Jump to content

யாழ் கள நினவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 31.12.2016 at 6:01 PM, முனிவர் ஜீ said:

நாங்களும் இருக்குறமப்பா  

எனக்கு என்ரை பெயர் கடைசியிலை வந்திட்டுது எண்ட கவலை :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

எனக்கு என்ரை பெயர் கடைசியிலை வந்திட்டுது எண்ட கவலை :cool:

ம்கும்  வந்துட்டுதானே பேந்து என்ன கவலையாம்tw_blush:

On 1/1/2017 at 7:55 AM, கலைஞன் said:

ஒரு குடும்பம் என்றால் அப்பா, அம்மா, பிள்ளைகள், பாட்டா, பாட்டி, ஆடு, மாடு, கோழி, நாய், பூனை எல்லாம் நினைவில வரும்தானே. குடும்பத்தில எந்த  இடத்திலை உங்களை வச்சு இருக்கிறார் என்று இன்னுமொருவனைத்தான் கேட்கவேணும். :26_nerd:

ஆடா, அல்லது மாடா :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எனக்கு என்ரை பெயர் கடைசியிலை வந்திட்டுது எண்ட கவலை :cool:

உதுவும் எங்கன்ட ஆட்களின் பொதுவான மனஉளவியல் என்று சொல்லப்போயினம் அண்ணோய்....tw_tounge_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழதல்லாம் முகநூலில் பல விவாதங்கள் நடைபெறுவதால் அதுவும் யாழின் விவாதக்களத்தில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.முன்னைய காலங்களில் யாழில் எழுதுவது பிழை திருத்துவது இலகுவாக இருந்தது. இப்போது சிறிது கடினம்.இணையத்தளங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் உப்புச்சப்பற்ற செய்திகளை எழுதிக்கொண்டிருக்கின்றன.தமிழர் சார்ந்த செய்திகள் மிகவும் குறைவு.அவையும் விவாத்த்திற்கு ஏற்றவையாக இருப்பது குறைவு.திரும்ப ஒரே வகையான விவாதங்கள் சலிப்பை ஏற்படுத்துவதும் தமிழர் சார்ந்த அரசியல் மாற்றமின்றி தொடர்வதும்  தமிழ் அரசியல் தலைமகள் தேர்தல் முடிந்தவுடன்காணமல் போவதும் புதிய விவாதங்களுக்கு இடம் கொடுக்கவில்லை.அத்துடன் இந்த விவாதங்களை யாரும் சட்டை செய்வதில்லை.மேற்கு நாடுகளில் இத்தகைய விவாதங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.ஆனால் நம்சமூகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை.

Link to comment
Share on other sites

.அத்துடன் இந்த விவாதங்களை யாரும் சட்டை செய்வதில்லை.மேற்கு நாடுகளில் இத்தகைய விவாதங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.ஆனால் நம்சமூகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்னுமொருவன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote



முந்தின மாதிரி இப்ப எழுதாததற்கு காரணம் நேரம் இல்லை என்பதை விட பஞ்சி தான்...அடிக்கடி சந்திப்பு நடப்பதால் அதில் கலந்து கொள்கின்ற உறவுகள் தங்கலுக்குள் அடிபட விரும்புவதில்லை.அத்தோடு அவர்களூக்கு எதிர் கருத்தும் வைப்பதில்லை...யாழில் எழுதுகின்ற பல பேருக்கு பக்குவம் வந்திட்டுது 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலனின் இந்த கவிதையை யாழ் இணையமாய் நினைத்து பார்க்கிறேன்...

