Jump to content

முகநூல் நண்பர்கள்....

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நண்பர்கள்  என்பவர்கள்  எம்மோடு  இரண்டரக்கலந்தவர்கள்

எம்மை அறிந்தவர்கள்  புரிந்தவர்கள்  என்பதையும்  தாண்டி

முகம்தெரியாமலேயே நட்பு வைத்துக்கொள்ளலாம்

அதனாலும் பல நல்லது செய்யலாம் 

பல அரிய  விடயங்களை பெறலாம் என்பதை  எனக்கு அறிமுகமாக்கியது யாழ் தான்.

அதன்  தொடர்ச்சியாக முகநூலிலும்  பயணம்  தொடர்கிறது

 கருத்து  எழுதுவதில்  யாழ்  தந்த அனுபவம்  மற்றும்  

அறிமுகங்களோடு முகநூல் பாவனையும் எனக்கு மேலும் நல்ல சிறந்த நட்புக்களையும் 

தேடல்களையும் தொடர்புகளையும்  தந்திருக்கிறது.

அது மேலும் மேலும் வளரும் சாத்தியமுள்ளது.

எமது இலக்கிலும் நண்பர்களை  சேர்ப்பதில் அவதானமாகவும்  தொடர்ச்சியாக இருந்தால்

முகநூலும்  எமக்கு ஒரு வரப்பிரசாதமே.

அந்தவகையில்  நண்பர்களை   சேர்ப்பதில்  எப்பொழுதுமே கவனமாக இருப்பேன்

சிலரது கருத்துக்களை  தொடர்ந்து வாசித்து

அவரது நண்பர்  வட்டாரத்தில் எனக்கு நம்பகரமான நட்பும் அவரது நண்பராக  இருந்தால்

நானாகவே அழைப்பும் விடுவதுண்டு

அதே நேரம்  எனக்கு வரும்  புது அழைப்புக்கள்  சார்ந்துமிக மிக  கவனமாக இருப்பதுண்டு.

அவ்வாறு நட்புக்கான அழைப்பு வரும் போது

எனது நண்பர்கள்  குறைந்தது பத்து பேராவது அவரது நண்பர்களாக  இருக்கிறார்களா? என்று பார்ப்பதுண்டு

அந்த 10 பேரும் தேவையற்று  பிரபலத்துக்காக  எல்லோரையும் நண்பர்களாக ஏற்காதவர்களாக இருக்கணும்

அப்படியானவர்களின்  நட்பே ஏற்றுக்கொள்ளப்படும்

அநேகமாக கலைஞர்கள் அரசியல்வாதிகள்

இயக்கங்களின் உறுப்பினர்கள் போன்றரது நண்பர்களாக இருப்பின் 

அவர்கள் எனக்கு நல்ல கருத்தாளர்களாக தெரியும்

நண்பர்கள் வட்டத்துக்குள் இருந்தால் மட்டுமே நண்பராக ஏற்றுக்கொள்ளப்படும்

அப்படியும் சில  சந்தேகங்கள் வந்தால்

எனக்கு நன்கு அறிமுகமான தம்பிமாரிடம்

உள்பெட்டியில்  இவர் பற்றி கேட்டு தெரிந்த பின்பே அழைப்பை ஏற்பதா விடுவதா என்ற முடிவை  எடுப்பதுண்டு.

இவ்வாறு  தெரிவு செய்யும்போது எமக்கு அவரால்  ஏதாவது சிக்கல்  ஏற்பட்டால்

எமக்கு அவரைப்பற்றி அறிமுகம்   தந்தவரிடம் முறையிடலாம்

மற்றும்   மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாம்.

இது அனைவருக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும்.

மற்றும்படி இன்று அநேகமாக முகநூலில் அடிபாடுகள் நடப்பதற்கு காரணம்

யார்  அதிகம்  பேரை நண்பர்களாக வைத்திருப்பது

அதனூடு  பிரபலமாகலாம்  என்ற போட்டியில் ஆயிரக்கணக்கானவர்களை  சேர்ப்பதும்

யார் அதிகம்  லைக் வாங்குவது என்ற மன உலைச்சலும் தான் காரணம்.

அதற்கு முகநூலையோ

இனங்களையோ தூசித்து என்ன பயன்?

எமது வீட்டுக்குள் ஆட்களை  நுளையவிட்டது யார்??

அவர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் வீட்டு இரகசியங்களை

பெறுமதியானவற்றை

அங்கும்   இங்கும் சிதறிவிட்டது யார்??

