Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலனால் கடத்தப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி பலி : இருவர் கைது, இருவர் வைத்தியசாலையில் - காரணம் வெளியாகியது

Featured Replies

காதலனால் கடத்தப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி பலி : இருவர் கைது, இருவர் வைத்தியசாலையில் - காரணம் வெளியாகியது

 

 

சந்­தி­வெளியில் கடத்­தப்­பட்டு விபத்தில் சிக்கி யுவ­தி மர­ணித்த சம்­பவம் தொடர்­பாக இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சப் இன்ஸ்­பெக்டர் நிரோ ஷன் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

2-55.jpg

வெள்ளிக்­கி­ழமை இரவு ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சந்­தி­வெளி மட்­டக்­க­ளப்பு  கொழும்பு நெடுஞ்­சா­லையில் இடம்­பெற்ற அசம்­பா­வித சம்­ப­வ­மொன்றில் மட்­டக்­க­ளப்பு ஏரிக்­கரை வீதியை சேர்ந்த ஸ்ரீதரன் திவ்­ய­சா­கரி (வயது 19) எனும் யுவதி தலையில் படு­கா­ய­மேற்­பட்டு மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த சமயம் சிகிச்சை பலனின்றி சனிக்­கி­ழமை காலை உயி­ரி­ழந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

1-72.jpg

இச்­சம்­ப­வம்­பற்றி பற்றி பொலிஸார் மேலும் தெரி­விக்­கையில், 

வெள்ளிக்­கி­ழமை இரவு திரு­கோ­ண­மலை திருக்­கோ­ணேஸ்­வரம் கோயி­லுக்குச் சென்­று­விட்டு காரில் திரும்பிக் கொண்­டி­ருக்­கையில் இரவு 10 மணி­ய­ளவில் தேநீர் அருந்­து­வ­தற்­காக சந்­தி­வெளியில் கார் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்தக் காரில் மேற்­படி அசம்­பா­வி­தத்தில் பலி­யான யுவதி, அவரின் தாய் ஷோபனா ஸ்ரீதரன் (வயது 52), யுவ­தியின் பெரி­யப்பா தவ­ராஜா வசந்­த­ரா­ச­பிள்ளை (வயது 66), கார்ச் சார­தி­யான மாணிக்­க­வா­சகர் பகி­தரன் (வயது 35) ஆகியோர் இருந்­துள்­ளனர்.

3-46.jpg

அந்­நேரம் அங்கு திடீ­ரென மோட்டார் சைக்­கிளில் வந்­தி­றங்­கிய இரண்டு இளை­ஞ ர்கள் யுவ­தியை பிடித்து மோட்டார் சைக்கிள் ஆச­னத்தின் நடுவில் ஏற்றிக் கொண்டு அதி­வே­க­மாக பய­ணித்­துள்­ளனர்.

அவ்­வே­ளையில் யுவ­தியின் தாய் மற்றும் பெரிய தந்தை ஆகியோர் தாம் வந்த காரில், யுவ­தியை கடத்திக் கொண்டு அதி­வே­க­மாக செல்லும் மோட்டார் சைக்­கிளை பின்­தொ­டர்ந்­துள்­ளனர்.

இவ்­வே­ளையில் அதி­வே­க­மாகச் சென்று கொண்­டி­ருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி­யதால் விபத்து சம்­ப­வித்­துள்­ளது.

அச்­சம்­ப­வத்தில் கடத்­தப்­பட்ட யுவ­தியும், கடத்தி சென்­ற­தாகக் கூறப்­படும் இரண்டு இளை­ஞர்­களும் பலத்த காய­ம­டைந்­துள்­ளனர்.

 

காய­ம­டைந்த மூவரும் உட­ன­டி­யாக அரு­கி­லுள்ள சந்­தி­வெளி பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர்.

அவ்­வே­ளை­யி­லேயே சிகிச்சை பெற்­று­வந்த யுவதி சிகிச்சை பல­னின்றி சனிக்­கி­ழமை மர­ண­மா­கி­யுள்ளார்.

