Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும்

Featured Replies

மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும்

அண்மையில் வாகரைப் பிரதேசத்தை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்த பின்பு இங்கே புலம் பெயாந்த நாடுகளில் விடுதலைப்புலிகளுடைய பலம் மற்றும் பலவீனங்கள்பற்றி அதிகளவுக்கு பேசப்படுகிறது.

ஆய்வாளர்கள், விமர்சகர்கள், பத்தி எழுத்தாளர்கள், இணைத்தளங்களின் கருத்தாளர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்தியல் தளத்தில் நின்று தங்களது அரசியல் சார்புத் தன்மைக்கு எற்றவாறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

சிறீலங்கா அரசதரப்பினதும் அதன் ஒட்டுக் குழுக்களினதும் தகவல் தொடர்பு சாதனங்கள் விடுதலைப்புலிகளின் கதை முடிந்துவிட்டது.அவர்களின் போரிடும் அழிக்கப்பட்டுவிட்டது. அரசபடையினரில் படை வலிமைக்கும் நவீனரக ஆயுதங்களுக்கும் முன்னால் விடுதலைப்புலிகளின் படையணிகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று தாங்களே ஒரு தீர்ப்பை சொல்லி-அதை பிரகடனப்படுத்தி அதற்கு வியாக்கியானங்களும் செய்து கொண்டிருக்கின்றன.

மறு புறத்திலே தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகங்களும் அவற்றிலே உலாவரும் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் பத்தி எழுத்தாளர்களும் 'விடுதலைப்புலிகள் தந்திரோபாயமாகவே பின்வாங்கி இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் இது தான் நடந்தது.முல்லைத்தீவில் அடி விழவில்லையா? மாங்குளம் வரை முன்னேறி வந்த படையினரை ஜெய்சிக்குறு சமரில் ஓட ஓட அடித்த விரட்டவில்லையா? புலி பதுங்குவது பாய்வதற்கே! வான் படையை அவர்கள் இன்னமும் களம் இறக்கவில்லை.அது களம் இறங்கும் போது சிங்களப்படை சிதறி ஓடும்' என்று கைதேர்ந்த சோதிடர்கள் போல ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலேயே சாதாரண புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பலருக்கு ஒன்றும் புரிவில்லை.'நாட்டில் என்ன நடக்கிறது. சிறீலங்கா அரசபடைகளும் ஒட்டுக் குழுக்களும் இவ்வளவு கொடூரங்களை இழைத்த பின்பும் விடுதலைப்புலிகள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள். சம்பூரை மாவிலாற்றை வாகரையை ஏன் அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள்?” என்ற ஆதங்கங்கத்துடன் கூடிய கேள்விகள் புலம்பெயர்ந்த ஏராளமான தமிழ் மக்களிடம் இருக்கின்றன.

சாதாரண மக்களுக்கு இருக்க கூடிய இந்த சந்தேகங்கள் அல்லது கேள்விகள் அடிப்படையிலேயே தவறானவை என்பதையும் இவ்வாறன சந்ததேகங்களை கேள்விகளை திட்டமிட்டு உருவாக்குவதும் எதிரியினுடைய போர் தந்திரோபாயங்களில் ஒன்று என்பதையும் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆனால் எந்த ஊடகமும் இதுவரை அந்த வேலையை சரிவர செய்யவில்லை. சினிமாவும் சின்னத்திரை தொடர்களும், சமூகப் பொறுப்புணர்வும் தமிழ்தேசிய கருத்தில் பர்வையும் அற்ற இம்சைத் தொடர்களும் தான் தமிழ் மக்களின் தேசிய உணர்வை கட்டி எழுப்பவதற்கு அத்தியாவசியமானவை என்று இந்த ஊடகங்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு சின்னத்திரை தொடர் அல்லது ஒரு இம்சைத் தொடர் ஒளிபரப்பப்படவில்லை என்றால் தொலைபேசி எடுத்து குழம்பும் ஒரு 50 அல்லது 100 பேரின் விருப்பத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்த தமிழனத்தின் எதிர்கால நலன் என்ற விடயத்துக்கு இந்த ஊடகங்கள் கொடுப்பதில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய உண்மையாகும்.

ஆனால் சிறீலங்கா அரசு தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஊடகங்களை பயன்படுத்துவதில் மிகத் திறமையாகச் செயற்பட்டு வருகிறது.

சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை அது தமிழிழ தேசியவிடுதலைப் போராட்டத்தின் அச்சாணிகளாக . இருக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் மனோபலத்தை சிதைப்பது, தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களுக்கு ஊடாக தனக்குத் தேவையான உளவுத் தகவல்களை திரட்டுவது என்ற இரண்டு அடைப்படை நோக்கங்களுக்காக பெருந்தொகைப் பணத்தையும் ஆளணி நிபுணத்துவ வசதிகளையும் பயன்படுத்துகிறது.

ஒரு நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு விடுதலை இயக்கம் நிரந்தரமான தளப்பிரதேசங்களையும், நகரும் அல்லது மிதக்கும் தளப்பிரதேசங்களையும் செல்வாக்குப் பிரதேசங்களையும் வைத்திருப்பது வழக்கமாகும். உதாரணமாக 90 களின் முற்பகுதியில் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணக் குடா நாட்டையும் வன்னிப் பெரு நிலப்பரப்பையும் நிரந்தரமான தளப்பிரதேசங்களாகவும் தென் தமிழீழத்தை நகரும் தளப்பிரதேசங்களாகவும் செல்வாக்குப் பிரதேசங்களாகவும் வைத்திருந்தார்கள்.

இந்த நிலைப்பாட்டை விடுதலைப்புலிகள் அந்தக்காலகட்டத்தில் எடுப்பதற்கு எதிரியினுடைய அரசியல் இராணுவ நோக்கங்கள் கள நிலைமை போரியல் தந்திரோபாயம் என்று பல் வேறு விடயங்கள் காரணமாக இருந்தன.

