Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'லோங்ஸ்'  என்றால் 'முழுக்காற் சட்டை' என புரியவே சில பதிவுகளை படித்தவுடன் தான் அறிய முடிந்தது.. உங்களின் சொற்பதங்களை புரியவே தனியாக 'ஈழத்தமிழ் அகராதி'யை படிக்க வேண்டும்.! learning_smiley.gif

  • Replies 52
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிய ஊர் பள்ளியில் படிக்கும் பெண்களும், இராமநாதன் கல்லூரிக்குப் போகும் பெண்களும் நீங்கள் சொன்னதுபோல் மேல்வகுப்புக்கு தாவணி போடுவார்கள். வேம்படி, சுண்டுக்குளி,கொன்வென்ற், கின்டு லேடீஸ் போன்ற பெரிய பள்ளிகளில் எல்லாம் ஆறாம் வகுப்பிலிருந்து AL வரை ஒரே யூனிபோர்ம் தான். என்ன  ஓலெவல் எடுத்த பிறகு கொஞ்சம் ஸ்ராலா தலை இழுப்பதும் இடைக்கிடை கட்  அடிச்சிட்டு படத்துக்கு போறது மட்டும்தான். எல்லாப் பெடியளும் பெல்பொட்டம் போட்டாலும் சிலருக்குத் தான் அழகாகவும் இருந்தது. என் மனிசனும் ஒரு வெள்ளை பெல்பொட்டமும் பச்சைக் கோடுபோட்ட சேட்டும் போடுறவர். அதுதான் அவர் போடுறதில எனக்குப் பிடிச்சது. tw_smiley:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு இப்பவும் நல்லஞாபகம் இருக்க முதல் முதல் லோன்ஸ் போட்டது.இங்கை எல்லாரும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டீhக்ள் அநேகமாக லோன்ஸ் போடத் தொடங்கும் போதுதான் கோவணமும் பொடத் தொடங்கியிருப்பம்.:)

சுவைப்பிரியன் ஊரில் இருக்கும் போது போடும் ஒவ்வொரு ஊடுப்புக்கும் ஒவ்வொரு கதை இருக்கும்.

நீங்கள் சொன்னது போல அந்த காலத்தில் 8-10 வரை தான் அண்டவெயரே போட தொடங்குவார்கள்.

எனக்கும் எங்கோ ஒரு திரியில் 8ம் வகுப்பிலேயே முதன் முதல் அண்டவெயர்.அதுவும் கொட்டன் துணியில் நாடா வைத்து தைத்தது போட்டதாக் எழுதிய ஞாபகம்.

5 hours ago, சண்டமாருதன் said:

எழுதாத சட்டங்கள் ஏராளம். இச்சட்டங்கள் எப்போதும் மிக மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். சமூக ஒடுக்குமுறைகள் வாய்வழியாகவே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் தான் எம்மவர்கள் சிறு சுடு சொல்லையும் தாங்க மாட்டார்கள்.

சண்டமாருதன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்.இந்த உடுப்பு பரிமாற்றங்களின் பின்னால் நிறையவே சோகமான கதைகளும் உண்டு.உயரந்தவன் தாழ்ந்தவன் எனும் ஒடக்கு முறை என்று அடுக்கி கொண்டே போகலாம்.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 06/04/2017 at 5:01 PM, ஈழப்பிரியன் said:

இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம்.

ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும்.

ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது.

பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும்.

இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும்.

இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மாட்டிக் கொண்டு வருவார்கள்.மற்றையவர்கள் அதே அரைக் காற்சட்டையோடு கொஞ்ச காலம் பின்னர் வெளியில் வேட்டி வீட்டிலும் ஊரிலும் சாரம் தான்.

அந்த நேரங்களில் யார்யார் சோதனை பாசாகிட்டார்கள் என்று உடுப்பிலேயே தெரியும்.இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கிறான் என்றால் அவன் பாசாகிட்டான் என்றே அர்த்தம்.

