Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முடிந்த விளையாட்டுகள் ஒரு நினைவு தேடல்

 

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்

காளியம்மா காளிதான் ஆவேசத்தில் 👍

 

என் கருப்பு தங்கமே! நானெல்லாம் அகவை60 கடந்தவன்.எவ்வளவுகாலம் உயிரோடிருப்பேன் எனசொல்லமுடியாது.ஆனால், உன் போன்ற வீரத்தமிழச்சி இருக்கும் போது நாம் தமிழர் ஆட்சி வந்தேதீரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
 
வீறுகொண்டு எழுவார்கள் தமிழர் அரசியல் அறிவாயுத நாள் இந்த தளபதிகள் எமது மக்களின் உண்மை குரல் உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது என் உயிர் உடன் பிறவா தங்கைகள் தம்பிகள் எமது பாதுகாப்பு எண்ணிய பயணம் தொடரட்டும் உங்கள் அரசியல் அறிவாயுத பயணம் தொடரட்டும்
  • கருத்துக்கள உறவுகள்
புரட்சி தமிழர்
35 தடவை நான் பாத்துட்டேன்...ஆனால் மறுபடியும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்

நாங்கள் மெயின் ரவுடி கூட சண்டை செய்றோம் | அண்ணன் புரட்சிவேங்கை மு.பா | விவசாயி எனும் நான்

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றிய நடிகர்கள் இயக்குனர்கள் கருத்து

 

  • கருத்துக்கள உறவுகள்

அச்சமாட்டோம் அச்சமாட்டோம் அடக்குமுறைக்கு அச்சமாட்டோம் 

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் இரண்டு நிகழ்வு | சுற்றுச்சூழல் பாசறை | பஜாஜ் பைனான்ஸ்க்கு எதிரான ஆர

 

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடி மகளிர் பாசறை சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது!

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தை சீமான் எதிர்க்கிறாரா | இதோ தெளிவான விளக்கம் | NTK

 

  • கருத்துக்கள உறவுகள்

களங்கமற்ற புனிதத்தலமா நீதிமன்றங்கள்? 

நீதிபதிகள் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களா? களங்கமற்றவைகளா நீதிமன்றங்கள்? - இடும்பாவனம் கார்த்திக்

இது இளங்கோ கல்லணை என்பவரின் முகப்புத்தக பதிவு : அவர் கூறியுள்ள பிரச்சனை குறித்து கார்த்தி பேசவேண்டும் . "வங்காளத்தில் பாஜகவிற்கு அடித்தளம் எதுவும் கிடையாது. அதனால் பல்வேறு கட்சிகளில் முன்பு பணியாற்றிய ரெளடிகளை கட்சிக்குள் கொண்டு வந்தார்கள். பொது இடங்களில் இந்த ரெளடிகள் அட்டகாசம் செய்து விட்டு ஓடிவிடுவார்கள். தேர்தல் சில நாட்கள் இருக்கும் போது ஆங்காங்கே கலவரம் செய்து மக்களை விரட்டுவார்கள். பின்னர் சில கொலைகளும் நடந்தது. ஆனால் அதற்கு முன்னரே இரானுவத்தை அனுப்பி மம்தா அரசை மிரட்டினார்கள். இதற்கிடையில் வங்காளத்தில் அதிகார வர்க்கம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தார்கள். அதன் பின்னர் நகர்ப்புற பூத்துகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். மம்தா பானர்ஜி தனியாக வந்து நள்ளிரவில் எந்த அதிகாரியும் ஒத்துழைக்காமல் தானாக கத்திவிட்டுச் சென்றார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சில தொகுதிகளை வாக்குச் சாவடி கைப்பற்றல் மூலம் நடத்தியது. அதே போல குறிப்பிட்ட சதவீத வாக்குகள் இருப்பதாக பிரதிபலிக்கச் செய்தார்கள். இது இப்போது இங்கே எதற்காக என்று கேட்கிறீர்களா? நேற்றைய முன்தினம் தமிழக அரசு அதிகாரிகள் பலரும் எந்தக் காரணமுமின்றி தில்லிக்கு அழைக்கப்பட்டார்கள். ரவுடிகளை கட்சியில் சேர்க்கிறார்கள். அடுத்து இங்கு ஒரு ஆட்டம் போடுவார்கள். எடுபுடி மம்தா அளவுக்கெல்லாம் போக மாட்டார். இப்போதே ரவுடிகளை சிறையில் அடைத்து தேர்தல் வரை வழக்கை நடத்தாமல் தள்ளிப் போடலாம். இல்லையென்றால் மிகப் பெரிய கலவரத்தையும் தமிழகம் எதிர் கொள்ள வேண்டி வரும்."
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தி தெரியாததால் எனக்கு நேர்ந்த தாக்குதல்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

வெற்றிமாறன் தீவிரவாதியா?