யுவ­தியைக் கடத்தி சென்­ற­தாகக் கூறப்­படும் காயங்­க­ளுக்­குள்­ளான இளை­ஞர்­க­ளான பால­சிங்கம் சஞ்­ஜீவன் (வயது 20) பிர­தீபன் திவ்­வி­ய­கேஷன் (வயது 20) ஆகியோர் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இதே­வேளை யுவ­தி­யையும் தங்கள் இரு­வ­ரையும் காரில் வந்­த­வர்கள் காரால் மோதியும் அதன் பின்னர் கடு­மை­யாக தாக்­கி­யதன் கார­ண­மா­கவும் தாங்கள் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளா­ன­தாக மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த இளை­ஞர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

அந்த வாக்­கு­மூ­லத்­தின்­படி காரில் வந்த யுவ­தியின் பெரி­யப்­பா­வான வசந்­த­ரா­ச­பிள்ளை மற்றும் கார் சார­தி­யான பகி­தரன் ஆகியோர் கைது செய்­யப்­பட்டு ஏறாவூர் சுற்­றுலா நீதிவான் நீதி­மன்ற பதில் நீதிவான் வினோபா இந்­திரன் முன்­னி­லையில் சனிக்­கி­ழமை ஆஜர் செய்யப்­பட்­ட­போது சந்­தேக நபர்­களை ஜுலை மாதம் 07ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இதே­வேளை யுவ­தியின் உடற் கூற்றுப் பரி­சோ­தனை நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை குரு­ணாகல் பொது வைத்­திய­சாலை சட்ட வைத்­திய அதி­ காரி இலங்­க­ரத்­ன­வினால் குரு­நா­கலில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இத­னி­டையே குறித்த யுவ­திக்கும் இளை­ஞ­னுக்கும் ஏற்­கெ­னவே பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் பரா­ய­ம­டை­யாத வயதில் இருந்து வந்த காதல் தொடர்பு கார­ண­மாக மட்­டக்­க­ளப்பு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்து வழக்கு தொட­ரப்­பட்டு சம­ர­ச­மாக தீர்த்து வைக்­கப்­பட்ட நிலையில் குறித்த யுவ­தியை உயர் கல்­விக்­காக அவ­ரது தாய் இந்­தி­யா­வுக்கு அனுப்பி வைத்­துள்ளார் என்­கின்ற விவ­ரமும் விசா­ர­ணை­களின் போது தெரிய வந்­துள்­ளது.

குறித்த யுவதி சமீப சில நாட்­க­ளுக்கு முன்னர் இலங்கை திரும்­பி­யி­ருந்த நிலை­யி­லேயே மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

அந்த யுவதி இந்­தி­யா­வி­லி­ருக்கும் போதும் தொடர்ந்தும் தனது காதலனுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ள தாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் வழிநடத்தலில் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் நிரோஷன் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் சார்ஜன்ற் ஈ.எல். பதூர்தீன் ஆகியோர் தலை மையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/21238

  • கருத்துக்கள உறவுகள்

வடிவான பெட்டை அநியாயமாய் வாழ்க்கை போயிட்டுதுtw_cry:

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

வடிவான பெட்டை அநியாயமாய் வாழ்க்கை போயிட்டுதுtw_cry:

ஏன் வடிவான ஆட்கள் சாகக் கூடாதோ???? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

ஏன் வடிவான ஆட்கள் சாகக் கூடாதோ???? 

அழகோ,அழகில்லையோ[அழகில்லை என்று நாங்கள் எப்படி தீர்மானிக்கலாம்?] மரணம்,அதுவும் இள வயது அநியாய மரணம் கவலை தானேtw_cry:

இந்திய வன்முறை சினிமா கலாசாரத்தில் ஊறிய சமூகத்தில் இப்படியானவை ஒரு தொடர்கதையாகத் தான் இருக்கும்...., 19 வயதில் காதல் . கடத்தல் , மரணம்......  

வேறொருவருக்கு நிச்சயமான பெண்ணையே காதலித்து திருமணம் முடிக்கும் ஒரு திரைகதையை கொண்ட சினிமாவை பெரு வெற்றியாக்கும் சமூகத்தில் ... என்னததச் சொல்ல ....

ஒரு பெண்ணைக் காதலித்தால் படித்து, ஒரு நல்ல நிலையில் வந்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முய்ற்சிக்க வேண்டும் , அதன் பிறகும் தடைகள் ஏற்பட்டால் மாற்று வழிகளைச் சிந்திக்கலாம் ..... 19 வயதில் கடத்தி திருமணம் செய்தால் குடும்பம் நடாத்த எங்கே போவார்கள் , இப்படி திருமணம் செய்த பலர் பிழைப்புக்கு வழியில்லாமல் இருவரில் ஒருவர் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு போகிறார்கள் இளவயது திருமணம் , குறுகிய கால சேர்ந்திருப்பு , நீண்ட பிரிவு (மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்வதால்) , இள வயதில் தனிமை ..,
இதனால் பல்வேறு சிக்கல்கள்..
 

