Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.வி.யின் கையிலேயே முடிவு இருக்கின்றது இரு அமைச்சர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கியமை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்கிறார் சம்பந்தன்

Featured Replies

சி.வி.யின் கையிலேயே முடிவு இருக்கின்றது

sampanthannnnn-copy-a09033984f42ed006c757688c86730d588dd5bc5.jpg

 

இரு அமைச்­சர்­க­ளுக்கு கட்­டாய விடு­முறை வழங்­கி­யமை அர­சியல் சாச­னத்­திற்கு முர­ணா­னது என்­கிறார் சம்­பந்தன்

(ஆர்.ராம்)

வட­மா­கா­ண­ச­பையில் எழுந்­துள்ள நெருக்­க­டி­யான நிலை­மையை எவ்­வி­த­மான கரு­மங்­களை முன்­னெ­டுத்து முடி­வுக்கு கொண்டு வர­மு­டியும் என்­பதை வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வ­ரனே தீர்­மா­னிக்­க­வேண்டும். அவரின் கையி­லேயே முடிவு தங்­கி­யுள்­ளது என்று எதிர்க்கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 

வட­மா­காண இரண்டு அமைச்­சர்கள் மீது விசா­ரணைக் குழு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­யி­ருந்த நிலையில் அவர்­களை பதவி நீக்கம் செய்­வது நியா­ய­மான செயற்­பா­டாக இருந்­தாலும் ஏனைய இரண்டு அமைச்­சர்கள் மீதும் எவ்­வி­த­மான குற்­றச்­சாட்­டுக்­களும் சுமத்­தப்­ப­டாத நிலையில் அவர்கள் மீது விசா­ரணை நடத்­து­வ­தா­கவும் அதற்­காக அவர்­க­ளுக்கு கட்­டாய விடு­முறை அளிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அறி­வித்­தி­ருப்­பது அர­சியல் சாச­னத்­திற்கு முர­ணான செயற்­பா­டாகும் எனவும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆளு­கையின் கீழ் உள்ள வட­மா­காண சபையில் தற்­போது முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்கையில்லாப் பிரே­ரணை ஆளு­ந­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டதை அடுத்து நெருக்­க­டி­யான நிலைமை ஏற்­பட்­டுள்ள சூழ்­நி­லையில் குறித்த விவ­கா­ரத்­தினை சுமு­க­மாக தீர்த்­துக்­கொள்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் என்ற வகையில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை எடுத்­தீர்கள்? அதன் பிர­காரம் சாத்­தி­ய­மான நிலை­மைகள் ஏற்­பட்­டி­ருக்­கின்­ற­னவா? என்­பது தொடர்பில் கேள்வி எழுப்­பி­ய­போதே எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­வித்­த­தா­வது;

வட­மா­காண சபையில் உள்ள அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டதன் கார­ணத்தால் அவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக முத­ல­மைச்­சரால் மூவர் கொண்ட விசா­ர­ணைக்குழு­வொன்று அமைக்­கப்­பட்­டது.

அந்­தக்­கு­ழு­வாது ஒரு அமைச்சர் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் மற்­றொரு அமைச்சர் நிர்­வாக சீர்­கே­டு­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்டி விசா­ரணை அறிக்­கையை முத­ல­மைச்­ச­ரி­டத்தில் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

அத­னை­ய­டுத்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் நான்கு அமைச்­சர்­க­ளையும் நீக்­கு­வ­தற்கு முயற்­சிகள் எடுத்து வரு­கின்றார் என்ற தக­வல்கள் எனக்கு கிடைக்­கப்­பெற்­ற­தை­ய­டுத்து கடந்த செவ்­வாய்­க்கி­ழமை நான் முத­ல­மைச்­ச­ருடன் தொலை­பே­சியில் உரை­யா­டி­யி­ருந்தேன்.

அதன்­போது நான் அவ­ரி­டத்தில் இந்த விட­யங்கள் குறித்து கேள்வி எழுப்­பினேன். அதா­வது, நீங்கள் நிய­மித்த விசா­ர­ணைக்­குழு இரு அமைச்­சர்கள் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­யுள்­ளது. அவ்­வா­றான நிலையில் நீங்கள் ஏனைய இரு அமைச்­சர்கள் உள்­ள­டங்­க­லாக நால்­வ­ரையும் நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­தாக அறி­யக்­கி­டைத்­துள்­ளது. அது உண்­மை­தானா? அவ்­வி­த­மான கரு­மங்­களை முன்­னெ­டுக்­கின்­றீர்­களா? என வின­வி­யி­ருந்தேன்.

அதன்­போது முத­ல­மைச்சர் இரண்டு அமைச்­சர்­களை பத­வி­வி­லக கோர­வி­ருப்­ப­தா­கவும் ஏனைய இருவர் மீதும் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அதற்­காக அவர்­க­ளுக்கு விடு­முறை வழங்­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

அச்­ச­ம­யத்தில் நான் அவ­ரி­டத்தில் சில­க­ருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தேன். தாங்கள் நிய­மித்த விசா­ர­ணைக்­கு­ழு­வா­னது இரண்டு அமைச்­சர்கள் மீதே குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. அவ்­வா­றான நிலையில் தாங்கள் ஏனைய இரண்டு அமைச்­சர்கள் மீதும் நட­வ­டிக்­கை­களை எடுப்­பது பொருத்­த­மான செயற்­பா­டாக எனக்குத் தெரி­ய­வில்லை. இவ்­வா­றான செயற்­பாடு எடுக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் உறுப்­பி­னர்கள் மத்­தியில் பிரச்­சி­னைகள் எழு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கின்­றன. ஆகவே அந்த செயற்­பாட்டை தாங்கள் மறு­ப­ரி­ சீ­லனை செய்ய வேண்டும்.

மேலும் தாங்கள் இந்த விடயம் சம்­பந்­த­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்­றீர்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யான, வட­மா­காண சபையில் அதி­க­ளவு உறுப்­பி­னர்­களைக் கொண்ட கட்­சி­யான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ரா­ஜா­வுடன் கலந்­து­ரை­யா­ட­வில்லை. அவ்­வி­த­மான நிலையில் தாங்கள் அவ­ருடன் கலந்­து­ரை­யா­டு­வது அவ­சியம் என்றேன்.

அதன்­போது முத­ல­மைச்சர் நான் அவ­ருடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான நேர­காலம் இருந்­தி­ருக்­க­வில்லை. இன்­றை­ய­தினம் (செவ்­வாய்க்­கி­ழமை) நிச்­ச­ய­மாக அவ­ருடன் தொடர்பு கொண்டு பேசுவேன் என்று குறிப்­பிட்டார்.

