Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பளையில் துப்பாக்கிச் சூடு//முகமாலையில் இராணுவத்தினர் குவிப்பு

Featured Replies

பளையில் துப்பாக்கிச் சூடு

 
 
பளையில் துப்பாக்கிச் சூடு
  •  

கிளிநொச்சி மாவட்டத்தின், பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏ-9 முதன்மைச் சாலையில், கற்சிலைவெளிப் பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

119 அவசர பொலிஸ் இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15 மணியளவில் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வீதியிலிருந்த பற்றைப் பகுதியிலிருந்து மூன்று துப்பாக்கி வெடிகள் கேட்டதாகவும் பளைப் பொலிஸார் தெரிவித்தனர். ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாப் பொலிஸார் கூறுகின்றனர். எவருக்கும் இதன்போது காயங்கள் ஏற்படவில்லை என்றும், வாகனத்துக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

 

media-share-0-02-06-4d02611722738bb81f8e

media-share-0-02-06-6ea35380f31b096d3b16

media-share-0-02-06-ae45d89ba777f830bd7e

media-share-0-02-06-f85cf5634061ace59bd0

 

http://uthayandaily.com/story/3359.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முகமாலையில் இராணுவத்தினர் குவிப்பு
 
19-05-2017 10:14 AM
Comments - 0       Views - 26

article_1495169435-aa1.JPG

எஸ்.என்.நிபோஜன், கி.பகவான், சுப்பிரமணியம் பாஸ்கரன்  

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவின் முகமாலைப்  பிரதேசத்தில், இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) அதிகாலை 12.30 மணிக்கு ஏ-9 பிரதான  வீதியின் முகமாலை கச்சார்வெளி பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தத் தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏ-9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார், கச்சார்வெளி கிராமப் பக்கமாக சந்தேகத்துக்கு இடமான சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்றுள்ளனர்.

தாம், டோர்ச் லைட் ஒளி  மூலம் அவதானித்த போது, இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி 56 ரகத் துப்பாக்கியினால் நான்கு தடவை பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர் இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கிப் தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட, பொலிஸாரின் ரோந்துக் காரையும் ரயில் சமிக்கை கட்டுப்பாட்டு பெட்டிகளையும் தாக்கியுள்ளன.

இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட சுற்றயல் பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என, அறிவிப்புகள் செய்யபட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

முகமாலை  தொடக்கம் கச்சார்வெளி வரையான 3 கிலோமீற்றர் நீள தூரமும்  முகமாலை தொடக்கம் கிளாலி வரையான 3 கிலோ மீற்றர் தூர அகலத்தில் படையினர் சுற்றி வளைப்பினை மேற்கொண்டு தேடுதல் நடாத்திவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

article_1495169451-aa2.JPG

article_1495169467-aa3.jpg

article_1495169478-aa4.jpg

article_1495169489-aa5.jpg

article_1495169499-aa6.jpg

article_1495169507-aa7.JPG

- See more at: http://www.tamilmirror.lk/196913/ம-கம-ல-ய-ல-இர-ண-வத-த-னர-க-வ-ப-ப-#sthash.aoRY4e76.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முகமாலை மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது

 

DSC04091.jpg

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய  பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஏ9 பிரதான  முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற் அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வேளைக்கு பின்னரான காலப்பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர்; ஏ9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி கிராம பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கு  சத்தம் கேட்டதனைத் தொடர்ந்து   போக்குவரத்து டோர்ச் லைட்  வெளிச்சம் மூலம் அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள்  காவல்துறையினர்; மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.

இதன்போது காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று அதிகாலை  காவல்துறையினரால்  ஒலிபெருக்கி மூலம் கச்சாவெளி உள்ளிட்ட சுற்றயல் பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றன. பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

18578540_634165096778347_1024294954_n.jp18578960_634165090111681_945136648_n.jpg18624450_634165083445015_1716268289_n.jpDSC04045.jpgDSC04047.jpgDSC04053.jpgDSC04066.jpgDSC04073.jpgDSC04086.jpgDSC04087.jpgDSC04088.jpgDSC04090.jpgDSC04091-1.jpg

 

https://globaltamilnews.net/archives/27338

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முகமாலையில் பதற்றம் : பொலிஸார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி பிரயோகம் : இராணுவத்தினர் குவிப்பு (Video)

 

 

முகமாலையில் பொலிஸார் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.Shooting-at-jaffna.jpg

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. 

இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய  பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 12.30 மணிக்கு ஏ9 பிரதான  முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

 போக்குவரத்து பொலிஸார் ஏ9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி கிராம பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கு இடமான சத்தம் கேட்டபோது  போக்குவரத்து பொலிஸார்  டோர்ச் லைட் ஒளி  மூலம் அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள் பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர்.

 இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருக்கின்றன.

இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யபட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றன.

பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/20148

இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வில் முன்னுக்கு நின்ற கொஞ்சம் புத்திசாலித்தனம் கொண்டதுகளை இலக்கு வைத்து விட்டினம் இப்படி அப்பிடி என்று கொஞ்சபேரை காவு வாங்குவதுக்கு அயத்த்மாகினம்.

யாழ். முகமாலை தாக்குதலின் பின்னணியில் வெளியான புதுத் தகவல்

யாழ். முகமாலை பகுதியில் இன்று காலை பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்த நிலையில் இது தொடர்பில் அரசியல் ஆய்வாளரொருவர் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் நிமித்தம் சற்றுக் குழப்பமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மேற்கொள்ப்பட்டுள்ள துப்பாக்கி பிரயோகம் மஹிந்த அணியினுடைய வேலையாக இருக்கலாம். ஏனெனில் அந்த பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளகூடியவர்கள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் பகிர்ந்துள்ளதாவது,

 

http://www.tamilwin.com/interviews/01/146260?ref=view-latest

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ விளையாட்டுக்கு உசுப்பி விட்டு இருக்கினம்:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா உளவவமைப்பினது நாடகம். தமிழர்களை அடைத்துவைக்க எடுக்கும் நகர்வு. இது ஒன்றும் ஆச்சரியமல்ல. அண்மைய படையமைப்பின் செயலாளரின் கூற்று நடைமுறையாகிறது. அவளவே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தில் சொறீலங்காவின் ஆக்கிரமிப்பை அப்படியே அப்பட்டமாகக் காட்டி நிற்குது.. இது.  மகிந்த அணி சுட.. மைத்திரி அணி தமிழரை அடக்கி ஆளும் தந்திரத்தை செப்புது.

ஏமாளிகள் எங்களில் சிலர். பகடைக்காய்கள்.. முன்னாள் போராளிகள்.

உலகம்.. இதைப் பார்த்திட்டு உறங்கும். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

 

உலகம்.. இதைப் பார்த்திட்டு உறங்கும். :rolleyes:tw_angry:

அவர்களது வியாபர்த்திற்கு தீங்கு வந்தால் திடுக்கிட்டு எழும்பும் இல்லையேல் உறங்குவது போல நடிக்கும்.....தற்பொழுது அவ்ர்களது வியாபாரம் சிறிலங்காவில் ஒகோ ஓகோ ....

  • தொடங்கியவர்

சொல்லப்படும் கதைகள்

 
சொல்லப்படும் கதைகள்
 

கச்­சார் வெளிப் பகு­தி­ யில் நேற்று அதி­கா­லை­யில் சுற்­றுக் காவல் பொலி­ஸார் மீது நடத் தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுக்கு என்ன கார­ ணம் என்­பது உட­ன­டி­யா­கத் தெரி­ய­வ­ர­வில்லை என்­றா­லும் பல­வித ஊகங்­கள் மக் கள் மத்­தி­யில் பேசப்­ப­டு­கின்­றன. அவை வரு­மாறு,

1. இது, கிளி­நொச்­சி­யில் தனிச் சிங்கக் கொடியைக் கட்டிய மஹாசேன் பலகாயவின் குழப்பும் முயற்சி. இப்படிச் செய்வதன் மூலம் மீண்டும் வடக்கில் ஆயுதப் போர் ஏற்பட்டதாகக் காட்டி தெற்கில் அரசியல் செய்யும் உத்தி.

2. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் படையினர் ஏன் போர் முடிந்த பின்னரும் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார். அவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் புலனாய்வாளர்கள் செய்த வேலையாக இது இருக்கும்.