நாம் தானே??

அப்போ  வருபவரை  எவ்வாறு குறை  சொல்லமுடியும்???

100 இல் ஒன்று அப்படியும் வரும்

நாம்  தான்  அவதானமாக இருக்கணும்.

அநேகமான யாழ்  உறவுகள் எனது முகநூல் நண்பர்களே

ஒன்று இரண்டு

இங்கிருந்து தாமாகவே போய்

அங்கும் வேறு இடங்களில்  கடி பட்டதால்

அவர்கள் மட்டும் சேர்க்கப்படவில்லை.

நேரம்  பொன்னானது காண்.

நல்லதை  எடுத்துக்கொள்வோம் எங்கிருந்தாலும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு கருத்து விசுகு .... ஆனால் நான் முகநூலில் இல்லை. அதை கையாளவும் எனக்கு தெரியாததும் ஒரு காரணம்....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு நட்பு அழைப்பு விட்டு இருக்குறீர்களே நீங்கள் யார் பல வருடத்துக்கு முன் நடந்த ஒரு உரையாடல் நினைவுக்கு வந்து போனது ஓ நீங்களும் முகநூலில் இருக்குறீர்களா  அட்ரசை தாங்கோ அங்கு வரலாம் என்று இருக்குறன் என்ன மாதிரி கெதியா சொல்லுங்கோtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முகநூல் நிறையவே அநுபவங்களைத் தந்திருக்கிறது. தந்துகொண்டிருக்கிறது. தரும். அவ்விடத்தில் மன உளைச்சல் அடைவதற்கு எதுவுமே இல்லை. சக பயணிகளின் குணஅம்சங்களை கண்டபடியே நமது பயணத்தை தொடர வேண்டியதுதான். காலில் இடறுகிறதா நாமே விலகி நடப்பது நல்லது முள்ளாய் குத்துகிறதா? நம் பயணத்திலிருந்தே அதனை அகற்றிவிடுதல். பல விடயம் கொச்சையாகவும் கோணலாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அவை எதுவும் எம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற திடத்தோடு நிற்பவர்கள் முகநூலால் எக்காலத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள். பெண்களின் முகநூலுக்கு அல்லது பெண்களின் படங்களை ப்ரோபைலில் வைத்திருப்பவர்களுக்கு சற்று சிக்கல்கள் அதிகம்தான் ஒன்று அவர்களுடன் எதிர்ப்பாலினத்தவர்கள் தனிப்பட்ட வகையில் பேச முற்படுவது அதே சமயம் குழுக்களாக இணைந்து ஒரு பெண்ணை குறிவைத்து இன்பொக்ஸில் ஆசை வார்த்தைகளைப்பேசி முட்டாள் பெண்களைக் கவிழ்ப்பது இப்படி நிறைய விடயங்கள் அங்கு உள்ளன. நிலவுக்கு அஞ்சி பரதேசமா போகமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

நல்லதொரு கருத்து விசுகு .... ஆனால் நான் முகநூலில் இல்லை. அதை கையாளவும் எனக்கு தெரியாததும் ஒரு காரணம்....!

வாங்க அண்ணா

நாங்க இருக்கிறம்...

புகுந்து விளையாடலாம்...

நன்றியண்ணா வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

1 hour ago, முனிவர் ஜீ said:

எனக்கு நட்பு அழைப்பு விட்டு இருக்குறீர்களே நீங்கள் யார் பல வருடத்துக்கு முன் நடந்த ஒரு உரையாடல் நினைவுக்கு வந்து போனது ஓ நீங்களும் முகநூலில் இருக்குறீர்களா  அட்ரசை தாங்கோ அங்கு வரலாம் என்று இருக்குறன் என்ன மாதிரி கெதியா சொல்லுங்கோtw_blush:

தெரியாத பெயர்களில் இருந்து அழைப்பு   வந்தால்  அப்படித்தான்..