அத­னை­ய­டுத்து முத­ல­மைச்சர் மாவை.சேனா­தி­ரா­ஜா­வுடன் தொடர்பு கொண்டு பேசினார். அச்­ச­ம­யத்­திலும் நான் வலி­யுத்­தி­ய­தைப்­போன்றே மாவை.சோனா­தி­ரா­ஜாவும், இரண்டு அமைச்­சர்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­ப­டு­வதால் அவர்கள் மீது நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளுங்கள். அதில் தவ­றில்லை. ஆனால் குற்றம் சாட்­டப்­ப­டாத அமைச்­சர்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­பது தவறு. அவ்­வாறு நீங்கள் நால்­வ­ரையும் நீக்­கு­வ­தென்றால் ஐவரும் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டிய நிலை­மையே ஏற்­படும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

அதன் பின்னர் முத­ல­மைச்சர் 14ஆம் திகதி நடை­பெற்ற சபை அமர்­வின்­போது இரண்டு அமைச்­சர்­களை நீக்­கு­வ­தா­கவும் ஏனைய இரண்டு அமைச்­சர்கள் மீதும் விசா­ரணை மேற்­கொள்­வ­தா­கவும் அதற்­காக கட்­டாய விடு­முறை அளிப்­ப­தா­கவும் அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்தே நெருக்­க­டி­யான நிலை­மைகள் எழுந்­தன. இந்­நி­லையில் நான் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை மாவை.சேனா­தி­ரா­ஜா­வு­டனும், செல்வம் அடைக்­க­ல நா­த­னு­டனும், சிவ­சக்தி ஆனந்­த­னு­டனும் சித்­தார்த்­த­னு­டனும் சி.வி.கே.சிவ­ஞா­னத்­து­டனும், சத்­தி­ய­லிங்கத்துடனும் தொலை­பே­சி­யூ­டாக பேசினேன். அவர்­களின் கருத்­துக்­க­ளையும் பெற்­றுக்­கொண்டேன்.

இந்­நி­லையில் இந்த விவ­கா­ரத்­தினை சுமு­க­மாக தீர்த்­து­கொள்ள வேண்டும் என்று எதிர்­பார்த்தேன். சித்­தார்த்தன் முத­ல­மைச்­சரின் யாழி­லுள்ள வீட்­டுக்குச் சென்று அங்­கி­ருந்து என்­னுடன் தொலை­பேசி ஊடாக தொடர்பு கொண்டார். முத­ல­மைச்­ச­ருடன் உரை­யா­டு­மாறு கேட்­டுக்­கொண்டார்.

அதற்­க­மை­வாக நான் முத­ல­மைச்­ச­ரி­டத்தில் பேசினேன். அதன்­போது நான் அவ­ரி­டத்தில் இந்த நெருக்­க­டி­யான நிலை­மையை சுமு­க­மாக தீர்த்­துக்­கொள்ள வேண்டும். அதற்­கான கரு­மங்­களை முன்­னெ­டுக்க வேண்டும் எனக் குறிப்­பிட்டேன். அதன் பிர­காரம் தாங்கள் (முத­ல­மைச்சர்) விசா­ரணை அறிக்­கையின் பிர­காரம் ஊழல் மோசடி, நிர்­வாக சீர்­கேடு ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டையில் இரண்டு அமைச்­சர்கள் மீது நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றீர்கள்.

ஆனால் ஏனைய இரண்டு அமைச்­சர்­க­ளுக்கு கட்­டாய விடு­முறை அளித்­துள்­ளீர்கள். அந்த முடிவு தவ­றா­னது. அமைச்­சர்­களை நிய­மிக்­கவோ அல்­லது நீக்­கவோ தான் முத­ல­மைச்­ச­ருக்கு அர­சியல் சாச­னத்தில் இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. கட்­டாய விடு­முறை அளிப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆகவே தாங்கள் அந்த அறி­விப்பை மீள் பரி­சீ­லனை செய்து அக்­கூற்றை மீளப்­பெ­று­வீர்­க­ளாயின் இந்த விட­யத்­தினை சுமுக­மாக தீர்த்­துக்­கொள்­வ­தற்கு வாய்ப்­புக்கள் இருக்­கின்­றன எனக் குறிப்­பிட்டேன்.

அச்­ச­ம­யத்தில் முத­ல­மைச்சர், எனக்கு எதி­ரா­கவும் சில நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. நான் அந்த விட­யத்தை பரி­சீ­லனை செய்­யத்­த­யா­ராக இருக்­கின்றேன். குறித்த இரண்டு அமைச்­சர்­க­ளி­டத்­தி­லி­ருந்தும் எழுத்து மூல­மான உத்­த­ர­வா­த­மொன்றை எனக்குப் பெற்­றுக்­கொ­டுங்கள் என்று கேட்­டுக்­கொண்டார். அச்­ச­ம­யத்தில் எழுத்து மூல உத்­த­ர­வாதம் போன்ற விட­யங்­களை தவிர்த்து தங்­களின் முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்­யுங்கள் அதன் ஊடாக இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைப் பெற­மு­டியும் என குறிப்­பிட்டேன். அத­னை­ய­டுத்து அந்த தொலை­பேசி உரை­யாடல் நிறை­வுக்கு வந்­தது.

அதன் பின்னர் இந்த விடயம் தொடர்­பாக நான் மீண்டும் மாவை.சேனாதி­ரா­ஜா­வு­டனும், குறிப்­பிட்ட அமைச்­சர்­க­ளான சத்­தி­ய­லிங்கம், டெனிஸ்­வரன் ஆகி­யோ­ரி­டத்தில் பேச்­சுக்­களை நடத்­தினேன். விசா­ரணைக் குழுவின் மூலம் குற்றம் சாட்­டப்­ப­டாத நிலையில் அவர்கள் எழுத்­து­மூ­ல­மான உத்­த­ர­வா­தத்­தினை வழங்­கு­வது பொருத்­த­மில்லை. அதற்கு அவ­சி­யமும் இல்லை.

நாங்கள் ஊழ­லுக்கு எதி­ரா­ன­வர்கள் தான். அதில் எந்­த­வி­த­மான மாற்­றுக்­க­ருத்­துக்கும் இட­மில்லை. மத்­தியில் ஊழல் நிறைந்த ஆட்­சியை மாற்­று­மாறு குரல்­கொ­டுத்து வந்­தி­ருந்தோம். தற்­போதும் எமது நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை. இலஞ்சம், ஊழல் மோச­டிகள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். அதில் ஈடு­பட்­ட­வர்கள் நீதித்­து­றையின் பிரகாரம் முறையாக தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஆனால் குற்றம் சாட்டப்படாதவர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பது பொருத்த மற்றதொன்றாகும். அரசியல் சாசன ஒழுங்கு

விதிகளை மீறிச் செயற்படுவது பொருத்தமற்றது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படாதவர்களிடத்தில் உத்தரவாதத்தை எழுத்துமூலம் கேட்பதும் நியாயமற்ற கோரிக்கை. அரசாங்க ஊழியர்களை தான் குற்றச்சாட்டுக்களுக்காக விடுமுறையில் அனுப்ப முடியும். அதற்கான ஏற்பாடே இருக்கின்றது.

