Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

Featured Replies

கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

கனடாவில், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அயலவரைக் கொலை செய்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அமலன் தண்டபாணி தேசிகர் என்பவரை கனேடிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

3_V_Amalan.jpg

மொன்றியலைச் சேர்ந்த அமலன், அவரது அயலவரான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி கத்தியால் குத்திக் கொன்றார். அமலனைக் கைது செய்த பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், முதற்றர குற்றவாளியாகக் கருதப்பட்ட அமலன், நேற்று திங்கட்கிழமை பன்னிரண்டு ஜூரிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, முதற்றரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட போதிய முகாந்திரம் இல்லாத நிலையில், இரண்டாம் தரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கொலை இடம்பெறுவதற்கு சுமார் ஒரு வாரம் முன்பாகவே அமலனின் மனைவியிடம் ஜெயராசன் எல்லை மீறியதைச் சுட்டிக்காட்டிய ஜூரிகள், இது கோபத்தினால் இடம்பெற்ற கொலை என்றும் திட்டமிடப்பட்டதல்ல என்றும் குறிப்பிட்டனர்.

http://www.virakesari.lk/article/19855

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

25 வருட தண்டனைக்கு ஒத்துக்கொள்ளாத இரு ஜூரிகள் 10 வருடம் போதும் என்றனர். 

அவர்கள் கண்ணீர்விட்டதால் பெரும் மனச்சஞ்சலத்துக்கு உள்ளாகி இருந்தனர் என அறிய முடிகிறது.

இது திட்டமிட்ட கொலையல்ல, தனது குடும்பத்தையும், மனைவியையும் ஒரு, அன்னிய அதே மொழி பேசும் நபரிடம் இருந்து, பாதுகாக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சி கொலையில் முடிந்திருக்கிறது என்பது அவர்கள் கருத்து.

கொலையானவர், காமவெறியரா, மனைவி, குடும்பம் இல்லாத தனியரா, எப்படிப்பட்டவர் என்பது கூறப்படவில்லை.

மிக மோசமான தமிழ் தூசண வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி ஆத்திரத்தை தூண்டியுள்ளார் என நீதிமனறில் கூறப்பட்டுள்ளது. 

'ஒரு நாளாவது உன்ற மனிசியின் ...... மல் சாகமாட்டேன்' என்று சவால் விட்டிருக்கிறார். நீதிமன்றில் அவர் பயன்படுத்திய தமிழ் வசனங்கள், சொல்லப்பட்டதாக தெரிகிறது.

அது அதே பாவத்துடன் சொல்லப்பட்ட விதமும், அதன் ஆங்கில விளக்கமும் ஜூரிகளை அதிர்வுற வைத்திருக்கும். கொலையாளியின் வக்கீல் நல்ல அனுபவம் மிக்கவர் போலுள்ளது. இவ்வகையில் First degree murder charge, second degree murder charge ஆகிவிட்டது.

சவால் நிறைவேற்ற முன் சாகடிக்கப்பட்டிருக்கிறார். 

அநேகமாக மேன்முறையீடு போகலாம்.

கொலைக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனாலும் இந்த சவால் உண்மையானால், எந்த ஆம்பிளையும் இதை செய்வான்.

இது அவரது மனைவி மீதான அயல் வீட்டார் Fatal Attraction காரணமாக விளைந்த Stalking எனப்படும், பின்விளைவைப் பற்றி கவலைப்படாத, அதிதீவிர தொல்லை தரும் பின்தொடர்தல். 

இன்னுமோர் திரியில் பார்த்த சரவணபவன் ராஜகோபாலும் அதே கதைதான். ஆனால் அங்கே கொலையானவர் பெண் ஜூவயோதியின் கணவர். காரணம் ராஜகோபால் பணபலம்.

image_1494309820-2029bcdbcf.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Nathamuni said:

மிக மோசமான தமிழ் தூசண வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி ஆத்திரத்தை தூண்டியுள்ளார் என நீதிமனறில் கூறப்பட்டுள்ளது. 

'ஒரு நாளாவது உன்ற மனிசியின் ...... மல் சாகமாட்டேன்' என்று சவால் விட்டிருக்கிறார். நீதிமன்றில் அவர் பயன்படுத்திய தமிழ் வசனங்கள், சொல்லப்பட்டதாக தெரிகிறது.

