Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für wilkinson schaving raser   Bildergebnis für wilkinson blade razor

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா?

தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மென்மையாக ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை அகற்றி வருகின்றனர். அதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியையும் அகற்றுகின்றனர். 

அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! 
மேலும் உடலில் வளரும் முடியை அகற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஷேவ் செய்வது, ட்ரிம் செய்வது, வேக்ஸ் செய்வது போன்றவை பொதுவான வழிகள். இதில் ஷேவிங் முறையைத் தான் நிறைய பேர் பின்பற்றுகின்றனர். ஏனெனில் இந்த வழியால் நமக்கு வலி இருக்காது. 

அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்த பின் அரிப்பு ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!!
ஆனால் மிகவும் மென்மையான பகுதியான பிறப்புறுப்பில் வளரும் முடியை எப்போதுமே ஷேவிங் செய்யக்கூடாது என்பது தெரியுமா? ஏனெனில் அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

காரணம் #1: பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி, அப்பகுதிக்கு நல்ல குஷன் போன்று இருக்கும் மற்றும் தீவிரமான உடலுறவின் போது உராய்வு ஏற்படுவதைத் தடுக்கும்.

காரணம் #2:  பிறப்புறுப்பை ஷேவிங் செய்யும் போது, அதன் வடிவம் மற்றும் நிலையினால் பல காயங்களை சந்திக்கக்கூடும். மேலும் ஷேவிங் செய்த பின் கடுமையான அரிப்புக்களை அனுபவிக்கக்கூடும்.

காரணம் #3:  பிறப்புறுப்பை ஷேவிங் செய்வதால், அவ்விடத்தில் சீழ் பிடித்த பருக்கள் அதிகம் வரக்கூடும்.

காரணம் #4:  பிறப்புறுப்பில் வளரும் முடி, உடலுறவினால் இனப்பெருக்க உறுப்பு மருக்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும்

காரணம் #5:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியில் உள்ள இயற்கை எண்ணெய், இயற்கை உராய்வுப்பொருளாக செயல்படும்.

காரணம் #6:  முக்கியமாக பிறப்புறுப்பில் வளரும் முடி நல்ல பாதுகாப்பை வழங்கும் மற்றும் உடலின் வெப்ப நிலையை சீராக பராமரிக்க உதவும்.

காரணம் #7:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் பாலியல் நோய்களின் தாக்கம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். முக்கியமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் வேகமாக தாக்கும்.

குறிப்பு:  இருப்பினும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி உங்களுக்கு தொந்தரவாக இருப்பின், ட்ரிம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான, அதே சமயம் பாதுகாப்பை வழங்கும் ஓர் வழியும் கூட.

நன்றி தற்ஸ் தமிழ்.
 
Edited by தமிழ் சிறி

தற்ஸ் தமிழ் போன்றவற்றின் மருத்துவக் குறிப்புகளை நம்பினால் அவ்வளவுதான். மிச்சத்தினை எழுத வெக்கமாக இருக்கு tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தற்ஸ் தமிழ் போன்றவற்றின் மருத்துவக் குறிப்புகளை நம்பினால் அவ்வளவுதான். மிச்சத்தினை எழுத வெக்கமாக இருக்கு tw_blush:

இந்தப்பகுதியில்பதியும் அளவுக்கு வந்ததே பெரும்வளர்ச்சி  தானே?

எதற்கு வெட்கம்??

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் #8:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் வியர்வைப் பிசுபிசுப்பான இடங்களில் ஆனந்தமாக குடும்பம் நடத்தும் சிறு உயிரிகளான பேன், பொடுகு, கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளின் வாழ்விடத்தை அழித்த பாவம் வந்து சேரும்?

முடிக்கற்றைகளில் வாழும் அழகிய சிறு உயிரி ஒன்றைப் பாருங்கள். இதனை எப்படி அழிக்க மனம் வரும்??

Demodex-3.jpg

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

அவன் அவன் பாரிய கற்பனைகளோடு ....
எதிர்கால வாழ்வை நோக்கி 
நாளும் நாளும் வளர்ந்து வருகிறான்.

வாழ்ந்து முடித்தவர்கள் 
தயவு செய்து இப்படி அசிங்கம் 
பண்ணாதீர்கள்!

இந்த புழுவை பார்த்ததில் இருந்து 
நெஞ்சுக்கு ஒரு நெருடலாக இருக்கிறது.

(நெடுக்கர் ஒரு திரி திறந்து இருந்தார் பல வருஷம் முன்பு ... பின்பு இப்போது யாரோ தூசு தட்டி 
மீண்டும் கொஞ்ச நாள் ஓடிச்சு. "ஏன் குமரிகளை பேபி என்று அழைக்கினம் என்று?" அப்போ இப்படி தோன்றிச்சு ...பேபியாய்  இருப்பதால் அப்படி அழைக்கிறார்களோ என்று? 
ஆனால் நியானி அண்ணருக்கு பயத்தில் எழுதவில்லை) 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

இந்த புழுவை பார்த்ததில் இருந்து 
நெஞ்சுக்கு ஒரு நெருடலாக இருக்கிறது.