10866_1498503380_kkkk.jpg

இவரைப் பார்த்தால்  குடும்பம் நடாத்தக் கூடியவராகவா தெரிகிறார் ?

 

10866_1498539169_vcf.jpg

அநியாயமாக ஒரு உயிர்....

ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு துக்ககரமான செய்தி பார்த்தேன்

காதலி மரணம்.
எல்லோரும் அந்த பெற்றோரை திட்டுவதை காணக்கூடியதாக உள்ளது. ஆனால் அது உண்மையன்று. 
இதை சந்தர்ப்பம் சூழ்நிலை சார்ந்து தான் சிந்திக்கணும். 
எவரும் பெற்றோரின் முன்னிலையில் பெண் ஓடிப்போவதை பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள். இது ஒரு தன்மானப்பிரச்சினையாக மாற்றப்படும் போது அங்கு அறிவு அனுபவம் பாசம் வேலை செய்யாது. அந்த மனிதர்கள் ஒருவித வெறிக்குள் சென்று விடுவார்கள். அது தான் இங்கு நடந்தது. பரிதாபச்சாவு.
அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிகள் அடங்க இயற்கையாக ஒரு 20-21 வயதாகிறது. 

இதற்கு எமது சமூகம்தான் பொறுப்பு கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் நடந்த சோக சம்பவம்  அந்த பிள்ளையின் தந்தை இறந்துவிட்டார்  ஏற்கனவே  அந்த        வாலிபருடன் காதல் வயப்பட்டு பின்னர் பிரித்து பிள்ளை இந்தியாவுக்கு அனுப்பி படிப்பிக்க வைக்கப்பட்டது  ஆனால் அவள் தொடபிலே இருந்திருக்கிறாள் அவனுடன் காரணம் போய் படித்து வந்த பிறகு  கல்யாணம் கட்டி தருவதாகவும் சொல்லி இருக்குறார்கள் அவள் ஊர் வந்ததும் அவர்களை சேர விடவில்லை அல்லது வேற மாப்பிள்ளை பார்த்த தாகவும் சொல்கிறார்கள்  ஆனால் அவள் தொடர்பு வைத்திருந்த அனைத்து ஆதாரங்களும் பொலிஸில் உள்ளது 

ஆழ்ந்த இரங்கல்கள் 

மட்டக்களப்பு  நீதிமன்றத்திலிருக்கும் விவாகரத்து பைல்கள் ஆயிரக்கணக்கில் ஆதாரமாக இருக்கிறது காதலித்து ஒரு பிள்ளையை பெற்று விட்டால் காதல் தீர்ந்து போகிறது சிலருக்கு இது காதலாம் வாழணூம் சாகும் வரை அதான் காதல் வாழ்க்கை  அது காதலித்தவளை இழந்தாலும்சரி  காதலித்தவனை இழந்தாலும் சரி சாவதென்றால் நாம் பிறந்ததற்க்கான அர்த்தம் போய்விடும்  ஆனாலும் விரும்பிய வாழ்க்கை ஒன்று அமையுமாக விருந்தால் அதை விட சொர்கம் இல்லை இந்த உலகில்  காதல் கூட ஒரு படிதான் சிலருக்கு சறுக்கிறது சிலருக்கு  அடுத்த படியை காட்டுகிறது 

இதில் பணம் முதல் நிலை இதுவே அவன் கோடிஸ்வரன் என்றால் கூட்டிக்கொண்டு போய் விடுவார்கள்  இப்ப  ஊரில்  லண்டன் ,கனடா , பிரான்ஸ் , சுவிஸ், ஏன் ஐரோப்பிய நாடுகள் என்றால்  எந்த வித கேள்வி இல்லாமல் பொண் கொடுக்குறார்கள் 45ஐ  தாண்டினாலும் அங்க போய் பொண் வாழுதா இல்லை  அழுவுதா என்று தெரியாமல் இங்கே எங்க பொண்ணு  வெளிநாடு  என்று சொல்லி கொண்டு திரியுதுகள் இது பற்றி நிறைய எழுதலாம் ( எல்லாம் நம்ம சனம் நாறிடும்  ) வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சைக்கிளில் கட்த்துவது கஷ்டம். அந்தப் பிள்ளையாக ஏறி போயிருக்கிறது. tw_open_mouth:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, இசைக்கலைஞன் said:

மோட்டார் சைக்கிளில் கட்த்துவது கஷ்டம். அந்தப் பிள்ளையாக ஏறி போயிருக்கிறது. tw_open_mouth:

நீங்கள் அநியாயத்துக்கு இப்படி அப்பாவியா இருக்கிறீங்கள்.
கோணேஸ்வரம் கோவிலுக்கு போன கார் .... இப்போ எங்கு நிற்கிறது என்ற 
டெக்ஸ் மெசேஜ் காருக்கு உள்ளே இருந்துதானே போயிருக்க வேண்டும்? 

