Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழல்வாதிகளைக் காப்பாற்றியது விக்கியா? தமிழரசுக் கட்சியா?

Featured Replies

ஊழல்வாதிகளைக் காப்பாற்றியது விக்கியா? தமிழரசுக் கட்சியா?

 
ஊழல்வாதிகளைக் காப்பாற்றியது விக்கியா? தமிழரசுக் கட்சியா?
 

உணர்ச்­சிக் கோசங்­க­ளின் முன்­பாக உண் மை­கள் ஊமை­யாகித்­தான்போகும். விட­யங்­கள் சூடா­றிய பின்­னர், அதை அலசி ஆராய்ந்­தால் அமுங்­கிப் போன உண்­மை­களை அறிந்து கொள்ள முடி­யும். இப்­ப­டித்­தான் வடக்கு மாகாண சபை விவ­கா­ரத்­தை­ யும் நோக்க வேண்­டி­யுள்­ளது.

ஐங்­க­ர­நே­ச­னுக்­காக
வாதா­டினார் விக்கி
வடக்கு மாகாண சபை­யில் ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்டு அமைச்­சர் ஐங்­க­ர­நே­சன் மீது­தான் சுமத்­தப்­பட்­டது. இவர் மீது விசா­ரணை நடத்த வேண் டும் என்ற பிரே­ர­ணை­யும் மாகா­ண­ச­பை­யில் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்­தப் பிரே­ரணை மீதான அமர்வு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும்­போது சபை­யின் இடை­ந­டு­வி­லி­ருந்து வெளி­யே­றி­னார் வடக்கு முதல்­வர் விக்­னேஸ் வ­ரன். இது முதல்­வ­ரின் முதல் தவ­றா­கும்.

மறு­நாள் முழங்­கா­வி­லில் நடந்த பொது நிகழ்­வில், அமைச் சர் ஐங்­க­ர­நே­சன் பனங்­காட்டு நரி, பொறாமை கொண்ட உறுப்­பி­னர்­கள் சில­ரின் சல­ச­லப்பு அஞ்ச மாட்­டார் என்று, ஐங்­க­ர­நே­ச­னுக்கு நற்­சான்­றுப் பத்­தி­ரம் வழங்­கி­னார் வடக்கு முதல்­வர்.

ஒரு­வர் மீது குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­ப­டு ­வ­தால் மாத்­தி­ரம் அவர் குற்­ற­வா­ளி­யாகி விட­மாட்­டார் என்ற நீதித் தத்­து­வத்­தை­யும் நீதி­ய­ர­ச­ராக இருந்து விக்கி உப­தே­சித்­தார்.

விட­யங்­கள் இதன் பின்­னர் நடந்­தது. நாடா­ளு­மன்ற மற்­றும் மாகா­ண­சபை சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு அமை­வாக விசா­ர­ணைக் குழு அமைக்க வேண்­டும் என்ற ஆளும் கட்­சி­யின் அழுத்­தங்­க­ளைப் புறந்­தள்­ளிய முத­ல­மைச்­சர், தனக்கு அறிக்­கை­யி­டு­வ­தற்­காக வெளி­ந­பர்­க­ளைக் கொண்ட விசா­ர­ணைக் குழுவை தானே நிய­மித்­தார். விசா­ர­ணைக் குழு உறுப்­பி­னர்­க­ளை­யும் தானே தேடிப் பிடித்து நிய­மித்­தார்.

குற்­ற­வா­ளி­யா­கிய
ஐங்­க­ர­நே­சன்
விசா­ர­ணை­யும் முடிந்­தது. அறிக்­கை­யும் வெளி­வந்­தது. வடக்கு முத­ல­மைச்­சர் எவ­ரைக் காப்­பாற்­றும் காப்­ப­ர­ணாக நின்­றாரோ, அந்த அமைச்­சர் குற்­ற­வாளி என்­றும் அவ­ரைப் பதவி நீக்­கு­ மா­றும் முத­ல­மைச்­சர் நிய­மித்த விசா­ர­ணைக் குழு பரிந்­து­ரைத்தது. இங்கே ஊழல்­வா­தி­யைக் காப்­பாற்­றி­யது விக்­கியா ? தமி­ழ­ர­சுக் கட்­சியா ?
விசா­ர­ணைக் குழு தனது பரிந்­து­ரையைத் தெளி­வாக முன்­வைத்­தி­ருந்­தது. கல்வி அமைச் சர் த.குரு­கு­ல­ராசா மற்­றும் அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் இரு­வ­ரை­யும் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. ஏனைய இரு அமைச்­சர்­க­ளை­யும் குற்­றச் சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­விப்­ப­தா­ கக் கூறி­யி­ ருந்­தது.

