Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

Image

மருதர் ,
பரம்பரை பரம்பரையாய் பார்ப்பனர்களுக்கும், திராவிடம் பேசிய குள்ளநரிகளுக்கும் அடிமையாய் சிக்கிக் கிடந்த தலைமுறை முதன் முதலாக "பழையன கழித்து" புது பொலிவு பெறுகிறது.
குப்பையாய் கிடந்த மூளையை உள்ளே கொண்டுசெல்லாமல் செருப்போடு சேர்த்து வெளியே வைத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sasi_varnam said:

மருதர் ,
பரம்பரை பரம்பரையாய் பார்ப்பனர்களுக்கும், திராவிடம் பேசிய குள்ளநரிகளுக்கும் அடிமையாய் சிக்கிக் கிடந்த தலைமுறை முதன் முதலாக "பழையன கழித்து" புது பொலிவு பெறுகிறது.
குப்பையாய் கிடந்த மூளையை உள்ளே கொண்டுசெல்லாமல் செருப்போடு சேர்த்து வெளியே வைத்திருக்கிறார்கள்.

மாத்தி மாத்தி அடித்துக்கொண்டு இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டார்கள் 

அடுத்தவன் வந்து உங்களுக்கெல்லாம் மூளை இல்லை அதனால்தான் அங்கு போகிறீர்கள் 
என்று கூறும்போது. ஆம் மூளை இல்லாமல்தான் போனோம் அதுக்கு என்ன இப்போ 
என்று ஒரு கெத்தா நிற்க வேண்டும். அவங்கள் தேடி கொட்டமுன்னம் நாங்களே எந்த எந்த குப்பைக்குள்ளால் 
நடக்கவேண்டும் என்று எல்லாம் அறிந்துகொண்டோம் என்றால் அவர்கள் கொண்டுவந்து குப்பைகொட்டும்போது வேறும்  தூசாகவே தெரியும் ஊதிட்டு போய்க்கொண்டே இருக்கலாம். 

அதி படிச்சோம் இதை படிச்சோம் என்று குப்பை கொட்டும்போது 
எல்லாம்தான் படிச்சீங்க என்ன செய்து கிழிச்சீங்க ?
என்று வீரப்போடு தொடர வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்விடத்தையும், வாழ்வாதார உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்விடத்தையும், வாழ்வாதார உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரியானா மாநிலம், சண்டிகரிலுள்ள பஞ்சுகுலா எனும் பகுதியில் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக வசித்துவரும் தமிழர்களின் குடிசைப்பகுதிகள் அகற்றப்படுமென்று அம்மாநில அதிகாரிகளால் அறிவிக்கை கொடுக்கப்பட்டு, மற்றவர்களுக்கெல்லாம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்று வசிப்பிடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இதனை எதிர்த்தும், வாழ்விடத்தை உறுதி செய்யக்கோரியும் அப்பகுதி மக்களோடு சேர்ந்து சண்டிகர் நாம் தமிழர் கட்சி சார்பாக அரியானா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் உரிய நீதி கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் தமிழர்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது.

அரியானா மாநிலத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, தலைநகர் சண்டிகரில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்கப்பெறாமல் குடிசைப்பகுதிகளிலேயே வாழும் நிலையே இன்றளவும் நிலவுகிறது. அரசின் சார்பாக வசிப்பிட வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி என எவ்விதத் தேவைகளும் நிறைவுசெய்துதராத நிலையில், தமிழர்கள் தங்கள் சொந்த முயற்சியிலயே இவற்றை அமைத்துக்கொண்டு மிகக்கடினமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சலகத் தேர்வுகளில் வெற்றிப்பெற்று தமிழ்நாட்டுப் பணியிடங்களில் வேலைக்குச் சேரும் நிலையில், அரியானாவில் வாழும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்போ, சுயதொழில் தொடங்க உதவியோ அம்மாநில அரசின் சார்பில் வழங்கப்படுவதில்லை. ஒரே நாடு , ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் தமிழகத்தில் குடியேறியுள்ள பல இலட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பயன்பெறும் சூழ்நிலையில், 40 ஆண்டுகளாக வாழ்ந்தும் அரியானா வாழ் தமிழர்களுக்குக் குடும்ப அட்டைகூட வழங்கப்படாமல் இரண்டாம்தரக் குடிமக்களாகவே அவர்கள் நடத்தப்படுவது மிகப்பெரும் கொடுமையாகும். தமிழ்நாட்டில் குடியேறிய வெளிமாநிலத்தவர்கள் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தாலே வாக்குரிமை உட்பட அனைத்துரிமையையும் பெற்றுவிடும்போது, தமிழர்கள் மட்டும் எங்கு சென்றாலும் அடிமைகள், அகதிகள் போல வாழும் நிலை நிலவுவது பெரும் வேதனையளிக்கிறது.