என் தம்பி  முனிவர் ஜீ

என்று  வந்திருந்தால்  உடனேயே  எப்ப திருமணம் ? என்பது தானே கேள்வியாக இருக்கும்:grin:

நன்றி தம்பி வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வல்வை சகாறா said:

முகநூல் நிறையவே அநுபவங்களைத் தந்திருக்கிறது. தந்துகொண்டிருக்கிறது. தரும். அவ்விடத்தில் மன உளைச்சல் அடைவதற்கு எதுவுமே இல்லை. சக பயணிகளின் குணஅம்சங்களை கண்டபடியே நமது பயணத்தை தொடர வேண்டியதுதான். காலில் இடறுகிறதா நாமே விலகி நடப்பது நல்லது முள்ளாய் குத்துகிறதா? நம் பயணத்திலிருந்தே அதனை அகற்றிவிடுதல். பல விடயம் கொச்சையாகவும் கோணலாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அவை எதுவும் எம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற திடத்தோடு நிற்பவர்கள் முகநூலால் எக்காலத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள். பெண்களின் முகநூலுக்கு அல்லது பெண்களின் படங்களை ப்ரோபைலில் வைத்திருப்பவர்களுக்கு சற்று சிக்கல்கள் அதிகம்தான் ஒன்று அவர்களுடன் எதிர்ப்பாலினத்தவர்கள் தனிப்பட்ட வகையில் பேச முற்படுவது அதே சமயம் குழுக்களாக இணைந்து ஒரு பெண்ணை குறிவைத்து இன்பொக்ஸில் ஆசை வார்த்தைகளைப்பேசி முட்டாள் பெண்களைக் கவிழ்ப்பது இப்படி நிறைய விடயங்கள் அங்கு உள்ளன. நிலவுக்கு அஞ்சி பரதேசமா போகமுடியும்?

ம்ம்ம்

பெண்களுக்கு பிரச்சினைகள்  அதிகமா??

எங்களுக்கு வரும் அழைப்புக்களை  உங்களுக்கு அனுப்பினால் தெளிவடைவீர்கள் என்று நினைக்கின்றேன்:grin:

ஆனால்  அதில்  சிலர் 

பெண்களாக மாறி  எம்மை ( மாற்று  அரசியல்  மற்றும் கருத்து  சார்ந்து)  மடக்கி 

முடக்க நினைப்போரே...

அதுவும்  அறிவோம்..

நன்றி சகோதரி வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னிடமும் முகபுத்தகம் உண்டு.குடும்பம் ஓரிரு நண்பர்கள்.விசுகு யாழில் இருந்து என்னைத் தவிர எல்லோரும் முகபுத்தக நண்பர்கள் போலஇருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது முகநூல் உறவுகள் மூலம் ...தமிழ்நாட்டைப்பற்றி..குறிப்பாக  வெளியே தெரியும்...தமிழ்நாடு என்ற மரத்தைப் பற்றியன்றி..நிலத்தின் கீழுள்ள அதன் வேர்களைப் பற்றி அறிய முடிந்தது! பொதுவாக அங்குள்ளவர்களின் அறிவு....இயற்கை வேளாண்மை போன்றவற்றில் அவர்களின் ஈடுபாடு, நாடு இவ்வாறு சீரழிந்து போகின்றதே என்ற அவர்களின் கவலை போன்றவற்றை அறிய முடிந்தது! குறிப்பாக வயதானவர்கள்..அங்கு கவனிக்கப் படாமல் எவ்வாறு பிள்ளைகளால் ..கைவிடப்படுகின்றார்கள் என்ற கதைகளை..அவர்களின் வாயாலேயே நேரில் கேட்கும் அனுபவம் போன்றவை...வெறும் கல்கி, குமுதம், ஆனந்த விகடன்களை வாசித்து மட்டும் அறிந்து விட முடியாதது! ஒரு வயதானவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லியபோது ( பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுவது..எமது கலாச்சாரமல்ல என்பது வேறு விடயம்) ..அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அளவில்லாதது! இப்போது சென்னைக்குப் போனால் ...ஹோட்டல்களைத் தேடத் தேவையில்லை என்னும் அளவுக்கு..நட்புகள் அங்கு உள்ளன! ஆனால் அவர்களது வீடுகளில் நான் போய்த் தங்கப்போவதில்லை என்பது வேறு விடயம்!

நன்றி..விசுகர்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான்... முகநூலில்  இணைவது இல்லை என்ற வைராக்கியத்துடன் தான் இருந்தேன்.
யாழ்களத்தில்.... எனக்கு சிலகாலம் எழுத முடியாமல் இருந்த தருணத்தில்,
ஒரு வருடத்துக்கு முன்... குமாரசாமி அண்ணை, என்னை   முகநூலுக்கு வரும்படி அழைத்த போது...
போர் அடித்துக் கொண்டு இருந்ததால்... இணைந்து விட்டேன்.
எனது பக்கத்தில்... நான் ஆர்வமாக எதுவும் பதிவதில்லை.
மற்றவர்கள் போடும் படங்களைப் பார்த்து... "நைஸ்", "ஆகாசம்", "வாவ்", "சூப்பர்"  என்று ஒற்றைவரிகளில் சொல்லி விட்டு, 
ஒரு "லைக்கும்" போட்டு... முகநூல் நட்புகளை சந்தோசப் படுத்தி விடுவேன்.