ஆகவே அவ்விதமான கோரிக்கைகளை முதலமைச்சர் மீளப்பெற்றுக்கொள்வராயின் இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறான முடிவொன் றுக்கு முதலமைச்சர் வராத பட்சத்தில் நிலைமைகள் வேறுவடிவத்திற்கு செல்ல முடியும்.

எவ்வாறாயினும் நான் தொடர்ந்தும் அனைத்து உறுப்பினர்களுடனும் பேசிக்

கொண்டிருக்கின்றேன். இந்தப் பிரச்சினை யையை சுமுகமாக தீர்ப்பதற்குநான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுகின்றேன். எனினும் முதலமைச்சர் கையில் தான் முடிவு இருக்கின்றது. அவர் தான் இந்த விவகாரத்தினை ஆரம்பித்தவர். தற்போதும் அவரின் அறிவிப்பில் தான் முடிவு இருக் கின்றது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-17#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தமை ஊழல், பண மோசடி, மற்றும் இலஞ்சத்திற்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடே ஆகும். முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும்.

ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த போது, அதற்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர். தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள்.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் "அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டார்" என்று சொன்னதை எவரும் மறந்திருக்க முடியாது. எமது வற்புறுத்தலின் காரணமாகத் தான் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த வேளையிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஐங்கரநேசனுக்கு எதிராக மட்டுமே இருந்தன. அப்படியிருந்தும் அவரை பாதுகாக்கும் முகமாகவே எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக் குழுவினரை முதலமைச்சரே தனியாக தேர்ந்தெடுத்து நியமித்தார்.

இறுதியில் ஐங்கரநேசன் மட்டுமே ஊழல் பண மோசடி மற்றும் இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார். அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறினார் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார். மற்றைய இரண்டு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு முதலமைச்சர் நியமித்த குழு அறிக்கை மூலமாகவும் ஊர்ஜிதமானது.

மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்த போதும் குற்றவாளிகளாக காணப்பட்ட 2 அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக முதலமைச்சர் அவ்வறிக்கையை மறைத்து வைத்திருந்தார். 2 பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின் தான் மாகாண சபையில் இவ்வறிக்கையை சமர்ப்பித்தார்.

இதன் பொழுதெல்லாம் ஊழலையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முதலமைச்சர் எடுத்த இம்முயற்சிகளுக்கெதிராக எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கெதிரான நடவிடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றும் அதில் நாம் தலையிட மாட்டோம் என்றும் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றவாளிகளை காப்பாற்றும் தனது முயற்சியை இவ்வேளையில் வேறு விதமாக முன்னெடுத்தார். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்த்து அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்கம் செய்யும் தனது யோசனையை முன் வைத்தார்.

குற்றவாளிகளையும் குற்றங்களிலிருந்து விடிவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வதென்பது குற்றங்களை நீர்த்துப் போகப்பண்ணி குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும். தனது இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரைத் தவிர்த்து மற்றைய கட்சித் தலைத்தலைவர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தியிருந்தார். இதை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் வினவிய பின்னர் தான் காலம் தாழ்த்தி திரு. சேனாதிராஜாவுடனும் பேசினார். ஊழலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் முதலமைச்சருக்கு கூறியிருந்தார்.

நால்வரையும் ஒன்றாக நீக்குவதென்பது நிரூபிக்கப்பட்ட குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவருக்கு கூறப்பட்டது. இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தனும் அவருக்கு கூறியிருந்தார்.

ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக குற்றவாளிகளாக க் காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக மட்டும் செயற்பட வேண்டும் என்று திரு. சம்பந்தனும் திரு. சேனாதிராஜாவும் கூறிய கருத்துக்கு மறு நாள் மாகாண சபை உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் அறிந்த பின் பதிலளிப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் அப்படிச் செய்யாமல் அடுத்த நாள் மாகாண சபையிலே தன்னுடைய தீர்ப்பை வழங்கினார்.

நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தை தோற்றுவித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது. அதனால் தான் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணித்தமைக்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம்.

ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் முதலமைச்சரின் இந்தத் தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். இதுவே எமது உண்மையான நிலைப்பாடு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 
16. 06. 2017.

  • தொடங்கியவர்

இருகோணங்களில் செயற்படுகின்றோம்

 

தமிழரசுக்கட்சியின் செயலாளர் 

வட­மா­காண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்கடி நிலை­மை­களை இரண்டு கோணங்­களில் தொடர்ச்­சி­யாக அணுகிச் செல்­கின்றோம் என்று இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செய­லா­ளரும் கிழக்கு மாகாண  விவ­சாய அமைச்­ச­ரு­மான கி.துரைரா­ஜ­சிங்கம் தெரி­வித்தார். 

வட­மா­கா­ண­ச­பையில் ஆளும் தரப்­பான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்கள் மற்றும் ரெலோ உறுப்­பினர் ஒருவர் உள்­ள­டங்­க­லாக முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நேற்று முன்­தினம் அவ­ச­ர ­அ­வ­ச­ர­மாக யாழ்ப்­ப­ணத்­திற்கு சென்­றி­ருந்த இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செய­லாளர் அங்கு தமது கட்­சியின் உறுப்­பி­னர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

அவ்­வா­றான நிலையில் தமது கட்சி இவ்­வி­டயம் தொடர்பில் எவ்­வி­த­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது என்­பது குறித்து கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வட­மா­காண சபையில் தற்­போது நெருக்­க­டி­யான நிலைமை தோன்­றி­யி­ருக்­கின்­றது. குறிப்­பாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் அமைச்­சர்கள் மீதான விசா­ரணைக் குழுவின் அறிக்­கைக்கு ஏற்ப இரண்டு அமைச்­சர்கள் மீது நட­வ­டிக்கை எடுத்­த­மைக்கு மேல­தி­க­மாக ஏனைய இரண்டு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக கட்­டாய விடு­முறை அறி­விப்பை விடுத்­தி­ருந்தார்.

இதனால் தமி­ழ­ரசுக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் அந்த நடை­மு­றையில் தவ­றுகள் இருக்­கின்­றன என்­பதைச் சுட்­டிக்­காட்டி முத­ல­மைச்சர் மீது தமக்கு நம்­பிக்கை இல்லை என்­பதை குறிப்­பிட்டு ஆளு­ந­ரி­டத்தில் தீர்­மா­ன­மொன்­றினை கைய­ளித்­துள்­ளனர்.

இதில் தவ­றான புரி­த­லொன்று வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்கள் வடக்கு மாகா­ணத்தில் எதிர்­கட்­சி­யா­க­வுள்ள தென்­னி­லங்கை பெரும்­பான்மை கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லா ­பி­ரே­ர­ணையை சமர்ப்­பித்­த­தாக பொய்­யான பிர­சாரம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

உண்­மை­யி­லேயே இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் 15 பேரும், ரெலோவின் உறுப்­பினர் ஒரு­வ­ரு­மாக 16பேர்

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சமர்ப்­பித்­துள்ள அதே­நேரம் அதற்கு மேல­தி­க­மாக எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த 5 உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரேைணை சமர்ப்­பித்­துள்­ளார்கள். இதுவே உண்­மை­யான நிலை­மை­யாகும்.