1990 களின் பிற்பகுதியில் இந்த நிலைமை மாறுகிறது. வட தமிழீழத்தில் வன்னிப் பெரு நிலப்பரப்பு நிரந்தர தளப்பிரதேசமாக மாற யாழ்ப்பாணக் குடாநாடு செல்வாக்குப் பிரதேசமாக மாறுகிறது. தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி நிரந்தரத் தளப்பிரதேசமாகவும் வாகரை முதல் சம்பூர் வரையிலான பகுதிகளும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளும் நகரும் தளப்பிரதேசங்களாக மாறுகின்றன.திருகோணமலை நகரம் மற்றும் மட்டக்களப்பின் எழுவான்கரை பகுதிகள் செல்வாக்குப் பிரதேசங்களாக மாறுகின்றன.

அப்போது ஆட்சியிலிருந்த சந்திரிகா அரசின் போர்த்தந்திரங்களும் அரசியல் நோக்கங்களும் அதனால் ஏற்பட்ட கள நிலை மாற்றங்களும் இந்த தளப் பிரதேசங்கள் மாறுவதற்கு காரணமாக அமைந்தன.

தற்போது மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மகிந்த சிந்தனை என்ற பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட இராணுவ அரசியல் நகர்வுகளால் மீண்டும் தளப்பிரதேசங்கள் மாறுகின்றன. நகரும் தளப் பிரதேசங்களாக இருந்த சம்பூர் மாவிலாறு வாகரை என்பன கைவிடப்படுகின்றன. இவை ஏன் கைவிடப்பட்டன என்பதற்கான பதில் விடுதலைப்புலிகளின் போத்தந்திரமும் நடை முறைத் தந்திரமும் சார்ந்ததாக இருக்கிறது.

எப்போதும் போரிடும் இரண்டு தரப்புகளுக்கு இடையில் தளப்பிரதேசம் என்று வருகின்ற போது ஒரு தரப்பு தற்காப்பு நிலையிலும் மறுதரப்பு தாக்குதல் நிலையில் இருப்பது வழக்கமாகும். ஒரு அரச படைகளுக்கும் ஒரு விடுதலை இயக்கத்துக்குமான களமுனைகளில் இந்தத் தற்காப்பு நிலை தாக்குதல் நிலை என்பது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். எப்போதும் ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட ஒரு அரசாங்கம் தனது இராணுவத்தை தற்காப்பு நிலையில் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து முடக்கி வைத்திருக்க விரும்புவதில்லை.அது அந்த இராணுவக் கட்டமைப்பை பலவீனமாக்கும் என்பதனாலேயே அவர்கள் அடிக்கடி ஆக்கிரமிப்பு படைநகர்வுகளை மேற்கொள்கின்றனர்.

இதேவேளை ஒரு அரசாங்கம் ஒரு விடுதலை இயக்கத்தின் தளப்பிரதேசங்களை கைப்பற்றவதற்கான ஆக்கிரமிப்பு படைநகர்வை முன்னெடுப்பதற்கு முன்பாகவே அந்த தளப் பிரதேசத்தை இழப்பது அந்த விடுதலை இயக்கத்துக்கு ஒரு கௌரவப் பிரச்சனை என்ற ஒரு மாயையை தன்னுடைய உளவு அமைப்புகள் மூலம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்குகிறது.

தன்னுடைய தந்திரோபாயத்தை புரிந்துகொள்ளதாக அந்த விடுதலை இயக்கம் தன்னுடைய போர் தந்திரம் நடைமுறைத் தந்திரங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு 'கௌரவப் போர்' ஒன்றுக்காக தன்னுடைய வளங்களை அந்தக் களமுனையிலே கொண்டு வந்து குவிக்கும் போது தன்னுடைய மற்றும் தனக்கு உதவுகின்ற மேலாதிக்க சக்திகள் வழங்குகின்ற பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அந்த விடுதலை இயக்கத்தை அழித்தொழித்துவிடுவது அல்லது பலவீனப்படுத்தி விடுவது நீன்ட நெடுங்காலமாக அனைத்து ஆக்கிரப்பு அரசுகளும் கையாண்டு வரும் போர் தந்திரமாகும்.

ஆக்கிரமிப்பாளர்களின் இந்தச் சதித்திட்டத்தை துல்லியமாக கணக்கில் எடுத்த பல விடுதலை இயக்கங்கள் 'ஓரடி முன்னால் ஈரடி பின்னால் அல்லது ஈரடி முன்னால் ஓரடி பின்னால்' என்கின்ற புகழ்பெற்ற இராணுவ அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் தங்களது தளப்பிரதேசங்களில் இருந்து பின்வாங்கி எதிரியை தாக்குதல் நிலையில் இருந்து தற்காப்பு நிலைக்குத் தள்ளி அகலக் கால் வைக்க வைத்து அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களையே சிக்கவைத்த வரலாறுகள் நிறையவே இருக்கின்றன.