ஏதாவது பதிவுகளில்... யாரும், யாரையும்... கழுவி ஊத்திக் கொண்டு நின்றால்,
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் வாசிப்பேனே தவிர, அதற்குள் தலை இடுவதில்லை.
சிலரின் பக்கங்களில்... அருமையான பகிடிகள் இருக்கும், அதனை வாசிக்கும் போது....
மனத்திற்கு உற்சாகம் கிடைப்பதால்... நேரம் கிடைக்கும் போது மட்டும்   அங்கு செல்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/03/2017 at 9:18 PM, ஈழப்பிரியன் said:

வாங்கோ  அண்ணா

எனது பெயரிலேயே  இருக்கின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/24/2017 at 9:21 AM, தமிழ் சிறி said:

நான்... முகநூலில்  இணைவது இல்லை என்ற வைராக்கியத்துடன் தான் இருந்தேன்.
யாழ்களத்தில்.... எனக்கு சிலகாலம் எழுத முடியாமல் இருந்த தருணத்தில்,
ஒரு வருடத்துக்கு முன்... குமாரசாமி அண்ணை, என்னை   முகநூலுக்கு வரும்படி அழைத்த போது...
போர் அடித்துக் கொண்டு இருந்ததால்... இணைந்து விட்டேன்.
எனது பக்கத்தில்... நான் ஆர்வமாக எதுவும் பதிவதில்லை.
மற்றவர்கள் போடும் படங்களைப் பார்த்து... "நைஸ்", "ஆகாசம்", "வாவ்", "சூப்பர்"  என்று ஒற்றைவரிகளில் சொல்லி விட்டு, 
ஒரு "லைக்கும்" போட்டு... முகநூல் நட்புகளை சந்தோசப் படுத்தி விடுவேன்.

ஏதாவது பதிவுகளில்... யாரும், யாரையும்... கழுவி ஊத்திக் கொண்டு நின்றால்,
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் வாசிப்பேனே தவிர, அதற்குள் தலை இடுவதில்லை.
சிலரின் பக்கங்களில்... அருமையான பகிடிகள் இருக்கும், அதனை வாசிக்கும் போது....
மனத்திற்கு உற்சாகம் கிடைப்பதால்... நேரம் கிடைக்கும் போது மட்டும்   அங்கு செல்வேன்.

எண்ட  முகநூல் பக்கத்தில் வந்து கழுவி ஊத்தியிருக்கிறியள் என்று கூறி  கொள்கிறேன்  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/03/2017 at 10:55 PM, புங்கையூரன் said:

எனது முகநூல் உறவுகள் மூலம் ...தமிழ்நாட்டைப்பற்றி..குறிப்பாக  வெளியே தெரியும்...தமிழ்நாடு என்ற மரத்தைப் பற்றியன்றி..நிலத்தின் கீழுள்ள அதன் வேர்களைப் பற்றி அறிய முடிந்தது! பொதுவாக அங்குள்ளவர்களின் அறிவு....இயற்கை வேளாண்மை போன்றவற்றில் அவர்களின் ஈடுபாடு, நாடு இவ்வாறு சீரழிந்து போகின்றதே என்ற அவர்களின் கவலை போன்றவற்றை அறிய முடிந்தது! குறிப்பாக வயதானவர்கள்..அங்கு கவனிக்கப் படாமல் எவ்வாறு பிள்ளைகளால் ..கைவிடப்படுகின்றார்கள் என்ற கதைகளை..அவர்களின் வாயாலேயே நேரில் கேட்கும் அனுபவம் போன்றவை...வெறும் கல்கி, குமுதம், ஆனந்த விகடன்களை வாசித்து மட்டும் அறிந்து விட முடியாதது! ஒரு வயதானவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லியபோது ( பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுவது..எமது கலாச்சாரமல்ல என்பது வேறு விடயம்) ..அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அளவில்லாதது! இப்போது சென்னைக்குப் போனால் ...ஹோட்டல்களைத் தேடத் தேவையில்லை என்னும் அளவுக்கு..நட்புகள் அங்கு உள்ளன! ஆனால் அவர்களது வீடுகளில் நான் போய்த் தங்கப்போவதில்லை என்பது வேறு விடயம்!