18 minutes ago, தனி ஒருவன் said:

மட்டக்களப்பில் நடந்த சோக சம்பவம்  அந்த பிள்ளையின் தந்தை இறந்துவிட்டார்  ஏற்கனவே  அந்த        வாலிபருடன் காதல் வயப்பட்டு பின்னர் பிரித்து பிள்ளை இந்தியாவுக்கு அனுப்பி படிப்பிக்க வைக்கப்பட்டது  ஆனால் அவள் தொடபிலே இருந்திருக்கிறாள் அவனுடன் காரணம் போய் படித்து வந்த பிறகு  கல்யாணம் கட்டி தருவதாகவும் சொல்லி இருக்குறார்கள் அவள் ஊர் வந்ததும் அவர்களை சேர விடவில்லை அல்லது வேற மாப்பிள்ளை பார்த்த தாகவும் சொல்கிறார்கள்  ஆனால் அவள் தொடர்பு வைத்திருந்த அனைத்து ஆதாரங்களும் பொலிஸில் உள்ளது 

ஆழ்ந்த இரங்கல்கள் 

மட்டக்களப்பு  நீதிமன்றத்திலிருக்கும் விவாகரத்து பைல்கள் ஆயிரக்கணக்கில் ஆதாரமாக இருக்கிறது காதலித்து ஒரு பிள்ளையை பெற்று விட்டால் காதல் தீர்ந்து போகிறது சிலருக்கு இது காதலாம் வாழணூம் சாகும் வரை அதான் காதல் வாழ்க்கை  அது காதலித்தவளை இழந்தாலும்சரி  காதலித்தவனை இழந்தாலும் சரி சாவதென்றால் நாம் பிறந்ததற்க்கான அர்த்தம் போய்விடும்  ஆனாலும் விரும்பிய வாழ்க்கை ஒன்று அமையுமாக விருந்தால் அதை விட சொர்கம் இல்லை இந்த உலகில்  காதல் கூட ஒரு படிதான் சிலருக்கு சறுக்கிறது சிலருக்கு  அடுத்த படியை காட்டுகிறது 

இதில் பணம் முதல் நிலை இதுவே அவன் கோடிஸ்வரன் என்றால் கூட்டிக்கொண்டு போய் விடுவார்கள்  இப்ப  ஊரில்  லண்டன் ,கனடா , பிரான்ஸ் , சுவிஸ், ஏன் ஐரோப்பிய நாடுகள் என்றால்  எந்த வித கேள்வி இல்லாமல் பொண் கொடுக்குறார்கள் 45ஐ  தாண்டினாலும் அங்க போய் பொண் வாழுதா இல்லை  அழுவுதா என்று தெரியாமல் இங்கே எங்க பொண்ணு  வெளிநாடு  என்று சொல்லி கொண்டு திரியுதுகள் இது பற்றி நிறைய எழுதலாம் ( எல்லாம் நம்ம சனம் நாறிடும்  ) வேண்டாம் 

என்ன சொல்ல முனிவரே .........

பெற்றோர் ஒன்று நினைக்க .........
பிள்ளைகள் ஒன்றை நினைக்க ........
தெய்வம் (விதி) ஒன்றை நினைக்கிறது. 

விட்டுக்கொடுப்பு 
அடிபணித்தல் 
மரியாதை 
எல்லாம் இதனால்தான் உயிர் வாழ்கிறது.

இப்போதும் பிள்ளை சுகமாக இறந்துவிட்ட்து என்றுதான் நான் சொல்வேன் 
கஸ்ரப்பட்டு வளர்த்த தாயிக்கு இனி வாழ்க்கை பூராக இந்த சோகம் 
வாழ்வை சீரழிக்க போகிறது.
 