அவ்­வா­றி­ருக்­கையில் வடக்கு முத­ல­மைச்சர் தேர்தல் வெற்­றியின் பின்னர் கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு முர­ணான வகையில் செயற்­பட்டு வந்தார். அச்­சந்­தர்ப்­பங்­களின் போதெல்லாம் கட்சி உறுப்­பி­னர்கள் அதனை சுட்­டிக்­காட்­டி­ய­போது நாம் அவர்­களை அமை­திப்­ப­டுத்­தினோம். மக்­களின் நலன்­களை மையப்­ப­டுத்­தியும் எமது கூட்­டுப்­பொ­றுப்­பினை முன்­னெ­டுக்கும் வகை­யிலும் அமை­தி­யாக செயற்­பட்­டி­ருந்தோம்.

அவ்­வா­றான நிலையில் அவர் தற்­போது தான் எந்­தக்­கட்­சியும் சாரா­தவர் என்று கூறு­கின்றார். தன்­னு­டைய கௌர­வத்­திற்­காக அனைத்து விட­யங்­க­ளையும் ஒதுக்கி வைத்­து­விட்டு அர­சியல் ஒழுக்க நெறி­க­ளற்ற வகையில் செயற்­ப­டு­கின்­றமை வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.

குறிப்­பாக அவர் கட்­சியின் மத்­திய குழுக்­கூட்­டங்­களில் பங்­கேற்­காது இருந்தார். ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டங்­களில் பங்­கேற்­காது இருந்தார். பாரா­ளு­மன்ற, மாகாண சபை உறுப்­பி­னர்கள் குழு கூட்­டங்­க­ளையும் தவிர்த்து வந்தார். இதனால் கட்­சியின் உறுப்­பி­னர்கள் என்ன மன­நி­லையில் இருக்­கின்­றார்கள். எவ்­வா­றான நிலை­மைகள் கட்­சிக்குள் இருக்­கின்­றன என்­ப­தை­யெல்லாம் அவர் அறி­யாது தன்னைத் தானே தனி­மைப்­ப­டுத்தி வேறொரு பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்தார்.

அத்­த­கைய நிலை­மையில் தான் வட­மா­காண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தன. அதுவும் வட­ம­ாக­ாண சபையின் உறுப்­பி­னர்­க­ளா­லேயே அதி­க­ள­வி­லான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நான்கு கட்­சி­களைக் கொண்ட கட்­ட­மைப்பு. ஆகவே பல்­வேறு கருத்­துக்கள் காணப்­படும்.

எனவே அவ்­வாறு குற்­றச்­சாட்­டுக்கள் கிடைக்­கின்­ற­போது கட்­சித்­த­லை­மை­க­ளுடன் அவர் கலந்து பேசி­யி­ருக்­க­வேண்டும். அதனை விடுத்து தானே விசா­ர­ணைக்கு­ழுவை அமைத்தார். அந்த விசா­ர­ணைக்­குழு அறிக்­கையை சமர்ப்­பித்­தது. அதில் ஒரு அமைச்சர் மீதே ஊழல் குற்­றச்­சாட்டு காணப்­பட்­டது. மற்றைய அமைச்சர் மீது நிர்­வாக சீர்­கேடு தொடர்­பான குற்­றச்­சாட்டே காணப்­பட்­டது. ஏனைய இரண்டு அமைச்­சர்கள் மீது எவ்­வி­த­மான குற்­றச்­சாட்­டுக்­களும் காணப்­ப­ட­வில்லை.

இவ்­வி­த­மான நிலையில் கூட்­ட­மைப்பின் சிரேஷ்ட தலைவர் இருக்­கின்றார். கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சியின் தலை­வர்கள் இருக்­கின்­றார்கள். அவர்­க­ளி­டத்தில் எவ்­வி­த­மான நேர­டிக்­க­லந்­து­ரை­யா­டல்­க­ளையும் செய்­வதை தவிர்த்­தி­ருந்தார்.

தொலை­பேசி வழி­யாக ஒரு­சி­ல­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­போதும் ஏனை­ய­வர்­க­ளுடன் அவர் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­வில்லை. இத்­த­கைய நிலை­மை­யிலும் எமது சிரேஷ்ட தலைவர் சம்­பந்தன் அவ­ருடன் உரை­யா­டினார்.

எனினும் அந்த விட­யங்­களை எல்லாம் தவிர்த்து அவர் தனது சுய­தீனத்தின் அடிப்­ப­டையில் கடந்த 14 ஆம் திகதி அறி­விப்பை மாகாண சபையில் விடுத்தார். இதில் ஊழல் மோசடி செய்­தவர், நிர்­வாகச் சீர்­கேடு குற்றம் சாட்­டப்­பட்­டவர் ஆகிய இரு­வ­ருக்கும் ஒரே வித­மான தீர்ப்­பையே வழங்­கினார். அதற்கு அப்பால் ஏனைய அமைச்­சர்கள் இரு­வ­ருக்கும் கட்­டாய விடுப்­பையும் வழங்­கினார்.

இதனால் தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்­களும், ரெலோவின் உறுப்­பினர் ஒரு­வ­ரு­மாக இணைந்து முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லை என்று கட்­சித்­த­லை­மை­யு­ட­னான கூட்­டத்தில் தெரி­வித்து அத்­தீர்­மா­னத்­தினை ஆளு­ந­ரி­டத்தில் கைளித்­தனர்.

இவ்­வா­றான நிலையில் நான் நேர­டி­யாக யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்று உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினேன். அவர்­க­ளுக்கு ஜன­நா­யக உரி­மைகள் காணப்­ப­டு­கின்­றன. மாகாண சபை பிர­தி­நி­திகள் என்ற அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு சிறப்­பு­ரி­மைகள் காணப்­ப­டு­கின்­றன.

அத­ன­டிப்­ப­டையில் தான் அவர்கள் அத்­த­கைய தீர்­மா­னத்­திற்கு வந்­தி­ருந்­தார்கள். அதற்கு நாங்கள் தடை­யாக இருக்­க­மு­டி­யாது. அவர்­களை ஆசு­வா­சப்­ப­டுத்தும் வகையில் முத­ல­மைச்­சரின் செயற்­பா­டு­களும் காணப்­ப­ட­வில்லை. எனவே உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் குறிப்­பிடும் விட­யங்­களை என்­னி­டத்­திலும் குறிப்­பிட்டு அதனை தயா­ரிக்கும் செயற்­பா­டு­களை ஆரம்­பித்­தி­ருந்­தார்கள். அத்­துடன் சத்­தி­யக்­க­ட­தா­சி­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்து வரு­கின்­றனர்.