இதே மாதிரி மணிக்கூடு கட்டியிருந்தால் அவர் ஏஎல் பாசாகிட்டார்.

பெண்கள் தாவணி போட்ட ஞாபகம்.வீட்டிலும் பள்ளியிலும் பெண்கள் இல்லாதபடியால் சரிவர தெரியவில்லை.இதை பெண்கள் தான் எழுத வேண்டும்.

இப்போது பிறக்கும் போதே விரும்பிய உடுப்புகள் போடலாம்.

நானும் 1971 இல் லோங்ஸ் போட்டேன்.மணிக்கூடு கட்ட முடியாமல் போய்விட்டது.அந்த நேரம் தான் பெல்பொட்டம் வந்த நேரம் மாட்டிக் கொண்டு சுற்ற வேண்டியது தானே.

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

எனது பாடசாலை நாட்களையும்

சாதாரணதரப்பரீட்சை  நாட்களையும் மீண்டும் கண் முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள்

இது பற்றி ஏற்கனவே இங்கு எழுதியதாக ஞாபகம் அண்ணா

நான் பரீட்சை மண்டபத்திலேயே எனக்கான பெறுபேற்றை கூட்டிப்பார்த்து விடுவேன்

வெளியில் வந்ததுமே நண்பர்கள் கேட்பார்கள்

புள்ளிகள் தான் சொல்வேன்

அதன்படி சாதாரண தரப்பரீட்சையில்  மிகச்சிறந்த சித்தி பெறுவேன் என்று தெரிந்தாலும்

சில நண்பர்கள் பரீட்சை எழுதியவுடன் அணிந்தார்கள்

சிலர் அதற்கு முன்பே.

ஆனால்  நானும் எனது நண்பன் மதியும்

லோங்ஸ் ஐ தைத்து வைத்திருந்தாலும்

பரீட்சை முடிவை பார்த்த அடுத்த நாளே அதை அணிந்தோம்.

அதுவும் ஒரு கனவோடு உறுதியோடு.

நன்றியண்ணா கருவுக்கும் நேரத்துக்கும் நினைவுகளுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

நீள காற்சட்டையை எல்லா இடமும் தைக்க கொடுப்பதில்லை. யாழ் நகரில் மின்சார நிலைய வீதியால்  மலாயன்கபே தாண்டி போக அதே பக்கம் ஒரு சிறு ஒடுக்கமான வீதி வரும். அதில் இருக்கும் முதல் கடை முஸ்லிம் ஆட்களது அங்குதான் தைக்க கொடுப்போம். அவர்கள் இடம் கொடுத்தால் எப்படியும் தைத்து தர 15 இல் இருந்து 20 நாள் எடுக்கும். அந்த அளவு அவர்கள் பிஸி. :)

நவீனன் அந்த நேரங்களில் முஸ்லீம்கள் தான் உடுப்பில் இருந்து செருப்பு பந்து குடை போன்றவை தைப்பதற்கு பெயர் போனவர்கள்.நீங்கள் சொல்லும் அதே இடத்தில் தான் நானும் தைப்பித்திருக்கிறேன்.அந்த ஒழுங்கைக்குள் திரும்பியவுடன் பள்ளிவாசலுக்கு கொஞ்சம் முன்பாக இருக்கிறது.

நீங்கள் எட்டாம் வகுப்பிலேயே போட்டதென்றால் நிச்சயமாக எங்களுக்கு பின்னராகவே இருக்கும்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு இப்பவும் நல்லஞாபகம் இருக்க முதல் முதல் லோன்ஸ் போட்டது.இங்கை எல்லாரும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டீhக்ள் அநேகமாக லோன்ஸ் போடத் தொடங்கும் போதுதான் கோவணமும் பொடத் தொடங்கியிருப்பம்.:)