கடந்த ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத்தேர்தலில் தமிழர்களின் ஒருமித்த ஆதரவைப்பெற்று வெற்றிபெற்ற தற்போதைய அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்கள் தமிழ் மக்களிடம் பாகுபாடு காட்டப்படாது என்றும், குடிசைப்பகுதி பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணப்பட்டு அவர்களுக்கு வாழ்விடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஆகவே, அரியானா வாழ் தமிழர்களின் வசிப்பிடப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாணவும், அவர்களுக்கான மாற்றுக்குடியிருப்பை உடனடியாக உறுதி செய்யவும் அரியானா மாநில அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அழுத்தம் கொடுத்து அச்சிக்கலைத் தீர்க்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Ensure Housing and Livelihood Rights for Thamizhs Living in Haryana!

I was shocked to learn that when other state people were accomodated in apartments, Thamizhs living in Panchkula, Chandigarh, Haryana, had been living in slums for almost 40 years and had been notified by state officials that they would be evicted. It is unbearably saddening that Thamizhs are in a precarious position when justice was denied in the case filed in the Haryana High Court by the Naam Tamilar Katchi on behalf of people living in that area who oppose their eviction and demand the provision of housing in Chandigarh.

There are more or less One Lakh Thamizhs living in the state of Haryana alone. In particular, in the capital, Chandigarh alone, tens of thousands of poor, middle-class Thamizhs have been living in slums for more than forty years without even access to basic amenities. While the government has not met any of the needs such as housing, drinking water, medical care, electricity, roads, and toilets, Thamizhs are living in dire straits by setting up these on their own initiative.

While people from the state of Haryana pass the postal exams and get jobs in Thamizh Nadu, Thamizhs living in Haryana are not offered jobs or help to initiate self-employment on behalf of the state government. In a situation where millions of Northerners who have migrated to Thamizh Nadu through the One Country, One Family Card scheme are benefiting, it is a great tragedy that Thamizhs living in Haryana for 40 years are being treated as second class citizens without even being issued a family card. It is a great pain to see Thamizhs living as slaves and refugees wherever they go, while expatriates living in Thamizh Nadu get all the rights, including the right to vote, after living for 4 years.

Incumbent Haryana Chief Minister Manohar Lal Khattar, who won the assembly elections last year with the unanimous support of Thamizhs, had promised that Thamizhs would not be discriminated and that the slum problems would be resolved and they would be provided with basic amenities including shelter. But that promise has not been fulfilled to date.

Therefore, on behalf of the Naam Tamilar Katchi, I urge the Tamil Nadu Government to negotiate with the State Government of Haryana to resolve the issue of residence, to find a permanent solution to the same for Thamizhs living in Haryana and to ensure immediate resettlement for them.

– Senthamizhan Seeman
Chief Coordinator
Naam Tamilar Katchi

https://www.naamtamilar.org/seeman-urges-ensure-housing-and-livelihood-rights-for-tamils-living-in-haryana/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாடல் ரணசிங்கம்.

சாதாரண படத்திற்குள் இவ்வளவு விவகாரமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் தம்பி

(இதே இன மான ஒற்றுமை 10 வருடத்துக்கு முதல் இருந்திருந்தால்)

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

திராவிடர்கள் அண்மையில் வெளியிட்ட தமிழ்நாட்டு கொடி எடுபடாது!