இது ஒருபுறம் நடந்­து­கொண்­டி­ருக்­கையில் எப்­போதும் பொறு­மை­யா­கவும், நிதா­ன­மா­கவும், விட­யங்­களை கையா­ள­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்கும் எமது சிரேஷ்ட தலைவர் சம்­பந்தன், முத­ல­மைச்சர் மற்றும் ஏனை­ய­வர்­க­ளுடன் இவ்­வி­ட­யங்­களை சுமு­க­மாக தீர்த்­துக்­கொள்­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்றார். இவ்­வி­த­மான இரண்டு கோணங்­களில் எமது கட்சி செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-17#page-1

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சருக்கு ஆதரவாக வட மாகாணசபைக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு மாகாண அதிகாரம் வேறு என்ற அடிப்படை கூட                                                                                                         தமிழரசுக்கட்சிக்கும்  அதன் சாணக்கியர்  சம்பந்தருக்கும் புரியாதது ஏன்?? 
உதாரணமாக தமிழ் நாட்டில் கூட பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் தலையிடுவதில்லையே?

எதற்காக எதெற்கெடுத்தாலும் மாகாணசபையை ஏன் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு கட்சியும்                                                                                                        வழி நடாத்த அல்லது தம்மிடம் கேட்டுத்தான் இயங்கணும் என்ற அதிகாரத்தில் இருக்கிறார்கள்??

செய்யவேண்டிய காரியங்களையும் நிதியையும் தம் மூலமே கிடைக்கணும் வரணும் என்ற சுயநல புத்தி தான்                                                                               இன்றைய நிலைக்கு காரணம். இது வட மாகாணசபை தெரிவு செய்யப்பட்டதிலிருந்தே இருக்கும் இழுபறி.

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபை என்பது ஒரு பிராந்தியத்தை நிர்வாக ரீதியில் பரிபாலிக்கும்.. ஒரு சபை. அதுவும் அரைகுறை குறைந்த பட்ச.. அதிகாரங்களோடு. அதற்குள்.. ஒரு சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்.. எதிர்க்கட்சி தலைவர்.. சட்டாம்பி சம்பந்தன்.. ஏன் தலையீடு செய்கிறார்.  இது எந்த.. அரசியல்சாசனப் பிரிவுக்குள்ளால் நிகழ்கிறது.

மாகாண சபையில் நிகழும் துஸ்பிரயோகங்களை.. அதன் முதலமைச்சர் தான்..  சரியான விசாரணைகளை செய்து.. தகுந்த நடவடிக்கைகள் மூலம்.. சரிசெய்ய வேண்டும். 

அதற்குள்.. சிங்கள மத்திய அரசும்.. அதன் பாராளுமன்றத்தை அலங்கரிப்பவர்களும்.. எதுக்கு தலையீடு செய்கிறார்கள் என்பது தான் இன்றுள்ள கேள்வி.

இவர்கள்.. இந்த தலையீட்டை செய்வது அரசியல்சாசனத்துக்கு உட்பட்டதா என்பதற்கு அப்பால்.. இவர்களின் தேவையற்ற.. இனவிரோத தலையீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் யோசிக்க வேண்டி உள்ளது. 

இப்படியே போனால்.. தமிழரின் நிர்வாக அமைப்புக்களுக்குள்.. தமிழ் காட்டிக்கொடுப்போரை.. சிங்கள எஜமான விசுவாசிகளை வைச்சே.. சீரழிவுகளைச் செய்து.. தமிழர்களை இன்னும் இன்னும் அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தும் இன அழிப்பை.. சுலபமாக்கும் செயலை சிங்களமும்.. சில சர்வதேச முண்டுகளும் செய்து கொண்டிருப்பர். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இப்படியே போனால்.. தமிழரின் நிர்வாக அமைப்புக்களுக்குள்.. தமிழ் காட்டிக்கொடுப்போரை.. சிங்கள எஜமான விசுவாசிகளை வைச்சே.. சீரழிவுகளைச் செய்து.. தமிழர்களை இன்னும் இன்னும் அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தும் இன அழிப்பை.. சுலபமாக்கும் செயலை சிங்களமும்.. சில சர்வதேச முண்டுகளும் செய்து கொண்டிருப்பர். 

அதற்குத் தடையாக இருக்கும் முதல்வரை நீக்கிவிடவே சம் சும் வகையாறாக்கள் அதிதீவிரமாக முயல்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nochchi said:

அதற்குத் தடையாக இருக்கும் முதல்வரை நீக்கிவிடவே சம் சும் வகையாறாக்கள் அதிதீவிரமாக முயல்கின்றன. 

தமிழகத்தில் கூட சட்டசபையில் சொல்வதைத்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் செய்வார்கள்.  கேட்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சிங்களமும்.. சில சர்வதேச முண்டுகளும் செய்து கொண்டிருப்பர். 

சிங்களம் தேவையில்லை அதற்கு உதாரனம் நடந்தைவைகளை நீங்கள் அறிந்துள்ளீர்கள் போருக்கு மட்டுமே சிங்களம் அரசியலுக்கு நம்ம  சில்லறைகளே போதும்  சிங்களம் தேவை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் இவர்களுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்படவில்லை. அதனையும் இவர்களுக்கு வழங்கி இருந்தால் அதனை வைத்து என்ன பாடு படுத்தி இருப்பார்கள். (இப்படி தன்னை சந்தித்த ஒருவரிடம் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்து இருக்கின்றார்.)

எனது கேள்வி இதுதான். கடந்த காலப் போரில் நலிவடைந்த மக்களுக்கு உதவி புரிய வந்தவர்கள் எப்படித்தான் மக்களின் பணத்தினை கையாட மனம் வந்ததோ???

விக்கினேஸ்வரன் தனக்கு கிடைத்த பதவியினை வைத்து வட மாகாண மக்களுக்கு எவ்வளவோ நல்ல திட்டங்களை கொண்டு வந்து இருக்கலாம். இலங்கையின் மத்திய அரசு அமைக்க இருந்த தொழிற்சாலைகளுக்கு சரியான பதிலை வழங்காமல் இழுத்தடித்த காரணத்தினால் அந்த தொழில்துறைகளை அனுராதபுரத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் வழங்கினார்கள்.

இதே போன்று பல உலக நாடுகள் மற்றும் உதவி வழங்கும் நிறுவனங்கள் தாமாக முன்வந்து வழங்கிய உதவிகளுக்கும் சரியான பதிலை வழங்காமல் இழுத்து அடித்து உள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் பிள்ளையான் தற்போதைய கிழக்கு மாகாண சபை முதல்வர் ஆற்றிய பணிகளில் 15 சதவீதத்தினைக் கூட விக்கினேஸ்வரன் செய்யவில்லை என்பதுதான் உண்மையான கதை. 