நீலம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*

தோழி
காலமாய் நுரைகள் உடைகிற மணலில்
சுவடுகள் கரைய
சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?
கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்
நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.
மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்
உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.
*
ஆண்டு பலவாகினும்
நரையிலா மனசடா உனக்கென்றாய்.
தோழி
இளமை என்பது வாழும் ஆசை.
இளமை என்பது கற்றிடும் வேட்கை.
இளமை என்பது முடிவிலா தேடல்;
இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.
இளமை என்பது வற்றாத ரசனை
இளமை என்பது நித்திய காதல்.
இளமை என்பது
அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.
*
தோழா உனக்கு எத்தனை வயசு?
தோழி எனக்கு
சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு. 
2011

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த குற்ற சாட்டு யாருக்கு ? எந்த விதிமுறைகள் மீறப்பட்டது ? விளக்கமாக சொன்னால் எல்லோருக்கும் நல்லதே  மற்றது  "கொஞ்சநாள் வராவிட்டால்  தொடங்கிடுவான்கள் மதமாற்றம்" ............................................................................... அது என்ன புதுக்கதை ?? யார் தொடங்குவார்கள் ? யார் மாறுவார்கள் ???     பெருமாள் இன்னும் விடை தரவில்லை, தேடிக்கொண்டு இருக்கிறேன்  திருப்பவும் எங்கோ போய்விட்டார் போலும்???  
    • ஐயா நீங்க முஸ்லீமா? அடிக்கடி தொப்பி பிரட்டுறீங்க. 12 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஏனைய 11 பேரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.   அவுஸ்திரேலியா சுவி புலவர் P.S.பிரபா நுணாவிலான் பிரபா USA வாதவூரான் ஏராளன் ரசோதரன் கந்தப்பு நந்தன் நீர்வேலியான் கோஷான் சே   இங்கிலாந்து ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தியா தமிழ் சிறி கிருபன் அஹஸ்தியன் வாத்தியார் எப்போதும் தமிழன் கல்யாணி
    • தென் ஆபிரிக்காவைப் பற்றி கேள்விப்பட்டது சரி தான்....நல்ல அணி....
    • பாகம் - 08   இப்பாகத்தில் பல்வேறு சூழ்நிலைக்கேற்ப நடைபெற்ற வித்துடல் விதைப்பு குறித்து காணலாம்.   சிறிலங்காக் கட்டுப் பாட்டுப் பரப்பிற்குள் கனபேர் ஊடுருவிச் செல்கையில் சிங்களப் படையினருடன் எதிர்பாராத முகமாக முட்டுப்பட்டு வெடிக்கும் மோதலில் யாரேனும் வீரச்சாவடைய நேர்ந்தால் அன்னவரின் வித்துடலை ஏலுமெனில் மீட்டெடுத்துக்கொண்டு (இல்லையென்றால் அவ்விடத்திலேயே விட்டுச்செல்வர்) பாதுகாப்பான இடத்திற்குச் செல்வர். சென்ற பின்னர் தம் இருப்பில் உள்ள கருவிகள் மூலம் கிடங்கு தோண்டுவர். பின்னர் தம்மிடம் புலிக்கொடி இருப்பின் அதை மாவீரரின் நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதி கவராகும் விதமாக போர்த்திய பின்னர் வீரவணக்க நிகழ்வு நடத்துவர். அப்போது உறுதியுரை தெரிந்தோர் அதைக் மொழிவர். இல்லையெனில் அகவணக்கத்தின் போது சொல்வதை மொழிவர். வேட்டுகளை தீர்க்க பாதுகாப்பெனில் ஒருவர் மும்முறை வேட்டுகளை தீர்ப்பார். பிறகு வித்துடலை அப்படியே விதைகுழியினுள் விதைக்கப்படும். பேந்து, கட்டளை மையத்திற்கு தகவல் அறிவிக்கப்படும். அதன் பின்னர் இவரது வீட்டில் வீரச்சாவு வீடு நடத்தப்படும். இவருக்கான நினைவுக்கல்லொன்றும் இவரது ஊரில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் நாட்டப்படும். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடையும் போராளியின் வித்துடல் மீட்கப்பட ஏலுமானால் மீட்கப்பட்டு மேற்கூறியபடி விதைக்கப்படும். மீட்கப்பட முடியாவிட்டால் வீரச்சாவடைந்த இடத்திலேயே கைவிட்டுவிட்டு பின்வாங்குவர். பின்னர் சிங்களம் கைப்பற்றி பிணச்சோதனை முடித்த பின்னர் எரியூட்டும். வீரகாவியமாகும் மறைமுகக் கரும்புலிகள் மற்றும் தமிழீழ புலனாய்வுத்துறையின் முகவர்கள்/ உளவாளிகளின் வித்துடல்களை சிங்களவரே எடுத்து பிணச்சோதனை முடித்து, ஏலுமெனில் ஆள் அடையாளம் கண்டுபிடித்த பின்னர், எரியூட்டுவர். அவற்றை ஒப்படைக்கும் படியாக புலிகள் ஒருகாலும் கோரார். அன்னவர்களின் பெற்றாரிற்கு அவரின் வீரச்சாவு செய்தியை புலிகள் வீட்டிற்கு வந்து அறிவித்துவிட்டுச் செல்வர். பெற்றாரால் வீரச்சாவு வீட்டைக்கூட செய்ய ஏலாது. தம் சோகத்தை வெளியில் கூட சொல்ல முடியாதவர்களாய் தமக்குள்ளேயே குமுறி அழுது வேதனைகளை தீர்த்துக்கொள்வர். இன்னும் கொடுமையான வேதனை என்னவெனில் எமது தேசத்தின் நலன் கருதி இவற்களிற்கு ஒரு கல்லறையோ இல்லை நினைவுக்கல்லோ வைக்கப்படுவதில்லை! துயிலுமில்லத்தில் நினைவுச்சுடர் கூட ஏற்றார்கள் இவர்கள்!  தரைக்கரும்புலிகளின் வித்துடல்கள் புலிகளால் மீட்கப்பட்டாலன்றி (தரைக்கரும்புலி லெப். கேணல் போர்க்கின் வித்துடல் மீட்கப்பட்டது) பெரும்பாலான வேளைகளில் சிங்களம் ஒப்படைப்பதில்லை. அவற்றை சிங்களம் கைப்பற்றி பிணச்சோதனை செய்த பின்னர் அடக்கம் செய்யும். சில வேளைகளில் தம் தோல்வியின் வெறி அடங்கும் வரை வித்துடல்களை களங்கப்படுத்திய பின்னரே அடக்கம் செய்வர். எடுத்துக்காட்டிற்கு, அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான "எல்லாளன்" நடவடிக்கையில் வீரகாவியமான 21 தரைக்கரும்புலிகளில் நன்னிலையில் கைப்பற்றபட்ட வித்துடல்களை நிர்வாணப்படுத்தி உழுபொறியின் பெட்டிக்குள் போட்டு அனுராதபுரத்து சிங்கள மக்கள் முன்னால் ஊர்வலமாக கொண்டு சென்றனர், சிங்களப் படையினர். அதையும் சிங்கள மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்த்து மகிழ்ந்தனர்! அரிதாக ஒப்படைத்த நிகழ்வொன்று 2008ம் ஆண்டு நடைபெற்றது. அதே ஆண்டு செப்ரெம்பர் மாதம் 12ம் திகதி புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வவுனியா ஜோசெப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 10 கரும்புலிகளின் வித்துடல்களும் சிங்களவரால் புலிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டன. புலிகள் அவற்றிற்கு வீரவணக்கம் செலுத்தி முழுப்படைய மரியாதையுடன் புனித விதைகுழியினுள் விதைத்தனர். தரைகள் இலக்கை அழித்துத் திரும்பினார்களெனில் தம்முடன் கூட வந்தவர்கள் யாரேனும் வீரச்சாவடைந்து அன்னவர்களின் வித்துடல் அவர்களால் கண்டெடுக்கப்படக்கூடியதாக இருப்பினும் வித்துடலைத் தளத்திற்குக் கொண்டுவரார். மாறாக அவ்விடத்திலேயே சக்கை வைத்து முற்றாகச் சிதறடித்துவிடுவர். எடுத்துக்காட்டிற்கு, இயக்கச்சி 'ஆட்டிவத்தை' சேணேவித் தளத்தை (Artillery Base) தரைகள் அழித்த போது நெஞ்சில் ஏவுண்ணி வீரகாவியமான தரைக்கரும்புலி மேஜர் சுதாஜினியின் வித்துடல் இவ்வாறுதான் தகர்க்கப்பட்டது.   ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.