விடுதலைப்புலிகள் சம்பூர் மாவிலாறு வாகரை ஆகிய பகுதிகளில் இருந்து பின்வாங்கியது இவ்வாறான ஒரு யுத்ததந்திரத்தின் அடிப்படையில் என்பது சிறிலங்கா அரசுக்குத் தெரியும். அதிலும் இந்த யுத்தந்திரம் ஏனைய நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பின்பற்றப்பட்ட யுத்ததந்திரங்களின் அச்சொட்டான கொப்பி அல்ல என்பதும் எப்போதுமே தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனக்கே உரித்தான தனித்துவமான போர்தந்திரங்களையும் வியூகங்களையும் வகுப்பதில் வல்லவர் என்பதும் சிறீலங்கா அரசுக்கும் அதன் படைத்துறை கொள்கை வகுப்பாளர்களுக்கும் நன்கு தெரியும். அவரது அடுத்த நகர்வு என்பது தங்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை கொடுக்கக் கூடிய நகர்வாக அமையப் போகிறது என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் அந்த நகர்வு நடைபெறுவதற்கு முன்பு தங்களுடைய படைகள் பேரிடும் ஆற்றலில் விடுதலைப்புலிகளை விட மேலானவர்கள்.அல்லது விடுதலைப்புலிகளை அழிக்கும் ஆற்றல் தங்களது படைகளுக்கு உள்ளது என்ற ஒரு தோற்றத்தை சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்துக்கும் காட்டுவதற்கு சிறீலங்கா அரசு முனைகிறது. ஒரு நீண்ட நெடிய உள்நாட்டு போரில் தளப்பிரதேசங்களை கைப்பற்றுவது என்பது தற்காலிக வெற்றி என்பதை மூடி மறைத்து அதை நிரந்தர வெற்றியாகக் காட்டி அதனூடாக தனது அரசியல் பொருளாதாரத் தேவைகளை தற்காலிகமாக நிறைவேற்றிக் கொள்வதற்கும் அது முயன்று வருகிறது.

இதேவேளை விடுதலைப்புலிகளின் அடுத்த நகர்வு எப்படி அமையப் போகிறது? எந்தக் களமுனைகளை அவர்கள் திறக்கப் போகிறார்கள்? தங்கள் போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கு அவர்கள் என்னென்ன தயாரிப்புக்களை செய்கிறார்கள்? சர்வதேச ரீதியில் என்ன நகர்வுகளை அவர்கள் மேற்கொள்கின்றார்கள்? மேற்கொள்ளப் போகிறார்கள்? என்கின்ற தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளையும் சிறீலங்கா அரசு தீவிரப் படுத்தியுள்ளது.

இதற்காக ஊடகத்துறையை கையில் எடுத்துள்ள சிறீலங்கா அரசு ரம்புக்வெல, பிரசாத்சமரசிங்க, பாலித கோஹன்ன இருந்து ஒட்டுக் குழுக்களின் உறுப்பினர்கள் என்று நுற்றுக்கணக்கானோரை களமிறக்கியிருக்கிறது. உண்;மையில் தமிழகத்திலும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கண்ணுக்கு புலப்படத் தக்க வைகையிலும்- புலப்படாத வகையிலும் என்று ஊடக யுத்தம் ஒன்றையும் சிறீலங்கா அரச ஆரம்பித்திருக்கிறது.

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதி உயர் பாதுகாப்புடன் ஊடகவியலாளர் மகாநாடுகளை கூட்டும் ஹெகலிய ரம்புக்வெல 'தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள்' என்று அரசாங்கம் தயாரிக்க இருக்கும் திரைப்படத்துக்கான கதையை சொல்லுவார். சில வேளைகளில் இந்தக் கதைக்கான மெருகூட்டல்களை பாலித கோஹன்னவும் பிரசாத் சமரசிங்காவும் செய்வார்கள்.

பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு என்று முடிவின்றி தொடரும் இந்தக் கதைக்கு பின்னர் சிங்கள ஊடவியலாளர்களும் ஒட்டுக்குழுக்களின் ஊடகவியலாளர்களும் திரைக்கதை வசனம் எழுவார்கள். தமிழகத்திலுள்ள தமிழர் விரோத ஊடகங்களும் மேற்குலக ஊடகங்களும் இந்த கதை -திரைக்கதையை 'ஆஹா அற்புதம் அபாரம்' என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.

மறு புறத்திலே இந்த அபத்தமான கதையை அம்பலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு செயற்படும் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களும் அவற்றின் ஆய்வாளர்களும்- விமர்சகர்களும் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஊடக யுத்தம் பற்றியோ அந்த யுத்தத்தக்கூடாக அரசாங்கம் அடைய நினைக்கும் இலக்குகள் பற்றியோ கவனத்தில் கொள்வதில்லை.ஒரு ஊடக யுத்தத்தை -கருத்தியல் யுத்தத்தை எப்படி தர்க்க ரீதியாக எதிர் கொள்வது என்பது பற்றி எந்தவிதமான கொள்கையும் திட்டமிடலும் இல்லாது மேலெழுந்தவாரியாக மரபுவழி -மேற்குலகப்பாணியில் ஆய்வுகளை விமர்சனங்களை வைப்பதும் செய்திகளை உருவாக்குதும் தான் ஊடகத்துறையின் உச்சம் என்று நினைக்கும் போக்குத்தான் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களிடம் காணப்படுகிறது.

எதிரியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஓரு மோசமான எதிர் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு மரபு வழியிலான பதில் பிரச்சாரத்தையே தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் முன்வைக்கின்றன. இந்த மரபு வழி ஊடகப் பிரச்சார முறை என்பது தங்களது சந்தைப் பொருளாதார நலன்களுக்காவும் பிராந்திய அரசியல் நலன்களுக்காவும் மேற்குலக அதிகார வர்க்கம் கட்டமைத்த ஒருவடிவமாகும். மக்கள் செயற்பாட்டாளர்களாகவும் செற்திறன் உள்ளவர்களாகவும் மாறுவதையும் மாற்றப்படுவதையும் தடுத்து நிறுத்தி அவர்களை எப்போதும் நுகர்வோராக (அது கருத்துக்களாகவும் இருக்கலாம் பொருட்களாகவும் இருக்கலாம்) வைத்திருப்பதே இந்த ஊடகப் பிரச்சார முறையின் நோக்கமாகும்.