அது அதே பாவத்துடன் சொல்லப்பட்ட விதமும், அதன் ஆங்கில விளக்கமும் ஜூரிகளை அதிர்வுற வைத்திருக்கும். கொலையாளியின் வக்கீல் நல்ல அனுபவம் மிக்கவர் போலுள்ளது. இவ்வகையில் First degree murder charge, second degree murder charge ஆகிவிட்டது.

சவால் நிறைவேற்ற முன் சாகடிக்கப்பட்டிருக்கிறார். 

அநேகமாக மேன்முறையீடு போகலாம்.

கொலைக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனாலும் இந்த சவால் உண்மையானால், எந்த ஆம்பிளையும் இதை செய்வான்.

அத்தருணத்தில் நானாக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேன். இல்லை....கண்ட துண்டங்களாக வெட்டியிருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை பிரயோகங்கள்  கோபம் இவை     கொலையில் முடிந்ததுவே அதிகம் 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் திட்ட இவர் வெட்ட.. கடையில் இருவரின் வாழ்க்கையும் நாசம். அவர் திட்டினால்... அதனை பதிவு செய்து.. பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தால்.. விசயம் முடியுது. எம்மவர்களுக்கு கோபமும் சண்டித்தனமும்.. புத்திசாதுரியமற்ற சிந்தனைகளுமே அதிகம் என்பதை இப்படியான நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. :rolleyes:

அதிலும் தண்ணி அடிச்சிட்டா.. தாங்கள் தான் இந்த உலகத்தையே கட்டி ஆளுற ஆக்கள் என்ற நினைப்பு. உதுகளை திருத்த பல தலைவர் வரனும். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nedukkalapoovan said:

இது இனிவரும் காலத்துக்கு ஒரு படிப்பினையாய் இருக்கும்.
அப்ப இனி சண்டை பிடிக்கேக்கை ரேப்ரெக்கோடரையும் கையிலை கொண்டு திரியவேணும்...
பொலிசிலை குடுத்தாலும்...பொலிசு இரண்டுபேரையும் கூப்பிட்டு விசாரிச்சுப்போட்டு மன்னிப்பு கேட்டு சந்தோசம் சமாதானமாய் போங்கோ எண்டுதான் சொல்லும்.. வெட்டுவன் புடுங்குவன் எண்டு சொன்னவரும் வெற்றிப்புன்னகையோடை சொன்னதை திரிவார்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

கெட்ட வார்த்தைகள் தான் கொலைக்கு மூல  காரணம் என்றால்
நாங்கள் எத்தனை கொலைகளுக்கு காரணமாக இருந்திருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

அவர் திட்ட இவர் வெட்ட.. கடையில் இருவரின் வாழ்க்கையும் நாசம். அவர் திட்டினால்... அதனை பதிவு செய்து.. பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தால்.. விசயம் முடியுது. எம்மவர்களுக்கு கோபமும் சண்டித்தனமும்.. புத்திசாதுரியமற்ற சிந்தனைகளுமே அதிகம் என்பதை இப்படியான நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. :rolleyes:

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் ஒவ்வொரு சண்டைக்கும் ரெக்காடர்களை வைத்து திரிய வேண்டும் போல் உள்ளதே சண்டை விபத்து இதெல்லாம் சொல்லிவிட்டு வருவதில்லை நெடுக்கு அப்படியென்றால்  மண்டையில சீ சீ டிவி தான் இனி பூட்டிக்கொண்டு அலையவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/05/2017 at 11:21 PM, வாத்தியார் said:

கெட்ட வார்த்தைகள் தான் கொலைக்கு மூல  காரணம் என்றால்
நாங்கள் எத்தனை கொலைகளுக்கு காரணமாக இருந்திருப்போம்

இல்லை. சகலரும் கோபத்தில் கெட்ட வார்த்தை பேசுவோம்.

நீங்கள் பொடியளுக்கு, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று, நாலுசாத்து சாத்தினியள் எண்டால் இரவு வீட்டில கல்லு விழும்... பத்தாததற்கு நல்ல தூசணத்தில கிழியலும் விழும். வெளில கொலை வெறியுடன் ஓடிப் போய்ப் பார்த்தியள் எண்டால் ஒருத்தரும் இருக்க மாட்டினம். 

சரி, சரி... ரோட்டில நிற்கப்போற பரதேசிகள்... என்று போர் படுத்திடுவியல்.