  • கருத்துக்கள உறவுகள்

 

புதியவனின் பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

PART 3 - நான் முதலமைச்சரானால் என்ன செய்வேன்

 

  • கருத்துக்கள உறவுகள்

பேச மறுக்கும் ஊடகங்கள் மத்தியில் (நல்லதோ / கெட்டதோ ) பேசிய ஜூ.விக்கு நன்றிகள்..👍.💐

 

  • கருத்துக்கள உறவுகள்

மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? – சீமான் கண்டனம்
மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? - சீமான் கண்டனம்

 

மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? – சீமான் கண்டனம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் பிரகாசு என்பவர் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டதை முன்வைத்து அதற்கு மதச்சாயம் பூசி, கலவரம் செய்ய முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. சட்டம் ஒழுங்கைக் கட்டிக்காப்பதும், சாதி, மதம் என எதன்பொருட்டும் எவ்விதப்பூசலும், வன்முறையும் ஏற்படாதவண்ணம் தடுப்பதுமான தனது கடமையைத் திறன்படச் செய்து முடித்த காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் மக்களிடையே மதக்கலவரத்தை ஏற்படுத்துவதன் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு அவர்களிடையே வாக்குவேட்டையாடும் மதவெறிக்கும்பல் தமிழகத்திலும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிற நிலையில், அருண் பிரகாசின் கொலையைக் காரணம் காட்டி, அதற்குள் மதத்தைக் காரணியாக வைத்துக் கலவரப்பூமியாக மாற்ற முனையும் கொடுஞ்செயல் இராமநாதபுரம் காவல்துறையினரால் முடக்கப்பட்டு, மதநல்லிணக்கமும், சமூக ஒற்றுமையும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதனைச் சிறப்பாகச் செய்து முடித்த காவல்துறை அதிகாரியைப் பாராட்டாது பதவியிறக்கம் செய்திருப்பது மோசடித்தனமில்லையா?

அப்பா நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவார் என்பதை டிவிட்டரில் எச்.ராஜா மறைமுகமாகப் பதிவுசெய்ததும் அவர் உடனடியாகக் கைதுசெய்யப்படுவதும், மதச்சாயம் பூச வேண்டாம் எனச் சமூக வலைத்தளத்தில் கருத்திட்டு, மதக்கலவரம் ஏற்படாது தடுத்த காவல்துறை அதிகாரி அவசர அவசரமாகப் பந்தாடப்படுவதும் சனநாயகத் துரோகமில்லையா? எவ்வித அதிகாரத்திலும் இல்லாத எச்.ராஜாவுக்கு அரசு அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும், ஆணைப் பிறப்பிப்பதற்கும் யார் உரிமை தந்தது? தமிழகத்தையும் நாங்கள்தான் ஆளுகிறோம் எனும் பொருளில் பாஜகவின் தேசியச்செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் பதிவு செய்யத் துணிவு எங்கிருந்து வந்தது? தமிழகத்தை உண்மையில் ஆள்வது யார் எடப்பாடி பழனிச்சாமியா? எச்.ராஜாவா? மாநிலத் தன்னாட்சிக்கு முழக்கமிட்ட அறிஞர் அண்ணாவின் பெயரில் இயங்குகிற ஒரு கட்சி, தனது அரசாங்க அதிகாரிகள் மீதான தன்னாட்சியையே இழந்து நிற்பது வெட்கக்கேடானது.

விநாயகர் சதுர்த்திக் கொண்டாடியதால் கொலைசெய்யப்பட்டார் எனக்கூறி இசுலாமியர்கள் மீது மதத்துவேசத்தை வெளிப்படுத்த முயலும் எச்.ராஜா போன்ற பெருமக்கள் என்றைக்கு பிள்ளையார் சதுர்த்திப் பேரணியில் பங்கேற்று கடலிலோ, குளத்திலோ கரைக்க மக்களோடு நின்றார்கள்? மக்களைத் தூண்டிவிட்டு மதவெறுப்பை உருவாக்கி சமூக அமைதியைக் குலைத்ததைத் தவிர இப்பெருமக்கள் செய்ததென்ன? ஒரு மரணத்திற்குக்கூட மதச்சாயம் பூசி, மக்களைத் மதத்தால் துண்டாடடிப் பிரித்துப் பிளக்கும் இப்பெருமக்கள், மண்ணுரிமைக்காகப் போராடுவோரை பிரிவினைவாதிகள் என்பது கேலிக்கூத்தில்லையா?