ஓமோம்  அது தனிக்கதை

எனது நண்பர் ஒருவருக்கு தைக்கும் அவனது அன்ரியிடம் கொண்டு போய்

அவனே கொடுத்து எனதுது அளவுக்கு தையுங்கோ என்ற முதன் முதல் தைத்து வாங்கித்தந்தான்

ஒரு பக்கத்தில 2 கயிறு விட்டிருந்தா

கயிறுகளை இழுத்து கட்டி விட்டா

அசைய மாட்டார்..:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

'லோங்ஸ்'  என்றால் 'முழுக்காற் சட்டை' என புரியவே சில பதிவுகளை படித்தவுடன் தான் அறிய முடிந்தது.. உங்களின் சொற்பதங்களை புரியவே தனியாக 'ஈழத்தமிழ் அகராதி'யை படிக்க வேண்டும்.! learning_smiley.gif

வன்னியர் அந்த காலத்தில் பான்ஸ் ரவுசர் என்ற சொற்கள் எங்கள் பாவனையில் இருக்கவில்ல.நீழகாற்சட்டை அல்லது லோங்ஸ் என்று தான் சொல்வார்கள்.எனது ஊர் என்று சொன்னால் லோங்ஸ் போட்டவர்களை விரல் விட்டு எண்ணலாம்.அதற்காக பிடிக்கவில்லை என்பதல்ல.

10 ம் வகுப்பு சித்தியடைந்தாலே வாத்தியார் வங்கி கிளார்க் போன்ற வேலைகளில் இலகுவில் பெற்றுவிடலாம்.வாத்தியார் என்றால் வேட்டி தான்.அவர் சாகும் வரை வாத்தியாராகவே இருந்து வேட்டியுடனே போய்விடுவார்.

இப்போது இந்த லோங்ஸ் என்ற சொல் அருகிப் போய்விட்டது.

49 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குத் தெரிய ஊர் பள்ளியில் படிக்கும் பெண்களும், இராமநாதன் கல்லூரிக்குப் போகும் பெண்களும் நீங்கள் சொன்னதுபோல் மேல்வகுப்புக்கு தாவணி போடுவார்கள். வேம்படி, சுண்டுக்குளி,கொன்வென்ற், கின்டு லேடீஸ் போன்ற பெரிய பள்ளிகளில் எல்லாம் ஆறாம் வகுப்பிலிருந்து AL வரை ஒரே யூனிபோர்ம் தான். என்ன  ஓலெவல் எடுத்த பிறகு கொஞ்சம் ஸ்ராலா தலை இழுப்பதும் இடைக்கிடை கட்  அடிச்சிட்டு படத்துக்கு போறது மட்டும்தான். எல்லாப் பெடியளும் பெல்பொட்டம் போட்டாலும் சிலருக்குத் தான் அழகாகவும் இருந்தது. என் மனிசனும் ஒரு வெள்ளை பெல்பொட்டமும் பச்சைக் கோடுபோட்ட சேட்டும் போடுறவர். அதுதான் அவர் போடுறதில எனக்குப் பிடிச்சது. tw_smiley:

சுமே இது வரை அந்த ஒரு பெண் உறுப்பினரும் ஏன் கருத்தெழுதவில்லை என்று ஒரு மன அழுத்தமாகவே இருந்தது.

அனேகமானோரை இந்த வயது தான் காதல் என்னும் வியாதி தொற்றி ஆட்டிப்படைத்திருக்கும்.அதனால்த் தான் என்னவோ எழுதாமல் விட்டுவிட்டார்கள் என்று எண்ணியிருந்தேன்.

நீங்களும் பெல்பெட்டம் போட்டவர்களை கன்றாக உன்னித்து கவனித்துள்ளீர்கள்.நன்றி சுமே.

21 minutes ago, விசுகு said:

சில நண்பர்கள் பரீட்சை எழுதியவுடன் அணிந்தார்கள்

சிலர் அதற்கு முன்பே.

ஆனால்  நானும் எனது நண்பன் மதியும்

லோங்ஸ் ஐ தைத்து வைத்திருந்தாலும்

பரீட்சை முடிவை பார்த்த அடுத்த நாளே அதை அணிந்தோம்.