ஆனாலும் எங்குமே மனைவிக்கு முன்னே கணவருக்கு, உனது மனைவியை, சாக முதல் ஒரு நாளாவது பாலியல் தாக்குதல் செய்யாமல் சாகேன், என்று படு பச்சையாச சொன்னால்....

அது தான் குமாரசாமியார் சொன்னார்.. கண்டதுண்டமாக வெட்டுவேன் என்று.

அவரை விடுங்க.... மொழி புரியாத ஜுரிமாரே கோபப்பட்டார்களே....

ஒரு ஆண்மையுள்ள கணவருமே பொறுக்க மாட்டார்கள். முடியாது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஒரு ஆண்மையுள்ள கணவருமே பொறுக்க மாட்டார்கள். முடியாது. 

ஏன் முனியர் ரோட்டில போகேக்க.. பெண்களை எப்படி எல்லாம் திட்டிறாங்க.. பார்க்கிறாங்க.. அதுக்காக எல்லாரும் தங்கள் ஆண்மையை வன்முறையா காட்ட வெளிக்கிட்டா..

உண்மையான ஆண்மை என்பது புத்தியால் பலத்தால்.. தன்னையும் தான் சார்ந்தவர்களையும் பாதுகாப்பது என்பது. அதைவிடுத்து கோபத்தால்.. ஆத்திரத்தால்.. வன்முறையால்.. தானும் நிதானம் இழந்து.. தன்னை சார்ந்தவர்களையும் துன்பத்தில் விடுவதில்லை.. ஆண்மை. tw_blush:

அவன் திட்டினாப் போல.. இவர் மனுசி என்ன பாலியல் தாக்கத்துக்கு உள்ளாகிட்டவா.. என்ன..??!  அப்படின்னா.. இவருக்கு அவனிட்ட இருந்து தன் மனைவியை பாதுக்காக்க முடியாது என்ற மனப்பலவீனம் இருந்துள்ளது. அதுதான்.. ஆத்திரமாக... கோபமாக.. கடைசியில் கொலைவெறியாக மாறி இருக்கு.. ஏன் இப்படி எடுத்துக் கொள்ள முடியாது...???!:unsure:

On 5/12/2017 at 0:59 AM, முனிவர் ஜீ said:

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் ஒவ்வொரு சண்டைக்கும் ரெக்காடர்களை வைத்து திரிய வேண்டும் போல் உள்ளதே

இப்பதானே கையோட போனும் அதோட.. கமராவும் ரெக்கோட்டும் இருக்கே. பதிவு செய்திட்டால்.. போய்ச்சு.  நீங்க என்ன இன்னும் பழைய சிந்தனையில் இருக்கீங்க.. இப்படியான விடயங்களில்..??!tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இப்பதானே கையோட போனும் அதோட.. கமராவும் ரோக்கோட்டும் இருக்கே. பதிவு செய்திட்டால்.. போய்ச்சு.  நீங்க என்ன இன்னும் பழைய சிந்தனையில் இருக்கீங்க.. இப்படியான விடயங்களில்..??!tw_blush::rolleyes:

திடீர் சண்டைகளையெல்லாம் கமறாவில் படம் எடுக்க இயலாது பாருங்கோ கண்  இமைக்கும் நேரத்திலே கொலைகள் நடந்து விடுகின்றன நெடுக்ஸ் இது நடந்தது 2014  அதுவும் கனடாவில் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

திடீர் சண்டைகளையெல்லாம் கமறாவில் படம் எடுக்க இயலாது பாருங்கோ கண்  இமைக்கும் நேரத்திலே கொலைகள் நடந்து விடுகின்றன நெடுக்ஸ் இது நடந்தது 2014  அதுவும் கனடாவில் 

கனடா என்ன ஆபிரிக்காவிலா இருக்கு ஜீ. ஒரு வசதியான.. ஓரளவு நீதியான சட்ட காவல்கள் உள்ள.. நாட்டில் இருந்து கொண்டு.. கோமாளித்தனமான சிந்தனையால்... கோபப்பட்டு.. கண்டது என்ன..?! tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

கனடா என்ன ஆபிரிக்காவிலா இருக்கு ஜீ. ஒரு வசதியான.. ஓரளவு நீதியான சட்ட காவல்கள் உள்ள.. நாட்டில் இருந்து கொண்டு.. கோமாளித்தனமான சிந்தனையால்... கோபப்பட்டு.. கண்டது என்ன..?! tw_blush::rolleyes:

கண்டது என்ன  நெடுக்கு இப்படி கேள்வி கேட் கலாம் நமது ஊர் பெண் பிள்ளைகளை அடுத்த ஊர் க்காரன்  பகிடி பண்ணும் போது பார்த்துட்டு சும்மாதான் போகணும் போல் இருக்கிறது உங்க கதை  அப்படியிருக்க சொந்த மனைவிக்கு இன்னொருத்தன் அவதூறக பேசும் போது பார்த்திட்டெல்லாம் இருக்க முடியாது  அப்படியென்றால் அவள் சேலையை அவர் கட்டிக்கொண்டு திரியலாம்   அல்லது பிணமாக திரியலாம்  அவர் பரவாயில்லை கைதியாக இருக்கப்போகிறார் அவர்  தனது பெண்ணாட்டியை  உன்மையாக நேசித்ததை அறியலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, முனிவர் ஜீ said:

உந்த வெட்டி ரோசம் தான்.. புத்திசாலித்தனமற்றது. இப்ப அந்தப் பெண்ணின் பாதுகாப்பை இவர் என்ன சிறையில் இருந்து கொண்டு செய்வாரோ...??! படு முட்டாள் தனமான நிலைப்பாடு இது. எம்மவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது. சிந்திக்க வேண்டியது. அடுத்தவனின் ஆத்திரவார்த்தைக்கு நாம் ஆத்திரப்படுவதால்.. நாம் தான் அதிகம் சேதப்படுவோம்.. என்பதை உணர வேண்டும். நாம் தேசப்பட வேண்டும் என்பதுதான்.. ஆத்திரப்படுத்துபவனின் நோக்கமும் கூட. அவனை வெட்டிச் சாய்ப்பதால்.. பிரச்சனை தீராது. மாறாக.. அந்த பிரச்சனையில் இருந்து எங்களையும் எல்லோரையும் பாதுகாப்பது தான் புத்திசாலித்தனம்.. ஆண்மை. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

உந்த வெட்டி ரோசம் தான்.. புத்திசாலித்தனமற்றது. இப்ப அந்தப் பெண்ணின் பாதுகாப்பை இவர் என்ன சிறையில் இருந்து கொண்டு செய்வாரோ...??! படு முட்டாள் தனமான நிலைப்பாடு இது. எம்மவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது. சிந்திக்க வேண்டியது. அடுத்தவனின் ஆத்திரவார்த்தைக்கு நாம் ஆத்திரப்படுவதால்.. நாம் தான் அதிகம் சேதப்படுவோம்.. என்பதை உணர வேண்டும். அதுதான் ஆத்திரப்படுத்துபவனின் நோக்கமும் கூட. அவனை வெட்டிச் சாய்ப்பதால்.. பிரச்சனை தீராது. மாறாகா.. அந்த பிரச்சனையில் இருந்து எங்களையும் எல்லோரையும் பாதுகாப்பது தான் புத்திசாலித்தனம்.. ஆண்மை. tw_blush:

ஆண்மை என்பது கோழைத்தனம்  இல்லையே வீரத்தையும் சேர்த்து தானே 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

ஆண்மை என்பது கோழைத்தனம்  இல்லையே வீரத்தையும் சேர்த்து தானே 

வீரம் என்பது வெட்டிச் சாய்ப்பதில் இல்லை. விவேகமாக செயற்படுவதிலும் உள்ளது. வீரன் என்பவன்.. தன்னையும் தான் சார்ந்தோரையும் பாதுகாக்கும் விவேகமும்.. பலமும் உள்ளவன். அது தான் வீரம். அடுத்தவனின் சவாலை எதிர்கொள்ள வக்கில்லாமல்.. சொந்தப் பலவீனத்தை மறைக்க.. புத்தி இழந்து.. வெட்டிச் சாய்ப்பது வீரம் கிடையாது. அப்படின்னா.. ஊரில ஒட்டுக்குழுக்கள் செய்ததும் வீரம் என்றாகிடும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் ஊர் பக்கம் வருவதனால் ஊரில பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதால் தானே பலர் போராளியானார்கள்  சும்மா பார்த்துவிட்டு போகலையே  நெடுக்கு அப்படியானால் அவர்களால்  விவேகமாக செயற்பட்டு அந்த  செயலை செய்தவர்களுக்கு  தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம் தானே  ஏன் போராளியாகி  இயக்கம் கூட பெண்களை கெடுத்தவர்களுக்கு ஏன் தண்டனை உடன் வழங்க வேண்டும் ??