உதராரணமாக சம்புரை மாவிலாறை வாகரை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பை 'விடுதலைப்புலிகளின் தோல்வியாகவும் சிங்கள பௌத்த (பேரினவாத)த்தின் வெற்றியாகவும் அந்தக் கருத்தியலின் காவலர்களாக இருக்கும் சிங்கள இரணுவம் விடுதலைப்புலிகளை விட மேலானது அவர்களை அழிக்கும் வல்லமை கொண்டது' என்ற கருத்துருவாக்கத்தை சிறீலங்கா அரசு தன்னுடைய சொந்தக் கருத்தியல் தளத்தில் நின்று மேற்கொள்கின்ற போது சிங்கள மக்களையும் சிங்களை படையினரையும் தமிழர்களுக்கு எதிராக போர் புரியும் - தமிழர் தாயகத்தை அழிக்கும் செயலூக்கமுள்ளவர்களாக மாற்றும் நோக்கம் அதில் அடங்கியிருக்கிறது.

மறு புறத்திலே இந்த பௌத்த சிங்கள மேலாண்மைக் கருத்தியலுக்கு எதிரான முறியடிப்பு பரப்புரையை செய்வதாக சொல்லிக் கொள்ளும் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் சிறீலங்கா அரசின் இந்த இராணுவ நடவடிக்கைகளின் பின்னால் உள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை கண்டு கொள்வதில்லை.

சம்;பூரை மாவிலாறை வாகரையை ஆக்கிரமிப்பதற்கு முன்னர் சிறீலங்கா அரசு என்ன செய்தது? அங்கிருந்த மக்களுக்கு எவ்வாறான நெருக்கடிகளைக் கொடுத்தது? இந்தப் பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் சிங்கள மக்களுக்கு என்ன செய்தியை அது சொல்ல விரும்பியது? இவ்வாறான செய்திகளை வெளியிடுவதற்கான உடனடித் தேவை என்ன? நீண்டகாலத் தேவை என்ன? இந்த பிரதேசங்களை சிங்களப் படைகள் ஆக்கிரமித்த பின்பு சிங்கள பௌத்த பேரினவாதிகளினது கருத்தியல் வெளிப்பாடுகள் எவ்வாறு இருந்தன? 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் தென் தமிழீழம் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த போது இடம்பெற்ற படுகொலைகள் என்னென்ன? இந்தப் படுகொலைகள் மூலம் சிங்கள பௌத்த பேரினவாதிகள் எதை சாதிக்க நினைத்தார்கள்? என்பவற்றை தர்க்க ரீதியான ஆய்வுக்குட்படுத்தி ஒட்டு மொத்தமான தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பக்கு எதிராக போராட வேண்டியது அவர்களது வரலாற்றுக்கடமை என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதற்கு அவர்களை தயார் படுத்தவதற்கும் தவறிவிட்டன.

மாறாக சிறீலங்கா அரசும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் விரும்புவது போல தமிழ் மக்களை பார்வையாளர்களாக சிறந்த கிரிக்கட் ரசிகர்களைப் போல மாற்றும் முயற்சிகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டுவருகின்றன. ஒரு கிறிக்கட் ஆட்டத்தில் சிக்சர் அடித்தால் விசில் . பௌன்றி அடித்தால் கைதட்டல், ஒன்று இரண்டு மூன்று என்று ஒட்டங்கள் எடுத்தால் பரவாயில்லை என்றும் ஓட்டம் எதுவுமே எடுக்கவில்லை என்றால் இவர்களுக்கு ஆடத்தெரியாது என்றும் விமர்சிப்பதைப் போலவே பேராட்டத்தை விமர்சிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது.

இந்தப் போக்கை வளர்த்துவிடுவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

உயிரையும் இரத்தத்தையும் ஆகுதியாக கொடுத்து நடத்தப்படும் ஒரு வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தின் மதிப்பிட்டை அற்பத்தனமான நாணய அளவீடுகளாலோ சதாரணமான வார்த்தைகளாலோ அளவிட முடியாது என்பதை நமது ஊடகங்கள் மக்களுக்கு உணர்த்துவதற்கு மறந்துவிடுகின்றன.

என்னுடைய நிலத்தை- என்னுடைய மண்ணை- என்னுடைய வீட்டை என்னுடைய தாயகத்தை -பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது என்னுடைய கடமை என்பதையும், அதற்காக நான் என்ன செய்தேன் ? என்பதையும் ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழனும் தன்னைத் தானே கேட்டுக்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். என்னுடைய தாயகம் அழிக்கப்படும் போது, என்னுடைய மண் ஆக்கிரமிக்கப்படும்போது ,நான் பார்வையாளனாக இருந்து விமர்சனம் வைத்துக் கொண்டுடிருக்க முடியாது என்பதை ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டும். என்னுடைய நாட்டுக்காக -இனத்தக்காக - வருங்கால சந்ததிக்காக நான் என்ன செய்தேன்? என்ற கேள்வியை மக்களுடைய மனங்களிலே எழுப்பி அவர்களது மனச்சாட்சியை தூண்டி அவர்களை தாயக விடுதலைப்போரில் பங்காளர்களாக மாற்றவேண்டிய பெரும் பொறுப்பு தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களுக்கு இருக்கிறது.

தளங்கள் மாறலாம் போர் களங்கள் மாறலாம் தமிழீழ தனியரசு என்ற இலக்கு மாறாது என்பதையும் அந்த இலக்கை விரைந்து அடைவதற்கு ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் இருந்த எதைச் செய்யலாம் எதைச் செய்யவேண்டும்? என்ற ஆக்க பூர்வமான சிந்தனையும் செயலும் தான் இப்போதைய தேவையாகும்.

-சிவா சின்னப்பொடி

  • Replies 54
  • Views 10.4k
  • Created
  • Last Reply

அய்யா பெரியவரே உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். :rolleyes: தொடர்ந்து இப்படி ஆக்கபுhர்வமாக எழுதுங்கள். தொலைக்காட்சி வானொலியிலும் இது போன்ற கருத்துக்கள் ஒலிக்க வேண்டும்.