அதுவும் ஒரு கனவோடு உறுதியோடு.

நன்றியண்ணா கருவுக்கும் நேரத்துக்கும் நினைவுகளுக்கும்.

விசுகு நீங்கள் கொழும்பில் படித்தபடியால் நிச்சயம் ஒ எல்க்கு முதலே லோங்ஸ் போட்டிருப்பீர்கள் என நினைத்தேன். பரவாயில்லையே கொழும்பில் கூட இதே வழக்கத்தை பின்பற்றியிருக்கிறார்கள்.

விசுகு மணிக்கூடு எத்ப தான் கட்டதொடங்கினீர்கள்?

15 minutes ago, விசுகு said:

ஓமோம்  அது தனிக்கதை

எனது நண்பர் ஒருவருக்கு தைக்கும் அவனது அன்ரியிடம் கொண்டு போய்

அவனே கொடுத்து எனதுது அளவுக்கு தையுங்கோ என்ற முதன் முதல் தைத்து வாங்கித்தந்தான்

ஒரு பக்கத்தில 2 கயிறு விட்டிருந்தா

கயிறுகளை இழுத்து கட்டி விட்டா

அசைய மாட்டார்..:grin:

அசையமாட்டார் ஆனால் அவிஞ்சு போவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் அதற்கு பெயர் பென்டர் அல்லது சஸ்பென்டர்.இப்போது இந்த சொற்கள் வழமையில் இல்லை என்றே எண்ணுகிறேன்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு நீங்கள் கொழும்பில் படித்தபடியால் நிச்சயம் ஒ எல்க்கு முதலே லோங்ஸ் போட்டிருப்பீர்கள் என நினைத்தேன். பரவாயில்லையே கொழும்பில் கூட இதே வழக்கத்தை பின்பற்றியிருக்கிறார்கள்.

விசுகு மணிக்கூடு எத்ப தான் கட்டதொடங்கினீர்கள்?

அசையமாட்டார் ஆனால் அவிஞ்சு போவார்.

இல்லையண்ணா

சாதாரணத்தரப்பரீட்சை ஊரில் தான் எடுத்தேன்

உயர்தரம் தான் கொழும்பில்..

மணிக்கூடு ஞாபகமில்லையண்ணா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இல்லையண்ணா

சாதாரணத்தரப்பரீட்சை ஊரில் தான் எடுத்தேன்

உயர்தரம் தான் கொழும்பில்..

மணிக்கூடு ஞாபகமில்லையண்ணா..

விசுகு இந்த லோங்ஸ் மணிக்கூடு அப்புறம் மோதிரம் என்று ஒவ்வொருவர் வாழ்விலும் பெரும் திரும்பு முனையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு இந்த லோங்ஸ் மணிக்கூடு அப்புறம் மோதிரம் என்று ஒவ்வொருவர் வாழ்விலும் பெரும் திரும்பு முனையாக இருக்கும்.

எனக்கு 5 அக்காமார் என்றதால

தோழனுக்கான மோதிரங்களுக்கு குறையில்லை

ஆனால் முதலாவது தோழன்  மோதிரம்  போடும் போது ஏற்கனவே எனது விரலில் மோதிரம் இருந்ததாக ஞாபகம்

எப்ப போட்டது என்று ஞாபகமில்லையண்ணா

வயசு போயிற்றுது போல...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு வயது மட்டுமே மூத்தவரான என் அண்ணன் 12ம் வகுப்புக்கு போனபோது முதன்முதலாக வெள்ளை நிற லோங்ஸ் போட்டு யாழ்பரியோவான் கல்லூரிக்கு சென்றது நல்ல நினைவாக இருக்கிறது. அது போல அண்ணன் படித்து முடித்து கொழும்பில் தொலைத்தொடர்பு நிலையத்தில் வேலை செய்து லீவிற்கு வீட்டிற்கு வரும்பொழுது எனக்கு அந்தக் காலத்தில் பிரபலமாகி இருந்த சிங்கப்பூர் நைலெக்ஸ் சாறி வாங்கி கொண்டு வந்து தந்தது பசுமையான நினைவு. எத்தனை சாறிகள் வாங்கி இருந்தாலும் அண்ணன் முதன்முதல் வாங்கித்தந்த அந்த சாறிக்கு ஈடாகாது. பழைய நினைவுகளை மீட்டும் நல்லதொரு பதிவு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அந்த நேரம் அதற்கு பெயர் பென்டர் அல்லது சஸ்பென்டர்.இப்போது இந்த சொற்கள் வழமையில் இல்லை என்றே எண்ணுகிறேன்.