மாப்பிளை இன்னுமொரு 2 வருடம் ஏதும் கொஞ்ச தாடி 
வளர விடுவார் .............. சோக பாட்டு கேட்ப்பார்.
பெத்து வளர்த்ததுகளுக்கும் ஒன்றும் பெருசாய் கிழிக்க மாட்ட்டார் 
2 வருடத்த்தில் காமம் தலைக்கு ஏற .......
இன்னொரு பெட்டையுடன் போயிடுவார். 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.battinaatham.com/description.php?art=10866

13 minutes ago, Maruthankerny said:

நீங்கள் அநியாயத்துக்கு இப்படி அப்பாவியா இருக்கிறீங்கள்.
கோணேஸ்வரம் கோவிலுக்கு போன கார் .... இப்போ எங்கு நிற்கிறது என்ற 
டெக்ஸ் மெசேஜ் காருக்கு உள்ளே இருந்துதானே போயிருக்க வேண்டும்? 

 

 

இளம் காதலர்கள் ஓடிச் செல்லும் போது பெண் வீட்டு தரப்பினர் பின் சென்று கொடூர தாக்குதல் ; பெண் மரணம்.

 

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு 10-10.30 மணியளவில் மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் நடைபெற்றது. பெண் தன்னை திருகோணமலைக்கு பார்க்க வருமாறு காதலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்திருக்க காதலன் தனது நண்பனுடன் சென்றுள்ளான். இவர்கள் செல்லும் சமயம் பெண் வீட்டார் திருகோணமலையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். அச்சமயம் காதலன் தனது காதலி வரும் கார் ஐ இனம் கண்டு பின் தொடர்ந்துள்ளான்.

அப்போது தேனீர் குடிப்பதற்காக பெண் வீட்டு தரப்பினர் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். காதலன் பெண்ணை பார்க்க அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெண் திடீரென வாகனத்தை விட்டிறங்கி காதலனுடன் ஏறி இருக்கிறாள். ஏறிய சமயம் காதலனும் அவனுடைய நண்பனும் என்ன செய்வதென்றறியாமல் பெண்ணை மோட்டார் சைக்கிளின் நடுவில் வைத்து வேகமாக சென்றுள்ளனர். இச்சமயம் பிள்ளை வந்த கார் இவர்களை துரத்திக்கொண்டு பின் சென்றுள்ளது. வேகமாய் சென்ற கார் இவர்கள்கள் சென்ற மோட்டர் சைக்கிளில் முதல் தடவை பின் புறத்தில் மோதியுள்ளது. மோதியதில் பின் இருந்த காதலனின் நண்பனுக்கு காலில் அடி பட்டு கால் உடைந்துளது. இவர்கள் இன்னும் வேகமாக செல்ல காரானது மறுபடியும் இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்துக்குள்ளாகிய போது மோட்டார் சைக்கிள் வேகமாக சென்று அருகில் இருந்த பாதசாரிகள் கடவை பலகையில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்த மூவரும் வீசி எறியப்பட்டனர்.

இதன் போது காரை விட்டு இறங்கிய பெண்ணின் பெரியப்பாவும் கார் சாரதியும் காதலனை சரமாரியாக தாக்கி உள்ளனர். பெண்ணை காரில் ஏற்ற முற்பட்ட போது பெண் இயலாது என்று சொல்ல பெண்ணை இளைஞர்கள் அணிந்து வந்த தலைகவசத்தினால் தலையில் பலமாக தாக்குவதை அவளுடைய காதலன் தனது கண்ணால் கண்டுள்ளான்.

அச்சமயம் அவ்விடத்திற்கு விரைந்த அப்பிரதேச வாசிகள் கார் சாரதியையும் பெண்ணின் பெரியப்பாவையும் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் காயமடைந்த மூவரையும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு Ambulance வண்டி மூலம் அனுப்பிய பிறகு காரில் வந்தவரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். அந்த யுவதி இறுதி வரை அவளின் காதலனான சஞ்சீவ் என்ற பெயரை உச்சரித்ததாக ஆம்புலன்ஸ் இல் சென்றவர் கூறினார்.

 

இறுதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் யுவதி அனுமதிக்கப்பட்டு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தாள். அதன் பின்பு பிரேத பரிசோதனைக்காக சடலம் குருணாகல் கொண்டு செல்லப்பட்டு ஞாயிறு வீட்டார் வசம் ஒப்படைக்கப்பட்டது.  பலகாலமாக இருவரும்  காதலித்துள்ளனர் என்பது தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. அவ் யுவதி சில தினங்களுக்கு முன்னமே இந்தியாவில் மேல் படிப்பை ஒரு வருடகாலமாக முடித்து விட்டு மறுபடியும் இலங்கை திரும்பியுள்ளமை விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டது

சந்திவெளி விபத்தில் பெண் பலி ! கொலை செய்த சொந்தம்!!