அருண் பிரகாசு கொலைசெய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்கத் தனிப்பட்ட முன்விரோதமே காரணம் என்பது காவல்துறையின் விசாரணையில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டும், அதனை வைத்து அரசியல் செய்து, மதக்கலவரத்தை ஏற்படுத்திச் சமூக அமைதியை குலைக்க முனையும் மதவெறியர்களையும், குண்டர்களையும் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய தமிழக அரசு, நியாயத்தின் பக்கம் நின்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து மதவெறியர்களின் செயலுக்கு ஆதரவாய் நிற்பது மிகக்கீழானது.

குஜராத்தில் இசுலாமியர்களைக் கொன்றொழித்த இந்துத்துவப் பயங்கரவாதிகளின் செயல்களை வேடிக்கை பார்த்த அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போல, மதக்கலவரங்களையும், கொலைகளையும் வேடிக்கைப் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டதா தமிழக அரசு? குஜராத், உத்திரப்பிரதேசம் போலவும் தமிழகத்தை மதவெறியர்களின் கூடாரமாக, கலவரப்பூமியாக மாற்ற முனையும் ஆபத்தானப் போக்கிற்கு ஆதரவாய் நிற்கத் துணிந்துவிட்டதா எடப்பாடி பழனிச்சாமி அரசு? சாத்தான்குளம் படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காது அரசியல் நெருக்கடி வருகிறவரை அவர்களைக் காப்பாற்ற முயற்சியெடுத்த அதிமுக அரசு, இராமநாதபுரத்தில் நேர்மையோடு செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுத்திருப்பது அதிமுக அரசின் அப்பட்டமான மக்கள் விரோதப்போக்கையே காட்டுகிறது.

இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மீது நடவடிக்கை எடுத்திருப்பதற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மக்களின் உணர்வுகளை மதித்து, நியாயத்தின்படி நடந்த அவர் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், இக்கொலையை மையமாக வைத்து மதவெறிச்செயல்களில் ஈடுபடுவோர் மீது, மதத்துவேசக் கருத்துகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

https://www.naamtamilar.org/seeman-condemns-the-action-taken-against-police-officer-who-thwarted-hindutva-mobs-conspiracy/

 

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமன்னார்கோவில் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

காட்டுமன்னார்கோவில் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

காட்டுமன்னார்கோவில் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குறுங்குடி கிராமத்தில் காந்திமதி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 9 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயற்றேன். ஆற்ற முடியாதப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன். பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மலிவாக உயிரிழப்பது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இதில் விபத்து எனும் போர்வைக்குள் அரசும், அதிகாரிகளும் ஒளிந்துகொள்கிறார்கள். விதி மீறலும், பாதுகாப்பின்மையும்தான் பெரும்பாலும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. இந்த பட்டாசு விபத்துகள் இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக தொடர்வதுதான் பெரும் வேதனைக்குரியச் செய்தியாகும்.

கடந்த 2005ஆம் ஆண்டு சிவகாசி மீனாம்பட்டியில் நடந்த விபத்தில் 20 பேர்; 2009ல் சிவகாசி நமஸ்கரித்தான்பட்டியில் நடந்த விபத்தில் 18 பேர்; 2010ல் சிவகாசியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர்; 2011ல் சனவரி மாதம் விருதுநகரில் நடந்த விபத்தில் 7 பேர்; அதே ஆண்டு ஏப்ரலில் நடந்த விபத்தில் 2 பேர்; சூன் மாதம் தூத்துக்குடியில் நடந்த விபத்தில் 4 பேர்; 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலிப்பட்டியில் நடந்த விபத்தில் 40 பேர்; அதே ஆண்டில் டிசம்பரில் சேலம் மேச்சூரில் நடந்த விபத்தில் 10 பேர்; 2013ஆம் ஆண்டு சிவகாசி, நாரணபுர விபத்தில் 6 பேர், 2016ஆம் ஆண்டு மார்ச்சில் சிவகாசி, காரிசேரியில் நடந்த வெடி விபத்தில் 3 பேர்; சூன் மாதம் சிவகாசி, பூலாவூரணியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர்; சூலை மாதத்தில் சிவகாசி வெம்பக்கோட்டை சங்கிபாண்டிபுரம் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர்; அக்டோபரில் விழுப்புரம் மாவட்டம், வானூர் துருவை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர், சிவகாசியில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர், கோவையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர், 2017 மார்ச் சிவகாசி விபத்தில் 5 பேர், 2018 சிவகாசி காக்கிவாடன்பட்டி விபத்தில் 3 பேர், 2019 பிப்ரவரி திருநெல்வேலி விபத்தில் 6 பேர், 2020 பிப்ரவரி சாத்தூர் விபத்தில் ஒருவர் என கடந்த 17 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலைகளிலும் கடைகளிலும் கிடங்குகளிலும் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள பெருந்துயரம் இப்போதுவரை நீண்டுகொண்டே வருகிறது.

உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், அடிப்படை விதிகளும் காற்றில் பறக்கவிடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும், பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.

ஆகையினால், இந்த வெடி விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க அரசானது உடனடியாகத் தலையிட்டு உரிய நீதிவிசாரணை செய்ய வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளின் பாதுகாப்பை சோதனைசெய்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இறந்துபோனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான மாற்றுத்தொழில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன்.


செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-urges-to-provide-rs-10-lakh-each-to-the-families-of-the-women-who-died-in-the-explosion-near-kattumannarkoil/

 

  • கருத்துக்கள உறவுகள்

எச்.ராஜா டிவிட்டரில் பதிவு செய்யத் துணிவு எங்கிருந்து வந்தது? தமிழகத்தை உண்மையில் ஆள்வது யார்?

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பண்ணலாமா அண்ணே?" நாம் தமிழர் தம்பியின் கடிதம்

 

கலியாணசுந்தரத்தை கட்சியிலிருந்து நீக்கபோறாங்களாம் ?

சே.பாக்கியராசன் போன்றோரின் தூண்டுதல்தானாம் காரணம் 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியில் ஜனநாயகம் இருக்கா.!? சீமானிசமா.!? தமிழ்தேசியமா.? Saattai Duraimurugan Exclusive

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, அபராஜிதன் said:

கலியாணசுந்தரத்தை கட்சியிலிருந்து நீக்கபோறாங்களாம் ?

சே.பாக்கியராசன் போன்றோரின் தூண்டுதல்தானாம் காரணம் 

பாக்கியராசன் மீதுள்ள காழ்ப்புணர்வில கிளப்பி விடுகிறார்கள். யார் விலகினாலும் அவர்மீது பழியை போடுவது இயல்பாகி விட்டது.

கல்யாணசுந்தரம் நின்று விளையாடி பரிணமிப்பார் என்பது எனது நம்பிக்கை! 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் கல்யாணசுந்தரத்துடன் பேசி பல மாதங்கள் என்று வேற கதை வருகிறதே இசை.

ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி (ராவுடன் தொடர்பு) வெளியேற்றிவிடுவாங்கள் போலத்தான் இருக்கு. தமிழனின் அடிப்படை குணத்தில் எவருமே விதிவிலக்கில்லை.

ஆனால் கல்யாணசுந்தரம் இல்லை என்றால் நாம் தமிழருக்கு பாரிய பின்னடைவு. 

தமிழ் தேசியத்துக்கு இல்லை ஏனென்றால் கட்சியில் இல்லை என்றாலும் கல்யாணசுந்தரம் போன்றோர் தமிழ் தேசியத்தை கைவிடப்போறதில்லை

10 hours ago, உடையார் said:

நாம் தமிழர் கட்சியில் ஜனநாயகம் இருக்கா.!? சீமானிசமா.!? தமிழ்தேசியமா.? Saattai Duraimurugan Exclusive

 

சரி உடையார் ஆனால் அண்ணன் சீமான் கட்சியை ஆரம்பிக்கும் போது தலைவர் பிரபாகரன் ஒருவர் தான் என்று சொன்னாரே. அப்போ அது பிரபாகரனிஸம் என்று தானே சொல்லவேண்டும் அது என்ன புதுசா சீமானிஸம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 6 - 9 - 2020 ஞாயிறு 
கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக மூன்று இடங்களில் புலி கொடியேற்றப்பட்டது.சிறப்பாக முன்னெடுத்த கோவை மாவட்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.