Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக மண்ணின் கோலங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஜீவன் விடுப்பில் நின்ற நாளுக்கெல்லாம் சேர்த்து பச்சை தந்து விட்டார்கள் போல, எனக்கு செம்புக் காசை எடுத்து எடுத்து  பிச்சை போடுவது போல் இருக்கு....!  tw_blush:

  • Replies 53
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
10 minutes ago, suvy said:

என்ன ஜீவன் விடுப்பில் நின்ற நாளுக்கெல்லாம் சேர்த்து பச்சை தந்து விட்டார்கள் போல, எனக்கு செம்புக் காசை எடுத்து எடுத்து  பிச்சை போடுவது போல் இருக்கு....!  tw_blush:

இல்லையே 

எண்ட செம்புக்குள்ள ஒண்டுமேயில்லை எண்டு திட்டுதே.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

IMG_1189.jpg

IMG_1199.jpg

  • தொடங்கியவர்

IMG_0675.jpg

IMG_0686.jpg

IMG_0722.jpg

Edited by ஜீவன் சிவா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எத்தனையோ மனிதர்கள் இந்த உலகத்துக்கு வந்த இடம் இது. இணுவில் மருத்துவமனை. 

அதுமட்டுமில்லை சண்டேஸ்வரரின் 267வது மறுபிறப்பும் இங்குதான் ஜீவன் சிவா என்ற பெயரில் அவதரித்தது என்ற புகழ் பெற்ற வைத்தியசாலையும் இதுதான்.

ஒரு காலத்தில் மந்திகை + மூளாய் + மானிப்பாய் + இணுவில் + தெல்லிப்பளை மருத்துவமனைகளில் பிறக்காத குழந்தைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் .

மந்திகை + மூளாய் மருத்துவமனைகள் ஓரளவு பராமரிக்கப்பட்டு இயங்குகின்றன. ஆனால் மானிப்பாய், இணுவில், தெல்லிப்பளை மருத்துவமனைகளைப்  பார்க்க மனது கஷ்டமாயிருக்கும்.

IMG_1327.jpg

IMG_1331.jpg

IMG_1332.jpg

IMG_1336.jpg

IMG_1339.jpg

IMG_1347.jpg

IMG_1349.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவுகள் தொடருங்கள் ...... நன்றி ஜீவன் சிவா.

  • தொடங்கியவர்

கந்தரோடைக்கு போகும்போதெல்லாம் களவா கள் + தம் அடித்த கவிட்டுப்போட்ட சிரட்டைகள் என்று அன்பா நாங்கள் அழைத்த இடம் இப்ப புனித பூமியாம். பெயர் வேற கந்தரட்டவோ எதோ. சில சிரட்டைகள் மீது கலசமும் குந்தி இருக்குது. பத்தாததுக்கு புத்தரும் வந்திட்டார். அலரிமரம் + அரசமரமும் வந்தாச்சு. வேலிக்குள்ள மொழியும் மாறிவிட்டது.

ஆனாலும் ஒரு கரிக்குருவி மட்டும் பாசத்தோட படம் எடடா எண்டு பக்கத்தில வந்து குந்திச்சு // ஆனால் அதுவும் கமராவை கண்டதும் பின்புறத்தை மட்டும் காட்டிச்சு. :unsure:

IMG_1500.jpg

vh9btd.jpg

10g0177.jpg

4t3nl5.jpg

IMG_1521.jpg

IMG_1526.jpg

IMG_1532.jpg

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

முதற் தடவையாக அத்திமரத்தை கண்டபோது

20170419_114616.jpg

ji2536.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 தங்கள் பதிவுகளுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, ஜீவன் சிவா said:

முதற் தடவையாக அத்திமரத்தை கண்டபோது

மரியாதை கெட்டவேலை....அதை வேறை வெளியிலை சொல்லிக்காட்டிக்கொண்டு....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஜீவன் சிவா said:

முதற் தடவையாக அத்திமரத்தை கண்டபோது

20170419_114616.jpg

ji2536.jpg

நன்றாக இருக்கு ...
காத்திருந்து அத்தி பூக்கும் போதும் 
ஒரு படம் எடுத்து போட்டால் நன்றாக இருக்கும்!

  • தொடங்கியவர்
9 hours ago, குமாரசாமி said:

மரியாதை கெட்டவேலை....அதை வேறை வெளியிலை சொல்லிக்காட்டிக்கொண்டு....:grin:

தெரியாததை தெரியாதெண்டு ஒத்துக்கொள்ளவும் ஒரு தைரியம் வேணும்.

அந்த தைரியம் எனக்கு நிறையவே உண்டு - அதனால்தான் இன்றும் எதையோ புதிது புதிதாக அறிகின்றேன்.