அஞ்சற்க! 

இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தே வாழுகின்றன.

முடிகளை வளரவிடுவதும், மழித்து மொழுமொழுவென்று வைத்திருப்பதும் ஒவ்வொரு காலத்தில் உள்ள ஃபாசனைப் பொறுத்தது.?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் முழு சவரம் முக்கால்சவரம் என்று நிறைய பணம் பண்ணுகிறார்கள்.பேசாமல் அந்த கடை ஒன்று திறந்தா ஓகோ என்று ஓடும் போல.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தான் வெட்கப்பட்டுக் கமக்கட்டுக்குள்ளை...தலையை மறைக்கிறது!

ஒரு ஆர்வத்துக்காக...குரானை வாசித்துக் கொண்டு போகும் போது...ஒரு பெண் தனது ஆணை மகிழ்விக்க...இப்படியான செயல்களைச் செய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது!

இது எழுதப்பட்டது....கி.பி 600...!

ஒண்டு....ஒண்டாய் மினக்கெட்டு பிடுங்கி இருப்பாங்களோ..? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

காரணம் #8:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் வியர்வைப் பிசுபிசுப்பான இடங்களில் ஆனந்தமாக குடும்பம் நடத்தும் சிறு உயிரிகளான பேன், பொடுகு, கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளின் வாழ்விடத்தை அழித்த பாவம் வந்து சேரும்?

முடிக்கற்றைகளில் வாழும் அழகிய சிறு உயிரி ஒன்றைப் பாருங்கள். இதனை எப்படி அழிக்க மனம் வரும்??

Demodex-3.jpg

நான் புல் பூண்டுகளை அழிப்பதையே பாவம் என்று நினைப்பவன்......:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அஞ்சற்க! 

இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தே வாழுகின்றன.

முடிகளை வளரவிடுவதும், மழித்து மொழுமொழுவென்று வைத்திருப்பதும் ஒவ்வொரு காலத்தில் உள்ள ஃபாசனைப் பொறுத்தது.?

இதனை வாசித்து வந்த சிரிப்பை....  அடக்க முடியவில்லை கிருபன் ஜீ.   Bildergebnis für lachen animated gif

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

தற்ஸ் தமிழ் போன்றவற்றின் மருத்துவக் குறிப்புகளை நம்பினால் அவ்வளவுதான். மிச்சத்தினை எழுத வெக்கமாக இருக்கு tw_blush:

நிழலி,  உங்களுக்கு வெக்கமா.... எப்ப இருந்து?  நம்ப முடியவில்லை. :grin:
கிருபன் ஜீயே... கரணம்: 8 ஐ, படத்துடன் கூறியுள்ளார். 
காரணம்: 9 ஐ, நீங்களோ அல்லது மற்றவர்களோ  எழுதுங்கள்.  வெள்ளிக்கிழமை  பம்பலாக இருக்கும். :D:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

நாங்கள் தான் வெட்கப்பட்டுக் கமக்கட்டுக்குள்ளை...தலையை மறைக்கிறது!

ஒரு ஆர்வத்துக்காக...குரானை வாசித்துக் கொண்டு போகும் போது...ஒரு பெண் தனது ஆணை மகிழ்விக்க...இப்படியான செயல்களைச் செய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது!

இது எழுதப்பட்டது....கி.பி 600...!

ஒண்டு....ஒண்டாய் மினக்கெட்டு பிடுங்கி இருப்பாங்களோ..? :unsure:

Bildergebnis für  old  shaving raser

புங்கையூரான்... என்ன நீங்க, உலக வரலாறு தெரியாமல் இருக்கிறீர்கள்?
கி.பி 600´ல்  இந்த சவரக் கத்தி, புழக்கத்துக்கு வந்து விட்டது.  :grin: :D:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பு உறுப்பு... முடியை, வளர்ப்பதா... வெட்டி எறிந்து விடுவதா என்ற, திரியை 
இதுவரை...  24 மணித்தியாலத்தில்,  1000 க்கு மேற்பட்டவர்கள், பார்த்து இருக்கின்றார்கள்.
அதிலும்... இன்று பகல்,  கடந்த 12 மணித்தியாலத்தில் மட்டும்,  570   பார்வையாளர்கள்,  அமுசடக்கமாக வந்து போனது... ஆச்சரியாமாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
 
இக் குறக்கான எனது புதிய விளக்கம்:-
 
இன்பம் தருபவை என்று அனுபவித்தோர் வழங்கிய ஒழுக்கங்களை பேணுபவர்களுக்கு மயிரை மழித்தலும், வளர்த்தலுமாகிய வெளி வேடங்கள் வேண்டியனவல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.