தயவு செய்து புலம்பெயர்ந்த நாடுகளில் அச்சிடப்படும் பத்திரிகைகளில் இதைப் பிரசுரிக்க முயற்சிக்கவும். ஒரு பேப்பர்காரரும் மறந்திடாதேங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சீரியல் விசயங்களை ஒருக்கா உங்கட டீடீஎன்னுக்கு சொன்னால் நல்லா இருக்குமய்யா

ஜயா வணக்கம்..

தங்களுடைய ஆய்வு கண்ணோட்டத்தில் பலவற்றின் பல பாங்குகளை

அதன் தார் பரியத்தை பல முறை பல நெடும் குறும் பிரபல ஆய்வாளர்கள்

சூட்டி காட்டி உள்ளார்கள். மறாக ''தமிழ் ஊடகங்கள்'' என்று தாங்கள் கூற

முனைவது எதனை..?

தங்களுடைய தமிழ் ஒளி என்ன செய்கிறது..?

அங்கே மக்கள் பெரும் அவலத்தில் அழிந்து விழுந்து கொண்டிருக்கும் போது

சின்ன திரைகளை தொடராய் ஒளிபரப்பி அதில் இலாபம் காண்கறீர்கள் ஏன்...?

இவ்வாறான ஒரு காலகட்டத்தில் யாழ் மக்கள் ஊரடங்கு சிறையில் சிக்கி

அல்லல் உற்ற வேளையில் அவர்களது உறவுகள் அவர்களுக்கு என்ன

நடந்ததென அறிய துடித்த வேளையில்.

நேரடியாக தங்களுடய கலையகத்தில் இருந்து மிக அச்சொட்டான செய்திகளை

தாங்கள் கொண்டு வரவில்லை. மாறாக அந்தநேரம் உடனே நான் தொடர்பு கொண்டு

யாழ் திருநெல்வேலி தொலை பேசி இலக்கங்கள் கொடுத்திருந்தேன்.

அவர்களை தொடர்பு கொண்டு பேட்டி காணுங்கள் என்று.

அந்த நேரம் யாழிற்க்காண தொ. பே. தூண்டிக்கப்பட்டிருந்த நேரம்..

அவ்வாறு இருந்தும் சில இலக்கங்களை தேடி எடுத்து தந்திருந்தோம்.

தங்களது கலையகம் எந்தவொரு செவ்வியினையும்

அளிக்கவில்லை அல்லது காணவில்லை ஏன்...?

ஒட்டு மொத்தமாக கண்ணை மூடிக்கொண்டு ''தமிழ் ஆதரவு ஊடகங்களின்''

நிலப்பாடுகள் அந்த கால கட்டத்தில் பிழை என சாடுவதை ஏற்று கொள்ள முடியாது.

ஆனாலும் ஒளி பரப்பு என்ற வகையில் தங்களது நிகழ்வுகளை மெய்ச்சலாம்.

ஆனால் மீண்டும் மீண்டும் பழைய காட்சி தொகுப்புக்களை காண்பித்து

ஏதோ புதிதாய் ஒரு தாக்குதல் இவ்வாறு நடைபெற்றதாய் காட்ட முற்படுவது

சரியானதோ..?

இன்று மதிய செய்தியில் கூட..''பிரமனந்தனாறு'' என்ற சரியான சொற் பதத்தை

பரமனந்தனாறு என செய்தியில் வாசிக்கப்பட்டது..இவ்வாறான பிழைகள் வந்ததும் அதற்க்கு தவறாக

கூறப்பட்டதென பின்னால் கூறப்படுவதில்லை ஏன்..?

ஒரு நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு விடுதலை இயக்கம் நிரந்தரமான தளப்பிரதேசங்களையும்இ நகரும் அல்லது மிதக்கும் தளப்பிரதேசங்களையும் செல்வாக்குப் பிரதேசங்களையும் வைத்திருப்பது வழக்கமாகும்.

இவ்வாறான சொற் பதத்தை கருத்தியலை அந்த கள நிலவரத்தை அறிந்து பலர் எதிர்வு கூறியிருந்தார்கள்

அதை தாங்கள் இல்லை என்றா கூறுகிறீர்கள்...?????

மறு புறத்திலே தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகங்களும் அவற்றிலே உலாவரும் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் பத்தி எழுத்தாளர்களும் 'விடுதலைப்புலிகள் தந்திரோபாயமாகவே பின்வாங்கி இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் இது தான் நடந்தது.முல்லைத்தீவில் அடி விழவில்லையா? மாங்குளம் வரை முன்னேறி வந்த படையினரை ஜெய்சிக்குறு சமரில் ஓட ஓட அடித்த விரட்டவில்லையா? புலி பதுங்குவது பாய்வதற்கே! வான் படையை அவர்கள் இன்னமும் களம் இறக்கவில்லை.அது களம் இறங்கும் போது சிங்களப்படை சிதறி ஓடும்' என்று கைதேர்ந்த சோதிடர்கள் போல ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட கருத்துகளை அந்த வரலாற்று சான்றுகளை முன்னாடி நிறுத்தி தற்போதைய கிழக்கு நிலைகள் பற்றி

பல..புலம்பெயர் மற்றும் உள்ளநாட்டு வெளிநாட்டு ஆய்வளார்கள் கூறியுள்ளார்கள் அதை எல்லாம் தாங்கள் ''சோதிடம்'' என கூறுவது

அவர்களை நகைப்புடைப்பது போன்றதாகும்.

அத்தோடு அவர்களது கருத்துகள் எதிர்வு கூறல்களை மழுங்கடிக்கின்ற நிலையாகவும் அத்தோடு

அந்த மக்களிடத்தில் இருந்து அவர்களை அன்னிய படுத்துதலின் ஒரு அடி தளமாகவும் இதன்

கருத்துக்கள் அமைகின்றன.