நன்றி..விசுகர்!

உண்மைதான்

விரிந்த உலகில்வாழத்தெரியாத எம்மீது தான்தப்பே தவிர.....

உங்களது முகநூல் அழைப்பு பல காலத்துக்கு முன்பே கிடைத்து

அதை  நான்  கால  தாமதமாக ஏற்றுக்கொண்டமையும் நடந்தது

அட கடவுள் கதவைத்தட்டியும் 

திறக்காத நிலை தான் அது.

நன்றி  அண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

On 24/03/2017 at 4:51 AM, தமிழ் சிறி said:

நான்... முகநூலில்  இணைவது இல்லை என்ற வைராக்கியத்துடன் தான் இருந்தேன்.
யாழ்களத்தில்.... எனக்கு சிலகாலம் எழுத முடியாமல் இருந்த தருணத்தில்,
ஒரு வருடத்துக்கு முன்... குமாரசாமி அண்ணை, என்னை   முகநூலுக்கு வரும்படி அழைத்த போது...
போர் அடித்துக் கொண்டு இருந்ததால்... இணைந்து விட்டேன்.
எனது பக்கத்தில்... நான் ஆர்வமாக எதுவும் பதிவதில்லை.
மற்றவர்கள் போடும் படங்களைப் பார்த்து... "நைஸ்", "ஆகாசம்", "வாவ்", "சூப்பர்"  என்று ஒற்றைவரிகளில் சொல்லி விட்டு, 
ஒரு "லைக்கும்" போட்டு... முகநூல் நட்புகளை சந்தோசப் படுத்தி விடுவேன்.

ஏதாவது பதிவுகளில்... யாரும், யாரையும்... கழுவி ஊத்திக் கொண்டு நின்றால்,
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் வாசிப்பேனே தவிர, அதற்குள் தலை இடுவதில்லை.
சிலரின் பக்கங்களில்... அருமையான பகிடிகள் இருக்கும், அதனை வாசிக்கும் போது....
மனத்திற்கு உற்சாகம் கிடைப்பதால்... நேரம் கிடைக்கும் போது மட்டும்   அங்கு செல்வேன்.

நாங்க  இருக்கின்றோம்

வலது காலை  எடுத்து வைச்சு வாங்க  ராசா என எத்தனை பேர்இருக்கும்போது

வராமல் விடுவாரா எங்க  சிறி?

நன்றி சிறி

வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, முனிவர் ஜீ said:

எண்ட  முகநூல் பக்கத்தில் வந்து கழுவி ஊத்தியிருக்கிறியள் என்று கூறி  கொள்கிறேன்  tw_blush:

நாங்க  கழுவி  ஊத்த மட்டுமே அங்கு வருகின்றோம்

அது தொடரும்...tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, விசுகு said:

நாங்க  கழுவி  ஊத்த மட்டுமே அங்கு வருகின்றோம்

அது தொடரும்...tw_blush:tw_blush:

அதான் ஒவ்வொரு நாழும் நல்லா செய்யுறியளே  இதை விடவா இன்னும் செய்ய போறியள்    தனியே இருந்து சிரிக்கிறேன் அண்னை tw_blush:tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, முனிவர் ஜீ said:

அதான் ஒவ்வொரு நாழும் நல்லா செய்யுறியளே  இதை விடவா இன்னும் செய்ய போறியள்    தனியே இருந்து சிரிக்கிறேன் அண்னை tw_blush:tw_blush:tw_blush:

அதற்கு யாழுக்கு தான் நன்றி சொல்லணும்

இந்த  உறவும்  உரிமையும் யாழ் தந்தது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/03/2017 at 9:18 PM, ஈழப்பிரியன் said:

என்னிடமும் முகபுத்தகம் உண்டு.குடும்பம் ஓரிரு நண்பர்கள்.விசுகு யாழில் இருந்து என்னைத் தவிர எல்லோரும் முகபுத்தக நண்பர்கள் போலஇருக்கிறது.

நன்றியண்ணா

என்னுடன்  முகநூலில்  இணைந்ததற்கு...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

நன்றியண்ணா

என்னுடன்  முகநூலில்  இணைந்ததற்கு...