மற்றும்படி தற்போதைய நிலையில் ஊழல் அமைச்சர்களை நீக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nirmalan said:

இலங்கையின் மத்திய அரசு அமைக்க இருந்த தொழிற்சாலைகளுக்கு சரியான பதிலை வழங்காமல் இழுத்தடித்த காரணத்தினால் அந்த தொழில்துறைகளை அனுராதபுரத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் வழங்கினார்கள்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் பிள்ளையான் தற்போதைய கிழக்கு மாகாண சபை முதல்வர் ஆற்றிய பணிகளில் 15 சதவீதத்தினைக் கூட விக்கினேஸ்வரன் செய்யவில்லை என்பதுதான் உண்மையான கதை. 

மற்றும்படி தற்போதைய நிலையில் ஊழல் அமைச்சர்களை நீக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களின் பின்னால், ஆபத்தான வலைகள் இருந்தன என்பதனை அறிவீர்களா? சீனாவுடன் தொடர்பானவைகளை தவிர்க்க, அழுத்தம் வேறு இடத்தில் இருந்து வந்ததையும் கவனிக்க வேண்டுமே.

பிள்ளையான், என்ன செய்தார் கிழக்கில்? மகிந்தர் செய்ததுக்கு தலையாடியதை தவிர.

அங்கே வந்த தொழில்சாலைகளின் பின்னால், வந்த குடியேறல், காணி அபகரிப்பு ஆபத்தினை குறித்து கவலை கொள்ள, பிள்ளையான் என்ன பேரறிவு மிக்கவரா?

சம்பூர் காணியினை, நிலக்கரி தொழில் சாலைக்கு என்று சொல்லி, உரிமையாளரை அகதிகளாக வைத்திருந்தார் மகிந்தர். 

இப்போது மைத்திரியுடன் பேசி, தீர்வு காணப்பட்டது. பிள்ளையான் என்ன செய்தார் அதற்கு? கொழுக்கட்டை தானே வைத்திருந்தார் வாயில். 

*****************

அரசியல் சாசனத்திற்கு முரணானது 

இல்லாத புதுச் சட்டம் சொல்லுறார், பிரக்கிராசியார், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு?

லீவில் போ என்று சொன்னால் தான் பிழை.... லீவை எடுங்கோ எண்டு வேண்டுகோள் விடுப்பதும், லீவு கேட்டால், அனுமதி கொடுப்பதும் சாதாரண விஷயம் தான்.

ஆனால் லீவில் போக மாட்டோம் எண்டது தானே அவையளின்ர நிலை. இதில என்ன சட்டப்பிரச்சினை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nirmalan said:

நல்ல காலம் இவர்களுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்படவில்லை. அதனையும் இவர்களுக்கு வழங்கி இருந்தால் அதனை வைத்து என்ன பாடு படுத்தி இருப்பார்கள். (இப்படி தன்னை சந்தித்த ஒருவரிடம் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்து இருக்கின்றார்.

எனது கேள்வி இதுதான். வருட போரில் நலிவடைந்த மக்களுக்கு உதவி புரிய வந்தவர்கள் எப்படித்தான் மக்களின் பணத்தினை கையாட மனம் வந்ததோ???

விக்கினேஸ்வரன் தனக்கு கிடைத்த பதவியினை வைத்து வட மாகாண மக்களுக்கு எவ்வளவோ நல்ல திட்டங்களை கொண்டு வந்து இருக்கலாம். இலங்கையின் மத்திய அரசு அமைக்க இருந்த தொழிற்சாலைகளுக்கு சரியான பதிலை வழங்காமல் இழுத்தடித்த காரணத்தினால் அந்த தொழில்துறைகளை அனுராதபுரத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் வழங்கினார்கள்.

இதே போன்று பல உலக நாடுகள் மற்றும் உதவி வழங்கும் நிறுவனங்கள் தாமாக முன்வந்து வழங்கிய உதவிகளுக்கும் சரியான பதிலை வழங்காமல் இழுத்து அடித்து உள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் பிள்ளையான் தற்போதைய கிழக்கு மாகாண சபை முதல்வர் ஆற்றிய பணிகளில் 15 சதவீதத்தினைக் கூட விக்கினேஸ்வரன் செய்யவில்லை என்பதுதான் உண்மையான கதை. 

மற்றும்படி தற்போதைய நிலையில் ஊழல் அமைச்சர்களை நீக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பாராட்டுக்கள்.

எனக்கும் விக்கி  ஐயாமீது இந்த வருத்தம் உண்டு

ஆனால்  அவரால் ஏன்  முடியவில்லை என்பதை  அவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் போது தான் சொல்வார் என  நினைக்கின்றேன்

பார்க்கலாம்

மற்றும்படி  

மக்கள்  பிரதிநிதிகள்  தவறாக நடந்தால் இது போன்ற  நேரடி  மற்றும்  மக்கள் முன்னான திறந்த நடவடிக்கை

உலகத்துக்கே எடுத்துக்காட்டு

அதில்  அவரது நீதவான் அனுபவம் எமக்கு பெருமை  சேர்த்திருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களின் பின்னால், ஆபத்தான வலைகள் இருந்தன என்பதனை அறிவீர்களா? சீனாவுடன் தொடர்பானவைகளை தவிர்க்க, அழுத்தம் வேறு இடத்தில் இருந்து வந்ததையும் கவனிக்க வேண்டுமே.

பிள்ளையான், என்ன செய்தார் கிழக்கில்? மகிந்தர் செய்ததுக்கு தலையாடியதை தவிர.

அங்கே வந்த தொழில்சாலைகளின் பின்னால், வந்த குடியேறல், காணி அபகரிப்பு ஆபத்தினை குறித்து கவலை கொள்ள, பிள்ளையான் என்ன பேரறிவு மிக்கவரா?

சம்பூர் காணியினை, நிலக்கரி தொழில் சாலைக்கு என்று சொல்லி, உரிமையாளரை அகதிகளாக வைத்திருந்தார் மகிந்தர். 

இப்போது மைத்திரியுடன் பேசி, தீர்வு காணப்பட்டது. பிள்ளையான் என்ன செய்தார் அதற்கு? கொழுக்கட்டை தானே வைத்திருந்தார் வாயில். 

*****************

அரசியல் சாசனத்திற்கு முரணானது 

இல்லாத புதுச் சட்டம் சொல்லுறார், பிரக்கிராசியார், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு?

லீவில் போ என்று சொன்னால் தான் பிழை.... லீவை எடுங்கோ எண்டு வேண்டுகோள் விடுப்பதும், லீவு கேட்டால், அனுமதி கொடுப்பதும் சாதாரண விஷயம் தான்.

ஆனால் லீவில் போக மாட்டோம் எண்டது தானே அவையளின்ர நிலை. இதில என்ன சட்டப்பிரச்சினை.

 

ஏன் நாதமுனி, பேரறறி படைத்தவர்களா மக்களுக்கு ஏதோ செய்யோனும்?...கணக்க கதைக்கத் தேவையில்லை சுருக்கமாய் ஒரு விசயத்தை சொல்றேன் பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது கிழக்கில் முஸ்லீம்களது குடியேற்றம் அத்து மீறியதா?