பொய்­யு­ரைத்தார் முதல்­வர்
விடு­விக்­கப்­பட்ட ஏனைய இரு அமைச்­சர்­கள் மீதும் முறைப்­பா­டு­க­ளைக் கொடுத்த முறைப்­பாட்­டா­ளர்­கள் விசா­ர­ ணைக்­குச் செல்­ல­வில்லை. அவர்­கள் மீது விசா­ரணை நடக்­க­வில்லை.

அவர்­கள் அத­னால்­தான் விடு­விக்­கப்­பட்டு விட்­டார்­கள் என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கூறி­யி­ருந்­தார். உண்­மை­யில் விடு­விக்­கப் பட்ட இரு அமைச்­சர்­கள் மீதும் விசா­ர­ணை­கள் நடந்­தது. முறைப்­பாட் ட­ாளர்­கள் அவர்­கள் மீது சுமத்­திய குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில், விசா­ர­ணைக் குழு இரு அமைச்­சர்­க­ளை­யும் குறுக்கு விசா­ரணை செய்­தது. அதன் பின்­னர்­தான் விடு­ வித்­தது. இந்த உண்­மையை மறைத்து ஏன் மக்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் பொய்­யு­ரைத்­தார். இந்­தப் பொய்­யு­ரை­யூ­டாக ஊழல்­வா­தி­க­ளைக் காப்­பாற்ற முனைந்­தது விக்­கியா?. தமி­ழ­ர­சுக் கட்­சியா?.

ஒரு வழக்கு: இரு தீர்ப்பு
நீதி­ய­ர­ச­ராக இருந்­த­வர் விக்­னேஸ்­வ­ரன். ஒரு வழக்­கில் இரு­வேறு தீர்ப்­புக்­கள் வழங்­கி புதிய சாத­னை­யை­யும் படைத்­துள்­ளார் இந்த முன்­னாள் நீதி­ய­ர­சர். நீதிக் கோட்­பா­டு­களை சவக்­கு­ழிக்­குள் வெட்­டிப் புதைத்து அவர் வழங்­கிய தீர்ப்­புக் கள்­தான் பிரச்­சினை கிளம்­பக் கார­ண­மா­கி­ன.

விசா­ரணை அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் முத­ல­மைச்­சர் தீர்ப்பு வழங்­கு­வ­தனால், இரு அமைச்­சர்­க­ளைப் பதவி நீக்க வேண்­டும். ஏனைய இரு­வ­ரை­யும் பத­வி­யில் தொடர அனு­ம­திக்க வேண்­டும். ஆனால் இங்கே முத­ல­மைச்­சர், இரு அமைச்­சர்­க­ளைப் பதவி நீக்­கு­கின்­றார். ஏனைய இரு அமைச்­சர்­க­ளை­யும் விசா­ர­ணைக்­காக கட்­டாய விடுப்­பில் அனுப்­பு­கின்­றார்.

விசா­ரணை அறிக்­கை­யின் மீது முத­ல­மைச்­ச­ருக்கு நம்­பிக்­கை­யில்­லை­யா­யின், மீள் விசா­ர­ ணைக்­காக இரு அமைச்­சர்­க­ளை­யும் கட்­டாய விடுப்­பில் அனுப்­பு­வ­தில் தவ­றில்லை. (சட்­டத்­தில் அதற்கு இட­மில்லை என்­பது வேறு பிரச்­சினை) அதே­வேளை, இரு அமைச் சர்­க­ளை­யும் பதவி நீக்­கி­யி­ருக்க முடி­யாது. ஏனெ­னில் நம்­பிக்­கை­யில்­லாத விசா­ரணை அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அவர்­க­ளைப் பதவி நீக்க முடி­யாது.

நீதி­யைக் கரைத்­துக் குடித்த முன்­னாள் நீதி­ய­ர­சர், இவற்­றை­யெல்­லாம் புறந்­தள்ளி ஒரு வழக்­குக்கு எப்­படி இரு வேறு தீர்ப்­புக்­கள் வழங்க முடி­யும். இத­னைச் செய்­தது ஏன் ? இத­னூ­டாக ஊழல்­வா­தி­க­ளைக் காப்­பாற்ற முனைந்­தது விக்­கியா ? தமி­ழ­ர­சுக் கட்­சியா ?

கட்­சித் தலைமை
சொன்­னது என்ன ?
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சேனா­தி­ரா­சா­வும், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு தெட்­டத் தெளி­வா­கவே, குழந்­தப் பிள்­ளைக்­குச் சொல்­வது போல் விட­யங்­க­ளைச் சொல்­லி­யி­ருந்­தார்­கள்.