சஸ்பென்டர்:grin:......அதுவும் சீத்தை துணியிலை தைச்சு தருவினம்......அது சில நேரத்திலை  நடக்க நடக்க உரஞ்சி எரிய வெளிக்கிட்டுது எண்டால்......அதுவும் அந்த வெக்கை வேர்வைக்கு....என்ரை சிவனே......ஒவ்வொரு அடி எடுத்து வைக்க....கொல்லக்கொண்டு போறமாதிரி இருக்கும்:mellow:

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் மனிசனும் ஒரு வெள்ளை பெல்பொட்டமும் பச்சைக் கோடுபோட்ட சேட்டும் போடுறவர்.

அப்ப அங்கேயே லவ்? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 என் மனிசனும் ஒரு வெள்ளை பெல்பொட்டமும் பச்சைக் கோடுபோட்ட சேட்டும் போடுறவர். அதுதான் அவர் போடுறதில எனக்குப் பிடிச்சது. tw_smiley:

இஞ்சை பாருங்கோவன். என்ன உடுப்பு போட்டு, கில்லாடி அத்தார், அக்காவை சுழட்டி விழுத்தி இருக்கிறார் எண்டு. :grin: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kavallur Kanmani said:

எனக்கு ஒரு வயது மட்டுமே மூத்தவரான என் அண்ணன் 12ம் வகுப்புக்கு போனபோது முதன்முதலாக வெள்ளை நிற லோங்ஸ் போட்டு யாழ்பரியோவான் கல்லூரிக்கு சென்றது நல்ல நினைவாக இருக்கிறது. அது போல அண்ணன் படித்து முடித்து கொழும்பில் தொலைத்தொடர்பு நிலையத்தில் வேலை செய்து லீவிற்கு வீட்டிற்கு வரும்பொழுது எனக்கு அந்தக் காலத்தில் பிரபலமாகி இருந்த சிங்கப்பூர் நைலெக்ஸ் சாறி வாங்கி கொண்டு வந்து தந்தது பசுமையான நினைவு. எத்தனை சாறிகள் வாங்கி இருந்தாலும் அண்ணன் முதன்முதல் வாங்கித்தந்த அந்த சாறிக்கு ஈடாகாது. பழைய நினைவுகளை மீட்டும் நல்லதொரு பதிவு நன்றிகள்.

வணக்கம் கண்மணி எல்லோருமே ஒருமித்த கருத்தாக 10ம் வகுப்பிற்கு பின்னர் தான் லோங்ஸ் போட்டோம் என்பதை உறுதி செய்துள்ளீர்கள்.சரி நீங்கள் தாவணி போடலையோ?அக்கா தங்கச்சி ஊரார் 10ம் வகுப்பின் பின் எப்படியான உடைகள் ஏதும் ஞாபகம் இருந்தா அறியத்தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

'லோங்ஸ்'  என்றால் 'முழுக்காற் சட்டை' என புரியவே சில பதிவுகளை படித்தவுடன் தான் அறிய முடிந்தது.. உங்களின் சொற்பதங்களை புரியவே தனியாக 'ஈழத்தமிழ் அகராதி'யை படிக்க வேண்டும்.! learning_smiley.gif

ஷோர்ட்ஸ் (shorts) லோங்ஸ் (longs) 

ஆங்கில சொல்பிரயோகம், பிரித்தானியாயர் காலத்து அதிகாரிகள், பிரித்தானியாவின் எப்பகுதியில் இருந்து வந்தார்கள் என்பதை பொறுத்து அமைந்து இருந்தது.