எனவே ஆக்கரமிப்பாளனை உள்ளே வரவிட்டு பின்னர் தாக்கயழித்து பெரும் சேதத்தை அந்த படைகளிற்க்கு

காலம் காலமாக விடுதலைப் புலியணிகள் செய்வது வழமையான ஒன்றாகவும் அதேவேளை அவ்வாறான தாக்குதல் ஒவ்வொன்றும்

கள நிலைக்கேற்றவாறு மாறுபட்டு இவ்வாறான தாக்குதல்கள் நடந்ததையும் தாங்கள் நினைவில் கொள்வது சாலச் சிறந்தது.

அதற்க்கு முகமாலை தாக்குதல் இறுதி சான்றாகும்....

எனவே தங்களுடய இந்த கருத்துகள் சிலவற்றில் எனக்கு உடன் பாடு இல்லை என்பதனாலும்

அதை சுட்டி காட்ட வேண்டும் என்பதாலும் இதனை வரைகின்றோம்..

மாறாக எம்மை பொறுத்தரையில் புலம் பெயர்ந்த எமது தாயக உறவுகள் மனம் உடைந்து

கவலையோடு கதறலோடு இருந்த வேளைகளில் அவர்களிற்க்கு ஆறுதல் அளிப்பதாகவும் அதே வேளை

உண்மை நிலை என்ன என்பதை விளக்கியவர்களும் இந்த தமிழ் தேசிய எழுத்தாளர்கள் அல்லது

ஆய்வாளர்கள் என்பதை தாங்கள கவனத்தில் கொள்வது சாலச் சிறந்தது..

பி;கு;- தங்களது ஒளிபரப்பு தரதா ஒளி காட்சிகளை உடனே விரந்து இந்த தமிழ் இணையங்கள் தந்தன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்

அதற்க்கு இந்த யாழ் களம் முன்னுரிமை அளித்து செயற்பட்டதையும் நினைவில் கொள்வது சிறந்தது.

அவ்வாறான காட்சிகளை தாங்கள் எடுத்து தங்களது தரையில் காட்டியதையும் நினைவில் கொள்ளவும்....

நன்றி

-வன்னி மைந்தன் -

ஆக பொறுப்பான ஊடகம் என்றால் வைன்னிமைந்தன் கொடுத்த தொலைபேசி இலக்கத்தில இருக்கிறவர் அங்குள் நிலவரம் பற்றி குடுக்கிற செவ்வியைய் ஒளிபரப்ப வேணும். அந்த தொலைபேசியில் கதைப்பவரின் நம்பகத்தன்மை பின்னணி எல்லாம் முக்கியமல்ல ஏன் என்றால் வன்னிமைந்த கொடுத்த இலக்கமாச்சே.

வன்னிமைந்தன் சிலிங்கோ காப்புறுதி மோசடி பற்றி விறு விறுப்பான தகவல்களை ஊடகங்களுக்கு தொலைபேசியில சொன்னவராம் ஒருவரும் கவனம் எடுக்கேல்லையாம். இப்ப கடசியா சவால் விட்டிருக்கிரார் எல்லா ஆதரமும் இருக்காம் வேணும் எண்டா சிலிங்கோவை யாழ்களத்திற்கு விவாதத்திற்கு வரட்டாம் முடிந்தால் மறுதலிக்கட்டாம்.

அப்பிடி பாருங்கோ பொறுப்பான ஊடகம் என்றால் வன்னிமைந்தன் சிபார்சு செய்யிற ஆக்களிட்டை செவ்வி எடுத்துப் போட வேணும். வன்னிமைந்த சொல்லிற மோசடிகளை செய்தியாக்க வேணும்.

ஜயா குறுக்ஸ் எதை வேண்டுமானாலும் எப்படியும் தாங்கள் சொல்லுங்கள்

அவை தங்கள் கருத்து. அனால் இங்கே ஒரு நிறுவனம் இன்னும் தொடராய்

மோசடிகளை செய்து வருகிறது என்பது உண்மை.

இலங்கை வாழ் தமிழர்கள் பல பிரபல

பத்திரிகைகளில் அந்த மோசடி நபர்களுடய நிழல் பிரதிகளை

தாங்கிய வண்ணம் அந்த செய்திகள் வந்தததை மறந்திருக்க மாட்டார்கள்

அவ்வாறு நாம் சொல்வது பிழை என்றால். வீரகேசரி..தினக்குரல்

நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு கேளுங்கள். மிகுதி புரியும்

அவ்வாறான செய்திகளை நாங்கள் இங்கு பொய்யாகவோ அன்றி

ஆதாரம் இல்லாமலோ வெளியிடவில்லை.

இன்னும் நமது வசம் ஆவணங்கள் உள்ளன. எனவே இனி

இவ்வாறான தங்களது மடமைத்தனமான கேள்விகளிற்க்கும் சீண்டல்களிற்க்கும்

பதிலளிக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

அத்தோடு சில வானொலி. மற்றும் தொலைக்காட்சிகள் சம்பந்தமாகவும்

அதன் அறிவிப்பாளர்கள் பற்றியும் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

அவர்கள் மக்கள் முன்னால் என்ன பேசுகிறார்கள் .

அதே வேளை நேரடியாக எதை பேசுகிறார்கள் என்பது

புரியும் ஏனெனில்..நாமும்..அதற்க்குள்.......

.!

அதனால் அவர்களை பற்றி புரியும் அறிந்து வைத்துள்ளோம்.

சில சந்தர்ப்பங்கள் வருகின்ற போது அதை நாம் தெரிவிப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இப்ப, செய்தியிலை எங்கேயாவது சண்டை நடந்ததாம் ஒரு 5 ஆமி சரியாம் என்றதுமே எங்கட சனங்கள் "அப்ப தொடங்கிட்டாங்கள் போல கிடக்கு" எண்டு சொல்லி TV, radio என்று மாறி மாறித் தட்டுறவையும் இன்ரெநெற்றுக்குள்ள இறங்கித்தேடுறவையும் எண்டு பறப்பினம் பிறகு அது ஒண்டுமில்லை என்றதும் அவைக்குச் சப்பென்று போய்விடும். போதாக் குறைக்கு "கனக்க இடங்களும் போயிட்டுதாம்" என்றதும் அவைக்கு மூஞ்சையெல்லாம் கறுத்து விரக்தியே வந்து விடும். பிறகு "SAMATHAANAM" மாதிரி நாங்கள் சமாதானமாக போவம், நான் அரசியல் தீர்வில் நம்பிக்கையுடையவன் என்று பிதற்றத்தொடங்கி விடுவார்கள்.