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காது காலந்தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வுசெய்யப்படாது நியமனப்பதவி மூலம் அதிகாரம் பெற்றிருக்கும் ஆளுநர் தடுத்து முடக்குவது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே தகர்க்கும் கொடுஞ்செயலாகும்.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலத் தகுதி பெறுவது முற்றாக அற்றுப்போய்விட்டது மட்டுமின்றி, ஒவ்வொராண்டும் நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிற மாணவச்செல்வங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக மக்கள் அளித்த உணர்வு நெருக்கடியின் விளைவாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டும் அதனை அங்கீகரிக்காது கள்ள மௌனம் சாதித்திடும் ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கு மிகப்பெரும் சனநாயகப்படுகொலையாகும். ஏற்கனவே, ஏழு தமிழர் விடுதலை குறித்தான மாநில அரசின் முடிவிற்கு மாறாக, மௌனம் காத்து விடுதலைக்கோப்பில் கையெழுத்திட மறுத்து வரும் ஆளுநர், தற்போது மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டிலும் காலதாமதம் செய்வதென்பது தமிழக மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப் பார்ப்பதாக உள்ளது.

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தமிழக முதல்வரும், 20ஆம் தேதி 5 தமிழக அமைச்சர்களும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகும்கூட, அதனைத் துளியும் மதியாது அலட்சியப்போக்குடன் காலம் தாழ்த்துவது எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தையே அவமதிக்கின்ற படுபாதகச்செயலாகும். இது மாநிலத்தன்னாட்சி மீதும், தமிழகத்தின் இறையாண்மையின் மீதும் மத்திய அரசு தொடுக்கும் மறைமுகப்போராகும்.

சமூக நீதியின் அரணாக விளங்கும் இட ஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் எனும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதற்காகவே முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இவ்வாண்டு இடங்களை ஒதுக்க மறுத்த மத்திய அரசு, வங்கிப் பணியாளர் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்டோர் , எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இடங்களை எடுத்து, முற்பட்ட பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி மிகப்பெரும் சமூக அநீதியை நிகழ்த்தியிருக்கிறது. இதுமட்டுமல்லாது, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் போதிய மாணவர் சேர்க்கை இல்லை எனக் கூறி, நிரப்பபடாத அந்த இடங்களை முற்பட்ட பிரிவினரைக் கொண்டு நிரப்பி, சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையை வீரியமாகச் செய்து வருகிறது. அதன் நீட்சியாகவே, தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மூலம் மத்திய அரசு தடையை ஏற்படுத்தியிருக்கிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து மற்ற மாநிலங்களில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் மருத்துவக் கலந்தாய்வே நடைபெறாதது தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் மனஉளைச்சலையும், பெருங்குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனத் தமிழக ஆளுநரை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/tn-governor-should-immediately-approve-7-5-reservation-for-government-school-students/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டப்போராட்டம் நடத்திய இனமானத்தமிழர்கள்,உறவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுக்கள் | சீமான்

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொல்.திருமாவளவன் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுக்கும் மத அடிப்படைவாதிகள்! – சீமான் கடும் கண்டனம்

தொல்.திருமாவளவன் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுக்கும் மத அடிப்படைவாதிகள்! - சீமான் கடும் கண்டனம்

 

அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுத்து அவமதிப்புச் செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்ற பெரும்பாவலன் பாரதியின் முழக்கத்திற்கு ஏற்ப, மனிதர்களை மனிதர்களாய் பாராது வருணப்பேதத்தின் மூலம் பிரித்தாண்டு; ஒடுக்கித் தாழ்த்தி வீழ்த்தத் துடிக்கும், பெண்களை இழித்துரைக்கும் மனுதர்மத்தின் கொடியக் கோட்பாடுகளை எடுத்துரைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது தனிமனிதத்தாக்குதல் தொடுத்து அவமதிப்புச் செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று அவதூறுப்பரப்பரையில் ஈடுபடும் அக்கயவர்களின் கொடுஞ்செயல் துணிவற்ற கோழைத்தனமாகும்.

மனுதர்மத்தின் கோர முகத்தைத் தோலுரித்து நாளை (24.10.2020) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முன்னெடுக்கவிருக்கும் அறப்போராட்டத்தை ஆதரித்து, அவர்களது போராட்டம் வெல்ல வாழ்த்துகிறேன்!