இலங்கையில் பொதுவாக ஆங்கிலேயர்களும், இந்தியாவில் ஸ்காட்டிஷ், ஐரிஷ் (மணியாச்சி ரயிலில் வாஞ்சிநாதனால் சுடப்படட ஆஷ் துரை) காரர்கள் அதிகளவிலும் இருந்தார்கள்.

இந்த ஸ்காட்டிஷ், ஐரிஷ் காரர்கள் பேசிய ஆங்கிலம், r ஐ உருட்டி, ஆர்பிஸ் (ஆபிஸ்), சர்வீஸ் (சேர்விஸ்) போன்ற பல சொற்களை உலாவ விட்டுவிட்டார்கள்.

(சென்னைத்தமிழ் மாதிரி, கொழும்பில் ஒரு தமிழ் உள்ளது. கொழும்பு வாழ் இஸ்லாமிய தமிழ்மக்கள் பேசுவது.)

அதேபோல தான் இந்த ஆங்கில வட்டார மொழிகள், பிரித்தானியாயர் காலத்து அதிகாரிகள் எங்கிருந்து வந்தார்களோ அவ்விட வட்டார பேச்சு மேல் தங்கி இருந்தது.

4 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கண்மணி எல்லோருமே ஒருமித்த கருத்தாக 10ம் வகுப்பிற்கு பின்னர் தான் லோங்ஸ் போட்டோம் என்பதை உறுதி செய்துள்ளீர்கள்.சரி நீங்கள் தாவணி போடலையோ?அக்கா தங்கச்சி ஊரார் 10ம் வகுப்பின் பின் எப்படியான உடைகள் ஏதும் ஞாபகம் இருந்தா அறியத்தாருங்கள்.

தாவணி இலங்கை கலாச்சராம் இல்லையே.

அங்கே, நீளப் பாவாடையும் சட்டையும் தானே அணிவார்கள். காரணம், 500 வருட ஐரோப்பியர் ஆட்சி.

ராமநாதன் கல்லூரிக்கு, இசை சம்பந்தமான படிப்புகள் படிக்க போனவர்கள் மட்டுமே தாவணி போட்டார்கள். 

7 hours ago, ஈழப்பிரியன் said:

நவீனன் அந்த நேரங்களில் முஸ்லீம்கள் தான் உடுப்பில் இருந்து செருப்பு பந்து குடை போன்றவை தைப்பதற்கு பெயர் போனவர்கள்.நீங்கள் சொல்லும் அதே இடத்தில் தான் நானும் தைப்பித்திருக்கிறேன்.அந்த ஒழுங்கைக்குள் திரும்பியவுடன் பள்ளிவாசலுக்கு கொஞ்சம் முன்பாக இருக்கிறது.

நீங்கள் எட்டாம் வகுப்பிலேயே போட்டதென்றால் நிச்சயமாக எங்களுக்கு பின்னராகவே இருக்கும்.நன்றி.

ஆப்தீன் டைலர்ஸ் தான் அந்தமாதிரி பேமஸ்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

ஆப்தீன் டைலர்ஸ் தான் அந்தமாதிரி பேமஸ்

இல்லை இல்லை இல்லை ......மிஸ்கின்  டெய்லர்தான் நல்லம் நான் அங்கதான் தைக்கிறனான் ....பண்ணி பாறன் .....:10_wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

ஷோர்ட்ஸ் (shorts) லோங்ஸ் (longs) 

ஆங்கில சொல்பிரயோகம், பிரித்தானியாயர் காலத்து அதிகாரிகள், பிரித்தானியாவின் எப்பகுதியில் இருந்து வந்தார்கள் என்பதை பொறுத்து அமைந்து இருந்தது.