ஆனால், போராட்டப் பாதையிலை, ஒரு காலம் வரும், அப்போது களத்திலுள்ளவர்கள் தாங்கள் செய்ய வேண்டியனவற்றையெல்லாம் செய்து முடித்திருப்பார்கள் ஆனாலும் போராட்டம் முடிந்திருக்காது. அப்போது, பந்து முழுவதுமாக புலத்திலுள்ளவர்கள்* பக்கம் இருக்கும். அந்த நேரத்தில்,ஏற்கனவே நீண்ட நெடும் போரில் ஈடுபட்டு நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நொந்து அங்கலாய்க வைக்காமல் தமது கடமையைச் செய்து முடித்தவர்களாக இருக்க வேண்டியவர்கள் புலத்திலுள்ள மக்களே. அவர்களை அதற்கு தயார்படுத்துவது ஊடகங்களின் கடமை. ஊடகங்கள் அவ்வாறு தம் கடமையைச் செய்கிறார்களா?

* அதற்காக புலத்திலுள்ளவர்கள் இதுவரைக்கும் செய்ய வேண்டியனவெல்லாம் செம்மையாகச் செய்துள்ளார்கள் என்பதல்ல. ஏற்கனவே தாயகத்தில் பல நாளேடுகளில் புலத்திலுள்ளவர் ஆற்றியிருக்க வேண்டிய பல விடயங்கள் பற்றி பல விதமான அங்கலாய்ப்புக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. அதில் முக்கியமானது பரப்புரை.

குருக்ஸ்,

உங்கள் படைப்புக்கள் ஒரு சாதாரண தமிழனுக்கு எமது போராட்டதின் மீதான பற்றை அற்றுபோக வைக்கிறது என்பதே உண்மை!

உங்களை மாதிரி அறிவு கூடியவர்கள் இப்படியான சாதரண மனிதர்கள் ஒன்று கூடும் இடங்களை விட்டு விலகி இருப்பது எல்லோருக்கும் நல்லது....

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

சிவா சின்னப்பொடி அவர்களின் கருத்துக்கள் எம் எல்லோர் மனங்களிலும் உள்ளவை தான். ஆனால் தடுமாறும் மக்களும் அவர்களை தவறாக வழிநடத்த எத்தனிப்பவர்களையும் தடுக்க வேண்டியதும் எமது கடமையல்லவா?

குகதாசன்

ம்ம்ம் எல்லாம் தமிழனுக்கு கிடைத்த சாபகேடு! நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்வதில் பயனில்லை. வேண்டுமானால் நாயின் வாலை அறுத்து விடுவது பிரயோசனமாக இருக்கும்!

  • தொடங்கியவர்

திரு. சிவா சின்னப்பொடி அவர்களிடம் இருந்து வந்த மடல்

இது ஒரு பொதுவான அரசியல் விமர்சன கட்டுரை.இதை தயவு செய்து ரிரிஎன்னுடைன் சம்பந்தப்படத்த வேண்டாம்.இது ரிரி என்னை அல்லது மற்ற எந்த ஊடகங்களையோ தனிப்பட்ட முறையில் விமர்சித்து எழுதப்பட்டதல்ல. தற்போதைய தேவைபற்றியும் பொதுவான தமிழ் ஊடகப் போக்குப் பற்றியும் தான் எழுதியிருக்கிறேன்.அதேபோல் என்னை அடையாளப்படுத்துவர்கள் ரிரிஎன்னுடன் தயவு செய்து சம்பந்தப்படுத்த வேண்டாம்.

சிவா சின்னப்பொடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sasass

  • கருத்துக்கள உறவுகள்

சிவா ஒரு நல்ல ஆய்வளர் என்பது அவர் முன்பு களமும் புலமும் நிகழ்ச்சி செய்யும்

போதே தெரிந்த விடையம்.அவர் ரிரிஎன் க்கு வெளியில் நின்று அதாவது ரிரி என் யை விட்டு விலகுவது என்று அர்த்தம் இல்லை. இப்படி பல கருத்துக்களை வைக்க வேனும்.

  • கருத்துக்கள உறவுகள்

குருக்ஸ்,

உங்கள் படைப்புக்கள் ஒரு சாதாரண தமிழனுக்கு எமது போராட்டதின் மீதான பற்றை அற்றுபோக வைக்கிறது என்பதே உண்மை!

உங்களை மாதிரி அறிவு கூடியவர்கள் இப்படியான சாதரண மனிதர்கள் ஒன்று கூடும் இடங்களை விட்டு விலகி இருப்பது எல்லோருக்கும் நல்லது....

:rolleyes:

குறுகஸ் நீங்கள் சொல்ல விளைவது சிலருக்கு விளங்குது.சிலர் குழம்புகிறார்கள் என்பது என்னமோ உணமைதான். நீங்கள் எல்லாருக்கும் புரியக்கூடியதாக எழுத கொஞ்சம் முற்ச்சிக்கலாமே.