மகிந்தா கொண்டு வந்த திட்டமென்டால் என்ன? மைத்திரி கொண்டு வந்த திட்டமாய் இருந்தால் என்ன?...திட்டம் நடைமுறைக்கு,மக்களுக்கு எது தேவையோ அதை சரியான நேரத்தில் செய்தார்...சீ.வியை மாதிரி ஒன்றுமே செய்யாமல் இருக்கேல்லtw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தமிழகத்தில் கூட சட்டசபையில் சொல்வதைத்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் செய்வார்கள்.  கேட்பார்கள்

கிந்தியாவினது அரைகுறை சமஸ்டிமுறையிலான ஆட்சிமுறையிலே   பஞ்சாயத்து  கிராமம்  நகரம் மாநகரம் சட்டமன்றம் நாடாளுமன்றம் என்ற படிமுறைவளர்ச்சியூடாக நாடாளுமன்றம் செல்லும் ஒருவருக்குத் தனது பணியெல்லை அதிகார எல்லை தெரிந்திருக்கும். ஈழத்தீவிலே தலைகீழ். நாமிப்போதுதான்  நாடாளுமன்றுக்கு அடுத்த நிலையலகை தேர்தலூடாகக் கண்டிருக்கிறோம். நாடாளுமன்றிலே இருப்பவர்களுக்கு இவர்கள் யார்? எம்மைவிடப் பெரியவர்களா? என்ற பார்வையும் உண்டு. அப்படியானதொருநிலையில்  இவர்களது கருத்தை மத்தியில் உரைப்பார்களென்று எதிர்பார்க்க முடியாது. அப்படியொரு ஆர்வமிருந்திருந்தால் வடமாகாணசபையிலே கொண்டுவந்த முன்மொழிவுகளை (நிறைவேற்றச் செய்ய முடியாவிட்டாலும்) நாடாளுமன்றிலே குறைந்தபட்ச வாய்மொழிமூலமான முன்மொழிவாக முன்வைத்திருப்பின் அதனை நாடாளுமன்றப்பத்திரத்திலாவது பதியப்பட்டிருக்கும். பின்னாளில் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்பட்டநிலைபற்றிய பதிவாகவாவது இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

 

ஏன் நாதமுனி, பேரறறி படைத்தவர்களா மக்களுக்கு ஏதோ செய்யோனும்?...கணக்க கதைக்கத் தேவையில்லை சுருக்கமாய் ஒரு விசயத்தை சொல்றேன் பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது கிழக்கில் முஸ்லீம்களது குடியேற்றம் அத்து மீறியதா?

கிழக்கில், காணியை காசில்லாதவன் விக்கிறான், உள்ளவன் வாங்குறான்.

இதுதான் கொள்ளுப்பிட்டி முதல் பாணந்துறை வரை கதை. தமிழர்கள் வாங்கும்போது சரி,  இஸ்லாமியர் வாங்கும் போது தவறு என்று சொல்ல முடியாது.

பிள்ளையான் காசை வாங்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருந்தார். கிடைத்த காசை இங்கே croydon பக்கமாக அனுப்பினார். இப்ப அவர் உள்ள... அவரது கைத்தடி, பாடிக் கொண்டு திரியுறார்.

மேலும் விக்கியர் செய்வது எல்லாம் சரி என்று சொல்லவில்லை. ஆனால், சுமந்திரன் கோஸ்ட்டி போட்டு உடைத்திருக்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

கிழக்கில், காணியை காசில்லாதவன் விக்கிறான், உள்ளவன் வாங்குறான்.

இதுதான் கொள்ளுப்பிட்டி முதல் பாணந்துறை வரை கதை. தமிழர்கள் வாங்கும்போது சரி,  இஸ்லாமியர் வாங்கும் போது தவறு என்று சொல்ல முடியாது.

பிள்ளையான் காசை வாங்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருந்தார். கிடைத்த காசை இங்கே croydon பக்கமாக அனுப்பினார். இப்ப அவர் உள்ள... அவரது கைத்தடி, பாடிக் கொண்டு திரியுறார்.

மேலும் விக்கியர் செய்வது எல்லாம் சரி என்று சொல்லவில்லை. ஆனால், சுமந்திரன் கோஸ்ட்டி போட்டு உடைத்திருக்க தேவையில்லை.

நீ செய்யிறதை செய் என்றுன்றுட்டு வாயை மூடிக் கொண்டு பார்த்து கொண்டு இருக்க வேண்டும் என சொல்கிறீர்கள்

பிள்ளையான் சுத்தமானவர்,லஞ்சமே வாங்காதவர் என்டு நான் சொல்லேல்ல...அவர் லஞ்சம் வாங்கினாலும் தன்ட மக்களுக்கு ஏதோ நல்லதும் செய்தார்.

பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது மூனாக்களிட்ட காசு இல்லையா?....அந்த நேரம் ஏன் அவர்கள் வாங்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நீ செய்யிறதை செய் என்றுன்றுட்டு வாயை மூடிக் கொண்டு பார்த்து கொண்டு இருக்க வேண்டும் என சொல்கிறீர்கள்

நான் தனிப்படட ரீதியாக ஒருவரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் பிள்ளையானுடன் ஒப்பீடு தவறு என்பேன்.

நாமும் கணக்க கதைக்க வேண்டியதில்லை. 

அங்கே மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் கவனிப்போம்.... தெளிவு பிறக்கும்.

கொழும்பு ஆங்கில, சிங்கள பத்திரிகைகள் எல்லாம், தனது அமைசர்கள் மீதே ஊழல் விசாரணை வைத்து, பதவி நீக்க வைத்தமை, இலங்கை சரித்திரத்திலேயே இல்லையே என்கின்றனர் ஆச்சரியத்துடன்.  மத்திய அரசுக்கும் ஏனைய 8 மாகாணங்களுக்கும் ஒரு படிப்பினை என்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நான் தனிப்படட ரீதியாக ஒருவரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் பிள்ளையானுடன் ஒப்பீடு தவறு என்பேன்.

நாமும் கணக்க கதைக்க வேண்டியதில்லை. 

அங்கே மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் கவனிப்போம்.... தெளிவு பிறக்கும்.

கொழும்பு ஆங்கில, சிங்கள பத்திரிகைகள் எல்லாம், தனது அமைசர்கள் மீதே ஊழல் விசாரணை வைத்து, பதவி நீக்க வைத்தமை, இலங்கை சரித்திரத்திலேயே இல்லையே என்கின்றனர் ஆச்சரியத்துடன்.  மத்திய அரசுக்கும் ஏனைய 8 மாகாணங்களுக்கும் ஒரு படிப்பினை என்கின்றனர்.