இலங்கையில் பொதுவாக ஆங்கிலேயர்களும், இந்தியாவில் ஸ்காட்டிஷ், ஐரிஷ் (மணியாச்சி ரயிலில் வாஞ்சிநாதனால் சுடப்படட ஆஷ் துரை) காரர்கள் அதிகளவிலும் இருந்தார்கள்.

இந்த ஸ்காட்டிஷ், ஐரிஷ் காரர்கள் பேசிய ஆங்கிலம், r ஐ உருட்டி, ஆர்பிஸ் (ஆபிஸ்), சர்வீஸ் (சேர்விஸ்) போன்ற பல சொற்களை உலாவ விட்டுவிட்டார்கள்.

நன்றி நாதம் நல்லதொரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றி நாதம் நல்லதொரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

அவர்களுக்கு முன்னால், கோவணமும், வேட்டியும் தான். 

மேல் சடடையும் கிடையாது. தோலில் ஒரு துண்டு இருந்திருக்கும். நெத்தீல துன்னூறு, படடை.

அவர்கள் தான் நம்மள திருத்தி எடுத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

100_0217.jpg

பெல்பொட்டத்தோடை யாழ்ப்பாணம் போக மினிபஸ்ஸில் ஏற அதுவும் வெள்ளை அது ஊத்தையாக அந்தக்கொடுமையை நினைச்சா இப்ப சிரிப்புவருகிறது. கருடா மணிக்கூடு முதல்கட்டியது. ஐயா வேண்டித்தந்தார். புதிதல்ல. பாவித்தது. பொட்டத்தை வேட்டியைப்பிடிக்கிறமாதிரிப்பிடிச்சுக்கொண்டுதான் ஏறவேண்டும். அது ஒரு கனாக்காலமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9.4.2017 at 5:04 PM, Nathamuni said:

அவர்களுக்கு முன்னால், கோவணமும், வேட்டியும் தான். 

மேல் சடடையும் கிடையாது. தோலில் ஒரு துண்டு இருந்திருக்கும். நெத்தீல துன்னூறு, படடை.

அவர்கள் தான் நம்மள திருத்தி எடுத்திருக்கிறார்கள்.

சிவனே என்று இருந்தவர்களை திருத்தி எடுத்து என்ன செய்திருக்கிறார்கள்????? 

  • கருத்துக்கள உறவுகள்
On 09/04/2017 at 0:28 AM, குமாரசாமி said:

அப்ப அங்கேயே லவ்? :grin:

97726fe8f02ba122e9436eb80a28fb2a--smiley

On 09/04/2017 at 0:43 AM, Nathamuni said:

இஞ்சை பாருங்கோவன். என்ன உடுப்பு போட்டு, கில்லாடி அத்தார், அக்காவை சுழட்டி விழுத்தி இருக்கிறார் எண்டு. :grin: 

97726fe8f02ba122e9436eb80a28fb2a--smiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

100_0217.jpg

பெல்பொட்டத்தோடை யாழ்ப்பாணம் போக மினிபஸ்ஸில் ஏற அதுவும் வெள்ளை அது ஊத்தையாக அந்தக்கொடுமையை நினைச்சா இப்ப சிரிப்புவருகிறது. கருடா மணிக்கூடு முதல்கட்டியது. ஐயா வேண்டித்தந்தார். புதிதல்ல. பாவித்தது. பொட்டத்தை வேட்டியைப்பிடிக்கிறமாதிரிப்பிடிச்சுக்கொண்டுதான் ஏறவேண்டும். அது ஒரு கனாக்காலமாகிவிட்டது.

நொச்சி அன்று விரும்பி செய்தவை சிலவற்றை நினைக்க இன்னும் வெட்கமாக இருக்கிறது.

நானும் முதன் முறை கட்டிய மணிக்கூடு கடல் குதிரை படம் போட்ட பெயர் மொண்டியா என எண்ணுகிறேன்.