 

10866_1498503380_tyu.jpg   

10866_1498503380_ggg.jpg   

10866_1498514300_lllllkkkk.JPG

  • கருத்துக்கள உறவுகள்

அனியாயமான சாவு. மேற்குநாடுகளில் சேர்ந்துவாழ்ந்து பிரிந்து போவதை ஏற்கும் குமுகாயம்....  பிடித்தவரோடு வாழ்வதை ஏன் ஏற்க மறுக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

இதில் பணம் முதல் நிலை இதுவே அவன் கோடிஸ்வரன் என்றால் கூட்டிக்கொண்டு போய் விடுவார்கள்  இப்ப  ஊரில்  லண்டன் ,கனடா , பிரான்ஸ் , சுவிஸ், ஏன் ஐரோப்பிய நாடுகள் என்றால்  எந்த வித கேள்வி இல்லாமல் பொண் கொடுக்குறார்கள் 45ஐ  தாண்டினாலும் அங்க போய் பொண் வாழுதா இல்லை  அழுவுதா என்று தெரியாமல் இங்கே எங்க பொண்ணு  வெளிநாடு  என்று சொல்லி கொண்டு திரியுதுகள் இது பற்றி நிறைய எழுதலாம் ( எல்லாம் நம்ம சனம் நாறிடும்  ) வேண்டாம் 

இது சம்மந்தமாக நானும் நிறைய எழுதலாம்.அப்படி எழுதினால் நாங்கள் துரோகி ஆக்ப்படுவம்.:unsure:ஏன் வம்பு.

  • கருத்துக்கள உறவுகள்
பணவெறியோ,சாதி வெறியோ அநியாயமாய் ஒரு பெண்னினது உயிரை எடுத்திருக்கு...கொஞ்சம் பொறுமையாய் இருந்து அந்தப் பெடியன் படிச்சு முடித்து நல்ல வேலை எடுத்தப் பிறகு அந்தப் பெடியனுக்கே கட்டிக் குடுத்திருக்கலாம்...பெட்டை செத்தாலும் பரவாயில்லை கட்டிக் குடுக்கிறத்தில்லை என்டு முடிவெடுத்துத் தான் மோ.சைக்கிளில் இருந்த விழுந்த பெட்டையை அடிச்சுக் கொண்டு இருக்கிறார்கள்.

பெடியனின்ட படத்தைப் பார்த்து இந்த மூஞ்சி எப்படி அந்தப் பெட்டையை வைச்சுக் காப்பாற்ற் போகுது என்டு சிலர் எழுதினம்...ஒரு பெட்டை நல்லா வைச்சு காப்பாற்ற நல்ல மனசும்,உண்மையான காதலும் இருந்தால் போதும்.:cool:
 
ஒரு வேளை நடந்த சம்பவத்தில் அந்த பெடியன் செத்து,பெட்டை தப்பிருந்தாலும் கொஞ்சக் காலத்தில அந்தப் பெட்டை ஒருத்தனை கல்யாணம் கட்டத் தான் போகுது...அதற்காக இருவரது காதலும் உண்மை இல்லை என சொல்ல முடியுமா?
 
அந்தத் தாய்க்கு புருசனும் இல்லை,இப்ப மகளும் இல்லை...அந்தஸ்து பார்த்து என்ன பிரயோசனம்?
 
கக்கூஸ் கழுவுறவனுக்கோ,கள்ளக்காட் அடிப்பவனுக்கோ வெளிநாட்டில் இருப்பதால் மட்டும் தங்கள் மகள்மாரை கட்டிக் குடுப்பவர்கள் உள்ளுரில் ஒரு பெடியனை காதலித்தால் மட்டும் ஏற்பதில்லை.tw_angry: நல்லதோ,கெட்டதோ அவர்கள் விரும்பிட்டார்கள். அவர்களே வாழ்ந்து பார்க்கட்டும் என்று ஏன் விடுவதில்லை?
காதலித்து வாழ்க்கை சீரழிந்தவர்களை விட பெற்றோரால் பேசி செய்து வைக்கப்பட்ட திருமணங்கள் பிரிந்தது அதிகம் என்று நான் நினைக்கிறேன்:mellow:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.