சீவி ஒரு முன்னாள் நீதிபதி...அவருக்கு விசாரனைகள்,கண் துடைப்பு,சட்டத்தில் உள்ள ஓட்டைகள் எல்லாம் அத்துப் படி...தன்ட பதவியையும்,பேரையும் எப்படி தக்க வைத்துக் கொள்கிறது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

சீவிக்கு எதிராக எழுதுபதால் நான் சுமத்திரனுக்கோ அல்லது கூட்டமைப்புக்கோ சப்போட் என்று நினைக்க வேண்டாம்...இரண்டு பக்கமும் பச்சைக் கள்ளன்கள் என்ன ஒன்று சுமத்திரன் வகையாறாக்கள் தாங்கள் கள்ளன் என்று வெளிப்படையாய் காட்டுகிறார்கள்.சீவி விபூதியை பூசிக் கொண்டு நடிக்கிறார்...அவ்வளவு தான் வித்தியாசம்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

சீவி ஒரு முன்னாள் நீதிபதி...அவருக்கு விசாரனைகள்,கண் துடைப்பு,சட்டத்தில் உள்ள ஓட்டைகள் எல்லாம் அத்துப் படி...தன்ட பதவியையும்,பேரையும் எப்படி தக்க வைத்துக் கொள்கிறது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

சீவிக்கு எதிராக எழுதுபதால் நான் சுமத்திரனுக்கோ அல்லது கூட்டமைப்புக்கோ சப்போட் என்று நினைக்க வேண்டாம்...இரண்டு பக்கமும் பச்சைக் கள்ளன்கள் என்ன ஒன்று சுமத்திரன் வகையாறாக்கள் தாங்கள் கள்ளன் என்று வெளிப்படையாய் காட்டுகிறார்கள்.சீவி விபூதியை பூசிக் கொண்டு நடிக்கிறார்...அவ்வளவு தான் வித்தியாசம்

கடையேற வழியில்லை எண்டுறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல்.. கப்பம்.. கடத்தல்.. காட்டிக்கொடுப்பு.. பாலியல் துஸ்பிரயோகம்..என்று காலம் கடத்திய ஒட்டுக்குழுக்களை எல்லாம்.. அதன் தலைவர்களை எல்லாம்.. கூட்டமைப்புக்குள் கொண்டு வந்து.. கூட்டமைப்பின் அடிப்படை நோக்கங்களை சிதைத்து.. தனது சுயநலத் தேவைகளுக்கு கூட்டமைப்பை பயன்படுத்தி.. சிங்கள விசுவாசத்தை தக்க வைச்சுக் கொள்வதன் மூலம்.. அர்ப்ப சலுகைகளோடு தங்கள் சுபபோகத்தை தக்க வைக்கலாம் என்ற சம் சும் மாவை கும்பலின்.. செயற்பாடுகள் தான்.. இன்று வடக்கு கிழக்கு மாகாண சபைகள்.. இலக்கின்றி போய்க் கொண்டிருக்க முக்கிய காரணம்.

கொடுக்கப்பட்ட குறைந்த பட்ச அதிகாரத்தையும் புடுங்கும் சிங்கள ஆளுனர்களின் கீழான இந்த மாகாண சபைகள்.. என்பது அர்த்தமற்றவை என்பதை சொல்ல வேண்டிய நேரத்தில்.. அதிலும் ஊழல்.. பாலியல் துஸ்பிரயோகம்,, மக்கள் அக்கறை இன்மை.. என்று ஒட்டுக்குழு தன்மை நன்கு உள்வாங்கப்பட்டுள்ளமை.. சம் சும் மாவை கும்பலுக்கு.. வசதியாக அமைந்துள்ளது.. தமிழ் மக்களின் கொஞ்ச நெஞ்சத்தையும் தாரை வார்த்து தம் பிழைப்பை ஓட்ட.

இதில் வேடிக்கை என்ன வென்றால்.. மைத்திரியை கூப்பிட்டு மகளுக்கு பேர்த்டே கேக் வெட்டிய உதயனும்.. முழு ஊழல் வாதியான..  ஒட்டுக்குழு குத்தியரின் ஊடகமும்..  தாம் என்னவோ.. சுத்தமானவை என்ற வகையில்.. குத்தி முறிவது தான். 

இந்த உள்வீட்டு விவகாரத்தில்.. வீட்டுத்தலைவர் விக்கி ஐயா தான் முடிவெடுக்க வேண்டும்.

அடுத்தவர்கள் தயவுசெய்து ஒதுங்கி இருப்பது உங்களுக்கும்.. இனத்துக்கும் நல்லது. முடிந்தால் அதை செய்யுங்கள். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போதைய கால கட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வுடன் இருப்பவர்கள் மாற்று இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் என்பதனை அனைவரும் நினைவில் வைத்து இருங்கள்.

தமிழரசுக் கட்சியானது மிதவாதப் போக்கிலேயே தொடர்ந்தும் பயணிக்க விரும்புகின்றது. அவர்களை யார் வந்தாலும் மாற்ற முடியாது.

கடந்த காலங்களில் அனைத்து இயக்கங்களும் தமது மக்களுக்கும் போராளிகளுக்கும் தவறு இழைத்து இருக்கின்றன. அதனை அவர்களும் ஒத்துக்கொண்டதோடு, வருத்தமும் தெரிவித்து இருக்கின்றனர்.

தற்போதைய பிரச்சினையான காலத்தில் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு வழங்குபவர்களைப் பார்த்தீர்களானால் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகிய கட்சிகளே. தமிழ் மக்கள் பேரவைக்குள் இருப்பவர்களும் இவர்களே.

உதாரணத்துக்கு கடந்த முறை தேர்தலின் போது தமது இளைஞர் அணிப் பொறுப்பாளரான கஜதீபனுக்கு தமிழரசுக் கட்சி ஆசனம் வழங்கவில்லை. இதே இடத்தில் புளொட் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தை கஜதீபனுக்கு வழங்கியது மட்டுமல்லாது அவருக்காக பிரச்சாரத்தினை மேற்கொண்டு வெற்றியும் பெற வைத்து உள்ளது. 

தமது கட்சியைச் சேர்ந்த கஜதீபனுக்கு ஒரு சல்லிக்காசு கூட தமிழரசுக் கட்சி வழங்கவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது.

சயந்தன் குழுவோடு இணைந்து விக்கினேஸ்வரனுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கைகளிலும் கஜதீபன் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புளொட்டில் வேறு சரியான நபர் இல்லாத காரணத்தினால் கஜதீபனுக்கு அவர்கள் தமது ஆசனத்தினை வழங்கினார்கள் என்று இங்கே சிலர் வாதம் புரியலாம். 

தனது கட்சி தனக்கு இழைத்த அநீதியால் மனம் வெந்து அரசியலை விட்டு ஒதுங்க இருந்த சமயத்தில் நல்லதொரு அரசியல் பேச்சாளரை தமிழர் தரப்பு இழக்கக் கூடாது என்பதற்காகத்தான் கஜதீபனுக்கு தமது ஆசனத்தினை புளொட் வழங்கி இருந்தனர்.

இந்த சயந்தன் சுமந்திரன் பின்னால் வால் பிடிப்பதனைத் தவிர வேறு எதுவும் அந்த மக்களுக்கு செய்ததாக நினைவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.