வெளிநாடு புறப்படும் போது ஒரு சிங்கள நண்பன் வாங்கி போட்டுவிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பத்தாம் வகுப்பு (O/L)க்குப் பின்னர் லோங்ஸ் போடுவதுபோல் எனக்கும் போட விருப்பம் இருந்தது. ஆனால் ஹாட்லியில் Pure Maths படிப்பித்த கணேசலிங்கம் மாஸ்ரர் லோங்ஸ் போட்ட பொடியள் படிப்பில் கொஞ்சம் குறைந்தால் நல்லாக் "கவனிப்பார்" என்று என்னைவிட இரண்டு வயது கூடிய நண்பன் சொல்லியிருந்தான். கணேசலிங்கம் மாஸ்ரருக்குப் பயந்தே கால், தொடை மயிரெலாம் தெரிய கூச்சத்துடன் பள்ளிக்கூடம் போய் வந்துகொண்டிருந்தான். அதோட கணேசலிங்கம் மாஸ்ரர் சேர்ட்டில் மேல் பட்டின் போடாமல் வந்த ஒருத்தனின் கொப்பியை வகுப்புக்கு வெளியால் எறிந்து அவனையும் வெளியால் நிற்கும்படி விட்டதையும் நேரே பார்த்திருந்தேன்.ஹாட்லியில் சில மாதங்கள்தான் ஏ எல் படித்திருந்தாலும் கணேசலிங்கம் மாஸ்ரரின் மதிப்பைப் பெறமுதல் லோங்ஸ் போடுவதை பலரைப்போல நானும் ஆரம்பத்தில் தவிர்த்திருந்தேன். 

இந்தியன் ஆமியின் வல்வைப் படுகொலைகளால் இளையவர்கள் ஊருக்குள் இருப்பதை விரும்பாத பெற்றோர் அவசரமாக கொழும்புக்கு பிளேனில் அனுப்பிவைத்தனர். அப்போது அரைக் காற்சட்டையுடன் பிளேனில் போயிருந்தேன் (புத்தனின் முதல் விமானப் பயணத் திரியிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன்). போகும்போது அத்தானின் லோங்ஸைக் கொண்டுதான் போயிருந்தேன். கொட்டஞ்சேனையில் அதைப் போட்டுக்கொண்டுபோய் புதிதாக எனக்கு ரவுசர் வாங்கியிருந்தேன்! இதுதான் நான் முதன்முதல் லோங்ஸ் போட்ட அனுபவம்.?

திரும்பவும் இரண்டு மாதங்களின் பின்னர் ஊருக்கு வந்தபோது ரியூசனுக்கு லோங்ஸும் (பெட்டையள் வாற இடமெல்லே?) பள்ளிக்கூடத்திற்கு அரைக் காற்சட்டையும் என்று மாறிமாறிப் போட்டாலும்  விரைவில் முழுவதுமாக லோங்ஸுக்கு மாறி அப்படியே நாட்டையும் விட்டுவிட்டு வெளியேறிவிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்தியன் ஆமியின் வல்வைப் படுகொலைகளால் இளையவர்கள் ஊருக்குள் இருப்பதை விரும்பாத பெற்றோர் அவசரமாக கொழும்புக்கு பிளேனில் அனுப்பிவைத்தனர். அப்போது அரைக் காற்சட்டையுடன் பிளேனில் போயிருந்தேன் (புத்தனின் முதல் விமானப் பயணத் திரியிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன்). போகும்போது அத்தானின் லோங்ஸைக் கொண்டுதான் போயிருந்தேன். கொட்டஞ்சேனையில் அதைப் போட்டுக்கொண்டுபோய் புதிதாக எனக்கு ரவுசர் வாங்கியிருந்தேன்! இதுதான் நான் முதன்முதல் லோங்ஸ் போட்ட அனுபவம்.?

கிருபன் ஒவ்வொருவர் வாழ்விலும் இது ஒரு திரும்பு முனை.எத்தனையோ பிரச்சனைகளை தாண்டித் தான் நீங்களும் லோங்ஸ் போட்டிருக்கிறீர்கள்.நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.