ஆனால் எனக்கு தெரியும் என்று நாடகம் போட்டால் வாழ்நாள் பூராவும் குண்டுசட்டிக்குள் குதிரை அல்லது யானை + ..... ஓட்டவேண்டியதுதான். :grin::grin:

இந்தப் படம் பண்ணை மீன் சந்தைக்கு முன்னர் எடுத்தது. இந்த மரத்தை நான் முன்னர் கண்டதில்லை. அருகில் இருந்தவரிடம் கேட்டபோது என்ன மரம் என்று தெரியாதென்றார். இன்னமும் சிலரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் தானாகவே அருகே வந்து தம்பி இது அத்திமரம் என்றார். அதுமட்டுமில்லை இன்னமும் அரிதான மரங்களிரண்டை பற்றியும் அவற்றின் இருப்பிடம் பற்றியும் கூறினார். அவையாவன பூநாறி மரம் + பெருக்க மரம்

எனக்கு தெரியாதென்று சொன்னபடியால் என்னால் மூன்று அரிதான மரங்களைப் பற்றி அறியக்கூடியதா இருந்தது.

தெரிந்தமாதிரி பீலா விட்டிருந்தால் // அறிவு அங்கயே குந்திக்கின்னு கொட்டாவி விட்டுக்கொண்டிருந்திருக்கும்.

எனக்கு தெரியாது என்று சொல்வது மரியாதை கேட்ட வேலை என்றால் // அதை மரியாதையாக சாகும்வரை செய்வான் இந்த ஜீவன்.

  • தொடங்கியவர்
6 hours ago, Maruthankerny said:

காத்திருந்து அத்தி பூக்கும் போதும் 
ஒரு படம் எடுத்து போட்டால் நன்றாக இருக்கும்!

அத்தி மரத்துக்கு தண்ணி ஊத்தி பசளை போட்டு

அது பூக்கும் படம் காட்டலாம்

இல்லை இல்லை படம் எடுக்கலாம் என்று காத்திருக்க நான் என்ன முட்டாளா :grin::grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "figuier arbre"Résultat de recherche d'images pour "figuier arbre"

இங்குள்ள அத்தி மரம் இப்படித்தான் இருக்கும். இதை பிஃக் fig tree என்பார்கள்....!

விடயம் அதுவல்ல....! இந்தப் பண்ணையை அண்டிய ஒரு ஸ்தாபனத்தில் சில வருடங்கள் நான் வேலை செய்திருக்கின்றேன். இப்படியொரு மரத்தை நான் கவனிக்கவே இல்லை. அல்லது கவனிக்க நேரமின்றி அலைந்திருக்கின்றேன்.(அம்மம்மா அப்பவே சொன்னவ, நாய்க்கு வேலையுமில்லை நடக்க நேரமுமில்லை என்று.) பூநாறி மரம் தெரியும். நாச்சிமார் கோவிலுக்கு அண்மையில் உள்ளது......!

அந்த மீன்சந்தையில் படகுகளில் வரும் மீன் குவியல்களை ஏலம் விடுபவர்களில் ஒருவர் எனது நண்பரும்கூட....! இப்ப எப்படி எங்கு இருக்கிறாரோ தெரியாது....! tw_blush:

  • தொடங்கியவர்
5 minutes ago, suvy said:

பூநாறி மரம் தெரியும். நாச்சிமார் கோவிலுக்கு அண்மையில் உள்ளது......!

சிறிய மாற்றம் 

நாச்சிமார் கோவிலுக்கும் தட்டாதெருவுக்கும் இடையில் உள்ள பஸ் தரிப்பு நிலையம். இந்த பஸ் தரிப்பு நிலையத்துக்கும் பூநாறி மரத்தடி என்றுதான் பெயர். யாழில் இன்னொமொரு இடத்திலும் இந்த மரம் இருக்குதாம் // சஸ்பென்ஸ்.

இதுவரை பூநாறி என்றது இதுதான் என்று மொக்குத்தனமாக நினைத்திருந்தேன். தெரியாது என்று சொன்னேன் - விளக்கம் கிடைத்தது.

தெரியுமெண்டு வாய் சவடால் விட்டிருந்தால் - இதுவும் தெரிந்திருக்காது. :grin:

IMG_5166.jpg

IMG_5167.jpg

  • கருத்துக்கள உறவுகள்

என்ற கைதான் பாருங்க யாராவது ரேகையை தேடப்படாது சொல்லிப்போட்டன் 

அத்தி மரம் தெரியாமல் ஒரு மனுசன் இலங்கையில் இருந்திருக்கு   அது சரி இது என்ன பழம் 

20170101_120533.jpg

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார் கோவிலில் இருந்து தட்டாதெரு வரும் வழியில் ஒரு சின்ன ஒழுங்கை இருக்கும் அங்கே அந்த மரம் இருந்ததாக ஞ<பகம்.....! :unsure:

  • தொடங்கியவர்
2 minutes ago, suvy said:

நாச்சிமார் கோவிலில் இருந்து தட்டாதெரு வரும் வழியில் ஒரு சின்ன ஒழுங்கை இருக்கும் அங்கே அந்த மரம் இருந்ததாக ஞ<பகம்.....! :unsure:

தலைவா உங்கள் ஞாபக சக்திக்கு அளவே இல்லையா 

200.webp#9-grid1

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார் கோவிலடியிலிருந்து கொக்குவில் நோக்கி செல்லும் போது பூநாறி மரத்தடி

  • தொடங்கியவர்
4 hours ago, MEERA said:

நாச்சிமார் கோவிலடியிலிருந்து கொக்குவில் நோக்கி செல்லும் போது பூநாறி மரத்தடி

உண்மை மீரா

இது நாச்சிமார் கோவிலுக்கும் கொக்குவிலுக்கும் இடையில்தான் உள்ளது - நான்தான் தவறாக எழுதிவிட்டேன்

படம் - கூகிள் 

Uten_navn.png

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-3-7 at 7:24 AM, ஜீவன் சிவா said:

வாழ்விழந்தது எமது மீனவர்கள் மட்டுமில்லை
துருப்பிடித்து சிதைந்து போகும் அவர்கள் படகுகளும்தான். 