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முனிவர் ஜீ said:

இயக்கம்.. அல்லது  சம்பந்தப்பட்ட அரசு தண்டனை வழங்கனும் என்பது தான் எங்களின் நிலைப்பாடும். நாமே  சட்டத்தை அமுலாக்க வெளிக்கிடக் கூடாது.. அதுக்கு ஆண்மை.. வீரம் என்று பெயர் வைக்கவும் கூடாது. அதனால்.. பாதிக்கப்படுவது நாம் மட்டுமன்றி எம்மை சார்ந்தவர்களே. அது பற்றிச் சிந்திக்கனும். ஆத்திரப்படுத்துபவனை தண்டிக்க பல வழி இருக்கு. அப்படி இருக்க.. நாம் எதற்கு அவனின் எதிர்பார்ப்பு வலைக்குள் சிக்கி எம்மையே அழிச்சுக்கனும்.. தேசப்படுத்திக்கனும். அதுக்கு ஆண்மை..வீரமுன்னு போலியா பெயர் வைச்சுக்கனும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்கும் நேரத்தில் சந்தி சிரிக்க வைத்துவிடுவார்கள் எம்மவர்கள் நெடுக்கு  எங்க ஊரில் சொல்லுவார்கள்  கை முந்த வேண்டும் அல்லது காரியம் செய்து விடுவார்கள் நமக்கு  முடிக்கிறேன் நன்றி tw_blush:

3 minutes ago, nedukkalapoovan said:

இயக்கம்.. அல்லது  சம்பந்தப்பட்ட அரசு தண்டனை வழங்கனும் என்பது தான் எங்களின் நிலைப்பாடும். நாமே  சட்டத்தை அமுலாக்க வெளிக்கிடக் கூடாது.. அதுக்கு ஆண்மை.. வீரம் என்று பெயர் வைக்கவும் கூடாது. அதனால்.. பாதிக்கப்படுவது நாம் மட்டுமன்றி எம்மை சார்ந்தவர்களே. அது பற்றிச் சிந்திக்கனும். ஆத்திரப்படுத்துபவனை தண்டிக்க பல வழி இருக்கு. அப்படி இருக்க.. நாம் எதற்கு அவனின் எதிர்பார்ப்பு வலைக்குள் சிக்கி எம்மையே அழிச்சுக்கனும்.. தேசப்படுத்திக்கனும். அதுக்கு ஆண்மை..வீரமுன்னு போலியா பெயர் வைச்சுக்கனும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஏன் முனியர் ரோட்டில போகேக்க.. பெண்களை எப்படி எல்லாம் திட்டிறாங்க.. பார்க்கிறாங்க.. அதுக்காக எல்லாரும் தங்கள் ஆண்மையை வன்முறையா காட்ட வெளிக்கிட்டா..

உண்மையான ஆண்மை என்பது புத்தியால் பலத்தால்.. தன்னையும் தான் சார்ந்தவர்களையும் பாதுகாப்பது என்பது. அதைவிடுத்து கோபத்தால்.. ஆத்திரத்தால்.. வன்முறையால்.. தானும் நிதானம் இழந்து.. தன்னை சார்ந்தவர்களையும் துன்பத்தில் விடுவதில்லை.. ஆண்மை. tw_blush:

அவன் திட்டினாப் போல.. இவர் மனுசி என்ன பாலியல் தாக்கத்துக்கு உள்ளாகிட்டவா.. என்ன..??!  அப்படின்னா.. இவருக்கு அவனிட்ட இருந்து தன் மனைவியை பாதுக்காக்க முடியாது என்ற மனப்பலவீனம் இருந்துள்ளது. அதுதான்.. ஆத்திரமாக... கோபமாக.. கடைசியில் கொலைவெறியாக மாறி இருக்கு.. ஏன் இப்படி எடுத்துக் கொள்ள முடியாது...???!:unsure:

இப்பதானே கையோட போனும் அதோட.. கமராவும் ரெக்கோட்டும் இருக்கே. பதிவு செய்திட்டால்.. போய்ச்சு.  நீங்க என்ன இன்னும் பழைய சிந்தனையில் இருக்கீங்க.. இப்படியான விடயங்களில்..??!tw_blush::rolleyes:

நெடுக்கர் கண நாட்களுக்குப் பிறகு வந்தது சந்தோசம். உங்க நீங்கள் இல்லாமல் சில திரிகள் குளிர் விட்டுப் போன மாதிரி தெரிஞ்சது.