விசா­ரணை அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் நீங்­கள் என்ன முடி­வும் எடுக்­க­லாம். இதன் அர்த்­தம் என்ன ? ஊழல்­வா­தி­கள் மீது நீங்­கள் நட­வ­டிக்கை எடுக்­க­லாம். ஆனால், விசா­ரணை அறிக்கையில் நிர­ப­ரா­தி­கள் என்று கூறப்பட்டவர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது. இதைத்­தான் அவர்­கள் விக்­கிக்­குச் சொன்­னார்­கள். மொத்தத்தில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி ஊழல்­வா­தி­க­ளைக் காப்­பாற்ற விக்­கி­யி­டம் கோரிக்கை விடுக்கவில்லை.

விக்கி செய்­தது என்ன?
விசா­ரணை அறிக்­கைக்கு முர­ணாக, நான்கு அமைச்­சர்­கள் மீதும் நட­வ­டிக்கை எடுத்­தார். குற்­றம் சுமத்­தப்­பட்ட இரு அமைச்­சர்­க­ளைப் பத­வி­க­ளைத் தியா­கம் செய்­யு­மாறு கேட்­டார்.

குற்­ற­வா­ளி­யைப் பார்த்து நீதி­பதி இப்­ப­டியா கேட்­பது ? குற்­றம்­சாட்­டப்­ப­டாத இரு அமைச்­சர்­க­ளை­யும் கட்­டாய விடு­விப்­பில் இருக்­கு­மாறு அவர்­கள் மீதும், குற்­ற­வா­ளி­ க­ளைப் போன்று விக்கி நட­வ­டிக்கை எடுத்­தார்.

விக்கி ஏன் இப்­ப­டிச் செய்­தார் ? நான்கு அமைச்­சர்­க­ளை­யும் குற்­ற­வா­ளி­ க­ளைப் போன்று நடத்­தி­யது ஏன் ? உண்­மைக் குற்­ற­வா­ளி ­க­ளைத் தப்­பிக்க வைப்­ப­தற்­காக நான்கு பேரை­யுமே குற்­ற­வா­ளி­ க­ளைப் போன்று இனங்­காட்­டி­னார் விக்கி. அப்­ப­டி­யா­னால் ஊழல்­வா­தி­க­ளைக் காப்­பாற்­றி­யது விக்­கியா?. தமி­ழ­ர­சுக் கட்­சியா ?

உணர்ச்­சி­க­ளைக் களைந்து இந்த விட­யங்­களை மூளைக்கு ஏற்றி கொஞ்­சம் ஆறு­த­லா­கச் சிந்­தித்­தால், யார் தவறு விட்­டார்­கள்?. ஏன் அந்­தத் தவறை விட்­டார்­கள் ? ஊழல்­வா­தி­க­ளைக் காப்­பாற்­றி­ய­வர்­க­ளைப் பாது­காத்து தமி­ழ­ர­சுக் கட்சி மீது ஏன் அவ­தூ­றைச் சுமத்­தி­னார்­கள்?. இத­னூ­டாக அவர்­க­ளுக்குக் கிடைத்த அர­சி­யல் இலா­பம் என்ன?. இந்­தக் கேள்­விக்­கான பதில்­கள் வந்து சேரும்.

– தி.ராஜ்

http://uthayandaily.com/story/7275.html

தமிழரசுக்கட்சி என்கிற கொள்ளைக்காரக் கும்பலின் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்ட போது அவர்கள் ஐகரநேசன் மீது மட்டுமே குற்றம்சாட்டி தப்ப முயன்றபோது, முறையான விசாரணைக் குழுவை அமைத்தவர் முதலமைச்சர்!

அவர் எந்தவொரு அமைச்சரும் ஊழலில் ஈடுபடுவதை விரும்பவில்லை!

விசாரணைக்குழு அறிக்கை வெளிவந்ததும் சம்பந்தர் அதை வெளியிட வேண்டாம் என்று விக்னேஸ்வரனிடம் மன்றாடி ஊழல் செய்த தமிழரசுகட்சி உறுபினர்களை காப்பாற்ற முனைந்தபோதே பிரச்சினை உருவானது.

இப்போது சம்பந்தர் சுமந்திரன் ஸ்ரீதரன் அனைவரும் ஆடும் நாடகம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே!

சரவணபவனின் உதயன் ஊழல் பெருச்சாளிகளின் குப்பைகளை கொட்டும் நாளிதழாக மாறியுள்ளது!