(சாதாரண மக்களுக்கு இருக்க கூடிய இந்த சந்தேகங்கள் அல்லது கேள்விகள் அடிப்படையிலேயே தவறானவை என்பதையும் இவ்வாறன சந்ததேகங்களை கேள்விகளை திட்டமிட்டு உருவாக்குவதும் எதிரியினுடைய போர் தந்திரோபாயங்களில் ஒன்று என்பதையும் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆனால் எந்த ஊடகமும் இதுவரை அந்த வேலையை சரிவர செய்யவில்லை. சினிமாவும் சின்னத்திரை தொடர்களும், சமூகப் பொறுப்புணர்வும் தமிழ்தேசிய கருத்தில் பர்வையும் அற்ற இம்சைத் தொடர்களும் தான் தமிழ் மக்களின் தேசிய உணர்வை கட்டி எழுப்பவதற்கு அத்தியாவசியமானவை என்று இந்த ஊடகங்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றன)

பொருத்தமான நேரத்தில் முன்வைக்கப்பட்டள்ள மிகச் சிறப்பான கருத்து.இன்னும் எத்தனை நாளைக்கு எங்கடை சனங்கள் திருந்தாதுகள் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கப் போறம். சனத்தை கெடுப்பது யார் ? என்ற கேள்வியை எங்களுக்கு நாங்களே கேட்டுப் பார்ப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கை அடைவதற்கு இண்ணும் 10 நாட்கள் இருக்குது அதாவது 23ஃ02ஃ07

(சிவா சின்னப்பொடி அவர்களின் கருத்துக்கள் எம் எல்லோர் மனங்களிலும் உள்ளவை தான். ஆனால் தடுமாறும் மக்களும் அவர்களை தவறாக வழிநடத்த எத்தனிப்பவர்களையும் தடுக்க வேண்டியதும் எமது கடமையல்லவா?)

மக்கள் தடுமாறுவதும் சிறீலங்கா அரச உளவாளிகளும் தேசத்துரோகிகளும் அவர்களை தடுமாற வைப்பதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மக்களுடைய தடுமாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதையோ அதற்கான அடிப்படை என்ன என்பதையோ நாங்கள் கவனிப்பதில்லை.

பேராட்டம் பற்றி சரியான தெழிவை மக்களுக்கு வழங்கி அவர்களை பங்களார்களாக மாற்றாது வெற்றிகளை காட்டி குதூகலிக்க வைக்கும் மனோபாவத்தை அவர்கள் மத்தியில் வளர்த்து அவர்களை பார்வையாளர்களாக இருக்கும்படி செய்தது யார்?

இதற்குரிய விடையை கண்டுபிடித்தால் மட்டுமே எங்களுடைய தவறுகளை நாங்கள் திருத்திக் கொள்ள முடியும்

தமிழ் ஊடகங்கள்....

தமிழ் பிரபல ஆய்வாளர்கள்....

தமிழ் பிரபல இணையங்கள்....

இவர்கள் யாரை நம்பி எழுதுகிறார்களோ...

அவர்களையே நாம் நம்பி உள்ளோம்.

இவர்களை அல்ல. இது யாவரும் (நீ,நான்,அவன்,அவள்,அவர்கள், இவர்கள்,உலகம்)

அறிந்த யதார்தமான உண்மை. :rolleyes:

இலக்கை அடைவதற்கு இண்ணும் 10 நாட்கள் இருக்குது அதாவது 23ஃ02ஃ07

வசந்தன் இப்படி தவறான மாயையில் இருக்காதயுங்க புலிகள் உங்களுக்கு அரீவிக்கவில்லை தாம் 23/2/07 விலகப்பொகிறோம் என்றோ தாக்கபோகிறோம் என்றோ அவ்வாறு நடக்கா விட்டால் இனி சனம் வசை பாட தொடங்கீடும் தயவு செய்து காத்திருபோமே அதுவரையும் எம் கடமையை செய்து கொண்டு?

:icon_idea:

சும்மா வளவளன்னு பேசுவதுதான் ஈழத்தமிழர்களுக்கு கைவந்த களை. இரண்டே வரியில் புரியும்படி எழுந்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வளவளன்னு பேசுவதுதான் ஈழத்தமிழர்களுக்கு கைவந்த களை. இரண்டே வரியில் புரியும்படி எழுந்துங்கள்

நீர் புரிந்து என்ன செய்யப்போறீர் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வளவளன்னு பேசுவதுதான் ஈழத்தமிழர்களுக்கு கைவந்த களை. இரண்டே வரியில் புரியும்படி எழுந்துங்கள்

ஏன் உங்களுக்கு தமிழ் அரை குறை தான் வரும் என்றால் நாங்கள் அதற்கு என்ன செய்வது? முதலில் "அ"வில் இருந்து 'னெள" வரைக்கும் பிழை விடாமல் எழுதிப் பழகலாமே!

இரண்டுவரியில் எழுதினால் மட்டும் புரிந்திடுமா :icon_idea::lol::lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லதோர் கட்டுரை. சொல்ல வந்த விடயத்தைப் புரியாமல் சும்மா அலட்டுவது ஏன்?

சிலருக்கு (பலருக்கு?) விளங்க வைக்க தெருக்கூத்து, படலைக்குப் படலை, நையாண்டி மேளத்தில் இப்படியான விடயங்களைச் சொல்லவேண்டும்..

சும்மா வளவளன்னு பேசுவதுதான் ஈழத்தமிழர்களுக்கு கைவந்த களை. இரண்டே வரியில் புரியும்படி எழுந்துங்கள்

[b]உயிரையும் இரத்தத்தையும் ஆகுதியாக கொடுத்து நடத்தப்படும் ஒரு வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தின் மதிப்பிட்டை அற்பத்தனமான நாணய அளவீடுகளாலோ சதாரணமான வார்த்தைகளாலோ அளவிட முடியாது என்பதை நமது ஊடகங்கள் மக்களுக்கு உணர்த்துவதற்கு மறந்துவிடுகின்றன.

ஐயா புரியாதமாதிரி நடிக்கிறதும் கைவந்த கலை என்று சொல்லும். சிங்கள தேசத்து பொருட்களுக்கு விளம்பரம் செய்து அதை வாங்கி பயன்பெற்று ஏயர் லங்காவை லாபத்தில இயங்கச் செய்து எங்கட உறவுகளின்ரை தலையில குண்டுபொட நாங்கள் காசு குடுத்தக்கொண்டிருக்கிறம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.