பெண் விடுதலை இல்லையேல்; மண் விடுதலை இல்லை!
– தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

seeman-extends-support-thol-thirumavalav

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வராகி என்ன செய்ய போகிறார் சீமான் ? | சூழல் கேள்விகளும் - சுளீர் பதிகளும் | இயக்குனர் களஞ்சியம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடர்களது தமிழ்நாட்டுக்கொடி : எச்சரிக்கை தமிழர்களே

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் மாற்றுமொழியினருக்கு எதற்காக வாய்ப்பு?-புதுகை ஜெயசீலன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு தெலுங்கர்களுக்கே | இனக்கலவரத்தை தூண்டும் வி.பி.துரைசாமி | தடம் |

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேரி-யை சுத்தம் செய்த சீமான் | உலகின் சிறந்த தலைவன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவில் வடிவேலு - விஜய் நெத்தியடி | வச்சி செய்வோம் Ep11 | Pettai TV

டிகர் வடிவேலு உட்பட பல நடிகர்கள் இயக்குநர்கள் பாஜகவில் இணைவதாக ஒரு புரளி பரப்ப பட்டது. அதன் உண்மைத்தன்மையை கூறி விளக்குவதே இந்நிகழ்ச்சி.

ஒன்றே செய்!
நன்றே செய்!
அதை வச்சி செய்!+

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பா  ஜ  க மற்றும் காங்கிரசு கூட்டணி இடைய நிலவு‌ம்  போட்டி காரணமாக இந்திய தேசிய பங்குச் சந்தை சரிவு  விருதுநகர் தொகுதியில்  முன்னணியில் இருந்த  விஜய பிரபாகர் அவர்கள் பின்னடைவு 
    • Published By: VISHNU   04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக்       ( Bonnie Horbach)  அவர்களுக்கு விசேட  நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கூறியதாவது: இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 25% ஆக அதிகரித்துள்ளது. 2032 ஆம் ஆண்டிற்குள் 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதைக் கூற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களை மையமாகக் கொண்டு பல பரிமாண வறுமையை 10% வரைக் குறைப்பது எமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அந்த இலக்கை நோக்கிச் செல்ல இது போன்ற திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்த திட்டங்களுக்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். வடமாகாணத்தில் மக்களின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் 04 புதிய வைத்தியசாலைகளை திறப்பதற்கு நெதர்லாந்து தூதுவர் அண்மையில் எம்முடன் இணைந்து கொண்டார். இந்த இரண்டு திட்டங்களும் இலங்கையின் கிராமப்புற சமூகத்தை பலப்படுத்தும். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்ல நான் நடவடிக்கை எடுத்தேன். இலங்கைக்குச்  சொந்தமான புராதன பீரங்கிகளை மீள இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில்   நெதர்லாந்து அரசுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த வீடுகளை இராணுவத்தினரின் பங்களிப்புடன்  அரச செலவில் புனரமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், அது தொடர்பான முடிவுகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் சமர்ப்பிக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்காக தற்போது உள்ள நிதியை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். மேலும், தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உரிய மதிப்பீடுகளை விரைவாகத் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது அன்றைய அரசாங்கம் 170 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 13 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இம்முறை சில மாகாணங்களில் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வருடமும் அடுத்த வருடமும் அனர்த்த சேதங்களை புனரமைக்கத் தேவையான அனைத்து நிதியையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  நெதர்லாந்து நாட்டுத்  தூதுவர் பொனி ஹோர்பாக்( Bonnie Horbach),  கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்த ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை நான் கௌரவமாக கருதுகின்றேன். ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிந்த அலங்காரமான பாலங்கள் அல்ல. ஆனால், தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் வாழ்க்கையை இணைப்பதோடு, கிராமப்புற மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் என்பதைக் கூற வேண்டும். தலைமைத்துவம் என்பது மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவப் பண்புகளை பிரதிபலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.  இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அதன்போது, அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்னேற்றத்தின் பலன் குறைந்த வருமானம் பெறும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நெதர்லாந்து பிரதித் தூதுக் குழுவின் தலைவர் இவன் ருஜென்ஸ் (Iwan Rutjens),, எக்சஸ் குழுமத்தின் தலைவர் சுமல் பெரேரா,  போர்சைட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தியோ பெர்னாண்டோ, ஜென்சன் பிரிஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிர்க்  பிரான்சென் (Dirk Fransen) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185249
    • வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை  தமிழ் நாடு  முன்னிலை  திமுக  கூட்டணி 39 பா ஜ க  1  
    • Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM   களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை  பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச   செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய  சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும்,  அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
    • பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.