ஆகா நானும் விசுகுவின் முகப் புத்தகத்தில் இணைந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா நானும் விசுகுவின் முகப் புத்தகத்தில் இணைந்துள்ளேன்.

அடியேனும் இதேபெயரில் அங்கு உள்ளேன்.

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/23/2017 at 4:07 AM, விசுகு said:

அநேகமான யாழ்  உறவுகள் எனது முகநூல் நண்பர்களே

யாழில் எழுதும் கருத்துக்களை வைத்து ஒருவரை ஏடைபோட முடியாது . சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களில் யாழில் இருப்பார்கள். ஒரு பெயரில் எழுதும்போது ஒரு கருத்தையும், மறுபெயரில் எழுதும்போது அக்கருத்துக்கு எதிரான கருத்தையும் எழுதினால்..  உ+ம் புலி எதிர்ப்பு, ஆதரவு.  இவர் புலி எதிர்ப்பாளரா? ஆதரவானவரா?.  யாழ் உறவுகள் என்றாலும் முன்பின் முகம் அறியாதவர்களை நண்பர்களாக இணைப்பது அவ்வளவு நல்லதாகச் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/30/2017 at 12:38 AM, குமாரசாமி said:

அடியேனும் இதேபெயரில் அங்கு உள்ளேன்.

விசுகு அண்ண சொன்னார் ரெண்டு ஐடில இருக்கிறியளாமே உன்மையா?? சா.... மி :104_point_left::rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

விசுகு அண்ண சொன்னார் ரெண்டு ஐடில இருக்கிறியளாமே உன்மையா?? சா.... மி :104_point_left::rolleyes::unsure:

விசுகருக்கு வேறை வேலையில்லை.....:grin:.....:grin:.......:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

விசுகருக்கு வேறை வேலையில்லை.....:grin:.....:grin:.......:grin:

எனக்கு போட்டோவையும் அனுப்பியுள்ளார் அதன் பிறகே உங்கள் ஒறிஞ்சினல் ஐடியை சும்மா வச்சிருக்கன் இல்லையென்றால் ஆளை நீக்கியிருப்பன்tw_blush:tw_blush:tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/03/2018 at 5:46 AM, கந்தப்பு said:

யாழில் எழுதும் கருத்துக்களை வைத்து ஒருவரை ஏடைபோட முடியாது . சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களில் யாழில் இருப்பார்கள். ஒரு பெயரில் எழுதும்போது ஒரு கருத்தையும், மறுபெயரில் எழுதும்போது அக்கருத்துக்கு எதிரான கருத்தையும் எழுதினால்..  உ+ம் புலி எதிர்ப்பு, ஆதரவு.  இவர் புலி எதிர்ப்பாளரா? ஆதரவானவரா?.  யாழ் உறவுகள் என்றாலும் முன்பின் முகம் அறியாதவர்களை நண்பர்களாக இணைப்பது அவ்வளவு நல்லதாகச் தெரியவில்லை.

அங்கு  கத்திரிக்கோல்   நம்மிடம்  தானே  சகோ...

ஒத்தவரவில்லை  என்றால்

வெட்டி  வைத்துவிடலாம்...?

எனக்கு  இதுவரை  அப்படி  ஒரு  நிலை  வரவில்லை

On 12/03/2018 at 3:24 PM, குமாரசாமி said:

விசுகருக்கு வேறை வேலையில்லை.....:grin:.....:grin:.......:grin:

அண்ணா

என்னை   மட்டும் நம்புங்கள்

நம்பினோர்   என்னால்   ஏமாற்றப்படுவதில்லைtw_love:

ஆனால்   என் தம்பிமாரால்....?????tw_sleepy:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12.3.2018 at 4:56 PM, தனிக்காட்டு ராஜா said:

எனக்கு போட்டோவையும் அனுப்பியுள்ளார் அதன் பிறகே உங்கள் ஒறிஞ்சினல் ஐடியை சும்மா வச்சிருக்கன் இல்லையென்றால் ஆளை நீக்கியிருப்பன்tw_blush:tw_blush:tw_blush:tw_blush:

மெத்தப்பெரிய உபகாரம். :17_heart_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, குமாரசாமி said:

மெத்தப்பெரிய உபகாரம். :17_heart_eyes:

போட்டு வாங்கலாம் என்று எதிர்பார்த்தன் ஆள் உஷாராத்தான் இருக்கிறார் கtw_blush:ண்டு பிடிக்காமலா விடுவன் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.