3. மணல் மற்றும் கஞ்சா கடத்துபவர்களுக்குப் பளைப் பொலிஸாரின் அண்மைக் கால தீவிர நடவடிக்கைகள் இடைஞ்சலாக இருக்கின்றன. இரவுச் சுற்றுக் காவலை அவர்கள் அதிகரித்ததன் மூலம் கடத்தலைச் செய்ய முடியாதிருப்பதால் பொலிஸாரை அவர்களது நிலையத்திற்குள் முடக்குவதற்காகக் கடத்தல்காரர்களால் செய்யப்பட்டதாக இது இருக்கும்.

4. வேறு யாரையோ இலக்கு வைத்துப் பதுங்கியிருந்த தாக்குதலாளிகள் இடக்கு முடக்காகப் பொலிஸாரிடம் அகப்பட்டுக் கொண்டதால் தப்பியோடுவதற்காகச் சுட்டுவிட்டுச் சென்றிருக்கலாம்.

5. அவ்வப்போது புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாகச் சொல்லப்படும் வழக்கமான கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

6. போர் முடிந்து 8 வருடங்களாகியும் அரசு ஒரு தீர்வைத் தராமல் இழுத்தடிப்பதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் தூக்கியிருக்கலாம்.

இந்தக் காரணங்களில் எந்த ஒன்றையும் பொலிஸாரோ இராணுவத்தினரோ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. வி◌சாரணைகளின் பின்னரே காரணத்தை அறிய முடியும் என்றே அவர்கள் தெரிவிக்கின்றனர்.

http://uthayandaily.com/story/3527.html

  • தொடங்கியவர்

பளை­யில் நடந்­தது சாதா­ரண சம்­ப­வம்

பொன்­சேகா விளக்­கம்

 
 
பளை­யில் நடந்­தது சாதா­ரண சம்­ப­வம்
 

கிளி­நொச்சி, பளை­யில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வ­மா­னது நாட்­டின் ஏனைய பகு­தி­க­ளில் இடம்­பெ­று­கின்ற சம்­ப­வங்­களை போன்­ற­தே­யா­கும். அத­னைத் தேசி­யப் பாது­காப்­புக்கு எதி­ரான சம்­ப­வ­மா­கக் கருத முடி­யாது என்று பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கடந்த வாரம் பிலி­யந்­த­லை­யி­லும் சம்­ப­வம் இடம்­பெற்­றது. பாத­ளக் குழு­வால் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். அதே­போல், கழுத்­து­றை­யில் சிறைச்­சா­லைப் பேருந்து மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தை­யும் நாம் அறி­வோம்.

இது­போல் நாட்­டில் எல்லா இடங்­க­ளி­லும் பாதா­ளக் குழுக்­கள் இருக்­கக்­கூ­டும். யாழ்ப்­பா­ணத்­தி­லும் பல குழுக்­கள் உள்­ளன. கடந்த காலங்­க­ளில் பல சம்­ப­வங்­கள் அங்கு இடம்­பெற்­றன. ஆவாக் குழு என்ற பெய­ரில் ஒரு குழு இயங்­கு­வ­தும் அது பல வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளில் ஈடு­பட்டு வந்­த­மை­யும் நாம் அறி­வோம்.

கிளி­நொச்சி பளைப் பிர­தே­சத்­தில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வ­மும் இந்த வரி­சை­யில் இடம்­பெற்­ற­து­தான். பொலி­ஸார் களத்­தில் இறங்கி இதைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும். அத­னைத் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான ஒன்­றா­கக் கருத முடி­யாது. தெற்­கில் இடம்­பெ­று­வ­து­போல் ஒரு சம்­ப­வம்­தான் இது.

தெற்­கில் இடம்­பெற்­றால் அதைச் சாதா­ரண சம்­ப­வம் என்று கூறும் நாம் வடக்­கில் இடம்­பெற்­றால் தேசிய பாது­காப்­புக்கு எதி­ரான சம்­ப­வம் என்று கூறு­வது எந்­த­வ­கை­யில் நியா­யம்? நாட்­டின் சட்­டத்தை உரிய முறை­யில் பயன்­ப­டுத்­தி­னால் இவ்­வா­றான சம்­ப­வங்­களை இல­கு­வா­கக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும் – என்­றார்.

http://uthayandaily.com/story/3619.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.