இந்த திரி விசயத்தில், நான் உங்களுடன் மாறுபடுகிறேன்.

கொடுக்கல் வாங்கல்களில் வாக்குவாதங்களில் ஒருவர் இன்னொருவரை திட்டலாம். ஆகக் கூடியதாக, இதற்கு, உன் பெண்டாட்டியை கூட்டிக் கொடுத்து உழைக்கலாம் என்று திட்டலாம். அதுவே கொதியை கிளப்பக் கூடியது. 

முக்கியமாக, எந்த ஒரு ஆண்மகனும், பிறன் மனைவியை பலாத்காரம் செய்வேன் என்று, படு ஆபாசமாக, அந்த பெண்ணின் கணவருக்கே சவாலாக சொல்வதில்லை. (பழந்தமிழ் சொல்வதானால், உனது மனைவியை நான் பெண்டாள்வேன் என்பதாகும்).

அந்தப் பெண்ணை முன்பின் காதலியாக தெரிந்திருந்தால் கூட, அவ்வாறு சொல்வதில்லை. காரணம் நாகரிகம். மனிதன், மிருகமில்லை.

இங்கே அதன் காரணம் அவர் ஒரு stalkers. stalking என்பது இன்று மிக கடுமையான பிரச்சனையாக நீதிமன்றங்களினால் கவனிக்கப் படுகின்றது. 

சவாலை விட்ட,  ஒருவாரம் பின்னரே கணவர் கொலை செய்திருக்கிறார். அதுவே இது திடடமிடட கொலை என்ற (1st degree murder) என்ற வாதத்துக்கு வழிவகுத்தது.

ஜூரர்களின் நிலையும், அவரது வக்கீலின் வாதமுமே இது கை மோசக் கொலை(2nd degree murder) என்னும் தீர்ப்புக்கு வழிவகுத்தது என்பது முக்கியமானது.

நீங்கள் சொன்ன படி, விலகி, புத்திசாலித்தனமாக கணவர் ஒரு வாரம் அமைதியாக இருந்திருக்கிறார். அந்த ஒருவாரத்தில் stalker மீண்டும் கைவரிசை காட்டி இருப்பார். 

நான் இந்த stalkers குறித்து நிறைய வாசித்திருக்கிறேன். யாழில் எழுதவேண்டும் என்று முன்னர் கூறி இருக்கிறேன், நேரம் கிடடவில்லை. 

மிக முக்கியமானது இது போன்ற stalkers மனநோயாளிகள். துரதிஷ்டாவசமாக அவர்களிடம் இருந்து தப்புவது, நிலவுக்கு பயந்து பரதேசம் போவது போன்றது.

இந்த விடயத்தில், கணவர் முந்தி இருக்காவிடில், கணவரும், மனைவியும் கொல்லப்பட்டிருப்பார்கள்.

அதுவே, துரதிஷ்டாவசமாக stalkers மனவியல். இந்த stalker களிடம் மாட்டுப்படும் பெண் அல்லது ஆண் நிலை மிகவும் பரிதாபாரமானது. தமிழ் படங்களில், இந்த ஆபத்தான மனநோய், பெரும் ஹீரோ விளையாட்டாக காட்டும் அபத்தம் நிலவுகிறது.   

லண்டன் புகழ் மிக்க ஹரோட்ஸ் பல் அங்காடியில் இந்த stalker ஒருவரால் கொலை நடந்தது.

அசிட் வீசுவது, கொலை செய்வது, மண்ணெண்ணெய் ஊத்திக் கொண்டே ஓடிப் போய் பெண்ணை கட்டி பிடித்தவாறே எரிந்து கொலை, தற்கொலை செய்வது எல்லாம் தமிழ் நாட்டில் இந்த stalkers மன நோயாளிகள் வேலை.

தமிழ்நாட்டில் படிக்கப் போய் திரும்பி வந்த பெண்ணை, வெள்ளவத்தை தேடி வந்து கொன்ற ஸ்டால்கரும், பங்களாதேஷில் இருந்து, கழட்டி விட்டு லண்டன் மாப்பிளையுடன் வந்து விட்ட பெண்ணை, நான்கு ஆண்டுகளாக  தேடி வந்து கொன்ற ஸ்டாக்ல்கரும் மனநோயாளிகள் தானே. தனக்கு கிடைக்க வேண்டியது, வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற 'பொசஸிவ்' எண்ணம் தான் காரணம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வீட்டுக்காரன் பிரச்சினை செய்தால் restraining order எடுத்திருக்க வேணும்.

