம்பி நானும் சமைக்க வெளிக்கிட்டா - உந்த ஜாமீன் மட்டும் மாட்டுதே இல்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஜீவன் சிவா said:

சுவியரை நம்பி நானும் சமைக்க வெளிக்கிட்டா - உந்த ஜாமீன் மட்டும் மாட்டுதே இல்லை. :grin:

ஜாமீனுக்கு மட்டும் ஆசைப் படாதையப்பு , அது ரொம்பப் பொல்லாத மீன்... உள்ளுக்கு மாமியார் வீட்டை  போய்த்தான் வாங்க வேண்டும் . சில சமயம் கிடைக்காட்டில் நாறுவது மீனல்ல .....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, MEERA said:

பழைய மீன் கறி + பாண்

புலம்பெயர் தேசங்களில் உள்ள பாண் ஊரில் கிடைக்கும் பாண் அளவுக்கு சுவையில்லை . இருந்தாலும் பழைய மீன்குழம்பு மற்றும் கருவாட்டுக்குழம்பு இரண்டின் ருசி தனியானது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழரசு said:

புலம்பெயர் தேசங்களில் உள்ள பாண் ஊரில் கிடைக்கும் பாண் அளவுக்கு சுவையில்லை . இருந்தாலும் பழைய மீன்குழம்பு மற்றும் கருவாட்டுக்குழம்பு இரண்டின் ருசி தனியானது .

Bildergebnis für backereiBildergebnis für Brötchen

தமிழரசு இன்னும்... ஜேர்மனியில்,  விற்கும் பாண் வாங்கி சாப்பிட வில்லை போலிருக்கு.... :grin:
எத்தனை விதமான... மொறு மொறுப்பான பாண், பலவித சுவைகளில்  கிடைக்கும்.
வீட்டிற்கு வரும்... அமெரிக்க, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, நோர்வே, கனடா  உறவினர்கள் எல்லாம் பாராட்டி,
அந்தப் பாண்கள்  விற்கும், பேக்கரியையும்... ஒருக்கால் பார்க்க வேண்டும் என்று கேட்டு அழைத்துச்  சென்றுள்ளேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Afficher l'image d'origine   baguette_crue.jpg

பிரான்சில் பக்கட் என்றும் ப்ளூட் என்றும் பாண்கள் உண்டு.  அதற்கும்  தேங்காய் இடிச்ச சம்பலுக்கும் ஜெர்மனியில் இருக்கும் எனது சகலைமார் அடிமை . இந்த ப்ளுட்டை அஜாக்கிரதையாக சாப்பிடடாள் சொண்டு, முரசு, கொடுப்பு எல்லாம் கிழித்து விடும்....! tw_blush:

லா சப்பலில்  ஒரு பேக்கரியில் யாழ்பாணத்து பாணும் (பஸ் மாதிரி) கிடைக்கும். நல்ல ருசியாகவும் இருக்கும் ...!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für backereiBildergebnis für Brötchen

தமிழரசு இன்னும்... ஜேர்மனியில்,  விற்கும் பாண் வாங்கி சாப்பிட வில்லை போலிருக்கு.... :grin:
எத்தனை விதமான... மொறு மொறுப்பான பாண், பலவித சுவைகளில்  கிடைக்கும்.
வீட்டிற்கு வரும்... அமெரிக்க, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, நோர்வே, கனடா  உறவினர்கள் எல்லாம் பாராட்டி,
அந்தப் பாண்கள்  விற்கும், பேக்கரியையும்... ஒருக்கால் பார்க்க வேண்டும் என்று கேட்டு அழைத்துச்  சென்றுள்ளேன். :)

பார்க்கும்போதே நாவூறுகிறது ...., பாண் களை சுவைப்பதற்காக தன்னும் ஜெர்மனிக்கு வரவேண்டும் . tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

லா சப்பலில்  ஒரு பேக்கரியில் யாழ்பாணத்து பாணும் (பஸ் மாதிரி) கிடைக்கும். நல்ல ருசியாகவும் இருக்கும் ...!  tw_blush:

அங்கேயும் அந்த பஸ்சை கொண்டு வந்துட்டாங்களா போற இடம் முளுக்க 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, முனிவர் ஜீ said:

அங்கேயும் அந்த பஸ்சை கொண்டு வந்துட்டாங்களா போற இடம் முளுக்க 

இலங்கையில இருந்து ஆட்களை தூக்கலாம். ஆட்களில இருந்து இலங்கையை தூக்க ஏலாது கண்டியலோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für backereiBildergebnis für Brötchen

தமிழரசு இன்னும்... ஜேர்மனியில்,  விற்கும் பாண் வாங்கி சாப்பிட வில்லை போலிருக்கு.... :grin:
எத்தனை விதமான... மொறு மொறுப்பான பாண், பலவித சுவைகளில்  கிடைக்கும்.
வீட்டிற்கு வரும்... அமெரிக்க, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, நோர்வே, கனடா  உறவினர்கள் எல்லாம் பாராட்டி,
அந்தப் பாண்கள்  விற்கும், பேக்கரியையும்... ஒருக்கால் பார்க்க வேண்டும் என்று கேட்டு அழைத்துச்  சென்றுள்ளேன். :)

இஞ்சைதான் நிக்கிறான் சிங்கன்......... :grin:

அது சரி சிறித்தம்பி!  இருண்ட கண்டம் ஆபிரிக்காவிலையிருந்து ஒருத்தரும் வாறேல்லையோ? சும்மா பகிடிக்குtw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.