தமிழ் மக்கள் உதயன் பத்திரிகையை புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தும் கூட குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்களுடன் குற்றஞ்சாட்டுகளை அடிப்படையாக வைத்தேனும் எந்தவித காழ்ப்புணர்ச்சியில்லாமல் முன்போலவே தொடர்ந்து அதே நம்பிக்கையுடன் பழகிய முதல்வர் இங்கு போற்றப்படவேண்டியவர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முதல்வருக்கோ அல்லது விசாரணைக் குழுவுக்கோ அதிகாரமில்லை. முதல்வர் ஓய்வுபெற்ற நீதிபதி அவர் குற்றம் சுமத்தப்பட்ட நால்வருக்கும் தண்டனை வழங்கிவிட்டார்  என்ற வியாக்கியானத்துடன் அதை இந்த பிரச்சினையில் கொண்டுவந்து  கலந்து விடயத்தை வேறு திசைக்கு திருப்புவதை சிலர் கரிசனையாக செய்வது தெளிவாக தெரிகிறது.  இது வெறும் பித்தலாட்டம்.

ஆரம்ப கட்டமாக  முதல்வருக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். இந்த ஒழுங்கு நடவடிக்கைகளை முதல்வர் குற்றவாளிகளுக்கு வழங்கிய தண்டனை என்று சிலர் பிதற்றுவது மிகுந்த ஆச்சரியம். குற்றவாளிகள் பதவி விலகுவது எவ்விதத்திலும் தண்டனையாகாது. ஒரு நீதிமன்றத்தில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களை  சிறைக்கு அனுப்புவது தான் அவர்கள் செய்த குற்றங்களுக்கு உண்மையான தண்டனை. விசாரணை  குழு தமது விசாரணையின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் இருவரை குற்றவாளிகளாகவும்  மீதி இருவரை குற்றமற்றவராகவும் கண்டிருக்கிறார்கள். குற்றம் செய்தார்கள் என்றோ அல்லது குற்றம் செய்யப்படவில்லை என்றோ இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

குற்றம் கண்டறியப்பட்ட  இருவர் பதவிவிலகியதும் குற்றம் கண்டறியப்படாத  இருவர்  கட்டாய விடுமுறையில் செல்வதும் ஒழுங்காற்று நடவடிக்கைகள் என்றே பார்க்கப்படவேண்டும். நீதிமன்றத்திற்கு செல்லும்போது இந்த நிலமை மாற்றப்படலாம் ஒழுங்காற்று நடவடிக்கையில் பிழை நடந்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாகாண சபை நஸ்டஈடு வழங்கவேண்டிய நிலையும் அல்லது அவர்கள் பதவியில் மீண்டும்.தொடரும் நிலையும் வரலாம்.

ஆரம்பகாலகட்டத்தில் சம்பந்தனோ சுமந்திரனோ எழுத்துமூல அறிக்கை அல்லது கடிதங்களை அனுப்பியிருந்ததாக தெரியவில்லை. அப்போது முதல்வருக்கு கூறப்பட்ட விடயங்கள் எழுத்துமூலம் இருக்கவும் வாய்ப்பில்லை. இப்போது ஒருவொருக்கொருவர் செய்திகளை கடிதங்களில் அனுப்பிக்கொண்டிருப்பதாக  தெரிகிறது. தொலைபேசியில் கதைக்கும்போது எழுத்துமூலம் அதை ஆவணப்படுத்துவதும் கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் ஊழல் செய்யவில்லையெனில் எழுத்து மூல உத்தரவாதம் கொடுப்பதில் என்ன பிரச்சினை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

ஊழல்வாதிகளைக் காப்பாற்றியது விக்கியா? தமிழரசுக் கட்சியா?

 
ஊழல்வாதிகளைக் காப்பாற்றியது விக்கியா? தமிழரசுக் கட்சியா?
 
 

– தி.ராஜ்

http://uthayandaily.com/story/7275.html

இன்றைய நிலையில் தமிழரசுக் கட்சியை  எப்படிக் காப்பாற்றலாம் என்று யாராவது எழுங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாத்தியார் said:

இன்றைய நிலையில் தமிழரசுக் கட்சியை  எப்படிக் காப்பாற்றலாம் என்று யாராவது எழுங்கப்பா

தமிழரசுக்கட்சி ஸ்தாபகரில் ஒருவர் தமிழ் மக்களுக்கு  சொன்ன வசனம் இப்ப அவையளுக்கு தமிழ்மக்கள் சொல்லினம்.....தமிழர்சுக்கட்சியை அந்த ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்....:10_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.