மேலும், அரசு தலைமை வழக்கறிஞர்களுக்கு எழும் பிரச்சினை என்பது இதுதான். அதாவது first degree murder என்று வழக்கை கொண்டுபோனால் இவர் திட்டமிட்டுத்தான் கொலையை நிகழ்த்தினார் என்பதை ஐயம் திரிபற நிரூபிக்க வேண்டும். முடியாதுபோனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அதாவது கொலையாளி விடுதலையாவார். அது வழக்கறிஞருக்கு பெரும் சிக்கலை தரும். ஆகவே, கொலைக்கான திட்டமிடலை நிரூபிக்க முடியாது என தெரிந்தால் தாமாகவே second degree murder என்று கொண்டு வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இசைக்கலைஞன் said:

அடுத்த வீட்டுக்காரன் பிரச்சினை செய்தால் restraining order எடுத்திருக்க வேணும்.

stalkers மனநோயாளிகள்...

அவர்களுக்கு எந்த ஓர்டரும் வேலை செய்யாது. உள்ளே போடடாலும், வந்து, எங்கிருந்தாலும் தேடி வந்து பழி வாங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

stalkers மனநோயாளிகள்...

அவர்களுக்கு எந்த ஓர்டரும் வேலை செய்யாது. உள்ளே போடடாலும், வந்து, எங்கிருந்தாலும் தேடி வந்து பழி வாங்குவார்கள்.

முதல் கட்ட நடவடிக்கையாக என்று சொல்ல வந்தேன்.. இரண்டாம் மூன்றாம் வரம்பு மீறல்களுக்கு அடுத்த கட்டங்களை நோக்கி நகரலாம். tw_blush: அப்படி செய்யும்போது நீதி மன்றங்களில் வழக்காடுவதற்கு வசதியாக இருக்கும்.. tw_glasses: 

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இசைக்கலைஞன் said:

முதல் கட்ட நடவடிக்கையாக என்று சொல்ல வந்தேன்.. இரண்டாம் மூன்றாம் வரம்பு மீறல்களுக்கு அடுத்த கட்டங்காஇ நோக்கி நகரலாம். tw_blush: அப்படி செய்யும்போது நீதி மன்றங்களில் வழக்காடுவதற்கு வசதியாக இருக்கும்.. tw_glasses: 

ஐயா....

நீங்கள் சொல்லும் நீதிமன்றங்கள் வழக்கினை விசாரித்து தீர்ப்பு சொல்வதற்கு இடையே, சவாலை முடித்து, பெண்ணை பரலோகமும் அனுப்பி இருப்பார்.... ஓர் ஸ்டால்கர்... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

உந்த வெட்டி ரோசம் தான்.. புத்திசாலித்தனமற்றது. இப்ப அந்தப் பெண்ணின் பாதுகாப்பை இவர் என்ன சிறையில் இருந்து கொண்டு செய்வாரோ...??! படு முட்டாள் தனமான நிலைப்பாடு இது. எம்மவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது. சிந்திக்க வேண்டியது. அடுத்தவனின் ஆத்திரவார்த்தைக்கு நாம் ஆத்திரப்படுவதால்.. நாம் தான் அதிகம் சேதப்படுவோம்.. என்பதை உணர வேண்டும். நாம் தேசப்பட வேண்டும் என்பதுதான்.. ஆத்திரப்படுத்துபவனின் நோக்கமும் கூட. அவனை வெட்டிச் சாய்ப்பதால்.. பிரச்சனை தீராது. மாறாக.. அந்த பிரச்சனையில் இருந்து எங்களையும் எல்லோரையும் பாதுகாப்பது தான் புத்திசாலித்தனம்.. ஆண்மை. tw_blush:

இந்தக் கருத்தோடு உடன்படுகின்றேன். ஆனால் நான் நடைமுறையில் உண்மையாகவே கோபம் வரும்போது ஒருகணம் கூட தாமதிப்பதில்லை. பின்விளைவுகளைப் பற்றி யோசிக்க மானமும் ரோஷமும் விடுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.