IMG_8073.jpg

IMG_8074.jpg

IMG_8075.jpg

இது காரைநகர் இறங்குதுறையின் இருபுறமும் அநாதரவாக மீன்பிடி படகுகள்.
இந்த படகுகள் எமதா அல்லது இந்திய மீனவர்களதா என்பது தெரியாது.

நன்றி

இந்த படகுகளின் தோற்றத்தை பார்க்கும்போது இந்திய மீனவர்கள் பயன் படுத்தும் படகுகள் போன்றே உள்ளது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, ஜீவன் சிவா said:

தெரியாததை தெரியாதெண்டு ஒத்துக்கொள்ளவும் ஒரு தைரியம் வேணும்.

அந்த தைரியம் எனக்கு நிறையவே உண்டு - அதனால்தான் இன்றும் எதையோ புதிது புதிதாக அறிகின்றேன்.

ஆனால் எனக்கு தெரியும் என்று நாடகம் போட்டால் வாழ்நாள் பூராவும் குண்டுசட்டிக்குள் குதிரை அல்லது யானை + ..... ஓட்டவேண்டியதுதான். :grin::grin:

இந்தப் படம் பண்ணை மீன் சந்தைக்கு முன்னர் எடுத்தது. இந்த மரத்தை நான் முன்னர் கண்டதில்லை. அருகில் இருந்தவரிடம் கேட்டபோது என்ன மரம் என்று தெரியாதென்றார். இன்னமும் சிலரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் தானாகவே அருகே வந்து தம்பி இது அத்திமரம் என்றார். அதுமட்டுமில்லை இன்னமும் அரிதான மரங்களிரண்டை பற்றியும் அவற்றின் இருப்பிடம் பற்றியும் கூறினார். அவையாவன பூநாறி மரம் + பெருக்க மரம்

எனக்கு தெரியாதென்று சொன்னபடியால் என்னால் மூன்று அரிதான மரங்களைப் பற்றி அறியக்கூடியதா இருந்தது.

தெரிந்தமாதிரி பீலா விட்டிருந்தால் // அறிவு அங்கயே குந்திக்கின்னு கொட்டாவி விட்டுக்கொண்டிருந்திருக்கும்.

எனக்கு தெரியாது என்று சொல்வது மரியாதை கேட்ட வேலை என்றால் // அதை மரியாதையாக சாகும்வரை செய்வான் இந்த ஜீவன்.

தெரியாததை தெரியாது எண்டுதான் சொல்ல வேணும்..... அதுக்காக அலஸ்காவிலை இருந்து வந்தவன் மாதிரி அத்திமரத்தை பாத்து பினாத்தினால் கண்டவன் கிண்டவன் எல்லாரும் சிரிக்கத்தான் செய்வாங்கள்.......:grin:

இனி அடுத்தது நெல்லிமரமாக்கும் :cool:

அந்த முருகனே! தெரியாததை ஔவையாரிட்டை தான் கேட்டு தெரிஞ்சு கொண்டானாமெல்லே :innocent:

  • கருத்துக்கள உறவுகள்
On 4/19/2017 at 5:12 AM, ஜீவன் சிவா said:

எத்தனையோ மனிதர்கள் இந்த உலகத்துக்கு வந்த இடம் இது. இணுவில் மருத்துவமனை. 

எனது மூத்த மகளும் இங்கு தான் பிறந்திருந்தாள்.

அருமையான படங்கள் இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தெரியாததை தெரியாது எண்டுதான் சொல்ல வேணும்..... அதுக்காக அலஸ்காவிலை இருந்து வந்தவன் மாதிரி அத்திமரத்தை பாத்து பினாத்தினால் கண்டவன் கிண்டவன் எல்லாரும் சிரிக்கத்தான் செய்வாங்கள்.......:grin:

இனி அடுத்தது நெல்லிமரமாக்கும் :cool:

அந்த முருகனே! தெரியாததை ஔவையாரிட்டை தான் கேட்டு தெரிஞ்சு கொண்டானாமெல்லே :innocent:

அப்ப உவர எந்த பாட்டியிற்ற அனுப்புற  அதாவது கேட்டு தெரிந்து கொள்ள  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, முனிவர் ஜீ said:

அப்ப உவர எந்த பாட்டியிற்ற அனுப்புற  அதாவது கேட்டு தெரிந்து கொள்ள  

Bild könnte enthalten: 1 Person, sitzt und Text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.